World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Wild gyrations on world markets

உலக சந்தைகள் மீதான கட்டுப்பாடு இல்லாத சுழற்சிகள்

By Nick Beams
17 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

உலகின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தலையீடு செய்துள்ளபோதிலும், உலகப் பங்குச் சந்தைகள் அமெரிக்காவில் குறைந்த பிணையுள்ள அடைமானச் சந்தையில் (Subprime mortgage market) ஏற்பட்டுள்ள நெருக்கடி, ஏனைய துறைகளுக்கும் நேரலாம் என்ற பெரும் அச்சத்தில் கடும் ஏற்றத் தாழ்வுகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றன.

வியாழனன்று வோல்ஸ்ட்ரீட் கடுமையான ஏற்ற இறக்கங்களை சந்தித்தது; ஒரு கட்டத்தில் 343 புள்ளிகள் குறைந்து பின்னர் நாள் இறுதியில் 15.69 புள்ளிகள் குறைவாக முடிந்தது.

இதற்கு முன்னதாக ஆசிய, ஐரோப்பியச் சந்தைகள் புதனன்று வோல்ஸ்ட்ரீட்டில் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து அலையென விற்பனைகளால் பாதிக்கப்பட்டன; இதையொட்டி Dow 13,000 புள்ளிகளையும் விட குறைந்தது; இது ஐந்து நாட்களில் 800 புள்ளிகளுக்கு மேல் இழந்துள்ளது.

ஆஸ்திரேலிய சந்தை 1.54 சதவிகிதம் குறைந்து மூடியது; இதற்கு முன்னதாக 5 சதவிகிதத்திற்கும் மேலான சரிவை கண்டது. ஜப்பானியச் சந்தை 2 சதவிகிதம், சிங்கப்பூர் 4.3 சதவிகிதம், மும்பை 3.7 சதவிகிதம், மணிலா 6 சதவிகிதம் என்று சரிந்தன. 850 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய அமெரிக்க குறைந்த பிணையுள்ள அடைமான பத்திரங்களை கொண்டிருக்கும், தென்கொரியாவில் உள்ள வங்கிகளும் முதலீட்டாளர்களும் குறைந்தது 10 சதவிகிதமாவது இழப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அங்கு பங்குகள் கிட்டத்தட்ட 7 சதவிகிதம் மதிப்பு குறைவடைந்தன; நாட்டின் தலைவர் Roh Moohyun முதலீட்டாளர்கள் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பின்னரும் இந்த நிலை அங்கு ஏற்பட்டது.

ஆனால் பகுதி முழுவதும் அச்சம்தான் அன்று பெருகி நின்றது. Bloomberg இடம் ஒரு மலேசிய நிதிய ஆய்வாளர் கூறினார்: "தெருக்களில் குருதி பாய்கிறது. ஒவ்வொருவரும் பெரும் பீதியில் உள்ளனர்; பெரும் பீதி அடைவதற்கும் காரணம் உள்ளது. மிகப் பெரிய அளவில் வெடிப்பு உள்ளது; எங்கு இது முடியும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. நிதி பரிமாற்றத்தன்மை வறண்டுகொண்டிருக்கிறது."

ஐரோப்பாவிலும் விற்பனைகள் தொடர்ந்தன; அங்கு பிரிட்டனின் FTSE 4 சதவிகிதம் குறைந்து மார்ச் மாதத்தில் இருந்து முதல் தடவையாக 6,000 புள்ளிக்கும் கீழாக குறைந்தது; கடந்த வாரத்தில் முக்கிய பங்குகளில் இது $216.9 பில்லியன் மொத்த இழப்பை உருவாக்கியது. மிகப் பெரிய சரிவுகள் நிதியப் பங்குகளில் ஏற்பட்டன; இது கடன் நிலைமைகள் பற்றிய கவலைகளை பிரதிபலித்தது. ஆனால் உலோகப் பங்குகளும் கணிசமான சரிவைக் காட்டின; உலகப் பொருளாதார வளர்ச்சியில் நிதிய நெருக்கடியின் தாக்கம் உருவாக்ககூடும் என்ற பயத்தின் விளைவாக இது நேர்ந்தது.

பிரான்சில் CAC குறியீடு கிட்டத்தட்ட 2.5 சதவிகிதம் சரிந்தது. ஜேர்மனியின் DAX குறியீடு கிட்டத்தட்ட 2 சதவிகிதம் குறைந்தது. Credit Suisse இல் உள்ள ஆய்வாளர்கள் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலிடம், வியாழன் வர்த்தகம் "'காத்திரமான வகையில்' ஆபத்து உடைய கையிருப்புக்களை திருத்துதலுக்கும், இன்னும் கூடுதலான வகையில் விஷயங்களை கையாளுதல் என்பதற்கு இடையே ஒரு பிரிவுத்தூண் போல் ஏற்பட்டது; இது உண்மையான பொருளாதார இடர்பாடுகளுக்கு வழிவகுக்கக்கூடும்." என கூறினார்.

மிகப் பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்று என கருதப்படும், பெரும் நிறுவனங்கள் குறுகிய காலக் கடன்களை பெறும் வழிவகையான வணிகத் தாள்கள் (Commercial paper) கிட்டத்தட்ட வறண்டுவிட்டது என்ற எச்சரிக்கையின் பேரில் வியாழனன்று வோல்ஸ்ட்ரீட் சந்தை திறந்தவுடன், Dow உடனடியாக 80 புள்ளிகள் குறைந்தது. தனியார் விலை நிர்ணயமற்ற பங்குகளின் மாபெரும் (Private equity giant) அமைப்பாளரான Kohnberg Kravis Roberts உடைய நிலங்கள் பிரிவு $5 பில்லியன் வணிகத் தாள் திருப்பிக் கொடுத்தலை தாமதப்படுத்துவதாக வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்தது; இந்த நடவடிக்கை சந்தையை தாக்கிய "மிகப்பெரிய வெடிப்பு ஆகும்" என்று ஜேர்னல் விளக்கியது.

அத்தகைய நெருக்கடியின் விளைவுத் திறன்கள் அமெரிக்காவின் மிகப்பெரிய இல்லங்கள் மீது அடைமானக் கடன் கொடுக்கும் Countrywide Financial விற்பனைப் பரிந்துரைக்கு வரக்கூடும் என்ற குறிப்பை ஏற்படுத்தின; அவை Merrill Lynch இன் ஆய்வாளரான Kenneth Bruce இனால் வெளியிடப்பட்டன; அவற்றில் அவர் நிறுவனம் திவாலாகக் கூடும் என்று எச்சரித்திருந்தார்.

"Countrywide மீது தக்க நிதிய அழுத்தம் கொண்டுவரப்படாவிட்டால், அல்லது சந்தை அது திறமையுடன் இயங்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டால், அதையடுத்து நடைமுறை வடிவமைப்பு முறியக் கூடும்; அது மிகவும் தாக்கம் மிக்க திவால் என்பதில் முடிந்துவிடும்" என்று அவர் புதனன்று எழுதினார். ஒரு பலவீனமான சந்தையில் மதிப்புகளில் இழப்பு ஏற்பட்டுவிட்டால், Countrywide "திவாலாகிவிடக்கூடும்" என்ற நிலை உள்ளது.

வியாழனன்று சந்தை திறப்பதற்கு முன், Countrywide, தான் 40 வங்கிகள் குழு அளித்துள்ள $11.5 பில்லியன் கடன்கள் பற்றாக்குறையில் இருப்பதாகக் கருத்து தெரிவித்தது. ஏற்கனவே இந்த ஆண்டு தங்கள் மதிப்பில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேலானதை இழந்துவிட்ட Countryside உடைய பங்குகள் இச்செய்தியைக் கேட்டவுடன் இன்னும் சரிந்தன.

கடன் நிதிய நெருக்கடியின் காரணங்களுள் ஒன்றான வீடுகள் கட்டுவதில் ஏற்பட்டுள்ள மந்தநிலையின் அதிகரிப்பு வணிகத்துறையில் இருந்து வெளிவந்த புள்ளிவிவரங்களில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது; அவை ஜீலை மாதம் தொடங்கிய புதிய வீடுகள் கட்டுவதில் 6 சதவிகிதத்திற்கும் மேலான சரிவைக் காட்டியுள்ளன. புதிய வீடுகள் தொடக்கம் என்பது இப்பொழுது மிக குறைவான மட்டத்தில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உள்ளன; 18 மாதமாக இருக்கும் பெரு மந்த நிலை முடியும் அடையாளத்தையும் காட்டவில்லை.

Global Insight பொருளாதார வல்லுனரான Brian Bethune, Bloomberg இடம் வீட்டு சந்தை "இன்னும் கீழ்நோக்கு சரிவில்தான் உள்ளது" என்றும் "குறைவான வீட்டு தேவை கேள்வி'' இன்னும் கூடுதலாக வீடுகள் மீது அடைமானக் கடன் கொடுக்கும் சந்தைகளில் நிலவும் கடுமையான நெருக்கடியினால் இன்னும் கூடுதலாக அரிக்கப்பட்டுவிட்டன" என்றும் கூறினார். அதே நேரத்தில் இருக்கும் வீடுகளின் விற்பனை 41 மாநிலங்களில் சரிவு அடைந்துவிட்டது என்றும் வீடுகளின் விலைகள் பெருநகரங்களில் மூன்றில் ஒரு பங்கில் குறைந்து விட்டன.

நிதியச் சந்தையின் கீழ்முகம் பற்றிய தன்னுடைய முதல் பொதுக் கருத்தை வெளியிட்ட அமெரிக்க கருவூல மந்திரியான ஹென்ரி போல்சன், இந்தக் கொந்தளிப்பு "பொருளாதாரத்தின் வளர்ச்சியின் மீது கடுமையான பாதிப்பைக் கொடுக்கும்", ஆனால் சந்தைகளும் அமெரிக்கப் பொருளாதாரமும் இழப்புக்களை ஒரு பெரும் மந்த நிலையை தூண்டிவிடுமானால் அதை ஏற்றுக்கொள்வதற்கு அவை ''பலமானதாக'' உள்ளன என்று அவர் கூறினார். வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் இக்கொந்தளிப்பு "வலுவான அடிப்படைகள் உள்ள நல்ல உலகப் பொருளாதாரத்தின் பின்னணியில்தான்" ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒரு முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக Goldman Sachs இல் இருந்த பெளல்சன் தன்னுடைய 32 ஆண்டு வோல்ஸ்ட்ரீட் அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, "இது நாம் பெற்றிருந்ததிலேயே, ஒரு மிகப்பெரிய உலக வலிமை உடைய பொருளாதாரம் ஆகும்" என்று குறிப்பிட்டார்.

தற்போதைய நெருக்கடிக்கும், 1998ல் ரஷ்யா திருப்பிக் கொடுக்க முடியாமல் இருந்த நிலைமையில் அமெரிக்க இருப்பு நிதிய அமைப்பான Long Term Capital நிர்வாகம் உலக கடன் சந்தைகளை பற்றி எடுத்துக் கொள்ளுவேன் என்று விடுத்த அச்சுறுத்தலுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு என்று போல்சன் கூறினார்.

அமெரிக்க பொருளாதாரம் மெதுவாகச் சென்று கொண்டிருக்கிறது என்றாலும், சர்வதேச நாணய நிதியம் அண்மையில் உலகப் பொருளாதாரம், அசாதாரணமான முறையில் வலுவான வளர்ச்சியை மூன்று ஆண்டுகள் பெற்றதை அடுத்து, இந்த ஆண்டு 5 சதவிகிதத்திற்கும் மேலான வளர்ச்சியைப் பெறும் என்றும் கணித்துள்ளது.

சமீப காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் வலுவான வளர்ச்சி அடைந்துள்ளது என்பது, இந்த நெருக்கடி ஏதோ ஒருவகை "சந்தைப் புயல்", விரைவில் ஓய்ந்துவிடும் என்ற பொருளைத் தராது. ஏனெனில் கொந்தளிப்பு புயலே இரண்டு அடிப்படை நிகழ்வுப்போக்குகளின் விளைவுதான். அவை கடன்களின் விரிவாக்கமும் உண்மை ஊதியங்களில் வெட்டும் ஆகும். இவைதான் உலகப் பொருளாதார வளர்ச்சியின் தற்போதைய நிலைக்கு அடிப்படையாய் இருக்கின்றன.

வட்டி விகிதத்தை குறைத்தல்

தற்போதைய நெருக்கடியின் தொடக்கங்கள் 1990களின் நடுப்பகுதியில் இருந்து வளர்ச்சியுற்ற அமெரிக்க பங்குச் சந்தை குமிழில் உள்ளன. 1996ஐ ஒட்டி, அதன் பிந்தைய கூட்டங்களின் குறிப்புக்களில் தெளிவாக்கப்பட்டது போல், அமெரிக்க மத்திய வங்கி நிதிக் கட்டுப்பாட்டுக் குழுவும் அதன் தலைவர் அலன் கிரீன்ஸ்பானுக்கும் சந்தையின் எழுச்சி பெருகிய முறையில் உண்மை பொருளாதாரத்தின் அடிப்படையில் இருக்கும் நிலையுடன் தொடர்பு கொள்ளாமல் இருந்தது என்பதை விளங்கியிருந்தார்.

ஆனால் 1997 முற்பகுதியில் வட்டி விகித உயர்விற்கு கடுமையான எதிர்ப்பை அடுத்து, கிரீன்ஸ்பான் "பகுத்தறிவற்ற களிப்பை" அடக்க முற்படும் செயலை கைவிட்டார். நிதியக் குமிழ் இன்னும் விரைவாக 1997ல் ஆசிய நிதிய நெருக்கடி, ரஷ்யா திருப்பிக் கொடுக்காதது இவற்றை அடுத்து உயர்ந்தது.

சந்தை புதிய உயரங்களை எட்டியபோது, மத்திய வங்கித் தலைவர் அதை ஊக்குவிப்பதில் முதலில் இருந்தார்; "புதிய பொருளாதாரத்தில்" தொழில்நுட்ப முன்னேற்றங்களால் தோற்றுவிக்கப்பட்ட உற்பத்தித்திறன் ஆதாயங்களை அடுத்தே பங்குகளின் மதிப்பு பெரிதும் உயர்ந்ததாக அவர் அறிவித்தார். சந்தைகளில் பணம் பெருக்கெடுத்து குவிக்கப்பட்டதை அடுத்து பங்குகளின் விலைகள் உயர்ந்தன. ஆனால் ஒரு சிறிய காலத்திற்கு மட்டுமே இந்த மாபெரும் Ponzi திட்டம் தொடரும் என்ற நிலையில், இந்த உயர்வின் பரப்பு மட்டுப்படுத்தப்பட்டது; இறுதிப்பகுப்பாய்வில் மூலதனத்தின் அடித்தளத்தில் இருக்கும் இலாப விகிதம்தான் பங்குகள் பிரதிபலிக்க இயலும்.

இங்கு அமெரிக்காவின் தேசிய கணக்குகள் காட்டியுள்ளது போல், நிலவரம் வேறு திசையை நோக்கிச் சென்றது. 1997க்கு பின்னர் பங்குச் சந்தைகள் விரைவில் உயர்ந்த நிலையில், அமெரிக்க நிதியமற்ற நிதி நிறுவனங்களின் இலாபவிகிதம் குறையத் தொடங்கியது. Enron, WorldComm போன்று சந்தையில் மிக அதிக அளவில் மோசடி நடவடிக்கைகளை செய்தது அம்பலமாகியபோது, இதையொட்டி 2000-01 ல் சந்தை கீழ் நோக்கித் திரும்பியது.

கிரீன்ஸ்பானின் கருத்தின்படி, இந்த அனுபவத்தின் முக்கிய படிப்பினை நிதியக் குமிழ்கள் தோன்றுவதை மத்திய வங்கி தடுக்க முற்படக்கூடாது என்றும் அவை வெடிக்கும்போது வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று இருந்தது; அதாவது வேறுவிதமாக கூறினால், ஒரு புதிய குமிழை உருவாக்க வேண்டும். இதையொட்டி மத்தியவங்கி விகிதங்களை 2001ல் இருந்து குறைக்க தலைப்பட்டது; முக்கியமாக குறுகிய கால விகிதம் 1 சதவிகிதம்தான் இருக்க வேண்டும் என்ற முக்கியத்துவத்தை உணர்த்தியது; ஜூன் 2004 வரை அது அப்படித்தான் இருந்தது; அச்சமயம் உயர்வு அதிகரிப்பு என்ற வகையில் 0.25 சதவிகிதப் புள்ளிகள் தொடக்கப்பட்டன.

வட்டி விகிதக் குறைப்புக்கள் ஒரு புதிய நிதியக் குமிழுக்கான சூழ்நிலையை உருவாக்கின; இந்நேரத்தில் அது வீடுகள் கடன் சந்தையில் நிகழ்ந்தது. வீடுகளின் விலைகள் உயர்ந்த அளவில், வோல்ஸ்ட்ரீட் நிதிய நிறுவனங்கள் வாய்ப்பைப் பயன்படுத்தி CDO அமைப்புகள் (Collateralized Debt Obligations- சொத்துக்களால் உத்தரவாதமளிக்கப்பட்ட கடன்கள்) கடனுக்கான உத்தரவாதப் பத்திரங்களை வாங்கியும் விற்றும் இலாபங்களை உயர்த்திக் கொண்டன; அச்செயற்பாடுகளில் ஏராளமான வீடுகள் கடன்கள் மற்றும் பல தரப்பட்ட ஆபத்தை அவை எதிர்கொள்ளும் வகையில் மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. மிகப் பெரிய இலாபங்கள் அதிக ஆபத்து உள்ள நடவடிக்கைகளில் கிட்டின; அவைதான் குறைந்த பிணையுள்ள அடைமான கடன்கள் (sub-prime mortgages) என்று அழைக்கப்பட்டவை ஆகும்; அதாவது திருப்பிக் கட்ட இயலாதவர்களுக்கு கொடுக்கப்படும் கடன்கள் பிரிவில் இது நிகழ்ந்தது.

1990 களின் நடுப்பகுதியில் முதல் முதலாக ஆவணமற்ற கடன்கள் அளிக்கப்பட்டன; ஆனால் இது வீட்டின் வாங்கும் விலையில் 70 சதவிகிதத்திற்கும் மிகாமல் இருந்தது. 2001க்குப் பின்னர் இது மாறியது; வோல்ஸ்ட்ரீட் நிறுவனங்கள் 90 சதவிகிதத்தையும் பின்னர் 100 சதவிகிதத்திலும் ஆவணமற்ற கடன்களை வாங்க முன்வந்தன. இதன் விளைவாக கடன்கொடுப்பவர்கள் கூடுதலான முறையில் குறைந்த பிணையுள்ள கடன்களில் ஈடுபட்டனர்; இத்தகைய கடன்கள் தங்களுடைய கைகளில் இருந்து மிகப் பெரிய நிதிய அமைப்புக்களால் எடுத்துக் கொள்ளப்பட்டுவிடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். புதிய குறைந்த பிணையுள்ள கடன்கள் 2005, 2006 ஆண்டுகளில் $600 பில்லியனுக்கும் மேற்பட்ட மொத்தத்தை கொண்டிருந்தன; 2001ல் இது $160 பில்லியனாகத்தான் இருந்தது.

ஊதியங்கள் தேக்கம் அடைகின்ற அதேவேளை, இலாபங்கள் உயர்கின்றன

வட்டி விகிதங்கள் குறைவாக இருந்து பண வரத்து சந்தைக்கு எளிதில் வந்த வண்ணம் இருந்த வரை, இல்லங்கள் கடன் குமிழ் வளர்ச்சியுற்றது. ஆனால் விரைவில் இது தற்போதைய அமெரிக்க மற்றும் ஊகப் பொருளாதாரத்தின் மற்ற அடிப்படை கூறுபாடுகளுடன் மோதல் கொண்டது; அதாவது உண்மை ஊதியங்களில் ஏற்பட்ட தேக்க நிலை மற்றும் தேசிய வருமானத்தை ஊதியத்திற்கு என்று பகிர்ந்து கொடுக்காமல் இலாபத்திற்கு என்று கொடுக்கும் மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

மார்ச் 29 அன்று, வரவுசெலவுத் திட்டம் மற்றும் கொள்கை முன்னுரிமை மையம் (Centre on Budget and Policy Priorities), வணிகத் துறை புள்ளி விவரங்களின்படி 2006ல் தேசிய வருமானத்தில் ஊதியங்கள், வருமானங்கள் ஆகியவற்றிற்கு செல்லும் பங்கு அத்தகைய சான்றுகளை எழுத தொடங்கிய காலத்தில் இருந்து மிகக் குறைவாக ஆயிற்று என்று குறிப்பிட்டது. இலாபங்களுக்குச் செல்லும் பங்கு வருவாய்கள் சான்றுகளின்படி மிக அதிகமாயிற்று.

மேலும், 2001ல் இருந்து பொருளாதாரத்தை மீட்கும் காலத்தில், பெருநிறுவன இலாபங்கள் இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலம் எதிலும் இல்லாத அளவிற்கு விரைவான விகிதத்தை கண்டன. 2001 இறுதி வரையிலான தேசிய வருமானத்தில் 34 சதவிகிதம்தான் தொழிலாளர்களின் ஊதியங்கள் உயர்வைச் சென்று அடைந்தது. மேலும் சான்றுகளின்படி முதல்தடவையாக ஊதியங்களை விட, இலாபங்கள்தான் மிகப் பெரிய பங்கான 46 சதவிகிதத்தைக் கைப்பற்றின.

2001 பெருமந்த நிலைக்குப் பின் வந்த மீட்சி 1990களின் வடிவமைப்பையே பின்பற்றியது; தேசிய வருமானத்தில் ஊதியங்களுக்காக செல்லும் பங்கு இன்று இருப்பதைவிட 1.5 சதவிகிதப் புள்ளிகள்தான் சென்று அடைந்தன. சதவிகிதப் புள்ளி தேசிய வருமானத்தில் $117 பில்லியனை பிரதிபலிப்பதால், இதன் பொருள் $160 பில்லியனுக்கும் மேலான தொகை சாதாரண தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்களில் இருந்து பெரு நிதிய நிறுவனங்கள் அமைப்புக்கள் ஆகியவற்றை சென்றடைந்தன என்பதாகும்.

இந்த வருமான மறுபகிர்வுதான், இலாப விகிதங்களை தக்க வைத்துக்கொள்ளுவதில் மிக முக்கியமானது, வீடுகள் குமிழ் முடிவிற்கு வந்துவிடும் என்பதைத் தெரிவித்தது. தொடர்ந்து அதிகரித்த வீட்டு விலைகளை தொழிலாளர்கள் கொடுக்கும் திறன் மீதான உறுதியான வரம்புகள் இடப்பட்டன.

குறைந்த பிணையுள்ள கடன் சந்தையின் சரிவு, அடைமான சந்தை ஒட்டுமொத்தத்திலும் அதிகரிக்கும் சிக்கல்கள் இப்பொழுது உலகந்தழுவிய நிதியப் புயல் வெடிப்பிற்கு வழிவகுத்துள்ளன. ஒரு உலகந்தழுவிய பொருளாதாரப் பேரழிவு இப்பொழுது ஏற்படலாம் என்பது உலக முதலாளித்துவ பொருளாதாரத்தில் நிச்சயமாய் ஒரு வரலாற்றுத் தன்மையுடைய நெருக்கடி ஆகக்கூடும்; ஏனெனில் பெரு நிதிய அமைப்புக்கள் தங்கியுள்ள சந்தேகத்திற்கு உரிய நிதித் திட்டங்கள் ஒரு வீட்டை பாதுகாத்துக்கொள்ள முயலும் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் நாளாந்த போராட்டத்தில் தாம் ஆதாயமடையும் நோக்கத்தைக் கொண்டதாகும்.