World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
ஜிலீமீ ஹிஷி ஷ்ணீக்ஷீ ணீஸீபீ ஷீநீநீuஜீணீtவீஷீஸீ ஷீயீ மிக்ஷீணீஹீtலீமீ னீuக்ஷீபீமீக்ஷீ ஷீயீ ணீ sஷீநீவீமீtஹ் ஈராக் மீதான அமெரிக்கப் போரும் ஆக்கிரமிப்பும் : ஒரு சமூகத்தின் படுகொலை பகுதி 2 By Bill Van Auken இது ஒரு மூன்று பகுதிகளையுடைய தொடர் கட்டுரையின் இரண்டாம் பகுதியாகும். இப்பொழுது ஐந்தாம் ஆண்டில் இருக்கும் ஈராக்கின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட பாரிய இறப்பு எண்ணிக்கை, அழிவு, ஒடுக்குமுறை ஆகியவற்றை உறுதிப்படுத்தியுள்ள சமீபத்திய தகவல்களை ஆராய்வது இதன் நோக்கமாகும். மொத்தத்தில் பார்க்கும்போது இந்த அறிக்கைககள் ஈராக்கில் அமெரிக்க செயற்பாடுகள் ஒரு சமூகப் படுகொலைக்கு ஒப்பானதை செய்துள்ளதை உறுதி செய்கின்றன -- வேண்டுமென்றே முறையாக ஒரு சமூகத்தையே படுகொலைக்கு உட்படுத்திய நிகழ்வு ஆகும். ஈராக்கிய குழந்தைகளின் நம்பிக்கையற்ற நிலை நாட்டின் குழந்தைகளில் முற்றிலும் அரைவாசி ஏதேனும் ஒரு விதத்தில் உணவு ஊட்டமின்மையால் அவதிப்படுவதாக ஈராக்கின் சுகாதார அமைச்சரகம் மதிப்பிட்டுள்ளது. UNICEF இன் சமீபத்திய ஆய்வின்படி, ஈராக்கிய குழந்தைகளில் ஐந்து வயதிற்கு உட்பட்டவற்றில் 10 சதவிகிதம் உடனடி ஊட்டமின்மையில் வாடுவதாகவும், மற்றும் ஒரு 20 சதவிகிதம் நீடித்த ஊட்டமின்மையில் வாடுவதாகவும் தெரிகிறது. ஈராக்கின் கோடைக்கால வெப்பம் வரவிருக்கையில், மருத்துவ அதிகாரிகள் உலர்ந்துவிடுதல், காலரா மற்றும் தொற்று நோய்களையொட்டி குழந்தை இறப்புக்கள் தீவிரமாகும் என்று அஞ்சுவதுடன், உடைத்துநொருக்கப்பட்டுள்ள ஈராக்கிய மருத்துவ கட்டமைப்புமுறை அதைத் தடுப்பதற்கு சக்தியற்றதாக இருக்கும் என்றும் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். ஈராக்கிய குழந்தைகளும் அவர்களுடைய குடும்பங்களும் நம்பிக்கையற்ற நிலையில் இருப்பது ஒரு ஈராக்கிய தாயாரால் சுருக்கமாகக் கூறப்பட்டது: "கடந்த ஆண்டு என்னுடைய மகள், தாயார் இருவரும் உலர்ச்சியினால் இறந்து போயினர்." 35 வயதான ஜஹ்ரா முகம்மது ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி நிறுவனமான IRIN இடம் அவ்வாறு கூறினார். தன்னுடைய குடும்பம் அவர்களுடைய இடத்தில் இருந்து கடந்த மே மாதம் கட்டாயமாக வெளியேற நேர்ந்தது என்றும் அவர் கூறினார். "எங்களுடைய கூடாரத்தில் குளிரூட்டி கருவிகள் வைக்க எங்களுக்கு வசதி இல்லை. என்னுடைய நான்கு வயது மகளுக்கு மிகக் கடுமையான வெப்ப நிலையையும் தாங்கிக் கொண்டு கடுமையான வாழ்க்கை நிலைமையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இன்னும் இரு குழந்தைகள் எனக்கு உள்ளன; ஏற்கனவே ஊட்டமின்மையினால் அவை நோய்வாய்ப்பட்டுள்ளன. தக்க குளிர்ச்சி, குடிநீர் இல்லாவிட்டால் வரவிருக்கும் மாதங்களிலும் நான் கடுமையான விளைவுகளை எதிர்பார்க்க நேரிடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மின்வசதி, நல்ல குடிநீர் இல்லாமல் இன்னும் ஒரு குழந்தையையும் இழக்க நேரிட்டால், அவர்களுடன் இறப்பதைத்தான் நான் விரும்புவேன்." என அவர் தொடர்ந்தார். மார்ச் 2003 படையெடுப்பில் இருந்து கிட்டத்தட்ட 260,000 குழந்தைகள் மடிந்துள்ளனர் என்று பிரிட்டிஷ் நாளேடான The Independent ஜனவரி மாதம் ஒரு குறிப்பில் கூறியுள்ளது. தங்கள் ஐந்தாம் பிறந்தநாளை காணும் குழந்தைகளுக்குக்கூட ஈராக் ஒரு விரோதப் போக்கு உடைய, பலநேரமும் மரணம் தரக்கூடிய சூழ்நிலையாகப் போய்விட்டது. ஈராக்கிய குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகத்தான் இப்பொழுது பள்ளிகளுக்கு செல்கின்றன; மார்ச் 2003 படையெடுப்பிற்கு முன் 100 சதவிகித குழந்தைகள் சென்றன. வகுப்பறைகளுக்கு குழந்தைகள் போகாமலிருப்பதற்கு காரணம் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைதான்; அவை பள்ளிக்கு அன்றாடம் சென்றுவருவது கூட பெரும் ஆபத்து என்பதால் குடும்பங்கள் அதை ஏற்பதில்லை. அதே நேரத்தில், இந்த இடைவிடாக் கொலைகள் கணக்கிலடங்கா ஆயிரக்கணக்கான ஈராக்கிய குழந்தைகளை அனாதைகளளாக விட்டுள்ளது; அவர்கள் பாக்தாத் மற்ற பெரிய நகரங்களில் புதிய, சோகம் ததும்பிய நிலைத்த நிகழ்வுகளாக உள்ளனர்; தெருக்களில் உறங்கியும், பிச்சை எடுத்தும் வாழ்கின்றனர். ஐ.நா.வின் IRIN செய்தி அமைப்பு "ஆயிரக்கணக்கான வீடற்ற குழந்தைகள் ஈராக் முழுவதும் பிச்சை எடுத்து, திருடி அல்லது உணவிற்கு குப்பையை நாடி வாழும் நிலையில் உள்ளன. நான்கு வருடங்களுக்கு முன்புதான் இக்குழந்தைகளில் பெரும்பாலானவை வீட்டில் தங்கள் குடும்பங்களுடன் வசித்து வந்தன." என தெரிவிக்கிறது. ஈராக்கிய குழந்தைகள் எதிர்கொண்டுள்ள நம்பிக்கையற்ற நிலைமைகள் 100 முக்கியமான பிரிட்டிஷ் டாக்டர்களை கொண்ட குழு ஒன்றை ஜனவரி மாதம் பிரதம மந்திரி டோனி பிளேயருக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுத வைத்தது; ஆக்கிரமிப்பின் பாதிப்பால் தங்களுடைய தீவிர அக்கறையை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்: "மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் ஈராக்கில் குழந்தைகள் மடிந்துவருவதை பற்றி நாங்கள் கவலை கொண்டுள்ளோம். முன்பு எளிய வகையில் மருத்துவ சிகிச்சை பெற்றிருக்க வேண்டிய இந்த நோய்வாய்ப்பட்ட அல்லது காயமுற்ற குழந்தைகள் இப்பொழுது நூற்றுக்கணக்கில் அடிப்படை மருந்துகள் மற்றைய ஆதாரங்கள் அற்ற நிலையில் இறப்பதற்கு விடப்படுகின்றனர். கைகள், கால்கள், மற்ற உறுப்புக்கள் ஆகியவற்றை இழந்த குழந்தைகள் ஆதரவற்று உள்ளனர். தீவிர உளச் சிதைவு உடைய குழந்தைகளுக்கும் மருத்துவ உதவி கிடைக்கவில்லை." இந்த கடைசிப் பிரச்சினை ---ஒரு இளைய தலைமுறை முழுவதும் பெரும் மன அதிர்ச்சிக்கு உட்பட்டுள்ளது என்பது-- ஈராக்கிய சமுதாயத்தில் நீண்டகால பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். "ஈராக்கில் உள்ள குழந்தைகள் முற்றிலும் பாதுகாப்பற்ற தன்மையில் உளரீதியாக துன்பப்பட்டுள்ளனர்" என்று ஈராக் மனோவியலாளர் சங்கம் அறிவித்துள்ளது. 1,000 பள்ளிக் குழந்தைகளிடம் ஆய்வு நடத்திய பின்னர், 92 சதவிகிதத்தினர் வன்முறை, அச்சம் என்ற சூழலால் கற்பதில் குழப்பங்களை கொண்டுள்ளதாக தெரிகிறது. "அவர்களுடைய உள்ளங்களில் இருப்பது எல்லாம், துப்பாக்கிகள், தோட்டாக்கள், மரணம், அமெரிக்க ஆக்கிரமிப்பை பற்றிய பயம் ஆகியவைதான்" என்று இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரான Maruan Abdullah நிருபர்களிடம் கூறினார். ஈராக்கிய குழந்தைகள் மீது சுமத்தப்பட்டுள்ள நிலைமை ஒரு போர்க் குற்றமாகும் ஆக்கிரமிப்பு சக்தி என்னும் முறையில் அமெரிக்கா ஜெனிவா உடன்பாடுகளின்படி, "உணவு, மருத்துவ வசதி, பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பு நடவடிக்கையின் மூலம்'' 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், ஏழு வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்கள் ஆகியவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதுடன் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றைக் கவனிக்கும் அனைத்து நிறுவனங்களையும் தக்கமுறையில் பராமரிக்க வேண்டும்" என்றும் உள்ளது. மகளிர் நிலைமையில் பேரழிவு கொடுக்கும் வீழ்ச்சி அமெரிக்க போர் மற்றும் ஆக்கிரமிப்பு ஈராக்கிய மகளிரை பல தலைமுறைகளுக்கு பின்னே அனுப்பிவிட்டது; மில்லியன் கணக்கானவர்கள் இரண்டாந்தர குடிமை உரிமையுள்ளவர்களாக சட்டபூர்வமாக தள்ளி, அவர்களை இல்லங்களிலேயே கைதிகள் போல் இருக்கும் கெட்ட கனவு நிலைக்கும் உட்படுத்திவிட்டன. இப்போக்கு குழந்தைகள் இறப்புவிகிதத்தில் மிகப் பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளதுடன் நெருக்கமான பிணைப்பை கொண்டுள்ளது; இதுவும் சமூக முன்னேற்றம், அல்லது பின்னடைவில், முக்கியமான குறியீடு ஆகும். பிரெஞ்சு கற்பனாவாத சோசலிச வாதியான Charles Fourier மார்க்ஸ், ஏங்கல்சால் மேற்கோளிடப்பட்டவர், 155 ஆண்டுகளுக்கு முன் எழுதினார்: "சமூக முன்னேற்றம் மற்றம் மாறுதல்களில் காலகட்டம் மகளிர் சுதந்திரத்தை நோக்கி முன்னேறுவதுடன் இயைந்து இருக்கும்; சமூக கட்டமைப்பின் வீழ்ச்சி மகளிர் அனுபவிக்கும் சுதந்திரத்தின் குறைப்பை கொண்டுவந்துவிடும்." அவர் முடிவுரையாக கூறியது: "மகளிருக்கும் உரிமைகள் விரிவாக்கப்படுதல் அனைத்து சமூக முன்னேறத்தின் அடிப்படைக் கொள்கை ஆகும்." ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட UNAMI (ஐக்கிய நாடுகளின் ஈராக்கிய உதவிப் பணி) அறிக்கை ஒன்று அந்நாட்டில் மனித உரிமைகள் பற்றிக் கூறும்போது, Erbit, Dubok, Sulaimaniya, Salahuddin ஆகிய ஆளுனர் பிராந்தியங்களில் மூன்று மாதங்களில் 40 பெண்கள் "மானம் காத்துகொள்ள கொல்லப்பட்டனர்" என்று தெரிவிக்கிறது. "நெறியற்ற நடத்தை" என்ற குற்றச் சாட்டிற்காக இம்மகளிர் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட்டனர்; சிலர் உயிரோடு எரிக்கப்பட்டனர். ஈராக்கிய செய்தி நிறுவனமான Awena கொடுத்துள்ள அறிக்கை இந்த கொடிய வழக்கம் இன்னும் பரந்த முறையில் இருப்பாதகக் கூறுகிறது. டுகோக் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் டுச்சோக் அஜாதி மருத்துவமனையில் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் இந்த ஆளுனர் பிரிவில் 2005ல் 289 எரிக்கும் நிகழ்வுகள் ஏற்பட்டு 46 இறப்புக்கள் நடந்ததாகவும், 2006ல் 366 எரிக்கும் நிகழ்வுகள் ஏற்பட்டு 66 இறப்புக்கள் ஏற்பட்டதாகவும் Awena கூறுகிறது. இதற்கிடையில், எரிபிலில் உள்ள அவசரக்கால மேலாண்மை மையம் அந்த ஆளுனர் ஆட்சிப்பிரிவில் 2003ல் இருந்து 576 எரிப்புக்கள் ஏற்பட்டு 358 இறப்புக்கள் நடந்ததாக தெரிவிக்கிறது. மேலும் எர்பிலில் கற்பழிப்புச் சம்பவங்கள் 2003ல் இருந்து 2006க்குள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்க மேற்பார்வையில் இயற்றப்பட்ட ஈராக்கிய அரசியலமைப்பு இஸ்லாம் உத்தியோகபூர்வ நாட்டு மதம் என்று அறிவித்து "இஸ்லாமின் மாற்றமுடியாத விதிகளுக்கு மாறுபட்ட" எந்த சட்டமும் இயற்றப்படக்கூடாது என்று நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை ஈராக்கின் இன்னும் கூடுதலான, தாராளத் தன்மை நிறைந்த விவாகரத்து, குடும்பச் சொத்து, குழந்தைகள் பொறுப்பு என்று குடியுரிமைச் சட்டங்களில் இருப்பவற்றை ஷாரியச் சட்டத்திற்கு மாற்றியுள்ளது; ஷாரியச் சட்டம் மகளிருக்கு பெரும்பாலான உரிமைகளை மறுக்கின்றது. ஏற்கனவே இக்கொள்கைகள் தெருக்களில் இஸ்லாமிய கட்சிகளின் ஆயுதமேந்திய போராளிகளால் தெருக்களில் செயல்படுத்தப்படுகின்றன; அவை பேராசிரியர்கள் அல்லது டாக்டர்கள் அல்லது வணிகத்தில் முக்கியமான பங்கு என்று பொறுப்பான பதவிகளை வகிப்பதற்காக மகளிரை கொன்றுள்ளனர். சில அமைப்புக்கள் விழிப்புணர்வுடன் இஸ்லாமிய உடை, ஹிஜப், முகத்திரை ஆகியவை பயன்படுத்தப்படாவிட்டால், வன்முறை பயன்படுத்தப்படும் என்ற அச்சுறுத்தலையும் கொடுக்கின்றன. சில பகுதிகளில் சில அமைப்புக்கள் மகளிர் தங்கள் வீடுகளில் இருந்து நண்பகலுக்கு பின் புறப்படக்கூடாது என்றும், வாகனங்களை செலுத்தக்கூடாது என்றும் ஆண் உறவினர் இல்லாமல் தெருக்களில் நடக்கக்கூடாது என்றும் கோரியுள்ளன. அமெரிக்க ஆக்கிரமிப்பின் நான்காம் ஆண்டு நிறைவை ஒட்டி ஈராக் பெண்கள் சுதந்திரத்திற்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு கூறுகிறது: கடந்த நான்கு ஆண்டு ஆக்கிரமிப்புக் காலத்தில் ஈராக்கிய மகளிர் சிறிது சிறிதாக அவர்கள் 20ம் நூற்றாண்டில் பெற்ற ஆதாயங்கள், சலுகைகள் ஆகியவற்றை இழந்துள்ளனர். கல்வியறிவு படைத்த, உழைக்கும் மகளிர் கண்ட நவீன நாடு என்ற நிலையில் இருந்து ஈராக் இப்பொழுது பிளவுற்ற இஸ்லாமிய, இனவழிப் போர்ப்பிரபுக்கள் நிறைந்த நாடாகிவிட்டது; பிந்தையவர்கள் சமூக மட்டத்தில் மகளிரை அகற்றுவதில் போட்டியிட்ட வண்ணம் உள்ளனர். அழிவுகரமான அமெரிக்கப் போர் இயந்திரம் மற்றும் மகளிரை திக்கற்ற இருண்ட பொருட்களாக, சொந்த விருப்பம், மதிப்பு அற்றவர்களாக இவை மாற்றும் பலவித இஸ்லாமிய ஆட்சிகள் இவற்றிற்கு இடையே மில்லியன்கணக்கான மகளிரின் விதிகள் வீணடிக்கப்படுகின்றன. மகளிருக்கு எதிராக வன்முறை பெருகிவருவதை இந்த அறிக்கை மேற்கோளிடுகிறது; இதில் பெண்கைதிகளை கும்பலாக கற்பழித்தல், குழுவாத போர்முறையில் ஒரு கருவியாக மற்ற பிரிவுகளின் போராளிகள் மகளிர்மீது தாக்குதல்கள் நடத்துதல் ஆகியவை அடங்கும். மகளிரைக் கடத்துதலும் மிகவும் அதிகமாகிவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் குழு வெளியிட்ட அறிக்கையில் சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட அறியப்பட்டிருந்திராத இக்குற்றம், மூன்று ஆண்டுகள் அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்தில், 2,000க்கும் மேற்பட்ட மகளிரை பாதித்துள்ளதாக கூறுகிறது; இவர்களில் பலர் கற்பழிக்கப்பட்டனர் அல்லது சித்திரவதைக்குள்ளாயினர். மற்ற வன்முறை வகைகளுடன் சேர்ந்து இத்தகைய நிகழ்வுகள் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளன. ஈராக்கில் தூக்கிலடப்படுவோர் வரிசையில் இப்பொழுது நான்கு மகளிரும் உள்ளனர்; இவர்களில் இருவர் தங்கள் சிறு குழந்தைகளுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஈராக்கிய சிறுபான்மையினரை அழித்தல் ஈராக்கில் சமூகச்சிதைவு பற்றி பளிச்சிட்டுக்காட்டும் மற்றொரு அடையாளம் சிறுபான்மையினரின் அந்தஸ்தாகும். இம்மாதம் சிறுபான்மையினர் உரிமைக்கான சர்வதேசக் குழு விடுத்த அறிக்கை ஒன்று ஈராக்கில் சிறுபான்மைச் சமூகங்கள் முறையாக அகற்றப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல் கொடுக்கும் மோசமான நாடுகளில் இரண்டாவதாக ஈராக் உள்ளது என்று அது தெரிவிக்கிறது; இது சோமாலியாவைவிட சற்று சிறப்பான நிலை, டார்பரை விட மோசமான நிலையாக உள்ளது. "மாற்றம், வெளியேற்றம், அகற்றுதல்: 2003ல் இருந்து ஈராக்கிய சிறுபான்மை சமூகங்கள்" என்ற தலைப்பில் இந்த அறிக்கையில் ஈராக்கில் உள்ள ஆர்மேனிய, சால்டோ-அசிரிய கிறிஸ்துவர்கள், பஹைகள், பைலி குர்திஸ்கள், யூதர்கள், மண்டேயினர்கள், பாலஸ்தீனியர்கள், ஷாபக்குகள், துருக்கோமன்கள் மற்றும் யாஜிடிக்கள் ஆகியோர் எதிர்கொண்டுள்ள நிலையை கூறுகிறது; இவர்கள் நாட்டு மொத்த மக்கட்தொகையில் 10 சதவிகிதத்தினர் ஆவர். "கிறிஸ்துவர்கள், யேஜிடிக்கள், மாண்டேயினர்கள் உட்பட சிறுபான்மைப் பிரிவு மக்கள் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்படுவதை ஈராக் தொடர்ந்து காண்கிறது. ஈராக்கில் மற்ற சிறுபான்மைப் பிரிவினரும் அன்றாட வன்முறை, சித்திரவதை, அரசியல் மாற்றம் ஆகியவற்றை எதிர்நோக்குகின்றனர்; இதையொட்டி இப்பிரிவுகளில் இருந்து பலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்." என்று அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு, உலகத்தில் இவ்விதத்தில் மிக மோசமான நிலையில் ஈராக் இருந்தது. இரண்டாம் மோசமானது என்று இப்பொழுது ஆகியுள்ளதற்கு காரணம் சோமாலியாவில் இன்னும் குறிப்பிடத்தக்கவகையில் சீரழிவு ஏற்பட்டுள்ளது; அங்கு அமெரிக்க தூண்டுதலின் பேரில் ஏற்பட்ட தலையீடு ஒன்று பெரும் வன்முறையை கட்டவிழ்த்துள்ளது. ஈராக்கின் சிறுபான்மையினரில் சிலர் அந்நாட்டில் அரேபியருக்கும் முன்னதாகவே இருந்துள்ளனர்; அதாவது பண்டைய மெசொபதேமியா காலத்தில் இருந்தே உள்ளனர். இப்பொழுது வன்முறை, மிரட்டல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, அவர்கள் ஈராக்கில் இருந்து மறைந்து வருகின்றனர்; பலர் கொல்லப்பட்டனர்; எஞ்சியுள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் இப்பேரழிவிற்கு அமெரிக்க ஆக்கிரமிப்பைத்தான் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் எழுதுவதாவது: "2003ல் ஈராக் ஆக்கிரமிப்பை அடுத்து, கூட்டணி அதிகாரிகள் ஒரு ஈராக்கிய ஆளும் குழுவை நிறுவனர்: இதில் உறுப்பினர்கள் இனவழி, குழுவாத வழிகளில் கட்டுப்பட்ட நியமனத்தை பெற்றனர். அரசியல் ஆதரவை ஒட்டி முழு அமைச்சரகங்கள் மந்திரியின் சொந்த பிரிவு அல்லது குழுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது; குழுவாத அரசியல் விரைவில் புதிய ஈராக்கிய அரசாங்கத்தின் வரையறுக்கும் கூறுபாடாயிற்று." இதன் விளைவாக சிறுபான்மை மக்கள் ஒதுக்கப்பட்டு, பின்னர் அடக்கப்பட்டனர். ஈராக்கிய மருத்துவ வல்லுனர்களை குறைத்தல் ஈராக்கில் ஏற்பட்ட கொலைகாரத்தனமான வன்முறையும், மில்லியன் கணக்காக அகதிகள் நாடு விட்டுச்சென்றதும், ஒரு சமூகத்தை தக்க வைப்பதற்கு தேவையான தவிர்க்க முடியாத முக்கிய தொழில்களில் இருப்பவர்களுடைய எண்ணிக்கையை குறைத்துவிட்டது. பிரிட்டனின் அரசாங்க சார்பு இல்லாத அமைப்பான Medact, உத்தியோகபூர்வ ஈராக்கிய மருத்துவ சங்கத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோளிட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஈராக்கில் இருந்த 34,000 வைத்தியர்களில் 18,000 பேர் நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறுகிறது. மற்றும் ஒரு 2,000 வைத்தியர்கள் கொலையுண்டனர்; குறைந்தது 250 பேராவது கடத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. ஈராக்கில் இருந்து அகதிகள் வெளியேறுவது பற்றிய தன்னுடைய நியூ யோர்க் டைம்ஸ் சஞ்சிகை மே 13 பதிப்பில் Nir Rosen, அத்தகைய டாக்டர் ஒருவரைப் பேட்டி கண்டார்; அவர் ஒரு குடும்ப மருத்துவ வல்லுனர்; டமாஸ்கசிற்கு தன்னுடைய ஐந்து குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இவருடைய கணவர் ஒரு நெஞ்சுக்கூடு அறுவை மருத்துவராகவும், மருத்துவப்பள்ளிப் பேராசிரியராகவும் இருந்தவர், ஆயுதமேந்தியவர்களால் அவருடைய காரில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு, கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. Nir Rosen இடம் இவ்வம்மையார் ஈராக்கிய போலீசாரை விசாரணை நடத்துமாறு தான் கோரியதற்கு அவர்கள், "அவர் ஒரு டாக்டர், அவருக்கு ஒரு பட்டம் உள்ளது; அவர் ஒரு சுன்னி இனத்தவர்; எனவே அவர் ஈராக்கில் இருக்க முடியாது. எனவேதான் அவர் கொல்லப்பட்டார்" என்று கூறினர். போலீசும், சுகாதார அமைச்சரகமும் ஷியைட் இஸ்லாமிய பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவ்வம்மையார் பின்னர் கடிதம் மூலம் இருக்கும் பகுதியை விட்டு நீங்குமாறு இவர்களால் உத்தரவிடப்பட்டார். பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்கள் இல்லாதது, மற்றும் அடிப்படை பொருட்கள் இல்லாதது மற்றும் ஏராளமான இறப்பு என்பவை ஈராக்கின் சுகாதாரப் பாதுகாப்பு முறையை சிதைத்துவிட்டன. கடந்த அக்டோபரில் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னலில் வெளிவந்த கட்டுரை ஒன்றில், ஈராக்கில் உள்ள Diwaniya College of Medicine இல் இருந்து மூன்று டாக்டர்கள், 2003 அமெரிக்க படையெடுப்பு தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நூறாயிரக்கணக்கான மக்களில் கிட்டத்தட்ட பாதிபேர் போதுமான மருத்துவ வசதியை பெற்றிருந்தால் உயிர்தப்பிப் பிழைத்திருக்க முடியும் என்று கூறியுள்ளனர். "உண்மை என்னவென்றால் பல பாதிக்கப்பட்டவர்களுக்கும் நாங்கள் சிகிச்சை ஏதும் கொடுக்க முடியவில்லை" என்று அவர்கள் எழுதினர்: "அவசர சிகிச்சைப் பிரிவுகளில் தக்க அனுபவம் அல்லது திறமையுடன் நோய்களை கவனிக்க முடியாத வைத்தியர்கள் இருந்தனர். இறந்து விட்டவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் தக்க பயிற்சி, அனுபவமுடைய ஊழியர்கள் இருந்தால் காப்பாற்றப்பட்டிருப்பர் என்பதை மருத்துவ ஊழியர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனர்." கட்டுரை மேலும் கூறுகிறது: "தரமற்ற அவசர சிகிச்சை மருத்துவ வசதிகள் ஆபத்துக்களையும் விட அழிவைக் கொடுப்பவை என்பது எங்கள் அனுபவம். இருந்தபோதிலும் ஈராக்கை அன்றாடம் நசுக்கிக் கொண்டிருக்கும் வன்முறையையும் மீறி சர்வதேச மருத்துவச் சமூகம் வெறுமே பார்த்திராமல் இயன்றதை செய்து கொண்டிருக்கிறது" சர்வதேச மருத்துவச் சமூகம் மட்டும் அல்ல. ஈராக்கிய சுகாதாரக்காப்பு முறையின் நிலைமையும் ஒரு அமெரிக்கப் போர்க் குற்றம்தான். ஆக்கிரமிப்பு சக்தி, "திறமையான முறையில் மருத்துவ வசதிகள், மருத்துவ மனைகள், பொது சுகாதாரத் திட்டம், குறிப்பிடத்தக்க வகையில் தொற்று நோய்கள் பரவுதலைத் தடுத்தல், இவற்றில் முக்கியத்துவம் காட்டுவதுடன் மருத்துவ ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதையும்" உரிய முறையில் காக்க வேண்டும் என்று நான்காம் ஜெனீவா உடன்படிக்கை கூறுகிறது. ஜெனீவா உடன்படிக்கைகளின்படி ஆக்கிரமிக்கும் நாடு மருத்துவமனைகள் நடுநிலையாக இருப்பதற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும், அவற்றை தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும், அனைவருக்கும் மருத்துவ பாதுகாப்பு கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று உள்ளது. ஆயினும்கூட அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் பலமுறையும் மருத்துவமனைகளை தாக்கியுள்ளன. மேலும் ஆயுதக்குழுக்களும் மருத்துவமனைகளில் தடைகளின்றி நுழைந்து பல நேரமும் மற்ற குழுக்களை சேர்ந்த நோயாளிகளை தூக்கிலிடுவதற்காக இழுத்துச்சென்றுள்ளனர். வைத்தியர்களை கொலைசெய்தல், கடத்திச் செல்லுதல், நாட்டில் இருந்து மொத்தமாக அவர்கள் வெளியேறுவது ஆகியவை கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஈராக்கில் வாடிக்கையாகிவிட்டது. Brookings Institution என்ற வாஷிங்டனில் உள்ள அமைப்பினால் பராமரிக்கப்படும் Iraq Index என்பது 2003 இல் இருந்து வைத்தியர்கள், பேராசிரியர்கள், மருந்தக நிர்வாகிகள் மற்ற பல்கலைக்கழக பயிற்சி பெற்றவர்கள் உள்ளடங்கிய ஈராக்கின் "சிறப்புத் தகுதி பெற்ற பிரிவினரில்" 40 சதவிகித்தினர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்று தெரிவிக்கிறது. தொடரும்..... |