World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France's asylum procedures condemned by the European Court of Human Rights

பிரான்சின் தஞ்சம் கோருவோர் பற்றிய விதிமுறைகள் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தால் கண்டிக்கப்படுகின்றன

By Ajay Prakash and Senthooran Ravee
11 June 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்(ECHR), ஆவணமற்ற தஞ்சம் கோருவோருக்கு முறையான மேல்முறையீட்டு உரிமை இல்லாதது பற்றி ஏப்ரல் 26ம் தேதி பிரான்சைக் கண்டித்துள்ளது. ஆயினும்கூட, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்கோசியின் புதிதாக அமைக்கப்பட்டுள் அரசாங்கம், குடியேற்றத்தைப் பொறுத்த வரையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்போவதாகவும் வதிவிட ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை பெரிய அளவில் வெளியேற்றப் போவதகாவும் உறுதிபடுத்தியுள்ளது.

தன்னுடைய ஐந்து ஆண்டு நிர்வாகத்தின் முதல் சட்டத்தை விரைவில் அளிக்க சார்க்கோசி விரும்புகிறார். ஜூன் 17 சட்டமன்ற தேர்தல்களுக்கு இரண்டாம் சுற்றுத் தேர்தல்கள் முடிந்த பின் புதிய பாரளுமன்றத்தில் ஜூலை நடுப்பகுதிக் கூட்டத்தில் குடியேற்றம் உயர்ந்த முன்னுரிமையைப் பெறும். சார்க்கோசியின் பிரதம மந்திரியான பிரான்சுவா பிய்யோன் தேர்தல்களுக்கு பின் கூடும் முதல் பாராளுமன்றத்திலேயே குடியேற்றம் பற்றிய புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளார். இது தீவிர வலது தேசிய முன்னணியில் (National Front) இருந்து இன்னும் கூடுதலான ஆதரவைப் பெறுவதற்கான தெளிவான முயற்சியாகும்.

பிய்யோன் கோடிட்டுக் காட்டியுள்ள நடவடிக்கைகள் ஏற்கனவே பிரான்சில் தங்கள் குடும்பங்களுடன் இருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு வதிவிட அந்தஸ்து பெறுவதை இன்னும் கடினமாக்கிவிடும். சட்ட ரீதியாக பிரான்சில் வசிக்கும் ஒருவர் குடும்ப உறுப்பினர்களுக்கு இடமளிக்க போதுமான வகையில் வீடு ஒன்றை கொண்டிருக்க வேண்டும், சமூக நலச் செலவுகளில் இருந்து பெறாது, ஒரு பணியில் இருந்து வருமானத்தை கொண்டிருக்க வேண்டும், அந்த நபர் அல்லது நபர்களுக்கு போதுமானதாக அது இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்பவர்கள் பிரான்சில் நிரந்தரமாக குடியேறுவதற்கு அனுமதிக்கப்படும் முன் பிரெஞ்சு மொழியில் பேசுவதற்கான தங்களின் திறனையும் நிரூபிக்க வேண்டும்.

தன்னுடைய நெருங்கிய நண்பரான Brice Hortefeux ஐ புதிய குடியேறுவர் மற்றும் தேசிய அடையாள அமைச்சரகத்திற்கு தலைமை தாங்கும்படி சார்க்கோசி தேர்ந்தெடுத்துள்ளார். Europe-1 வானொலியில், Hortfeux அறிவித்தார்: "பெருந்திரளான சட்டபூர்வமாக்குதலை (வதிவிட பத்திரம் வழங்குதலை) நாங்கள் நிராகரித்துள்ளோம். அது சரியாக செயல்படவில்லை; குடியேறுபவர்களையும் தண்டிக்கிறது." புதுக் கொள்கை "உறுதியாகவும், மனிதாபிமானத்துடனும்", "நிறைய நடைமுறை ஏற்புடனும்" செயல்படுத்தப்படும் என அவர் மேலும் கூறினார்.

200,000 முதல் 400,000 வரையிலான ஆவணமற்ற குடியேறியவர்கள் (Sans Papiers) பிரான்சில் இருப்பதாக Hortefeux கூறினார்; அவர்களை வெளியேற்றும் கொள்கை கடுமையாக கடைபிடிக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த ஆண்டு 25,000 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்படுவர் எனத் தான் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

ஏப்ரல் 26, 2007 அன்று, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் Gebremedhin v. France என்ற வழக்கில், ஐரோப்பிய மனித உரிமைகள் விதிமுறையின் 13 மற்றும் 3 வது விதிகள் பிரெஞ்சு அதிகாரிகளால் மீறப்பட்டிருப்பதாக தீர்ப்புக் கொடுத்துள்ளது. விண்ணப்பதாரருக்கு செலவினங்களாக 8,300.60 யூரோக்கள் தரப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்புக்கூறியுள்ளது. (முழு உரையையும் பார்க்கவும்)

எரித்திரிய நாட்டு பத்திரிகை புகைப்படக்காரரான 28 வயதான Asebeha Gebremedhin, பாரிசில் உள்ள சார்ல்ஸ் டு கோல் விமான நிலையத்தில் ஜூன் 29, 2005 அன்று ஆவணங்கள் எதுவுமின்றி வந்து இறங்கி புகலிடம் கோரினார். இவர் வெளியேற்றப்படுவதற்கான "காத்திருக்கும் பகுதியில்" இருத்தப்பட்டார். OFPRA என்னும் அகதிகள் மற்றும் அரசற்ற நபர்களின் பாதுகாப்புக்கான பிரெஞ்சு அலுவலகம் (French Ofice for the Protection of Refugees and Stateless Persons) அவருடைய புகலிடம் கோரும் உரிமையை நிராகரித்தது; "அவருடைய கூற்றுக்களில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள்" உள்ளன என காரணம் கூறப்பட்டது. உள்துறை அமைச்சரகம் அவருடைய மனுவை நிராகரித்து, "அவர் எரித்திரியாவிற்கு அல்லது தேவையானால் அவர் எந்த நாட்டில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுவாரோ" அங்கு அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவுகளை கொடுத்தது. இதற்கு எதிரான அவருடைய முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் விளைவாக, National Association for Assisting Foreign Nationals (ANAFE) உதவியுடன் அவர் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தார். அதன் தலையீட்டினால், பிரெஞ்சு அதிகாரிகள் அவருக்கு ஒரு தற்காலிக வதிவிட அனுமதியை ஜூலை 20, 2005ல் அளித்தனர்.

தன்னுடைய தீர்ப்பில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிபதி வலியுறுத்தினார்: "ஐரோப்பிய மனித உரிமைகள் விதிமுறையின் மூன்றாம் விதிக்கு நீதிமன்றம் கொடுக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் கொண்டால், மாற்றமுடியாத வகையில் சித்திரவதை, கொடூரமாக நடத்தப்படுதல் அல்லது ஆகியவை தோன்றக் கூடிய நிலையில், 13வது விதியின்படி கவனத்தில் கொள்ளக் கூடிய நபர்கள் தானே தற்காலிக தடையாய் நிலவுகின்ற பாதிப்புடன் பரிகாரம் பெறக்கூடியவராக இருக்க வேண்டும். இந்த மனுதாரர், ஒரு மனுதாரர் என்ற வகையில் "காத்திருக்கும் பகுதியில்" இதற்கான வாய்ப்பை பெற்றிராத நிலையில், விதி 3ன் கீழ் அவருடைய புகாருக்கு முறையே ஒரு 'சக்திமிக்க பரிகாரத்தை' பெறும் உரிமையை இழந்திருந்தார்."

முன்னாள் ஜனாதிபதி ஜாக் சிராக்கின் அரசாங்கம் OFPRA உடைய தஞ்சம் கொடுக்கும் வழிவகையை மாற்றி அத்தகைய வழக்குகள் பற்றி விசாரிக்கும் கால அவகாசத்தையும் குறைத்திருந்தது. சராசரி கால அவகாசம் 2003ல் 258 நாட்களில் இருந்து 2005ல் 108 நாட்களாகக் குறைக்கப்பட்டது.

சர்வதேச பொது மன்னிப்பு சபையின் பிரெஞ்சு பகுதி, இக்கால அவகாசம் மிகக் குறுகியது என்றும் தஞ்சம் கோருவோருக்கு தங்கள் கூற்று பற்றி தக்க உண்மையை நிரூபிக்க போதுமானதாக இல்லை என்றும் குறை கூறியிருந்தது. அதிகாரிகள் மூன்றுமாதங்களுக்கு பதிலாக 15 நாட்களுக்குள் கோப்புக்களை ஆராய வேண்டியிருந்தது. வழக்கு நிராகரிக்கப்பட்டால் தஞ்சம் கோருவோருக்கு எவ்வித உதவித்தொகையோ, மருத்துவ பாதுகாப்பு வசதிகளோ பெறுவதற்கு உரிமை இல்லை..

இத்தகைய கடுமையான நடைமுறைகள் வலதுசாரி UMP அரசாங்கத்திற்கு சட்டவிரோத புலம்பெயர்வோரை விரைந்து வெளியேற்றும் உரிமையை கொடுத்ததுடன், 25,000 பேர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற இலக்கை அடையவும் உதவியது. அவர்களுடைய வாழ்வு பெரும் ஆபத்திற்கு உட்பட்டுள்ளபோதும் பலர் அவர்களுடைய நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். பல தஞ்சம் கோருபவர்கள் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டபின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர், பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

இவர்களுள் ஒருவர்தான் இளஞ்செல்வன் ராஜேந்திரம் ஆவார். அவர் ஸ்ரீலங்காவின் துன்புறுத்தலில் இருந்து தப்பிப்பதற்கு 2002ல் பிரான்சிற்கு வந்தார். OFPRA அவருடைய அகதி அந்தஸ்த்திற்கான கோரிக்கையை 2003 தொடக்கத்தில் நிராகரித்தது. அவர் பிரான்சில் வதிவிட ஆவணமற்ற புலம்பெயராளராக 2005ல் போலீஸ் அவரைக் கைது செய்து ஸ்ரீலங்காவிற்கு அனுப்பும் வரை வசித்துவந்தார். அவர் ஸ்ரீலங்காவின் இராணுவத்தால் அவருடைய வீட்டில் வைத்து 2007 பெப்ருவரி 28 அன்று கொலை செய்யப்பட்டார்.

புகலிட தகுதி கொடுப்பதற்கான நடைமுறை உள்துறை அமைச்சரகத்தின் பொறுப்பின்கீழ் வருகிறது; இதுதான் ஒரு தனிநபரை அனுமதிப்பதா அல்லது கூடாதா என்ற இறுதி முடிவை எடுக்கிறது. ராஜேந்திரம் வெளியேற்றப்பட்ட நேரத்தில், சார்கோசி உள்துறை மந்திரியாக இருந்தார். முந்தையவருடைய விதி முடிந்ததில் இவ்விதத்தில் அவர் பொறுப்பைக் கொண்டுள்ளார்.

சர்வதேச பொது மன்னிப்புச் சபையினுடைய (Amnesty International) 2007 ம் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது: "ஒழுங்கற்ற புலம்பெயர்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருக்கும் தவறான நடைமுறைகள் பல ஐரோப்பிய நாடுகளின் உறுப்பு நாடுகளை பாதிக்கும் வகையில் அக்கறை கொண்ட மற்றொரு பிரதான பகுதியாக தொடரப்படுகிறது. இதற்கான விடையிறுப்பு ஏமாற்றமாக இருந்து வருகிறது, மறுப்பு என்னும் வடிவமைப்புத்தான் மீண்டும் காட்டப்படுகிறது.

அறிக்கை மேலும் கூறுவதாவது: "நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய தீர்வுகள் இல்லாது இருப்பதும், அரசியல் செயற்பட்டியலில் மேலாதிக்கம் செய்யும் பயம் எனும் மொழி ஐரோப்பாவில் இனவாதம் மற்றும் பாரபட்சம் ஆகியவை கவலையளிக்கும் வகையில் வெளிப்படுவதற்கு வழிவகுத்தள்ளன. தற்பொழுதைய சூழல் வெளிநாட்டு மக்கள் நற்பெயருக்கு களங்கம் மற்றும் முஸ்லீம்கள், பிற சமய சமூகத்தினரைச் சார்ந்தவர்கள் மீது சந்தேகம் ஆகியவற்றிற்கு ஊக்கம் தருகிறது."

ஜூன் 2002 ல் செவைலில் நடத்திய உச்சிமாநாட்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 15 நாடுகளுடைய தலைவர்கள் ஐரோப்பாவிற்கு குடியேறுபவர்கள் பெருகிய முறையில் வருவதை இன்னும் குறைப்பதற்கான கடுமையான நடவடிக்கைகள் பற்றி தீர்மானித்தனர். (See "EU summit steps up attack on refugees and foreigners")

சார்கோசியின் UMP வரவிருக்கும் தேசியச் சட்டமன்றத்திற்கான தேர்தல்களில் வெல்ல இருக்கிறது; இதற்குக் காரணம் உத்தியோகபூர்வ இடதின் சரிவு மற்றும் சார்கோசிக் கட்சியின் அனைவருக்கும் அனைத்தும் தருவதாகக் கூறும் மக்களைத் திருப்தி படுத்தும் நோக்கம் கொண்ட கொள்கையாகும். சமூக நெருக்கடி, மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள், மற்றும் அதன் தடையற்ற சந்தை முறை, பொதுநல எதிர்ப்பு அரசாங்கம், அடக்குமுறைக் கொள்கைகள் ஆகியவை பற்றிய கவனத்தைத் திசை திருப்பும் வகையில் சார்கோசி குடியேறுபவர்களுக்கு எதிரான தவறான அபிப்பிராயத்தைத் தூண்டுகிறோர். சோசலிஸ்ட் கட்சி சார்கோசியுடன் இப்பிரச்சினைகளில் அடிப்படை வேறுபாடுகள் எதையும் கொள்ளவில்லை; இந்த நடவடிக்கைகள் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மட்டும் அது வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளது. பிரெஞ்சு மக்களில் பெரும்பாலானவர்கள் தமது உரிமைகள், சமூக நலன்கள்மீதான தாக்குதல்களை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்; ஆனால் அவர்கள் அரசியல் ரீதியாக வாக்குரிமை பறிக்கப்பட்டவர்களாக இருந்து வருகிறார்கள்.

அகதிகள், தஞ்சம் கோருவோர், புலம்பெயர் சமூகங்கள் ஆகியவற்றிற்கு எதிராக இன்று இயக்கப்படும் மிருகத்தனமான நடவடிக்கைகள், இன்னும் கூடுதலான வகையில் அனைத்து ஜனநாயக, சமூக உரிமைகள் மீதான தாக்குதல்கள் செயற்பட்டியலில் இருக்கின்றன என்பதற்கான அடையாளம் ஆகும் மற்றும் சார்கோசி, பியோன் மற்றும் UMP இவற்றை எவ்வளவு விரைவில் இயலுமோ அவ்வளவு விரைவில் செயல்படுத்த முற்படுவர் என்பற்கும் அடையாளம் ஆகும்.