World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

New York Times calls for escalation of the "good war" in Afghanistan

ஆப்கானிஸ்தானில் நடக்கும் "நற்போரை" தீவிரப்படுத்த நியூயோர்க் டைம்ஸ் அழைப்பு

By Barry Grey
22 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க இராணுவ தலையீடுகளை தீவிரப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அரசியல் அமைப்பின் தாராண்மை, ஜனநாயக கட்சியின் ஒருமித்த கொள்கைகள் குறித்து நியூயோர்க் டைம்ஸ், தனது ஆகஸ்ட் 20-ம் தேதி பதிப்பில் தலையங்கம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

தலையங்கத்தின் உந்துகையே "நல்ல போர், இன்னும் வெல்ல வேண்டும்" என்ற தலைப்பால் எடுத்துக்காட்டப்படுகிறது. அடிப்படைக் கொள்கை விதிமுறைகள் பின்வரும் வரிகளில் தொகுக்கப்பட்டுள்ளன:

"ஆப்கானிஸ்தானில் ஒருபோதும் போதிய அளவு அமெரிக்க துருப்புக்கள் இருந்ததில்லை. 2001-ல் ஓசாமா பின்லேடன், டோரா போரா குகைகளில் ஓடி ஒளிந்து கொண்டிருந்த போதும் சரி, பெரும்பான்மையான நாடுகளிடம் செயல்பாட்டிற்குகந்த ஆணையங்கள் இல்லாத இன்றைய நிலையிலும் சரி, அதனிடம் போதிய துருப்புகள் இல்லை. ஈராக்கை விட பெரியதும், மக்கள்தொகை அதிகம் கொண்டதுமான ஆப்கானிஸ்தானில், தற்போது 23,500 அமெரிக்க படையினர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதுவே ஈராக்கில் 1,60,000-மாக உள்ளது."

ஈராக் மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் அமெரிக்க கொள்கை பற்றிய டைம்ஸ் இதழின் மாதிரி அறிவிப்புக்களாக, தலையங்கம் ஒரு நவ காலனித்துவ மூலோபாயம் பற்றி மடத்தனமாக வழக்குத் தொடர்வதற்காக புஷ் நிர்வாகத்தை விமர்சிக்கிறது, அதேவேளை அந்த மூலோபாயத்தை உயிரூட்டும் உள்ளார்ந்த மற்றும் அறிவிக்கப்படாத குறிக்கோள்களுடன் உட்குறிப்பாய் ஒருமைப்பாடு கொள்கிறது.

"அல்கொய்தா மற்றும் அதன் தாலிபான் கூட்டாளிகளுக்கு எதிரான போர் இப்போதும் வெற்றி பெற கூடியதே." என்று குறிப்பிட்டிருக்கும் இச்செய்தி இதழ், தொடர்ந்து எழுதும் போது, "மேலும் இது அமெரிக்க பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமாகும்." என்று தெரிவிக்கிறது. அக்டோபர் 2001-ம் ஆண்டு நடந்த தாக்குதல் மற்றும் அதன் பின்னர் அந்த நாட்டின் மீது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு குறித்து இருக்கும் பின்னனியின் உள்நோக்கத்தை பற்றி அந்த தலையங்கம் இதைத் தான் சொல்ல விரும்புகிறது.

அடிப்படையில் "அமெரிக்க பாதுகாப்பு" ஒன்றையும் விவரிக்கவில்லை. இன்னும் சரியாக கூற வேண்டுமானால், அமெரிக்க தலையீட்டின் உண்மையான நோக்கங்களை அது மறைத்து வைக்கிறது என்று தான் கூற வேண்டும். போருக்கான சரியான காரணத்தை நியாயப்படுத்த டைம்ஸ் இதழ் எவ்விதத்திலும் தயங்கவில்லை. அடிப்படையில், அது அப்போரை "நற்போராக" அறிவிக்கவே விரும்புகிறது. ஏனென்றால், அரசியல் அமைப்பில் இருக்கும் அனைத்து அணிகள் மற்றும் அவற்றின் ஊடக கூட்டாளிகள் உட்பட சர்வதேச அளவிலும் ஒத்துக் கொள்ளப்பட்டிருப்பது என்னவென்றால், ஈராக் யுத்தத்தைப் பற்றி ஒருவர் என்ன கூறினாலும், செப்டம்பர் 11-ம் தேதி தாக்குதல்களுக்கு எடுக்கப்பட்டு இருக்கும் பதில் நடவடிக்கையாகத்தான் ஆப்கானிஸ்தான் தாக்குதல் ஒத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. மேலும் சர்வதேச அளவில் பயங்கரவாதத்தின் மீதான போரின் தொடக்கமாகவும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

எவ்வாறு ஒரு "நற்போர்", ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மரணத்தையும், அழிவுகளையும் கொண்டு வந்து சேர்க்கும்? சித்திரவதை மற்றும் கடத்தல்கள் தொடர்பான அமெரிக்க அரசின் ஒப்புதல் ஆணைகள், ஜெனீவா பேரவை தீர்மானங்களை மதிக்காதிருத்தல், குவாண்டனமோ போன்ற சிறைச்சாலைகளை உருவாக்குவது, ஆப்கான் மண்ணிலும் மற்றும் பிற இடங்களிலும் அமெரிக்கா அமைத்திருக்கும் பிற சிறைச்சாலைகள் மற்றும் அமெரிக்காவிற்குள்ளேயே ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பெரியளவிலான தாக்குதல் என இவற்றைப் பற்றி டைம்ஸ் இதழ் எதுவும் குறிப்பிடவில்லை.

"நற்போர்" என்ற வார்த்தை சிறப்பாக பயன்படுத்தப்பட்டு இருப்பதே, அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கையையும், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் உலகம் முழுவதும் தலைமையை பெறுவதற்கான அதன் போராட்டத்தையும், நியூயோர்க் டைம்ஸ் முழுமையாக ஆதரிக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்து காட்டுகிறது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாக்குதலை தொடக்கியபோது, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு, போரின் உண்மையான நிலையையும், அதன் சூறையாடும் நோக்கங்களையும் - "நாங்கள் ஏன் ஆப்கானிஸ்தானில் போரை எதிர்கிறோம்?" என்ற தலைப்பில் விளக்கி இருந்தது. தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஆய்வும், முன்கணிப்பும் கொண்டிருந்த அவ்வறிக்கை, முழுமையாக உண்மையை வெளிச்சமிட்டு காட்டி இருந்தது. அதில் நாங்கள் பின்வரும் சில கருத்துக்களைக் குறிப்பிட்டிருந்தோம்:

"ஆப்கானிஸ்தான் மீதான இந்த தாக்குதலுக்கு செப்டம்பர் 11-ம் தேதி நடந்த சம்பவங்கள் வினையூக்கியாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இதற்கான காரணம் மேலும் ஆழமானது. இந்த போரின் அல்லது எந்தவொரு போரின் இயல்புத்தன்மையும் என்னவென்றால், அதன் முற்போக்கு அல்லது பிற்போக்கு தன்மையே ஆகும். ஆனால் அதன் இயல்புத்தன்மையை, முன்னோக்கி எடுத்து செல்லும் உடனடி சம்பவங்கள் மூலம் வரையறுக்க முடியாது. ஆனால் அமைப்பு வகைகள், பொருளாதார அடித்தளம் மற்றும் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் நாடுகளின் சர்வதேச நிலை ஆகியவற்றைக் கொண்டு நிச்சயமாக வரையறுக்கலாம். இந்த தெளிவான நிலையில் இருந்து பார்க்கும் போது, தற்போதைய அமெரிக்காவின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு ஏகாதிபத்திய போருக்குரியதே ஆகும்."

"அமெரிக்க ஆட்சி பகுதிகளை விரிவுபடுத்தும் "சர்வதேச அக்கறையுடன்" தான் அமெரிக்க அரசு இந்த போரை தொடங்கியது. ஆனால் போரின் அடிப்படை நோக்கம் என்ன? உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆதாரங்களை அதிகளவில் கொண்ட இரண்டாவது பகுதியாக விளங்கிய சோவியத் ஒன்றியம் பத்து வருடங்களுக்கு முன்னால் சிதறிய போது, மத்திய ஆசிய பகுதியில் ஒரு அரசியல் வெற்றிடம் உருவானது."

உலகின் எண்ணெய் வளங்களில் சுமார் 20 சதவீதம் அதாவது தோராயமாக சுமார் 270 பில்லியன் பரல் எண்ணெய் வளம் கொண்ட காஸ்பியன் கடல் பகுதி துறைமுகங்களை, முறையாக அணுகுவதற்கான உரிமை ஆப்கானிஸ்தானிடம் இருக்கிறது.

"இந்த முக்கிய வளங்கள் முழுவதும், உலகளவில் பெரும்பாலும் அரசியல் ரீதியாக ஸ்திரமின்மை இல்லாத இப்பகுதிகளில் அமைந்திருக்கின்றன. ஆப்கானிஸ்தானை தாக்கி ஒரு சார்புநிலை ஆட்சியை அமைப்பதனாலும், அப்பகுதியில் அதிக அளவிலான இராணுவப் படைகளை குவிப்பதனாலும், தலைமைக் கட்டுப்பாட்டை பெற முயலும் ஒரு புதிய அரசியல் கட்டமைப்பை அங்கு உருவாக்க அமெரிக்கா திட்டமிடுகிறது."

"தாலிபான்களை வெளியேற்றுவது, பின்லாடனை பிடிப்பது அல்லது அழிப்பது, வாஷிங்டன் கூறும் அவனின் பயங்கரவாத பயிற்சி முகாம்களை அகற்றுதல் என இந்த அனைத்து நோக்கங்களும் அமெரிக்க படைகளை அப்புறப்படுத்தினால் பொய்யாகி போய்விடும். அல்லது, இந்த பிராந்தியத்தின் இயற்கை வளங்களுக்கான பிரத்யேக நடுவராக அமெரிக்காவை உருவாக்க அமெரிக்க இராணுவ படைகளின் நிரந்தர இடமாக இது மாறும். இந்த கொள்கைகள் தான் எதிர்காலத்திற்கான விதைகளை விதைத்திருப்பதுடன், அதிகளவில் இரத்த போராட்டங்களையும் உருவாக்கி இருக்கிறது."

ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்காவின் மற்றும் காபூலில் இருக்கும் அதன் பொம்மை அரசாங்கத்தின் நிலையில் ஏற்பட்டிருக்கும் சீர்குலைவைக் குறித்து புலம்பும் டைம்ஸ் இதழ், புஷ் நிர்வாகத்தின் ஈராக் யுத்த கொள்கைகள் குறித்து நிறைய குறைகளைப் பட்டியலிடுகிறது. "புஷ் நிர்வாகம், ஈராக்கில் தவறாக வழிநடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக, துருப்புகளையும், டாலர்களையும் செலவிட்டு இருக்காவிட்டால்.... சூழல் எப்படி மாறி இருக்கும்?" என்றும் இப்பத்திரிகை கேள்வி எழுப்புகிறது.

ஈராக் யுத்தமுறைகளில் இருந்த நடத்தைகள் மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் ஏற்பட்ட பல்வேறு உத்திகளில் நிலையாக இல்லாமல் - ஈராக் ஆயுதங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டதாகவும், சதாம் உசேனுக்கும், அல்கொய்தாவிற்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் கூறிய நிர்வாகத்தின் பொய்களை ஊக்குவித்ததன் மூலம் பொதுமக்களின் கருத்துக்களை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்த டைம்ஸ் இதழ், எண்ணெய் வளமிக்க அந்நாட்டை கைப்பற்றும் முயற்சிக்கும் ஒத்தழைப்பு அளித்ததை கருத்தில் கொள்ள மறுக்கிறது.

1980-களில் பின்லேடன் மற்றும் தாலிபானை உருவாக்க சென்ற சிலரையும் உட்கொண்டிருந்த முஜாஹிதீன் படைகளை ஆப்கானிஸ்தானுக்குள் ஊக்குவிப்பதில் முக்கிய பொறுப்பு வகித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டிலும் டைம்ஸ் மெளனம் சாதித்தது. சோவியத் ஒன்றியத்தை பலமிழக்கச் செய்து, மத்திய ஆசியாவில் அதன் செல்வாக்கை குறைக்க, வாஷிங்டன், இஸ்லாமிய கோட்பாடுகளை தூண்டும் ஒரு கொள்கையைப் பின்பற்றி சென்றது. பின்லேடன் மற்றும் பிற அடிப்படைவாதிகளை சிஐஏ நியமித்து, சோவியத் ஆதரவு பின்புலத்தில் இருந்த காபூல் ஆட்சிப்பகுதியில் கூலிக்கு கலகம் செய்யச் செய்தார்கள்.

இந்த ஏகாதிபத்திய கொள்கையின் விளைவாகத்தான் ஆப்கானிஸ்தானில் குழப்பமும், அழிவும் உருவானது. பின்னர் தாலிபான்களை ஆட்சியில் கொண்டு வர உதவுவதன் மூலம் அமெரிக்கா சிக்கலை தீர்க்க முயன்றது. மிக ஆழ்ந்த மற்றும் நேரடியான சிந்தனையின்படி, செப்டம்பர் 11-ல் நடந்த துயரமான உயிர் இழப்புக்கான முழு அரசியல் பொறுப்பும் அமெரிக்க ஆளும் தட்டையே சாரும்.

வலிமையான அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் ஆப்கானிஸ்தானை பற்றி டைம்ஸ் என்ன கணிப்பில் இருக்கிறதென்பதற்கு, பின்வரும் உரையைக் கூறலாம்:

2002-ல் ஈராக் விவகாரங்கள் வளரத் தொடங்கி இருந்ததால், இராணுவத்தின் மிகச் சிறந்த நடவடிக்கைகள் மற்றும் கிளர்ச்சி எதிர்ப்பு சிறப்பு பிரிவுகள் குழுக்கள் (Counterinsurgency Units) உட்பட ஆப்கானிஸ்தானில் ஒரு திருப்புக் கட்டமாக மாறக்கூடியதாக இருந்த வளங்களை ஈர்த்திருந்தது.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க படையெடுப்பின் போதும், அமெரிக்க சிறப்பு படை மற்றும் சிஐஏ அதிகாரிகள், மஜா-ஐ-ஷரீப்பில் உள்ள குலா-ஐ-ஜாங்கி கோட்டையில் நூற்றுக்கணக்கான போர்க்கைதிகளை விமானத்தில் இருந்து சுட்டுக் கொல்ல உத்திரவிட்ட போதும், சிறப்பு பயிற்சி பெற்ற கொலைகாரர்களால் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் சான்றளிக்கப்பட்டன.

சமீப நாட்களில் நியூயோர்க் டைம்ஸின் தலையங்க பக்கம் - ஈரான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவைகளைப் பற்றிய அமெரிக்க கொள்கைகளின் அறிவிப்புகளை பதிப்பித்திருக்கிறது. அதன் ஆகஸ்டு 13-ம் தேதி தலையங்கமானது, தெற்கு ஈராக்கில் இருந்து அனைத்து, அதாவது 5,000 படையினர்களையும் விலக்கி கொள்ள தீர்மானித்திருக்கும் பிரிட்டிஷ் அரசை குற்றம்சாட்டி இருப்பதுடன், அமெரிக்கா ஒரு பெரிய இராணுவப் படையை காலவரம்பில்லாமல் அங்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டிருக்கிறது.

அப்பகுதியில் அமெரிக்க ஆளுமைக்கு ஈரானிய ஒப்புதலைப் பெறும் நோக்கில் சமரச பேச்சுவார்த்தைகளையும் ஒருங்கிணைத்து, ஈரானுக்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வர வேண்டும் என்று கேட்டு ஆகஸ்ட் 18-ம் தேதி ஒரு தலையங்கத்தை டைம்ஸ் பிரசுரித்தது. புஷ் நிர்வாகத்தில் எடுக்கப்படும் யுத்த நடவடிக்கைகளை குறை கூறிய இந்த தலையங்கம், எதிர்காலத்தில் ஒரு இராணுவ தாக்குதல் விடுப்பட்டு போகாமல் இருக்க, ஈரான் மீது இது போன்ற ஒரு தாக்குதலை நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்திருக்கிறது.

இந்த வாரம் அது, ஆப்கானிஸ்தானில் இராணுவத்தை தீவிரப்படுத்த கேட்டுக் கொண்டிருந்தது.

ஈராக்கில் அமெரிக்காவின் நலன்களை சிறப்பாக காக்கவும், ஒரு பேரழிவைத் தரும் தோல்வியை தடுக்கவும், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் ஆளுமையை நிலைநிறுத்தவும் தேவையான சிறப்பு கூறுகள் மீது அமெரிக்க ஆட்சிக்குள் நடக்கும் ஆழ்ந்த விவாதங்கள் மற்றும் வாதங்களுடன் இந்த தொடர்ச்சியான அறிக்கைகள் ஒத்து போகின்றன. 2008 -ல் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்கான முன்னனி ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், ஈராக் மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் அமெரிக்க இராணுவ இருப்பை நீடிக்க ஒத்துழைப்பதற்கான உறுதிமொழிகளை அளித்திருப்பதால், தங்களின் போர் எதிர்ப்பு வாக்குறுதிகளில் இருந்து அவர்கள் விலகி இருக்கிறார்கள்.

சில நேரங்களில் ஏற்படும் கசப்பான சர்ச்சைகளை தாண்டி வருவதற்கு உதவும் ஒரு முயற்சியாகவும், மற்றும் ஈராக் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் அவர்களுக்குள் ஒரு புதிய கருத்து ஒற்றுமையை வடிவமைப்பதையும் தான் இவை அனைத்தும் எடுத்து காட்டுகின்றன. ஒரு விஷயம் நிச்சயமானதாகும் - அதாவது டைம்ஸ் தலையங்கங்களில் அடிகோடிட்டு இருந்தபடி, அனைத்து அணிகள் மற்றும் இரண்டு முதலாளித்துவ கட்சிகளும், அமெரிக்க இராணுவ வன்முறைக்கும் மற்றும் நவ காலனித்துவ ஒடுக்குமுறைக்கும் முடிவு இருக்காது என்பதை ஒத்துக் கொண்டிருக்கின்றன. மாறாக, உத்தியோகபூர்வ விவாதம் ஆப்கானிஸ்தானில் மட்டுமின்றி, புதிய நாடுகளிலும் - குறிப்பாக விருப்பத் தேர்வின் முதல் இலக்கில் ஈரானை முன்னிறுத்தி - ஈவிரக்கமில்லாமல் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படலை சுட்டிக்காட்டுகின்றன.