World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Red Cross confirms Bush administration, CIA used torture in interrogations

புஷ் நிர்வாகம், CIA இரண்டும் விசாரணைகளின்போது சித்திரவதையை பயன்படுத்தியதை செஞ்சிலுவைச் சங்கம் உறுதிப்படுத்துகிறது

By Patrick Martin
7 August 2007

Back to screen version

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழுவின் (International Committee of the Red Cross ICRC) இரகசிய அறிக்கை ஒன்று புஷ் நிர்வாக அதிகாரிகள் CIA இன் வெளிநாட்டு "இரகசிய சிறைகள்" செயற்பாட்டில் போர்க்குற்றங்களை செய்திருக்கக் கூடும் எனக் கருதுகிறது என்று New Yorker இதழின் ஞாயிறு பதிப்பின் வலைத் தளத்தில் வந்துள்ள நீளமான பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.

9/11 பயங்கரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலீட் ஷேக் மற்றும் பிற அல் கொய்தா கைதிகளை விசாரித்த வழிவகைகள் "சித்திரவதைக்கு ஒப்பானது" என்று செஞ்சிலுவைச் சங்க அறிக்கை முடிவுரையாக கூறியுள்ளது; புஷ் நிர்வாக அதிகாரிகள் ஜெனிவா மரபுகளை "பெரும் தீமை பயக்கும் வகையில் மீறியிருக்கும்" செயல்களை செய்திருக்கக்கூடும் என்றும் அது தெரிவித்துள்ளது.

Jane Mayer எழுதியுள்ள "The Black Sites" என்ற தலைப்பின்கீழ் வந்துள்ள கட்டுரை வெளிநாடுகளில் CIA அமப்பின் இரகசிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய முன்னாள் CIA அதிகாரிகளுடன் நடத்திய தொடர் போட்டிகளின் விளைவு ஆகும்; அந்த முகவர்கள் நேரடியாக சித்திரவதை நடவடிக்கைகளில் பங்கு பெற்றவர்கள் ஆவர்; அறிக்கையின்படி அவர்கள் பயன்படுத்திய வழிவகைகளை அறநெறி பிறழ்ந்தவை அல்லது பயனற்றவை அல்லது இரண்டுமே இணைந்தவை என்று முடிவாகக் கூறப்பட்டுள்ளது.

புஷ்ஷின் வெள்ளை மாளிகைக் கொள்கைகளுக்கு எதிராக இராணுவ/உளவுத்துறை கருவிகளே எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்துவதற்கு முக்கியமான வழிவகையாக நியூ யோர்க்கர் மாறியுள்ளது. மேயரின் சக ஊழியரான சேமுர் ஹெர்ஷ் பாக்தாத்திற்கு அருகே உள்ள அபுகிரைப்பில் இருக்கும் அமெரிக்க இராணுவச் சிறையில் கைதிகள் தவறாக நடத்தப்பட்டது பற்றி முதன்முறையாக மிக விரிவான அறிக்கையை எழுதினார்; அதைத்தவிர ஈரானுக்கு எதிராக ஒருவேளை இராணுவத் தாக்குதலுக்கான தயாரிப்புக்கள் இருக்கக்கூடும் என்பதையும் அம்பலப்படுத்தியிருந்தார்.

2003 ஆரம்பத்தில், ஈராக்மீது அமெரிக்கப் படையெடுப்பிற்கு சற்று முன்னதாக பாக்கிஸ்தான் அதிகாரிகளால் கலீட் ஷேக் மகம்மது பிடிக்கப்பட்டார்; பின் இவர் CIA இரகசியச் சிறைகளில் குவண்டநாமோ குடாவுக்கு மாற்றப்படுவதற்கு முன்பு நான்கு ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் பென்டகன் இவருடைய "ஒப்புதல் வாக்குமூலத்தை" பென்டகன் பகிரங்கமாக்கியது; அதில் அவர் 31 தனித்தனி பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்திக் கொண்டிருந்தார் அல்லது திட்டமிட்டிருந்தார் எனக் கூறப்பட்டது; அந்த அறிக்கை மிகப் பரந்த அளவில் உத்தியோகபூர்வ வட்டங்களில் சித்திரவதைக்கு நிரூபணம் என்று பாராட்டப்பட்டது --அல்லது வாஷிங்டன் கூறுவதுபோல் "விரிவான விசாரணைவழிவகைகளை பற்றி; சித்திரவதை "பயங்கரவாதத்தின் மீதான போரில்" திறமையான, நெறியான நடைமுறை என்றும் கொள்ளப்பட்டது.

அந்த நேரத்தில், உலக சோசலிச வலைத் தளம் மகம்மது தன்னைப் பற்றியே காட்டிக் கொடுத்து விடுத்துள்ள அறிக்கைகளின் சந்தேகத்திற்கு உரிய தன்மையைக் குறிப்பிட்டது; அவற்றில் அவர் ஒருக்காலும் செய்திருக்க முடியாத மகத்தான சதித்திட்டங்களுக்கு பொறுப்பை ஏற்றிருந்தார்; அதில் Sears Tower, The Empire State Building, லண்டனின் பிக் பென் ஆகியவற்றை அழிக்கும் திட்டங்கள், முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் மற்றும் போப் இரண்டாம் ஜோன் போல் ஆகியோரைப் படுகொலை செய்தல் ஆகியவையும் அடங்கியிருந்தது. (ஷிமீமீ: "கீணீsலீவீஸீரீtஷீஸீ மீஜ்ஜீறீஷீவீts நிuணீஸீtஊஸீணீனீஷீ நீஷீஸீயீமீssவீஷீஸீ tஷீ ழீustவீயீஹ் வீts நீக்ஷீவீனீமீs")

அரசியல் அறிவு உள்ள எந்த நோக்கரும் மகம்மது கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதில் சந்தேகம் கொள்ளவில்லை; பலர் அதை தெரிவிக்கவும் செய்தனர். அவர்களுள் பத்திரிக்கையாளரான Na Hentoff ("கலீட் மகம்மது சித்திரவதை செய்யப்பட்டாரா?), வட மேற்கு சட்டப் பயிலகப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆன்டனி டி' அமடொ ("உண்மையான ஒப்புதல்கள்: கலீட் ஷேக் மகம்மத்தின் வியத்தகு கதை), ஆகியோர் அடங்குவர். பிந்தையவர் கலீட்டின் ஒரு 26 பக்க "ஒப்புதல் வாக்குமூலத்தை" 1930களின் ஸ்ராலினிச எதிரகளை அழிக்கும் விசாரணைகளில் வெளிவந்த தன்னையே காட்டிக் கொடுக்கும் அறிக்கைகளுடன் ஒப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டுக் கடைசியில் குவான்டாநாமோ குடாவிற்கு மாற்றப்பட்டபின், மகம்மதை சந்திப்பதற்கு சர்வதேசச் செஞ்சிலுவைக் குழுவிற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ICRC யுடைய கொள்கை அதன் கண்டுபிடிப்புக்களை கைதிகளைச் சிறையில் வைத்திருக்கும் அரசாங்கத்துடன் விவாதிப்பதே ஒழிய செய்தி ஊடகத்துடன் அல்ல;' அதற்குக் காரணம் அது கைதிகளை தொடர்ந்து பார்க்க வேண்டாம் என்பதற்காக ஆகும். ஆனால் மேயரின் கருத்தின்படி CIA இரகசிய சிறைகளில் வைக்கப்பட்டுள்ள 15 கைதிகள் பற்றிய ICRC இன் அறிக்கை வெள்ளை மாளிகை, வெளியுறவுத்துறை ஆகியவற்றின் மிக உயர்ந்த மட்டங்கள் மற்றும் காங்கிரசின் இரு பிரிவுகளின் உளவுத்துறைக் கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றிற்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டிருந்தது.

"அறிக்கை பற்றி நன்கு அறிந்துள்ள தேசிய சட்டமன்ற காங்கிரஸ் மற்றும் பிற வாஷிங்டன் ஆதாரங்களை மேற்கோளிட்டு" மேயர் கூறியதாவது: "ஆதாரங்களில் ஒன்று CIA அமைப்பு கைதிகளை காவலில் வைத்து விசாரணை செய்த வழிவகைகள் சித்தரவதைக்கு ஒப்பானது என்று செஞ்சிலுவை விவரித்துள்ளதாகவும், இந்த தவறான நடவடிக்கைக்கு பொறுப்பான அமெரிக்க அதிகாரிகள் தீவிர குற்றத்தை செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த அதிகாரிகள் ஜெனிவா மரபுகளையும் "தீவிரமான முறையில்" மீறிய செயல்களை செய்திருக்கக்கூடும் என்றும் அமெரிக்காவின் சித்திரவதை சட்டத்தையும் மீறியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது." மேயர் மேலும் கூறியதாவது: "நம்பகத்தன்மைக்கும் எச்சரிக்கைக்கும் புகழ்பெற்றுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் முடிவுகள் பேரழிவு தரக்கூடிய சட்ட விளைவுகளை ஏற்படுத்தும் திறனை உடையவை ஆகும்."

வேறுவிதமாகக் கூறினால், CIA கைதிகளை இவ்விதமாக சித்திரவதைக்கு உட்படுத்திய, செயல்படுத்திய அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் ஓர் அமெரிக்க அல்லது சர்வதேச நீதிமன்றத்தின் முன் போர்குற்றச் சாட்டுக்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும், அதே போல் இத்தகைய இரகசிய சிறைகளில் என்ன நடக்கிறது என்பதைப் பின்னர் அறிந்து அதை மூடி மறைத்தவர்களும் அத்தகைய நிலையை எதிர்கொள்ளக்கூடும்.

மேயரின் கட்டுரையின்படி, CIA சித்திரவதையை பயன்படுத்தியது ஒரு "கயமையான" நடடிக்கை அல்ல, ஒரு மகத்தான அதிகாரத்துவ முயற்சி, இதில் முறையான ஆராய்ச்சிவகை முயற்சி, வளர்ச்சி ஆகியவை தொடர்பு உடையவை, கைதிகள் மனம் முறிதலுக்கு "சிறந்த வகைகளை" கண்டுபிடிப்பதற்கு இது செய்யப்பட்டது என்று உள்ளது. வியட்நாம் போரின் போது பினிக்ஸ் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட உத்திகளை CIA அதிகாரிகள் பரிசீலித்து, "பயங்கரவாதத்தின் மீதான போரில்" அதை முன்மாதிரியாகக் கொண்டனர். பினிக்ஸ் திட்டத்தில் கிட்டத்தட்ட 20,000 தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தேசிய விடுதலை முன்னணிக்கு பரிவு காட்டியவர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பரந்த அளவில் கைதிகள் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

எகிப்து, ஜோர்டன் மற்றும் செளதி அரேபியா ஆகியவற்றின் இரகசிய போலீசாரிடம் இருந்து CIA அமைப்பு விசாரணை முறை பற்றி ஆலோசனை கேட்டு அறிந்தது; அந்நாடுகள் அனைத்தும் அரசியல் கைதிகளுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமான சித்திரவதை வழிவகைகளை கையாளுகின்றன. ஒரு முன்னாள் இராணுவ விசாரிப்பாளர் ஒரு கைதியின் சூழ்நிலை பற்றி மொத்தக் கட்டுப்பாடு கொள்ளும் உத்திகளை "KGB முன்மாதிரி" என்று விவரித்தார்; அது முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் அரசியலில் எதிர்ப்புக் கருத்து தெரிவிப்பவர்களை அகற்றுவதற்கு வளர்க்கப்பட்டது பின்னர் CIA ஆலும் ஏற்கப்பட்டுவிட்டது.

கலீட் ஷேக் மகம்மது மீது பயன்படுத்தப்பட்ட உத்திகளில் நீடித்த நேரம் புலன்களின் உணர்வை மரக்கச் செய்யும் வழிவகைகள், தொடர்ச்சியாக நிர்வாண நிலையில் தலைகளில் வைத்தல், நாய்களை ஏவி பயமுறுத்ததுல், பெண் விசாரணையாளர்களை பயன்படுத்துதல், தனியறையின் சுவர்களில் பெரும் வலிவரும் வகையில் தள்ளிவிடுதல், அறையில் உத்தரத்தில் இருந்து கைகளைக் கட்டி தொங்கவிடுதல், நீரில் மூழ்குதல் என்று இப்பொழுது இழிவாக்கப்பட்டுள்ள முறை, அதாவது இடைக்காலத்தில் இருந்த சித்திரவதையில் மூழ்கடித்தல் போல் பாசாங்கு செய்து பெரும் பயத்தைக் கிளப்பிவிடுதல் (சீன நீர்வகைச் சித்திரவதை என்று பின்னர் அறியப்பட்டது) ஆகியவை இருந்தன.

ஒரு விசாரணை வல்லுனர் மேயரிடம், சித்திரவதைகள் முடிந்தபின் பாதிப்பாளர்கள் பற்றிக் கூறுகையில் தெரிவித்தார்: "அவர்கள் முற்றிலும் மனிதத்தன்மையை இழந்துவிடுவர். சுக்குநூறாகச் சிதறிவிடுவர். வேண்டுமென்றே, முறையாக மிகப் பெரும் துன்பங்களை சட்ட வழிவகை என்று தவறாகக் காட்டிச்செய்யப்படும் செயலாகும். இது உள்ளத்தை உறைய வைக்கும்."

மிகக் கடுமையான, முறையான வகையில் சித்திரவதை இருந்ததால், சித்திரவதை செய்பவர்கள்மீது அவை ஆழ்ந்த உளரீதியான விளைவுகளைக் கொண்டிருந்தது என்று மகம்மதை விசாரித்தவர்களில் ஒருவரை பேட்டி கண்ட மேயர் தெரிவிக்கிறார். ஒரு சக விசாரணையாளர் ஒருவர் இப்பொழுது "கொடூரமான தீய கனாக்கள் காண்கிறார்... அது அவரை பெரும் வேதனைக்கு உட்படுத்துகிறது. பிறர் மீது உண்மையாகவே தீமையையும் கொடூரத்தையும் செலுத்துகிறீர்கள்" என்றார் அவர்.

வெள்ளை மாளிகை, குறிப்பாக துணை ஜனாதிபதி செனியிடம் இருந்து வரும் உத்தரவுகள் பற்றி CIA அதிகாரிகள் பலமுறையும் தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர்; அவை தங்களை குற்றம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக குற்றச்சாட்டுக்ளை எதிர்கொள்ளச் செய்துவிடும் என்று கருதுகின்றனர்; ஏனெனில் அவற்றில் மகம்மது போன்ற கைதிகள் உயிரோடு வைக்கப்பட வேண்டும்; அப்பொழுதுதான் அவர்கள் தாங்கள் செய்த தவறுகளுக்கு சாட்சியம் அளிக்க முடியும். மேயரிடம் ஒரு அதிகாரி மனத்தை உறையவைக்கும் வகையில் கூறினார்: "அவர்களைத் தூக்கிலிட்டுக் கொன்றிருந்தாலும் நன்றாக இருந்திருக்கும்."

ஒரு முன்னாள் CIA அதிகாரி மேயரிடம், பல ஒற்றர்கள் கைதிகளை தவறாக நடத்தியதற்கு குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள நேரிடும் நிலையை எதிர்கொள்ளுவதற்காக செலவினக் காப்பீடு செய்துள்ளனர் என்று கூறினார். "அரசியலில் பதில் தாக்குதல் விளையக்கூடிய உயர்ந்த அளவு கவலையும் உள்ளது" என்று அவர் கூறியதுடன், "சிலர் தாங்கள் பஸ்ஸுகளுக்கு கீழே தள்ளப்பட்டுவிடுவோமோ என்று எதிர்பார்க்கின்றனர்; சிலர் புஷ், செனி, முன்னாள் CIA இயக்குனர் ஜோர்ஜ் டெனெட் மற்றும் அட்டர்னி ஜெனரல் அல்பேர்டோ கொன்ஸலேஸ் போன்றோர் செய்த தவறுகளுக்குத் தாங்கள் போலிகளாக எதிர்நின்று தண்டனை அனுபவிக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். வெள்ளை மாளிகை ஆலோசகர் என்ற முறையில் கோன்ஸலேஸ் சித்திரவதைக்கு ஒப்புதல் கொடுக்கும் வழிவகைக்கு சட்டபூர்வ முத்திரை கொடுப்பதை கண்காணித்திருந்தார்.

சில முக்கிய காங்கிரஸ் ஜனநாயவாதிகளும் ICRC அறிக்கை பற்றி நன்கு அறிவர்; ஏனெனில் அறிக்கை மேற்கு வர்ஜீனியாவின் செனட்டர் ஜே ரோக்பெல்லர் மற்றும் டெக்சாசின் பிரதிநிதிகள் மன்ற Sylvestre Reyes ஆகியோர் தலைமையில் இருக்கும் செனட், பிரதிநிதிகள் மன்ற குழுத்தலைவர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டிருந்தது. மன்றத் தலைவரான நான்ஸி பெலோசி மற்றும் செனட்டின் பெரும்பான்மைக் கட்சித் தலைவரான ஹாரி ரீட் ஆகியோருக்கும் "இது பற்றி" தெரிந்திருக்கக்கூடும்.

சட்டமன்றத்தில் இருக்கும் ஜனநாயகக் கட்சியின் தலமையின் உடந்தை பற்றி இந்த உண்மை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர்கள் உள்நாட்டு ஒற்றுக் கேட்கும் அதிகாரங்களைப் பெரிதும் விரிவுபடுத்திய வகையில் ஒரு சட்டத்தை இயற்றினர்; அதுவும் செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழுவால், தொடர்ச்சியாக போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வரும் என்று முத்திரையிடப்பட்டுள்ள நிர்வாகத்தின் நன்மைக்காக இயற்றினர்.

மேயர் வெளிப்படுத்தியவற்றின் பரபரப்புத் தன்மை இருந்தாலும், அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் ஒப்புமையில் இது பற்றி அதிக கருத்துக்கள் கூறப்படவில்லை. ஞாயிறன்று நியூ யோர்க்கர் கருத்தை ஆய்ந்த கட்டுரை ஒன்றில், வாஷிங்டன் போஸ்ட் செஞ்சிலுவைக் குழு அறிக்கை இருப்பதையும், அது அமெரிக்கத் தலைநகரத்தில் மிக உயர்ந்த மட்டங்களில் சுற்றிறிக்கைக்கு விடப்பட்டது பற்றியும் உறுதியளித்துள்ளது.

"ஆவணங்களை நன்கு அறிந்துள்ள ஆதாரங்களை" மேற்கோளிட்டு அவை செஞ்சிலுவை குழுவினால் பேட்டி காணப்பட்ட கைதிகள் தங்கள் சித்திரவதை பற்றி இத்தகைய செயற்பாடுகளைத்தான் கூறியுள்ளதாக உறுதிப்படுத்தினர்; கைதிகள் தனிமையில், ஒருவரோடு ஒருவர் தொடர்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்தனர்; ஒருவருடைய கதை மற்றவர்களுக்குத் தெரியாது. இப்படிப்பட்ட நிலை அவர்கள் சாட்சியத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது; அதேபோல் இந்த வழிவகைகள் CIA இரகசிய சிறைகளில் இருந்து குவாண்டநாமோ குடா கடுஞ் சிறை முகாமிற்கும் அபு கிறைப், ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவச் சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது உறுதியாகின்றன. அபுகிறைப்பில் எடுக்கப்பட்டு 2004ல் வெளியிடப்பட்ட டிஜிட்டல் புகைப்படங்கள் உலகெங்கிலும் அமெரிக்காவின் சித்திரவதை வழிவகைகள் பற்றி பெரும் வெறுப்புணர்வை ஏற்படுத்தின.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved