World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

A political bombshell from Zbigniew Brzezinski

Ex-national security adviser warns that Bush is seeking a pretext to attack Iran

Zbigniew Brezezinski இடம் இருந்து ஓர் அரசியர் வெடிகுண்டு

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஈரானை தாக்குவதற்கு புஷ் ஒரு போலிக்காரணத்தை நாடுகிறார் என்று எச்சரிக்கிறார்

By Barry Grey in Washington DC
2 February 2007

Back to screen version

செனட் வெளியுறவுத் தொடர்பு குழுவின் முன் வியாழனன்று சாட்சியம் அளித்த கார்ட்டர் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான Zbigniew Brzezinski, ஈராக் போர் தொடர்பாக கடுமையான விமர்சனத்தை வெளியிட்டதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மத்திய கிழக்கிலும், சர்வதேச அளவிலும் கணிப்பிடமுடியாத விளைவுகளுடன், ஈரானுடன் தவிர்க்க முடியாமல் போருக்கு இட்டுச்செல்லும் கொள்கையைத்தான் புஷ் நிர்வாகம் கொண்டுள்ளது என்று எச்சரித்தார்.

மார்ச் 2003 படையெடுப்பை எதிர்த்த மற்றும் போர் ஒரு மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைத் தவறு என்றும் பகிரங்கமாக கண்டித்திருந்த பிரிஜேஜின்ஸ்கி தன்னுடைய கருத்துக்களை ஆரம்பித்து பேசுகையில் இது "வரலாற்ற்று ரீதியான, மூலோபாய மற்றும் தார்மீக ரீதியிலான பேரழிவாகும்" என்று பண்பிட்டதன்மூலம் ஈராக்கில் "தேர்வு கொண்ட போர்" என்று அவர் அழைத்தது பற்றி அவரது குறிப்பைத் தொடங்கினார்" என்று விவரித்தார்.

"மிகத் தவறான முன்கருத்துக்களின் அடிப்படையில் துவக்கப்பட்ட இது, அமெரிக்காவின் பூகோள சட்டரீதியான தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறது. இதையொட்டிய சாதாரண குடிமக்கள் உயிரிழப்பும், இன்னும் சில பெரும் தவறுகளும் அமெரிக்காவின் அறநெறி நிலைப்பாடுகளுக்கு தீமையை ஏற்படுத்தியுள்ளன. மனிச்சிய (புராதன ஈரானிய மத) கொள்கைகள் மற்றும் ஏகாதிபத்திய இறுமாப்பு ஆகியவற்றால் உந்தப்பட்ட நிலையில் இது பிராந்திய ஸ்திரமின்மையை அதிகரித்துக் கொண்டு வருகிறது" என்று அவர் தொடர்ந்து கூறினார்.

தீவிர இஸ்லாமிற்கு எதிராக "ஒரு தீர்க்கமான கருத்தியல் போராட்டம்" தேவை என்ற புஷ்ஷின் கருத்தை எள்ளி நகையாடிய பிரிஜேஜின்ஸ்கி அக்கருத்து "எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் கிளர்ச்சியூட்டலாகும்" என்றார்; மேலும் "நீடித்த மற்றும் செயலுக்கு வரக்கூடிய விரிவடையும் போரை", நியாயப்படுத்தும் வகையில் "ஒரு கற்பனையான வரலாற்று விவரிப்பு" என்றும் அதனை அழைத்தார்.

"ஏற்கனவே அமெரிக்கா இப்பகுதியில், ஈரான் மையக்கருவாக உள்ள பரந்த அளவிலான இஸ்லாமிய அச்சுறுத்தலுடன் போரிட்டு வருகிறது என்று வாதிடுவது உண்மையாக்கப்படுவதற்கு, தானே காரணமாக அமைவதை முன்கூட்டிக் கணித்துக் கூறலை முன்னேற்றுவதற்கு ஒப்பானது ஆகும்" என்று அவர் கூறினார்.

"ஈரானுடன் ஓர் இராணுவ மோதல் வரக்கூடிய காட்சி" பற்றிய அவருடைய விவரிப்பு மிகவும் அதிர்ச்சியையும், உளைச்சலையும் கொடுப்பதாக இருந்தது. அது "குறிக்கப்பட்ட மட்டக்குறியை ஈராக் அடையத் தவறுதல், இதன் பின்னர் அத்தகைய தவறுதலுக்கு ஈரான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுக்கள், பின்னர் ஈராக்கில் ஒரு ஆத்திரமூட்டலோ அல்லது அமெரிக்காவில் ஒரு பயங்கரவாதத் தாக்குதலோ நடந்தால் ஈரான்மீது குற்றம் சாட்டுவது, இறுதியில் ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் என பரந்த மற்றும் ஆழ்ந்த புதைசேறுவரை தனியாக அமெரிக்காவை மூழ்கடிக்கும், ஈரானுக்கு எதிரான 'பாதுகாப்பு' அமெரிக்க இராணுவ நடவடிக்கையை எடுப்பதில் உச்சக்கட்டத்தை அடைவதை" சம்பந்தப்படுத்தும், என்று அவர் கருத்துரைத்தார்.

இது எந்த பிழைக்கும் இடமில்லாத வகையில் அமெரிக்க காங்கிரசிற்கு ஒர் எச்சரிக்கையாகும்; அத்தகைய இராணுவ நடவடிக்கையின் "பாதுகாப்பிற்கான" தன்மை என்று மேற்கோளிட்டு கூறிய வகையில், புஷ் நிர்வாகம் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு போலிக் காரணத்தை தேடிவருகிறது என்றுதான் பொருளைத் தரும். மிகவும் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் பிரிஜேஜின்ஸ்கி வெள்ளை மாளிகை ஒர் ஆத்திரமூட்டலை உற்பத்தி செய்யும் திறனுடையது என்று கிட்டத்தட்ட கூற வந்தார் எனலாம்; அமெரிக்காவிற்குள்ளேயான பயங்கரவாதத் தாக்குதலின் சாத்தியம் கூட போருக்கு ஒரு காரணமாக அமையலாம் என்றும் கூறினார்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை அமைப்புமுறையில் மிக உயர்ந்த மட்டத்தில் பல தசாப்தங்கள் அனுபவத்தை கொண்ட பிரிஜேஜின்ஸ்கி, இராணுவம் மற்றும் உளவுத்துறையின் மிக உயர்மட்டங்களுடன் நெருக்கமான பிணைப்புக்களை கொண்டவர், இத்தகைய எச்சரிக்கையை அமெரிக்க செனட்டின் திறந்த விசாரணையின்போது கொடுக்கிறார் என்பது மகத்தான, ஆழ்ந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

தான் எங்கு, எதற்காக பேசுகிறோம் என்பதை பிரிஜேஜின்ஸ்கி நன்கு அறிவார்; ஏனெனில் ஜிம்மி கார்ட்டரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோது இவரே பல ஆத்திரமூட்டல்களை தொடக்கியவர். அந்த முறையில், வெளியிடப்பட்டுள்ள எழுத்துக்களில் அவர் ஒப்புக் கொண்ட அளவில், ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ஆதரவு ஆட்சியை கவிழ்க்க, இஸ்லாமிய அடிப்படைவாத முஜாஹுத்தீனை திரட்டி, அந்நாட்டின் ஓர் அழிவுதரக்கூடிய போரில் சோவியத் ஒன்றியத்தையும் இழுப்பதற்கு 1970களின் இறுதியில் ஒரு இரகசிய திட்டத்தை தீட்டியிருந்தார்.

இவருடைய ஆரம்ப குறிப்புகளுக்கு பின்னர் செனட் உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடையிறுக்கையில் பிரிஜேஜின்ஸ்கி ஆத்திரமூட்டல் பற்றிய தன்னுடைய எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

நியூயோர்க் டைம்ஸில் மார்ச் 27, 2006 வந்த அறிக்கை ஒன்றைப் பற்றி செனட்டர்களின் கவனத்தை அவர் ஈர்த்தார்; அதில் "ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரி பிளேயருக்கும் இடையே போருக்கு இரண்டு மாதங்கள் முன்பு தனிச் சந்திப்பு நடந்தது என்றும், அக்கூட்டத்தில் பங்கேற்ற பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரால் தயாரிக்கப்பட்ட பொதுநிலை அறிக்கையின் அடிப்படையிலேயே அது இருந்தது" என்றும் வெளிவந்திருந்தது. இக்கட்டுரையின்படி "ஜனாதிபதி ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் ஒருவேளை இருக்காது என்ற கவலையை தெரிவித்ததாகவும், நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு மாற்று அடிப்படை பற்றி பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கருதியதாகவும் மேற்கோளிடப்பட்டுள்ளது." என்று தகவல் இருந்தது.

அவர் தொடர்ந்து கூறினார்: "இந்தக் குறிப்பு என்ன கூறியதாக நியூ யோர்க் டைம்ஸ் தெரிவிக்கிறது என்பதை படிக்கிறேன்: 'ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் ஈராக்கினுள் விதிக்கும்புறம்பான ஆயுதங்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுகின்றனர். திட்டமிட்டுள்ள படையெடுப்பிற்கு ஒருவேளை அத்தகைய கண்டுபிடிப்புக்கள் இல்லாமற் போகக்கூடும் என்ற நிலையில், திரு. புஷ் ஒரு மோதலை தூண்டுவதற்கான வேறு சில வழிகளை பற்றிப் பேசினார்.'

"இது எப்படி வேறு சில விதங்களில் செய்யப்படலாம் என்பது பற்றி அவர் விளக்கினார். நான் அவற்றைப் பற்றிக்கூற விரும்பவில்லை... வழிவகைகள் பெரும் பரபரப்பு அளிக்கக்கூடியவையாக இருந்தன, குறைந்தபட்சம் ஒன்று அப்படி இருந்தது.

"அகற்றப்பட வேண்டிய, சமாதானப்படுத்தப்படவியலாத விரோதியைக் கையாளுகின்றோம் என்று ஒருவர் கருத்துக் கொண்டிருந்தால், அந்நடவடிக்கையின் போக்கு ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில் மனப்பூர்வமாக முறையிடுவதாக தோன்றலாம். ஆனால் ஈராக்கில் நிலைமை தொடர்ந்து மோசமாகும்போல் இருக்கிறது என்றால், ஏதேனும் ஒருவிதத்தில் ஈரான் இதில் தொடர்பு உடையது அல்லது பொறுப்புக் கொண்டுள்ளது என்று உணரப்பட்டால், அல்லது இதனால் நலன்கள் பெறக்கூடிய திறன் உடையது என்று கொண்டாலும், அத்தகைய தீயவற்றைச் செய்வதற்கு தூண்டுதல் எழக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன்."

மற்றொரு கட்டத்தில் புஷ் நிர்வாகத்தின் சதி வழிவகைகள் பற்றிக் கூறுகையில், பிரிஜேஜென்ஸ்கி கிட்டத்தட்ட அது ஒரு சதிக்கூட்டம் என்றே விவரித்தார். "முக்கிய மூலோபாய முடிவுகள் மிகக் குறுகிய தனிநபர்கள் உடைய வட்டங்களுள் செய்யப்படுவதாகத் தெரிகிறது என்ற உண்மையால் நான் திகைப்படைகிறேன்; ஒரு சிலரே, கைக்குள் அடங்குவர்; ஒருவேளை என்னுடைய கைகளில் இருக்கும் விரல்களின் எண்ணிக்கையை விட அதிகமிருக்கமாட்டார்கள். இந்த தனிநபர்கள்தான், ஒருவரைத்தவிர, அனைவரும் போருக்குச் செல்ல வேண்டும் என்ற முதல் முடிவை எடுப்பர், போருக்குச் செல்ல வேண்டும் என்று முதலில் கூறிய நியாயப்படுத்தல்களை பயன்படுத்திக் கொள்வர்."

பிரிஜேஜென்ஸ்கி இன் கடும் எச்சரிக்கை பற்றி கூடியிருந்த செனட் உறுப்பினர்களில் எவரும் சிந்திக்கவில்லை. குறிப்பாக ஜனநாயகக் கட்சியினர், தொய்ந்த, மெத்தனமான, புஷ் நிர்வாகத்தின் போர்ச் சதிகளுக்கு இணங்கும் வகையில், சாட்சி கொடுத்த ஆத்திரமூட்டல் பற்றிய ஆபத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.

சாட்சியம் முடிந்த பின்னர், இந்த நிருபர், நேரடியாக பிரிஜேஜென்ஸ்கியை, ஆத்திரமூட்டலுக்கு ஆதாரம் ஒருவேளை அமெரிக்க அரசாங்கமாக கூட இருக்குமோ என்று அவர் தெரிவிப்பதாகக் கேட்டார். முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் விடையை தவிர்க்க முயன்றார்.

கீழ்க்கண்டவகையில் உரையாடல் நிகழ்ந்தது.

வினா: டாக்டர் பிரிஜேஜென்ஸ்கி அவர்களே, இத்தகைய ஆத்திரமூட்டல்தன்மை செயலை எவர் செய்திருக்கக் கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

விடை: எனக்குத் தெரியாது. நான் குறிப்பிட்டபடி, இத்தகைய செயல்கள் கணிக்கப்பட்டிருக்க முடியாது. தன்னெழுச்சியாயும் வெளிவந்திருக்க முடியும்.

வினா: அமெரிக்க அரசாங்கத்திற்குள்ளேயே இது தோன்றியிருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்க முற்படுகிறீர்களா?

விடை: நான் கூறுவது முழு நிலைமையும் கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும்; அனைத்துவித கணக்கீடுகளும் கண்டுபிடிப்பதற்கு மிகவும் கடினமான ஒரு சூழ்நிலையை தோற்றுவிக்க முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved