World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French "left" defeated in parliamentary elections

பிரெஞ்சு "இடது" பாராளுமன்ற தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டது

By Antoine Lerougetel
12 June 2007

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செகோலென் ரோயால் ஜனாதிபதித் தேர்தல்களில் தோற்ற ஐந்து வாரங்களுக்கு பின்னர், பிரெஞ்சு "இடது" மற்றொரு அவமானகரமான தோல்வியை அடைந்துள்ளது.

ஞாயிறன்று சட்டமன்றத் தேர்தல்களின் முதல் சுற்றுக்களுக்கு பின்னர், ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி புதிய பாராளுமன்றத்தில் மிக அதிகமான பெரும்பான்மையை பெறுவார் என்பது ஏற்கனவே தெளிவாகிவிட்டது. அவருடைய கோலிச UMP குறைந்தது மூன்றில் இரு பங்கு பிரதிநிதிகளையாவது பெறுவர். சிறிது காலமாகவே சார்க்கோசி UMP யின் வலதுசாரிப் பிரிவின் பதாகை ஏந்துபவராக உள்ளார்; பிரான்சின் நலன்புரி அரசை தகர்ப்பதற்கு வியத்தகு நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதிபூண்டுள்ளார்.

புதிய பாராளுமன்றத்தின் துல்லியமான சேர்க்கை அடுத்த ஞாயிறு இரண்டாம் சுற்றுத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் உயர்ந்த வாக்கு பெற்றவர்களிடையே நடக்கும் போட்டிகளில் முடிவாகும்; முதல் சுற்றில் 50 சதவிகிதத்தை எந்த வேட்பாளரும் பெறவில்லை என்றால் இத்தகைய வாக்குப்பதிவு நடக்கும்.

ஜனாதிபதி தேர்தல்களில் இரு சுற்றுக்களும் அசாதாணமான வாக்குப் பதிவுகளைக் கண்டபோதிலும் --84, 85 வீதம் என்று முறையே இருந்தன -- ஞாயிறன்று வாக்குப்பதிவில் ஏராளமானோர் வாக்குப் போடாதது முக்கிய காரணியாக இருந்தது. மொத்த வாக்காளர்களில் 39.6 பேர் வாக்குப் போடவில்லை-- 1958 ல் ஐந்தாம் குடியரசு நிறுவப்பட்ட பின், பாராளுமன்ற முதல் சுற்று வாக்குப் பதிவில் இது அதிக எண்ணிக்கையாகும். முக்கியமாக "இடது" கட்சிகள் தங்களுடைய ஆதரவாளர்களை திரட்ட முடியவில்லை என்பது புலனாகிறது.

ஞாயிறு முடிவுகள் சில விதங்களில் 2002 பாராளுமன்ற தேர்தல்களை நினைவுபடுத்துகிறது; அப்பொழுது ஜாக் சிராக்கின் தலைமையில் இருந்த UMP மிக அதிக பெரும்பான்மையை பெற்றது. 2002ல் UMP சட்டமன்றத்தில் பெற்ற வெற்றி, உத்தியோகபூர்வ "இடது" கட்சிகள் இரண்டாம் சுற்றில் Jean Marie Le Pen இன் தேசிய முன்னணி தீவிர வலதிற்கு எதிராக சிராக்கிற்குப் பிரச்சாரம் செய்து, சிராக் ஜனாதிபதி என்ற முறையில் புதிய பதவிக்காலத்தை வெற்றி அடைந்ததைப் பின்தொடர்ந்தது. சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் மற்றும் பசுமைக் கட்சிகள் சிராக்கிற்கு வாக்களிக்குமாறு கோரின; அவர் பிரெஞ்சு பெரு வணிக வேட்பாளராக இருந்தும், அவரை பிரெஞ்சு ஜனநாயகத்தின் காப்பாளர் என்று சித்தரித்து, "தீவிர இடது" என அழைக்கப்பட்ட கட்சிகள் வெளிப்படையகவோ, உட்குறிப்பாகவோ சிராக்கிற்காக முண்டியடித்துக்கொண்டு செயல்பட்டன.

அதைத் தொடர்ந்த சட்ட மன்றத் தேர்தல்களில் சிராக் பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை பெற்றார். இம்முறை ஜனாதிபதியின் பெரும்பான்மை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்.

UMP மொத்த வாக்குகளில் 39.5 சதவிகிதத்தை பெற்றது; 2002 ல் அது 33.3 சதவிகிதத்தை பெற்றது. 104 UMP வேட்பாளர்கள் 50 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குளை பெற்று தேர்தலில் நேரடியாய் வென்றுள்ளனர்.

இரண்டாம் சுற்றிற்காக கணிப்புக்கள் 577 இடங்கள் இருக்கும் பாராளுமன்றத்தில் UMP க்கு 383ல் இருந்து 502 இடங்களை கொடுக்கின்றன. தற்பொழுது கோலிசக் கட்சியினர் 359 இடங்கள், மற்றும் முன்னாள் UDF, 2002 தேர்தலில் UMP உடன் உடன்பாடு கொண்டு 29 இடங்களையும் பெற்றது.

சோசலிஸ்ட் கட்சி 24.7 சதவிகிதத்தை பெற்றது; இது கிட்டத்தட்ட 2002 தேர்தலில் பெற்ற சதவிகிதத்தை போன்றதுதான். சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவர்தான் 50 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளை பெற்றார்.

PRG (இடது தீவிரக் கட்சி), மற்றும் MRC (Jean-Piere Chevenement தலைமையிலான மக்கள் இயக்கம்), ஆகியவற்றில் உள்ள தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து சோசலிஸ்ட் கட்சி 80ல் இருந்து 140 இடங்களை பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பாராளுமன்றத்தில் சோசலிஸ்ட் கட்சி 149 இடங்களை கொண்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்ததைவிட சற்றே கூடுதலான வாக்குகளை பெற்றது; இருந்தபோதிலும் இதன் வாக்குகள் 2002 ஐ விடக் குறைவுதான். இது 4.29 சதவிகித வாக்குளைப் பெற்றது --2002 ஐ விட 0.5 குறைவு; ஆனால் இதன் ஜனாதிபதி வேட்பாளர் Marie Georges Buffet பெற்ற வாக்குகளை விட 1.9 சதவிகிதம் கூடுதலாகும்.

கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் கட்சியுடன் தேர்தல் கூட்டணி உடன்பாட்டைக் கொள்ளவில்லை என்றாலும், குறிப்பாக பாரிசை சுற்றியுள்ள "சிகப்பு வட்டம்" (La Ceinture Rouge) என்னும் மரபார்ந்த தொகுதிகளில் நின்றிருந்தாலும், சோசலிஸ்ட் கட்சியிடமிருந்து ஆக்கிரோஷமான பிரச்சாரங்களை எதிர்கொண்டாலும், அது அப்படியும் 9ல் இருந்து 15 பிரதிநிதிகளை கொள்ளக் கூடும்; அதன் தற்போதைய மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 21 ஆகும்.

ஆனால் உத்தியோகபூர்வ பாராளுமன்றக் குழு என்ற தகுதியை அது இழக்கும். பிரான்சின் போருக்குப் பிந்தைய வரலாற்றில் கம்யூனிஸ்ட் கட்சி எப்பொழுதுமே பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வ அந்தஸ்த்தை அனுபவித்து வந்துள்ளது -- ஒரே விதிவிலக்கு 1958ல் சார்ல்ஸ் டு கோலே அதிகாரத்திற்கு வந்தபொழுதுதான்.

IFOP வாக்களிப்பு அமைப்பின் Frédéric Dabi, கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்றத்தில் கட்சி அந்தஸ்த்தை இழப்பதை நிதிய அளவில் ஒரு "பிரளயம்" மற்றும் கட்சி தொடர்பான பொதுமக்கள் பார்வையிலும் அவ்வாறுதான் என்று குறிப்பிட்டுள்ளார். "இது இக்கட்சியை இன்னும் ஒரு மிகச் சிறிய குழுவாக கூட மாற்றிவிடும்" என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சி, அதன் மரபார்ந்த தொகுதிகள் சிலவற்றை இழந்துவிட்டது; இதில் Marseilles ல் நான்காம் தொகுதியும் அடங்கும்; அதை இது 1936ல் மக்கள் முன்னணி அரசாங்கம் அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து தக்க வைத்திருந்தது.

மொத்தம் 35.6 சதவிகித வாக்குகளை பெற்ற நிலையில், சோசலிஸ்ட் கட்சியும் அதன் முன்னாள் "பன்முக இடதில்" இருந்த கூட்டாளிகளும் (கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி, PRG, MRC) ஆகியவை 2002ல் பெற்ற அதே முடிவையே இப்பொழுதும் பெற்றன.

மொத்தத்தில் 890,000 வாக்குகள் "தீவிர இடது" என்று அழைக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்கப்பட்டன. இது மொத்தத்தில் 3.4 சதவிகிதத்தை பிரதிபலிக்கிறது; ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இது 1 சதவிகிதம் அதிகமாகும். பெரும்பான்மை வாக்கு முறை இருப்பதால், "தீவிர இடது" வேட்பாளர்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை.

பிரான்சுவா பேய்ரூ இன் புதிய மையக் கட்சியான MoDem (Le Mouvement Démocrate), 7.6 சதவிகித வாக்குகளை, ஜனாதிபதி முதல் சுற்றுத் தேர்தலில் பேய்ரூ பெற்ற 18 சதவிகிதத்தில் பாதியைவிடக் குறைவாக பெற்றது. அடுத்த ஞாயிறு பாராளுமன்றத்திற்கு பேய்ரூ தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது சந்தேகத்திற்கு உரியதுதான்; அவருடைய கட்சிக்கு 4 இடங்களுக்கு மேல் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. அது வெறும் கையுடன்தான் நிற்கக்கூடும்.

தேசிய முன்னணியின் முடிவான 4.29 சதவிகிதம் என்பது 1980 களின் தொடக்கத்தில் இருந்து இதன் மிகக் குறைவான வாக்காகும். இதன் மரபார்ந்த வாக்காளர்களில் பலர் சார்க்கோசியின் இனவெறி, சட்டம் மற்றும் ஒழுங்கு, நாட்டுப் பற்று வனப்புரை ஆகியவற்றால் பிரித்துச் செல்லப்பட்டுவிட்டனர். Jean-Marie le Pen இன் மகளான Marine le Pen, Henin-Beaumont என்னும் வட பிரான்சில் தொழில்துறையில் சிதைவுற்றிருக்கும் தொகுதியில் நின்று இரண்டாம் சுற்றிற்கு வந்துள்ளார்.

Liberation நாளேடு, ரோயாலின் ஜனாதிபதி முயற்சிக்கு ஆதரவளித்தது, UMP யின் வெற்றிக்குக் காரணம் சார்க்கோசியிடம் இருப்பதாகக் கூறப்படும் மேதாவித்தனத்தால் என்று கூறுகிறது. அது எழுதியது: "இந்த நான்கில் மூன்று பங்கு வெற்றி என்பது மிக நேர்த்தியான முறையில் சார்க்கோசி தன்னுடைய பணியை செய்ததினால் வந்த விளைவு ஆகும். ஒரு தெளிவான வலதுசாரித் திட்டத்தின் அடிப்படையில் தீவிர பிரச்சாரம், தன்னுடைய விரோதிக்காக அக்கறையுடன் இங்கும் அங்கும் வலிந்து தாக்கும் விதத்தில் காட்டமான உரை, அவரது அரசாங்கத்தின் தொடக்க முடிவுகள் [UMP சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு] ஒத்துழைக்கும் தன்மையில் இருந்தது, இந்நடவடிக்கைகள் வேகமாக பங்காற்றினாலும் பொதுநிதிகளுடன் இழப்பை ஏற்படுத்தினாலும், புதிய ஜனாதிபதியின் செல்வம் கொழிக்கும் ஆதரவாளர்களுக்கு பிரதானமாக ஆதரவு கொடுப்பவை ஆகும்."

இது அதிக விளக்கம் கொடுக்கவில்லை என்றாலும், ஓரளவு உண்மையைக் கொண்டிருக்கிறது. சார்க்கோசி ஒரு நனவான மிகுந்த, பரபரப்பான, உறுதியான போராளியாக தான் பிரதிபலிக்கும் வர்க்கத்தின் நலன்களுக்கு இருக்கிறார். செகோலென் ரோயால், அவருடைய பங்காளியும் சோசலிஸ்ட் கட்சியின் தலைவருமான François Hollande, இன்னும் பல சோசலிஸ்ட் கட்சியின் "யானைகள்" போராளிகள் அல்லர்; பரிதாபத்திற்கு உரிய சந்தர்ப்பவாதிகள், தேவைக்கு ஏற்ப வலது பக்கம் தங்களை மாற்றிக் கொள்ளுபவர்கள். செல்வம் கொழிப்பவர்கள், செல்வாக்கானவர்கள் ஆகியோருக்கு நெருக்கமாக இருப்பதில் அவர்கள் நிறைவு காண்கிறார்கள்; தொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்களுடன் நெருக்கமாக இருப்பதில் இல்லை; இளைஞர்கள், புறநகர் குடியேறியவர்களை பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்கள் சார்க்கோசியுடன் அடிப்படை வேறுபாடுகளை கொண்டிருக்கவில்லை; சொல்லப் போனால் இரகசியமாக அவரைப் பெரிதும் மதிக்கிறார்கள்.

ஒரு தீவிர அரசியல் எதிர்ப்பை சார்க்கோசி எதிர் கொண்டிருந்தால் அவர் விரைவில் ஒரு நகைப்பிற்கிடமான மனிதராக, அவருடைய பேரவா, வீண் தற்பெருமை ஆகியவற்றால் உருக்குலைக்கப்பட்டிருப்பார்.

முதல் சுற்று முடிவுகள் வந்தவுடனேயே, ரோயால் பேய்ரூ மற்றும் அவருடைய வலதுசாரித் தாராள MoDem புறம் திரும்பி, கூட்டை வழங்க முன்வந்தார். ரோயாலின் ஜனாதிபதி பிரச்சாரத்தின்போது செய்தித் தொடர்பாளராக இருந்த Julien Dray திங்கள் அன்று தன்னுடைய கட்சி "MoDem வேட்பாளர்களுக்கு குறுக்கே செயல்படாது" என்று அறிவித்தார்; "இது ஒரு பன்முக பாராளுமன்ற சூழலை ஏற்படுத்தும் நலன்களை ஒட்டி இருக்கும்." ரோயால், தான் இரண்டாம் சுற்றுக்கு முன் பேய்ரூவுடன் தொடர்பு கொள்ள இருப்பதாக கூறினார்.

ரோயாலும் ஹொலாந்தும் அதிக அளவு வாக்குப் பதிவு வராததற்கு தாங்கள் மக்கள் முன் பொருளுடைய முன்னோக்கை வைக்காத காரணத்திற்கு பதிலாக இளைஞர்களையும் தொழிலாளர் வர்க்கத்தையும் குறைகூறினர். அடுத்த ஞாயிறு திரண்டுவருமாறு அழைப்புக் கொடுத்த ரோயால் திமிர்த்தனமாக அறிவித்தார்: "இளைஞர்களே, நீங்கள் வந்து உங்களுக்காக கட்டாயம் வாக்களிக்க வேண்டும். வீட்டில் இருந்துவிட்ட இளைஞர்களே, ஜனாதிபதித் தேர்தலில் விழிப்பு உணர்வு இருந்த நிலையில், இங்கு வாக்களிக்காமை வீதம் அதிகம் வந்துவிட்டது..... ஏதோ பிழை உள்ளது; ஆனால் அனைத்து பொறுப்பையும் உங்கள் மீது நான் வைக்கவில்லை.."

ஒரு புனித உணர்வுடன் அவர் சேர்த்துக் கொண்டார்: "உலகில் வாக்குப் போடும் உரிமைக்காக பல ஆடவரும் பெண்டிரும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றுகின்றனர்." ஹொலந்தும் உபதேசம் செய்யும் முறையில், "பல நேரமும் இளைஞர்களும், தொழிலாள வர்க்கமும் தான் வாக்களிக்காமல் இருந்து விடுகின்றனர்" என்றார்.

UMP தலைவர் Patrick Devedjian இகழ்வுணர்வுடன், ஆனால் சரியாக, "வாக்குப் போடாதது வலதைவிட இடதைத்தான் தாக்கியது; ஏனெனில் இடதிடம் திட்டம் ஏதும் இல்லை. அவர்கள் சார்க்கோசியின் திட்டத்திற்கு எதிராகத்தான் பிரச்சாரம் நடத்தினர்" என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் Marie-Georges Buffet, மற்றும் "தீவிர இடது" Ligue Communiste Revolutionnaire (LCR) ஆகியவை MoDem உடன் ஒப்பந்தத்திற்கு எதிராக பேசியுள்ளனர்; ஆனால் வெளிப்படையாக (கம்யூனிஸ்ட் கட்சி) அல்லது உட்குறிப்பாக (LCR) ஆகியவை சோசலிஸ்ட் கட்சியை ஆதரிக்கின்றன.

LCR வலைத் தளத்தில் கொடுத்துள்ள அறிக்கை கூறுவதாவது: "நாம் வலதை வீழ்த்த வேண்டும், தீவிர வலதையும் வீழ்த்த வேண்டும், அவர்களுடைய வேட்பாளர்கள் (UMP, MoDem, New Centre, MPF, National Front) பலரையும் தோற்கடிக்க வேண்டும்." இதன் உட்குறிப்பு SP க்கு வாக்களிக்க வேண்டும் என்ற அழைப்பு ஆகும். 2002 ஐப் போலவே LCR இப்பொழுதும் சோசலிஸ்ட் கட்சியில் இருந்து தொழிலாளர் வர்க்கம் முறித்துக் கொள்ளுவதைத் தடுக்கப் பார்க்கிறது.

Lutte Ouvriere ன் Arlette Laguiller எவ்வித அரசியல் முன்னோக்கையும் அளிக்கவில்லை; வெறுமே தொழிற்சங்க போர்க்குணத்திற்கு அழைப்பு விடுக்கிறார். "UMP யின் பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் பாராளுமன்றத்தில் சுதந்திரமாக விடப்பட்டார் அத்தகைய நிலை நாட்டில் இல்லை ... தொழிலாளர் உலகம் கணிக்க முடியாதது; ஏனெனில் இது திடீர் சீற்றத்தை வெளிப்படுத்தும் இயல்பு உடையது... கடந்த காலத்தில் இதை வெளிப்படுத்தியுள்ளது; மிகச் சிறிய வேலைநிறுத்தம் கூட புறக்கணிக்கப்பட்டால், சில சூழ்நிலையில் காட்டுத்தீ போன்று பரவிவிடும்."

இதுதான் "அதி இடது" அமைப்பு தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளும் பெரும் அரசியல், வரலாற்று பிரச்சினைகளை தவிர்க்க கையாளும் முறையின் மாதிரியாகும்; இது தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு ஏற்றவாறு மாறி நடந்து கொள்ளுவதுடன், உத்தியோகபூர்வ "இடது" கட்சிகளுக்கு முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுவதைக் குறிக்கும்.