:
ஆசியா
:
இலங்கை
SEP-ISSE memorial meeting
Twenty years since the death of Sri
Lankan Trotskyist leader Keerthi Balasuriya
சோ.ச.க.-ஐ.எஸ்.எஸ்.இ. ஞாபகார்த்த கூட்டம்
இலங்கை ட்ரொட்ஸ்கிச தலைவர் கீர்த்தி பாலசூரிய மறைந்து இருபது ஆண்டுகள்
5 December 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
இலங்கையில்
சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.)
அமைப்பும் கீர்த்தி பாலசூரியவின் மறைவின் 20வது ஆண்டு நிறைவை நினைவுகூர்வதற்காக டிசம்பர் 23ம் திகதி
கொழும்பில் பகிரங்கக் கூட்டம் ஒன்றை நடத்துகின்றன.
தோழர் கீர்த்தி பாலசூரிய, சோ.ச.க. யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்தின் (பு.க.க.) பொதுச் செயலாளரும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்
(நா.அ.அ.கு.) தலைவர்களில் ஒருவருமாவார். 1987 டிசம்பர் 18ம் திகதி அவரது 39வது வயதில் அவருக்கு
ஏற்பட்ட அகால மரணம், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பிந்திய காலத்தில் வாழ்ந்த உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின்
அதிசிறந்த பிரதிநிதிகளில் ஒருவரை அபகரித்துக்கொண்டது.
ஒரு புத்திஜீவி மேதையும் அருந்திறம் வாய்ந்த கலைஞனுமான கீர்த்தி, 16 வயதில்
இருந்தே தனது இளமைக்காலம் முழுவதையும் நா.அ.அ.கு. வைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணித்திருந்தார்.
அவர் 1968ல் பு.க.க. ஸ்தாபிக்கப்பட்டபோது, தனது 19 வயதிலேயே அதன் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக்கொண்டமை,
அவர் கோட்பாட்டு அஸ்திவாரங்களை முழு நிறைவாக உள்ளீர்த்துக்கொண்டிருந்ததன் வெளிப்பாடாகும். அவரது
வாழ்நாள் முழுவதும் ட்ரொட்ஸ்கிசத்துக்காக போராடியமை, புரட்சிகர அரசியலை நோக்கித்
திரும்பிக்கொண்டிருக்கும் தற்போதைய இளைஞர் பரம்பரைக்கு மிகச் சிறந்த முக்கியத்துவம் கொண்டதாகும்.
இரு முன்னணி ட்ரொட்ஸ்கிச கட்சிகளின் காட்டிக்கொடுப்பால் உருவாக்கப்பட்ட மிகப்பெரும்
சிரமங்களின் மத்தியிலேயே கீர்த்தி அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அமெரிக்காவில் சோசலிசத்
தொழிலாளர் கட்சி 1963ல் சர்ந்தப்பவாத ஐக்கிய செயலகத்துடன் மீண்டும் ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொண்டமையும்
மற்றும் இலங்கையில் லங்கா சமசமாஜக் கட்சி 1964ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலாளித்துவ அரசாங்கத்திற்குள்
நுழைந்து கொண்டமையும் மிகப்பெரும் காட்டிக்கொடுப்புகளாகும்.
இந்த மாபெரும் காட்டிக்கொடுப்புக்களை தெளிவுபடுத்தும் முயற்சியில், கீர்த்தி முதலாளித்துவ
தேசியவாத இயங்கங்களும் மற்றும் மாவோ சேதுங், கோ சி மின் மற்றும் சேகுவரா போன்றவர்களாலும்
பரப்பப்பட்ட மாயைகளுக்கு எதிராக உறுதியாக நின்றுவந்தார். ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக்
கோட்பாட்டில் காலூண்றிக்கொண்ட கீர்த்தி, தொழிலாள வர்க்கம் சமுதாயத்தில் ஒரே புரட்சிகரமான சக்தியாக
மாறாநிலையுடன் இருந்துவருகிறது என வலியுறுத்தியதோடு, முதலாளித்துவத்தில் இருந்தும் அதன் சகல அரசியல் முகவர்களிடம்
இருந்தும் தொழிலாள வர்க்கம் சுயாதீனமடைவதற்காக சமரசமற்றுப் போராடினார்.
சீனா, வியட்னாம் மற்றும் கியூபாவும் சர்வதேச நிதி மூலதனத்துக்கான மலிவு உழைப்புக்
களமாக மாற்றம்பெற்றுள்ளமை, கீர்த்தியின் தூரதிருஷ்டியை கோடிட்டுக் காட்டுகின்றன. அவரது வாழ்க்கையும்
வேலைகளும் இலங்கையில் மட்டுமன்றி ஆசிய மற்றும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும்
உடனடிப் பொருத்தத்தை கொண்டுள்ளன. எமது ஞாபகார்த்தக் கூட்டத்திற்கு வருகைதருமாறு ஆதரவாளர்களுக்கும்
மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் சோ.ச.க. அழைப்புவிடுக்கின்றது. உலக சோசலிசப்
புரட்சிக்கான போராட்டத்தில் கீர்த்தியின் அரசியல் மற்றும் கோட்பாட்டு பங்களிப்பின் வரலாற்று முக்கியத்துவத்தை
பற்றி இந்தக் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்படும்.
நேரம்: டிசம்பர் 23, ஞாயிறு, பி.ப. 3.00 மணி.
இடம்: மாவலி கேந்திர நிலையம், கிரீன் பாத், கொழும்பு 7. |