World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Oppose the occupation of Iraq! No to war against Iran!

International Students for Social Equality and SEP to hold emergency conference against war

ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்திடுக! ஈரானுக்கு எதிராகப் போர் வேண்டாம்!

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி போருக்கு எதிரான அவசர மாநாட்டை நடத்துகின்றன

12 February 2007

Back to screen version

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் (ISSE) மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) ஆகிய இண்டும் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், ஈரான்மீது ஒரு இராணுவத் தாக்குதலுக்கான தயாரிப்புக்களுக்கு எதிராகவும் ஒரு அவசர மாநாட்டை அறிவித்துள்ளன. இம்மாநாடு மார்ச் 31, ஏப்ரல் 1 தேதிதிகளில் MI, அன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.

இம்மாநாட்டின் நோக்கம் அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் ஏகாதிபத்திய போர் மற்றும் காலனித்துவத்திற்கு எதிராக உள்ள மாணவ இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை ஒரு பரந்த இயக்கத்தின்கீழ் திரட்டுவதற்காக ஒரு வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்தலும் செயல்படுத்துதலுமாகும்.

நிதிய, பெருநிறுவன அமைப்புமுறைக்கு எதிராகவும், அவை கட்டுப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கை ஒன்றுதான் ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்பை முடிவிற்கு கொண்டுவருவதுடன், ஈரானுக்கு எதிராக ஒரு போர் தொடக்கப்படுவதைத் தடுக்கவும் முடியும்.

நவம்பர் 2006 தேர்தல்கள் முடிந்து மூன்று மாத காலத்தில், ஜனநாயகக் கட்சி ஈராக்கிய ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவராது என்பது முற்றிலும் தெளிவாகிவிட்டது. அமெரிக்க மக்கள் கடந்த நவம்பர் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வாக்களித்தனர். மாறாக, போர் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

போரை முடிவிற்கு கொண்டுவருவதற்கு மட்டுமல்லாமல், ஈராக்கிற்கு இன்னும் கூடுதலாக பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை புஷ் அனுப்புவதை தடுப்பதற்கும், வெளிப்படையாக ஈரான்மீது போர் என்று விரிவாக தயாரிப்பதை தடை செய்வதற்கும் ஜனநாயகக் கட்சியினர் தாங்கள் இயலாதவர்கள் என்று நிரூபித்துள்ளனர். அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்திற்கு போர் பற்றிய "விவாதம்" என்பது ஒரு கேலிக் கூத்து ஆகும்; புஷ்ஷின் போர் விரிவாக்கத்திட்டத்தை கட்டுப்படுத்தாத அடக்கத்துடன் வார்த்தையிடப்பட்டு கோரப்பட்ட தீர்மனாத்தின் மீது கூட அமெரிக்க செனட் வாக்களிக்க இயலவில்லை.

புஷ் நிர்வாகத்துடனான ஜனநாயகக் கட்சியின் வேறுபாடுகள் தந்திரோபாய ரீதியான முறையில்தான் முற்றிலும் உள்ளன. ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்பு போரை தொடக்கி, அரைக் காலனித்துவ வகையில் ஈராக்கை ஆக்கிரமித்துள்ளதற்காக அவர்கள் புஷ்ஷை குறைகூறவில்லை; மாறாக இதை திறமையற்ற முறையில், வெற்றி இல்லாத வகையில் செய்ததற்காகத்தான் குறைகூறுகின்றனர். மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய நிலைப்பாட்டை காப்பதற்கு பல மாற்றீடு வழிவகைகளைத்தான் அவர்கள் கூறுகின்றனர் --ஈராக்கிய நகரங்களில் இருந்து அமெரிக்க படைகளை எடுத்து பாதுகாப்பான தளங்களில் இருத்துதல், அண்மை நாடுகளில் அவற்றை இயக்குதல், அல்லது ஈராக்கில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்புதல் போன்றவையே அவை.

ஈராக்கில் போரை உண்மையாக எதிர்ப்பவர்கள் மற்றும் அது ஈரானுக்கும் விரிவடைதலை எதிர்ப்பவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகள் அனுபவத்தில் இருந்து தொலைநோக்குடைய அரசியல் முடிவுகளை கட்டாயம் எடுக்க வேண்டும். ஜனநாயகக் கட்சியினருடன் முறித்துக் கொண்டு, ஏகாதிபத்திய போர், சமூக பிற்போக்குத்தனம் என்று இரு கட்சிகளும் கொண்டுள்ள திட்டத்தை எதிர்க்கும் ஒரு புதிய கட்சியை கட்டியமைக்க வேண்டிய நேரம் அமெரிக்காவில் வந்து விட்டது.

இப்புதிய அரசியல் இயக்கம் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் நலன்களை, ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் பெருநிறுவன உயரடுக்கிற்கு எதிராக காக்கும் திட்டத்தை தளமாக கொண்ட திட்டத்தில் அமைந்திருக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பு என்பது உலகின் முழு மக்களுக்கும் எதிரான ஒரு தீவிர அச்சுறுத்தலை கொடுத்துள்ளது; போருக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சர்வதேச அணிதிரளல் தேவைப்படுகிறது. உலகின் இருப்புக்கள் மக்களுடைய கரங்களில் ஒப்படைக்கப்பட வேண்டும்; பெருவணிகத்தின் நலன்களுக்காக கொள்ளை அடிப்பதற்கு பதிலாக, சுகாதார பாதுகாப்பு, கல்வி, வீடுகள், வறுமை போன்ற கடுமையான சமூக பிரச்சினைகளை துயர் தணியச்செய்வதை நோக்கி இயக்கப்பட வேண்டும்;

ISSE மற்றும் SEP இரண்டும் உலகெங்கிலும் இருக்கும் உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரின் அணிதிரளலுக்கான அழைப்பானது, போரையும் அதை தோற்றுவித்த முதலாளித்துவ அமைப்பையும் சவால் செய்யும் ஒரு சோசலிச மற்றும் மார்க்சிச முன்னோக்கை அடிப்படையாக கொண்டதாகும்.

மாநாட்டில் பங்கு பெறுவதற்கு இப்பொழுதே திட்டமிடுக:

மார்ச் 31, ஏப்ரல் 1, 2007

காலை 10ல் இருந்து பிற்பகல் 4 வரை

Angell Hall, Auditorium B
University of MichiganAnn Arbor,
Michigan, USA

மாநாட்டிற்கு பதிவு செய்ய, இன்னும் கூடுதல் தகவல்கள் பெற இங்கே அழுத்தவும்.

உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளி மாணவர்கள் தங்கள் வளாகங்களில் மாணவர்கள் குழுக்களை கட்டமைக்குமாறு, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு (ISSE) வலியுறுத்துகின்றது. சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பைக் கட்டுவதில் ஈடுபடுவதற்கு இங்கே அழுத்தவும்.

ஈராக்கிய போரைப் பற்றிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முழு அறிக்கையை படிக்க, "ஈராக்கில் யுத்தத்திற்கு எதிராக தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அனைத்துலக ரீதியில் அணிதிரட்டு"


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved