World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Blair's legacy: Militarism abroad, social devastation at home

பிளேயரின் மரபுவழி : வெளியில் இராணுவவாதம், உள்நாட்டில் சமூகப் பேரழிவு

Statement by the Socialist Equality Party (Britain)
11 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

தான் தொழிற் கட்சியின் தலைமையில் இருந்து விலகுவது, ஆகவே பிரதம மந்திரி பதவியில் இருந்து விலகுவது என்பது பற்றிய கால அட்டவணையை வியாழனன்று டோனி பிளேயர் அறிவித்தார். கட்சி அவருக்குப் பின் வருபவரை தெரிவுசெய்யக்கூடிய வகையில் ஜூன் மாதம் இறுதி வரை பதவியில் இருந்து அவர் முறையாக விலகமாட்டார் அநேகமாக அது சான்ஸ்லர் கோர்டன் பிரெளனாக இருக்கக் கூடும்.

வாழும் நினைவில் மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இராஜிநாமாவாக பிளேயரின் அறிவிப்பு இருக்கும். 2005 பொதுத் தேர்தலுக்கு பின்னிருந்து பிளேயர் வெளியேறுவது தவிர்க்க முடியாதது என்றுதான் அதிகம் பேசப்பட்டது.

"வரலாற்றின் கரங்களை" மற்றும் அவரது "மரபுவழியை" --டெளனிங் தெரு மற்றும் செய்தி ஊடகத்தால் இங்கும் அங்கும் வீசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வார்த்தை-- அதிகமாய் தன் தோள்கள்மீது சுமந்து உருவாக்கிய ஒரு மனிதனை பொறுத்தவரை, தான் ஒதுங்கிக் கொள்ளப்போவதாக அறிவிப்பதற்கு சரியான நேரம் இருந்ததில்லை.

சமீபத்திய வரலாற்றில் உத்தியோகபூர்வமாக மிகவும் வெறுக்கப்பட்டிருந்த பிரதம மந்திரியான இவருடைய ஆசான் மார்கரெட் தாட்சரை விட பிளேயர் கூடுதலாக வெறுக்கப்பட்டிருந்தார் -- கருத்துக் கணிப்புக்களின்படி இவருடைய மரபுவழி முன்கூட்டியே தாக்கித் தனதாக்கிக் கொள்ளும் போரின் குருதியில் நனைந்திருந்தது, மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பில் தோய்ந்திருந்தது. இந்த அவமானகரமான காரணத்தால் வரலாற்று நூல்களில் பிளேயர் இடம்பெற்றார் என்று சுமார் 50 சதவீத மக்கள் நம்புகின்றனர். அடுத்த அதிகமான பேர்கள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ் உடனான அவரது கூட்டின் காரணமாக அது இருக்கும் என்று நம்புகிறார்கள்.

குற்றம் சுமத்தப்படாத போர்க்குற்றவாளி என்ற முறையில் பிளேயர் பதவியை விட்டு நீங்குகிறார்; ஒரு போலீஸ் விசாரணைக்குட்பட்டிருந்தவர் என்ற முறையில் பேட்டி காணப்பட்ட பதவியில் இருந்த முதல் பிரதம மந்திரியும் இவரேயாவார் ("கெளரவங்களுக்கு பணம் ஊழல்"). தான் பிரதம மந்திரியின் சிறப்பு மத்திய கிழக்குத் தூதர் என்ற பதவியில் இருந்து விலகிக் கொள்ளுவேன் என்று முன்பு லெவி பிரபு அறிவித்தது ஒன்றும் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. பிளேயரின் முக்கிய நிதி திரட்டுபவர் என்ற முறையில், கட்சிக்கு கொடுக்கும் கடன்களுக்காக பிரபுக்கள் பதவிகளை வழங்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் லெவி கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு போலீசாரால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ரூபர்ட் மர்டோக் மற்றும் அப்பொழுது பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் தலைமை நிர்வாக பிரெளன் பிரபு போன்றோருடன் சிறிதுகாலமாகவே பிரதம மந்திரி தான் ஓய்வு பெறுவதைப் பற்றி விவாதங்கள் நடத்தியதாக கூறப்படுகிறது. உடனடியாக தன் செல்வாக்கில் இருந்து ஆதாயம் பெறுகிறார் என்று அவர் பார்க்கப்படக் கூடது என்ற அக்கறையினால், அவருடைய முதல் திட்டம் மூன்று "ஆப்ரஹாமிய நம்பிக்கைகளான" கிறிஸ்துவம், ஜூடாயிசம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றிற்கு இடையே "கூடுதலான புரிதலை" வளர்க்க ஒரு உலகு தழுவிய அடித்தளத்தை அமைப்பதாக இருக்கும் என்று கருத்துரைக்கப்பட்டிருந்திருக்கிறது.

மத்திய கிழக்கில் இவர் கொண்டிருந்த பங்கை காணும்போது, இதுவே ஒரு இழிந்த ஏமாற்றுத்தனமாகும். ஆனால் மீண்டும் பிளேயர் தன்னுடைய திறமைகளைப் பயன்படுத்தி செல்வம் கொழிக்கும் ஆதாயமடைந்தவர்களிடம் இருந்து நன்கொடைகளை திரட்டுவார். இவருடைய உண்மையான பணம் செய்யும் முயற்சி அமெரிக்காவில் உரைகள் நிகழ்த்தும் பயணங்களை மேற்கொள்ளுவது ஆகும். பதவியை விட்டு நீங்கிய முதல் ஆண்டில் இவர் சம்பாதிக்கக்கூடிய தொகை குறைந்த அளவு 5 மில்லியன், அல்லது 10 மில்லியன் பவுண்டுகள் என்றும் புத்தகம் எழுதுவதற்கு இவருக்கு கிடைக்கக் கூடிய வருமானம் 5 மில்லியனில் இருந்து 8 மில்லியன் பவுண்டுகள் வரை இருக்காலம் என்றும் கூறப்படுகிறது.

வலதுசாரி வட்டங்களில் குறிப்பாக அமெரிக்காவில், பிளேயருக்கு பெரும் விருந்துகள் அளிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. தடையற்ற இராணுவவாதத்துடன் அவர் வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்த வரலாற்றிற்கு இது முதல் வெகுமதியாகும். இந்த வட்டங்களில் அவருக்கு மேலும் மதிப்பு இருப்பதற்கு காரணம், இவர் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற வனப்புரையை பெரும் ஜனநாயக எதிர்ப்பு மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு எடுத்ததும் ஆகும்.

உழைக்கும் மக்களிடம் இருந்து செல்வத்தை உலகந்தழுவிய நிதி நிறுவனங்களுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் அவர் மிகப் பெரிய முறையில் மாற்ற இங்கிலாந்தில் அவர் திட்டமிட்டு உதவியதின் அடிப்படையில் அவருடைய புகழ் கட்டியமைக்கப்பட்டிருப்பதும் இத்தகைய முறையில்தான் முக்கியம் வாய்ந்தது ஆகும்.

கடந்த மாதம் Sunday Times செல்வந்தர் பட்டியல் பிரிட்டனில் மிகச் செல்வம் படைத்த 1000 பேர்கள் பிளேயரின் ஆட்சியில் தங்கள் செல்வத்தை மூன்று மடங்கு அதிகரித்துள்ளனர் என்று பதிவு செய்துள்ளது. அவர்களுடைய செல்வங்கள் 20 சதவிகிதம் கடந்த ஆண்டு மட்டும் உயர்ந்தது; மொத்தத்தில் 360 பில்லியன் பவுண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

"பில்லியனர்களை ஈர்க்கும் காந்தம்" என்று லண்டன் விவரிக்கப்படுகிறது; இதற்கு காரணம் இங்கிலாந்து "கரையில் இருக்கும் வரிச்சலுகை நிறைந்த இடம்", இங்கு பிறருடைய சொந்துக்களை வறியதாக்கி தமது அதிர்ஷ்டத்தை பெருக்கிக் கொள்ளுபவர்கள், தனியார்மயமாக்குதல் மற்றும் நிதிய ஊகம் மூலம் செல்வம் ஈட்டுபவர்கள் தங்கள் வருமானத்தில் கிட்டத்தட்ட வரி ஏதும் செலுத்துவதில்லை.

இதற்கு மாறாக பிரிட்டனில் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 12.1 மில்லியனில் இருந்து 12.7 மில்லியனாக, 600,000 மக்கள் அதிகமாக உயர்ந்தது; அதே நேரத்தில் ஏழைக் குழந்தைகளின் எண்ணிக்கை 200,000 ல் இருந்து 3.8 மில்லியனாக 2005ல் இருந்து 2006க்கு இடையில் உயர்ந்தது.

இவருடைய இத்தகைய மக்களின் ஒரு சிறுபகுதியினரை பெரும் செல்வந்தர்களாக்கிய பங்குதான் பிரிட்டன் செய்தி ஊடகத்தில் இருந்தும், பெயரளவிற்கு தாராளவாத ஊடகம் எனக் கூறப்படுவதில் இருந்தும், புகழை ஈட்டியுள்ளது. ஏப்ரல் 29ம் தேதி Observer தலையங்கமாகக் கூறியது: "டோனி பிளேயர் பொறுப்பில் இருந்த ஒரு தசாப்தத்தில் பிரிட்டன் முன்னேறியுள்ளது. செல்வம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது; செல்வம் மறுபங்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தான் தொழிற்கட்சி அரசாங்கம் எப்பொழுதும் செய்யவேண்டும் என்று விரும்பியது. உலகப் போட்டித்தன்மையில் ஒரு தடையும் இல்லாமல் இது நடைபெற்றுள்ளது."

ஈராக்கில் பிளேயரின் பங்கு இருப்பதை வர்ணனையாளர்கள் ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில், அது ஒரு துன்பகரமான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட தவறு,, மற்றபடி பொறாமைப்படக்கூடிய சான்றிற்கு களங்கமாக இருக்கிறது என்று சித்தரித்துக் காட்டப்படுகிறது. பிரிட்டனை போருக்கு கொசோவோ, சீரா லியோன் மற்றும் ஆப்கானிஸ்தானத்திற்கு அனுப்பச் செய்த ஏகாதிபத்திய இராணுவவாத எழுச்சியின் ஒரு பகுதிதான் ஈராக்கின் மீதான போர் என்பதை இது மூடி மறைக்கிறது; இது இன்னும் ஈரானுக்கு எதிரான தற்போதைய தூண்டுதல்களில் தொடர்கிறது.

ஈராக்கை ஒரு வெறும் புள்ளிக் கணக்கிற்கு செய்தி ஊடகம் குறைப்பதே மோசமானது. மே 3 தேர்தல்களில் தொழிற்கட்சி பேரழிவு இழப்புக்களை பெற்ற பின்னரும் இவ்வாறு செய்தல் --போர் அதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது-- என்பது ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் அரசியல் வக்காலத்து வாங்குபவர்களுக்கும் பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் பெரும் பிளவிற்குச் சான்று ஆகும்.

தொழிற்கட்சி ஸ்கொட்லாந்தில் முதல் முறையாக கடந்த 50 ஆண்டுகளில் கட்டுப்பாட்டை இழப்பதை தேர்தல்கள் கண்ணுற்றன; வேல்சில் இக்கட்சிக்கு 1918க்குப் பிறகு மோசமான முடிவு வந்துள்ளது. ஏற்கனவே முன்னோடியில்லாத அளவிற்கு குறைவான செல்வாக்கை தொழிற்கட்சி கொண்டுள்ள இங்கிலாந்தில், 90 உள்ளூர் ஆட்சிகளில் இது துடைத்தழிக்கப்பட்டு கிட்டத்தட்ட 500 உறுப்பினர்கள் பதவியையும் இழந்தனர். வாக்களிக்க வந்தவர்களின் எண்ணிக்கையும் மொத்தத்தில் 50 சதவிகிதத்தை ஒரு போதும் தாண்டாத நிலைமையின் கீழ், வாக்குகளில் இதன் பங்கு 27 சதவீதம்தன் உள்ளது.

முக்கிய நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் தொழிற்கட்சிக்கான பாரம்பரிய ஆதரவுக்கும் போதுமான ஆதரவில்லாத பகுதிகளில் முன்னாள் பழமைவாத வாக்காளர்களுக்கும் இடையிலான கூட்டு, எந்த அளவிற்கு 1997ல் பிளேயரை பதவிக்கு கொண்டு வந்தது, அது முறிந்து போயிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் மட்டத்திற்கு தேர்தல்கள் பற்றி நிறைய விவாதங்கள் வந்துள்ளன.

மே 6ம் தேதி Observer TM Andrew Rawnsley குறிப்பிடுகிறார்: "பழங்குடியல்லாத வாக்காளர்களுக்கு கட்சியில் இருந்து அவர் விலகி இருந்தது எப்பொழுதும் அவருடைய தேர்தல் முறையீட்டில் மையத்தைக் கொண்டிருந்தது. முந்தைய தொழிற்கட்சி தலைவர்களால் தொடப்படாத நாட்டின் பகுதிகளை அடைய முடிந்த அவருடைய திறன்தான் அவரை 10ம் எண்ணில் இத்தகைய நீண்ட காலத்தில் இருத்தி வைத்தது... தொழிற்கட்சி அல்லாத பிரதம மந்திரி ஒரு தொழிற்கட்சி அரசாங்கத்தை வழிநடத்துவது என்பது தேர்தல் முறையில் சக்தி வாய்ந்தது என்பதை டோனி பிளேயர் நிரூபித்துள்ளார்.

ரான்ஸ்லே தொடர்ந்தார்: "மார்கரெட் தாட்சரை போலவே இவரும் கட்சியின் தள வாக்குகளுக்கு அப்பால் ஆதரவைத் தேடும் வகையில் ஒரு கூட்டணியை தோற்றுவித்தார். அவ்வம்மையாரை போலவே, வெஸ்ட்மின்ஸ்டரில் இவருடைய வெற்றிகள் கட்சியை பெரிதும் வெற்றுத்தனமாக ஆக்கிய நிலையை தொடர்ந்தது. அவரைப் போலவே, இவருடைய கூட்டணியும் பின்னர் சிதைவுற்றது."

தொழிற் கட்சியை "வெற்றுத்தனமாக செய்தது" என்ற ரான்ஸ்லேயின் குறிப்பு முக்கியமானது; ஆனால் இவர் கடப்பதும் மற்ற வர்ணனையாளர்கள் முற்றிலும் அசட்டை செய்வதும் இதுவே ஆகும். ஏனெனில் தொழிற்கட்சி ஊடகத்தின் பெரும்பகுதி போலவே Observer ம் புதிய தொழிற்கட்சியை ஒரு பிரெளன் தலைமையின் கீழ் மறந்துபோன நிலைமையிலிருந்து மீட்கும் கூட்டுமுயற்சியில் சம்பந்தப்பட்டுள்ளது. "நிதி அமைச்சர் புதிய தொழிற்கட்சி அதிகாரத்தை முதலில் பெற்றதே செல்வம் படைத்த ஆர்வம் கொண்ட மத்தியதர வாக்காளர்களுக்கு முறையிட்டதால்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பதுதான் படிப்பினை" என்று ரான்ஸ்லே தொடர்ந்து எழுதினார்.

இப்படி பரபரப்பான முறையில் புதிய தொழிற் கட்சியின் "கூட்டணி" பற்றிய பேச்சு போலித்தனமாகும். இறுதிப்பகுப்பாய்வில் அனைத்து பாராளுமன்ற பெரும்பான்மைகளும் அத்தகைய கூட்டில்தான் உள்ளன; இதில் தொழிற்கட்சியின் 1945 வெற்றியும் அடங்கும்; அது குறிப்பிடத்தக்க சமூக சீர்திருத்த திட்டத்தின் அடிப்படையில் அடையப்பட்டது ஆகும். ஆனால் புதிய தொழிற் கட்சியை பொறுத்த வரையில், இதன் தேர்தல் வெற்றி உழைக்கும் மக்களின் அக்கறைகள் தடையற்ற பெருவணிகச் செயற்பட்டியலுடன் இணைக்கப்படல் சாத்தியம் என்ற மகத்தான கற்பனையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது.

பழையபடி எத்தனை முறை கட்டிவைத்தாலும், இம்முன்னோக்கு ஒரு மூடுதிரைதான்; இதற்கு பின்னால் செல்வந்தர்கள் இன்னும் கூடுதலான செல்வம் கொழிப்பவர்களாக மாறிவிட்டனர்; பரந்த பெரும்பாலான மக்கள் ஆபத்தான, கடன்கள் நிறைந்த வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுளார்கள் என்ற உண்மையை இது மூடி மறைக்க இயலாது.

உண்மையான பிளேயர் ஆதரவுக் கூட்டணி, தன்னுடைய பெயரை அது கூற அச்சப்படும், பெருவணிகம், பெரும் செல்வந்தர்கள் மற்றும் தொழிற்கட்சி, தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் இடையே இருந்ததுதான்.

தொழிலாள வர்க்கத்துடன் கடந்த காலத்தில் கொண்டிருந்த தொடர்பின் காரணமாகத்தான் தொழிற்கட்சி தாட்சரின் பொதுநல அரசாங்க முன்மாதிரியை - "கலப்பு பொருளாதாரம்" என்னும் தேசிய மயமாக்கப்பட்ட தொழில்களையும் பொதுப் பணித்துறை கருத்துக்களையும் முற்றிலும் கைவிட முடிந்தது; அதாவது போருக்கு பிந்தைய காலத்தில் சமூக அமைதியை அடைவதற்கு அடிப்படையாக இருந்த அனைத்து நிதானப் போக்குகளையும் கைவிடலை நிறைவேற்ற முடிந்தது.

தொழிற்சங்கங்கள் புதிய தொழிற்கட்சியின் வலதுசாரி செயல்பட்டியலை அமைப்பதில் முக்கிய அரசியல் பங்கை மட்டும் கொண்டிருக்கவில்லை; அதற்கு எதிர்ப்பு ஏதும் வருதலை தடைசெய்யும் பணியிலும் ஈடுபட்டன; அதே நேரத்தில் அரசாங்கம் பொதுநலச் செலவினங்களைக் குறைத்து, ஊதியங்களைக் குறைத்து சுகாதார, கல்வி ஒதுக்கீடுகளையும் தனியார் மயமாக்கியது.

தொழிற்கட்சி அரசாங்கத்தை ஆபத்திற்குட்படுத்திவிடும் என்ற அடிப்படையில் ஈராக் போருக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்களுக்கு ஆதரவு கொடுக்க அது மறுத்தலை விட தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் வெறுப்பூட்டக்கூடிய தன்மையை சுருங்கக் கூறுவது வேறெதுவுமில்லை. உண்மையில் தன் விருப்பப்படி டெளனிங் தெருவில் இருந்து, கட்டாயமாக அவருக்கு நிகழ்ந்திருக்க வேண்டிய வெளியேற்றத்திற்கு பதிலாக, கெளரவமாக வெளியேற முடியும் என்று பிளேயர் எதிர்பார்த்த நிலையை அளித்ததற்கு பிரதானமாக தொழிற்சங்க அகல்பேரவையே முழுப் பொறுப்பாகும்.

அதே நேரத்தில், பிளேயர் வெளியேறும் முறை தொழிற்கட்சிக்குள்ளேயே பிளேயருக்கு கொள்கையளவில் எந்த எதிர்ப்பும் இல்லை என்பதற்கு பெரும் சான்றாக உள்ளது. இடதில் இருந்து அவர் தீவிர சவால் ஒன்றையும் எதிர்கொள்ளவில்லை. மாறாக, கட்சியின் உத்தியோகபூர்வ இடதுசாரி முக்கியமற்றதாக சுருங்கிவிட்டது; அதே நேரத்தில் பிளேயரின் உள்வட்ட குழுவோ ஏராளமான முன்னாள் "இடதுகள்" பலரும் ஸ்ராலினிச வழியில் வந்தவர்களை- பணியாளர்களாகக் கொண்டிருந்தது.

பெருவணிகமும் தொழிற்சங்கங்களும் இப்பொழுது பிரெளனின் கீழும் இத்தகைய கூட்டணி தொடர்வதற்கு ஆதரவை பெற முயலுகின்றன. தொழிற்கட்சியை மீட்கும் முயற்சியில் பிளேயருக்கும் பிரெளனுக்கும் இடையே இருந்த கசப்பான கட்சிப் பிளவுகள் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன; சான்ஸ்லர் பதவிக்கு வருவது போட்டி என்பதை விட முடிசூட்டுதல் என்பதாக உள்ளது.

ஆனால் இவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினை பிளேயரின் "வெற்றி" என்பது தொழிற் கட்சியின் பிணத்தில் எழுப்பப்பட்டது என்பதாகும். அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளிலும் பெருவணிகம் ஏகபோக உரிமை பெற்றுள்ளபோது, தொழிற்கட்சியை ஒரு புதிய பழமைவாத முக்கியமற்ற பகுதியாக மாற்றிய வழிவகையில் சமூக பதட்டங்கள் பாதுகாப்பான வடிகால்கள் மூலம் வெளியேறுதல் என்பது இப்பொழுது அகற்றப்பட்டுவிட்டது.

புதிய தொழிற்கட்சியின் இணை அமைப்பாளரான பிரெளன் தன்னுடைய தோலைவிட்டு வெளியே குதிக்க முடியாதது போல், கடிகாரத்தையும் பின்புறம் நகர்த்த இயலாது. பிளேயரிடம் இருந்து மாறுபட்ட வகையில் செயற்பட்டியலை அமைத்து பாராளுமன்றத்தில் முன்வைத்து ஆதரவைப் பெறுவேன் என்னும் பிரெளனுடைய கூற்றுக்களில் பலவும் தொழிற்கட்சியின் குறைந்துவிட்ட பெரும்பான்மைக்கு ஏதாவது செய்ய வேண்டிய தேவையை ஒட்டி உள்ளது; மேலும் பாராளுன்ற ஜனநாயகம் ஒழுக்கங்கெட்ட, ஒரு ஊழல் மிகுந்த, கணக்கு கூறாத குழுவினால் வெறுமையாக்கப்பட்டுவிட்டது என்பதையும் குறிக்கிறது. இராணுவவாதம் மற்றும் போர் பற்றிய செயற்பட்டியல் ஒரு போர் இனி அறிவிக்கப்படுமேயானால் பாராளுமன்றத்தில் வாக்களிக்க அவர் அனுமதிப்பார் என்பதைத் தவிர வேறு எதையும் கூறுவதற்கு இல்லை.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தொழிற்கட்சியை "தங்கள் கட்சி" என்று நோக்கியிருந்த பழைய அரசியல் நிலைக்கு திரும்புதல் என்பது இனி இயலாது. இது ஒரு நிதிய தன்னலச் சிறுகுழுவின் கட்சியாகும்; அது மூலதனம் மற்றும் செல்வந்தர்களுடைய நலன்களுக்கு எதிராக சிறிது அத்துமீறல் வந்தாலும் அந்நடவடிக்கைகள் பற்றிக் கடுமையான குரோதத்தை காட்டும்; இந்த உண்மைதான் கட்சித் தொண்டர்களுக்குளேயே மைக்கேல் மீச்சர் அல்லது ஜோன் மக்டோலென் தலைமையின்கீழ் "இடது" தலைமை வரும் என்ற வருங்கால நினைப்பை நகைப்பிற்கு இடமாக்கியுள்ளது. சமூகச் சீர்திருத்தங்களுக்கு குறைந்த அளவு ஆதரவு கொடுப்பது கூட தொழிற் கட்சிக்கு முரணாகிவிட்டது; அதையொட்டி குறிப்பான "இடது" வேட்பாளர் அதிக பட்சம் பாராளுமன்றத்தில் அத்தகைய முயற்சிக்கு தேவையான 45 உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்ட முடியுமா என்பதே கேள்விக்குரியதாகும்.

தொழிலாளர் வர்க்கத்தை அரசியலில் செயலற்றுச் செய்தல் என்பது ஒரு ஐரோப்பிய மற்றும் சர்வதேச நிகழ்வு ஆகிவிட்டது. கண்டம் முழுவதும் முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சிகள் வலதின் கொள்கைகளை ஏற்றுவிட்டன. அவர்களுடைய பெயர்கள் தெழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கங்களாக அவற்றின் தோற்றங்களின் அடையாளம்தான்; விரோதப் போக்கு உடைய வாக்களாளரிடையே பொதுமக்கள் வெறுக்கும் கொள்கைகளை ஆழ்ந்து திணிப்பதற்கான முயற்சியில் அரசியல் குழப்பத்தை விதைப்பதற்கே அது தக்க வைக்கப்படுகிறது.

இது மகத்தான வர்க்க அரசியல் மோதல்களுக்கு கட்டியம் கூறுகிறது. ஆனால் சமீபத்திய தேர்தல்கள், இங்கு, பிரான்ஸ், மற்றும் ஜேர்மனியில் காட்டியுள்ளது போல், வலதுசாரி சமூக ஜனநாயகவாதிகள், வலதுசாரி கன்சர்வேடிவ்களால் எளிதில் பதிலீடு செய்யப்படுவது இல்லை என்றால், சமூக சமத்துவமின்மை, மற்றும் புதிய போர்கள் பற்றிய ஆபத்துக்கள் வெல்லப்பட வேண்டும் என்றால், உண்மையான ஒரு சர்வதேச சோசலிச கட்சியைக் கட்டியமைப்பதன் மூலம் முதலாளித்துவ மற்றும் "இடது" பிற்சேர்க்கைகளிடம் இருந்து தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்கள் அரசியல் சுயாதீனத்தை நிறுவியாக வேண்டும்.