:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
US Army reports rising desertion rates
இராணுவத்தை விட்டோடல் வீதம் அதிகம் என்று அமெரிக்க இராணுவம் தகவல்
By Naomi Spencer
27 November 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் தூண்டுதலற்ற தாக்குதல் நடத்துவதற்கு முன் நடந்த
ஏராளமான விட்டோடல் வீத்த்தில் ஒரு சரிவிற்குப் பின், இராணுவம் மீண்டும் ஏராளமான இராணுவவீரர்கள் தங்கள்
பொறுப்பில் இருந்து ஓடிவிடுவது கூடியிருப்பதாக தகவலை பதிந்துள்ளது. இந்த ஆண்டு தப்பி ஓடிய வீரர்களின்
எண்ணிக்கை ஈராக்கின்மீது அமெரிக்கா 2003ல் படையெடுத்தபோது இருந்ததை விட 80 சதவிகிதம் அதிகம் என்று
அசோசியேடட் பிரஸ் நவம்பர் 16ம் தேதி குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் அறிவிப்பின்படி 4,698 வீரர்கள் --கிட்டத்தட்ட ஒவ்வொரு
1000 பேரில் 9 பேர் என்ற கணக்கில்-- செப்டம்பர் 2007ல் முடிந்த நிதியாண்டில் ஓடிவிட்டனர் எனத் தெரிகிறது.
இதே காலத்தில், பாதுகாப்பு அமைச்சரகம் மொத்த அமெரிக்கர்களின் இறப்பு 1,163, காயமுற்றவர்
எண்ணிக்கை 8,190 என்று கூறியுள்ளது. மொத்தத்தில் இறப்புக்கள் காயங்களை ஒட்டி இராணுவச் சேவையை விட்டு
வீரர்கள் ஓடிவிடுவதும் அமைப்பில் விரிசலுக்குக் காரணமாக இருப்பதுடன் இராணுவத்திற்கும் தீவிர சோதனையை
கொடுத்துள்ளது.
ஊக்கத்துடன் கடமையில் சேவைசெய்யும் உறுப்பினர் தனது படைப் பிரிவிலிருந்து சென்று
அனுமதி இல்லாமல் 30 நாட்களுக்கு மேல் கழித்து விட்டால் ஓடிப்போனவர் என்று கருதப்படுவார். இப்படி
ஓடிப்போனவர்களில் நான்கில் மூன்று பகுதியினர் முதல் தடவையாக இராணுவத்தில் சேர்ந்தவர்கள் என்று அறிக்கைகள்
தெரிவிக்கின்றன.
இராணுவத்துடனான திட்டங்கள் மற்றும் வளங்கள் ஆகியவற்றின் இயக்குனரான
Roy Wallace,
அசோசியேடட் பிரஸிடம் பொதுவாக கீழ்க்கண்ட நான்கு வழிகளில் ஒன்றில் படையினர்கள் இராணுவத்தை விட்டு
ஓடிவிடுவர் என்று கூறினார்: தேவையான தகுதிச்சான்றுகளை நிறைவேற்ற முடியாததில் உறுதி கொண்டிருப்பவர்;
"இராணுவ முறைகளை ஏற்க இயலாதவராக" காணப்படுபவர்கள்; ஓரினச் சேர்க்கையாளர் தனது வாழ்வியல் முறை
பற்றி வெளிப்படுத்துவதை தடுக்கும் "கேட்காதே, சொல்லாதே" என்றழைக்கப்படுவதை மீறுபவர்கள்; அல்லது
விடுப்பெடுக்காமல் வெறுமனே வராது விடுபவர்கள் மற்றும் கடமைக்கு வராது அறிவிக்காதிருப்பவர்கள்.
இராணுவத்தை பொறுத்தவரையில், 2007ம் ஆண்டு ஓடிப் போனவர்கள் விகிதம்
முந்தைய ஆண்டைவிட 42 சதவிகிதம் அதிகமாகும்; 2006ல் 3,301 பேர் ஓடிப்போயினர். 2005ல்
போர்க்காலத்திலேயே மிகக் குறைவான வகையில் 2,011 பேர்தான் ஓடிப்போயினர். 2001, 2002லும்
ஓடிப்போனவர்களின் எண்ணிக்கையானது, வீழ்ச்சியடைவதற்கு முன்னரான மிக சமீபத்திய இராணுவப் புள்ளி விவரங்களை
(முறையே 4,597, 4483) ஒத்ததாகத்தான் இருந்தது.
வரலாற்றளவில், இராணுவம் தீவிரமாக ஓடிப்போனவர்களை தொடர்வதில்லை.
தங்கள் பதவியில் இருந்து ஓடிப்போனவர்களுக்கு ஓய்வு நலன்கள் மறுக்கப்படுவதுடன் அவர்களுடைய பெயர்கள் ஒரு
தேசிய தஞ்சம் கோருவோர் நிரந்தரமாக பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும். குடிமக்கள் சட்ட அமலாக்கத்தால்
அவர்கள் பிடிபட்டால் அவர்கள் இராணுவ நீதிவிசாரணைக்காக இராணுவ போலீசிடம் ஒப்படைக்கப்படுவர்.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் ஓடிப்போனவர்கள் மற்றும் அனுமதியின்றி
விடுமுறையில் இருப்பவர்கள் மீதான குற்றச் சாட்டு நடவடிக்கைகள் மிகவும் அதிகரித்துள்ளன; இதற்குக் காரணம்
மற்ற ஓடிப்போகும் எண்ணம் உடையவர்களை தடுக்க முற்படுவதுதான் என்று இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நியூ
யோர்க் டைம்ஸிற்குப் பேட்டி கொடுத்த இராணுவ வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். ஏப்ரல் 9ம் தேதி
வெளிவந்த அறிக்கை ஒன்றில் டைம்ஸ், 2002 முதல் 2006 இறுதி வரை ஓடிப்போன குற்றத்திற்காக
இராணுவ விசாரணைகள் நடத்தப்பட்டது, அது அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளின் ஆண்டு சராசரியை விட மூன்று
மடங்கு அதிகமாயிற்று என்றும், அதேபோன்ற குற்றங்களுக்கான விசாரணைகளும் இரு மடங்காகி விட்டன என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, ஓடிப்போதல் திடீரென
நடைபெறுவதில்லை, வரவிருக்கும் நிகழ்வுகளின் அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று உயர் அதிகாரிகள்
பிழையின்றி ஒப்புக் கொள்ளுதலாக இருக்கிறது.
வியட்நாம் சகாப்தக் காலத்தில் 5 சதவிகிதம் என்று இருந்த மிக அதிகமான
ஓடிப்போனவர்கள் விகிதத்தை சுட்டிகாட்டி, தற்போதைய ஓடிப்போகிறவர்கள் விகிதங்கள் பயங்கரவாதத்திற்கு
எதிரான போர் அல்லது பெரும்பாலான போர் எதிர்ப்பு உணர்வுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை
என்று இராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இராணுவத்தின் கருத்துப்படி, 2003-2005ல் குறைந்த விகிதம் துருப்புகளுக்கு
அடிப்படைப் பயிற்சி கொடுக்கப்படும்போது ஓடிப்போகக்கூடும் என்று கருதப்பட்டவர்களை, பதவி கொடுப்பதற்கு
முன்பே வெற்றிகரமாக அடையாளம் கண்டதின் விளைவுதான் என்று கூறப்படுகிறது.
தற்போதைய உயர்ந்த ஓடிப்போகிறவர்கள் விகிதம் மிகக் குறைந்த அளவு
விகிதம்தான் என்றும் சொந்த, குடும்ப அழுத்தம் தவிர மற்றவை காரணம் எனக் கூறப்பட முடியாது என்று
இராணுவம் வலியுறுத்தியுள்ளது. இராணுவத்தின் திட்ட இயக்குனரான வாலஸ் அசோசியேட் பிரஸ்ஸிடம், "இப்பொழுது
நிறைய துருப்புகள் தேவைப்படுகிறது. அவர்களும் மனிதர்கள்தான். வீட்டிலும் பிற இடங்களிலும் அவர்களுக்குப்
பலவிதப் பிரச்சினைகள் உள்ளன. எனவே இது வீரர் என்பதனால் ஏற்படக்கூடிய அழுத்தம் என்று உறுதியாகக்
கூறுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"வீட்டில் இருக்கும் பிரச்சினைகள்" மற்றும் இராணுவப் பண்பாடு மற்றும் போர்
ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் வெளிப்படையான தொடர்பை பற்றி இராணுவம் ஒப்புக்கொள்ளாது.
எல்லாவற்றிற்கும் மேலாக, தடையற்ற, மிருகத்தனமான, காலனித்துவ வகையிலான ஆக்கிரமிப்பு அதை
செயல்படுத்த வேண்டிய துருப்புகளிடம் உளரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது; அதே போல் அமெரிக்காவில்
இருக்கும் அவர்களுடைய குடும்பங்கள், நண்பர்கள் இடையேயும் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக கடமையில்
இருக்கும் துருப்புக்களின் உள ஆர்வம் மிகக் குறைவாகவும், அழுத்தம் மிக அதிகமாகவும் இருக்கின்றன.
ஈராக்கிய மக்களைப்பற்றி தன்னுடைய துருப்புக்களிடையே ஒரு மனிதாபிமானமற்ற
அணுகுமுறையை இராணுவம் ஊக்குவித்துள்ளது; அம்மக்களோ, ஏற்கக்கூடிய வகையில், ஆக்கிரமிப்புப் படைக்கு
விரோதப் போக்கைத்தான் கொண்டுள்ளனர். ஒரு ஆண்டுக்கு முன் நடத்தப்பட்ட கணிப்பு ஒன்றில் ஈராக்கில்
நிறுத்தப்பட்டுள்ள இராணுவ துருப்புகளில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறைபிடிக்கப்பட்ட ஈராக்கியர்களை சித்திரவதை
செய்வது பொருத்தமானதுதான் என்று கூறினர். அந்தக் கணிப்பில் சிவிலிய சொத்துக்கள் அழித்தல், சாதாரண
மக்கள்மீதான தாக்குதல், அவர்களை தவறாக நடத்துபவை ஆகியவை முற்றிலும் வாடிக்கையானதுதான் என்று
துருப்புக்கள் நினைத்ததும் தெரியவந்தது.
இராணுவத்தின் மன சுகாதார ஆலோசனைக் குழுவினால் நடத்தப்பட்ட இதே கணிப்பு
ஈராக்கில் இருக்கும் துருப்புக்களில் 40 சதவிகிதத்தினர் உறுதியாக நிர்ணயிக்கப்படாத தேதிகள், கூடுதலான
பயணங்கள் இவற்றைப் பற்றிக் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. நீட்டிக்கப்பட்ட பணிக்காலம் களைப்பையும்,
அழுத்தத்தையும் அதிகரிப்பதுடன் துருப்புக்களின் வீட்டுப் பிரச்சினைகளையும் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு
துருப்புக்களில் கால் பகுதியினர் தங்கள் திருமண உறவுப் பிரச்சினைகளை பற்றிக் கவலைப்பட்டனர்; 20
சதவிகிதத்தினர் திருமண முறிவிற்காக வழிவகையை நாட வேண்டியிருந்தது.
இராணுவ துருப்புக்கள் வீடுகளுக்கு திரும்பும்போது அவர்கள் மீண்டும் வேலைக்கு
எடுத்துக் கொள்ளப்படுவர் என்ற உத்தரவாதம் இல்லை; பலர் பெரும் அழுத்தம், மனநோய் பிரச்சினைகளை
உடையவர்களாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பயன்படுத்தப்பட்டுவரும் துருப்புக்களில்
கிட்டத்தட்ட இராணுவத்தின் 40 சதவிகிதத்தினரும், தேசிய பாதுகாப்புப் பிரிவில் பாதிப் பேரும் ஏதேனும்
ஒருவிதத்தில் மனநோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
ஈரானுக்குள் போர் விரிவாக்கத்திற்கான தயாரிப்புக்களை மேற்கொண்டு வருகின்ற
போதிலும் கூட, மிக உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் இராணுவம் முறியக் கூடிய கட்டத்தைக் கொண்டுள்ளது
என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆயினும்கூட இந்த நெருக்கடிகளைத் தீர்ப்பது எப்படி என்பது ஒரு முக்கிய
கொள்கைப் பிரச்சினையாக தற்போதைய நிர்வாகத்திற்கும், பிந்தையவர்களும் கட்டாய இராணுவ சேவை
கொண்டுவரப்படுவது போரை மக்கள் ஏற்றிருக்கும் தன்மையில் மிகப் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை
ஏற்படுத்திவிடும் என்று உணர்ந்துள்ள ஜனநாயகக் கட்சியினருக்கும் உள்ளது.
வியட்நாம் போர் சகாப்தத்தில் ஓடிப்போனவர்களில் பெரும்பாலானவர்கள்
ஒப்புமையில் தற்பொழுதைய இராணுவத்தின் "அனைத்து-தன்னார்வ முறையில்" சேர்ந்திருக்கும் சேர்க்கையைவிட
கட்டாய இராணுவ சேவையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்; தற்பொழுது உள்ளவர்கள் அதிகமாக தொழிலாள
வர்க்கத்தின் மிக வறிய அடுக்குகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்; அவர்களுக்கு கடமை ஆற்றுவதற்கு ஊக்கத்
தொகைகள், கல்லூரிக் கட்டணங்கள் போன்றவை கொடுக்கப்படுகின்றன; இது ஓடிப்போகும் விகிதிங்களை
குறைப்பதில் முக்கிய பங்கை ஐயத்திற்கு இடமின்றிக் கொண்டுள்ளது.
2003ல் இருந்து இராணுவம் தேர்ந்தெடுத்தல் விதிமுறைகளை சற்று தளர்த்தியுள்ளது;
இதற்குக் காரணம் இரண்டு போர்கள் நடப்பதும் வருங்காலத்தில் கூடுதலான நடவடிக்கைகள் இருக்கக் கூடும்
என்பதும்தான். கடந்த சில ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளி முடித்தவர்களை இராணுவத்தில் சேர்ப்பது என்பது 10
சதவிகதத்தில் இருந்து 24 சதவிகிதம் என்று உயர்ந்துள்ளது. தற்பொழுது வேலைக்கு எடுக்கப்படுபவர்களில் 20
சதவிகிதத்தினர் ஈராக்கிய படையெடுப்பிற்கு முன் சேர்க்கப்பட்டிருக்க மாட்டார்கள்; பல குற்றம் சார்ந்த
நடவடிக்கைகள் "அறநெறி வகையில் தள்ளுபடி செய்யப்பட்டபின்" சேர்க்கப்பட்ட துருப்புகளின் விகிதமும் அதிகமாக
உள்ளது. அதிகாரிகளுக்கும் பண ஊக்கங்களை இராணுவம் அதிகரித்துள்ளது; இதில் சார்ஜென்ட் மற்றும் நடுத்தர
அதிகாரிகளை தக்க வைத்துக் கொள்ளுவதற்கு $35,000 கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இராணுவ துருப்புக்கள் மிக அதிகமாக கொண்டுவரப்பட்டதை
அடுத்து புஷ் நிர்வாகம் இன்னும் கூடுதலாக 65,000 இராணுவ மற்றும் 27,000 கடற்படை வீரர்கள் அடுத்த
ஐந்து ஆண்டுகளில் வேண்டும் என்று கூறியுள்ளது; இது தன்னார்வத்துடன் இராணுவத்தில் சேர்க்கப்பட வைப்பதற்கு
அழுத்தத்தை கொடுத்துள்ளது. சட்ட மன்ற பட்ஜெட் அலுவலகம் ஏப்ரல் மாதம் நடத்திய பகுப்பாய்வு ஒன்றின்படி,
இந்தக் கூடுதல் எண்ணிக்கை 65 பில்லியன் டாலர்கள் செலவை ஏற்படுத்தும் என்றும் இதில் கூடுதல் பயிற்சி, மருத்துப்
பாதுகாப்புச் செலவினங்கள் போன்றவை அடங்காது என்றும் தெரியவந்துள்ளது.
இந்த மாதத் ஆரம்பத்தில் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸின் மூத்த இராணுவ
உதவியாளரான Peter Chiarelli
இராணுவம் தடையற்ற முறையில் செயல்படுவதற்காக இன்னும் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
National Journal,
நவம்பர் 12ம் தேதி பதிப்பில் Art Pine
எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் Chiarelli
குறிப்பிட்டிருப்பதாவது: "விரும்பினாலும், இல்லாவிடினும், அடுத்த அறிவிப்பு
வரும்வரை அமெரிக்க அரசாங்கம் இராணுவம்தான் தேசத்தை கட்டமைக்கும் பணியில் பொறுப்பை
கொண்டிருக்கும்....இதை எதிர்ப்பதற்கு பதிலாக இந்த யதார்த்தத்தை ஏற்க வேண்டும்."
National Journal,
போஸ்டன் பல்கலைக்கழகத்தில் இராணுவப் பகுப்பாய்வாளராக இருக்கும் ஆண்ட்ரூ பேஸ்விச்சையும் மேற்கோளிட்டுள்ளது;
அவர் "சிறிய அளவில் கட்டாய இராணுவப் பணிக்கு ஆள் சேர்க்கும் அமைப்பு, தற்போது இருக்கும் தன்னார்வ பிரிவுடன்
சேர்க்கப்பட வேண்டும்; அப்பொழுது ஒரு சிறிய எண்ணிக்கையில் கட்டாயமாக சேர்க்கப்பட்டவர்கள் இருப்பவர்களுடன்
இணைக்கப்பட முடியும்." என்று கூறியுள்ளார். "ஒரு வகையான 'தேசியப் பணியின்" பகுதியாக இளைஞர்கள் ஒரு
பரந்த திட்டத்தின்கீழ் இராணுவ சேவையை மேற்கொள்ளுவது இதில் அடக்கப்படலாம்" என்று ஜேர்னல் குறித்துள்ளது.
இந்தத் திட்டம் 2006 தேசிய காங்கிரஸ் தேர்தல் காலத்தில் இருந்தே ஜனநாயகக்
கட்சியின் அரங்கில் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுவருகிறது. ஜேர்னல் இடம்
Bacevich
"கட்டாய இராணுவசேவை என்பது இன்னும் பரந்த அளவில் அமெரிக்கர்களை இராணுவத்துடன் தொடர்புபடுத்தி
கொள்கை இயற்றுபவர்களுக்கு ஒரு தடுப்பை கொடுத்துவிடும்... ஆனால் இப்பிரச்சினையை பற்றி விவாதிக்க
வேண்டிய காலமும் வந்துவிட்டது; ஏனெனில் ஈராக்கிற்கு வருங்காலத்தில் அதிகமான துருப்புக்களை அனுப்பும்
பிரச்சினை இராணுவத்தால் எதிர்கொள்ளப்படும்" என்றார். |