World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

CIA 9/11 "accountability" report released: A whitewash that only raises more questions

CIA 9/11 "பொறுப்பு உடைமை" அறிக்கை வெளியிடல் : இன்னும் கூடுதலான வினாக்களை மட்டுமே எழுப்பும் வெள்ளைப் பூச்சு

By Patrick Martin
24 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

CIA க்கு பொறுப்புடைமை பற்றி உபதேசம் செய்வது என்பது வோல் ஸ்ட்ரீட்டுக்கு நியாயமான தன்மை பற்றி அல்லது வெள்ளை மாளிகைக்கு நேர்மை பற்றி உபதேசிப்பது போல் ஆகும். அது பயனற்றது என்பது மட்டுமின்றி, எதிர்விளைவுகளையும் கொடுத்துவிடும். இரட்டைச் செயல்கள் புரிதல், மோசடி செய்தல் மற்றும் பொய்கள் கூறுவது இவற்றில் திளைக்கும் தன்மையை இயல்பாகவே கொண்டுள்ள இந்நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சியையே போலித் தோற்றங்களாக ஆக்கிவிடும்.

"9/11 தாக்குதல்களை பொறுத்த வரையில் CIA ன் பொறுப்புடைமை பற்றிய அறிக்கை" என்று 2005 CIA தலைமை ஆய்வாளர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, செவ்வாயன்று இறுதியில் வெளியிடப்பட்ட செயல் சுருக்கம், 9/11 நிகழ்வுகளை தடுக்க தங்களால் இயன்றதை CIA அதிகாரிகள் செய்தனர் ஆனால் சில தவறுகளாலும் "முறையின் பிரச்சினைகளாலும்" தோல்வியுற்றனர் என்று அது வெள்ளைப் பூச்சு பூசியிருப்பது முற்றிலும் எதிர்பார்க்கப்பட்டதே ஆகும். எந்த CIA அதிகாரிகளும் சட்டத்தை மீறவில்லை என்றும் எவரும் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டுவிட்டது.

நிறுவனத்தில் 23 வருடம் பணியாற்றியுள்ள தலைமை ஆய்வாளர் ஜோன் ஹெல்கர்சனுடைய கருத்தின்படி, CIA ன் முகவர்கள் மிகச் சிறந்த விருப்பங்களைத்தான் கொண்டுள்ளனர், மிக உயர்ந்த அறநெறித் தன்மை படைத்தவர்கள், எப்பொழுதும் அமெரிக்க மக்களை பயங்கரவாதத்தினர் மற்றும் பிற தீமைபுரிவோரிடம் இருந்து காக்கும் தங்கள் பொறுப்புக்களைச் செயலாற்ற முயல்பவர்கள் என்று உள்ளது. அவர்கள் செயலில் சில நேரம் "தவறுகள்" செய்தால், அது அவர்களும் மனிதர்கள்தான் என்பதைத்தான் நிரூபணம் செய்யும்.

சித்திரவதை செய்தல், படுகொலை செய்தல் இன்னும் ஜனநாயக விரோத நாச விரோதச் செயல்கள் செய்தல் ஆகியவற்றில் உலகின் தலையாய செயல் அமைப்பாக இருக்கும் ஓர் அமைப்பை பற்றி இத்தகைய புகழாரச் சித்திரம், அரசியல் அறிவு சிறிதேனும் கொண்டிருப்பவர்களின் அறிவை அவமதிப்பது போல் உள்ளது. ஆயினும் கூட அமெரிக்க செய்தி ஊடகம் ஆர்வத்துடன் இதை உடன் தழுவிக் கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.

ஆறு ஆண்டுகளாக செய்தி ஊடகம் எவ்வித திறனாய்வும் இல்லாமல் செப்டம்பர் 11, 2001 அன்று "அமெரிக்கா" "பயங்கரவாதிகளால்" தாக்கப்பட்டது என்னும் கூற்றை கிளிப்பிள்ளை போல் கூறிவருகிறது; இந்த "பயங்கரவாதிகள்" ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் "அமெரிக்கா" கொடுத்த சம்பளத்தில் இருந்தவர்களால் வழிநடத்தப்பட்டனர் என்ற நல்ல ஆவண ஆதாரங்களை புறக்கணித்து இவை கூறப்படுகின்றன. மேலும் அமெரிக்க உளவுத்துறையுடன் அவர்களுடைய தொடர்புகள் தொடர்ந்தன என்று பல தகவல்கள் கூறுகின்றன; அதுவும் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீது விமானங்கள் மோதிய தினம் வரை அவை தொடர்ந்திருந்தன.

OIG அறிக்கையைப் பற்றி செய்தி ஊடகத்தின் தகவல்கள் நடைமுறை வழியை கடமையுணர்வுடன் எதிரொலிக்கின்றன; பெரிய அளவில் முன்னாள் CIA இயக்குனர் ஜோர்ஜ் டெனட் மற்றும் பிற உயர்மட்ட CIA அதிகாரிகளால் தவறான நிர்வாகம் பற்றி தலைமை ஆய்வாளரின் விமர்சனங்களையும் டெனட் மற்றும் தற்போதைய CIA அதிகாரிகள் கொடுக்கும் பதில்களையும் எதிரொலிக்கின்றன.

அறிக்கையில் இருக்கும் சிறிதளவு முக்கிய உண்மை வெளிப்பாடுகளை பற்றி ஒப்புமையில் மிகக் குறைந்த கவனம்தான் காட்டப்பட்டுள்ளது; அவை அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகளுக்கும் அல் கொய்தாவிற்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றி புதிய வினாக்களை எழுப்புவதுடன் 9/11 தாக்குதல்கள் வரையிலான காலத்தில் இப்பிரிவுகள் நடந்து கொண்ட முறையைப் பற்றியும் வினாவை எழுப்புகின்றன.

அறிக்கையில் பெரும்பகுதி CIA ன் ஆதாரத்துடன் கூடிய பல செயலற்ற தன்மை நிகழ்வுகளை மீண்டும் கூறுகிறது; இதில் மிக இழிவாக உள்ளது விளக்கப்படாத செயலான, வருங்காலத்தில் 9/11 கடத்தல்காரர்களாகப் போகும் நவப் அல்-ஹஸ்மி மற்றும் கலீட் அல் மிஹதர் ஆகியோரை 2000ம் ஆண்டு ஜனவரி, மார்ச்சிலேயே அவர்களைப் பற்றித் தெரிந்திருந்தும் CIA அவர்களை அமெரிக்க அரசாங்கக் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கத்தவறியமை இடம் பெற்றுள்ளது. இவர்கள் இருவரும் அல் கொய்தாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக அறியப்பட்டிருந்தது; அப்படியும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு விசாக்களைப் பெற்றிருந்தனர்.

அல் ஹஸ்மியும், அல் மிஹ்தரும் பின்னர் லொஸ் ஏஞ்சல்ஸிற்கு வந்தனர், சான் டியாகோவில் குடியேறினர்; அங்கு நகரத்தின் அரேபிய-அமெரிக்க சமூகத்தின் FBI க்கான முக்கிய தகவல் கொடுக்கும் ஒரு செளதி புலம் பெயர்ந்தவரின் இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்தனர். அவர்கள் விமானம் ஓட்டும் பாடங்களைக் கற்றனர்; அவ்வளவு சரியாகக் கற்கவில்லை; அவர்களில் ஒருவர் அல் மிஹிதர் பல முறை நாட்டில் இருந்து வெளியே சென்று திரும்பி வந்தார். செப்டம்பர் 2001ல் அவர்கள் வாஷிங்டன் DC பகுதிக்கு பறந்து வந்தனர், 9/11 கடத்தல்காரர்களை மேரிலாந்து மோட்டல் ஒன்றில் சந்தித்து, பின்னர் பென்டகனைத் தாக்கிய அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் 77ல் தற்கொலைத் தாக்குதலில் பங்கேற்றனர்.

முதல் தடவையாக அதிர வைக்கும் உண்மை 50 முதல் 60 CIA அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் இரண்டு அல்-கொய்தா உறுப்பினர்கள் வரக்கூடும் என்ற அறிக்கையை படித்திருந்தனர். அவர்கள் எவருமே சட்டப்படி எடுக்க வேண்டிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; அதாவது அந்நபர்களின் பெயர்களை அமெரிக்காவில் குடியேறுபவர்களின் முகவர்கள் பயன்படுத்தும் கண்காணிப்பு பட்டியலில், நுழையும்போது சோதிப்பதற்கு, சேர்க்கவில்லை. அதேபோல் அதிகாரிகள் எவரும் FBI க்கு தகவல் கொடுக்கவும் இல்லை; பிந்தையதுதான் அமெரிக்க மண்ணில் சந்தேகத்திற்கு உரிய பயங்கரவாதிகள் வந்துவிட்டால் அதற்கு முக்கியப் பொறுப்பு உடையதாகும்.

OIG அறிக்கை குறைந்தது மூன்று மூத்த மேலாளர்களின் செயலை பரிசீலிக்க முறையான பொறுப்புக் கூறும் குழு தேவை என்று கோரியுள்ளது; "இம்மூவரும் அல் ஹஸ்மி மற்றும் அல் மிஹிதார் பற்றி உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்றும் மார்ச் 2000த்தில் இருந்து ஆகஸ்ட் 2001 வரை பல வாய்ப்புக்கள் அவர்களுக்கு இருந்தன" என்றும் அறிக்கை கூறுகிறது.

1998 ல் இருந்தே அல் கொய்தாவிற்கு எதிராக முழுமையாகப் போரிட வேண்டும் என்று தான் வாதிட்டு வந்ததாக டெனட் சமீபத்தில் கூறிவந்துள்ள போதிலும்கூட, OIG அறிக்கை நான்கு ஆண்டு காலத்தில் (1997-2001), "அமைப்பின் மேலாளர்கள் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் அடித்தள நிதியத்தில் இருந்து நிதியங்களை மற்ற பயங்கரவாத எதிர்ப்புத் திட்டங்களுக்கு கொடுத்து, பிற பெருநிறுவனங்கள் மற்றும் DO எனப்படும் செயற்பாட்டு இயக்குனர் அலுவலகத்திற்கு உதவினர்... ஆனால் மாறுபட்ட விதத்தில், வளங்கள் ஏதுமற்ற உளவுத்துறை அமைப்புக்களில் இருந்து பயங்கரவாத எதிர்ப்பிற்காக செலுத்தப்படவில்லை." என்று கூறியுள்ளது.

இந்த அறிக்கையை காணும்போது, CIA ன் ஓசாமா பின் லேடன் பிரிவு 1998ல் செய்தது காட்டிக் கொள்ளுவதற்கான வேலை என்றும், தீவிர முயற்சி இல்லாமல் ஒரு போலித்தனம் என்பதும் தோன்றுகிறது. இந்தக் குழு "மிக அதிக வேலைப் பளுவைக் கொண்டிருந்தது. இதன் அதிகாரிகள் பலரும் செயற்பாட்டு முயற்சிகள், அனுபவங்கள் மற்றும் தங்கள் பணியை திறமையாக முடிப்பதற்கு தேவையான பயிற்சி ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை" என்றும் அறிக்கை கூறுகிறது.

CIA நீண்ட காலமாக இரகசியத் தொடர்பை ஓசாமா பின் லேடனுடன் கொண்டிருந்ததில் இருந்து இருப்புக்களை அளித்தல் முக்கியத்துவம் பெறுகிறது; இது ஆப்கானிஸ்தானத்தில் முஜாஹித்தீனில் அவர் பங்கு கொண்டிருந்த காலத்திற்குச் செல்லுகிறது; அதாவது 1980களில், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சோவியத் இராணுவத்திற்கு எதிராக போரிடுவதற்கு CIA யினால் தேர்ந்து எடுக்கப்பட்டு, பயிற்சி கொடுக்கப்பட்டு, ஆயுதங்கள் வழங்கப்பட்டு, நிதியமும் கொடுக்கப்பட்ட காலத்தில் இருந்து ஆகும்.

முஸ்லிம் நாடுகளில் செயல்பட்டுவரும் முஸ்லீம் அல்லாத சக்திகளுக்கு எதிரான - 1991 ஈராக் போருக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் ரஷ்யர்களுக்கு எதிராகப் போராடியதைக்காட்டிலும் செளதி அரேபியாவில் அமெரிக்கர்களுக்கு எதிரான- போராட்டத்தை தொடர்வதற்காக பின் லேடனால் அமைக்கப்பட்ட அல் கொய்தா (அரபு மொழியில் "தளம்" என்று பொருள்) தன்னுடைய CIA பயிற்சியாளர்களிடம் இருந்து பின்லேடன் கற்ற உத்திகளையும் பயங்கரவாத வழிவகைகளையும் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது.

1990 களின் நடுப்பகுதியில், பின் லேடன் இன்னும் பகிரங்கமாக மத்திய கிழக்கில் அமெரிக்க நலன்களுக்கு விரோதப் போக்கைக் காட்டி, இறுதியில் 1998ல் "ஒரு போர் அறிவிப்பையும்" வெளியிட்டார்; இது கிழக்கு ஆபிரிக்காவில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்ற, இரு அமெரிக்கத் தூதரகங்கள் மீதான பேரழிவுகரமான அல் கொய்தா குண்டுவீச்சுக்களுடன் ஒரே சமயத்தில் நடந்த நிகழ்வுப் பொருத்தம் உடையதாக இருந்தது.

ஆயினும்கூட OIG அறிக்கையின்படி, பில் லேடன் பற்றிய ஒரே எழுத்துமூலமான மதிப்பீடு 1993ல் செய்யப்பட்டிருந்தது; அதாவது, அமெரிக்க உளவுத்துறைக் கருவியுடன் அவர் கொண்டிருந்த உறவு சமீபத்தியதாக இருந்தபோது, தொடரக் கூடும் என்ற நிலையில் இருந்தபோது அல் கொய்தாவின் மூலோபாய ஆபத்து பற்றி மதிப்பீடு ஏதும் 9/11 க்கு முன்னர் CIA வால் தயாரிக்கப்படவில்லை; 1997ல் இருந்து 2001 வரை அமெரிக்க இலக்குகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் ஆபத்து பற்றி தேசிய உளவுத்துறை மதிப்பீடு எதையும் முறையாகச் செய்யவில்லை.

இந்த அறிக்கை உயர்மட்ட CIA அதிகாரிகள் கலீட் ஷேக் மகம்மது (KSM என்று குறிக்கப்படுபவர்) பற்றி கொண்ட அணுகுமுறையின் வினோதத் தன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது; இந்நபர் பாகிஸ்தானில் 2002ல் கைது செய்யப்பட்டு தற்பொழுது குவாண்டநாமோ குடா சிறையில் உள்ளார். 9/11 தற்கொலைப் படை கடத்தல்களை முக்கியமாக அமைத்தவர் என்று வாடிக்கையாக இப்பொழுது மகம்மது விவரிக்கப்பட்டாலும், 1990 களில் பெரும்பகுதியில் அவர் பின் லேடன் வட்டத்தைச் சுற்றி இருந்த சில்லரை நபர்களில் ஒருவராகத்தான் கருதப்பட்டார்.

அறிக்கையின்படி, பயங்கரவாத எதிர்ப்பு மையம் (CTC), "2000 மற்றும் 2001ல் நம்பத் தகுந்த ஆதாரங்களில் இருந்து வந்த தகவல்களின் முக்கியத்துவத்தை அறியவில்லை; அவை மகம்மதை ஒரு மூத்த அல் கொய்தா துணைத் தலைவர் என்று சித்தரித்துக் காட்டியிருந்தன; இதையொட்டி பயங்கரவாதத் திட்டத்தின் முக்கியமான குறியீடுகளைக் காணத் தவறிவிட்டது." மகம்மது பற்றிய தகவல்கள் "KSM பயங்கரவாதிகளை அமெரிக்காவிற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச் சாட்டுக்களை உள்ளடக்கியிருந்தன; மேலும் பின் லேடன் சார்பிலும் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியிருந்தன."

அறிக்கை தொடர்கிறது: "CTC யில் கடைபிடிக்கப்பட்ட நிர்வாக அணுகுமுறை CTC பிரிவுகளில் KSM பற்றி விசாரணை நடத்துபவர்களில் பொறுப்புக்களை பிரிப்பதில்தான் திறமையாக இருந்தது." இதைத் தொடர்ந்து அறிக்கை அந்த நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஒரு தனி நபர் அல்லது பிரிவின் நடவடிக்கைகள், "எந்த ஆதாரத்தையும் கலீட் ஷேய்க் மகம்மதை 1997ல் இருந்து 2001 வரை பிடிக்காததற்காக" ஒரு முறையான பொறுப்புக் காட்டும் குழுவினால் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

வேறுவிதமாகக் கூறினால் 9/11 தாக்குதல்களின் முக்கிய அமைப்பாளர் உயர்மட்ட CIA அதிகாரிகளால் மிக விந்தையான முறையில் நடத்தப்பட்டார்; இது பொதுவாக மேற்கொள்ளப்படும் வழக்கங்களில் இருந்து மாறுபட்டதாகும்; எனவே OIG ஒழுங்குமுறை நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைத்துள்ளது; இத்தகைய நடவடிக்கை ஒரு CIA க்கு உரியவரின் பாதுகாப்பிற்கு வேண்டுமேன்றே செய்யப்பட்ட செயல் என்ற காரணமும் இருக்காலம் என்று ஒப்புக் கொள்ளாமல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

OIG அறிக்கை ஆரம்பத்தில் 2002ல் நடத்தப்பட்ட செனட் மற்றும் கீழ் மன்றத்தின் உளவுத்துறைக் குழுக்கள் கோரியதற்கு ஏற்ப அமைக்கப்பட்டது ஆகும்; அக்குழுக்கள் 9/11 தாக்குதல்களுக்கு முந்தைய ஆண்டுகளில் CIA இன் பங்கு பற்றிக் குறை கூறியிருந்தன. அந்த விசாரணை சட்ட மன்ற குடியரசுக் கட்சியினரின் உந்ததுதலில் நடைபெற்றது; அவர்கள் அப்பொழுது சட்ட மன்றத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்; அவர்கள் கிளின்டன் நிர்வாகத்தின் மாபெரும் பாதுகாப்புத் தோல்வி மீது குவிப்புக் காட்ட முற்பட்டனரே ஒழிய புஷ்ஷின் வெள்ளை மாளிகை பற்றி அல்ல.

9/11 பற்றி நடந்த அனைத்து விசாரணைகளையும் போல, OIG விசாரணையும் சேதத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவும், இராணுவம், அரசியல், உளவுத்துறை நடைமுறைகள் வாஷிங்டனில் கொண்டுள்ள அரசியல் உட்பூசலின் வெளிப்பாடாகவும்தான் இருக்கிறது. இந்தப் பிளவுகள் --இவற்றின் அடிப்படை ஆதாரங்கள் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் எண்ணெய் வளம் கொழிக்கும் பகுதியைக் கைப்பற்றிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்ற அமெரிக்க செயற்திட்டத்தின் நெருக்கடியில் உள்ளது-- பென்டகன், CIA, NSA, FBI மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றுக்கிடையே இயல்பாகவே உள்ளன.

எப்படிப் பார்த்தாலும், வெளியிடப்பட்டுள்ளது அறிக்கை மட்டுமல்ல, நூற்றுக் கணக்கான பக்கங்கள் கொண்டது மட்டும் அல்ல, ஒரு 19 பக்க நிர்வாக அறிக்கைச் சுருக்கமும் ஆகும்; CIA ஊழியர்கள், அத்துடன் ஒத்துழைக்கும் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்புக்கள் இன்னும் பிற "இரகசிய" தகவல்கள் ஆகியவற்றின் பெயர்கள் அகற்றப்பட்டு பெரிதும் திருத்தி அமைக்கப்பட்ட அறிக்கைதான் மிஞ்சியுள்ளது.

முன்னாள் CIA இயக்குனர் ஜோர்ஜ் டெனெட் மற்றும் அவருடைய நண்பர்கள் பற்றி OIG பல குறைகளைக் கூறியுள்ளது; மேலும் அமைப்பின் அலுவலர்கள் பணியைச் செய்யாததற்காக பத்து தனி வழக்குகள் தேவையா என்பது பற்றி நிர்ணயிப்பதற்கும் நிர்வாக முறையில் தண்டனை வழங்குவதற்கும் முறையான பரிசீலனைக் குழுக்கள் தேவை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒரு CIA அதிகாரி அல்லது அலுவலரும்கூட 9/11 தாக்குதல்களின் விளைவிற்கு கடிந்துரைக்கப்படக்கூட இல்லை; நேரடித் தொடர்பு கொண்டிருந்த பலரும் பின்னர் பதவி உயர்வுகளையும் பெற்றுவிட்டனர்.

தன்னுடைய தலைமை ஆய்வாளர் கொடுத்துள்ள முடிவுரைகளை CIA அப்பட்டமாக நிராகரித்துவிட்டது. டெனட்டிற்குப் பின் பதவிக்கு வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான போர்ட்டர் கோஸ், முன்பு CIA முகவராக இருந்தவர், 9/11 க்கு முன்கூட்டியே செயல்படாததற்காக எவரையும் பொறுப்புக் கூற மறுத்துவிட்டார். தற்பொழுதைய CIA தலைவரான தளபதி மைக்கேல் ஹேடன் புதனன்று தான் கோசின் முடிவுடன் உடன்படுவதாகவும் அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்தப்பட மாட்டாது என்றும் அறிவித்தார்.

ஆனால் வெள்ளை மாளிகை நீதித்துறை அமெரிக்க அரசாங்க வக்கீல்கள், துணை ஜனாதிபதி செனியின் ஆற்றல் மிகு செயற்படை இன்னும் பல நிர்வாக ஊழல்கள் பற்றி விசாரணையை தடுக்கும் நோக்கத்துடன் பிடிவாதத்துடன் நடந்து கொண்டது போல் இப்பொழுது OIG அறிக்கையை தடுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. நீண்ட காலமாக அரசியலில் விரோத உணர்வு கொண்டுள்ளது என்று காணப்படும் CIA பகிரங்கமாக அடிவாங்குவதற்கு இது விருப்பத்துடன் தயாராகியிருந்தது.

இவ்விதத்தில், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குகள் இருக்கும் சட்டமன்றம் கடந்த மாதம் 9/11 விசாரணைக் குழுவின் பல பரிந்துரைகளை, OIG அறிக்கை பகிரங்கமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உட்பட பலவற்றையும் செயல்படுத்துவதற்கு சட்டம் இயற்றிய அளவில், புஷ் CIA அதை ஏற்க வேண்டும் என்று கூறும் சட்டம் உட்பட அந்த வரைவை கையெழுத்திட்டுச் சட்டமாக்கினார்.