WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் : உலக பொருளாதாரம்
World economy: Credit crunch fallout begins to spread
உலகப் பொருளாதாரம்: கடன்கள் நெருக்கடியின் விளைவுகள் பரவத் தொடங்குகின்றன
By Nick Beams
24 August 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
பங்குச் சந்தைகள் குறைந்த பட்சம் தற்போதைக்கேனும் ஸ்திரமடைந்துள்ள நிலைமையில்
அமெரிக்க குறைந்த பிணையுள்ள அடைமானச் சந்தையின்(subprime
mortgage market) நெருக்கடியினால் தோற்றுவிக்கப்பட்ட
கடன் நெருக்கடியின் விளைவுகள், இப்பொழுது வங்கிகள், நிதிய அமைப்புக்கள் மற்றும் பொருளாதாரம் முழுவதும்
படரத் தொடங்கிவிட்டன.
இவ்வாரம், இந்த நிதிய தாக்கங்கள் பிரிட்டனுக்கும் படர்ந்தது; அங்கு
Halifax and Bank of Scotland
இன் உரிமையாளரான HBOS
ஒரு $37 பில்லியன் கடனில் உள்ள நிதிய அமைப்பான
Grampin இற்கு கடன் உதவி கொடுப்பதாக அறிவித்துள்ளது;
அந்நிறுவனம் கடன்களை மறுசீரமைத்து அளிக்கும் பணியில் உள்ளது; இதில் அடமானங்கள், கடன் அட்டைகள் மற்றும்
மோட்டார் வாகனக் கடன்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. ஏற்றுக்கொள்ளத்தக்க மட்டத்திற்கு சந்தை நிதிநிலை
முன்னேறும் வரையில் இந்த அமைப்பிற்கான நிதி வழங்கல் தொடரும் என்று வங்கி கூறியுள்ளது.
ஜேர்மனியின் இரண்டு வங்கிகளான
IKB,
SachsenLB
ஆகியவை ஏற்கனவே மிகக் கடினமாக நிதி நீர்மை நெருக்கடியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,
பிரச்சினைகள் நிதிய கட்டமைப்பினுள் மிக ஆழ்ந்து பரவியுள்ளன என்பது தெளிவாகிவிட்டது. திங்களன்று
Financial Times
குறிப்பிட்டது போல், "SachsenLB, IKB
இரண்டும் சிறிய அளவில் பங்கு கொண்டிருந்தாலும், அவற்றின் வீழ்ச்சியும் அதையொட்டி ஜேர்மனியின் மத்திய வங்கி பெற்ற
சங்கடமும் ஜேர்மனிக்கு அப்பாலும் பரவிவிட்டன. நிதியச் சந்தைகளும் கொள்கை வகுப்பாளர்களும் இன்னும் கூடுதலான
வங்கி நெருக்கடிகள் வருமா, வங்கிக் கட்டுப்பாட்டு முறைகள் உண்மையில் நடப்பவற்றை கட்டுப்படுத்த முடியுமா
என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்."
WestLB என்னும் மற்றொரு அரசுக்கு
சொந்தமான பிராந்திய வங்கியின் தலைமை நிர்வாகியான அலெக்ஸான்டர் ஸ்ரூல்மான் இன் கருத்தின்படி, ஜேர்மனிய
வங்கிகள் எதிர்கொண்டுள்ள நிலைமை "நெருக்கடியற்றவை அல்ல" எனக் கூறுவதற்கில்லை. "வெளிநாட்டுப் பங்காளிகள்
ஜேர்மனிய வங்கிகளுக்கு கடன் அளிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர் என்று உணர்கிறோம். மற்ற நாடுகள் நம்மை
துண்டிக்கும் நிலையில் ஜேர்மனியில் ஒரு வங்கி நெருக்கடியை நாம் எதிர்கொண்டால், மற்ற வங்கிகளும் கஷ்டங்களை
எதிர்கொள்ளும்."
ஜேர்மனிய வங்கி முறை, கடன் நெருக்கடியினால் மிகவும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ள
முறைகளில் ஒன்றாகும்; ஏனெனில், குறிப்பாக அரசுடமை வங்கியான
Landesbanken
போன்ற சிறிய வங்கிகள் உள்நாட்டுச் சந்தை வீழ்ச்சி மற்றும் பெருகிய
போட்டியை எதிர்நோக்கவும் கடந்த சில ஆண்டுகளாக ஆபத்து நிறைந்த நிதிய முதலீடுகளில் ஈடுபட்டன.
Landesbanken
ஐரோப்பாவின் 30 பெரும் உயர் வங்கிகளுள் அடங்காவிட்டாலும், அவை அனைத்துமே 30 முக்கியமான
இடைத்தரகர்களுள் உள்ளடங்குகின்றன.
வங்கித் துறையில் தற்போதுள்ள சிக்கல்கள், ஐரோப்பிய மத்திய வங்கி (European
Central Bank ECB) அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ள
வட்டி விகித உயர்வை இரத்து செய்யுமாறு தொழிற்துறையினர் கோரிக்கையை வைத்துள்ளனர். ஜேர்மனிய வணிக,
தொழில் குழுமத்தின் (DIHK)
கருத்தின்படி வங்கிகள் ஏற்கனவே கடன் கொடுப்பதற்கான நிபந்தனைகளை கடினப்படுத்தி சிறு நிறுவனங்களின்
கடன்வாங்கும் செலவினங்களை அதிகப்படுத்திவிட்டன.
ஐரோப்பிய மத்திய வங்கியிடம் வட்டிவிகிதங்களை உயர்த்தக் கூடாது என்ற
கோரிக்கையை எழுப்பிய ஜேர்மனிய வணிக, தொழில் குழுமத்தின் தலைமைப் பொருளாதார வல்லுனரான அக்ஸெல்
நீட்ஷ்க கூறியதாவது: "கடன் சந்தையில் நாம் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு பாரிய தாக்கத்தை
கொடுக்கலாம், பொருளாதார இயக்கத்தை வரும் மாதங்களில், ஜேர்மனியில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும்
முடக்கக்கூடிய தன்மை தோன்றக்கூடும்." நடுத்தர ஜேர்மனிய நிறுவனங்களில் இருந்து ஜூன் மாத நடுப்பகுதியில்
இருந்தே ஜேர்மனிய வணிக, தொழில் குழுமம் அபாயக் குரல்களைக் கேட்டு வருவதாகவும் இவர் கூறினார்.
பரந்த பொருளாதாரத்தில் சேரக்கூடிய விளைவுகளும் சர்வதேச நிதிய அமைப்பின்
இரண்டாம் உயர் அதிகாரியான ஜோன் லிப்ஸ்கி விடுத்த எச்சரிக்கையின் பொருளுரையாக அமைந்தது.
Financial Times
இடம் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை
நிர்வாக இயக்குனர் நிதிய சந்தைக் கொந்தளிப்பு "ஐயத்திற்கு இடமின்றி பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்"
என்று எச்சரிக்கை விடுத்தார். "வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் சந்தைகள்" என்று அழைக்கப்படுபவை நெருக்கடியை
இதுகாறும் எதிர்த்து நின்றாலும், பாதிப்பே இருக்காது என்று கருதிக் கொள்வது "அதீதநம்பிக்கை தன்மை" ஆகவே
இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.
கொந்தளிப்பிற்கு விரைவில் முடிவு வராது; ஏனெனில் எந்த அளவிற்கு பொருளாதார
வளர்ச்சிக்கு இது சேதம் ஏற்படுத்தும் என்பது பற்றி உறுதியாக நிர்ணயிக்கப்படவில்லை. ஆபத்து கொடுக்கக்கூடிய
முதலீடுகளில் தாங்கள் எந்த அளவிற்கு ஈடுபட்டுள்ளோம் என்பது பற்றி உண்மையான விவரங்களை வெளிப்படையாக
வங்கிகள் கூறாததால் முழு நிதிய அமைப்புமுறைக்கும் ஆபத்துக்கள் நேரிடலாம்.
"வெளிப்படைத் தன்மை இல்லாதது சந்தையில் சந்தேகங்களை வெடிப்புத் தன்மைக்கு
உட்படுத்திவிடும். சில நேரங்களில் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட நிதிய அமைப்புக்கள் இருப்பு நிலைக் குறிப்பில்
காட்டப்படாத ஆபத்துக்களையும் மேற்கொள்ளுகின்றனர், அவை அவற்றின் நடைமுறையில் மறைமுக தாக்கங்களை
கொண்டிருப்பதையும் நாங்கள் காண்கிறோம்" என்று லிப்ஸ்கி கூறினார். பெரிய நிறுவனங்களின் ஆபத்து நிலைமை
பற்றி உறுதியற்ற தன்மையை இது ஏற்படுத்தியுள்ளது; அது நிதியச் சந்தையின் சில பகுதிகளில் நீர்மை வரண்டு
போவதற்குக் காரணமாக இருக்கிறது.
பரந்த பொருளாதாரத்தை பொறுத்த வரையில், முக்கியமான அச்சம் அமெரிக்க
வீடுகள் சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு நுகர்வுச் செலவினங்களுக்கு வழிவகுத்து மந்த நிலையை ஏற்படுத்தவும்
கூடும் என்பதுதான். Countrywide Financial
உடைய தலைமை நிர்வாக அதிகாரியான அங்கெலோ மொஸிலோ வீடுகள் சந்தைகள் முன்னேற்றம் ஏதும்
காட்டுவதாகத் தெரியவில்லை என்று எச்சரித்தார்; அவர் கூறியதாவது: "அப்படித்தான் நினைக்கிறேன் ...
உண்மையான பாதிப்பு இருக்காது என்று நான் நம்பும்படி இல்லை." அமெரிக்க வீட்கள் சந்தையில் "மிக
மோசமான நிலை" ஏற்பட்டுவிட்டது என்றும் "சூழ்நிலை சரியாகிக் கொண்டிருக்கிறது எனக் கூறுவதற்கில்லை" என்றும்
அவர் தெரிவித்தார்.
தொழில்துறையின் சமீபத்திய புள்ளி விவரங்கள், அளவைகள் ஆகியவையும் இதைத்தான்
குறிக்கின்றன. புதிய வீடுகளின் சராசரி விலை மார்ச் மாதம் $262,000 என்பதில் இருந்து ஜூன் மாத்தில்
$237,000 என்று கிட்டத்தட்ட மூன்று மாதங்களிலேயே 10 சதவிகிதம் சரிவுற்றுவிட்டது; விற்காத வீடுகளின் மீது
குவிந்துள்ள சுமை 7, 8 மாத விநியோகங்களுக்கு ஒப்பாக அமையக்கூடும்.
Realty Trac கொடுத்துள்ள
தகவல்களின்படி, இவ்வாண்டு முதல் ஆறுமாதங்களில் விற்பனை ஆணையை (நீதிமன்றத்தினூடாகவோ அல்லது
கடன்வழங்குனராலோ) எதிர்கொள்ளும் அமெரிக்க வீடுகளின் எண்ணிக்கை 58 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
மொத்தத்தில் 573,397
வீடுகள் ஏதேனும் ஒரு விதத்தில் விற்பனை ஆணை (நீதிமன்றத்தினூடாகவோ
அல்லது கடன்வழங்குனராலோ) என்ற நிலையை ஆண்டின் முதல் பகுதியில் எதிர்நோக்கி நின்றன; இதில் மாதாந்த
தவணை கட்டாதது, ஏல விற்பனை அறிவிப்புக்கள், கடன் கொடுத்தவர்கள் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவை
அடங்கும். இவ்வாறு விற்பனை ஆணை என்ற எண்ணிக்கை ஆண்டு இறுதிக்குள் 2 மில்லியனை அடையக்கூடும்.
வீடுகள்துறையில் ஏற்பட்டுள் சரிவு பொருளாதாரத்தின் மற்ற பிரிவுகளிலும் பாதிப்பை
ஏற்படுத்திக் கொண்டு வருகிறது; Wal-Mart, Home
Depot, Macy's ஆகிய நிறுவனங்களின் இலாப எச்சரிக்கைகள்
அதைத்தான் காட்டுகின்றன. ஜூலை மாதத்தில் கார் விற்பனை ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாக
இருந்தது.
அடைமானக் கடன்கள் நெருக்கடித் துறையில் இப்படிச் செயல்படும் வழிவகைகள், அமெரிக்க
பொருளாதாரத்தின் மொத்தத்தையும் தாக்கும் நெருக்கடி ஆகியவை நியூ யோர்க் டைம்ஸ் திங்களன்று வெளியிட்ட
வருமான விவரங்கள் பற்றிய ஒரு கட்டுரையில் புலனாயின. வரிவிவரங்கள் பற்றிய ஆய்வு 2005ல் சராசரி
வருமானம் 2000 ஆண்டைவிட 1 சதவிகிதம் குறைவாக, பணவீக்கத்திற்கான சரிபடுத்திய வகைக்கும் பின்னரும்,
இருந்தது. 2000ம் ஆண்டில் பொருளாதார விரிவாக்கத்தின் கடைசி சுற்றின் உச்ச கட்டத்தில் ஈட்டியதைவிட, அமெரிக்காவின்
ஊதியம் சம்பாதிப்பவர்கள் குறைந்த அளவே பெற்றுள்ளனர் என்பது ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது.
இது போருக்குப் பிந்தைய காலத்தில் "முற்றிலும் புதிய அனுபவம் ஆகும்"; இக்காலத்தில் வருமான வரி செலுத்தும்
படிவங்களின் மொத்த வருமானங்கள் ஒவ்வொரு ஆண்டும் பெருகிய வகையில்தான் இருந்தன; 2001ம் ஆண்டு மட்டும்
அதற்கு விதிவிலக்கு ஏற்பட்டது.
இந்த புள்ளிவிவரங்கள் அமெரிக்க பொருளாதாரத்தில் 2000-2001 மந்த நிலைக்
காலத்திற்கு பின் முக்கிய பங்கு வகித்த வீடுகள் குமிழ் (Housing
bubble) உறுதியாகச் சரிவைத்தான் காணும் என்பதை தெளிவாக்குகின்றன.
வீடுகளின் விலைகள் மற்றும் நுகர்வுச் செலவினங்கள் பொதுவாக கடன் விரிவாக்கம் மற்றும் குறைந்த வட்டி விகிதம்
ஆகியவற்றால் மிகைப்படும்போது, பெரும்பாலான அமெரிக்க உழைக்கும் மக்களின் உண்மையான வருமானம் எதிர்த்திசையில்தான்
சென்று கொண்டிருக்கிறது; இது "கத்தரிக்கோல் நெருக்கடி" என்னும் நிலைக்கான கூறுபாடுகளை தோற்றுவித்துள்ளது.
இப்பொழுது குமிழ் வெடிக்கும் வழிவகை வந்துள்ள அளவில், பொருளாதார சக்திகள் அமெரிக்காவில் மட்டும்
அல்லாமல் உலகப் பொருளாதாரம் முழுவதிலுமே பெரு மந்த நிலையை உருவாக்கக் கூடும். |