G8 fails to meet aid pledges to Africa
ஆபிரிக்காவுக்கு கொடுத்த உறுதிமொழிகளை ஜி8 நிறைவேற்ற தவறியுள்ளது
By Barry Mason
6 June 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
ஜூன் மாதம் ஜேர்மனியில் உள்ள ஹைலிகென்டாமில் நடைபெறவுள்ள
G8 உச்சி
மாநாடு, தான் பதவியில் இருந்து நீங்கும் முன் இவருடைய "மரபுவழி" என்று கூறப்படுவதை பாராட்டும் பிரச்சாரத்திற்கு
ஒரு உந்துதல் கொடுக்கும் என்று பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர் நம்பிக்கை கொண்டிருந்தார்.
2005ல் ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற
G8 உச்சிமாநாட்டின்போது
பிளேயர் ஒரு ஆபிரிக்க குழுவை அமைத்திருந்தார், ஆங்கு கூடியிருந்த நாட்டுத் தலைவர்களிடம் இருந்து
பெரும்பாலான ஆபிரிக்க துணை சகாராப் பகுதிகள் உள்ளடங்கிய உலகின் மிக வறிய நாடுகளுக்கு உதவியும் கடன்
நிவராணமும் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதிகளைப் பெற்றிருந்தார்.
அரசு சாரா அமைப்புக்கள், திருச்சபைக் குழுக்கள் ஆகியவை "வறுமையை வரலாறாக
ஆக்கும்" எனத் தொடங்கியிருந்த பிரச்சாரத்தின் உச்சக்கட்டமாக 2005
G8 உச்சிமாநாடு
அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. இப் பிரச்சாரத்தின் முன்னணியில் ராக் பாடகர்களான
Bob Geldof, Bono
போன்றோர் இருந்தனர். உச்சி மாநாட்டின் முடிவில் கெல்டோப் உதவி நிதிக்கு "10க்கு 10 ஆக இருக்கும்"
என்றும், கடன் நிவாரணத்தில் "10க்கு 8 ஆக இருக்கும்" என்று மதிப்பிட்டிருந்தார். "பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது"
என்று பிளேயர் அறிவித்திருந்தார்.
G8 நாடுகள் 2005 கிளேனேகில்ஸ்,
ஸ்கொட்லாந் உச்சி மாநாட்டை தொடர்ந்து வெளியிட்ட அறிக்கை கூறியது, "2000 மில்லினியம் உச்சிமாநாட்டில்
உடன்பாடு கொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதற்கு இப்பொழுது பத்து ஆண்டுகளே உள்ளன.... நாம்
G8 ன் கவனக்குவிப்பை
ஆபிரிக்காவின் மீது காட்டுவதை தொடரவேண்டும்; அது ஒன்றுதான் மில்லினியம் அறிவிப்புக்களின் எந்த இலக்குகளையும்
2015 அளவில் கூடஅடைய முடியாத நிலையில் உள்ளது."
ஒப்புக் கொள்ளப்பட்ட பல உதவிகள் செயல்படுத்தப்படவில்லை, அல்லது
ஓரளவிற்குத்தான் செயல்படுத்தப்பட்டன. பேர்லினில் ஷேர்ப்பாக்கள் என்று அழைக்கப்பட்டவர்களுடைய --உச்சி
மாநாடு பற்றித் தயாரிக்க இருக்கும் G8
அதிகாரிகள் பற்றிக் குறிப்பிட்டு-- சமீபத்திய கூட்டம் பற்றி கார்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
கார்டியனில் மே 16ம் தேதி வந்த அக்கட்டுரையின்படி, உதவித் தொகை பிரச்சினை பற்றி வினாக்கள்
எழுப்பிய பிரிட்டிஷ் பிரதிநிதிகளுக்கு அதிக ஆதரவு கிட்டவில்லை. ஒரு ரஷ்ய ஷெர்ப்பா, "7/7 பயங்கரவாத
தாக்குதல்களுக்கு பின்னர் டோனி பிளேயர் நிலைமை பற்றி வருந்தியதால் மட்டுமே நாங்கள் அத்தகைய
உறுதிமொழிகளை கொடுத்திருந்தோம்." இதற்கு முந்தைய தினம் ஒரு பஸ் மற்றும் நிலத்தடி இரயில்கள் மீது
குண்டுவீச்சுக்கள் நடந்தது பற்றி இது ஒரு குறிப்பாகும்.
உதவிக்கான உறுதிமொழிகள் காப்பாற்றப்படாதது பற்றி விசாரிக்க
G8
உச்சிமாநாட்டின் அவசரக் கூட்டம் ஒன்றிற்கு Bono
அழைப்பு விடுத்துக் கூறினார்: "G8
இன் நம்பகத்தன்மைக்கு மட்டும் ஊறு விளையவில்லை. 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய அகிம்சை
வழியிலான எதிர்ப்பின் நம்பகத்தன்மையும் ஆபத்திற்கு உட்பட்டுள்ளது. ஜேனோவாவில் (Genoa)
நாம் பார்த்தவற்றை மீண்டும் காணவேண்டும் என்று எவரும்
விரும்பவில்லை; ஆனால் உண்மையான அதிர்ச்சியை உணர்கிறேன்" என்று கார்டியனிடம் அவர் கூறினார்.
சமீபத்தில் வந்துள்ள அறிக்கைகள் எந்த அளவிற்கு உதவிப் பற்றாக்குறை உள்ளது
என்பதை காட்டுகின்றன. Bonoவும்,
கெல்டோவும் நிறுவியுள்ள Debt
AIDS Trade Africa, DATA
என்ற அமைப்பில் இருந்து ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது. அது கூறுவதாவது: "இதன் முடிவுகள் அதிபர்
மெர்க்கெலால் (ஜேர்மனி),
அவர் வரவிருக்கும் ஹைலிகென்டாம்
G8 உச்சி
மாநாட்டில் ஆபிரிக்கா பற்றிய முக்கியமான கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கும்போது கருத்தில் எடுத்துக்
கொள்ளப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்."
DATA அறிக்கை கொடுத்த
உறுதிமொழியில் இருந்து 2010 அளவில் ஆண்டு ஒன்றிற்கு $25 பில்லியன் வீதம் வளர்ச்சி உதவி என்பதில் எந்த
அளவிற்கு G8
நாடுகள் பிறழ்ந்துள்ளன என்பதை காட்டுகிறது. அது குறிப்பிடுவதாவது:
"கூட்டாக G8
ஆபிரிக்காவிற்கு உறுதியளித்த வளர்ச்சி உதவியில் இருந்து மிகவும் தவறியுள்ளது. ஆபிரிக்க துணை சகார நாடுகளுக்கு
மொத்தமாக G8
உதவித் தொகை $5.4 பில்லியன்தான் இக்காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளது.... 2007, 2008 ல் பல
G8
நாடுகள் கொடுப்பதாக இருந்த சிறிய உதவியை பற்றியும் கவலை அதிகரித்துள்ளது. விரைவில்
G8 உறுதியளித்த
போக்கிற்கு உதவித் தொகை அதிகரிப்பை கொடுத்து உதவாவிட்டால், தொடக்கத்தில் பெற்ற வெற்றிகள் ....
வீணடிக்கப்பட்டுவிடும்."
வணிகத்தை பொறுத்த வரையில், இது கூறுகிறது: "பூகோளந்தழுவிய உடன்பாடு
இல்லாதது, ஆபிரிக்காமீது குவிப்புக் காட்டாதது என்பதின் பொருள் நாம் உண்மையான முன்னேற்றத்தை அறிவிக்க
முடியாது என்பதாகும் ...G8
உறுப்பு நாடுகள் அனைத்துமே இந்த கூட்டுத் தோல்விக்குப் பொறுப்பு என்றுதான் நாங்கள் கட்டாயம் கொள்ள
வேண்டும்."
CONCORD என்னும் ஐரோப்பாவில்
இருக்கும் அரசு சாரா வளர்ச்சி அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நிழற்குடை அமைப்பு, ஐரோப்பிய
ஒன்றிய நாடுகளின் உதவித் திட்டங்களை பகுத்தாய்ந்துள்ளது. இந்த அறிக்கைக்கு "கைதட்டி பாராட்டலை
நிறுத்தவும்" என்று தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய அரசாங்கங்கள் உறுதியளிக்கும் தொகைகள் உண்மையில் கொடுக்கப்படும்
உதவிகளுக்கு ஈடாக இருப்பதில்லை. "தற்போதைய செயல்திறனில் ஐரோப்பிய அரசாங்கங்கள் முன்னேற்றம்
காட்டாவிட்டால், ஐரோப்பாவில் இருந்து 2010 அளவில் வறிய நாடுகள், உறுதியளிக்கப்பட்டதைவிட 50 பில்லியன்
யூரோக்களை குறைவாகப் பெறும்." ஐரோப்பிய அரசாங்கங்களின் உதவித் திட்டங்கள் "பாதுகாப்பு, புவி
அரசியல் உடன்பாடுகள் மற்றும் உள்நாட்டு நலன்கள்" ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாக கொண்டுள்ளன என்று
அது குற்றம் சாட்டுகிறது.
ஐரோப்பிய அரசாங்கங்கள் உதவித் தொகை என கூறப்படுபவற்றில் 30 சதவிகிதம்
உண்மையான உதவியில்லை என்றும் இப்பகுப்பாய்வு காட்டுகிறது. உதவித் தொகையை மிகைப்படுத்திக் காட்டும்
வழிவகைகளில் கடன் நிவாரணத்தையும் சேர்த்துக் கொண்டிருப்பது ஒருவகையாகும். மற்றொரு வழிவகை ஏற்றுமதி
கடன் தொகைகளை உதவி நிவாரணத் தொகை என்று காட்டுவதாகும். அறிக்கை காட்டுவது போல் ஏற்றுமதிக்
கடன்கள் உள்நாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு கொடுக்கப்படும் ஆதரவுத்
தொகையாகும்; இதில் காப்பீட்டுத் தொகையும் அடங்கும்; அவை ஆபத்திற்கு உரியவை என்றாலும்,பல நேரம் மிக
அதிகமாக இருக்கும் .
உதவித் தொகைகளை மிகைப்படுத்திக் காட்டும் மற்றொரு வழிவகை ஐரோப்பாவிற்குள்
வரும் அகதிகளுக்கு செலவழிக்கப்படும் பணங்களையும், ஐரோப்பாவிற்குள் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கி கற்கும்
மாணவர்களுக்கான செலவினங்களையும் அதில் சேர்ப்பது ஆகும்.
Organisation for Economic Co-operation and
Development (OECD) புள்ளிவிவரங்கள் ஆபிரிக்காவிற்கு
கொடுக்கப்படும் ஐரோப்பிய உதவி விகிதம் உண்மையில் சரிந்து கொண்டிருப்பதைத்தான் காட்டுகின்றன. 2003ல்
அது 41 சதவிகிதமாக இருந்தது; 2005ல் அது 37 சதவிகிதமாயிற்று.
CONCORD, "பிணைக்கப்பட்டுள்ள
உணவு உதவியும் பல நேரமும் நன்கொடை நாடுகளில் இருந்து எஞ்சிய உணவை உதவி பெறும் நாடுகளில் குவிப்பதுடன்
சேர்க்கப்படுகிறது" என்று கூறியுள்ளது. Observer
ஏட்டின் உணவு சஞ்சிகையில் சமீபத்தில் வந்துள்ள கட்டுரை, அமெரிக்க அரசாங்கம் இதையே செய்துள்ளதாகக்
குற்றம் சாட்டியுள்ளது. "அமெரிக்காவின் உணவு உதவித் தொகுப்புக்கள் அமெரிக்காவில் விலைகள் மந்தமாகும்போது
மகத்தான அளவில் (தானிய உற்பத்தியில் கிட்டத்தட் 20 சதவிகிதம்) பெருகுகின்றன... ஆனால் உள்நாட்டில்
விலைகள் அதிகமாகும்போது இந்த சதவிகிதம் 5 என்று குறைந்துவிடுகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.
வளர்ச்சி அறக்கட்டளை அமைப்பான
Oxfam
கொடுத்துள்ள அறிக்கை, "மில்லியன் கணக்கான உயிர்களுக்கு கிடைக்காவிட்டால் ஆபத்து ஏற்படக்கூடிய,
G8
உறுதிமொழிகளுக்காக உலகம் இன்னமும் காத்திருக்கிறது" என்ற தலைப்பைக் கொடுத்திருக்கிறது.
இந்த அறிக்கை கிளேனேகிலஸ்
G8 உச்சிமாநாடு
நடந்த இரண்டு ஆண்டுகளில், "ஏற்கமுடியாத உண்மை என்னவென்றால் அவை தங்கள் உறுதிமொழிகளை, கொடூரமான
விளைவுகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற வகையில், மீறுதவதுதான்" என்று குறிப்பிட்டுள்ளது. உறுதிமொழி
கூறப்பட்டுள்ள பண அளிப்பில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினால் சாதாரண மருத்துவசதி இல்லாததால் 1 மில்லியன்
மகளிர் மகப்பேறு காலத்திலோ, குழந்தைகள் பெறும் காலத்திலோ இறக்கும் அபாயத்திற்கு ஒப்பாகும்; ஐந்து
வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 21 மில்லியன் மிக வறிய நிலையினால் இறக்கின்றன.
Scotsman ல் ஏப்ரல் மாதம்
எழுதிய, நியூ யோர்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தின்
Earth Institute
இயக்குனர் Jeffrey Sachs
குறிப்பிடுகிறார்: "கிளேனேகில்ஸ் கூட்டத்திற்கு பின்னர் முதல் ஆண்டில் உதவி எண்ணிக்கை கடன் இரத்து செய்யப்பட்ட
நிதியையும் சேர்த்து பெரிதாகக் காட்டப்பட்டது. ...இப்பொழுது கிடைக்கும் புள்ளிவிவரங்கள் கடுமையான
உண்மையை தெரிவிக்கின்றன: ஆபிரிக்காவிற்கும் மற்ற ஏழை நாடுகளுக்கும் வளர்ச்சி உதவி இன்னும் பொதுவான
தேக்கத்தைத்தான் அடைந்துள்ளது..."
2005 G8
உச்சிமாநாட்டில் கடன் தள்ளுபடி பற்றி அதிகம் கூறப்பட்டது; ஆயினும்கூட
Jubilee Debt Campain
கிடைத்துள்ள சமீபத்திய தகவலக்ளின் படி கூறுகிறது: "மிக ஏழ்மையில் உள்ள 54 நாடுகள்
300 முதல் 400
பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கடன்களை கொண்டுள்ளன;
ஏழை நாடுகள் 152 மொத்தத்தில் US$
2.5
டிரில்லியனை கொண்டுள்ளன."
இது மேலும் கூறுவதாவது: "மிக ஏழை நாடுகளின் மொத்த வெளிக் கடன்கள்
(குறைந்த வருமானமுடைய நாடுகள், ஆண்டு சராசரி வருமானம் தனிநபருக்கு $875 ஐ விடக் குறைவாக
கொண்டவை) 412 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று 2005 இறுதியில் கொண்டிருந்தன. 2005ல் இந்நாடுகள்
கிட்டத்தட்ட 43 பில்லியன் அமெரிக்க டாலர்களை பணக்கார நாடுகளுக்கு கடன் தருதலில் (அசலும், வட்டியும்)
கொடுத்துள்ளன; அதாவது நாள் ஒன்றிற்கு 118 மில்லியன் டாலர்கள் ஆகும்."
மாநாட்டிற்கு முன்பாக எப்பொழுதும் பேசப்படும் "தாராளமான" செயற்பாடுகள்
இப்பொழுதும் காணப்படுகிறது. புஷ் ஒரு கூடுதலான 30 பில்லியன் டாலர்களை
HIV/Aids ஐ
எதிர்த்துப் போரிட ஒதுக்குவதாக அறிவித்தார். ஜனாதிபதியின் அவசரகால திட்டம்
Aids Relief (Pepfar)
ஐ 2003ல் நிறுவி ஐந்து ஆண்டுகளுக்கு $15 பில்லியன் செலவிடப்படும் என்றார். இது செப்டம்பரில் முடிவடைகிறது.
புதிதாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கப்படும். ஆனால் கார்டியன் செய்திக் கட்டுரை, மே
31 பதிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: "திரு புஷ் 30
பில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்தாலும், அவர்
சட்டமன்றத்தை பணம் கேட்க வேண்டும். ஈராக் செலவினங்கள் பில்லியன்களில் ஆகும் நேரத்தில், காங்கிரசிற்கு
ஏற்கனவே அதிகமாகிவிட்ட அமெரிக்க பட்ஜெட்டில் பணத்தை ஒதுக்குவது கடினமாகும்."
மேலும் அமெரிக்க சட்டத்தின்படி, குறைந்தது மூன்றில் ஒரு பங்கு செலவீனங்களாவது
சுய கட்டுப்பாடு, ஆணுறைகள் தவிர்த்தல் இவற்றை ஆதரிக்கும் கிறிஸ்துவ அமைப்புக்களுக்கு கொடுக்கப்படவேண்டும்.
கொலம்பிய பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரக் கூடத்தின்
Dr.John Santelli
விளக்கினார்: "ஒரு நல்ல திட்டத்தை கலவையான கருத்துக்களுடன் இணைத்து செயல்படுத்த முடியாது. ஒரு இடத்தில்
சுய கட்டுப்பாடு வேண்டும் என்று வாதிடுகிறீர்கள், மற்றபடி அருகில் உள்ள மருத்துவமனையில் ஆணுறைகளை
வினியோகிக்கின்றீர்கள்; இரண்டிற்கும் அமெரிக்கா நிதி கொடுக்கிறது."
Action Aid என்னும் சர்வதேச
வறுமை-எதிர்ப்பு நிறுவனத்திற்கு பிரச்சாரம் செய்யும் அமைப்பின் தலைவர்
Aditi Sharma
கூறினார்: "HIV
உடன் வாழும் மக்கள் உதிரிகளாக வரும் உறுதிமொழிகளால் களைப்புற்றுள்ளனர்; ஒரு நீண்ட கால நிதித்திட்டம்,
2010க்குள் தடுப்பு, சிகிச்சை, பாதுகாப்பு இவை அனைவருக்கும் கிடைக்கும் என்ற இலக்கை அடையக்கூடிய
உறுதியான, கூடுதலான, கணிசமான, திட்டங்களைத்தான் அவர்கள் ஏற்பர்."
ஒரு சமீபத்திய Action
Aid அறிக்கை,
G8 நாடுகள்
AIDS
சிகிச்சை/தடுப்புக்கு கொடுக்கப்பட்டுள்ள பணத்தைப் போல் மூன்று மடங்கு பணம் கொடுத்தால்தான் இந்த இலக்கு
அடையப்பட முடியும் என்று கூறுகிறது. ஷர்மா குறிப்பிட்டார்: "புஷ்ஷின் அறிவிப்பு வந்தபோதிலும், அமெரிக்கா
தன்னுடைய பங்கை முழுவதும் கொடுக்காது."
Universal Access Aids
பிரச்சாரம், 250 HIV
உதவி மற்றும் தொடர்புடைய அமைப்புக்களின் சார்பில், வெளியிட்ட பகிரங்கக் கடிதம் ஒன்று
G8 தலைவர்களுக்கு
அனுப்பப்பட்டுள்ளது. "UNAIDS
பூகோளந்தழுவிய முறையில் AIDS
உதவிக்கு 20
முதல் 30 பில்லியன் டாலர்கள் வரை ஆண்டிற்கு தேவைப்படும்; ஆனால் தற்போதைய உறுதிமொழிகளை ஒட்டி
எங்களுக்கு 8 பில்லியன் பற்றாக்குறை 207லும், 2008-10ல் 10 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறையும்
இருக்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
G8 க்கு தற்போது ஜேர்மனி
தலைமை என்ற முறையில், அங்கேலா மேர்க்கெல் அறிக்கை கொடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இவர்
வளர்ச்சி உதவியை 750 மில்லியன் யூரோக்களை ஆண்டு ஒன்றிற்கு அதிகமாக அடுத்த நான்கு ஆண்டுகளில் கொடுப்பதாக
உறுதி அளித்துள்ளார். Oxfam
ஐ சேர்ந்த Max Lawson
"இது போதாது" என்று தெரிவித்துள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
0.51 சதவிகிதம் செலவழிக்கப்படும் என்ற ஜேர்மனியின் இலக்கை ஒட்டி, இந்த அதிகரிப்பு கொடுக்கப்பட
இருக்கும் தொகையைவிட குறைந்தது இரு மடங்காவது இருக்க வேண்டும்.
ஏப்ரல் மாதம், Africa
Progress Pael (APP) என்பது நிறுவப்பட்டது. இதன் முக்கிய
பணியாளர்களில் முன்னாள் ஐ.நா. தலைமைச் செயலர் கோபி அன்னான், முன்னாள் சர்வதேச நிதிய அமைப்பின்
நிர்வாக இயக்குனர் Michael Camdessus
மற்றும் பொப் கெல்டாப் ஆகியோர் உள்ளனர். ஒரு சமீபத்திய அறிக்கையில், கிளேனேகில்ஸ்
G8 உச்சிமாநாட்டில்
கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளில் 10 சதவிகிதம்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. ஏப்ரல்
இறுதியில் அன்னான் மேர்க்கெலை சந்தித்துப் பேசினார். பேசிய பின் மேர்க்கெல் கூறினார்: "கிளேனேகில்ஸ் முடிவிற்கு
பின் தொடக்கமாக இப்பொருள் எடுத்துக் கொள்ளப்படும்...இதற்காக கூடுதலான மாநாடுகளும் இலக்கு வைத்தல்களும்
தேவையில்லை."
G8 நாடுகள் மிகப் பெரிய அளவில்
உதவி உறுதிமொழியில் பின்தங்கியதானது ஆபிரிக்காவில் வறுமை பற்றிய அவர்களுடைய அக்கறையின்
மோசடித்தன்மையை உயர்த்திக் காட்டுகிறது. G8
நாடுகள் ஆபிரிக்காவில் புதுப்பிக்கப்பட்ட அக்கறையை
கொண்டுள்ளன; ஆனால் பெருகியிருப்பதோ ஆபிரிக்காவின் வளங்களை அபகரிக்கும் புதிய ஆர்வம்தான். சமீபத்தில்
தன்னுடைய இராணுவக் கட்டுப்பாட்டை அதன் மூலோபாய மற்றும் இருப்பு நலன்கள் ஆபிரிக்க கண்டத்தை ஒட்டி
இருக்கும் வகையில் அமெரிக்கா மறுசீரமைத்துள்ளது. இது கூடுதலான வகையில் ஆபிரிக்க எண்ணெயை தன்னுடைய தேவைகளுக்காக
பெற வேண்டிய நிலையில் உள்ளது. G8
நிதியமைச்சர்கள் சமீபத்தில் ஜேர்மனியில் உச்சிமாநாட்டிற்கு முன்னதாகக் கூடினர். ஒரு
BBC செய்தித்
தகவல் குறிப்பிட்டது: "தன்னுடைய பெருகிவரும் பொருளாதாரத்திற்கு ஊட்டம் கொடுப்பதற்காக மூலப்பொருட்களை
நாடும் சீனாவை, தாதுப்பொருட்கள் செழிப்புடைய ஆபிரிக்காவில் பெரும் ஆபத்தை கொடுக்கக்கூடியவற்றுள் ஒன்று
என்று ஜேர்மனி தனிப்பட்டுச் சுட்டிக்காட்டியுள்ளது." |