World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Violence escalates against students and teachers in Iraq

ஈராக்கில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராக வன்முறை தீவிரமடைகிறது

By Sandy English
31 January 2007

Use this version to print | Send this link by email | Email the author

மூன்று சட்டப் பேராசிரியர்கள் மற்றும் ஒரு மாணவர் திங்களன்று கடத்தப்பட்டதும், ஞாயிறன்று ஒரு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஐந்து மாணவிகள் இறந்ததும், அமெரிக்கப் படையெடுப்பால் ஈராக்கிய கல்விமுறை சீரழிந்துள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

இந்த இரண்டு நிகழ்வுகளும் பாக்தாத் பகுதியில் நடைபெற்றன. சட்டப் பேராசிரியர்கள், Nahrain Law School ஆசிரியர்கள் Adnan al-Abid, Amar al-Qaisi மற்றும் Abdul-Mutaleb al-Hashimi ஆவர். டாக்டர் அல் ஹஷிமியின் மகனும் அப்பள்ளி மாணவனுமான ஒருவர் கடத்தப்பட்டார். நான்கு பேரும் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுகையில் பிடித்துச்செல்லப்பட்டனர்.

12 வயதில் இருந்து 16 வயது வரை இருந்த ஐந்து பெண்கள் அவர்களுடைய Kholoud Secondary School ஒரு கள பீரங்கிச்சூட்டிற்கு உட்பட்டபோது காலை 11 மணிக்கு இறந்து போயினர். மற்றும் 20 மாணவிகள் தாக்குதலின்போது காயமுற்றனர்.

நியூ யோர்க் டைம்சின் கருத்தின்படி, ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் கடந்த மாதத்தில் இலக்கிற்கு ஆளாயின. பாக்தாத்தில் Gharbiya Secondary School ல் பத்து மாணவர்கள் கொல்லப்பட்டனர். டிசம்பர் தொடக்கத்தில் பாக்தாத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் பகுதியில் உள்ள பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கொல்லப்படுவர் என்று அச்சுறுத்தப்பட்ட சுவரொட்டிகள் வெளிவந்ததை அடுத்து, அது மூடப்பட்டது.

ஜனவரி 17ம் தேதி மிகக் கொடூரமான நிகழ்வு ஏற்பட்டது; அப்பொழுது குண்டுகள் பாக்தாத்தின் புகழ்மிக்க Mustansiriya பல்கலைக்கழகத்தில் வெடித்து, 70 மாணவர்களுக்கும் மேலானவர்களை கொன்றது; இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ஆவர்; இன்னும் பலர் காயமுற்றனர். மாணவர்கள் வீடுகளுக்குச் செல்வதற்காக வாகனங்கள் முன்பு வரிசையில் நிற்கும்போது இந்த வெடிப்புக்கள் ஏற்பட்டன.

இந்தத் தாக்குதல்கள் எதிர்பார்க்கப்பட்டிருந்தன. செய்தியாளர் Nir Rosen, IraqSlogger ல் டிசம்பர் மாதம் எழுதியுள்ளபடி, சுன்னி அடிப்படைவாதக் குழுவான Ansar Al Sunna பல இடங்களிலும் சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகளை அண்டைப்பகுதியில் ஒட்டி, சுன்னி மாணவர்கள் பல்கலைக்கழகங்களை புறக்கணிக்க வேண்டும் என்று கோரியிருந்தது. அதிலும் குறிப்பாக Mustansiriya பல்கலைக்கழகம் இலக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதற்குப் பதில் கொடுக்கும் வகையில் ஒரு பதாகை Mustansiriya பல்கலைக் கழகத்தில் "நாங்கள் பயங்கரவாதத்திற்கு சரணடையமாட்டோம், இதுதான் எங்கள் விடை" என்று ஒட்டி வைக்கப்பட்டது.

ஈராக்கிய பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் நிறுவனம் Mustansiriya பல்கலைக் கழகத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இதற்கு முன்பு ஈராக்கிய அரசாங்கத்திற்கு எழுதியிருந்தனர்; அதை "கொடூரம், பயங்கரம் நிரம்பிய வளாகம்" என்றும் அழைத்திருந்தனர்.

Mustansiriya பல்கலைக்கழகத்தில் நடந்த படுகொலை மாணவர்கள் எதிர்ப்புக்களை தூண்டிவிட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 மாணவர்கள் பாக்தாத்தின் University of Tenchnology யில் இருந்து உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்து ஆசிரியர், மாணவர்களுக்கு பாதுகாப்புக் கோரினர்.

மாணவர்களில் ஒருவரான Yasmin Mohammad, அல்ஜசீராவுக்கு ஜனவரி 17ம் தேதி குண்டுவெடிப்பைப் பற்றிக் கூறியதாவது: "இந்தத் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட பிரிவை இலக்கு கொண்டது அல்ல. பல்கலைக்கழகத்தில் ஷியைட்டுக்கள், சுன்னிக்கள், குர்துகள், கிறிஸ்துவர்கள் என்று பலரும் உள்ளனர். இது ஈராக் தொடர்புடைய ஒவ்வொன்றின் மீதுமான போர் ஆகும்."

ஜனவரி 23ம் தேதி Mustansiriya பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக இருக்கும் Diya al-Mequoter தலையிலும் மார்பிலும் சுடப்பட்டார். இவர் மக்களிடைய புகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றை நடத்தியிருந்தார்; அதில் ஏழை மக்களுக்கு சிறு வணிகம் நடத்துவதற்கு நிதியம் கொடுக்கப்பட்டது. மெக்கோடெர் ஒரு நுகர்வோர் சங்கத்தின் தலைவரும் ஆவார்; அது வணிக நிறுவனத்தினர் விலை உயர்த்துவதற்கு எதிராகப் போரிட்டு வந்தது.

300க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2003ம் ஆண்டு அமெரிக்க படையெடுப்பிற்கு பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஈராக்கின் தொழில் வல்லுனர்களில் 40 சதவிகிதத்தினர் நாட்டை விட்டு அகன்றுவிட்டனர்; இதில் 3,000 பேராசிரியர்களும் அடங்குவர். நூற்றுக்கணக்கான மற்றவர்கள் ஒப்புமையில் பாதுகாப்பு இருக்கும் ஈராக்கிய குர்திஸ்தானுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று ஈராக்கின் உயர் கல்வி நிலையங்களில் 84 சதவிகிதம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த அமெரிக்கப் படையெடுப்பிற்கு பின்னர் "அழிக்கப்பட்டுள்ளன, சேதமுற்றன அல்லது கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன" என்று தெரிவிக்கிறது.

1982ம் ஆண்டு UNESCO, ஈராக்கிற்கு கல்வி அறியாமையை அகற்றியதற்காக ஒரு பரிசை கொடுத்தது. அந்த நேரத்தில் ஈராக்கில் மகளிருக்கான கல்வித் தேர்ச்சி மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாக இருந்தது 2004ம் ஆண்டு UNESCO வயது வந்தோரிடையே கல்விவிகிதம் --அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஓராண்டிற்கு பின்னர், 12 ஆண்டுகள் அமெரிக்க ஆதரவுடன் நடந்த பொருளாதாரத் தடைகளுக்கும் பின்னர்-- 74 சதவிகிதம் என்று இருந்தது. ஜனவரி 2007ல் நிகழ்த்தப்பெற்ற UNESCO கணக்கெடுப்பின்படி கிராமப்புறங்களில் இருக்கும் மகளிரில் 37 சதவிகிதத்தினர்தான் இப்பொழுது கல்வியறிவு உடையவர்கள் என்று தெரிகிறது.

இதே கணக்கெடுப்பின்படி, தக்க வயதில் உள்ள பையன்களில் 42 சதவிகிதத்தினரும், மகளீரில் 30 சதவிகிதத்தினரும்தான் பள்ளிக்குச் செல்லுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன; ஆனால் மாணவர்கள் பெரும்பாலும் ஓடிவிட்டனர். பஸ்ரா, மோசூல், தியலா ஆகிய இடங்களில் பல பள்ளிகள் காலியாக உள்ளன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்கின்றனர்.

ஈராக்கின் கலாச்சார உள்கட்டுமானத்தின் தகர்ப்பு ஏப்ரல் 2003 தேசிய அருங்காட்சியகம் கொள்ளையடிக்கப்பட்டதில் ஆரம்பமாகியது. அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் இந்த பேரழிவு நடப்பதற்கு அனுமதித்தனர். அப்பொழுதில் இருந்து பள்ளிகள் தகர்ப்பு, ஆக்கிரமிப்பு ஆகியவை (30 சதவிகிதப் பள்ளிகள் ரமடியில் அமெரிக்கப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன) தொடர்வதுடன், குறுகிய பிரிவுவாத வெறுப்பை புஷ் நிர்வாகம் ஊக்குவிப்பதாலும் ஈராக்கின் கல்விமுறை கிட்டத்தட்ட முழுச் சரிவு என்ற நிலையை அடைந்து விட்டது.

இதுவும் திட்டமிட்டுத்தான் நடத்தப்பட்டிருக்கும். கல்வி, அறிவு ஆகியவற்றை ஒரு மக்கள் இழக்கிறார்கள் என்றால், அந்த அளவிற்கு அவர்களை அரைக் காலனிய ஆதிக்கத்திற்கு உட்படுத்துவது எளிதாகும். இவ்விதத்தில் பள்ளி என்பது மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு அரிதாகப் போய்விட்டது. ஆசிரியர்களும், பேராசிரியர்களும் சுடப்படுகின்றனர். நூலகங்கள் மூடப்படுகின்றன; செய்தித்தாள் அலுவலகங்கள் குண்டுவீசப்படுகின்றன.