World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :தென் அமெரிக்காபிuரீஷீ சிலீஊஸ்மீக்ஷ், விணீக்ஷீஜ் ணீஸீபீ tலீமீ "ஙிஷீறீவீஸ்ணீக்ஷீவீsனீ" ஷீயீ tலீமீ tஷ்மீஸீtஹ்-யீவீக்ஷீst நீமீஸீtuக்ஷீஹ் ஹ்யூகோ சாவேஸ், மார்க்ஸ் மற்றும் 21ம் நூற்றாண்டின் "பொலிவரிசம்" By Jair Antunes இலத்தீன் அமெரிக்காவின் பெரும் பகுதியில் இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பூர்ஷ்வா தேசிய ஜனரஞ்சகவாதம் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளதை காண்கிறது. சில விதங்களில் இவ்வளர்ச்சி முந்தைய நூற்றாண்டின் ஆர்ஜென்டீனிய ஜுவான் பெரோன், பிரேசிலின் கெடுலியோ வர்காஸ் மற்றும் மெக்சிகோவின் லாசரோ கார்டினஸ் போன்றவர்களிடம் இருந்த கூறுபாடுகளுடைய பொதுத் தன்மையை கொண்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் இப்பதவியை தக்க வைக்க நினைக்கும் ஜனாதிபதி பிuரீஷீ சிலீஊஸ்மீக்ஷ் வெனிஜூலாவிலும், பொலிவியாவில் Evo Morales ம், முன்னாள் சான்டினிஸ்டா தலைவர் Daniel Ortega நிக்கரகுவாவில் மீண்டும் ஜனாதிபதியாக வந்திருப்பதும், ஈக்வடோரில் Rafel Correa தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதும், அவர்கள் தேசியவாத வார்த்தைஜாலங்களுடனும் மற்றும் கடந்த இரு தசாப்தங்களாக இலத்தின் அமெரிக்க பொருளாதாரங்களில் இரத்தம்தோய்ந்த முறையில் இருந்த மிருகத்தனமான காலக்கட்டம் மாற்றப்படும் என்ற உறுதிமொழிகளுடன் இணைந்து வந்துள்ளன. சிலர் இலத்தீன் அமெரிக்கா இடதுபுறம் சென்றுகொண்டிருக்கறது, ஒரு புதிய வகையிலான சோசலிசத்தை நோக்கிச் செல்கிறது என்றும் கூட அறிவித்துள்ளனர்; ஆயினும்கூட இந்நாடுகள் ஒவ்வொன்றிலும் மூலதனத்தின் ஆதிக்கம் இறுக்கமாகத்தான் உள்ளது. குறிப்பாக, இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இலத்தீன் அமெரிக்காவை ஏகாதிபத்திய பிடியில் இருந்து காப்பாற்ற முற்பட்டிருப்பதாக கூறிய "விடுதலையாளர்" சிமோன் பொலிவார் கொண்டிருந்த பழைய சிலுவைப்போரின் தொடர்ச்சி என்றுதான் ஹ்யூகோ சாவேஸ் இந்த இயக்கத்தை சித்தரித்துக் காட்டுகிறார்; உண்மையில் சிமோன் பொலிவார் பல நூற்றாண்டுகள் கூடுதலாக ஏகாதிபத்திய ஆதிக்கம் இருப்பதற்குத்தான் தளத்தை அமைத்திருந்தார். பொலிவாருடைய கத்தியின் மாதிரிகளை Morales, Correa, Ortega ஆகியோருக்கு அவர்கள் பதவி ஏற்றபோது கொடுத்தபோது இந்த சிறப்பு முயற்சிகளை மேற்கோளிட்டிருந்தார். இலத்தீன் அமெரிக்க இடதுசாரிகளில் சில பிரிவினர் அக்கருத்தை பின்பற்றி இவ்வாட்சியாளர்கள் பொலிவாரின் தகுதியில் திகழ்வர் என்றும் வெனிஜூலாவின் ஜனாதிபதியின் முன்னோக்கான கண்டம் முழுவதும் படரும் "பொலிவேரியப் புரட்சியை" அவர்கள் தழுவியுள்ளதாகவும் போலித் தோற்றங்களை விதைப்பதில் மேதாவித்தனமடைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பொலிவார் என்பவர் யார், அவர் உண்மையாக விட்டுச் சென்ற மரபுரிமை என்ன? மார்க்சும் வீரம் செறிந்திராத சைமன் பொலிவார் பற்றிய வாழ்க்கைச் சரிதமும் "Bolivar y Ponte" என்ற தலைப்பில் 1858ல் எழுதிய கட்டுரையில் மார்க்ஸ், ஸ்பெயினுக்கு எதிரான போர்களில் "விடுதலையாளர்களின்" தீரச் செயல்கள் பற்றி எடுத்துக் கூறுகிறார். இதில் பொலிவார், உண்மை பிறழ்ந்தவர், கடமையில் இருந்து ஓடிப்போனவர், சதித்திட்டம் தீட்டியவர், பொய்பேசுபவர், கொள்ளையடிப்பவர், போன்றெல்லாம் சித்தரிக்கப்பட்டுள்ளது.இப்போராட்டங்களில் பொலிவாரால் ஆற்றப்பட்ட வர்க்கப் பங்கை பற்றி மார்க்ஸ் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டி, மரபாரந்த உள்ளூர் கிரியோல்லா (Criolla) பூர்ஷ்வாவின் தக்க பிரதிநிதியாக இருந்தார் என்று அவரை அம்பலப்படுத்துகின்றார். கொலம்பியாவை "விடுவித்த" பொலிவார் ஒய் போன்டே சிமோன், காரகாஸ்ஸில் பிறந்தார்... மான்டுவானா குடும்பங்கள் ஒன்றில் மகனாக பிறந்தார்; ஸ்பெயினின் மேலாதிக்க காலத்தில் அது வெனிசுவேலாவில் கிரியோல் பிரபுத்துவத்தைக் கொண்டிருந்தது." ஸ்பெயினுக்கு எதிரான போராட்டங்களின் முடிவில், தேசியப்படைகளின் வெற்றியை தொடர்ந்து இலத்தீன் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்த்தின் தவறான அடையாளமாக பொலிவார் மாற்றப்பட்டார் என்றும், "பொலிவாரிசம்" என்று இதையொட்டிக் கூறப்பட்ட இச்சொற்றொடர் அடிப்படையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய விடுதையை பிரகடனப்படுத்துவதாக அமைந்தது என்றும், இவ்விதத்தில் சமூக வர்க்கங்கள் அதாவது சமூகப் பொருளாதார கட்டமைப்புக்களில் மாறுதல்கள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் மார்க்ஸ் தெரிவிக்கிறார். மார்க்சின் கருத்தில், பொலிவாரின் தலைமையில் நடத்தப்பட்ட ஹிஸ்பானிய-அமெரிக்கப் "புரட்சி" என்பது அதிகபட்சமாக ஐரோப்பிய பூர்ஷ்வா புரட்சிகளின் மங்கிய பிரதிபலிப்பு போன்றதுதான் என்றும், வணிகத்திற்கான கூடுதலான சுதந்திரத்திற்கும் மற்றும் இலத்தீன் அமெரிக்க தொழிலாளர்களை சுரண்டுவதற்கான சிறப்பான நிலைமைகளை பெற்றுக்கொள்வதற்கு அப்பால் அது செல்லவில்லை என்றும் உள்ளது. பொலிவாரை மார்க்ஸ் பெருமைப்படுத்தியது இல்லை; ஏனெனில் மனித விடுதலைக்கான போராட்டத்திற்கான ஒரு நடவடிக்கைகூட பொலிவாரின் அரசியல்-இராணுவப் போக்கில் மார்க்ஸ் உணரவில்லை என்பதால் இத்தகைய கருத்து ஆகும். மாறாக, "பொலிவிய புரட்சி" என்று அழைக்கபட்டிருந்ததின் வர்க்க வரம்புகளை மார்க்ஸ் தெளிவாக அம்பலப்படுத்தினார். உதாரணமாக கறுப்பின அடிமைகளை பொலிவார் விடுவித்தது இந்த "வீரரின்" மனிதாபிமான மனச்சாட்சி என்று கூறப்பட்டதின் அடிப்படையில் இல்லாமல், சுதந்திரத்திற்கு பின்னர் உள்நாட்டு ஆளும் வர்க்கமான கிரியோல்லா பூர்ஷ்வாவிற்கு எதிராக ஒருவேளை மக்கள் புரட்சி ஒன்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தினால்தான். அத்தகைய மக்கள் எழுச்சியை தவிர்க்க விரும்பிய "விடுவிப்பாளர்" பொலிவார் தன்னுடைய முக்கிய தளபதியான சான்டன்டருக்கு ஏப்ரல் 20, 1820 இல் எழுதிக் கையொப்பமிட்ட கடிதத்தில் இதற்கான முதன்மையான தீர்வையும் கண்டுபிடித்திருந்தார். இக்கடிதத்தில் தேசிய இராணுவத்தில் சேர்ந்த கறுப்பினத்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் என்பது இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தேவையுடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக அவர்களுடைய "ஆபத்துதரக்கூடிய" எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற விருப்பத்தால் உந்துதல் பெற்றது என்று பொலிவார் விளக்கினார்; அதாவது வேறுவிதமாகக் கூறினால், கண்டம் முழுவதும் புரட்சியின் ''ஹைய்ட்டியமயமாக்கல்'' (Haitianization) என்ற அச்சத்தை தவிர்ப்பதற்காக. கறுப்பினத்தவரை இராணுவத்தில் சேர்த்ததின் நோக்கம் அவர்களை போரில் கொலைக்கு உட்படுத்துவதற்குத்தான். பொலிவார் பிரகடனப்படுத்தியது போல், "அரசியல் அமைப்பின் மூன்றாம் விதியின்படி, ஆயுதமேந்தும் பணிகளுக்கு உபயோகப்படக்கூடிய அடிமைகள் அனைவரும் இராணுவச் சேவைக்கு அனுப்பப்படுவர்." "நான் தவறாகக் கருதவில்லை என்றால், இது ஒன்றும் அடிமைகளுக்கு சுதந்திரம் அறிவித்தலும் அல்ல; சட்டம் கொடுக்கும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுவதுதான்... போர்க்களத்தில் அவர்கள் தங்கள் உரிமையை பெற்றுக்கொள்வது பயனுடையதாக இராதா, அவர்களுடைய ஆபத்து நிறைந்த எண்ணிக்கை ஒரு சக்திவாய்ந்த, முறையான வழிவகை மூலம் குறைக்கப்படுவது பயனுடையதாகாதா?" என எழுதுகின்றார். (ஙிஷீறீவீஸ்ணீக்ஷீ. ஙிமீறீறீஷீttஷீ & சிஷீக்ஷீக்ஷீமீணீ. ஷிஏஷீ றிணீuறீஷீ: றுtவீநீணீ, 1983, ஜீ. 50). "விடுதலையாளர்" பற்றி மார்க்சின் கட்டுரையில் மிகவும் கவனத்தை ஈர்க்கும் பகுதிகளில் ஒன்றில் கிளர்ச்சிப் படை எந்த அளவிற்கு இராணுவம் வெளி ஆதரவை, குறிப்பாக பிரிட்டனை நம்பியிருந்தது என்பதும், ஐரோப்பாவில் அப்பொழுது வெளிப்பட்டிருந்த கூலிப்போராளிகளை நம்பியிருந்தது என்பதும் ஆகும்; மார்க்சின் கருத்தின்படி இவை புதிய கிரானடா (தற்பொழுது வெனிஜூலா, கொலம்பியா மற்றும் ஈக்குவடார்) இல் நடைபெற்ற வெற்றிகரமான சுதந்திரப் போராட்டங்களில் தீர்மானகரமான பங்கைக் கொண்டிருந்தன, என மார்க்ஸ் எழுதுகிறார்: "[1818ல் இங்கிலாந்தில் இருந்து ஆற்றல் மிகுந்த ஆதரவு மனிதர்கள், கப்பல்கள், போர்த்தளவாடங்கள் என்ற வகையில் குவிந்தன; ஆங்கில, பிரெஞ்சு, ஜேர்மனி மற்றும் போலந்து அதிகாரிகள் Angostura விற்கு விரைந்தனர்... வெளிநாட்டுத் துருப்புக்கள், அதிகமாக ஆங்கிலேயர்கள் நிறைந்தது, புதிய கிரானடாவில் விதியை நிர்ணயித்தனர்... ஆகஸ்ட் 12ம் தேதி பொலிவார் வெற்றிகரமாக போகோடாவில் நுழைந்தார்." ஏற்கனவே பின்னடைவு பெற்றிருந்த ஸ்பெயின் பேரரசில் இருந்து இலத்தீன் அமெரிக்காவை பொலிவார் விடுவித்தார், ஆனால் எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த தொழில்துறை ஏகாதிபத்திய பிரிட்டன், பின்னர் அமெரிக்கா ஆகியவற்றின் தளைகளுள் அகப்பட்ட நிலைக்குத்தான் தள்ளப்பட்டது என்பதை நாம் அறியமுடிகிறது. இறுதியில் மார்க்ஸ் பொலிவார் பற்றி அதிக மதிப்பைக் கொண்டிருக்கவில்லை; நெப்போலியன் போனபார்ட்டின் கேலிச்சித்திரம் போல், அமெரிக்காவில் ஒரு புதிய போனபார்ட் போல இருந்ததாகத்தான் அவர்மீது மார்க்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். விந்தையின், விந்தையின் விந்தைதான் இது. பிரான்சில் மூன்றாம் நெப்போலியனுக்கு இழி ஒப்புமை போல் இருந்த ஹைய்டிய சதித்தலைவரும் சர்வாதிகாரியுமான Soulouque உடனும் மார்க்ஸ் பொலிவாரை ஒப்பிடுகிறார். மூன்றாம் நெப்போலியனே முதல் நெப்போலியனுக்கு ஒரு இழிஒப்புமை என்றுதான் மார்க்ஸ் கருதினார். Herr Vogt என்னும் புத்தகத்தில் அவர் எழுதியது: "மக்களுடைய கற்பனைத் தோற்றத்தில் உருவாகும் கட்டுக்கதைகளின் சக்தி, ஒவ்வொரு சகாப்தத்திலும் தங்களுடைய மாபெரும் மனிதர்களை கண்டுபிடிப்பதில்தான் நிரூபணம் ஆகியுள்ளது. இத்தகைய வகையில் மிகவும் குறிப்பிடத்தக்க நபர் ஐயத்திற்கு இடமின்றி சிமோன் பொலிவார் ஆவார்." 1858 பெப்ருவரி 2ம் தேதி ஏங்கல்சுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்: "மிகவும் கோழைத்தனம் நிறைந்து, இழிந்த அயோக்கியனை முதலாம் நெப்போலியன் என்று கூறுவது மிகவும் அபத்தமானது. பொலிவார் உண்மையில் Soulouque போன்றவர் ஆவார்." ஹ்யூகோ சாவேஸ்: இருபத்தியோராம் நூற்றாண்டின் பொலிவார் ஆயினும்கூட, கோழைத்தனமான, காட்டிக்கொடுக்கும், பொய்கூறும் குணங்களை உடைய பொலிவாரை மார்க்ஸ் அம்பலப்படுத்தியது இலத்தீன் அமெரிக்காவில் தங்களை "மார்க்சிஸ்ட் இடது" என்று அழைத்துக் கொள்ளுபவர்களின் பிரிவுகளை இந்தப் போலி வீரரை வணக்கத்திற்குரியவராக முற்றிலும் சித்தரிப்பதை கைவிடுவதற்கு போதுமானதாக இல்லை. மாறாக, இந்த இடதுகள் இலத்தீன் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு வழிகாட்டி போல் அவரை மாற்றியுள்ளது; இன்னும் சொல்லப்போனால், "பொலிவாரிசம்" என்று ஒன்றைக் கண்டுபிடித்து அது இலத்தீன் அமெரிக்காவில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் அடையாளம் என்றும் கற்பனையாக கூறுகிறது. இதில் இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இலத்தீன் அமெரிக்க போனபார்ட்டிச பொலிவாரிசம் தப்பிப் பிழைத்து எழுச்சி பெற்றுள்ளமை தெளிவான உதாரணமாக வெனிஜூலா ஜனாதிபதி தளபதி ஹ்யூகோ சாவேசின் உருவத்தில் பிரதிபலிக்கப்படுகிறது என்று நாம் குறிப்பிடுகின்றோம். இராணுவ அதிகாரி என்ற வாழ்க்கைப் போக்கை உடைய சாவேஸ், 1992ம் ஆண்டு தோல்வியுற்ற ஒரு இராணுவ சதிமுயற்சிக்கு தலைமை தாங்கி, அதன் விளைவாக சிறைவாசத்திற்குட்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 1998ம் ஆண்டு மக்களால் நேரடியான குடியரசின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்தி நாட்டின் பெயரையும் "பொலிவாரிய வெனிஜூலிய குடியரசு" என்று மாற்றினார். அப்பொழுதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சாவேஸ் தன்னுடைய அதிகாரங்களை பெருக்கிக் கொண்டு வருகிறார். 2005ம் ஆண்டு எதிர்க்கட்சிகள் தேர்தல் புறக்கணிப்பு நடத்தியதை அடுத்து அவர் தேசிய சட்டமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றார். இப்பொழுது 2006ம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக மக்கள் வாக்கில் 63 சதவிகிதத்தை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட அளவில், அவருடைய ஆதரவளார்கள் பாராளுமன்றத்தில் 100 சதவிகிதம் கட்டுப்பாடு கொண்டுள்ள நிலையிலும், ஜனவரி 31ம் தேதி "செயலாற்ற உதவும் சட்டம்" என்று அழைக்கப்பட்ட சட்டத்தை இயற்றியுள்ளார்; இது அவருக்கு அசாதாரண அதிகாரங்களை கொடுத்துள்ளது; அவற்றில் 18 மாதங்கள் ஆணைகள் பிறப்பிப்பதின் மூலம் ஆட்சி நடத்தும் அதிகாரமும் அடங்கியுள்ளது. தன்னுடைய அதிகாரத்தை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் வகையில் எத்தனை முறை வேண்டுமானாலும் மறு தேர்தலில் அவரை அனுமதிக்கக்கூடிய அரசியல் அமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். முதன் முறை 1998ல் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, சாவேஸ் மிகப் பெரும்பாலான வெனிஜூலிய மக்களை வதைத்துக் கொண்டிருந்த வறுமைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவதாக உறுதியளித்தார். ஆனால் அப்போது முதல் இன்று வரை, நாட்டில் ஒப்புமையில்தான் வறுமையின் தளங்கள் குறைந்துள்ளன; 1999 மக்கள் தொகையின்படி வறுமைவிகிதம் 49.9 சதவிகிதத்தில் இருந்து 37.1 சதவிகிதமாக 2005ல் குறைந்துவிட்டது; வறுமைக்கோட்டிற்கும் கீழ் என்று பிரிக்கப்பட்டவர்களுடைய விகிதம் 21.7ல் இருந்து 15.9 என்று ஆயிற்று. இந்த மாறுதல் கடந்த ஆண்டுகளில் சாவேசால் நடத்தப்படும் பொதுநலத் திட்டங்கள் செயல்படுவதால் ஏற்பட்டதே ஒழிய தொழிலாளர்களின் வருமானங்கள் உயர்ந்ததால் ஏற்படவில்லை. உண்மையில் 2005ல் வேலையின்மை விகிதம் 1999ல் சாவேஸ் பதவிக்கு வந்த நேரத்தைவிட அதிகரித்துள்ளது. (1999ல் 11.3 என்று இருந்தது 2005ல் 12.3 சதவிகிதம் என்றாயிற்று.) எப்படிப்பார்த்தாலும், நாட்டில் 53 சதவிகித மக்கள் வறுமை அல்லது தீவிர வறுமையின் பிடியில்தான் வாழ்கின்றனர். (இந்தப் புள்ளிவிவரங்கள் CEPAL எனப்படும் இலத்தீன் அமெரிக்கப் பொருளாதாரக் குழு அளித்தவற்றில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும்.) சாவேசின் பொதுநலத் திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கியமானது வெனிஜூலாவில் நிலத்தடி இயற்கை இருப்புக்களில் இருந்து, குறிப்பாக பெட்ரோலியத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதி ஆகும். இக்காரணத்தால் இவருடைய அரசாங்கம் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுடன் மீண்டும் ஒப்பந்தங்களை புதுப்பித்துக்கொள்ளும் வழிவகைகளை நடத்திவருகிறது; இந்த உடன்பாடுகளை "தேசியமயம்" என்றும் கூறிக்கொள்ளுகிறது. இந்த உடன்பாட்டின்படி, அரசாங்க உரிமையான PDVSA (Petroleos de Venezuela SA) என்னும் அமைப்பு நாட்டின் எண்ணெய் முயற்சிகளில் 51 சதவிகிதத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது; எஞ்சிய 49 சதவிகிதம் தனியார் மூலதனத்தின்கீழ் (பெரும்பாலும் வெளிநாட்டார்கள்) உள்ளது. பொலிவாரிச ஜனாதிபதியின் கூற்றின்படி வெனிஜூலிய மக்களின் மிகப்பெரிய விரோதி அமெரிக்க ஏகாதிபத்தியம் என்றால், இந்த விரோதி, அதே நேரத்தில் சாவேஸ் அரசாங்கத்தின் வணிகப் பங்காளியாகவும், வெனிஜூலிய பெட்ரோலை கூடுதலாக வாங்கும் நிலையிலும் உள்ளது. பெட்ரோலியத்தை சாவேஸ் நம்பியிருக்க வேண்டிய நிலை CEPAL 2005-2006க்காக கொடுத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, வெனிஜூலாவின் ஏற்றுமதிகளில் பாதிக்கும் மேலாக, குறிப்பாக கச்சாய் எண்ணெய் அமெரிக்க சந்தையைத்தான் சேர்ந்தடைகின்றன. இதே சதவிகிதம் இறக்குமதிகளுக்கும் பொருந்தும்; வெனிஜூலா வாங்கும் உற்பத்தி, நுகர் பொருட்களில் குறைந்தது பாதியாவது அமெரிக்க விரோதி/பங்காளியிடம் இருந்து வருவதாகும். உண்மையில், தற்போதைய வெனிஜூலாவின் பொருளாதார வளர்ச்சி உலகெங்கிலும் பரந்துள்ள பெட்ரோலிய பொருட்களுக்கான பாரிய தேவையை அடிப்படையாக கொண்டது ஆகும் (உலகின் ஐந்தாம் பெரும் உற்பத்தி நாடாக இது இத்துறையில் உள்ளது); இதில் அமெரிக்க மிகப் பெரிய அளவில் நுகரும் நாடாக உள்ளது. 1999ம் ஆண்டு சாவேசின் பதவிக்கால முதல் ஆண்டில், நாடு நாள் ஒன்றுக்கு 2.8 மில்லியன் பீப்பாய்களுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்தது. 2005ம் ஆண்டிலோ, PDVSA கொடுத்துள்ள விவரங்களின்படி அன்றாட உற்பத்தி 3.3 மில்லியன் பீப்பாய்கள் என்று உயர்ந்துள்ளன.சாவேஸின் போனபார்ட்டிசம் மிக அதிகமாக பெட்ரோலியம் அளிக்கும் செல்வத்தைத்தான் நம்பியுள்ளது என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. 1999ல் இருந்து 2005 வரையிலான காலத்தில் 20 சதவிகித உற்பத்தி அதிகம் என்பது, உலகச் சந்தையில் பீப்பாயின் விலை கணிசமாக உயர்ந்த நிலையில் ஏற்பட்டது ஆகும். 1999ம் ஆண்டு ஒரு பீப்பாய் அமெரிக்க $25க்கு விற்கப்பட்டது; 2005 ல் அது அமெரிக்க $55 ஐ எட்டியது; (உலகின் நான்காம் பெரும் உற்பத்தி செய்யும் நாடான) ஈரான் மீது அமெரிக்கத் தாக்குதல் வரக்கூடும் என்ற ஊகத்தில், 2006ம் ஆண்டு விலை பீப்பாய்க்கு அமெரிக்க $70 என்று ஆயிற்று; ஈரானிய புரட்சி 1979 நடந்தபோது எண்ணெய் விலை நெருக்கடிக் காலத்தில் இருந்த விலைக்கு நெருக்கமாக அது வந்தது. 2007 தொடக்கத்தில் இப்பொழுது புதிய அமெரிக்க போர்கள் பற்றிய வதந்திகளை அடுத்து எண்ணெய் விலை சீராக அமெரிக்க $50 என்று உள்ளது. (CEPAL) "பொலிவாரிச புரட்சி" என்று சாவேசால் அழைக்கப்படுவது முற்றிலும் நிலத்தடி எரிபொருட்களுக்கு உலகெங்கிலும் இருக்கும் அதிக தேவையினால் ஆதரிக்கப்படுகிறது; மத்திய கிழக்கில் அமெரிக்க போர்களால் இது அதிகமாகியுள்ளது. இவ்விதத்தில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் உண்மையில், வெனிஜூலிய தலைவர் சாவேஸ் கூறியுள்ளதுபோன்று மிகப் பெரிய விரோதி அல்ல; மாறாக புஷ்ஷின் இராணுவவாத கொள்கையினால் சாவேஸ் நாட்டின் பொருளாதாரத்திற்கு வியத்தகு இலாபங்களைக் கொண்டுவர முடிந்தது. இவருடைய அரசாங்கத்தின் சிறந்த நண்பர் என்று புஷ் கூறப்படாவிட்டாலும், குறைந்தது மிகப் பெரிய வணிகப் பங்காளர் என்றுகூறப்படவேண்டும்; ஏனெனில் இந்த முரண்பட்ட பங்காளித்தனம் இல்லாவிடில், சாவேஸ் அவருடைய பொதுநலத் திட்டங்களை செயல்படுத்தி நாட்டின் வறுமையை சில ஆண்டுகாலமாக குறைத்திருக்க முடியாது. இந்த திட்டங்கள் உண்மையான வெனிஜூலிய பொருளாதார வளர்ச்சிக்கு எந்த ஊக்கமும் கொடுக்கவில்லை என்றாலும், சாவேசின் போனபார்டிச ஆட்சிக்கு அடிப்படைத் தூணாக இருக்கிறது. சாவேஸ் பெட்ரோலியத்தின் மீதும் புஷ்ஷின் இராணுவக் கொள்கையின்மீது நம்பியிருக்க வேண்டிய நிலைபற்றி இன்னும் சிறப்புப் பார்வை வேண்டும் என்றால், வெனிஜூலிய பொருளாதாரத்தை இவர் பதவிக்கு வந்ததில் இருந்ததில் இருந்து இப்பொழுது வரை ஒப்பிட்டுக் காண வேண்டும். 1999, 2002 மற்றும் 2003 ம் ஆண்டுகளின் வெனிஜூலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகப் பெரிய அளவிற்கு 24 சதவிகித வீழ்ச்சியை கண்டது. 2004, 2005ம் ஆண்டுகளில் பெட்ரோலிய உற்பத்தி அதிகமானதினாலும், சர்வதேச விலைகள் சாதகமாக இருந்ததாலும், வெனிஜூலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 27.2 சதவிகிதம் என்னும் வியத்தகு வளர்ச்சியை கண்டது. இதே காலக்கட்டத்தில், நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, பெட்ரோலிய விலை பீப்பாய் ஒன்றிற்கு அமெரிக்க $25 ல் இருந்து அமெரிக்க $50 ஆக உயர்ந்தது. ஆனால், "பொலிவேரிய புரட்சியின்'' ஏழாண்டு காலப்போக்கில், பொருளாதார சுழற்சியின் ஏற்ற, தாழ்நிலைகளை ஒதுக்கிவைத்துப் பார்த்தால், வெனிஜூலிய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டு ஒன்றிற்கு சராசரி 1.5 என்ற விகிதத்தில்தான் உயர்ந்துள்ளது. 1999ம் ஆண்டு அரசாங்கம் பெட்ரோலியத்தில் இருந்து பெற்ற வருவாய்கள் 3,947,429 மில்லியன் பொலிவாரெஸ் என்பதை அடைந்தது. 2005ல் இதே வருவாய் 40,703,315 மில்லியன் பொலிவாரெஸ் ஆக உயர்ந்தது; இது உண்மையில் 1,000 சதவிகித வளர்ச்சிக்கு ஒப்பானதாகும். (சிணிறிகிலி, ணிstuபீவீஷீ ணிநீஷீஸீரனீவீநீஷீ 2005-2006). சாவேஸிற்கு ஏகாதிபத்தியத்துடன் முறித்துக் கொள்ள வேண்டும் என்றோ தன் நாட்டின் பொருளாதாரத்தின்மீது வங்கிகள் ஆதிக்கத்தை முறிக்க வேண்டும் என்ற விருப்பமோ கிடையாது. இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், வங்கியாளர்களுக்கு ஆண்டுதோறும் செலுத்தப்படும் பொதுக் கடன் கணக்குகளை பரிசீலித்தால் போதும். 1999ம் ஆண்டு சாவேஸ் நாட்டிற்கு கடன்கொடுத்தவர்களுக்கு மொத்தம் 1,647,017 மில்லியன் பொலிவாரெஸ்கள் கொடுத்தார்; 2003, 2004, 2005 ஆண்டுகளில் இவர் மகத்தான பணமான 23,017,422 மில்லியன் பொலிவாரெஸ்களை (கிட்டத்தட்ட 1,400 சதவிகித அதிகரிப்பு) என்று திருப்பிக் கொடுத்துள்ளார். சாவேஸ் ஏகாதிபத்திய, குட்டி முதலாளிகள் மற்றும் புதிய தேசிய கிரியோல் குட்டி முதலாளித்துவத்திற்கு கடன்பட்டுள்ளதை பற்றி தெளிவான கருத்து வேண்டும் என்றால், இவருடைய அரசாங்கத்திற்கு முன்பு இருந்த அரசாங்கங்கள் நிதிய கடன் கொடுத்தவர்களுக்கு கொடுத்த பணங்களை பார்த்தால் போதும். உதாரணத்திற்கு, 1990ல் இருந்து 1998 வரை வெனிஜூலா நாடு 4,863,869 மில்லியன் பொலிவாரெஸ்களை பொதுக்கடனுக்கு வட்டியாகவே கொடுத்தன. ஒன்பது ஆண்டுகாலம் கொடுக்கப்பட்ட தொகையான இந்த பணம், ஒரே ஆண்டு சாவேசால் பின்னர் கொடுக்கப்பட்டதற்கு சமமாகும். (CEPAL). சாவேசின் "இருபத்தியோராம் நூற்றாண்டு பொலிவேரிய சோசலிம்" உலக முதலாளித்துவத்தின் தேவைகளுக்கு முற்றிலும் ஒத்துப்போகும் சோசலிசம் ஆகும். ஊடகத்தால் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட "தேசியமயமாக்கப்பட்டவை" என்பது ஒருபுறம் இருக்க, சர்வதேச பெருநிறுவனங்கள், நாட்டில் சுதந்திரமாகத் தொடர்ந்து செயல்படுவதுடன் அவற்றின் இலாபங்களும் வெனிஜூலிய அரசாங்கத்தால் உத்தரவாதம் பெற்றுள்ளன. PDVSA என்னும் அரசாங்க எண்ணெய் நிறுவனத்தின் வலைத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், "வெனிஜூலாவில் நிறுவனங்கள் இருப்பதோ, தங்களுடைய முதலீடுகளுக்கு அவை பெறும் வருவாயோ வினாவிற்கு உட்படுத்தப்படுவதில்லை என்று தேசிய நிர்வாகக் குழு தெளிவாகக் கூறியுள்ளது; ஆனால் நாட்டின் சட்டங்கள், இறைமை ஆகியவற்றிற்கு அவை முழு மரியாதை கொடுத்து பங்கு பெற வேண்டும் என்பதுதான் உண்மையில் எதிர்பார்க்கப்படுகிறது." இராணுவத்தின் பலத்தையும், அவரது ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலை என கூறப்படுவதையும் தன்னுடைய தளமாகக் கொண்ட சிமோன் பொலிவார், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மூன்றாம் போனபார்ட்டின் மிகப் பெரிய அமெரிக்க கேலிச்சித்திரங்களில் ஒருவர்தான். இன்று, சமுதாயத்தை சோசலிச மாற்றுதல் என்ற ஒரு முன்னோக்கு ஊடாக தொழிலாள வர்க்கத்தின் மீது தன்னுடைய அரசியல் மற்றும் பொருளாதார பலத்தை கொண்டிராது, இராணுவத்தின் ஆதரவு மற்றும் உயர் எண்ணெய் விலையின் அடிப்படையில் சாத்தியமான ஒரு நலம்சார் கொள்கையின் அடிப்படையில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் சாவேஸ், பொலிவாரின் தற்கால போலியாகத்தான் தோன்றுகிறார். இன்னும் சிறப்பாக கூறவேண்டும் என்றால், போலியின் போலியாக, இருபத்தியோராம் நூற்றாண்டின் இலத்தீன் அமெரிக்க போனப்பார்ட்டாக தோன்றுகிறார். |