: மத்திய
கிழக்கு
Washington and Israel discuss possible war against
Syria
வாஷிங்டனும் இஸ்ரேலும் சிரியாவிற்கு எதிராக நடத்தக்கூடிய சாத்தியமுள்ள போர் பற்றி
விவாதிக்கின்றன
By Chris Marsden
9 June 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
இஸ்ரேலிய போக்குவரந்து மந்திரி மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரியான ஷாவுல்
மொபாசிற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் மற்றும் அரசுத்துறை துணை செயலாளர்
நிக்கோலஸ் பேர்ன்ஸ் ஆகியோருக்கும் இடையே நடந்த விவாதங்களை புஷ் நிர்வாகம் இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும்
இடையே பேச்சு வார்த்தைகள் கூடாது என வலியுறுத்துவதற்கு பயன்படுத்துகிறது.
வெளிவிவகாரத்துறையின் செய்தித் தொடர்பாளர்
Sean Mccormack
நிருபர்களிடம் ஜூன் 6 புதனன்று கூறினார்: "நாங்கள் ஒன்றும் இஸ்ரேலின் வெளியுறவுக் கொள்கையை நிர்வகிக்கவில்லை.
ஆனால் சமீப காலத்தில் சிரியா நடந்து கொள்ளும் முறையைக் காணுங்கள்; ஒரு உருப்படியான, நேரிய பங்கை
இன்னும் சமாதானமான, பாதுகாப்பான பகுதியை கொண்டுவருவதில் தங்களுக்கு அக்கறை இல்லை என்ற முறையில்தான்
சிரியா பலவிதங்களிலும் நடந்து கொள்ளுகிறது என்பதை உணர்வீர்கள்."
லெபனானில், பாலஸ்தீனிய பகுதிகளில் மற்றும் ஈரானுடன் தொடர்புடைய பல
நகரங்களிலும் இருக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கு சிரியா தொடர்ந்து ஆதரவு தருவதாக மக்கோர்மாக் குற்றம்
சாட்டினார்.
டமாஸ்கசில் இருக்கும் பஷர் அல்அசாத் ஆட்சியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தும்
வாய்ப்பு முன்னர் சிறப்பு பாதுகாப்பு மந்திரிசபை கூட்டத்தில் அன்றே இஸ்ரேலில் ஜனாதிபதி எகுட் ஓல்மெர்ட்டால்
முன்வைக்கப்பட்டது. அந்தக் கூட்டம் சிரியாவுடனான வளர்ந்துவரும் போர் அச்சுறுத்தல் பற்றி விவாதிக்க கூட்டப்பட்டிருந்தது.
இஸ்ரேல் சிரியாவுடன் சமாதானத்தைத்தான் விரும்புகிறது என்று ஓல்மெர்ட் கூறினார்;
ஆனால் இதில் தப்புக் கணக்குகள் ஏற்பட்டால் போருக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார். சிரியாவுடன்
முன்னிபந்தனைகள் ஏதும் இன்றி நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்றும் அவர் கூறினார்.
Yedioth Ahronoth
என்னும் செய்தித்தாள் டமாஸ்கசிற்கு ஒரு இரகசிய செய்தியை ஓல்மெர்ட் அனுப்பியுள்ளதாகவும் சிரியாவிற்கு
கோலனை திரும்பத்தருவதாகவும் இதற்கு ஈடாக பரந்த சமாதானம் தேவை என்று அவர் கேட்டுள்ளதாகவும்
தகவல் கொடுத்துள்ளது. இதில் சிரியா, ஈரான், மற்றும் லெபனிய ஷியா இஸ்லாமிய இயக்கம் ஹெஸ்பொல்லா
மற்றும் "பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்புக்களுடன் அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்றும்
பயங்கரவாதத்தை வளர்க்கும் அமைப்புக்களுக்கு நிதி கொடுத்தல் நிறுத்தப்பட வேண்டும் என்றும்
வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒல்மெர்ட்டின் கோரிக்கைகள் வகுக்கப்பட்டுள்ளது வேண்டுமென்றே ஆத்திரமூட்டும்
வகையில் உள்ளது; இவர் காட்டிக் கொள்ள முற்பட்டுள்ள தோற்றம் தொழிற்கட்சியுடன் நெருக்கடி மிகுந்த
இவருடைய கூட்டணி ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்கான முயற்சியால் பெருமளவில் நோக்கங் கொண்டிருக்கிறது.
கட்சித் தலைமைக்கான போட்டியின் முதல் சுற்றில் தொழிற்கட்சியின் அமீர் பெரெட்ஸ்
தோற்கடிக்கப்பட்டவுடன், பாதுகாப்பு மந்திரியாக ஓல்மெர்ட் செயற்படவில்லை. அடுத்த வாரம் ஒன்றில் முன்னாள்
பிரதம மந்திரி எகுட் பரக் அல்லது ஓய்வு பெற்ற கடற்படைத் தலைவரும் முன்னாள் ஷின் பெட் உள்நாட்டு
பாதுகாப்பு தலைவரான அமி அயலோனோவால் கட்சித்தலைவராக பெரெட்ஸ் பதிலீடு செய்யப்படலாம்; இவர்கள்
இருவருமே ஓல்மெர்ட் தன்னுடைய பதவியை கடந்த ஆண்டு கோடையில் லெபனானுக்கு எதிரான போரில் இஸ்ரேல்
கொண்ட சங்கடத்தை அடுத்து இராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். அயலோன் தொழிற்கட்சியை
கூட்டணியில் இருந்து அகற்றிக் கொள்ளுவதாக கூட அச்சுறுத்தியுள்ளார்; அப்படி நடப்பது பொதுத் தேர்தல்களுக்கு
வழிவகுக்கும்.
பாதுகாப்பு மந்திரிசபைக் கூட்டத்தில் ஓல்மெர்ட், எவ்விதச் சான்றையும்
கொடுக்காமல், சிரியா தன்னுடைய சமாதான அழைப்பை மறுத்துவிட்டதாக கூறினார் ஆனால் கடந்த வாரம் சிரியாவின்
வெளியுறவு மந்திரி வாலிட் முயல்லம் Guardian
செய்தித்தாளிடம் டமாஸ்கஸ், "இஸ்ரேலுடன் சமாதானத்திற்கான
நிலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பேச்சு வார்த்தைகளுக்குத் தயார்; என்று கூறியிருக்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக
நாங்கள் இஸ்ரேலின் பொதுமக்கள் கருத்தின் அடையாளங்களை பெற்றாலும், உத்தியோகபூர்வ தயாரிப்பை பார்க்கவில்லை."
என்றார்.
அவருடைய உண்மையான விருப்பங்கள், அல்லது அவருடைய இறுதி விதி,
எவ்வாறாயினும், ஓல்மெர்ட் போர் வரக்கூடும் என்ற உண்மை நிலைக்குத்தான் தயார் செய்து வருகிறார்.
ஓரளவேனும் அவருடைய கருத்துக்கள் இஸ்ரேலின் ஆளும் உயரடுக்கின் ஒரு பகுதியை
திருப்தி செய்யும் நோக்கத்தைக் கொண்டவை ஆகும்; அவை சிரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தவும்,
தேவையானால் இராணுவ, தூதரக நெறியை கம்பு போல் பயன்படுத்தலாம், கோலான் குன்றுகளை ஒரு காரட்
போல் டமாஸ்கசிற்கும் பலர் அதன் முக்கிய எதிரியாகக் காணும் ஈரானுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தப்
பயன்படுத்தலாம் என்றும் கருதுகின்றன. இக்கூறுபாடுகள் ஹெஸ்பொல்லாவையும் தனிமைப்படுத்தும் நோக்கத்திற்கு
முயலுகின்றன; அதுவும் லெபனானில் இருக்கும் மேற்கு சார்புடைய
Fouad Siniora
வின் அரசாங்கம் இராணுவத் தாக்குதலை நடத்தி, காசாவில் ஹமாசை வலுவிழக்க செய்வதற்கு முன் இப்படிச்
செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர்; இஸ்ரேல், ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஃபதாவை அங்கு
வெடித்துள்ள கன்னைப் போராட்டத்தில் ஆதரிக்கிறது.
ஆளும் கூட்டணிக்குள், தொழிற்கட்சியில் முக்கியமானவராக இருக்கும் பெரெட்ஸ்
வாதிடுவதாவது: "சிரியாவுடன் தூதரக வழிமுறை உடனடியாகவும், வியத்தகு முறையிலும் மூன்று முக்கிய முனைகளில்
[சிரியா, லெபனான் மற்றும் பாலஸ்தீனம்] உள்ள சமநிலையை மாற்றக்கூடும்; எனவே போர் அறைகூவலை
ஏற்பதோ, சிரியாவுடன் நேர்மையான பேச்சு வார்த்தைகளுக்கு வழிவகுப்பதோ, என்னுடைய கருத்தில் சிறிதும்
புறக்கணிக்கப்படக்கூடாது." மற்ற பல மந்திரிகளும், கடிமாவின்
Sheetrit,
தொழிற்கட்சியின் பெஞ்சமின் பென்-எலீஜர் உட்பட, சமாதானப் பேச்சு வார்த்தைகள் புதுப்பிக்கப்பட வேண்டும்
என்றுதான் அழைப்பு விடுத்துள்ளனர்.
இஸ்ரேலிய வெளியுறவுக் கொள்கையின் மறுபுறத்தில், சிரியாவுடன் எவ்விதச் சலுகைகள்
பற்றிய பேச்சும் கூடாது என எதிர்ப்பவர்கள் உள்ளனர்; அவர்கள் டமாஸ்கஸ் தெஹ்ரானுடன் இணைக்கப்பட்ட
முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் வெளிப்படையான இராணுவ மோதலுக்கு இஸ்ரேல் தயாரிப்புக்களை
மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
எதிர்க்கட்சி லிகுட்டின் தலைவரான பெஞ்சமின் நேதன்யாகு இவ்வாரம் 1967 ஆறு
நாள் போரின் நாற்பதாம் ஆண்டு நினைவு நிகழ்வை பயன்படுத்தி "Jedea,
Samaria" ஆகியவற்றில் இருந்து திரும்பப் பெறுதல் இஸ்ரேலை
முற்றிலும் அழித்துவிடும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்திவிடும் என்று வலியுறுத்தினார். வெற்றிதான் இஸ்ரேலை "ஒரு
வலுவற்ற, நைந்த, 'இருப்பதே கேள்விக்கு உரிய' என்ற நிலையில் இருந்து தோற்கடிக்க முடியாத நாடு என்று
மாற்றியுள்ளது" என்று அவர் கூறினார்.
1967ல் கைப்பற்றி 1981ல் இணைக்கப்பட்ட கோலான் குன்றுகளை
பொறுத்தவரையில் அவர் கூறியது: "இந்த மலைகளில் இருக்கும் வரை, நாம் தோற்கடிக்கப்பட மாட்டோம்."
இப்பொழுது சமாதானம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் அவர், "சிரியாவுடனான சமாதான
உடன்பாட்டின் மதிப்பு என்ன? ஒரு காகிதத் துண்டுதான்" என்றார்.
கூட்டணிக்குள் வலதுசாரி
Yisrael Beiteinu வின்
Avigdor Lieberman
மிகக் கடுமையாக கோலன் குன்றுகளில் இருந்து ஓரளவு திரும்பப் பெறுதலுக்கு
கூட எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்; பேச்சுவார்த்தைகள் நடத்துவது கூட
Shas
மந்திரிகளான எலி யிஷான் மற்றும் யிட்ஷக் கோஹன் ஆகியோரால் எதிர்க்கப்படுகின்றன.
வலியுறுத்தல்களில் வேறுபாடுகள் இருந்தாலும், இரு நிலைப்பாடுகளும் சிரியாவிற்கு
எதிராக வரக்கூடிய போருக்கான முன்னேற்ற நிலையில் இருக்கும் இராணுவ, அரசியல் தயாரிப்புக்களின்
வடிவமைப்பிற்குள் உள்ளன; இது இக்கோடையில் நடக்கக்கூடும் என்று பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய உளவுத்துறை அறிக்கை ஒன்று சிரியா, ஈரான் மற்றும் ஹெஸ்போல்லா
ஆகியவற்றை ஒருங்கிணைத்து கோடையில் வரக்கூடிய போருக்கு கூட்டு முன்னணியை உருவாக்க விரும்புவதாகக்
கூறியுள்ளது. பாதுகாப்பு பிரிவு ஆதாரங்கள் சிரிய இராணுவத்தை தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், இதில் மிக
நுட்பமான ரஷ்ய விமான எதிர்ப்பு முறைகளும், நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகள் இருப்பதாகவும், வடக்கு
எல்லைகளிலும் இராணுவத் தயாரிப்புக்கள் இருப்பதாகவும் அங்கு நிலத்தடி ஏவுகணை கட்டுப்பாடு மையம் ஒன்று
தயாரிக்கப்படுவதாகவும் அது இஸ்ரேலின் எந்தப் பகுதியையும் தாக்கும் திறன் பெற்றுள்ளதாகவும் கூறுகின்றன.
பாதுகாப்பு மந்திரிசபை கூட்டத்திற்கு முதல் நாள், வாஷிங்டனுடன் விவாதங்களுக்கு
முதல் நாள், இஸ்ரேல் மிகப் பெரிய இராணுவப் பயற்சி ஒன்றை, தரைப்படை பிரிவுகள், டாங் பிரிவுகள் மற்றும்
விமானப் படை பிரிவுகள் ஆகியவற்றுடன் தெற்கு Negev
ல் நடத்தியது; இதில் சிரியாமீதான தாக்குதல் போன்ற மாதிரி நடத்தப்பட்டது. செய்தி ஊடகத்திடம் இஸ்ரேலிய
பாதுகாப்புப் பிரிவு உண்மையில் சிரியாவுடனான போர் வாய்ப்பிற்கு தயாரித்துக் கொண்டிருப்பதாக பெரெட்ஸ்
கூறினார்.
ஜெருசலேம் போஸ்ட்டில் இந்தப் பயிற்சி பற்றி கூறிய
Yaakov Katz,
இது IDF
"பாலஸ்தீனம் மற்றும் ஹெஸ்பொல்லா அச்சுறுத்தலிலிருந்து சிரிய அச்சுறுத்தல்" என்ற மாற்றத்தின் வெளிப்பாடு என்று
விளக்கினார். "பல ஆண்டுகளில் முதல் தடவையாக, ஆண்டு பயிற்சி ஒரு சிரிய கிராமத்தை தரைப்படை, கவச
மற்றும் விமானப் பிரிவுகள் வெற்றி கொள்ளும் மாதிரியில் அமைக்கப்பட்டன; இரண்டாம் இண்டிபடாவிற்கு பின்னர்
இருந்து எப்பொழுதும் மரபாக இருப்பது போல் பாலஸ்தீனிய கிராமமாக அல்ல.
IDF பாலஸ்தீனிய
மற்றும் வலது முன்னணிகளுக்கு போர்த்தயாரிப்பு பெருக்கத்திற்கு தயார் செய்துவருகிறது என்று படைகளின் தலைவர்
தளபதி கபி ஆஷ்கெனசி ஒரு "சிரிய கிராமத்தின் மீது" படையெடுப்பதற்கு தற்காலிக பாலங்கள் தயாரித்து
டாங்குகளும் சென்றதை பார்வையிட்ட போது கூறினார். இங்கு இன்று காணப்பட்ட பயிற்சி மிகவும் கவர்ச்சிகரமாக
இருந்தது. எதிரி இல்லாததுதான் ஒரே குறை."
பாதுகாப்பு மந்திரிசபை கூடிய அன்று, இஸ்ரேலின்
Channel 3
செய்தி நிலையம் சிரியா போருக்கான இறுதித் தயாரிப்புக்களை ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ள இருப்பதாக
அறிவித்தது; மேலும்" அது எட்டு மாதங்களுக்குள் தன்னுடைய இராணுவத்தின் பயிற்சிகளை முடிக்க இருப்பதாக
திட்டமிட்டுள்ளது" என்றும் கூறியது. Channel 2
இஸ்ரேலிய இராணுவ டாங்குகள் "சிரியத் தாக்குதல் ஏதேனும்
வந்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதை" காட்டியது. மேலும் சிரியா தொலைதூரம் செல்லக்கூடிய
ஏவுகணைகளை கொண்டிருப்பதாக மொபஸ் கூறியிருப்பதை மேற்கோளிட்டு, அவை "போர் வெடித்தால்
ஜெருசலேத்தைத் தாக்கமுடியும்" என்றும் கூறியது.
பாதுகாப்பு மந்திரிசபை ஒரு 11 உறுப்பினர் கொண்ட சிரியா தொடர்பான
அமைச்சர் குழுவை நிறுவியது: இதற்கு வாடிக்கையாக இராணுவத் தயாரிப்புக்கள் பற்றிய அறிக்கைகளும் விவரங்களும்
பெறும். மூத்த IDF
தளபதிகள் மந்திரிசபையிடம் ஒருவேளை இஸ்ரேலின் வடபகுதியில் இருந்து தாக்குதல் வந்தால் இராணுவத்தின்
தயாரிப்புக்கள் எப்படி இருக்கும் என்பது பற்றி முன்வைத்திருந்தனர். இராணுவ உளவுத்துறையின் தலைவரான மேஜர்
ஜெனரல் அமோஸ் யாட்லின் சிரிய இராணுவம் தன்னுடைய பாதுகாப்பு வகையில் இருந்து மாறி இஸ்ரேல் மீது
ஒப்புமையில் சற்றே வேகத்துடன் தாக்கலாம் என்றும் ஆனால் டமாஸ்கஸ் அவ்விதம் செய்யும் என்று தான்
நம்பவில்லை என்றும் கூறினார். அவருடைய முக்கிய கவலை சிரியா, இஸ்ரேலிய நடவடிக்கைக்கு தவறாக
பதிற்செய்ல்காட்டி, ஹெஸ்பொல்லாவை தாக்குதல் நடத்த ஊக்குவிக்கலாம் என்பதாகும்.
மந்திரி சபை உறுப்பினர்கள் சிரியாவுடனான போர்வாய்ப்பு பற்றி விவாதிக்க
வேண்டாம் என்று ஓல்மெர்ட் முறையிட்டார்; ஆனால் லிபர்மன் உண்மையில் மந்திரிசபைக் கூட்டத்தில் இருந்து ஒரு
கட்டத்தில் வெளியேறி ரேடியோ பேட்டி ஒன்றைக் கொடுத்தார்; அதில் அவர் சிரியா முன்னோடியில்லாத
வேகத்தில் ஆயுதத் தயாரிப்புக்களை கொண்டிருப்பதாக கூறினார்.
"இஸ்ரேலிய வெளியுறவுக் கொள்கையை நிர்வகித்தல்" என்பதைத்தான் உண்மையில்
வாஷிங்டன் செய்து கொண்டிருக்கிறது. இஸ்ரேலுக்குள் இருக்கும் அரசியல் பிளவுகள் எவ்வாறு சிரியாவுடன் நடந்து
கொள்வது என்பது புஷ் நிர்வாகத்திற்குள்ளும் எதிரொலிக்கிறது; ரைஸ் டமாஸ்கசிற்கும் தெஹ்ரானுக்கும் இடையே
தூதரக முறையை பயன்படுத்தி பிளவு ஏற்படுத்த வேண்டும் என்பதை விரும்புகிறார்; துணை ஜனாதிபதி டிக் செனி
இதை எதிர்க்கிறார். செனி, இஸ்ரேல் நேரடியாக கடந்த ஆண்டு லெபனான் மீது தாக்குதல் நடத்திய போது
சிரியாவையும் தாக்க வேண்டுமென்று விரும்பினார்; சிரியாவிற்கு ஏப்ரல் மாதம் மன்ற அவைத்தலைவர் ஜனநாயகக்
கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி பயணித்ததற்கு குடியரசுக் கட்சியின் கண்டனங்கள் வெளிப்பட்டதற்கும் வழி
வகுத்தார்.
மே 3ம் தேதி ஈராக்கை எவ்வாறு உறுதிபடுத்துவது என்று எகிப்து
Sharm el Sheik
ல் நடந்த கூட்டத்தின்போது ரைசே, சிரியாவின் வெளியுறவு மந்திரியை சந்தித்து 30 நிமிஷங்கள் பேசினார்;
ஈரானிய வெளியுறவு மந்திரியை காணவேண்டும் என்ற முயற்சியில் தோல்வியுற்றார். ஆனால் அதற்குப் பின் அவர்
மீண்டும் கடின நிலைப்பாட்டை எடுத்து டமாஸ்கஸ் ஈராக்குடனான தனது எல்லையை வெளி போராளிகளுக்கு மூட
வேண்டும் என்றும், அது வாஷிங்டனுடனான உறவுகளை மீட்டுக் கொள்ள வேண்டும் என்றால் பாலஸ்தீனிய "தீவிர
வாதிகள்" மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ரைஸ் மற்றும் அரசுத்துறை துணை செயலாளர் நிக்கோலஸ் பேர்ன்ஸ் ஆகியோரை
பார்த்த பின்னர், சிரியாவுடன் பேச்சு நடத்த வாய்ப்பு உள்ளது என்று முன்னர் கூறியிருந்த மொபஸ் இஸ்ரேல் கூடுதலான
முன்னுரிமையை பாலஸ்தீனியர்களுடன் சமாதானம் காண்பதற்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சிரியாவுடன்
சமாதானப் பேச்சுவார்த்தைகள் புதுப்பிக்கப்படுமா எனக் கேட்கப்பட்டதற்கு அவர் பல முறையும், "எங்கள் முதல்
முன்னுரிமை பாலஸ்தீனிய விவாதங்கள்தான்." என்றார்.
"ஹெஸ்பொல்லா தெற்கு லெபனானை விட்டு ஒருபோதும் நீங்காது. அது ஏவுகணைகளை
அதிகம் கொண்டு இஸ்ரேலின் மத்திய, தெற்குப் பகுதிகளை கூடத் தாக்கலாம்" என்று அவர் வலயுறுத்தினார்.
மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஈரான் அமெரிக்கக் கோரிக்கைகளான அணுவாயுதத்திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கு
ஒரு காலக்கெடு கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு அடுத்த நாள், மோபஸ், லெபனிய இராணுவம் பல ஆயுதங்களை பெற்றிருப்பது
பற்றி வந்த தகவல்கள் பற்றி கூறுகையில் ஈரானில் இருந்து சிரியா மூலமாக அவை வந்திருக்கும் என்றார்.
மத்திய கிழக்கு நால்வர் குழுக் கூட்டத்திற்காக பேர்லினுக்கு செல்லும் வழியில் ரைஸ்
சிரியாவுடனான பேச்சு வார்த்தைகளை இஸ்ரேல் நடத்தும் முயற்சிகளுக்கு வாஷிங்டன் தடை செய்கிறது எனக்
கூறப்படுவதை மறுத்தார்.
"இஸ்ரேல், சிரியாவின் பாதை உள்பட, மற்ற பாதைகளை பின்பற்றுவதற்கு எவரும்
எதிர்ப்புக் கூறவில்லை" என்று அவர் கூறினார். "ஆனால் என்னுடைய மற்றும் இஸ்ரேலியர்களுடைய கருத்து, சிரியர்கள்
இப்பொழுது நடந்து கொள்ளும் முறை அப்பிராந்தியத்தை உறுதியற்றதாக்கும் என்பதுதான்."
அத்தகைய பாதை ஒரு பிந்தைய தேதியில் தொடரப்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.
தன்னுடைய பங்கிற்கு சிரியா, இஸ்ரேல்தான் முதலில் இராணுவத் தாக்குதல்களை நடத்தும்
என்ற தன் நம்பிக்கையை குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினரான
Muhammad Habash
மே மாதம் 5ம் தேதி அல்ஜசிராவிடம் சிரியா "தீவிரமாக" இஸ்ரேலுடன் ஒரு இராணுவ மோதலுக்கு தயாரித்துக்
கொண்டிருப்பதாகவும், இஸ்ரேல் அரசியல் அளவில் தப்பிப்பிழைப்பதற்கு ஒரு போரை விரும்புவதாகவும் கூறினார். |