World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German-Polish conflict dominates EU summit

ஜேர்மனி-போலந்து பூசல் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது

By Peter Schwarz
22 June 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் 21ம் தேதி பிரஸ்ஸல்ஸில் ஆரம்பித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாடு ஜேர்மனியின் ஐரோப்பிய ஒன்றிய ஆறுமாத காலத் தலைமைக்கு மகுடம் என்று கருதப்பட்டது. விரிவான பணிகளை பல மாதங்கள் செய்திருந்த நிலையில், 2005ம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் ஐரோப்பிய அரசியலமைப்பு வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பேர்லின் பல உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து ஒரு உடன்படிக்கை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வேலைசெய்திருக்கிறது.

புதிய வரைவு ஒப்பந்தம் பற்றி முழு உடன்பாடு இருக்குமா என்பது இப்பொழுதும் முற்றிலும் வெளிப்படையான கேள்விக்குரிய பிரச்சினைதான். சனிக்கிழமை அதிகாலை வரை உச்சிமாநாடு நீட்டிக்கக்கூடும் என்று வல்லுனர்கள் ஊகிக்கின்றனர்; நீண்ட இரவுக் கூட்டத்தொடருக்கு பின்னர்தான் முடிவு உறுதியாகும்.

குறிப்பாக போலந்து அரசாங்கத்தின் எதிர்ப்பு இருக்கையில் உச்சிமாநாடு தோல்வி அடையக்கூடும். ஜனாதிபதி Lech Kaczynski மற்றும் அவருடைய இரட்டைச் சகோதரரும் பிரதம மந்திரியுமான Jaroslaw Kaczynski மூல வரைவு அரசியல் அமைப்பில் இருக்கிறவாறு பெரும்பான்மையான முடிவுகள் எடுக்கும்பொழுது ஒவ்வொரு நாட்டின் வாக்கினதும் ஒப்புமை எடையை ஏற்கவேண்டும் என்பதை உறுதியாக ஏற்க மறுத்துள்ளனர்.

புதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஜேர்மனிய அரசாங்கம் விரும்பும் இந்த தனித்தன்மை வரையறை "இரட்டைப் பெரும்பான்மை" என்ற கொள்கையின் அடிப்படையில் உள்ளது. மந்திரிசபையில் ஒரு தீர்மானம் இயற்றப்படுவதற்கு உறுப்பு நாடுகளில் குறைந்தது 55 சதவிகிதம், ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கட்தொகையில் குறைந்தது 65 சதவிகிதம் இருந்தால்தான் அது நிறைவேறும். ஆனால் வாக்கின் குறியீடு மொத்த மக்கட்தொகை சதுர அடிக்கு எத்தனை என்ற விகிதத்தை ஒட்டி கணக்கிடப்பட வேண்டும் என்று கோருகிறது. இவ்விதத்தில் பெரிய நாடுகளில் செல்வாக்கு குறைக்கப்பட்டு சிறிய நாடுகளின் செல்வாக்கு அதிகரிக்கும்.

ஸ்பெயின், லக்சம்பேர்க் போன்ற மற்றய அரசுகள் போலந்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால் தடுப்பதிகாரத்தை பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தியுள்ளன. போலந்தின் திட்டத்தை இதுவரை ஜேர்மனிய ஐரோப்பிய ஒன்றியத் தலைமையும் ஏற்க மறுத்துள்ளது.

ஆனால் வாக்குகளை விநியோகித்தல் ஒன்று மட்டுமே உச்சிமாநாட்டில் விவாதத்திற்கு உரிய பிரச்சினை அல்ல. அரசாங்க வட்டங்களின் கருத்தின்படி மொத்தம் தீர்க்கப்படாமல் 15 பிரச்சினைகள் உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை உரிமைகள் சாசனம் அனைத்து உறுப்பு நாடுகளையும் கட்டுப்படுத்தும், ஐரோப்பிய ஒன்றிய சட்டம் பிரிட்டிஷ் சட்டத்தையும் விட முன்னுரிமை பெறும் என்பதை பிரிட்டிஷ் ஏற்காது. இதைத்தவிர, ஒரு வருங்கால ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரியின் அதிகாரம் இயன்றளவு குறைக்கப்பட வேண்டும் என்றும் லண்டன் விரும்புகிறது. இன்னும் கூடுதலான தடுப்பு அதிகாரங்கள் வேண்டும் என்று ஒல்லாந்து விரும்புகிறது; இருக்கும் ஒப்புமையிலான குறியீடு மாற்றப்பட வேண்டும் என்ற போலந்தின் கோரிக்கையை செக் குடியரசு ஒன்றுதான் ஆதரித்துள்ளது.

உச்சிமாநாடு தோல்வியுற்றால், ஐரோப்பிய ஒன்றியம் தற்போதைய வடிவத்தில் வெளியுறவு கொள்கை விவகாரங்களில் ஒருமித்த கருத்து மற்றும் சக்தியை பெறுவதற்கு நீண்ட காலமாக நடக்கும் முயற்சியில் கடைசி முயற்சியாக இருக்கக்கூடும், இதன் பின்னர், "ஐரோப்பிய மையக்கரு" பற்றிய பழைய திட்டங்கள் பழையபடி கொண்டுவரப்படும்.

உச்சி மாநாட்டின் ஆரம்பத்தில் லக்சம்பேர்க்கின் பிரதம மந்திரி Jsean-Claude Juncker ஒரு தோல்வி ஏற்பட்டால், அது "தவிர்க்க முடியாமல் இரு வேகங்கள் உடைய ஐரோப்பாவிற்கு" வழிவகுக்கும் என்று அச்சுறுத்தியுள்ளார். ஜேர்மனி, பிரான்ஸ், பெனிலக்ஸ் நாடுகளின் பொது நலன்களுக்கு ஜங்கர் பல நேரமும் செய்தித் தொடர்பாளராக கருதப்படுகிறார்.

ஆனால் இந்த நாடுகளில் இருக்கும் பல அரசியல் வாதிகளும் அத்தகைய வளர்ச்சியை ஒரு இடைஞ்சல் என்று நினைக்க மாட்டார்கள்; ஏனெனில் "ஐரோப்பிய மையக்கரு" என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கமான 27 நாடுகளுக்கு பதிலாக எளிதில் செயல்படும் கருவியாக இருக்கக்கூடும். ஐ.ஒ.வின் வடிவமைப்பிற்குள், ஏற்கனவே "மையக்கரு" நாடுகள் மட்டும் பங்கு கொள்ளும் பல முன்முயற்சிகள் உள்ளன; பொது நாணயம், உள்நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகளை அகற்றுதல் பற்றிய Schengen உடன்பாடு, குற்றங்களை தடுப்பதற்கான பொது புள்ளிவிவரப் பட்டியலை அமைப்பதில் Prüm உடன்படிக்கை போன்றவை அவற்றில் சிலவாகும்.

இந்த நிலை தொடருமானால், ஐரோப்பிய ஒன்றியம் நோக்கமின்றிச் செல்லும் நிலை என்ற விளைவு ஏற்படும்; அதைத்தவிர தேசிய தன்முனைப்புக்களும் பழைய கண்டத்தில் புதிய அதிகார முகாம்களின் வளர்ச்சியும் ஏற்படும். "மையத்தில் ஐரோப்பா நெருக்கமாக வளர்ச்சியுற்று ஓரப்பகுதிகளில் அரிப்பு ஏற்படும்" என்று ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் Elmar Brock (CDU) கணித்துள்ளார்.

அதிபர் மேர்க்கெலின் வரைவு உடன்படிக்கை

ஜேர்மனிய அரசாங்கம் தன்னுடைய திட்டங்களில் வெற்றி பெற்றால், அது ஐரோப்பிய ஒன்றியத்தை கணிசமாக மாற்றும். ஐரோப்பிய மக்களிடையே மகத்தான எதிர்ப்பை எதிர்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பின் பெரும் பகுதிகள், நிறைவேறிய உண்மையாகிப் போய்விடும். பெரிய சக்திகளின் பங்கு --குறிப்பாக ஜேர்மனியின் பங்கு, ஆனால் பிரான்ஸ், இத்தாலி, மற்றும் பிரிட்டனுடையவற்றின் பங்கும் கூட-- கணிசமாக வலுப்படுத்தப்படும். இவை தங்களுடைய விருப்பங்களை பெரும்பான்மை முடிவுகள் மூலம் செயல்படுத்த முடியும், மற்றும் இன்னும் ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கைகளை செயல்படுத்த முடியும். அதையொட்டி ஐரோப்பாவில் புதிய மோதல்கள் வெடிப்பதைத் தவிர்த்து விடாது, மாறாக அத்திசையில்தான் தவிர்க்கமுடியாமல் வழி நோக்கிச்செல்லும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஜேர்மனிய அரசாங்கம் ஒரு விரைவான வேகத்தில் செயற்பாடுகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. பிரஸ்ஸல்ஸில் உடன்பாடு ஏற்பட்டால், புதிய ஒப்பந்தம் ஒரு தூதரக மாநாட்டின் மூலம் முடிவெடுக்கப்படும் மற்றும் செயல்பாட்டிற்கு இரண்டாண்டுகளில் வந்து விடும்.

பேர்லின் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறது என்பதை Suddeutsche Zeitung ல் வந்துள்ள வர்ணனை ஒன்று தெளிவாக்குகிறது. "பனிப் போர்..... முடிந்து விட்டது." என்று Stefan Ulrich எழுதுகிறார்: "காலம் மாறிக் கொண்டிருக்கிறது. காப்பாற்றும் சக்தியான அமெரிக்காவிற்கே உதவி தேவைப்படுகிறது, ரஷ்யா ஒரு அச்சுறுத்தும் கரங்களை வெளிப்படுத்தியுள்ளது, உலக சக்திகள் சீனாவிலும், இந்தியாவிலும் அபிவிருத்தி அடைந்து வருகின்றன, ஈரான் அணுவாயுதத்தைக் கட்டமைத்துள்ளது, மத்திய கிழக்கு எரிகிறது, தட்ப வெப்பமோ சூடேறி வருகிறது. உலகை நெறிப்படுத்தி தங்களின் நாகரிக முன்மாதிரியைக் காப்பாற்ற வேண்டும் என்று ஐரோப்பிய அரசுகள் விரும்பினால் நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒன்றாக இருந்தால்தான் அவர்கள் தங்கள் நிலைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்-- Haczynski சகோதரர்கள் இதைப் புரிந்துகொள்ளும் வரை அவர்கள் காத்திருக்க முடியாது."

"உலகை நெறிப்படுத்த", "தங்கள் நாகரிக மாதிரியை தக்கவைத்துக்கொள்ள" என்பது ஏகாதிபத்திய நோக்கங்களுக்கு நல்ல மறைமொழி ஆகும். இன்றைய பிரச்சினைகள் சந்தைகளை, மூலப்பொருட்களை அடைதல், சொந்ந நாட்டின் பொருளாதார அரசியல் செல்வாக்கை சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாத்தல் என்பதாகும். எந்த தனி ஐரோப்பிய நாட்டின் தனி ஆற்றலும் இனி போதாது; எனவே ஜேர்மனிய முயற்சி இன்னும் உறுதியாக செயல்படக்கூடிய ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவுதலாக உள்ளது; அதில் ஜேர்மனி மிக அதிகமான மக்கட்தொகை அடர்த்தி மற்றும் பொருளாதார வலிமை உள்ள நாடு என்ற விதத்தில் முக்கிய பங்கை கொண்டிருக்கும்.

தோற்றுவிட்ட ஐரோப்பிய அரசியலமைப்பு யதார்த்தமாவதை உறுதிப்படுத்தும் பொருட்டு ஒப்புமையில் எளிமையான கருத்தாய்வுடன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் வந்துள்ளார். சாராம்சத்தின் நிறையப் பகுதிகள் காக்கப்பட வேண்டும்; அதே நேரத்தில் பொதுக் கொடி, ஒரு ஐரோப்பிய கீதம், அடிப்படை உரிமைகளின் பட்டியல், "அரசியலமைப்பு" என்ற சொற்றொடர் ஆகியவை நீக்கப்படலாம்.

இத்தகைய அடையாள துணைக் கருவிகளை அகற்றுதல் பழைய அரசியலமைப்பிற்கு ஒப்புதல் அளிக்காத அல்லது வாக்கெடுப்பு தோல்வியற்ற நாடுகளின் அரசாங்கங்களுக்கு வாக்கெடுப்பு இல்லாமல் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு உதவும். சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில், பிரெஞ்சு ஜனாதிபதியாக வரவிருந்த நிக்கோலா சார்க்கோசி மக்கள் வாக்கெடுப்பு இல்லாமலேயே ஒரு சிறிய அரசியலமைப்பின் வடிவமைப்பிற்கு உடன்பாடு கொடுப்பதாக ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் இப்பொழுது அவர் சில இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளார்; ஏனெனில் பாராளுமன்ற தேர்தல்களில் தேவையான மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை பெறுவதில் அவர் தவறிவிட்டார்.

இதைத்தவிர, ஓர் அரசியலமைப்பின் வெளிக்கூறுபாடுகளை அகற்றுவது பிரிட்டன், ஒல்லாந்து போன்ற அரசாங்கங்களுக்கு திருப்தி கொடுக்கும்; அவை ஐரோப்பிய ஒன்றிய அதன் உறுப்பு நாடுகளின் தேசிய இறைமையை பெரிதும் குறைத்துவிடும் என்று அஞ்சுகின்றன.

பழைய அரசியலைமப்பு உடன்பாட்டில் அடங்கியிருந்த நிறுவன அமைப்புக் கட்டுப்பாடுகள் --ஐரோப்பிய ஒன்றிய ஆணைய குழு மற்றும் பாராளுமன்றத்தின் அளவு, செயற்பாடுகள் மற்றும் வாக்களிக்கும் முறைகள்-- மாற்றம் ஏதும் இல்லாமல் புதிய வரைவில் மாற்றப்பட்டுள்ளன. ஜேர்மனியின் கருத்தில் இவை ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டின் மையக் கருவாக உள்ளன; ஏனெனில் அவை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சமபல நிலையை கட்டுப்படுத்துகின்றன.

இதுவரை, இன்று ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கும் உறுப்பு நாடுகளில் பாதியை கொண்டிருந்த நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நீசில் நடைபெற்ற கூட்டத்தில்தான் இப்பொழுது பொருந்தும் விதிகள் ஏற்கப்பட்டிருந்தன. ஒரு சில பிரச்சினைகளில்தான் பெரும்பான்மை முடிவு வேண்டும் என்று அவை அனுமதிக்கின்றன; மற்றவற்றில் 27 உறுப்பு நாடுகளில் ஒவ்வொன்றிற்கும் இரத்து அதிகாரம் உண்டு.

மேலும், ஒப்புமையில் வாக்களிக்கும் செல்வாக்கு மிகவும் ஒருதலைப் பட்சமாக கொடுக்கப்பட்டிருந்தது. மக்கள் தொகையில் பெருத்த வேறுபாடுகள் இருந்தாலும், ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகியவை தலா 29 வாக்குகளை கொண்டிருந்தன; போலந்து, ஸ்பெயின் இரண்டும் ஜேர்மனியில் இருப்பதைவிட பாதிக்கும் குறைவான மக்களை கொண்டிருந்தாலும் தலா 27 வாக்குகளை கொண்டுள்ளன. இத்தகைய விதிக்கு காரணம் அப்பொழுது பிரெஞ்சு ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக் ஜேர்மனியுடன் வாக்களிப்பில் சம உரிமை கொடுக்கப்படாவிட்டால் உச்சிமாநாட்டை பயனற்றதாக ஆக்கிவிடுவதாக அச்சுறுத்தியிருந்தார்.

இந்தப் புதிய விதிகள் வாக்குகளை வசிக்கும் மக்களின் எண்ணிக்கைப்படி வழங்கும். அதே நேரத்தில், எந்த தலைப்புக்களில் பெரும்பான்மை முடிவு அடையப்பட வேண்டும் என்பதும் விரிவாக்கப்படும். சிறு நாடுகளின் நலன்கள் "இரட்டைப் பெரும்பான்மை" விதியின்படி பாதுகாக்கப்படும்; சிறு நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு சில பெரிய நாடுகளின் பெரும்பான்மை மூலம் சட்டங்களை கொண்டுவருவதை தடுத்துவிடமுடியும்.

இதைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது புதிய விதிகள் கணிசமான முறையில் ஒப்புமையில் வாக்குச் செல்வாக்கை மாற்ற முடியும் மிகப் பெரிய ஐரோப்பிய ஒன்றிய நாடு என்ற முறையில் ஜேர்மனியில் வாக்குச் செல்வாக்கு நீஸ் ஒப்பந்தத்தோடு ஒப்பிடும்போது 16 சதவிகிதமாகத்தான் இருக்கும்; போலந்து முன்பு போலவே 8 சதவிகிதத்தில் இருக்கும். 1மில்லியன் மக்களுக்கும் குறைவாக இருக்கும் சிறிய நாடுகள் முக்கியத்துவம் பெற்றிருக்காது.

போலந்துடன் மோதல்

இந்த விதியைத்தான் பல வாரங்களாக போலந்து அரசாங்கம் எதிர்த்து வருகிறது. ஐரோப்பா மீது ஆதிக்கம் செலுத்த முற்படுவதாக ஜேர்மனிய அரசாங்கத்தின்மீது வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறது.

ஜேர்மனிய-போலந்து ஒத்துழைப்பிற்கு போலந்து வெளியுறவு அமைச்சரகத்தில் பொறுப்பு கொண்டிருக்கும் Mariusz Muszynski, ஜேர்மனிய ஐரோப்பிய ஒன்றிய தலைமை "அதன் பெரும்பாலன சக்தியை முக்கியமான சாரம்சம் உடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக தன்னுடைய செல்வாக்கை ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகரித்துக் கொள்ளுவதில்தான் ஈடுபட்டுள்ளது" என்று Der Spiegel இடம் கூறினார். "எப்படியும் ஐரோப்பிய ஒன்றிய குழுவில் கூடுதலான அதிகாரத்தை பெறுவதற்கு ஜேர்மனியர்கள் விரும்புகின்றனர்" என்று அவர் கூறினார்.

இரு நாடுகளின் செய்தி ஊடகங்களிலும் சேற்றை வீசி அடித்தல் பல வாரங்களாக நடைபெறுகிறது. போலந்து பக்கத்தில் இருந்து அனைத்து தேசிய வழிவகைகளும் வெளிக்கொண்டுவரப்பட்ட நிலையில், ஜேர்மனிய எதிர்ப்பு உணர்வுகளும் வெளிப்படையாக ஊக்குவிக்கப் பெறுகின்றன; ஜேர்மனிய பக்கத்தில் போலந்து தடைகள் கொடுப்பதாகவும், நன்றியில்லாமல் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மிக அதிகமாக படிக்கப்படும் ஜேர்மனியின் வாரந்தர ஏடான Der Spiegel, திங்களன்று முதற்பக்கத்தில் Kaczynski இரட்டையர்கள் வருத்தமுற்றிருக்கும் அங்கேலா மேர்க்கலின் தோள்கள் மீது களிப்புடன் செல்வதாக சித்தரித்திருந்தது. தலைப்பு: "நேசமற்ற அண்டை நாடுகள் -- ஐரோப்பாவை போலந்து எப்படி எரிச்சலூட்டுகிறது". போலந்து ஏடான Wprost 2003ல் அட்டைப்படமாக CDU அரசியல்வாதி Erika Steinbach (இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் பல பகுதிகளிலும் வெளியேறும் கட்டாயத்திற்குட்படுத்தப்பட்ட ஜேர்மனியர்களை பிரதிபலிப்பதாக கூறிக் கொள்ளும் கூட்டமைப்பு) நாஜி சீருடையில் அப்போதைய ஜேர்மனிய அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் தோள்களில் சென்றதாக காட்டப்பட்ட கேலிச்சித்திரத்திற்கு இது விடையாகும்.

இப்பிரச்சாரத்தின் இருபுறத்தாரும் பிற்போக்குத்தனமானவர்கள்

ஒரு நோய்வாப்பட்ட கம்யூனிச எதிர்ப்பு, கத்தோலிக்க தீவிரத்துடன் இணைந்துள்ள வகையிலான ஒரு போலந்து தேசிய வடிவமைப்பைத்தான் Kaczynskis கள் பிரதிபலிக்கின்றனர். தாங்கள் செல்வத்தை பெருக்க முடியாமல் குறுக்கே நின்ற ஸ்ராலினிச ஆட்சியை வெறுத்த மத்தியதர வர்க்கங்களின் பிரிவுகளின் சார்பில் அவர்கள் பேசுகின்றனர். இப்பொழுது ஒரு பக்கத்தில் ஜேர்மனி, மறுபுறம் ரஷ்யா என்ற நிலையில் அகப்பட்டுக் கொண்டுவிடுவோமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அமெரிக்காவின் மேலங்கியின் நுனியைப் பிடித்து தொங்குகின்றனர்; ஈராக்கிய போருக்கு ஆதரவு கொடுக்கின்றனர், அமெரிக்காவில் ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட் திட்டங்களுக்கு போலந்தை தளமாக கொடுக்கின்றனர்; அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவித் தொகைகளை ஏராளமாக பெறுகின்றனர்.

மேர்க்கெல் அரசாங்கம் ஒன்றுபட்ட ஜேர்மனியின் வல்லரசு விழைவுகளின் தொகுப்பாக, உலக அரங்கில் பீடு நடை போட விழைகிறது. பேர்லின், உச்சிமாநாட்டிற்கு முந்தைய நாட்களில் போலந்து அரசாங்கத்தை கடுமையான அழுத்தத்திற்கு உட்படுத்தியது. ஜேர்மனிய அதிபருடன் நெருங்கி ஒத்துழைத்து பல ஐரோப்பிய அரசாங்கங்களின் தலைவர்கள் Kaczynski சகோதரர்களை சந்தித்து அழுத்தம் மற்றும் கெஞ்சல் ஆகியவற்றின் கலவையைக் கொடுத்து அவர்களைப் பெற முற்பட்டனர். கடந்த சனியன்று மேர்க்கெல் போலந்து ஜனாதிபதியை பிராண்டன்பேர்க்கில் உள்ள Meseberg ல் வரவேற்றார்.

ஜேர்மனிக்கும் போலந்திற்கும் இடையே நடக்கும் ஆக்கிரோஷமான மோதல் ஐரோப்பாவை ஒரு முதலாளித்துவ முறையில் ஒன்றுபடுத்துவதின் இயலாத் தன்மையின் வெளிப்பாடு ஆகும். போலந்து தேசியவாதத்தின் குறுகிய நோக்கும், ஜேர்மனியின் வல்லரசு குறிக்கோள்களும் பெருகிவரும் தேசிய தன்முனைப்பு வாதம் என்னும் நாணயத்தின் இரு பக்கங்களே ஆகும். ஐரோப்பாவில் முன்னேற்றகரமான வளர்ச்சி என்பது கீழிருந்து ஆரம்பிப்பதன் மூலம்தான், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை கட்டியமைப்பதன் மூலம்தான் அடையப்பட முடியும்.