World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

European press reacts negatively to Bush proposals on Iraq

ஐரோப்பிய பத்திரிகைகள் ஈராக் பற்றிய புஷ்ஷின் முன்மொழிவுகளுக்கு எதிர்மறையாக பதில்வினை

By Peter Schwarz
12 January 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கிற்கு கூடுதலாக 20,000 துருப்புக்களை அனுப்ப விரும்பும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் முன்மொழிவிற்கு ஐரோப்பிய பத்திரிகைகளால் காட்டப்படும் முதல் எதிர்ச்செயல், ஐயுறவாதத்திலிருந்து முற்றிலும் நிராகரிப்பது என்ற வகையில் உள்ளது.

பாரிசின் இடது-தாராள செய்தித்தாளான லிபரேஷன், புஷ்ஷை தோல்வியை பொருட்படுத்தாமல் இன்னும் ஊக்கத்துடன் எல்லாவற்றையும் இழக்கத் தயாராக தொடர்ந்து விளையாடும் பொக்கர் விளையாடுபவருடன் ஒப்பிட்டுள்ளது. "போரில் வெற்றி கொள்ளவும் முடியாது, தான் தோற்றுவிட்டேன் என்பதை ஒப்புக் கொள்ளவும் முடியாது" என்ற நிலையைத்தான் அமெரிக்க ஜனாதிபதி தன்னில் காண்கிறார் என்று கூறியுள்ளது. படைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது எவ்வித நலனையும் தராது என்று செய்தித்தாள் எழுதியுள்ளது. லிபரேஷன் கருத்தின்படி ஈராக்கில் இருந்து பின்வாங்குவது பேரழிவு கொடுக்கும் என்பது சரியே, ஆனால், "இன்னும் 20,000 அமெரிக்க துருப்புகள் இருந்தாலும் இதுவே பொருந்தும். இன்னும் சில மாதங்களில் அவ்வாறுதான் இருக்கும் அதன்பின் புஷ் கொடுத்துத்தீர்க்க வேண்டுமா அல்லது போகவேண்டுமா என்று மீண்டும் சங்கடத்தைத்தான் எதிர்கொள்ளுவார்."

இத்தாலிய செய்தித்தாளான La Repubblica, "நவம்பர் தேர்தல்களில் தோல்வியடைந்தாலும், மக்கள் கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளபோதும், ஒருதலைப்பட்ச வழியைத்தான் இன்னும் புஷ் தொடர்ந்து வருகிறார்." என்று எழுதியுள்ளது. தன்னுடைய விசுவாசத்திற்குரிய தளபதிகள் மற்றும் ஈராக் ஆய்வுக் குழு இரண்டின் ஆலோசனையையும் அவர் புறக்கணிக்க விரும்புகிறார். இவ்விதத்தில் நான்கு ஆண்டுகளில் 3,000 அமெரிக்கர்கள் உயிரிழந்தும், 357 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழிக்கப்பட்டும், "வெள்ளை மாளிகையின் 'புதிய போக்கு' நாட்டை நரகக்குழியாக்கியுள்ள ஈராக்கில் பழைய பெரும் குழப்பத்தை ஒத்திருக்கிறது".

"மரணத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது" என்ற தலைப்பில் ஜேர்மனிய வார ஏடான Die Zeit ஈராக்கிய மக்கள்மீது காழ்ப்பு உணர்வை புஷ் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. "தாங்கள் எதிர்கொண்டுள்ள கஷ்டங்களுக்கு ஈராக்கிய மக்களே பொறுப்பு என்றும் கூறுவதற்கில்லை. அவை அவர்களின்மீது சுமத்தப்பட்டன. அவர்களுடைய சொந்த உற்பத்திப் பொருளான சர்வாதிகார சதாம் ஹுசைன் கூட வெளிநாட்டில் இருந்து உதவி வராமல் இத்தனை நாட்கள் தாக்குப் பிடித்திருக்க முடியாது. நாட்டில் அல் கொய்தாவை கொண்டுவந்ததற்கு ஈராக்கியர்கள் பொறுப்பு அல்ல; ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை விளக்கிக்காட்டும் திறமையின்மை, ஊழல், பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றிற்கும் அவர்கள் பொறுப்பு அல்ல. ஆயினும் கூட, தாங்களே தங்களை எஜமானர்களை நியமித்துக் கொண்ட பாவங்களுக்காக இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்."

அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட வேணடும் என்று Die Zeit பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது. "சூழ்ச்சி செய்யும் அண்டை நாடுகள், குறுக்கீடு செய்யும் பெரிய சக்திகள் இவர்களுக்கு எதிராக அவர்களே ஒரு தன்னம்பிக்கை நிறைந்த நாடாக ஒன்றுபட்டு இணைந்து நின்றால்தான் ஈராக்கியர்களுடைய இந்தத் துன்பம் குறையும்." ஆனால் இந்த இலக்கை அடைவதற்கு அவர்களுக்கு உதவி தேவை, ஆனால் "அது அமெரிக்க துருப்புக்கள் மூலமோ, மற்ற ஆக்கிரமிப்புப் படையினர்கள் மூலமோ அல்ல."

Spiegel Online புஷ்ஷின் புதிய திட்டத்தை "அதிக இரத்தம், அதிக பணம், அதிக சந்தேகங்கள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் விவரித்துள்ளது. ஒரு நாள் முன்புதான், இந்த ஏடு முன்னாள் அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski கொடுத்த சுருக்கமான கருத்தை வெளியிட்டிருந்தது; அதில் Brzezinski ஈராக் படையெடுப்பை, "அமெரிக்க வரலாறறில் ஒருவேளை மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கை பேரழிவு எனக்கூறத் தகலாம்" என்று விளக்கியிருந்தார். அதே கட்டுரையில் Brzezinski ஈரானில் இராணுவ சாகசப் படையெடுப்பின் ஆபத்துக்கள் வாஷிங்டனால் மேற்கொள்ளப்பட்டால் விளையும் ஆபத்துக்கள் பற்றியும் எச்சரித்திருந்தார்.

புஷ்ஷின் படை அதிகரிப்பு முடிவைப் பற்றி பிரிட்டிஷ் கார்டியன் "தன்னுடைய நாடு இந்த நாடு மற்றும் மத்திய கிழக்கு ஆகியவற்றை பெரிய தீய கனா நிலைக்கு இழுத்துச் செல்லக்கூடிய பகடைக் காய்கள் ஆட்டத்தின் தவறான கடைசிப் பகடையாகும்" என்று குறிப்பிட்டுள்ளது. இன்னும் அதிக படைகள் அனுப்பப்பட வேண்டும் என்று விரும்பும் வகையில் திரு. புஷ், இடைத்தேர்தல்கள் கொடுத்த அறிவிப்பு, ஈராக்கிய ஆய்வுக் குழுவின் ஆலோசனை, காங்கிரசின் கருத்து, தன்னுடைய சொந்த உயர்மட்டத் தளபதிகளின் கருத்து, உலகின் பெரும்பான்மைக் கருத்து ஆகிய அனைத்தையும் புறக்கணித்துள்ளார்."

குடியரசுக் கட்சி செனட்டர் ஜோன் மக்கையின் மற்றும் வலதுசாரி ஜனநாயகக் கட்சியாளர் ஜோ லிபர்மன் இருவர் மட்டுமே இவருடைய திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளனர் என்று செய்தித் தாள் சுட்டிக்காட்டுகிறது.

கார்டியன் தொடர்ந்து எழுதியது: "பாஸ்ரா சமாதானத்திற்கு மீண்டு வருகிறது என்னும் கூற்று பாக்தாத்தில் ஒழுங்கு கொண்டுவரப்படமுடியும் என்ற திரு புஷ்ஷின் நம்பிக்கையை போல் உண்மைக்கு மாறானது." பிரதம மந்திரி டோனி பிளேயரைப் பற்றியும் குறிப்பிட்டு, கார்டியன் எழுதியது: "தாங்கள் தோற்றுவித்த பேரழிவின் சேதங்களால் சூழப்பட்ட நிலையில், இருவரும் இன்னும் அனைத்து உண்மைக்கும் புறம்பாக மீண்டும் எல்லாவற்றையும் சரிசெய்துவிட முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் அவர்கள் திட்டம் மடிந்து விட்டது. இன்னும் அதிக படைகள் அல்லது இன்னும் சில மாதங்கள் அதிகமாக என்றாலும் பழைய நிலைக்கு மீளாது."

கன்சர்வேடிவ் செய்தித்தாட்கள், புஷ்ஷிற்கு அரசியல் அளவில் நெருக்கமாக இருப்பவைகூட, அவருடைய திட்டம் நடைபெறக்கூடியதா என்றுதான் சந்தேகிக்கின்றனர். லண்டனை தளமாகக் கொண்ட Daily Telegraph எழுதுகிறது: "ஒப்புமையில் குறைவான மேலதிகப் படைகள் அனுப்பப்படுதல், நெளரி அல்-மாலிகியின் பலவீனமான அரசாங்கம் இரண்டும் அப்படிப்பட்ட நிலைமையை ஏற்படுத்திவிடுமா என்பது பற்றி ஆழ்ந்த ஐயங்கள்தான் உள்ளன." இதன் பின்னர் டெலிகிராப் அமெரிக்க ஜனாதிபதியின் "அரசியல் தைரியத்தை" பாராட்டியுள்ளது.

தன்னுடைய பங்கிற்கு ஆஸ்திரிய நாட்டின் Salzburger Nachrichten இதைப் பெரும் திகைப்பின் விளிம்பின் பிடியில் உள்ள ஒருவரின் தைரியத்தை ஒத்துத்தான் இது உள்ளது என்று காண்கிறது; அது கூறுவதாவது: "பல அங்கீகரிக்கப்பட்ட வல்லுநர்களின் பரிந்துரைகள், தன்னுடைய கட்சியிலேயே அறிவார்ந்த எதிர்ப்புக் குரல்கள், தன்னுடைய தளபதிகளின் அறிவுரைகள் ஆகியவற்றை முற்றிலும் புறக்கணிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அனைத்து எதிர்க்கும் கருத்துக்கள், அலங்காரச் சொற்றொடர்கள் இவற்றிற்கு எதிரான ஜனாதிபதி புஷ் நனவுடன் அமெரிக்க இராணுவப் படைகளின் திறமையை ஆபத்திற்கு உட்படுத்துகிறார்;: ஏற்கனவே அவை கூடுதலான தொய்வில் உள்ளன. இவருடைய முகாமில் பலரும் நடக்கும் கொடூரத்தைக் காண்பதில்லை, புஷ்ஷின் கொள்கையில் இருந்து தங்களை ஒதுக்கிக் கொள்ள முற்பட்டுள்ளது வியப்பு இல்லை."

பாரிசில் இருந்து பழமைவாத நாளேடான Figaro தெரிவிக்கிறது: "கடந்த ஆறு மாதங்களாக ஈராக் பற்றி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிடம் மூலோபாயம் ஏதும் இல்லை. அமெரிக்க மக்கள் மற்றும் காங்கிரசின் ஐயங்களை ஒட்டி அவர் போருக்குச் செல்லுகிறார். தன்னுடைய ஜனாதிபதி பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவருக்கு இது கடைசி வாய்ப்பாகும்."

இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் மொத்தமாக எடுத்துக் கொண்டால் விரைவில் நெருங்கிவரும் ஒரு பேரழிவுக் காட்சிதான் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அனைத்து பகுத்தறிவார்ந்த கருத்துக்கள், அரசியல் ஆலோசனை மற்றும் தன்னுடைய சொந்தத் தளபதிகளின் ஆலோசனைகள் ஆகியவற்றையும் புஷ் புறக்கணிக்க விரும்பி, ஈராக், மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவையும் உலகத்தின் பெரும்பகுதியையும் பேரழிவில் ஆழ்த்த தயார் செய்து வருகிறார்.

ஐரோப்பியச் செய்தி ஊடகத்தில் கூறப்பட்டுள்ள பல ஐயங்களும் அச்சங்களும் ஐரோப்பிய அரசாங்கங்களின் அதிகாரிகள், மந்திரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. ஏனெனில் ஐரோப்பாவின் முக்கிய நாளேடுகளின் ஆசிரியர் குழுக்களுக்கும் அவ்வமைப்புக்களுக்கும் இடைய மரபார்ந்த வகையில் நெருக்கமான பிணைப்புக்கள் உள்ளன. ஆயினும்கூட தூதரக ரீதியிலான எதிர்ச்செயல், அரசியல் எதிர்ச்செயல்கள் பற்றிக் கூற வேண்டாம், ஐரோப்பிய அரசியல் வட்டங்களில் இருந்து ஒரு எதிர்ப்புச் சொல் கூட வரவில்லை.

கடந்த வாரம் ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கல் வெள்ளை மாளிகையில் புஷ்ஷை சந்தித்து ஈராக், மத்திய கிழக்கில் உள்ள நிலைமை பற்றி நீண்ட நேரம் பேசினார். அவர்கள் பேச்சுக்களுக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி பற்றி புகழாரத்தைத்தான் அவர் சூட்டினார்.

ஈராக் போருக்கு முன்பு, போரில் பங்கு பெற மறுத்த ஐரோப்பிய அரசாங்கங்கள் தொடர்ச்சியான வகையில் எப்படியும் ஆற்றுவிக்க முயலுகின்றன என்ற குற்றச் சாட்டிற்கு உட்படுத்தப்பட்டன. இக்குற்றச் சாட்டு 1938ம் ஆண்டு மூனிச் உடன்படிக்கையுடன் தொடர்பு கொண்டுள்ளது; குறிப்பாக பிரிட்டிஷ் அரசாங்கம் செக்கோஸ்லோவாக்கியா ஆக்கிரோஷமாக இணைக்கப்பட்டது பற்றி ஹிட்லரை எதிர்க்காததற்குக் கூறப்பட்டது.

இப்பொழுது இந்த ஆற்றுவித்தல் என்ற குற்றச் சாட்டு ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு எதிராக கொண்டுவரப்படுவது முற்றிலும் பொருத்தமானதே ஆகும். ஐரோப்பிய அரசாங்கங்கள், குறிப்பாக ஜேர்மனிய அரசாங்கம், புஷ் அரசாங்கத்தால் தொடரப்படும் குற்றம் சார்ந்த இராணுவவாதத்திற்கு எதிராக மெளனம் சாதித்தல் என்பது --மற்றும் புஷ்ஷின் கொள்களைகளின் பேரழிவு விளைவுகளைக் காணாமல் வாஷிங்டனுடன் ஊடாடி நிற்பது என்பது-- மூனிச்சில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி நெவில் சாம்பர்லன் கொண்டிருந்த நிலைப்பாட்டுடன் முழு நியாயத்துடன் ஒப்பிடப்படலாம்.