ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Nicolas Sarkozy goes to London
பிரான்ஸ்: நிக்கோலா சார்க்கோசி லண்டனுக்குச் செல்லுகிறார்
By Antoine Lerougetel
5 February 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
பிரான்சில் ஆளும் கோலிச
UMP யின் உத்தியோகபூர்வ ஜனாதிபதி வேட்பாளர் என நியமனமான
பின்னர் நிக்கோலா சார்க்கோசி முதன் முதலாக வெளிநாட்டிற்கு செல்வது லண்டன் பயணமாக ஆயிற்று. ஜனவரி
30ம் தேதி Marylebone
வேலைவாய்ப்பு மையத்திற்கு
(Agence Nationale pour l'Emploi) க்கு
சென்றிருந்த அவர், பிரதம மந்திரி டோனி பிளேயருடன் பகல் உணவு அருந்திய பின்னர்
UMP யின் லண்டன்
கிளை ஏற்பாடு செய்திருந்த தேர்தல் அணிவகுப்பில் உரையாற்றினார்; இக்கூட்டத்தில் 2,000 இங்கிலாந்து-வாழ்
பிரெஞ்சுக்காரர்கள் பங்கேற்றனர்.
பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களின் முதல் சுற்று ஏப்ரல் 22ம் தேதியன்று நடக்கவுள்ளது.
கார்டியன் ஏடு குறிப்பிட்டது:"ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் பிரச்சாரத்தை
ஆரம்பித்த பின்னர், தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்திற்கு லண்டனை திரு சார்கோசி தேர்ந்தெடுத்தமை, ஆழ்ந்த
குறியீடாகப் பார்க்கப்படுகிறது. தன்னை ஒரு சர்வதேச அரசியல் மூதறிஞர், திரு பிளேயரின் நண்பர், அமெரிக்க-பிரிட்டிஷ்
உடன்பாட்டிற்கு நெருக்கமானவர் என்று காட்டிக் கொள்ளுவதில் அவர் ஆவல் கொண்டுள்ளார்."
பிளேயருடன் உரையாடல்களுக்காக சார்க்கோசி குறைந்தது எட்டு முறைக்கும் குறைவில்லாத
நிகழ்வுகளில் சந்தித்ததாக கூறப்படுகிறது. அவர்களுடைய தனிப்பட்ட நட்புறவு "புளோரன்சில் ஒரு விடுமுறையில் உள்ள
அதேவேளை, தன்னுடைய மனைவி செசிலியாவுடன் கருத்து வேற்றுமை நீங்கியதை கொண்டாடுவதற்கான
சார்க்கோசியின் லண்டன் பயணம் உள்ளடங்கலான" உத்தியோகபூர்வமற்ற சந்திப்புக்களினால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
பிளேயரின் மனைவி பாரிசிற்குச் செல்லும்போது, உள்துறை மந்திரி சார்க்கோசி
தலைமை வகிக்கும் அமைச்சரகத்தில் அவர் விருந்துண்டிருக்கிறார்.
லண்டன் வருகையும், குறிப்பாக நாளின் இறுதியில் நடந்த அணிவகுப்பும்
சார்க்கோசியின் சமூகத்தளத்தின் தோற்றத்தைக் காட்டுகின்றன. பிரிட்டனில் இருக்கும் (300,000) பிரெஞ்சுப்
புலம் பெயர்ந்தோரிடையே கிட்டத்தட்ட 60,000 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் லண்டனிலும் வளம்
கொழிக்கும் தென்கிழக்கிலும் உள்ளனர். இவர்களில் பலரும் குறைந்த வரிகள், கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட
பொருளாதாரம், தொழிலாளர் சமூக உரிமைகள் அகற்றப்பட்டுவிட்ட நிலை, தடையற்ற முறையில் வணிகத்தில்
செல்வக்குவிப்பைக் காணக்கூடிய நிலை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவர்கள் ஆவர். ஜனவரி 30ம் தேதி
கார்டியன் தலையங்கம் கூறுவதாவது: "பிரிட்டனில் உள்ள புலம் பெயர்ந்த (பிரெஞ்சு) சமூகம், பிரான்சிற்கு
வெளியே இருக்கும் அதிக எண்ணிக்கையிலான சமூகங்களில் ஒன்று ஆகும். வியத்தகு வங்கியாளர்களும் வணிகர்களும்
அரசியல் மற்றும் வணிக முயற்சியில் செயலற்ற நிலையில் இருக்கும் தாய்நாட்டில் இருந்து ஓடிவந்தவர்கள், பிரெஞ்சு
அரசியலின் வடிவமைப்பை உடைப்பதாகக் கூறும் ஒரு மனிதனுக்கு இயல்பாகவே வாக்களிப்பர்."
டெய்லி டெலிகிராப்பின் கருத்தின்படி, "புதிதாக வந்துள்ளவர்களில் பலர்
Square Mile
ல் [நகரம், லண்டனின் வணிக மற்றும் நிதிநிறுவன மாவட்டம்] பணி
புரிகின்றனர். இங்கு போனஸ் என்று கூறினால் தங்கள் நாட்டில் அதே வேலைக்குக் கிடைப்பதைவிட போல ஐந்து
மடங்கு அதிகம் கிடைக்கும் என்று பொருளாகும்."
சார்க்கோசியின் கூட்டத்திற்கு வந்தவர்களை பற்றி கீழ்க்கண்ட விவரிப்பை
கார்டியன் கொடுத்தது: "நல்ல முறையில் இருக்கும் நூற்றுக்கணக்கான நிதிய மேலாளர்கள், பாரிசின்
வனப்பான புறநகர்ப்பகுதியில் இருந்து வந்துள்ள மாணவர்கள், ஓட்டல் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று
பிரிட்டனில் வாழ்பவர்கள் அனைவரும் Old
Billngsgate சந்தையில் இருக்கும் அரங்கில் குழுமினர்."
டெலிகிராப் கூறியது: "தன்னுடைய வேட்பாளர் மனுக்கும், தன்னுடைய புதிய
பிரான்ஸ் பற்றிய பார்வைக்கும் அவர்களுடைய ஆதரவு வேண்டும் என்று சார்க்கோசி கேட்டுக் கொண்டபோது,
2,000க்கும் மேற்பட்ட நேர்த்தியான, வளம் கொழித்த ஆதரவாளர்கள் "சார்கோ ஜனாதிபதி" என்று
முழங்கினர்"
21 வயதான
Raphaël Leclerc,
லண்டன் பொருளாதாரக் கலாசாலையில் அரசியல் கற்பவர் கார்டியனிடத்தில் தான் ஒரு சுறுசுறுப்பான
பாரிஸ் புறநகர் பகுதியில் வளர்ந்ததாகவும் "சலுகை பெற்றிருந்த, வலதுசாரிக் குடும்பத்தில்" தோன்றியவர்
என்றும் சார்கோசியுடைய மகன்களுக்கு எதிராக கால்பந்து ஆடியுள்ளதாகவும் தெரிவித்தார். வெளிநாட்டு வங்கி
ஒன்றில் வணிகராக இருக்கும் 29 வயதான Alex
Poitier, டெய்லி டெலிகிராப்பிடம் கூறியதாவது:
"ஊதியம் மற்றும் பொறுப்பை பொறுத்தவரையில், பிரான்சில் கிடைப்பதற்கும் இங்கும் ஒப்புமை இல்லை; ஆனால்
இந்த இடத்தில் உள்ள தத்துவச் சூழ்நிலை முழுவதையும் நான் பெரிதும் நேசிக்கிறேன்."
இந்தச் சமூக அடுக்குகளில் மேலாதிக்கம் செலுத்தும் இந்தத் தத்துவம் லண்டனை
தளமாக கொண்டிருக்கும் பிரெஞ்சு சிந்தனைக் குழாம்
Cercle d'outre-Manche யினால் ஜனவரி
30ம் தேதி பைனான்சியல் டைம்சில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கட்டுரையில் நன்கு
வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பணம் பண்ணும் இடம் என்ற வகையில் பிரிட்டன் பிரான்சை கடந்து சென்றுவிட்டது என்று
அது வலியுறுத்துகிறது.
"பிரிட்டன் 76 பில்லியன் யூரோக்கள் அதிகமாக உள்நாட்டு மொத்த உற்பத்தியை
தோற்றுவிக்கிறது.... இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பிரான்சில்
இருந்ததில் 75 சதவிகிதம்தான் இருந்தது."
இந்த வெற்றியின் இரகசியம் பற்றிப் பின்னர் கட்டுரை விளக்குகிறது: "மார்க்கிரெட்
தாட்சர் பல கடுமையான விதிகளை உடைத்து, மீண்டும் பொருளாதாரத்தில் சந்தை முறைகளை
அறிமுகப்படுத்தினார். டோனி பிளேயர் நிர்வாகத் தலைமையையும், கோர்டன் பிரெளன் நிதிக் கட்டுப்பாட்டையும்
கொண்டிருக்கும் நிலையில், சந்தை பல்வேறு பயன்களுக்கும் கிடைக்கக்கூடிய தன்மை கிட்டத்தட்ட பொருளாதாரத்தின்
அனைத்து அம்சங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது."
வேலைவயாப்பு மையத்திற்கு சார்க்கோசி வருகையின் முக்கியத்துவத்தை இங்கு நாம்
பார்க்கிறோம். வேலைப் பாதுகாப்பை அழிப்பது அலங்காரச் சொற்களில் "மக்களை வேலைக்கு அமர்த்துவது
எளிதாயிற்று" எனப் பாராட்டப்படுகிறது. வேலை மையம் அளிக்கும் எந்தக் குறைந்த ஊதிய வேலையையும் மக்கள்
ஏற்குமாறு கட்டாயப்படுத்துதல், இல்லாவிடில் ஏற்காதவர்களுடைய நலன்களை திரும்பப்பெறல் என்பது ஒப்புதலுடன்
இவ்வாறு விவரிக்கப்படுகிறது: "நலன்புரி ஆதாரங்கள் இலக்காகக் கொள்ளப்பட்டு நீண்டகால வேலையின்மையில்
இருப்பவர்கள், வயதான தொழிலாளர்கள், இளைஞர்கள், கணவரில்லாத மனைவியர் ஆகியோர் மீண்டும் வேலைக்கு
வரும் வகையில் கவர்ச்சியூட்டி இழுக்கும் கொள்கை பயன்படுத்தப்படுகிறது."
இந்த மக்களுக்காகத்தான் சார்க்கோசி பேசுகிறார்; பிரிட்டனில் தாட்சர் முதலில்
எதைச் செய்தாரோ அதை அவர்கள் இவர் பிரான்சில் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். தாட்சரிடத்திலும்,
பிளேயரிடத்திலும் அவர்கள் பாராட்டுவது, Cercle
d'outre-Manche குறிப்பிடுவது போல்,
"எதிர்ப்புக்கும் இடையே அவர்கள் உறுதியாக நின்றதுதான்."
சார்க்கோசியின் கருத்தின் அவநம்பிக்கைத்தன்மை, சமீபத்திய அறிவிப்புக்களில்
தொழிலாளர்களுடைய நலன்கைளை இதயத்தில் தாங்கிக் கொண்டு தொழிலுக்கு சிறந்த ஊதியத்தை ஒப்புக்
கொள்ளுவது போல் காட்டுவது என்பது ஜனவரி மாதம் 31ம் தேதி
Intrnational Herald Tribune
க்கு கொடுத்த பேட்டி ஒன்றில் வெளிப்பட்டுள்ளது: "தக்களுடைய உழைப்பிற்கு ஏற்ப மதிப்பும் ஊதியமும் மக்களுக்குக்
கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உழைப்பின் மதிப்பை மக்கள் உணரவேண்டும் என்று விரும்புகிறேன்.
கடினமாக உழைக்கும் மக்களைப் பற்றித்தான் நான் அக்கறை கொண்டுள்ளேன்; அவர்களிடையே பேச
விரும்புகிறேன்.
மக்கள் நன்கு உழைக்கும்போது அவர்களுக்கு அதற்கான தக்க ஊதியம்
கொடுக்கப்பட வேண்டும். எனவேதான் நான் பரம்பரைச் சொத்துரிமைச் சட்டங்கள் இரத்துசெய்யப்பட வேண்டும்
என்று விரும்புகிறேன்; ஏனெனில் ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்தால் அவருடைய
உழைப்பின் பலன்களை அவருடைய குழந்தைகளுக்கு கொடுப்பது கட்டாயம் சாத்தியமானதாகும்... உண்மையாகவே
எவரேனும் கடினமாக உழைத்தால் அவர்கள் ஏழைகளாக இருப்பார்கள் என்பதை நான் ஏற்கவில்லை."
சார்க்கோசியின் செய்தி உழைக்கும் மக்களுக்காக அல்ல; மேலே உயரக்கூடிய,
நிதிய உயரடுக்கினருக்காகத்தான்; அவர்கள்தான் தங்களுடைய குழந்தைகளுக்காக கணிசமான செல்வத்தை விட்டுச்
செல்ல முடியும். கடின உழைப்பிற்கு வெகுமதி என்று அவர் விடுக்கும் அழைப்பு உண்மையில் செல்வந்தர்கள் இன்னும்
செல்வக் கொழிப்போடு வளரவேண்டும் என்பதை அனுமதிப்பதுதான். பிளேயர் தகுதியுடையோருக்கு எனக்
கூறுவதுபோல், இதேபோன்ற போலித்தனமான கூற்றுக்களைத்தான் அவர் பயன்படுத்தி, சமூக முன்னேற்றம் மற்றும்
செல்வக் குவிப்பிற்கான வாய்ப்பில் சமத்துவம் என்று கூறப்படும் ஒன்றை பெரிய அளவிலான சமூக சமத்துவம்
என்பதற்கான அழைப்புக்களுக்கு எதிராக முன்வைத்தார், இது "கடினமான உழைப்பாளர்களுக்கு" எதுவும்
நிறுத்திவைக்கப்படுதலை கண்டிக்கின்றது மற்றும் சோம்பேறிகள் மற்றும் வாழ்க்கையை நடத்துவதற்குத்
திறமையற்றவர்களுக்கு வெகுமதி போன்றவற்றை கண்டிக்கின்றது.
சமூக சமத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுபவர்கள் காலத்தோடு
இயைந்து இருக்கவில்லை என்று சார்க்கோசி அறிவிக்கிறார்: "என்னுடைய கருத்துக்கள் இன்றைய உலகின்
கருத்துக்கள்: அதாவது, வேலைக்கு மதிப்பு, சமூக உயர்வு, சம வாய்ப்புக்கள் என்பவை. சமத்துவம் என்பது
எனக்குப் பிடிக்காதது என்பதை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். தேவையில்லாமல் மக்களுக்கு உதவுவதை நான்
விரும்பவில்லை. சமத்துவத்தின் நலன்களைக் குறைக்க நான் விரும்பவில்லை. அனைவரும் மேல்நோக்கிச்
செல்லவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்."
கட்டுப்பாட்டுகளை அகற்றுதல், தனியார்மயமாக்குதல் ஆகியவற்றை இவர் ஆதரிப்பது
பற்றி கேட்கப்பட்டபோது, சார்க்கோசி வினா எழுப்பியவருக்கு உறுதி கொடுக்கிறார்: "நான் ஒன்றும்
அரசாங்கத்தின் விரோதி அல்ல. ஒரு பெரிய நாட்டிற்கு அரசாங்கம் தேவை; ஆனால் எளிமையாகக் கூறுவேன்.
நான் முதலாளித்துவ முறையில் நம்பிக்கை உடையவன். சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
போட்டியை நான் நம்புகிறேன்."
சமீபத்திய கருத்துக்கணிப்பில் அவருடைய கொள்கைகள், செயற்பாடுகள் பற்றி
நாட்டில் 51 சதவிகிதத்தினர் ஏன் அச்சமுற்றுள்ளதாகக் கூறினர் என்று கேட்கப்படும்பொழுது, அவர் கருத்துக்
கணிப்பில் வெற்றியை பெற்றுள்ளது பற்றி தற்பெருமை பேசினார் மற்றும் சமூக, அரசியல் எதிர்ப்புக்களை
எதிர்கொள்வதற்கான அவரது தயார்நிலையை காரணமாக கூறினார்.
பாரிசிலும் மற்ற முக்கிய நகரங்களிலும் 27 நாட்கள் கலகத்தைத் தான் எவ்வாறு
எதிர்கொண்டார் என்பது பற்றிப் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்: "அதிர்ஷ்டவசமாக நான் கவலைப்பட்டேன்.
கவலைப்படாமல் இருந்திருந்தால் விஷயங்கள் எப்படிப் போயிருக்கும்.. நீங்கள் வந்து கூறுகிறீர்கள்: "திரு
சார்க்கோசி, நீங்கள் ஏன் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறீர்கள்? ஏன் மக்கள் கவலைப்படுகின்றனர்? மக்கள்
அச்சமுறாமல் இருப்பதற்கு என்ன செய்யப்பட வேண்டும்? நான் முதலிடத்தில் இருப்பதால், உண்மையெனக் கொள்ளும்
பாங்கில், அங்கு அச்சத்தை போக்கும்தன்மை இருந்தாக வேண்டும், குறைந்த பட்சம் அதுதான் சிலரது உணர்தலாகும்."
"நான் ஒன்றும் சிந்தனைப் போக்குகள், கொள்கைகள் பற்றிப் பயப்படவில்லை.
சமீபத்தியப் புது உணர்வுகளுக்கும் நான் ஒன்றும் தாழ்ந்து போகமாட்டேன். கடினமான நிலைமைகளை
எதிர்கொள்ளுவதில் நான் பயந்து போகவில்லை." என்று பெருமிதத்துடன் அவர் கூறினார்.
ஒரு வலுவான மனிதர், கடுமையாக நடந்து கொள்ளுபவர் என்ற அவரது
பாத்திரத்தின் அடிப்படையில்தான் சார்க்கோசி ஜனாதிபதி பதவிக்கு தன்னுடைய உயரத்தை அமைத்துக்
கொண்டுள்ளார்.
முன்னாள் கோலிச பிரதமர் அலன் யூப்பே 1995ல் பொதுத்துறை பணியாளர்களின்
ஓய்வூதிய உரிமைகளில் பெரும் வெட்டுக்களைச் செய்ய முயற்சித்த பொழுது அவர் காட்டிய தைரியத்திற்கு
சார்க்கோசி தன்னுடைய பாராட்டுதலைத் தெரிவித்தார். பெரும்பாலன பிரெஞ்சு மக்களின் ஆதரவு பெற்ற மிகப்
பெரிய வேலைநிறுத்த இயக்கம் யூப்பே ஐ பின்வாங்கச் செய்து பின்னர் அவருடைய அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு
வழிவகுத்தது. "வாக்காளர்களை திரட்டும் முயற்சியில்... அவர் மறந்துவிட்டார்" என்பதுதான் யூப்பே இன் தவறு
என்று சார்க்கோசி கூறினார்.
மிக ஆடம்பரமான முறையில் தன்னுடைய தன்னம்பிக்கையை சார்க்கோசி
வெளிப்படுத்துவது அதன் இயல்பான வலிமையினாலோ அல்லது அவருடைய உயரடுக்குக் கொள்கைகள் புகழ்
அடைந்துள்ளன என்பதனாலோ அல்ல; அவர் கருத்துக் கணிப்பில் முன்னணியில் உள்ளார்; ஆனால் வாக்களித்தவர்களில்
38 சதவிகிதத்தனர்தான் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். உத்தியோகபூர்வ இடது கட்சிகளான சோசலிஸ்ட்
கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி, தொழிற்சங்கங்கள், "அதிஇடது" என்று கூறப்படுபவற்றில் அவற்றை
அண்டியிருப்பவை, தீவிரப்போக்குடைய இயக்கங்கள்
(லிசிஸிஸிமீஸ்ஷீறீutவீஷீஸீணீக்ஷீஹ் சிஷீனீனீuஸீவீst லிமீணீரீuமீ, லிளி கீஷீக்ஷீளீமீக்ஷீs ஷிtக்ஷீuரீரீறீமீ, tலீமீ றிஜிtலீமீ
கீஷீக்ஷீளீமீக்ஷீs றிணீக்ஷீtஹ், யிஷீsங ஙிஷீஸ்ங,
பூகோளமயமாக்கல்-எதிர்ப்புச் சங்கங்கள் போன்றவை) பயனுடைய வகையில் எதிர்ப்பை காட்டாததின் விளைவுதான்
இது.
ஒரு சமீபத்தியக் கருத்துக் கணிப்பில் பிரெஞ்சு மக்களில் 70 சதவிகித்திற்கும்
அதிகமானவர்கள் சமூக நலனுக்கு முக்கியமான நிபந்தனையாக தடையற்ற சந்தை இருக்க வேண்டும் என்று
நம்பவில்லை. மே 2005ன் போது ஐரோப்பிய அரசியல் அமைப்பு பற்றிய பொதுவாக்கெடுப்பில் அது
நிராகரிக்கப்பட்டதில், 2003ம் ஆண்டு ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பியக்கங்களில், 2006ல்
தொழிலாளர் மற்றும் சமூக உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கள் தகர்க்கப்பட்டதற்கு எதிரான
எதிர்ப்பியக்கங்களிலும் வெளிப்படுத்தப்பட்டது.
UMP செய்தித் தொடர்பாளரான
Luc Chatel
குறிப்பிட்டுள்ளார்: "தன்னைத் தானே எப்படித் திறனாய்ந்து கொள்ளுவது, நவீனப்படுத்திக் கொள்வது,
வருங்காலத்தை பற்றிக் கருதுவது என்பதற்கானவற்றில் பிரிட்டன் நல்ல முன்னுதாரண நாடு ஆகும். எனவே பிரிட்டிஷ்
பிரதம மந்திரியுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுவதில் சார்க்கோசி நிறைய அறிந்து கொண்டுள்ளார்."
பிளேயரிடம் இருந்து சார்க்கோசி தெரிந்து கொள்ள விரும்புவதெல்லாம்
போலித்தனமான முற்போக்கான வகையில் மற்றும் தாராளவாத வெளித்தோற்றத்தில், வாக்காளர்கள் விரும்பும்
வகையில் கவர்ச்சியுள்ளதாக்கி, உரிமைகள், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை தகர்க்கும் வகையில் ஒரு சர்வாதிகார
அரசால் சுமத்தப்படும் ஒரு கொள்கையை எப்படித் தயாரிப்பது என்பதுதான். இவருடைய கோட்பாடான "நான்
போட்டியை நம்புகிறேன்" என்பது "முதலாளித்துவத்தின் ஒரு அற வடிவம்" என்று
IHT ஐ இவர்
விளக்குவதை, போதுமான வாக்காளர்கள் நம்பும் வகையில் எப்படிச் செய்வது என்பது பற்றிய பிளேயரி
ஆலோசனைதான்.
தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், வேலைநிறுத்தம் மற்றும் மறியல் உரிமைகள் குறைக்கப்படும்,
தற்பொழுது சிறிய நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்த கூடியதான, முதல் வேலை ஒப்பந்தத்திற்கு (CPE
- Contrat première embauche) ஒப்பான, முன்பு
2006 வசந்த காலத்தில் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் வெகுஜன இயக்கத்தை அடுத்து திரும்பப்பெற
வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான,
புதிய வேலை ஒப்பந்தம்
(CNE - Contrat de Nouvelle Embauche)
அனைத்து நிறுவனங்களுக்கும் கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழியை கொடுத்துள்ளார்.
பொய்கூறியதற்காகவும், தேசிய மற்றும் உலக மக்களின் மகத்தான எதிர்ப்பிற்கு
இடையே ஈராக்கில் சட்ட விரோதப் படையெடுப்பு, காலனித்துவ வகையிலான ஆக்கிரமிப்பு நடத்தப்படுவதற்காக
ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷுடன் சதி செய்ததை நியாயப்படுத்தியது ஆகியவற்றிற்காக பிரிட்டனில் இன்று மிகவும்
வெறுக்கப்படும் அரசியல்வாதியாக பிளேயர் உள்ளார். அவருடைய சமூகக் கொள்கைகளுக்காகவும் அவர் வெறுக்கப்படுகிறார்.
இத்தகைய அவமதிப்பிற்குட்பட்ட மனிதனை சார்க்கோசி சந்தித்தது, சாதாரண
பிரெஞ்சு குடிமக்களுடைய நலன்களில் இருந்து இவர் அன்னியப்பட்டதன் மற்றும் ஒரு அம்சமாகும்.
உலகின் ஆதாரங்களுக்கும் சந்தைகளுக்கும் விரைவான போட்டி இருக்கும் இன்றைய
சூழ்நிலையில், தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதில் பிரிட்டன் கொண்டுள்ள விகிதத்துடன் தாங்களும் சேர்ந்து
கொள்ள வேண்டும் என்று விரும்பும் பிரெஞ்சு பெருவணிக அபிலாசைகளுக்கு தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள்
மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நேரடி மோதல் என்பது தேவைப்படும். சார்க்கோசியும் சோசலிஸ்ட் கட்சியின்
ஜனாதிபதி வேட்பாளர் செகோலென் ரோயாலும் பிரெஞ்சு மக்களுக்கு முன்பு, தேர்வு விருப்பத்திற்கு வைக்கப்பட்டுள்ளனர்;
இவர்கள் அத்தகைய தாக்குதலைத்தான் பிரதிபலிப்பவர்கள். டோனி பிளேயரை இதுகாறும் சந்தித்ததில்லை
என்றாலும் அவர் கருத்துக்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ள செகோலென் ரோயால் சார்பாக ஜனவரி 30 அன்று பேசிய
Julien Dray
கூறினார்: "தேர்தலுக்கு முன்பு அவரைப் பார்க்காமல் இருப்பார் என்று கூறுவதற்கில்லை."
See Also:
நிக்கோலா சார்க்கோசிக்கு
முடிசூட்டுவிழா
ஜனாதிபதி வேட்பாளராக பிரெஞ்சு உள்துறை மந்திரி அறிவிக்கப்படுகிறார் |