World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Guy Môquet, Sarkozy and the Stalinist school of falsification

பிரான்ஸ்: கி மொக்கே, சார்க்கோசி மற்றும் ஸ்ராலினிச பொய்மைப்படுத்தல் பள்ளி

By Pierre Mabut and Antoine Lerougetel
2 June 2007

Back to screen version

உத்தியோகபூர்வமாக பிரெஞ்சு ஜனாதிபதி என மே 16ம் தேதி பதவியேற்றபின், நிக்கோலா சார்க்கோசியின் முதல் நிகழ்ச்சி இரண்டாம் உலகப் போரின்போது பிரான்சில் நாஜிக்களுடைய ஆக்கிரமிப்பிற்கு எதிராக எதிர்த்துப் போரிட்ட போராளிகள் இறந்த நினைவு நிகழ்வாகும்.

தன்னுடைய முதல் ஜனாதிபதி ஆணையை வெளியிடுவதற்கு சார்க்கோசி இந்நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டார் : அக்டோபர் 22, 1941 அன்று நாஜி கொலைப் படையால் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு சற்று முன்பு தன்னுடைய குடும்பத்திற்கு கி மொக்கே எழுதிய கடிதம் அனைத்துப் பொதுப் பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டுத் துவக்கத்திலும் கட்டாயமாகப் படித்துக் காட்டப்பட வேண்டும். "வீரம்", "தியாகம்", "நாட்டிற்காக" ஆகியவற்றிற்கு இது முன்னுதாரணமாக உதவும் என்று சார்க்கோசி நினைக்கிறார். 17 வயதான மொக்கே இளைய கம்யூனிஸ்ட்டுக்கள் அமைப்பில் ஓர் உறுப்பினராக இருந்தார்.

நினைவு நிகழ்ச்சிக்கு சென்றதும் கடிதத்தை பற்றிய சார்க்கோசியின் ஆணையும் பிரெஞ்சு ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர சாராம்சத்தை வெளிப்படுத்தும் முக்கிய வரலாற்று நிகழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் மொக்கேயின் மரணத்தை தேசியவாதத்தை வளர்ப்பதற்கு சார்க்கோசி இழிவுடன் பயன்படுத்த முற்பட்டதில் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) தலைவர் Marie-George Buffet -கொண்ட சீற்றம் குறுகிய காலத்திற்குத்தான் இருந்தது. சார்க்கோசி தன்னுடைய ஜனாதிபதி ஆணையை பிறப்பித்த பின்னர் இவ்வம்மையார் அறிவித்ததாவது: "கி மொக்கேயின் மரணதண்டனைக்கு முன்பு எழுதிய கடைசிக் கடிதத்தை படிப்பது என்பது ஒரு வலிமை வாய்ந்த செய்தி ஆகும்; ஏனெனில் எதிர்ப்பு இயக்கத்தில் அவரது ஈடுபாடு முழுவதும் இந்த இளைஞர் ஒரு தேசபக்தனாக இருந்தார், மற்றும் கூட; மனித குல விடுதலைக்கான இவருடைய போராட்டம் ஒரு இலக்கைக் கொண்டிருந்ததன் காரணமாகவும் ஆகும், அதாவது ஒரு ஜனநாயகத்தில் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் ஆகியவை கொண்ட குடியரசை கட்டியமைப்பது."

அடிமைத்தனமாக Buffet சார்க்கோசியின் நிலைப்பாட்டில் விழுந்து கிடப்பது, தன்னை "அனைத்து பிரெஞ்சு மக்களுடைய" ஜனாதிபதி என்று காட்டிக் கொள்ளும் பிந்தையவரின் முயற்சிகளுக்கு வலுக்கொடுக்கிறது.

கி மொக்கே பற்றி பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மே 21, 2007 அன்று தன்னுடைய வலைத் தளத்தில் பதிப்பித்த அறிக்கை கூறுவதாவது: "இவர் Gare de l'Est [பாரிசில் உள்ள] இரயில் நிலையத்தில் அக்டோபர் 13, 1940 அன்று கைது செய்யப்பட்டார். இது நாஜிக்கள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுப்பதற்கு முன்னரே நடந்தது. கி மொக்கே திரையரங்குகளில் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தார் அல்லது ஆக்கிரமிப்பிற்கு மற்றும் (பெத்தன் அரசாங்கம் நாஜிக்களுடன்) ஒத்துழைத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதன் காரணமாக, இவரும் இவருடைய இளம் கம்யூனிஸ்ட் தோழர்களும் வெளிப்படையாக கண்டனம் செய்யப்பட்டனர். இவருடைய தந்தை, இரயில் தொழிலாளி, மற்றும் கம்யூனிஸ்ட், அந்த நேரத்தில் அல்ஜீரியாவில் ரிணீவீsஷீஸீ-சிணீக்ஷீமீமீக் கடுங்காவல் தண்டனைக்கு அனுப்பப்பட்டிருந்தார்; பிரெஞ்சுப் போலீஸ் இந்த Popular Front பிரதிநிதியை காவலில் வைத்திருந்தனர்; இவர் பிரான்ஸைக் கட்டுப்படுத்திய 100 முதலாளித்துவக் குடும்பங்களை எதிர்த்தார், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்; பல ஆண்டுகளாக அது ஐரோப்பாவை அச்சுறுத்தி வந்தது."

இந்த அறிக்கை ஸ்ராலினிச வரலாற்று பொய்மைப்படுத்தல் பள்ளிக்கு தக்க உதாரணமாகும்.

கி இன் தந்தை Prosper Moquet மே 3, 1936ல் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 72 கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளில் ஒருவராவார். மே 1935ல் ஸ்ராலின், வலதுசாரி Laval அரசாங்கத்துடன், உட்குறிப்பாக பிரெஞ்சு இராணுவ கொள்கையை அங்கீகரித்த மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை இராணுவ வரவு/செலவு திட்டத்திற்கு வாக்களிக்குமாறு வழிகாட்டும் ஒரு ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்தார். ஸ்ராலினும் பிரெஞ்சு CP யும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துடன் கொண்டிருந்த உடன்பாடு மக்கள் முன்னணி (Popular Front) அரசாங்கத்தின்கீழ் தொடர்ந்திருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் கட்சி மற்றும் முதலாளித்துவ தீவிரவாதக் கட்சி (Radical Party) ஆகியவற்றை கொண்டு மக்கள் முன்னணி அமைக்கப்பட்டிருந்தது. இது தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்துடன் பிணைத்து ஒரு சுயாதீன, சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கு வளர்ச்சி பெறுவதையும் எதிர்த்து இருந்தது. இதன் முதல் செயல் மே-ஜூன் பொது வேலை நிறுத்தம் ஒரு புரட்சிகர எழுச்சியாக வளர்வதை தடுத்து நிறுத்தியது ஆகும். பிரான்சை நாஜித் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதை முற்றிலும் தேசியவாத அர்த்தத்தில்தான் இது கண்டது; ஏகாதிபத்திய நலன்களுக்காக தொழிலாள வர்க்கத்தையும், இளைஞர்களையும் பீரங்கிக்கு இரையாக பயன்படுத்தும் பெரும் வல்லரசுகளின் மோதலாக பார்க்கவில்லை.

செப்டம்பர் 30, 1938 அன்று பிரிட்டனின் நெவில் சாம்பர்லின், பிரான்சின் எடுவார்ட் டாலடியேர் இருவரும் ஹிட்லரை திருப்திப்படுத்தும் மூனிச் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதையொட்டி அவர்கள் நாஜிக்கள் செக்கோஸ்லோவாக்கியா மீது படையெடுப்பதற்கு இசைந்தனர். சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக பிரிட்டனும் பிரான்சும் ஜேர்மனியுடன் சேர்ந்துகொள்ளுமோ என்று ஸ்ராலின் அஞ்சினார்.

இந்த ஏகாதிபத்திய கூட்டணிக்கு எதிராக உலகத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் முயற்சியில் ஈடுபடுவதற்கு பதிலாக, முன்னரே ஏற்படுத்திக் கொள்ளும் தனது சொந்த கூட்டணியை ஸ்ராலின் ஏற்படுத்திக் கொண்டார்: ஆகஸ்ட் 23, 1939 ஹிட்லர்-ஸ்ராலின் உடன்பாடு என்பதே அது.

பின்னர் ஒரு மாதத்திற்குள், செப்டம்பர் 20, 1939 ல் ஸ்ராலினின் கொமின்டேர்ன் பிரெஞ்சு CP யிடம் தன்னுடைய புது நிலைப்பாட்டை தெரிவித்தது: ஹிட்லரின் போலந்துப் படையெடுப்பிற்கு விடையிறுக்கும் வகையில் பிரான்சும் பிரிட்டனும் ஜேர்மனிக்கு எதிராக அறிவித்துள்ள போருக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கொடுக்கக்கூடாது. முன்பு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் "தேசியப் பாதுகாப்பு" என்று போரை பண்பிட்டிருந்தது இப்பொழுது "ஏகாதிபத்தியப் போராக" மாற்றம் செய்யப்பட்டது. ஜேர்மனி சோவியத் ஒன்றியத்துடன் கூட்டாக இருப்பதால் கம்யூனிஸ்ட் கட்சி அதை எதிர்க்க வேண்டும்.

செப்டம்பர் 26, 1940 அன்று l' Humanite, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, கோலிச எதிர்ப்பை "மற்றவர்களுடைய வாழ்வுடன் விளையாடும் போர் வெறியர்கள்" என்று சாடி, "ஒடுக்கப்படுவோருக்கு எதிரான போர் என்று கூறப்படுவதன் பேரில் ஜேர்மனியர்கள் மீதோ மற்றவர்கள் மீதோ பிரான்சை போரில் இழுக்கும் ஏகாதிபத்தியவாதிகளின் பொது விருப்பம்" என்று கண்டித்தது.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினரும் ஸ்ராலினிச கம்யூனிச அகிலத்தின் செயலாளருமான André Marty அக்டோபர் 4, 1939 அன்று டாலடியேரின் அரசாங்கத்தில் ஒரு உறுப்பினரான லியோன் புளூமிற்கு போருக்கு ஆதரவு கொடுப்பததை கண்டித்து ஒரு கடிதம் எழுதினார். "தற்போதைய போர் ஏகாதிபத்திய குழுக்கள் இரண்டினால் தூண்டிவிடப்படுபவை; அவை ஒவ்வொன்றும் மற்றொன்றை கொள்ளையடிக்க விரும்புகின்றன; அதன் விளைவாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் இதில் ஒன்றும் செய்வதற்கில்லை."

இதன் விளைவாக, ஜனாதிபதி எடுவார்ட் டாலடியேர், செப்டம்பர் 26, 1939ல் PCF ஐ கலைத்து ஆணையிட்டார் மற்றும் Prosper Môquet உள்பட அதன் பல உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை தடுப்புக்காவலில் வைத்தார். அக்டோபர் 10, 1939ல் கைது செய்யப்பட்ட Prosper ஒரு இரகசிய இராணுவ நீதிமன்றத்தால் ஏப்ரல் 1940 அன்று விசாரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். மார்ச் 1941ல் அல்ஜீரியாவில் இருந்த Maison-Carré சிறைக்கு நாடுகடத்தப்பட்டார்.

நாஜிக்கள் ஜூன் 10, 1940 அன்று பிரான்சின்மீது படையெடுத்தனர்; மார்ஷல் பெத்தன் 12 நாட்களுக்கு பின்னர் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பாசிசத்திற்கு பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும் பிரிவுகள் பரிவு உணர்வு கொண்டமை பிரெஞ்சு இராணுவம் முறியடிக்கப்பட்டதில் பெரும் பங்கைக் கொண்டிருந்தது. சோவியத்தின் ராஜதந்திர தேவைகளுக்கு ஏற்ப தன்னுடைய கொள்கைகளை வகுத்துக் கொண்ட பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது மற்றும் அதன் தலைவர்கள் பலரும் மக்கள் முன்னணியில் இருந்த அவர்களின் முன்னாள் கூட்டாளிகளால் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனவே பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அதன் மே 21, 2007 அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது போல் (உண்மையில் இந்த அறிக்கை நாஜி-விரோத செயல்கள் என்ற உட்குறிப்பை காட்டுகிறது) Prosper Môquet பாசிச விரோத செயல்களுக்காக சிறையில் அடைக்கப்படவில்லை; மாறாக, ஸ்ராலினிச கட்சி அந்நேரத்தில் பாசிச ஜேர்மனியுடனான போரை எதிர்த்திருந்தது. உண்மையில் மற்ற அரசியல் கருத்துக்களும் பங்கை கொண்டிருந்தன என்பதில் ஐயமில்லை (தொழிலாள வர்க்கத்திடம் இருந்த இடதுசாரிப் போக்குகளை நசுக்க ஒரு வாய்ப்பு), என்றாலும், கி மொக்கேயின் தந்தை உத்தியோகபூர்வமாக "விரோதியுடன் சதித் தொடர்பு" ("Intelligence avec l' ennemi") என்பதற்காக கண்டிக்கப்பட்டார்; மேலும் அவர் அந்நேரத்தில் செயல்படாமல் இருந்த மக்கள் முன்னணியின் உறுப்பினராகவும் நிச்சயமாக இல்லை. உண்மையில் அவர் லியோன் புளூம்மின் மக்கள் முன்னணி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சராக இருந்த, தீவிரப்போக்கு கட்சித் தலைவரான Daladier அரசாங்கத்தின் அரசியல் கைதியாக இருந்தார்.

இரு செய்தியாளர்கள் Jean-Pierre Besse, Claude Pennetier 2006ல் பாரிஸ் உள்ளூர் அரசாங்க ஆவணக்காப்பகத்தில் ஆராய்ந்த போது Maurice Tréand தலைமையில் இருந்த பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நாஜி வெளியுறவு மந்திரி ரிப்பென்ட்ரொப்பின் பிரதிநிதியான Otto Abetz க்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளின் பதிவுக் குறிப்புக்களை கண்டுபிடித்தனர். நன்கு வெளிப்படுத்தப்பட்ட செமிட்டிச எதிர்ப்பு வகையின் மூலம் நாஜி ஆக்கிரமிப்பாளர்களிடம் நல்லெண்ணத்தை பெறுவதற்கு மேலாக ஸ்ராலினின் தூதர்கள் இல்லை.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுச் செயலாளர் Jacques Duclos உத்தரவின் பேரில், நாஜிக்கள் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளான l'Humanité வெளியிட அனுமதி பெறுவதற்கு Tréand பெரிதும் முயன்றார். ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் 1940 வரை இப்பேச்சு வார்த்தைகள் நடந்தன.

Tréand வாதிட்டதாவது: "நாங்கள் சோவியத்திற்கு நல்லமுறையில் செயல்பட்டிருக்கிறோம், மறைமுகமாக உங்களுக்காகவும் செயல்பட்டிருக்கிறோம்... உங்களுக்காக எதையும் செய்யமாட்டோம் ஆனால் உங்களுக்கு எதிராக எதையும் செய்யவும் மாட்டோம்." ஆங்கில முதலாளித்துவத்தினரையும் அவர்களுடைய பிரெஞ்சு நண்பர்களையும் தாக்கி "யூத மண்டேல்" பற்றியும் Tréand குறிப்பிடுகிறார். நாஜி ஆக்கிரமிப்பிற்கு முன்பு ஜோர்ஜெஸ் மண்டேல் கடைசி உள்துறை மந்திரியாக இருந்தார். Tréand, தேசிய பாதுகாப்பை சேதப்படுத்துவதற்காக தொழிலாளர்களை கொன்ற "யூத மண்டேல்" பற்றி மூன்று முறை பேசுகிறார்.

Duclos தயாரித்து ஜேர்மனிய அதிகாரிகளுக்கு கொடுத்த ஆவணம் ஒன்றின் பகுதி பின்வருமாறு கூறுகிறது: "எங்களால் வெளியிடப்படும் L'Humanité தன்னுடைய பணியாக ஐரோப்பிய சமாதன கொள்கைகளை தொடர்வதை கொள்ளும், பிராங்கோ-சோவியத் ஒப்பந்தம் செய்யப்பட்டதை பாதுகாக்கும்; இது ஜேர்மனிய சோவியத் உடன்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும்; இதையொட்டி நீடித்த சமாதானத்திற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்படும்."

ஸ்ராலின், எதிர்ப்பை பற்றியும் இத்தகைய கொள்கையினால் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்டிருந்த குழப்பத்தையும் பற்றி நன்கு அறிந்திருந்தார். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளின் மூன்றில் ஒரு பங்கு உட்பட பலர் இராஜிநாமா செய்திருந்தனர். ஆக்கிரமிப்பிற்கு எதிரான இரகசிய நடவடிக்கையை தொடங்க சோவியத் ஒன்றியத்தின்மீது நாஜிப் படையெடுப்பு ஏற்படும் வரை பலர் காத்திருக்கவில்லை. கொமின்டேர்னின் செயலர் Georgi Dimitrov மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் Maurice Thorez கையெழுத்திட்ட ஜூன் 22, 1940 தந்தி ஒன்று தெரிவித்தது: "தொழிற்சங்கம், உள்ளூர் [கட்சி] ஏடுகள் மற்றும் பின்னர் l'Humanite வெளியிடப்படுவது ஆகியவற்றை பெறுவதற்கான, அதே நேரத்தில் படையெடுத்துள்ளவர்களுக்கு பாராட்டு அல்லது அவர்களுடன் ஐக்கிய உணர்வு என்ற நினைப்பை கொடுத்துவிடாத மிகக் குறைந்த சாதாகமான வாய்ப்பு இருந்தாலும் பயன்படுத்துக."

அக்டோபர் 13, 1940 அன்று 16 வயதாகியிருந்த கி மொக்கேயை பிரெஞ்சு போலிசார் கைது செய்து சிறைவைத்தனர். நாஜிக்களின் ரஷ்ய படையெடுப்பும் ஹிட்லர்-ஸ்ராலின் உடன்பாட்டை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் ஆக ஒன்பது மாதங்களே இருந்த நிலையில் பிரான்ஸ் ஆக்கிரமிக்கப்பட்டது. இக்கட்டுரையின் தொடக்கத்தில் மேற்கோளிடப்பட்ட மே 21 2007, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, "ஆக்கிரமிப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கு எதிராக" கி மொக்கே துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார் என்று வலியுறுத்துகிறது; ஆனால் கட்சிக்கு எதிராக அவர் இவ்வாறு செய்திருப்பார் என்பது மிகவும் ஐயத்திற்கு உரியது. மற்றொரு வர்ணனையாளர் அவர் பிரச்சாரம் செய்திருந்த பிரச்சினைகள், மற்றும் அதற்கான காரணங்கள் முற்றிலும் வேறுபட்டவை என்பதற்கு வலுவான குறிப்பைக் கொடுக்கிறார். "ஜேர்மனியர்கள் பாரிசை ஆக்கிரமித்தபின், விஷி அரசாங்கம் நிறுவப்பட்டபின், மிகத் தீவிரமான முறையில் புதிய அரசாங்கத்தை கண்டித்து தான் வசிக்கும் பகுதிகளில் சுவரொட்டிகளை ஆர்வத்துடன் ஒட்டி, கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரினார்" அவர்களுள் ஒருவர் அவருடைய தகப்பனார் என்பதும் அறிந்ததே.

ஊடகமானது ஸ்ராலினிச அறிக்கையுடன் சென்று, அவருடைய மகன் கைது செய்யப்பட்டபோது பிராஸ்பரின் நிலைமை பற்றித் தெளிவாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஸ்ராலினிசத்திலிருந்து கோலிசத்தை சமீபத்தில் ஏற்றுக் கொண்டிருத்தலை இடையூறு செய்யா வகையில், அவர்கள் இந்தக் குறிப்பிட்ட எலும்புக்கூட்டை அதன் பிரோவில் இருந்து எடுத்துக்காட்டி பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை குழப்பமுறச் செய்யாது விழிப்புடன் இருந்தனர்.

ஜூன் 22, 1941 ல் சோவியத் ஒன்றியத்தின்மீது நாஜிப் படையெடுப்பு தொடங்கியபின், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றொரு திருப்பத்தை கொண்டது; ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கு பதிலாக, மக்கள் முன்னணி நிலைப்பாடான பாசிச எதிர்ப்பிற்கு திரும்பி, மீண்டும் விடுதலைக்கு பின் ஒரு தொழிலாள வர்க்க சோசலிசக் குடியரசு என்பதற்கு பதிலாக முதலாளித்துவ ஆட்சியை நிறுவும் கோலிச எதிர்ப்பு இயக்கத்துடன் உடன்பாட்டில் நுழைந்தது.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டு கருவியான Cahiers du Bolchévisme, 1941 கடைசிப் பகுதியில் கூறுகிறது: "ஹிட்லர்-எதிர்ப்பு போராளிகளுக்கு, ஒரு நல்ல காரியத்திற்காக போராடும் டு கோலின் வீரர்களுக்கு பிரெஞ்சு மக்கள் வணக்கம் செலுத்துகின்றனர்." இவ்விதத்தில் தேசிய முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கியமானது ஸ்ராலினிஸ்டுகள் கோலிச தேசிய எதிர்ப்பு இயக்க குழுவில் மே 1943ல் சேர்ந்தபொழுது உறுதிப்படுத்தப்பட்டது. "நல்ல காரியம்" பின்னர் அல்ஜீரியா மற்றும் இந்தோ-சீனாவில் பிரான்சின் காலனித்துவ மக்களை அடக்குவது என்பதாக ஆயிற்று; 1945ல் டு கோலின் அரசாங்கத்தில் ஸ்ராலிசவாதிகள் பங்கு பெற்றது மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவம் மறு கட்டமைக்கப்படுவதில் பங்குபற்றியவை ஆகியவை குறிப்பிடத் தேவையில்லை.

டாலடியேர், அதற்குப் பின், பெத்தன் அரசாங்கங்களால் பிரெஞ்சு கடுஞ்சிறை முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட்டுக்கள் இப்பொழுது உத்தியோகபூர்வமாக நாஜிக்களின் விரோதிகளாகி அவர்களுடைய தயவில் இருந்தனர்.

அக்டோபர் 20, 1941ல் ஒரு ஜேர்மனிய தளபதியான Karl Hotz மூன்று இளம் கம்யூனிஸ்ட்டுக்களால் படுகொலை செய்யப்பட்டார். நாஜிக்கள் உடனடியாக பழிதீர்க்கும் வகையில் 50 பிரெஞ்சு உயிர்களைக் கோரினர். மார்ஷல் பெத்தனின் ஒத்துழைப்பு அரசாங்கத்தில் உள்துறை மந்திரியாக இருந்த Pierre Pucheu கொலைத் தண்டனைக்காக 50 கைதிகளை தேர்ந்தெடுக்க பணிக்கப்பட்டார். முன்னாள் இராணுவத்தினர் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை Pucheu அவர்கள் "நல்ல பிரெஞ்சுக்காரர்கள்" என்று தீர்மானித்து நிராகரித்தார்; அதற்கு பதிலாக இரண்டாம் பட்டியல் ஒன்று கம்யூனிஸ்ட் பிணையாளிகளை கொண்டு தொகுக்கப்பட்டது.

ஒரு ட்ரொட்ஸ்கிஸ்டான Marc Bourhis, அவருடைய நண்பரும், தோழரும் மற்றும் Concarneau நகர மேயரும், 1920TM பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதில் இருந்து அதன் உறுப்பினருமான Pierre Guéguin இவர்களை தவிர, ஏனையோர் PCF உறுப்பினர்களாக இருந்தனர். Guéguin ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை மற்ற பிற PCF உறுப்பினர்கள் போல் எதிர்த்திருந்து ட்ரொாட்ஸ்கிஸ்டுகளுக்கு பரிவு உணர்வு காட்டியிருந்தார். கடுஞ்சிறை முகாமில் இருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பு Bourhis க்கு கிடைத்தபோது அவர் Guéguin உடன் தங்கியிருக்க விரும்பினார்; ஏனெனில் தனிமையில் விடப்பட்டால் ஸ்ராலினிச கைதிகளால் தான் ஆபத்திற்கு உட்படக்கூடும் அல்லது கொல்லப்பட்டுவிடக் கூடும் என்று அஞ்சினார். Chateaubriant நாஜி கொலைக் குழுவினர் கி மொக்கேயை கொன்றபொழுது 27 கைதிகளில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளும் இருந்தனர் என்பது 1990கள் வரை பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களால் மறுக்கப்பட்டு வந்தது.

ஸ்ராலினிஸ்டுகள் பாசிசத்திற்கு எதிரான தடுப்பு இயக்கங்கள் அனைத்திலும் ஒரு புரட்சிக சோசலிச போராட்டம் வளர்ச்சி பெறுவதை தடைசெய்து, நெரித்தனர்; தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை தேசிய முதலாளித்தவத்தினர், மற்றும் அவர்களுடைய நண்பர்களுடன் கட்டிப்போட்டனர். 1936ம் ஆண்டு ஸ்பெயின் புரட்சியின்போது நடந்த காட்டிக் கொடுப்பு இதற்கு முதல் உதாரணம் ஆகும்.

மே 1940ல் நடந்த நான்காம் அகிலத்தின் (FI) அவசரமாநாடு, ஐரோப்பாவில் நாஜி ஆதிக்கம் இருந்த மிக இருண்ட ஆண்டுகளில் அடிப்படை வழிகாட்டலை கொடுத்த அறிக்கை ஒன்றைக் கொடுத்தது. இதன் தொடக்க கருத்துக்களில் இந்தப் பந்தி உள்ளது: "மக்களை படுகொலைக்கு தள்ளிய அரசாங்கங்களிடத்தே நான்காம் அகிலம் திரும்பவில்லை; இந்த அரசாங்கங்களுக்கு பொறுப்புடைய முதலாளித்துவ அரசியல் வாதிகளிடமும் திரும்பவில்லை; போரிட்டுக் கொண்டிருக்கும் முதலாளித்து வர்க்கங்களுக்கு ஆதரவு தரும் தொழிலாளர் அதிகாரத்துவத்திடமும் திரும்பவில்லை. நான்காம் அகிலம் தொழிலாள வர்க்க ஆண்கள் பெண்கள், தரைப் படைவீரர்கள், கடற்படை வீரர்கள், அழிக்கப்பட்டுள்ள விவசாயிகள், அடிமைத்தளையில் இருக்கும் காலனித்துவ நாட்டு மக்கள்பால்தான் திரும்புகிறது. நான்காம் அகிலம் அடக்குமுறையாளர்கள், சுரண்டுபவர்கள், ஏகாதிபத்தியவாதிகள் ஆகியோருடன் எவ்விதமான உறவுகளையும் கொள்ளவில்லை. இது உழைப்பாளிகள், ஒடுக்கப்பட்டவர்கள், சுரண்டப்பட்டவர்கள் ஆகியோரின் உலகக் கட்சி ஆகும். இந்த அறிக்கை அவர்களுக்கு கூறப்பட்டதாகும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved