:
செய்திகள்
ஆய்வுகள் :ஆசியா
: கொரியா
Trains cross the Korean border for the first time in six
decades
ஆறு தசாப்தங்களுக்கு பின்னர் முதன் முதலாக கொரிய எல்லையை இரயில்கள் கடக்கின்றன
By John Chan
23 May 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
கடந்த வாரம், கொரிய தீபகற்பகத்தில் சமரசத்தை நோக்கி ஒரு முதற்படி என்று
புகழப்பட்ட முறையில் தெற்கு மற்றும் வட கொரிய, கடுமையான இராணுவக் கட்டுப்பாடு உள்ள எல்லைகளை கடந்து,
இரு இரயில்கள் குறுகிய, அடையாளப் பயணங்களை கடந்த வாரம் மேற்கொண்டன.
1951 ம் ஆண்டு கொரிய
போரின்போது வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே இருந்த இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1953 போர்நிறுத்த
ஒப்பந்தத்திற்கு பின்னர் முறையான சமாதான உடன்படிக்கை ஏதும் கையெழுத்திடப்படவில்லை; இதையொட்டி
சட்டநுட்பமாய் இன்னும் போரிலுள்ள இரண்டு கொரியாக்களில் நூறாயிரக் கணக்கான குடும்பங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன.
"இராணுவக் கட்டுப்பாடு அற்ற பகுதி" என்று ஒரு புறத்தில் அழைக்கப்படும் வட கொரிய இரயில் நிலையங்கள்
1.1 மில்லியன் இராணுவத்தினர்கள் வசிக்கும் இடமாக உள்ளன; மற்றொரு புறத்தில் தென் கொரியா மற்றும் அமெரிக்கா
700,000 துருப்புக்களை நிறுத்தியுள்ளன.
தென் கொரியாவின் ஒன்றிணைக்கும் மந்திரியான லீ ஜே-ஜெளங், இந்த இரயில்
தொடர்பை, "எமது தேசிய இரத்தக் குழாய்கள் மறுபடி இணைக்கப்பட்டு, வரலாற்றில் நம்முடைய தேசிய பிளவிற்கு
முற்றுப்புள்ளி வைத்துள்ளது போல் உள்ளது" என்று பாராட்டியுள்ளார். ஆனால் இப்பயணங்கள் இரு குறுகிய 25
கிலோ மீட்டர் சோதனை ஓட்டங்கள்தாம்; ஒன்று மேலைக் கடலோரப்பகுதியில் முன்சனில் இருந்து கேசாங்கிற்கும்
மற்றொன்று கிழக்கு கும்காங்கில் இருந்து ஜேஜிட் வரையிலும் இயக்கப்பட்டன.
வட கொரியாவைவிட தென்கொரியா மிகவும் ஆர்வத்துடன் இருப்பதுபோல் தோற்றம்
கொடுக்கிறது; வட கொரியா உத்தரவாதம் அளிக்கப்பட்ட 100 பிரதிநிதிகளுக்கு பதிலாக பாதி பேரைத்தான்
ஒவ்வொரு இரயிலிலும் அனுப்பியது. தெற்கு கொரியாவில் இதற்காக எடுக்கப்பட்ட களிப்பு விழாவில் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். வட கொரியாவில் எவ்வித முக்கிய நிகழ்வும் ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கவில்லை.
தென் கொரியாவில் செளசன் இல்போ இரு புறத்திற்கும் இடையே உள்ள
வேறுபாடுகளை கூறினார்: "விளையாட்டுத் துப்பாக்கிகள் வண்ணக் காகித தோரணங்களையும், வெள்ளை
பலூன்களையும் இரயில் முன்சனை விட்டு நகர்ந்தபோது ஆகாயத்தில் செலுத்தியது. பலரும் தடங்கள் கடந்து செல்லும்
மற்ற இடங்களில் இருந்து நகரும் இரயிலுக்கு கைசைத்தனர். தங்களுடைய நிழற்பட கைபேசியின் மூலம் இளைஞர்கள்
படம் எடுத்தனர்; சிலர் இரயிலின் திசையில் கட்டைவிரலை உயர்த்தினர்.
"இதற்கு மாறாக வட கொரிய பக்கத்தில் சிறு கும்பல்களாக மக்கள் இரயில்
செல்லுவதை வெறுமே பார்த்தனர். ஒருவரும் கை அசைக்கவில்லை. வரவேற்புக்கான ஒரே அறிகுறி கேசாங்
இரயில் நிலையத்தில் நடந்த நிகழ்வுதான்; அங்கு சேன்ஜுக் நடுநிலைப்பள்ளியில் இருந்து நூறு 9வது வகுப்பு
மாணவர்கள், "தந்தை நாட்டின் மறு ஒற்றுமை!" என்று நிலையத்தின் இருமருங்கிலும் நின்று ஆர்ப்பரித்தனர்.
தென் கொரியாவில், இரயில் தொடர்பு பற்றி கலந்துபட்ட எதிர்விளைவுகள்தான்
இருந்தன. பலருக்கு தீபகற்பத்தின் பிளவு மற்றும் போரின் முடிவு என்பதை இது முறையாக முடிக்கும் என்ற
நம்பிக்கையை கொடுத்தது. 82 வயதான யிம் ஹீ ஜே என்னும் அம்மையார்,
Korea Herald
இடம் தன்னுடைய உணர்வுகளை வட கொரியாவிற்கு சென்று கொண்டிருக்கும் இரயில்களை தொலைக்காட்சியில்
பார்த்த பின்னர் விவரித்துக் கூறியதாவது: "நான் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்பாத அத்தகைய கொடுமையான
போருக்குப் பின்னர், இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் வடக்கிற்கு ஒரு இரயில் போவதை பார்ப்பது உணர்ச்சிப்
பெருக்கை தருகிறது".
ஆனால் Grand
National Party என்னும் பிற்போக்கு எதிர்ப்புக் கட்சி,
வடகொரியாவிற்கு சலுகை எதையும் கொடுப்பதற்கு விரோதப் போக்கை காட்டுவது, இரயில் பயணங்களை பற்றி
குறைகூறும் வகையில், "இவை சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த சமாதான முயற்சிகளுக்கு எதிராக
செயல்படக்கூடும்" என்றார். வலதுசாரி எதிர்ப்பாளர்கள் சோதனை ஓட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை
நடத்தினர்.
தன்னுடைய Uri
கட்சிக்கு டிசம்பரில் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு முன்னதாக ஆக்கம் தர முற்பட்டுள்ள தென் கொரிய
ஜனாதிபதி ரோ மூ-ஹ்யுனைப் பொறுத்தவரையில், இது மறு ஒன்னிறைணைப்பு என்னும் சூரிய ஒளிர்தல் என்ற
கருத்திற்கு அவருடைய ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு வாய்ப்பாயிற்று. 2003ம் ஆண்டு சூரிய ஒளிர்தல் என்ற
கொள்கையை தொடர்வதாக உறுதியளித்து, வாஷிங்டனிடம் இருந்து இன்னும் கூடுதலான சுதந்திரத்தையும்
உறுதிமொழியாக கொடுத்த பின்னர்தான் ரோ தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவருடைய நிர்வாகம் "சந்தைச்
சீர்திருத்தம்" திட்டத்தை தொடர்ந்து, அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு தென் கொரிய துருப்புக்களையும்
அளித்த அளவில் தீவிரமாக சரிந்தது.
தென் கொரிய வணிக உயரடுக்கினர் சூரிய ஒளி படரல் கொள்கையை ஒரு
குறைவூதிய, கட்டுப்பாடு நிறைந்த தொழிலாளர் தொகுப்பிற்கு வட கொரியா ஆதாரமாக இருக்கும் என்றும்
இறுதியில் இது ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு நுழைவாயிலாக இருக்கும் என்றும் கருதுகிறது. சியோல்
545.4 பில்லியன் வொன் அல்லது $US
586 மில்லியனை சோதனை ஓட்டங்களுக்காக இரயில் தடங்களை சீரமைக்கவும் அதையொட்டிய வசதிகள்
எல்லைகளின் இருபுறமும் ஏற்படுத்தப்படவும் செலவழித்தாக மதிப்பிடப்பட்டுள்து. இன்னும் பெரிய முதலீடு
வடகொரியாவில் சிதைந்து கொண்டிருக்கும் இரயில் இணையத்தை தென் கொரியா இன்னும் பல நாடுகளுடன் முற்றிலும்
ஒருங்கிணைப்பதற்கு தேவைப்படும்.
இரயில் போக்குவரத்து மறுபடி நிறுவுதல் என்பது 2000ம் ஆண்டில் சூரிய ஒளிர்தல்
கொள்கையின் உயர் நிலையாக வெளியிடப்பட்டது. பெரும் பரபரப்பிற்கு இடையே முன்னாள் தென்கொரிய
ஜனாதிபதி கிம் டே ஜுங், மறு ஒற்றுமைக்காக நோபல் சமாதானப் பரிசை பெற்றவர், பியோங்யாங்கிற்கு
வருகை புரிந்து வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-இல்லை சந்தித்தார். எல்லை கடந்த இரயில் வசதிகளை
மீண்டும் இணைப்பதற்கான உடன்பாடு என்பது தென்கொரிய வணிகம் வட கொரிய தொழிலாளர் தொகுப்பை
நாடுவதை நோக்கமாக கொண்ட ஏராளமான உறுதிமொழிகளில் ஒன்றுதான்.
ஆனால் 2000த்தில் அமெரிக்க ஜனாதிபதி புஷ் தேர்ந்தெடுக்கப்பட்டது சூரிய
ஒளிர்தல் கொள்கையில் உடனடியான இருண்டதன்மையை ஏற்படுத்தியது. விரிவான கொள்கைப் பரிசீலனை
முடியும்வரை, பியோங்யாங்குடன் அனைத்து தொடர்பையும் புதிய நிர்வாகம் உடனடியாக நிறுத்தியது; 2002ல் அது
வடகொரியாவை ஈராக், ஈரானுடன் இணைத்து "தீமையின் அச்சு" என்று முத்திரையிட்டது. அக்டோபர் 2002ல்
வாஷிங்டன் பியோங்யாங் ஒரு இரகசிய யூரேனியச் செறிவுத் திட்டத்தை கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியது:
இதையொட்டி விரைவில் பெருகிய மோதல் மற்றும் தீவிர அழுத்தங்கள் கொரியத் தீபகற்பகத்தில் ஏற்பட்டன.
இரயில் தொடர்பு திட்டங்கள் இதையொட்டி தவிர்க்க முடியாமல் இடருற்றன.
2002ல் கட்டுமானப் பணிகள் தொடங்கி வட கொரியாவின் மீது அமெரிக்க அழுத்தம் மிக உயர்ந்து இருந்த
2003ல் முடிவுற்றன; தென்கொரியாதான் திட்டம் முடிந்தது பற்றி ஒரு விழா எடுத்துக் கொண்டாடியது. 2004ல்
இரு கொரியாக்களும் ஆண்டு சோதனை இரயில் பயணத்தை நடத்த ஒப்புக் கொண்டன; ஆனால் வட கொரிய
இராணுவம் பாதுகாப்பு உத்தரவாதம் தரமுடியாது என்ற நிலையில் இத்திட்டம் தோல்வியுற்றது. இந்த இரயில்
பயணங்கள் தன்னுடைய பாதுகாப்பு கட்டுமானங்களை வெளிப்படுத்தக் கூடும், நாட்டின் பாதுகாப்பு குறையக்கூடும்
என்ற கவலையை பியோங்யாங் தெரிவித்ததாக கூறுப்படுகிறது.
கடந்த ஆண்டு அணுசக்தி தொடர்பான எதிர்கொள்ளலை குறைந்தது
தற்காலிகமாகவேனும் அமெரிக்கா முடிவிற்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் எடுத்தபின்னர்தான் வட கொரியா
இரயில் பயணங்களுக்கு ஒப்புக் கொண்டது; இரு கொரியாக்கள், அமெரிக்கா, சீன, ஜப்பான், ரஷ்யா
பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர் ஓர் உடன்பாடு பெப்ருவரியில் ஏற்பட்டது; பியோங்யாங் தன்னுடைய அணுசக்தி
திட்டங்களை மூடி இறுதியில் கலைத்துவிடவேண்டும் என்றும் இதற்கு ஈடாக எரிபொருள் இன்னும் பல உதவிகள்,
தூதரக, பொருளாதார உறவுகள் சீராக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மாகாவை அடித்தளமாக கொண்ட
Banco Delta Asia
வில் வட கொரிய நிதியங்கள் கட்டுப்பாடு அகற்றப்பட்டு, மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான
இதன் செயற்பாடு நடைமுறைக்கு வரவில்லை.
ஆனால் தென்கொரியா இந்த வாய்ப்பை பயன்படுத்தி வடகொரியா தன்னுடைய
பொருளாதாரத்தை திறந்துவிடுவதற்கு ஊக்கம் கொடுத்தது. 80 மில்லியன் அமெரிக்க டொலரை வட கொரியாவின்
சிறு தொழில்களுக்கு உதவித்தொகையாக தருவதாக சியோல் முன்வந்துள்ளது; மேலும் 400,000 டன்கள் அரிசி
கொடுப்பதாகவும் ஒப்புக் கொண்டது. இந்த இரயில் பயணங்கள் உறவுகளில் இறுக்கம் குறைந்திருப்பதின் மிகத்
தெளிவான அடையாளங்கள் ஆகும்.
இரு இரயில்வே வழிகளையும் பயன்படுத்தி மூலப் பொருட்கள் மற்றும் நபர்களை வட
கொரியாவின் கேசாங் தொழிற் பகுதிக்கு அனுப்புதல் என்பது தென்கொரியாவின் குறுகிய கால நோக்கமாகும்;
அங்கு தென் கொரியாவின் நிறுவனங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 6,000 தென்
கொரியர்கள் ஒவ்வொரு மாதமும் வட கொரியாவின் சுற்றுலாத் தலமான
Mount Kumgang
க்கு பயணிக்க வேண்டும் என்றும் சியோல் விரும்புகிறது. குறிப்பான கால அட்டவணை தயாரிக்கப்படவில்லை
என்றாலும் வட கொரியா கொள்கையளவில் முறையான இரயில் வசதிகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளது.
கொரியாவிற்குள் இரயில் என்பது ஜனாதிபதி ரோவின்
"இரும்பு-பட்டு சாலை" (Iron
Silk Road) கட்டமைக்கப்பட வேண்டும் என்ற
பேரவாத்திட்டத்தின் மையத்தானம் ஆகும். சமீபத்தில் இவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு "மூன்று புற
பெரு ஒப்பந்தம்" என்று தென்கொரியாவின் இரயில்வழிப் பாதைகள் ரஷ்ஷியாவின் சைபீரியாவிற்கு அப்பால் உள்ள
ரயில்வேயுடன் வட கொரியா மூலம் இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை கொடுத்தார். தென்கொரியாவும்
ஜப்பானும் மிகப் பெரிய கடலுக்கள் கட்டப்படும் குகைப்பாதை அமைப்பதற்கான விவாதத்தில் உள்ளன; அது
ஜப்பானிய இரயில் தடங்களை இதே முறையுடன் இணைக்கும். அத்தகைய திட்டம் மலிவான, மற்றும் விரைவான
மக்கள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து சீனா உட்பட வட கிழக்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே
திறக்கப்படும் வாய்ப்பைக் கொடுக்கும்.
2001 ம் ஆண்டிலேயே, மாஸ்கோ
வட கொரியா மூலம் ஒரு இரயில் தொடர்பில் அக்கறை காட்டியது; இதனால் எண்ணெய் மற்றும் எரிவாயு கிழக்கு
ஆசிய சந்தைகளுக்கு அனுப்பப்பட முடியும்; ஆனால் வாஷிங்டன் பியோங்யாங்குடன் விலகி நின்றது அத்திட்டத்தை சேதப்படுத்திவிட்டது.
ஆறு முனை உடன்பாட்டிற்கு பின்னர் ரஷ்யா இத்திட்டத்தை புதுப்பித்து, வட கொரிய துறைமுக நகரமான
Najin ல் ஒரு
இரயில் சரக்கு பெருங்கூடம் அமைப்பதற்கு பரஸ்பர புரிதல் கொண்ட ஏற்புக் குறிப்பை பியோங்யாங்குடன்
கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் பொருளாதாரத் திட்டங்கள் புதுப்பிக்கப்படுவது புஷ் நிர்வாகத்தின் வட கொரியா
மீது உள்ள விரோத நிலைப்பாட்டில் உள்ள உண்மையான நோக்கங்களை சுட்டிக் காட்டுகின்றன; அதாவது சூரிய ஒளி
படல் கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்த இது ஒரு வசதியான வழிவகையாகும்; அதுவோ ஐரோப்பிய ஆசிய
போட்டியாளர்களுக்கு இடைய பொருளாதார ஒத்துழைப்பிற்கு வகை செய்திருக்கும். வடகொரியாவை அச்சுறுத்தியதன்
மூலம் வாஷிங்டன் வட கிழக்கு ஆசியாவிற்கு ஆணையிட முடிந்ததுடன், இன்றளவும் அப்பகுதியில் தன்னுடைய இராணுவத்
துருப்புக்களை தக்க வைத்துக் கொள்ளுவதை நியாயப்படுத்தவும் முடிந்தது.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பேரழிவுகர போர்களை ஒட்டி சதுப்பில் சிக்கியுள்ள
நிலையில், புஷ் நிர்வாகம் வட கிழக்கு ஆசியாவில் அழுத்தங்களை குறைக்க விரும்பியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா
இந்த பொருளாதார அளவில் முக்கியமான பகுதியில் தன்னுடைய போட்டியாளர்களால் செல்வாக்கிழக்கும்
நிலையையும் காண்கிறது. பெப்ருவரி உடன்பாட்டை வாஷிங்டன் விரைவில் குப்பையில் போட்டு வெளிப்படையான
மோதலுக்கு திரும்பலாம்.
எப்படிப் பார்த்தாலும், கொரியாவிற்கிடையேயான இரயில் தொடர்பு என்பதின்
எதிர்காலம் இப்பகுதியில் சர்வதேச உறவுகள் பற்றியதில் கடுமையான சோதனையாகும். இரு குறுகிய, அடையாள
இரயில் பயணங்கள் நடத்தப்படுவதற்கு ஏழு ஆண்டுகள் ஆகியுள்ளன என்பது அதிக தீர்வு ஒன்றும் காணப்படவில்லை
என்பதற்கு குறிப்பாகும். |