WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக்
Australian voters throw Howard government out of office
ஆஸ்திரேலிய வாக்காளர்கள் ஹோவார்டு அரசாங்கத்தை வெளியேற்றினார்கள்
By Patrick O'Connor
26 November 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
ஆஸ்திரேலிய தாராளவாத-தேசிய கூட்டணி அரசாங்கம் சனிக்கிழமை நடந்த பொது
தேர்தலில் தூக்கி எறியப்பட்டது. மிக வலுவாக இருந்த அரசாங்க எதிர்ப்பு உணர்வு, உச்சகட்டமாக பிரதம மந்திரி
ஜோன் ஹோவர்டிற்கும் அடிகொடுத்தது. அவர் 33 ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டிருந்த தமது வடக்கு சிட்னியிலுள்ள
Bennelong
தொகுதியை இழந்தார். 1929 இற்கு பின்னர், பதவியில் இருக்கும் ஒரு பிரதம மந்திரி இது போன்று தோல்வியுறுவது
இதுவே முதல் முறையாகும்.
சில குறிப்பிட்ட வாக்காளர் தொகுதிகளில் தொழிற் கட்சியிடம் பாரிய வாக்கு வித்தியாசத்தில்
தோல்வி அடைந்த பல மூத்த அரசாங்க மந்திரிகளுடன் ஹோவர்டு ஒரு சிதைக்கப்பட்ட அணியில் சேர்க்கப்பட்டார்.
சுமார் 80 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தாராளவாத கட்சியின் 36.4 சதவீதத்திற்கு எதிராக
(4.5 சதவீதம் குறைவு), 2004 ஆம் தேர்தலை விட 6.3 சதவீத உயர்வுடன், தொழிற்கட்சி 44 சதவீத
முதன்மை ஓட்டுக்களைப் பெற்றது. மேலும் தாராளவாத கட்சியுடன் புறநகர் தொகுதிகளில் நின்ற கூட்டணி கட்சியான
தேசியவாத கட்சி 5.4 சதவீதம் (0.5 சதவீதம் குறைவு) பெற்றது. பசுமை கட்சி கடந்த 2004 ஐ விட
0.4 சதவீதம் கூடுதலாக பெற்று 7.6 சதவீத வாக்குகளைப் பெற்றது.
முன்னுரிமைகள் அறிவிக்கப்பட்டதற்கு பின்னர், இரு கட்சிகளின் எதிர்பார்த்த
முடிவானது, அரசாங்கத்திற்கு எதிராக 46.7% இலிருந்து 53.3 % ஆக இருந்தது. கடந்த தேர்தலை விட 6.1
சதவீத "வாக்கு வித்தியாசம்" காணப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய வரலாற்றில் இதுவே இரண்டாவது
மிக பெரிய தேர்தல் மாற்றமாகும், இதற்கு முன்னதாக 1975ல்
Canberra
அரசியல் கவிழ்ப்புக்குப் பின் Whitlam
தலைமையிலான தொழிற்கட்சிக்கு எதிராக வாக்குகள் அளிக்கப்பட்டன. பல வாக்காளர் தொகுதிகள் முடிவாகாமல்
இருந்த போதிலும், வெறும் 60 இடங்களைப் பெறும் (86 இடங்களில் இருந்து குறைவு) அரசாங்கத்திற்கு எதிராக
தொழிற்கட்சி மொத்தம் 88 பாராளுமன்ற இடங்களில் (60 இடங்களில் உயர்வு) வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோவார்டு அரசாங்கத்தின் சாதனையளவான பொய்கள் மற்றும் குற்றங்களுக்கான
ஒரு தெளிவான நிராகரிப்பை இந்த வாக்குகள் வெளிப்படுத்துக்கின்றன. ஈராக் யுத்தம் மற்றும் மத்திய கிழக்கு,
மத்திய ஆசியாவில் திடீரென அமெரிக்க இராணுவம் எழுச்சி பெற்ற போது, பெரியளவிலான யுத்த எதிர்ப்பு
உணர்வுக்கு எவ்வித பதிலும் இல்லாமல், தேர்தல் பிரசாரத்தில் இருந்தும் அது தெளிவாக விலக்கப்பட்டதால்,
மாற்றத்திற்கான மனநிலையை அதிகரிக்க செய்திருந்தது. 2003ல் ஈராக் மீது சட்டவிரோதமான தாக்குதலை
தொடர்ந்த அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷுடனான, "நல்லெண்ண கூட்டணியில்" கடைசியாக இருந்த கூட்டாளியின்
அரசாங்க மாற்றத்தை ஹோவார்டின் தோல்வி குறிக்கிறது.
பல இலட்சக்கணக்கான சாதாரண மக்களுக்கு, ஹோவார்டு தமது சொந்த
தொகுதியை இழந்த அவரின் அவமானம், ஒரு மனிதன் சட்டவிரோத குற்றங்களுக்காக கிடைத்த இறுதி இடமாக
பரவலாக கருதப்படுகிறது. இது அமெரிக்க தலைமையிலான ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல்களில்
இருந்த அவரின் பங்களிப்புடன் தொடர்புடைய யுத்தக்குற்றங்களை மட்டும் உட்கொண்டதல்ல, மற்றும்
2001TM
"SIEV
X"
எனும் புகலிடம் கோரும் கப்பல் கவிழ்ந்ததில் 353
ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இறந்தது உட்பட, அவரின் கொடுமையான குடிவரவு மற்றும் அகதிகள்
கொள்கைகளையும் சேர்த்து கொண்டதாகும்.
சனிக்கிழமை வெளியான தேர்தல் முடிவானது சம்பளம் மற்றும் வாழ்கைத்தரத்தின் மீது
ஹோவார்டு அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு இருந்த பரவலான விரோதத்தால் ஊக்குவிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு
எதிரான பெரியளவிலான வாக்கு வித்தியாசம் பெரும்பான்மையாக தொழிலாள வர்க்க பகுதிகளிலும், புறநகர்
மற்றும் பிராந்திய மாவட்டங்களிலும் பதிவாயின. அரசாங்கத்திற்கு எதிராக வாக்குகள் அளித்தவர்களில் இளைஞர்கள்,
சமூகநல உதவி பெறுபவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரும் அடங்குவர். ஹோவார்டின் தொழில் தேர்வுக்கான
தொழிலக தொடர்பு கொள்கை (WorkChoices
industrial relations policy) மதிப்பிழந்துபோயிருந்துடன்,
கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள் உழைக்கும் மக்களின் வீட்டுச் செலவை
அதிகளவில் தாங்க முடியாததாக்கியுள்ளது, குறிப்பாக எண்ணெய் மற்றும் உணவு பொருட்கள் போன்ற பிறவற்றின்
விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது.
பல மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில், அரசாங்க எதிர்ப்பு விகிதம் தேசிய
ஒட்டுமொத்த அளவான 6.1 சதவீதத்தை விட அதிகளவாக இருந்தது.
குவின்ஸ்லாந்தில், பிரிஸ்பேனின் உட்பகுதியில் சராசரியாக 4.6 சதவீதத்தில் இருந்து
புறநகர் பகுதிகளில் 10.2 சதவீதம் வரை இருந்த இந்த வாக்கு வித்தியாசம் ஒட்டுமொத்தமாக 8.3
சதவீதமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆஸ்திரேலியன் நாளிதழின் கருத்துப்படி, அரசாங்கத்தின் தொழில்முறை
உறவுகள் மற்றும் நலத்திட்ட முறைமைகளுக்கான எதிர்ப்புகளால் "தெற்கு, தென்மேற்கு" வாக்காளர்களின்
ஊக்குவிக்கப்பட்டனர்: "அலுவலக தொழிலாளர்கள், இரண்டு வருவாய் பெறும் குடும்பங்கள், 35 வயதிற்கு
உட்பட்டோர் மற்றும் தனித்து வாழும் பெண்கள் ஆகியோர் ஜோன் ஹோவார்டு மற்றும் அவரின் கூட்டணி
அரசாங்கத்திற்கு எதிராக திரும்பிய முக்கிய ஜனநாயக அணிகளாவர்.... தொழிற்கட்சி தொழில் தேர்வு குறித்து
வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தியதன் காரணமாக கூட்டணியின் (தொழிற்சங்கத்திற்கு எதிரானவை) பிரச்சார
விளம்பரங்கள் அவர்களைத் திருப்பி தாக்கியதாக தொழிற்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன."
மத்திய குவின்ஸ்லாந்தின்
Dawson தொகுதியில் 13.5 சதவீத வாக்கு வித்தியாசத்தில்
தோற்ற போக்குவரத்து மற்றும் பிராந்திய சேவைகளின் மந்திரியான தேசிய கட்சியின்
De-Anne Kelly
மற்றும் வடக்கு மாகாணத்தில் ஆதிக்குடிவாசிகள் விடயத்தில் இராணுவ
போலீசின் தலையீட்டில் தொடர்புபடுத்தப்பட்ட நிலத்துறை மந்திரி
Mal Brough
ஆகியோர் தங்களின் இடங்களை இழந்த அரசாங்க மந்திரிகளில் பட்டியலில் அடங்குவர். பிரிஸ்பேன் புறநகர்
தொகுதியான லாங்க்மேனில் Mal Brough
இற்கு எதிராக தொழிற்கட்சி 11 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது.
தெற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா, விக்டோரியா மற்றும் புதிய தெற்கு வேல்ஸ்
ஆகியவைகளிலும் ஹோவார்டு அரசாங்கம் குறிப்பிடத்தக்க இடங்களை இழந்தது. குறிப்பாக, மேற்கு சிட்னியின்
தொழிலாளவர்க்க வசிக்கும் புறநகர் பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிராக அதிகபட்ச வாக்கு வித்தியாசம்
இருந்தது. பராமட்டாவில் 8.1 சதவீதம் இருந்த வாக்கு வித்தியாசம், லிண்ட்சேவில் பிரமாண்டமாக 10
சதவீதமாக இருந்தது. தொழிற்கட்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட முதலாளித்துவ ஆதரவு பொருளாதார
சீர்திருத்த மசோதாவை ஹோவார்டு எதிர்த்ததை தொடர்ந்து, அவர் 1996 இல் வென்றவைகளில் மேற்கூறிய
தொகுதிகளும் உள்ளடங்கும். வீட்டு அடமானங்களுடன் இருந்த தாராளவாத கட்சி தொண்டர்கள் அரசாங்கத்திற்கு
எதிராக திரும்பி விட்டதாக இந்த தேர்தலில், "ஹோவர்டின் சேவகர்களாக" இருந்த ஊடகங்கள் குறிப்பிட்டன.
தாராளவாத கட்சியினால் முன்வைக்கப்பட்ட மோசமான அசாதாரண தேர்தல்
உத்திகள், இனவாத பிரசாரங்கள் ஆகியவற்றால் லிண்ட்சேவிலும் ஹோவார்டுக்கு எதிரான மாற்றம் எடுத்துச்
செல்லப்பட்டது. தொழிற்கட்சியின் வெற்றியை ஊக்கப்படுத்திய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பால்
உள்நோக்கத்துடன் வழங்கப்பட்ட ஒரு துண்டறிக்கையைப் பரப்பியதில் லிண்ட்சேவின் முன்னாள் பாராளுமன்ற மந்திரி
ஜேக்கி கெல்லியின் கணவர் உட்பட பல மூத்த தாராளவாத கட்சி பிரமுகர்கள் பிடிபட்டனர்.
"பாளி வெடிகுண்டு வெடிப்பில் நேர்மையற்ற முறையில் தூக்கிலிடப்பட்ட எங்களின்
முஸ்லீம் சகோதரர்களுக்கு மன்னிப்பளிக்க ஆதரவளித்த தொழிற்கட்சியை நாங்கள் கருணையுடன் ஏற்று
கொள்கிறோம்." என குறிப்பிடப்பட்டிருந்த அந்த வெற்று துண்டறிக்கை, செயல்பாட்டில் இல்லாத ஆஸ்திரேலிய
இஸ்லாமிய கூட்டமைப்பு என்ற பெயரில் கையெழுத்திடப்பட்டிருந்தது. "எதிர்வரும் பொது தேர்தலில் இந்த நாட்டை
ஆள்வதற்கான எங்களின் விருப்பமான கட்சியாக ஆஸ்திரேலிய தொழிற்கட்சிக்கு எங்களின் முழுமையான ஆதரவை
அளிக்கிறோம் என்பதுடன், பிற முஸ்லீம்களையும் அவ்வாறே செய்யும்படி கேட்டு கொள்கிறோம்." என அது
அறிவித்தது.
தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளில் முஸ்லீம்கள் ஊடகத்தை ஆக்கிரமித்தனர் மற்றும்
குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அறிவிக்க ஹோவார்டை
நிர்பந்தித்தனர் போன்ற கதைகள் மூலம் முஸ்லீம்களுக்கு எதிராக தப்பெண்ணத்தைத் தூண்டிவிடுவதற்கான கொடூரமான
முயற்சிகள் கடுமையாக திரும்பி தாக்கின. ஹோவார்டு அரசாங்கம் கூறிய எதுவும் நம்பும்படியாக இல்லை என்பதை
அந்த சம்பவம் தங்களின் உணர்வுகளுக்கு உறுதிபடுத்தி இருப்பதாக ஊடகங்களால் பேட்டி எடுக்கப்பட்ட
பெரும்பான்மை வாக்காளர்கள் தெரிவித்தனர். தேர்தல் முடிவை சீர்குலைக்க தாராளவாத கட்சி மிக மோசமான
வகைகளில் முயற்சித்து வருவதாக இந்த நிகழ்ச்சி அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. பிரச்சாரம் துவங்குவதற்கு
முன்னதாக தங்களின் சம்பளம் பெறும் அரசாங்க பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டுமென்ற ஒரு
அரசியலைப்பு விதிகளுக்கு தொழிற்கட்சியின் பதின்மூன்று வேட்பாளர்கள் உடன்படவில்லை என்பதால் ஜனநாயகத்திற்கு
எதிராகவும், போலி தகவல்களின் அடிப்படையிலும் அந்த வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான உரிமைக்கு ஒரு
சட்டப்பூர்வ சவாலை கொண்டு வரப் போவதாக இறுதி வாரத்தில், ஹோவார்டின் பிரச்சார செய்தி
தொடர்பாளர் ஆண்ட்ரூ ரோப் அச்சுறுத்தி இருந்தார்.
இந்த வெற்று துண்டறிக்கை பல புலம்பெயர்ந்தோரின் வாக்குகளை அரசாங்கத்திற்கு
எதிராக திருப்பியதுடன், அது ஹோவார்டின் பெருந்தோல்விக்கும் ஒரு காரணியாக அமைந்தது. அவரின் சொந்த
தொகுதியை வசிப்பிடமாக கொண்டிருந்த பெருமளவிலான சீன மற்றும் கொரிய சிறுபான்மையினர், தொழிற்கட்சி
வேட்பாளரான முன்னாள் ABC
பத்திரிக்கையாளர் Maxine McKew
வால் விடாமுயற்சியுடன் ஈர்க்கப்பட்டனர்.
முன்னிலை பெற்றவர்களின் முழுமையான அறிவிப்பு, மாநில அடிப்படையிலான சிக்கலான
ஒதுக்கீட்டு தேர்தல் முறையைச் சார்ந்திருப்பதால், செனட்டின் இறுதி நிலை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
கூட்டணி மேல் சபை இடங்களில் இரண்டை இழந்து மொத்தமுள்ள 76 இடங்களில் 37 ஐ பெறும் என கருதப்படுகிறது
மற்றும் தொழிற்கட்சி நான்கு இடங்களைப் பெறுவதன் மூலம் 32 இடங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசுமை கட்சி ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் ஒரு இடத்தைப் பிடிப்பதன் மூலம் முடிவாக ஐந்து இடங்களைப்
பிடிக்கலாம், இந்த நிலையில் தெற்கு ஆஸ்திரேலிய
anti-poker இயந்திரங்களுக்கு எதிரான பிரச்சாரகர்
Nick Xenophon
சுயாட்சியாக ஓர் இடத்தை வென்றார். 2001 இல் ஹோவார்டு அரசாங்கத்தின் பொருட்கள் மற்றும் சேவைகள்
வரிக்கு ஆதரவளித்து, பின் அதன் முடிவிலிருந்து ஒருபோதும் மீண்டு வராத ஒரு கட்சியான ஜனநாயக கட்சி அதன்
இரண்டு இடங்களையும் இழந்து துடைத்தெறியப்பட்டது.
ஒரு வலதுசாரி சந்தை சார்பு அரசாங்கம்
இந்த தேர்தல் முடிவு கூட்டணி கட்சிகளை ஓர் ஆழ்ந்த நெருக்கடியில் விட்டிருப்பதுடன்,
தாராளவாத கட்சியின் முக்கிய பிரமுகர்களை அவநம்பிக்கைக்குள் கொண்டு வந்திருக்கிறது.
தாராளவாத கட்சி, அதன் வரலாற்றில் முதன் முறையாக, தேசியளவிலோ அல்லது
மாநில அளவிலோ எந்த அளவிலும் பதவியை கொண்டிருக்கவில்லை. சனிக்கிழமை இரவு ஹோவார்டு தமது பதவி
விலகும் உரையில், பொருளாளராக பீட்டர் கோஸ்டெல்லோவைத் தமது ஆலோசகராக நியமிக்க போவதாக
வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், தாம் அந்த தலைமையை ஏற்கப்போவதில்லை என பீட்டர் நேற்று
அறிவித்தார். வரவிருக்கும் அடுத்த தேர்தலுக்கு முன்னதாக அரசியலை விட்டு விலகும் அவரின் காலக்கெடு வரை
அவர் தொடர்வார் என ஹோவார்டு தெரிவித்தார். கூட்டணியின் நிலை சீரழிந்து வருவதையே கோஸ்டெல்வோவின்
முடிவு குறிப்பாக எடுத்து காட்டுகிறது. சில வருடங்களில் அரசியல் தோய்வை சந்தித்திருக்கிறது என்பதையே அதன்
தோல்வி எடுத்துகாட்டுகிறது. பெருநிறுவன நிதி உதவிகள் விரைவில் வற்றிவிடும் போது, இது கட்சியை நிலையற்ற
நிதி நெருக்கடிக்குக் கொண்டு வரும், இந்நிலையில், கிறிஸ்துவ அடிப்படைவாதம் சார்ந்த வலதுசாரிகளுக்கும்,
பெரும் சமூக தாராளவாதத்தினருக்கும் இடையே எரிச்சல்மிக்க குழுவாத சண்டைகள் தீவிரமடையும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய கட்சியும் இதே போன்று சீர்குலைந்துள்ளது, இந்த 2007 ஆம் தேர்தல்
முடிவுகளால், அதன் வீழ்ச்சி மேலும் நீண்டிருக்கிறது. கட்சியின் தலைவர் மார்க் வைலி திடீரென தாம் தலைமை
பதவியில் விலக இருப்பதாக இன்று அறிவித்தார்.
இந்த பரந்த உணர்வு மாற்றத்தின் உடனடி பயனாளராக தொழிற்கட்சி இருக்கும்
போதிலும், இந்த தேர்தல் முடிவு ரூட்டின் அல்லது அவரின் கொள்கைகளுக்கான எவ்வித ஆழ்ந்த ஆதரவையும்
வெளிக்காட்டவில்லை.
வாக்குகள் அரசாங்கத்திற்கு எதிரானவையே தவிர தொழிற்கட்சிக்கானவை அல்ல.
சராசரியாக 44 சதவீத தேசிய முதன்மை வாக்குகளுடன், தொழிற்கட்சி பெருமளவிலான இடங்களைப் பெற
பசுமைக் கட்சியைச் சார்ந்திருந்தது. பசுமை கட்சி குறிப்பிடத்தக்க அளவில் இளைஞர்களின், குறிப்பாக நகரத்தின்
உட்பகுதிகளில் வாக்குகளை வென்றது. சான்றாக, சிட்னி வாக்காளர் தொகுதியில் அவர்கள் 21 சதவீத
வாக்குகளையும், அதற்கு அடுத்தபடியாக Grayndler
இல் 18.5 சதவீதமும் மற்றும் மெல்பேர்னில் 22.6 சதவீத
வாக்குகளும் பெற்றனர். பெரும்பான்மையான மக்களால் அரசாங்கம் நீக்கப்பட தீர்மானிக்கப்பட்டு இருந்தது,
இருப்பினும் தங்களின் வாக்குகளைத் தொழிற்கட்சிக்கு நேரடியாக அளிக்காமல் - பசுமை கட்சிக்கு முதலிடம் அளித்த
பின்னர் இரண்டாம் விருப்பமாக மட்டுமே அவர்களுக்கு வாக்களித்தனர்.
ஓர் ஆழ்ந்த அரசியல் எதிர்ப்பு மாற்றத்தால் ரூட் பலனடைந்திருக்கிறார், அதாவது
அவருக்கு எவ்வித ஆதரவோ அல்லது ஊக்கமோ அளிக்கப்படவில்லை. ஹோவார்டு அரசாங்கத்தால் நிரூபிக்க
இயலாத ஒன்றான, தாராள சந்தை பொருளாதார மறுகட்டமைப்பின் அடுத்த கட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்ற
உறுதிமொழிகளின் அடிப்படையிலான ரூட்டின் தேர்தல் அறிக்கை ஊடகங்களில் மற்றும் பெரும் வியாபாரங்களில்
பெருங்குரலை எழுப்புவதில் முன் நின்றது.
ரூட்டின் வெற்றியைக் குறித்து
Murdoch இற்கு
சொந்தமான ஆஸ்திரேலியன் நாளிதழ், அதன் எதிர்பார்ப்புகளைத் தெளிவாக "ரூட் தம் வழியில் நிற்க வேண்டும்"
என்ற தலைப்பில் வெளியிட்டது. தொழிற்கட்சி அதன் வாக்குறுதிகளில் நிலைத்து நிற்க வேண்டும் என எச்சரித்த அந்த
தேசிய செய்தித்தாள், "முந்தைய அரசாங்கம் எங்களுக்கு அளித்த அதே பொருளாதார மேலாண்மை மூலோபாயங்களை
நிறைய அளிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளது. ஹோவர்டின் தொழிலக உறவுகள் மற்றும் நலத்திட்ட
முறைமைகளுக்கு எதிராக, குறிப்பாக வளமில்லாத அல்லது ஆதார சமூக சீர்திருத்தத்தில் ஆர்வமுள்ள, ஆனால் பிரமாண்ட
வளர்ச்சி அவர்களைக் கடந்து விடும் என அச்சப்படும் உழைக்கும் மக்களுக்கு எதிராக வாக்களித்தவர்களின் எதிர்ப்பார்ப்பைப்
பூர்த்தி செய்யவதற்கான எவ்வித முயற்சிக்கும் எதிராக அது வெளிப்படையாக ரூட்டை எச்சரித்தது.
ரூட், தமது வலதுசாரி அறிக்கையை முன்னிறுத்தி அழுத்தம் அளிக்க விரும்புவதாக மிக
தெளிவாக தெளிவுபடுத்திவிட்டார். சனிக்கிழமை இரவு அவர் நிகழ்த்திய வெற்றி உரையில் ஹோவார்டுக்கும் மற்றும்
"அவரின் பொது வாழ்க்கை சேவைக்கும்" சேர்த்து திகட்டும் அளவில் புகழாரம் செய்துவிட்டார். அடுத்த நாள்,
ரூட், தாம் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷுடன் ஏற்கனவே பேசியதாகவும், அதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான
ஆஸ்திரேலிய கூட்டணிக்கு தமது முழு ஒத்துழைப்பை மீண்டும் இணைப்பது குறித்து பேசி இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொழிலாள வர்க்கம், தனது சொந்த அரசியல் கட்சியை உருவாக்குவதற்கான
தேவையை முன்னிறுத்தி, இந்த புதிய தொழிற்கட்சி அரசாங்கத்துடன் விரைவிலேயே மோதலுக்கு வந்துவிடும். இந்த
நிலையில் தான், சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. சோசலிச
சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான அரசியல் முன்னோக்கை எடுத்து காட்டியதுடன்
ஆஸ்திரேலிய தொழிற்கட்சியின் தற்கால மற்றும் வரலாற்று பங்களிப்பையும் மற்றும் முதலாளித்துவ ஆட்சியின் முக்கிய
ஊண்டுகோல்கள் தொழிற்சங்கங்களே என்பதைத் தெளிவுபடுத்தவும் போராடியது. ரூடின் தொழிற்கட்சி எவ்விதத்திலும்
ஹோவார்டிற்கு குறைந்ததல்ல என்பதை நாங்கள் விளக்கினோம், மேலும் தொழிலாள வர்க்கத்தின் நேரடி
சுரண்டலூடாக ஆஸ்திரேலியாவின் பெருநிறுவன நலன்களைக் தொடர்ந்து முன்னெடுக்க அது மிகவும் மூர்க்கமாக
விரைவாக உருவாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி, தாம் நிறுத்திய ஒன்பது வாக்காளர் தொகுதிகளிலும்
சிறிய அளவில், ஆனால் முக்கிய வாக்குகளைப் பெற்றதுடன்,
NSW மற்றும்
விக்டோரியா செனட்டில் குறிப்பிடத்தக்க ஆதரவையும் பெற்றது. நமது மொத்த வாக்குக்கள் இன்னும் உறுதி
செய்யப்படாததால், விரைவிலேயே அடுத்து வரும் கட்டுரையில் அது உலக சோசலிச வலைத் தளத்தில்
பதிப்பிக்கப்படும். |