World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan defence secretary defends the military's crimes

இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராணுவத்தின் குற்றங்களை பாதுகாக்கின்றார்

By Wije Dias
2 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரிடம் கடந்த மாதம் பி.பி.சி எடுத்த பேட்டியானது நாட்டு அரசாங்கத்தின் குண்டர் மனப்போக்கு தொடர்பான ஒரு நடுங்கவைக்கும் நுழைபுலத்தை வழங்குகிறது. இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு யுத்தத்தை உக்கிரப்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான கோதபாய இராஜபக்ஷ, நாட்டின் ஜனாதிபதியும் தனது சகோதரருமான மஹிந்த இராஜபக்ஷவுடன் சேர்ந்து, அதிகாரங்களை இலாகவமாய் கையாளுகின்றார்.

கொழும்பில் தற்காலிகமாக வசித்து வந்தவர்களை சட்டவிரோதமாக தடுத்துவைத்து, பலாத்காரமாக வெளியேற்றியதை அடுத்தே இந்தப் பேட்டி பதிவுசெய்யப்பட்டிருந்தது. ஜூன் 7 அன்று, தலைநகரில் மலிவான தங்குமிடங்களில் முன்னறிவிப்பற்ற சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உட்பட 376 தமிழர்களை சுற்றிவளைத்த பொலிசும் இராணுவமும், அவர்களை பஸ்களில் ஏற்றி யுத்தப் பிராந்தியமான வடக்கு மற்றும் கிழக்கிற்கு ஆதரவற்ற நிலையில் கொண்டுசென்று தள்ளிவிட்டு வந்தன. அடிப்படை அரசியலமைப்பு மற்றும் சட்ட உரிமைகளை நிராகரித்த பொலிஸ், தமிழ் குடியிருப்பாளர்கள் "தலைநகரில் தங்கியிருக்க முடியாது" எனக் கூறியது.

ஜனநாயக உரிமைகள் மீதான இத்தகைய வெளிப்படையான துஷ்பிரயோகம், இலங்கையிலும் அனைத்துலகிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு அரசாங்கத்தைப் பின்வாங்கத் தள்ளியது. ஆரம்பத்தில் பாதுகாப்புப் பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல மக்கள் "தன்னிச்சையாகவே'' வெளியேறினர் எனப் பொய் கூறி இதனை நியாயப்படுத்த முயன்றார்.

ஆயினும், விமர்சனங்கள் தொடர்ந்தும் குவிந்ததோடு மேலும் வெளியேற்றங்களை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் ஒரு இடைக்கால தடையை விதித்ததை அடுத்து அரசாங்கம் இந்த நடவடிக்கையைக் கைவிட்டது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ பொலிஸ் மா அதிபர் மீது குற்றஞ்சாட்டியதோடு இந்த நடவடிக்கை தொடர்பாக விசாரணை ஒன்றை நடத்துமாறும் கட்டளையிட்டார். மூன்று நாட்களின் பின்னர், இந்த "பெரிய பிழைக்காக" மன்னிப்புக் கோர பிரதமர் ரட்னசிரி விக்கிரமநாயக்க ஒரு பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தி, இத்தகைய சம்பவம் "இனிமேல் நடக்காது" என வாக்குறுதியளித்தார்.

24 மணித்தியாலங்களுக்கு இடையில், இதற்கு கொஞ்சமும் வருத்தம் தெரிவிக்காமல் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கையை முற்றிலும் நியாயப்படுத்த மட்டுமே கோதபாய இராஜபக்ஷ பி.பி.சி.க்கு தனது பேட்டியை வழங்கினார். பாதுகாப்புச் செயலாளர் கருதுகின்ற அளவில், தமிழர்கள் சுற்றிவளைக்கப்பட்டமை "தேசிய பாதுகாப்பு" என்ற அடிப்படையில் முழுமையாக நியாயப்படுத்தப்படுவதோடு, அவர்களை தலைநகரில் இருந்து வெளியேற்ற எடுத்த முடிவானது முற்றிலும் தன்னிச்சையான பண்புகொண்டதாக காட்டப்படுகின்றது.

"நாங்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதோடு, சந்தேகத்திற்கு இடமானவர்களை கைதுசெய்யும் போது, அவர்கள் யார் யாரென்று உங்களுக்குத் தெரியாது. எங்களால் 300 பேரைக் கைதுசெய்து தடுத்து வைத்திருக்க முடியாது. ஆகவே நீங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள், உங்களுக்கு கொழும்பில் சட்டப்பூர்வ கொடுக்கல் வாங்கல்கள் எதுவும் கிடையாது, கொழும்பில் பாதுகாப்புப் பிரச்சினை உள்ளது, நீங்களே அதில் சந்தேகத்திற்குரியவர்கள்... நாங்கள் உங்களை தடுப்புக் காவலில் வைத்திருக்க விரும்பவில்லை, நீங்கள் உங்களது வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்" என இராஜபக்ஷ பி.பி.சி. க்குத் தெரிவித்தார்.

இராஜபக்ஷவின் படி, இந்தப் பிரச்சினை தர்க்கரீதியானதே அன்றி ஜனநாயக உரிமை பற்றிய பிரச்சினையோ அல்லது சட்டப்பூர்வ பிரச்சினையோ அல்ல. பாதுகாப்புப் படைகள் "சந்தேகத்திற்கிடமானவர்களை" கைது செய்வது வழமையாக இருப்பதோடு, கைது செய்யப்படுபவர்கள் நாட்டின் ஜனநாயக விரோத பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படாமல் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்படுகின்றனர். ஆனால், பல ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளையும் சுற்றிவளைத்து அவர்களைத் தடுத்து வைப்பது சிரமமானதாகும். ஆகவே அவர்கள் பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்கள். இங்கு குறிப்பிடப்படாத மாற்றீடானது, அவர்கள் அனைவரையும் "காணாமல் ஆக்குவது" அல்லது படுகொலை செய்வதேயாகும். கடந்த 18 மாதங்களில் நூற்றுக்கணக்கான, பிரதானமாக தமிழர்களுக்கு இதுவே நடந்தது.

"சந்தேகத்திற்கிடமானவர்களைக் கைது செய்யும் போது, அவர்கள் யார் யாரென்று எங்களுக்குத் தெரியாது" என இராஜபக்ஷ வாதிடும் போது, இந்த நடவடிக்கையின் இனவாதப் பண்பு அவராலேயே கோடிட்டுக்காட்டப்படுகிறது. வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதை ஒருவர் கவனிக்கும் போது, "சந்தேகத்திற்கான" ஒரே அடிப்படை இனமும் மொழியும் என்பது தெளிவாகும். இராஜபக்ஷ உளறிக்கொட்டுவது என்னவெனில், யுத்தத்தின் அடித்தளமான இனவாத கருத்துப் போக்கேயாகும். அரசாங்கமும் இராணுவமும் கருதுகின்ற அளவில், அனைத்து தமிழர்களும் எதிரிகள், இதனால் அவர்கள் அடக்குமுறை, அச்சுறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் படுகொலைகளின் சட்டரீதியான இலக்காக உள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பை நியாயப்படுத்திய இராஜபக்ஷ, விமர்சனங்களை அவமதித்ததோடு குறிப்பாக "மனித உரிமைகள் பிரச்சினை சம்பந்தமாக இலங்கையை தொந்தரவு செய்வதாக" பிரித்தானியாவையும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையையும் குற்றஞ்சாட்டினார். அவர் திமிரான முறையில் பிரகடனம் செய்ததாவது: "பிரித்தானியா அல்லது மேற்கு நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அவர்கள் என்னவென்றாலும் செய்யலாம். நாங்கள் அவர்களில் தங்கியிருக்கவில்லை. நாங்கள் அவர்களிடமிருந்து உதவி பெறுவதாக அவர்கள் நினைக்கின்றார்கள். இல்லை, அவர்கள் எதையும் கொடுக்கவில்லை... நாங்கள் தனிமைப்படப் போவதில்லை. எங்களுக்கு சார்க் (பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகளின் ஒன்றியம்) நாடுகள் உள்ளன, ஆசிய நாடுகளும் உள்ளன."

பெரும் வல்லரசுகளுக்கு சமமாய் நிற்பதாகக் காட்டிக்கொள்ளும் அனைத்து தோரணைகளுக்கு மத்தியிலும், நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் முழுமையாக, குறிப்பாக அமெரிக்காவின் மெளன ஆதரவிலேயே தங்கியிருக்கின்றது. புஷ் நிர்வாகத்தின் மோசடியான "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்திற்கு" ஜனாதிபதி இராஜபக்ஷ வழங்கும் ஆதரவிற்கு பிரதியுபகாரமாக, 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை வெளிப்படையாக மீறி கடந்த ஜூலையில் தாக்குதல்களைத் தொடுக்க ஜனாதிபதி இராஜபக்ஷ கட்டளையிட்டதில் இருந்தே அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. வும் ஏறத்தாழ மெளனமாக உள்ளன. இப்போது சில மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்கள் தலைநீட்டுமானால், அது இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மிகவும் வெளிப்படையானதாகவும் படு மோசமானதாகவும் ஆகியிருப்பதனாலேயே ஆகும்.

இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகள் தொடர்பாக சார்க் நாடுகள் அனைத்தும் தொடர்ந்தும் மெளனமாக இருப்பது ஆச்சரியத்திற்குரியதல்ல. பெயரளவில் இல்லாவிட்டாலும் பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இராணுவ சர்வாதிகாரத்தின் மூலமே ஆட்சி நடைபெறுகின்றது. இது தமது சொந்த நாட்டுக்குள் வளரும் எதிர்ப்புக்கு எதிராக இதே கொடூரமான வழிமுறைகளை நாட அவர்கள் தயங்குவதில்லை. இந்தியாவைப் பொறுத்தளவில், அதன் அனைத்து ஜனநாயகப் பாசாங்குகளும் ஒரு புறமிருக்க, அது தனது சொந்த "பயங்கரவாத விரோத" சட்டங்களைக் கொண்டுள்ளதுடன், அது காஷ்மீர் மற்றும் நாட்டின் ஏனைய பாகங்களில் இருக்கும் பிரிவினைவாத இயக்கங்களை கொடூரமாக நசுக்க இந்தச் சட்டங்களை பயன்படுத்துகின்றது. இலங்கையில் நடைபெறும் யுத்தம் சம்பந்தமாக இந்தியாவின் எந்தவொரு மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனமும், தென்னிந்தியாவில் தமிழர்கள் மத்தியில் உருவாகக் கூடிய சீற்றத்தையிட்டு விழிப்புடனேயே வெளிவருகிறது.

கொழும்பு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயத்தை தற்காலிகமாக எழுப்பியமைக்காக ஐ.நா. வை புலிகளின் பிரச்சாரக் கருவியாக இராஜபக்ஷ கேலிக்கூத்தான முறையில் வகைப்படுத்துகின்றார். ஐ.நா. வுக்குள் புலிகள் "ஊடுருவியுள்ளதாக" அவர் கூறுகின்றார். "ஐ.நா. அமைப்பு அதற்குள் பெருந்தொகையான உள்ளூர்வாசிகளை எடுத்துக்கொண்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக புலிகள் ஐ.நா. வுக்குள் ஊடுருவத் திட்டமிட்டிருந்தார்கள்," என இராஜபக்ஷ தெரிவிக்கின்றார். இராஜபக்ஷ தனது அசாதாரணமான குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்த "ஐ.நா. வுக்குள் ஊடுருவியவர்களின்" பட்டியலையோ அல்லது வேறு எந்த ஆதாரங்களையோ இதற்கு காட்டவில்லை.

புஷ் நிர்வாகத்தின் குற்றங்களோடு இலங்கை இராணுவத்தின் குற்றவியல் நடவடிக்கைகளை நியாப்படுத்த அவர் முயற்சித்தபோது, இராஜபக்ஷவின் மிகவும் அம்பலப்படுகின்ற மற்றும் தொந்தரவான கருத்துக்கள் அவரிடமிருந்தே வெளிவந்தன. "இரட்டை நிலைப்பாடுகள்" பற்றி முறைப்பாடு செய்யும் அவர் பிரகடனம் செய்ததாவது: "எல்லா இராணுவங்களும் மூடிமறைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அமெரிக்கா, தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவர்கள் அதை மூடிமறைக்கப்பட்ட நடவடிக்கை என்றே சொல்கின்றார்கள். இலங்கையில் ஏதாவதொன்று நடக்கும் போது அவர்கள் அதனை ஆட் கடத்தல்கள் என அழைக்கின்றார்கள். இது சொற்களுடன் விளையாடுவதாகும்... நான் சொல்வது என்னவென்றால், பயங்கரவாதக் குழு ஒன்று இருக்குமானால், உங்களால் ஏன் எதுவும் செய்ய முடியாது? நான் பயங்கரவாதிகளைப் பற்றி பேசுகிறேன். எதுவென்றாலும் நேர்மையானதே."

பூனையை மீண்டும் உறைக்குள் போடும் முயற்சியில், "தான் ஆட் கடத்தல்களுக்கு முற்றிலும் எதிரானவன்" என இராஜபக்ஷ உடனடியாக பிரகடனம் செய்தார். ஆனால், இதன் உட்பொருள் மிகவும் தெளிவானது: அது இலங்கை இராணுவம் உட்பட அனைத்து இராணுவமும் "மூடி மறைக்கப்பட்ட" நடவடிக்கையில் ஈடுபடுகின்றன என்பதாகும். அமெரிக்க இராணுவமும் சீ.ஐ.ஏ. வும் தண்டனையில் இருந்து விலக்கீட்டுரிமையுடன் மக்களைப் பிடித்து, தடுத்து வைத்து, சித்திரவதை செய்து, கொலை செய்யுமானால், அதே வேலையை இலங்கை பாதுகாப்புப் படைகள் செய்யும்போது மட்டும் விமர்சிப்பதேன்! எல்லாவற்றையும் விட, கடந்த 18 மாதங்களாக நூற்றுக்கணக்கானவர்களை "காணாமல் ஆக்கியதோடு" படுகொலைகளையும் முன்னெடுத்த கொலைப் படைகளுக்கு அரசாங்கமும் இராணுவமும் நேரடிப் பொறுப்பு என்பதை இராஜபக்ஷ ஒப்புக்கொள்கின்றார்.

இங்கு உண்மையில் இரட்டை நிலைப்பாடு இருக்க முடியாது. வெள்ளை மாளிகையில் புஷ் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களைப் போல், இராஜபக்ஷ, அவரது சகோதரரான ஜனாதிபதி, அரசாங்க அமைச்சர்கள் மற்றும் இராணுவ உயர் மட்டத்தினர் ஆகியோர் ஒரு குற்றவியல் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு தலைமை வகிப்பதோடு அவர்கள் யுத்தக் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும்.

குறிப்பிடத்தக்க வகையில், பாதுகாப்புச் செயலாளரான இராஜபக்ஷ பி.பி.சி. க்கு வழங்கிய பேட்டியை ஜனாதிபதி இராஜபக்ஷ, பிரதமர் விக்கிரமநாயக்க அல்லது ஏனைய அமைச்சர்கள் விமர்சிக்கவில்லை. இது கொழும்பில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழர்களை வெளியேற்றியதற்கு அரசாங்கம் கவலை தெரிவித்தமை வெறும் பாசாங்கே என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அத்தோடு, பிற்போக்கு யுத்தத்துடன் இணைந்த வகையில் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான, மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பான அனைத்து விரோதங்களுக்கும் எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் தணியாது தொடரவுள்ளது.