World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்Paris court defends racist provocateurs exploiting plight of homeless இனவெறி ஆத்திரமூட்டுபவர்கள் வீடற்றவர்களின் அவலநிலையை சுரண்டுவதை பாரிஸ் நீதிமன்றம் பாதுகாக்கின்றது By Antoine Lerougetel வெளிப்படையான இனவெறி அமைப்பான Solidarité des Français (SDF) ன் பாரிசில் வீடற்றோருக்கு, மத உணர்வு அல்லது பழக்க வழக்களினால் விலக்கப்பட்ட பன்றி சூப்பைத்தான் கொடுப்பேன் என்னும் உரிமையை பாரிஸ் நிர்வாக நீதிமன்றம் (Tribunal administratif de Paris) இருமுறை ஆதரித்துப் பேசியது. இனவெறி-எதிர்ப்பு அமைப்பான MRAP (இனவெறிக்கெதிரான மற்றும் மக்களுக்கிடையிலான நட்பிற்கான இயக்கம் -Mouvement contre le racisme et pour l'amitié des peuples) ஜனவரி 2ம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், முதல்நாள் மாலை பாரிஸ் 15வது வட்டாரத்தில் உள்ள மொன்ற்பரனாஸ் புகையிரத நிலையத்திற்கு அருகே SDF, வீடற்ற 30 மக்களுக்கு பன்றி சூப்பை கொடுத்ததாகவும், "இது பன்றிக் கொழுப்பை உட்கொள்ளாத பாரிசின் வீடற்ற யூதர்கள் அல்லது முஸ்லிம்களை வேண்டுமேன்றே ஒதுக்குவது போல் ஆகும்" என்ற தகவலை கொடுத்துள்ளது. SDF இன், சூப் வினியோகத்தை பாரிஸ் போலீஸ் தடைசெய்தது; ஆனால் அமைப்பு முறையீடு செய்ததின் பேரில் பாரிஸ் நிர்வாக நீதிமன்றம் டிசம்பர் 22 அன்று போலீஸ் ஆணையைத் தள்ளுபடி செய்தது; டிசம்பர் 28ம் தேதி போலீஸ் அதிகாரிகளின் மற்றும் ஒரு தடைக்கு எதிரான முறையீட்டிற்கும் ஆதரவை தெரிவித்தது.தீர்ப்பாயத்தின் நீதிபதி கொடுத்த அறிக்கையாவது: "இந்த இரண்டு தீர்ப்புகளும் பன்றி இறைச்சி உண்ணுவது மதத்தால் தடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிராக வெளிப்படையாக பாரபட்ச நோக்கங்களை கொண்டுள்ளன என்பதை உணர்கிறது." ஆயினும், "பொது அமைதிக்கு குந்தகம் விளையும் ஆபத்துதான் நடவடிக்கை மீது தடைவழங்க அதிகாரம் கொடுக்கிறது மற்றும் போலீஸ் தலைவரிடம் அத்தகைய ஆபத்து இருப்பதாக சான்று எதுவும் இல்லை" என்றும் வலியுறுத்தியுள்ளது. SDF, யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சேவைசெய்ய மறுத்திருந்தது என்ற சாட்சியம் ஏதும் இல்லாததால், அது அவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுகிறது என்று குற்றம்சாட்டப்பட முடியாது. பாரிசின் போலீஸ் பிரிவு இக்குழுவிற்கு 1,000 யூரோக்கள் செலவினமாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.Bloc Identitaire என்னும் ஒரு புதிய பாசிச அமைப்புடன் SDF தொடர்பு வைத்துள்ளது. 2002ல் இருந்து பாரிசிலும் ஸ்ட்ராஸ்போர்க்கிலும், நீசிலும் தெருவில் பன்றி சூப் கொடுக்கும் நடவடிக்கைகள் நடந்துவருகின்றன. இதேபோன்ற ஆத்திரமூட்டும் நிகழ்வுகள் பெல்ஜியத்திலும், சார்லெருவா மற்றும் பிரஸ்ஸல்ஸிலும் நடைபெற்றுள்ளன.தீவிர வலது Jean-Marie Le Pen உடைய தேசிய முன்னணி நகர மன்றங்கள், உதாரணமாக துலோன் பள்ளி சிற்றுண்டி நிலையம் போன்றவற்றின் கட்டுப்பாட்டை வென்ற பின்னர், பள்ளி உணவுவிடுதிகளும் முஸ்லிம்கள் மற்றும் யூதர்களுக்கு மாற்று ஏதும் கொடுக்காமல் பன்றி இறைச்சி வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. SDF சமையல் அறை அறிவிப்பு ஒன்றை கார்டியன் செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது: "எங்களுடன் உணவு அருந்துவதற்கு ஒரே நிபந்தனை; பன்றி இறைச்சி சாப்பிடவும்." அது மேலும் தொடர்கிறது: "கவனம்: சீஸ், இனிப்பு, காப்பி, உடைகள், சிற்றுண்டிகள் அனைத்தும் பன்றி சூப்புடன் இணைந்தவை; பன்றி சூப் இல்லையானால், உணவு அருந்திய பின் அருந்தும் பழவகை இல்லை; எங்கள் நடவடிக்கைக்கு ஒரே விதி: மற்றவர்களுக்கு முன்பு எங்களுடைய மக்கள்."உள்துறை மந்திரியும் UMP இன் ஜனாதிபதி வேட்பாளருமான நிக்கோலா சார்க்கோசி பிரான்சில் Le Conseil d'Etat இல் (அமெரிக்கத் தலைமை நீதிமன்றத்திற்கு இணையானது), பாரிஸ் நிர்வாக தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்களுக்கு எதிராக முறையீடு செய்தார். ஜனவரி 5ம் தேதி, Le Conseil d'Etat நீதிமன்றத்தின் முடிவுகளைத் தள்ளுபடி செய்தது. SDF சூப் வழங்குவதற்கு போலீஸ் தடை செய்தது, செயல்முறை மூலம் நடத்திக்காட்டும் உரிமைக்கு எதிரான "ஒரு தீவிர சட்டவிரோத செயற்பாடு", என்னும் நீதிமன்றக் கருத்தை அது மறுத்துவிட்டது. SDF நடவடிக்கை "பாரபட்சமானது" மற்றும் அது பொது ஒழுங்கீனம் பற்றிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது என்ற உள்துறை மந்திரியின் சட்டப் பிரதிநிதியின் வாதத்தை அது ஆதரித்தது. ஜனவரி 2ம் தேதி பாரிசின் மேயர் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த Bertrand Delanoë பாரிஸ் நிர்வாக தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கள் பற்றி வருத்தம் தெரிவித்த வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்: "ஜூன் 2004ல் இருந்து பாரிஸ் நகரக்குழு இந்த விநியோகம் தடைசெய்யப்பட வேண்டும், யூதர்களையும் முஸ்லிம்களையும் தெரிந்தே ஒதுக்கி வைக்கும் முறையில் உள்ளது என்று கோரி வாக்களித்துள்ளது, என்பதை மக்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன்." அறிக்கை தொடர்ந்து கூறியது: "தீவிர இனவெறி துர்நாற்றம் நிரம்பிய இந்த முயற்சிக்கு விடையிறுக்கும் வகையில், இந்த நகாராண்மைக் கழகம், அதைக் கண்டித்தல், மற்றும் பாரபட்சத்தின் பலவகைகள், ஒவ்வொன்றையும் எதிர்த்து நிற்றல், இனவெறி, செமிட்டிய எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்ப்பதும் நமது விருப்பம் என்று கூறுகிறது. 2007 ஜனாதிபதி தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருப்பதால், சார்க்கோசியும் டுலனே உம் பிரெஞ்சு அரசியல் அமைப்புமுறையும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு தப்பெண்த்திற்கு ஆதரவு கொடுத்திருந்தபோதிலும், தீவிர இனவெறிக் குழுக்களின் நடவடிக்கைகளை பொறுப்பது போல் காட்சியளிப்பதில் பதட்டம்கொண்டுள்ளனர். SDF குழுவுடைய பெரும் ஆத்திரமூட்டல் நடவடிக்கை தன்மையை நீதிபதி உணர இழிந்த முறையில் மறுத்துள்ளமை பிரெஞ்சு அரசாங்கம், நடைமுறையில் இனவெறிக் கருத்துக்கள் பரந்த அளவில் ஏற்கப்பட்டுள்ளதின் அளவைக் காட்டுகிறது; இதையொட்டி அத்தகைய குழுக்களின் நடவடிக்கைகள் நெறிப்படுத்தப்படுகின்றன.இத்தகைய பார்வைகள் தற்போதைய கோலிச நிர்வாகம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதில் நிறைவை அடைகின்றன. இவை இடது கட்சிகளின் மறைவான அல்லது வெளிப்படையான ஆதரவையும் கொண்டுள்ளன. * சோசலிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்துள்ள சட்டம் ஒன்று முஸ்லீம் தலை முக்காடு பள்ளி மாணவிகளால் அணியப்படுவதை தடை செய்கிறது;* மிகக் கடுமையான குடியேறுபவர்களுக்கு எதிரான சட்டங்கள் சோசலிஸ்ட் கட்சித் திட்டத்தில் அதிகமாக எதிரொலிக்கின்றன;* ஆவணங்கள் இல்லாத குடியேறியவர்களை தேடிப்பிடித்து வெளியேற்றுதல், கஷோன் என்னும் இடத்தில் உள்அமர்ந்து போராடிய வீடற்ற புலம்பெயர்ந்தோர்கள் மற்றும் ஆவணமற்றவர்களின் செயல்களை சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் துணையுடன் முறியடித்தது (See "France: Immigrant squatters pressured into accepting dispersal").*பிரெஞ்சு காலனித்துவத்தின் "ஆதாயம் பெறும்" தன்மையை காலனிமயமாக்கப்பட்டவர்களுக்கானது என்று அங்கீகரிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான "PS, PCF ஆகியவற்றின் ஆரம்ப ஆதரவு, பின்னர் எதிர்ப்புக்கள் ஏற்பட்டவுடன் ஓரளவு மாற்றியமைக்கப்பட்டது. SDF குழுவின் இனவெறி நடவடிக்கைகள் வறியவர்களை எதிர்கொண்டுள்ள மோசமான சமூக நிலைமைகள் மற்றும் வீடுகள் இல்லாதமை ஆகியவற்றால் அதிகமாகியுள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் பிரான்சில் வீடுகள் நெருக்கடி வளர்ச்சியுற்றுள்ளது; வலது, இடது தேசிய மற்றும் உள்ளூர் ஆட்சிகளின்கீழ் இது நிகழ்ந்து வருகிறது. இது குறிப்பாக பாரிஸ் பகுதியை பாதித்துள்ளது. நிலத்தின் விலையின் மகத்தான ஏற்றம் ஊகத்தால் ஏற்பட்டிருப்பது, போதுமான பொது வீடுகள் கட்டும் பணி இல்லாதது ஆகியவை மில்லியன் கணக்கான மக்களுக்கு கெளரவமான வீடுகள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன. இது மிகவும் தீவிரமாக குளிர்காலத்தில் உணரப்படுகிறது; குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் உணரப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் பாரிஸ் பகுதியின் தெருக்களில் உறங்கும் 100 பேராவது இறந்துவிடுகின்றனர் என்ற தீயணைக்கும் படையின் மதிப்பீடுகளை DAL (Right to Housing) என்னும் அறக்கட்டளை அறிவிக்கிறது. ஏழாம் அபே பியரின் அறக்கட்டளையின் 2002ம் ஆண்டு அறிக்கை (ஐந்து ஆண்டுகள் ஒரு பன்முக இடது ஆட்சி நடந்தபின்னரும்) பிரான்சில் 3 மில்லியன் மக்கள் போதிய வசதிகள் இல்லாத வீடுகளில் இருக்கின்றனர் என்றும்; 86,000 பேர் வீடற்றும், 200,000 மக்கள் நிரந்தரமாக ஹோட்டல்களிலும், தற்காலிக வீடுகளிலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும், அரை மில்லியன் மக்கள் தற்காலிக ஆபத்து நிறைந்த குடியிருப்புக்களிலும் 2 மில்லியன் எவ்வித சுகாதார வசதியற்ற இடங்களிலும் உள்ளனர் என்று கூறியுள்ளது. இக்குளிர்காலத்தில், Children of Quixote என்னும் அறக்கட்டளை குழுவின் ஆரம்ப முயற்சியை அடுத்து, கூடாரப் பாதுகாப்புக்கள் நகர மையங்கள் அனைத்திலும் நாய்க்குடை போல் தோன்றியுள்ளன. அவசரகால வசதி வீடற்றவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதையொட்டி கட்டிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளன. பிரான்சின் முழு அரசியல் நடைமுறையும், UMP யின் ஜனாதிபதி சிராக், நிக்கோலா சார்க்கோசியில் இருந்து மத்தியதர வர்க்க தீவிரவாத LCR வரை Children of Quixote ன் செயற்பாடு ஏற்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இவ்வாண்டு வரவிருப்பதை கருத்திற்கொண்டு அரசியல் ஆதாயம் தேட முயலுகின்றன. ஆனால் நிலத்தையும் வீடு கொடுத்தலையும் சொத்து ஊகவாணிகர்களிடம் இருந்து பறித்துக் கொண்டு மிகப் பெரிய முறையில் சமூக வீட்டுத் திட்டம் கொண்டுவரப்படுவதன் மூலந்தான் இந்த நெருக்கடியை தீர்க்க முடியும்; அதிவலதுசாரிகள் இந்த சமூகக் குறைபாடுகளை பயன்படுத்தும் வகையில் குடியேறுபவர்கள், சிறுபான்மையினரை பலிகடாக்களாக்குவதையும் கொண்டுள்ள திறனையும் நிறுத்த முடியும். |