World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: As private equity companies boom, social democrats advise the "locusts"

ஜேர்மனி : தனியார் பங்கு நிறுவனங்கள் செழிக்கையில், சமூகஜனநாயகவாதிகள் "வெட்டுக்கிளிகளுக்கு" ஆலோசனை கூறுகின்றனர்

By Dietmar Henning
1 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

உலகப் பொருளாதாரத்தில் தனியார் பங்கு நிறுவனங்கள் பெருகிய முறையில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன; பெருகிய முறையில் ஜேர்மனியின் சமூக ஜனநாயக கட்சியின் (SPD) முக்கிய உறுப்பினர்கள் உட்பட, பல முக்கிய ஜேர்மன் அரசியல்வாதிகள் இந்த நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாகப் பணியாற்றுகின்றனர்.

கடந்த இரு தசாப்தங்களாக பெருகிய முறையில் செல்வக்குவிப்பு ஏற்பட்டிருக்கையில், தனியார் பங்கு நிறுவனங்கள் தங்களிடம் மிகப் பெரிய சொத்துக்கள் வைத்திருப்பவர்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு இலாபம் ஈட்டக்கூடிய மூலதனத்தை பெருக்கித் தருகின்றன. இந்நிறுவனங்கள் மாபெரும் செல்வம் படைத்தவர்களுடைய பில்லியன்களை நிர்வகிப்பது மட்டும் இல்லாமல் ஓய்வூதிய நிதியங்களின் சார்பிலும் செயல்படுகின்றன.

இந்தத் தனியார் முதலீடுகள் எப்பொழுதும் குறைந்தது பல நூறாயிரக்கணக்கான யூரோக்களாகத்தான் இருக்கும். நிதிய ஆலோசகர்கள் கிடைக்கும் மூலதனத்தில் சிறிய பகுதியை மட்டும் இத்தகைய நிதியங்களில் இடுமாறு பரிந்துரைப்பதால் (ஆபத்து நிறைந்த வணிகங்கள்கூட தோல்வியடைந்துவிடக்கூடும்) பல மில்லியன் உடையவர்கள்தான் தனியார் பங்கு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள தகுதி படைத்தவர்கள் ஆவர். மிகப் பெரும் செல்வந்தர்கள் தங்களை இன்னும் விரைவில் கூடுதலான செல்வந்தர்கள் ஆக்கிக் கொள்ளுவதற்கு இவை ஒரு வழிவகையாகும்.

தொழிலாளர் மந்திரியும் துணை சான்ஸ்லருமான Franz Muntefering (SPD) யினால் காப்பு நிதிகள் (hedge funds) "வெட்டுக்கிளிகள்" என்று எள்ளி நகையாடப்படுவதுபோல், தனியார் பங்கு நிறுவனங்களும் உலகம் முழுவதும் பெரும் இலாபம் தரக்கூடிய மூலதன வாய்ப்புக்களுக்கு அலைகின்றன. 1970 களில் இருந்து அவை பங்குச் சந்தையில் பட்டியிலடப்பட்டுள்ள நிறுவனங்களுக்குத் தங்களை மாற்றீடாகக் கருதிக் கொள்ளுகின்றன. கடந்த காலத்தில், அவை பொதுவாக ஒரு நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குளை அடைந்தன; பின்னர் நிறுவனத்தை பங்குச் சந்தை பட்டியலில் இருந்து அகற்றி, நிறுவனத்தைச் சிதைத்துவிடுவர். நிறுவனத்தின் பகுதிகள் விற்கப்படும், வேலைகள் குறைக்கப்படும், ஊதியங்கள் குறைக்கப்பட்டு விடும். பொதுவாக இத்தகைய வாங்குதல் கடன் மூலதனத்தின் மூலம் நிதியம் பெறும்; கடனைத்திருப்பக் கொடுக்க வேண்டிய சுமை எடுத்துக் கொளும் நிறுவனத்தின்மீது விழுந்து விடும். இறுதியாக நிறுவனம் ஒரு பெரும் விலைக்கு விற்கப்படும், அல்லது மீண்டும் பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறும்.

தனியார் பங்கு நிறுவனங்கள் அமெரிக்க, பிரிட்டிஷ் சந்தைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட நிறுவப்பட்டுள்ன; ஆனால் இன்னும் அண்மைக் காலத்தில் இத்தகைய நிதிய மூலதனத்தில் ஈடுபடுவர்கள் பெருகிய முறையில் ஐரோப்பாவில், குறிப்பாக ஜேர்மனியல் தீவிரமாகியுள்ளனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஹெகார்ட் ஷ்ரோடரின் கீழான(SPD) கடந்த SPD-பசுமைக் கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய பல சட்டங்கள் ஜேர்மனியில் அவற்றின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. உதாரணமாக 2002ம் ஆண்டில், தனியார் பங்கு நிறுவனங்கள் ஜேர்மனியில் முதலீடு செய்த மூலதனம் கிட்டத்தட்ட 6.9 பில்லியன் என்று இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிற்கு அது ஏற்கனவே 22.5 பில்லியன் யூரோக்களைத் தொட்டுவிட்டது. இந்த ஏற்றத்திற்கு முக்கிய காரணம் பங்குகள் விற்பனைக்கான வரிகளில் இருந்து இவற்றை அகற்றும் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும்.

உலகந்தழுவிய முறையில், தனியார் பங்கு நிறுவனங்கள் பெருநிறுவன வாங்குதலுடன் கொண்டுள்ள விகிதம் 2000ம் ஆண்டில் கிட்டத்தட்ட 3 சதவிகிதமாக இருந்தது. 2004 ஐ ஒட்டி இது 14 சதவிகிதத்திற்கு அதிகரித்து, $294 பில்லியன் என்ற தொகுப்பை அடைந்தது. இதற்கிடையில் அனைத்து இணைப்புக்கள் மற்றும் பெறுதல்கள் அனைத்திலும் குறைந்தது ஐந்தில் ஒரு பங்காவது தனியார் பங்கு நிறுவனங்களினால் என்று கூறவியலும். உலகம் முழுவதும் தனியார் பங்குகளுக்கு பெரும் உயர்வு இருந்த காரணத்தினால் முக்கிய வங்கிகளான Deutsche Bank, UBS, அல்லது Credit Suisse போன்றவை மட்டும் இல்லாமல் தனியார் வங்கிகளான Sal Oppenheim அல்லது Berenberg Bank போன்றவையும் கணிசமான முறையில் தங்கள் கொடுப்பனவுகளை மிகப் பெரும் செல்வக் கொழிப்புடைய வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துள்ளன.

தனியார் பங்கு நிறுவனங்களின் செயல்கள் இவ்வாண்டு மீண்டும் முந்தைய சாதனைகளைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "உலகம் முழுவதும் இத்தகைய நிதியத்திற்கு $450ல் இருந்து $500 பில்லியன் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தனியார் பங்கு நிறுவன ஊகங்கள் கருதுகின்றன. தனியார் பங்கு நிறுவனங்கள் பொதுவாக தங்களுடைய சொந்த மூலதனத்தில் 20 சதவிகிதத்தைத்தான் எவற்றை வாங்குவதிலும் பயன்படுத்துவதால் அவர்களுடைய முதலீடுகள் கிட்டத்தட்ட $2.5 டிரில்லியன் மதிப்பு உடைய பெருநிறுவனங்களுக்கு உந்ததுல் கொடுக்கும்.

இந்த வளர்ச்சி சர்வதேச முதலாளித்துவமுறையில் இயல்பாக இருக்கும் புறநிலை நிகழ்வுப்போக்காகும். பூகோளந்தழுவிய உற்பத்திமுறை அதிகரித்தளவில் உற்பத்தி முறையில் இருந்து உபரிமதிப்பு தோற்றுவித்தலைப் பிரித்துள்ளது. நிதிய மூலதனத்தின் உலகந்தழுவிய மேலாதிக்கம் இன்னும் கடுமையான முறையில் ஊதியங்கள் மற்றும் சமூகநலச் செலவினங்கள்மீதான தாக்குதலுடன் நேரடியாகப் பிணைந்துள்ளது. தனியார் பங்கு நிறுவனங்கள் சமூகப் பிளவுகள் பெருகுவதற்கான கருவிகளுள் ஒன்றாகும். ஒரு மிகச் சிறிய பெரும் செல்வக் கொழிப்பு உடைய தட்டின் நம்பமுடியாத அளவிற்கு இருக்கும் செல்வம் பெருகி வரும் வறுமை, குறைந்து வரும் ஊதியங்கள் ஆகியவற்றின் எதிர்முனைதான்.

ஜேர்மனியின் இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் சில தலைவர்கள் இந்த வழிவகைக்கு முதலாளித்துவமுறையின் வடிவமைப்பிற்குள் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கூறுவது போலித் தன்மையாகும். முதலாளித்துவ சொத்துரிமை உறவுகளுக்கு ஆதரவு கொடுப்பவர்கள், இத்தகைய சர்வதேச தனியார் பங்கு நிறுவனங்களை "முதலாளித்துவ கொள்ளைப் பிரபுக்களின்" பிரதிநிதிகள், "வெட்டுக்கிளிகள்" என்று சொல்லிக் கொண்டு அதே நேரத்தில் அவர்களைத் தீவிரமாக எதிர்க்க முடியாது. எனவேதான் எங்கேல்லாம் இடது கட்சி அரசியல் அதிகாரத்தைச்செலுத்துகிறதோ, எங்கெல்லாம் தொழிற்சங்கங்கள் கூட்டு உடன்பாடுகளுக்குப் பேச்சு வார்த்தை நடத்துகின்றனவோ, அங்கெல்லாம் அவை பெருவணிகம், முதலாளிகள் ஆகியோருடைய நலன்களைத் தயக்கமின்றி ஆதரிக்கின்றன.

ஜேர்மனியின் தனியார் பங்கு நிதிய அமைப்புக்கள்

லண்டனைத் தளமாகக் கொண்டுள்ள நிதிய நிறுவனமான Terra Firma Capital Partners தன்னுடைய பெரும்போக்குவரத்து சேவைகளை நடத்தும் Tank & Rest நிறுவனத்தை பெரும் இலாபம் வரக்கூடிய வகையில் விற்றுவிட முடியும் என்று நம்புகிறது. இந்த நிறுவனம் துவக்கத்தில் ஒரு தனியான பொது நிறுவனமாக 1994ல் அரசாங்கம் நடத்திய இரு முயற்சிகளில் ஒன்றாக இருந்தது.

1998ம் ஆண்டு இது Lufthansa மற்றும் பல தனியார் பங்கு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதின் மூலம் பின்னர் தனியார்மயமாக்கப்பட்டது. அப்பொழுது போக்குவரத்து மந்திரியாக இருந்த Franz Muntefering (SPD) உடைய ஆசியுடன் இந்த உடன்பாடு ஏற்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2005 கூட்டாட்சிப் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் Muntefering "வெட்டுக்கிளிகள்" என்ற சொல்லை தனியார் பங்கு நிறுவனங்கள், காப்பு நிதிகள் ஆகியவற்றை விபரிப்பதற்கு அறிமுகப்படுத்தினார்.

2004 இறுதியில், Terra Firma மிகப் பெரிய பெட்ரோல் மற்றும் ஆடம்பர உணவு விடுதி நடத்தும் அமைப்பை விலைக்கு வாங்கியது. இப்பொழுது அது இந்த அமைப்பை விற்க விரும்புகிறது. ஜூன் மாதத்தில் Tank & Rest இல் 50 சதவிகிதப் பங்குகளை Deutsche Bank வாங்கியது; இதற்காக அது குறைந்தது 1.2 பில்லியன் யூரோக்களாவது கொடுத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இது Terra Firmaவிற்கு மகத்தான ஊக்கமாகும்; அது இன்னமும் மற்ற 50 சதவிகித பங்கினை கொண்டுள்ளது; 2004ல் முழு நிறுவனத்திற்குமே அது 1.1 பில்லியன் யூரோக்களைத்தான் கொடுத்து வாங்கியிருந்தது.

அரசியல் நடைமுறை இந்த நிதி ஊக வணிகர்களுடைய செயற்பாடுகளுடன் இணைந்து செயல்படுவதை ஷ்ரோடர் அரசாங்கம் குறிப்பாக ஊக்குவித்தது. இன்று ஷ்ரோடரின் மந்திரிகள், ஆலோசனை வல்லுனர்கள், நம்பிக்கைக்கு உரிய சக ஊழியர்கள் மற்றும் வணிக நண்பர்கள் அனைவரும் தனியார் பங்கு நிறுவனங்களில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர். ஷ்ரோடரின் மிக நெருக்கமான நண்பரும் ஓய்வுதிய நிதியை மறுசீரமைக்கும் பணியைப் பரிசீலித்த Rürup ஆணைக்குழுவின் ஆலோசகருமான Roland Berger, உலகின் மிகப் பெரிய தனியார் பங்கு நிறுவனமான Blackstone உடைய "சர்வதேச ஆலோசனைக் குழுவின்", ஜேர்மனியப் பிரிவுத் தலைவர் ஆவார்.

Blackstone அக்கறை கொண்டுள்ள சந்தைகளில் ஒன்று தொலைத்தொடர்பு ஆகும். கடந்த வசந்தகாலத்தில், Roland Berger உடன் நல்ல தொடர்பு உடைய நிதி மந்திரி Peer Steinruck (SPD), Deutsche Telekom AG (இது இன்னமும் கூட்டாட்சி அரசாங்கத்தால் 30 சதவிகித பங்குகளைக் கொண்டுள்ள அமைப்பு ஆகும்) மிக அதிகப் பங்குகளை உடையர் என்ற முறையில் Blackstone ஐ ஈர்த்தார். SPD- பசுமைக் கட்சி அரசாங்கத்துடன் நல்ல உறவுகளைக் கொண்டிருந்த முன்னாள் டெலிகோம் எஜமானரான Rom Summers, Blackstone இற்கு ஆலோசகராக உள்ளார் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல; "ஒரு தங்க கைகுலுக்கலுக்கு" வெகுமதியாக அவருக்கு 2002ல் அவர் Deutsche Telekom ஐ விட்டு நீங்கியபோது வெகுமதி கொடுக்கப்பட்டது.

பல முதலீட்டு நிதியங்கள் அக்கறை கொண்டுள்ள மிகப் பெரிய சந்தைகளுள் ஒன்று ஜேர்மனிய வீடுகள் கட்டும் அமைப்பு ஆகும்; இதில் அவை அரச வீடமைப்புகள் தனியார்மயமாக்கப்படுவதில் இருந்து மகத்தான இலாபங்களை அடைந்து வருகின்றன. ஜேர்மனிய நிறுவனமான Annington ஐத்தவிர, Ruhr பகுதியில் 150,000 இல்லங்கள் EON ல் இருந்து வாங்கப்பட்டன (அந்நிறுவனம் 2000ம் ஆண்டில் இரண்டு முன்னாள் அரசாங்க உடைமை நிறுவனங்கள் இணைப்பின் மூலம் அமைக்கப்பட்டது.); இதைத்தவிர அமெரிக்கத் தனியார் பங்கு நிறுவனங்களான Fortress, Cerberus இரண்டும் ஜேர்மனிய இல்லங்கள் சந்தையில் தீவிரமாக உள்ளன.

செப்டம்பர் 2004 இல், Gagfah (ஒரு இலாபம் நாடாத இல்லங்கள் அமைப்பு நிறுவனம்) இனை Fortress கிட்டத்தட்ட 3.5 பில்லியன் யூரோக்களுக்கு வாங்கியது. இப்பொழுது Gagfah குழு 170,000 இல்லங்களுக்கும் மேலாக உரிமை பெற்றுள்ளது. ஜூலை 2005ல் Fortress மற்றொரு அரச நிறுவன இல்லங்கள் அமைப்பான Nileg மற்றும் அதன் 28,500 வீடுகளை வாடகைக்கு 1.5 பில்லியன்கள் கொடுத்து எடுத்துள்ளது.

இதைச் சற்று தொடர்ந்து மார்ச் 2006ல் Fortress, டிரெஸ்டன் நகரில் இருந்து Wobaவின் அனைத்து அரச வீடுகளையும்(கிட்டத்தட்ட 47,000) வாங்கியது. Wobaவிற்கு உரிமையாக இருந்த கட்டிடங்களில் வசித்து வந்த டிரெஸ்டன் வாழ்மக்களில் ஐந்தில் ஒருவர், இப்பொழுது இந்தத் தனியார் பங்கு நிதியத்திற்கு வாடகை கொடுத்து வருகின்றனர். நகரக் குழுவைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ள இடது கட்சி Fortress உடனான ஒப்பந்தத்தை பெரும் வெற்றி எனக்கூறி களித்து மகிழ்ந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு அரச வேலைவழங்கும் நிறுவனத்தின் (Federal Labour Agency) தலைவராக இருந்த Florian Gerster (SPD), இப்பொழுது ஜேர்மனியின் Investment Advisory Board இன் தலைவராக இருக்கிறார். 2002ல் ஷ்ரோடர் ரைன்லாந்த்-பாலடினேட் மாநில SPD பிரதிநிதியை அரச வேலைவழங்கும் நிறுவனத்தில் இருத்தினார். ஒரு விளம்பர நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புடைய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது, மற்றும் மூன்று ஆலோசனை ஒப்பந்தங்களை Roland Berger, IBM ஆகியவற்றுடன் கையெழுத்திட்டது இவற்றை அடுத்து அவர் பதவியை ராஜிநாமா செய்ய நேரிட்டது; ஏனெனில் இவற்றிற்காக ஒப்பந்த பேரங்களுக்கு அவர் அழைப்பு விடவில்லை. ஆனால் இவர் விலகுவதற்கு முன், அரச வேலைவழங்கும் நிறுவனத்தை "மறுசீரமைத்திருந்தார்" (வேறுவிதமாகக் கூறினால் வேலைகளை ஏராளமாக அழித்து) உற்பத்தியை பாரியளவில் உயர்த்தி, வேலையில்லாதோருக்கு வழங்கும் நலன்களில் பெரும் வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுத்திருந்தார். இன்று Fortress க்கு Gerster ஒரு ஆலோசகராக உள்ளார்; இங்கு அவர் முன்பு அரச வேலைவழங்கும் நிறுவனத்தில் பெற்ற சம்பளத்தைவிட பல மடங்குகள் அதிகம் "சம்பாதிக்கிறார்."

ஆனால் Fortress ஊழியத்தில் நேரத்திற்கு ஏற்ப உழைக்கும் சமூக ஜனநாயகவாதியாக Gerster மட்டும் இல்லை. Fortress துணை நிறுவனமான Gagfah உடைய தலைவர் Burkhard Drescher ஆவார். Oberhausen என்று ரூர் பகுதியில் இருக்கும் நகரத்தின் மேயர் என்ற முறையில் நீண்ட காலமாக அவர் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மானிலச் சட்டமன்றத்தை SPD சார்பாக தலைமைதாங்கி வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2004ல் அவர் வணிக வாழ்க்கைத் தொழிலைத் துவக்க முடிவெடுத்து RAG Imobilien என்னும் நில விற்பனை நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக உயர்ந்தார். ஷ்ரோடர் அரசாங்கத்தின்கீழ் முன்பு பொருளாதார மந்திரியாக இருந்த Werner Muller இந்த நிறுவனத்திற்குத் தலைமை தாங்குகிறார்; முன்னாள் பொருளாதாரச் செயலாளர் Alfred Tacks (SPD) RAG துணை நிறுவனமான Steag ன் தலைவராவார். நிறுவனத்தின் ஒரு ஆலோசகராக முன்னாள் நிதித்துறைச் செயலாளரான Manfred Overhaus (கட்சி சார்பற்றவர்) உள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இருந்து அமெரிக்க முதலீட்டாளர்களுக்காக Drescher உடைய முக்கிய வேலை வாடகை உயர்வுகள் பற்றிய குடியிருப்போரின் கவலைகளைப் போக்குதல் மற்றும் வசிப்பவர்களின் வீடுகளை மற்ற நிறுவனத்திற்கு மாற்றுதல் என்று உள்ளது. Drescherருடைய கருத்தின்படி Fortress துவக்கத்தில் இருந்து "வீடுகள் வணிகத்தில் இல்லை என்று கூறியுள்ளது;" தவிர்க்கமுடியாமல் சில இணைப்புக்கள் ஏற்படுவதும் வேலைகள் இழக்கப்படுவதும் இயல்பேயாகும். உண்மையில் ஐந்துக்கு ஒன்று என வேலைகள் இழக்கப்பட்டுவிட்டது.

ஆனால் வீடுகளுக்காக Fortress கொண்டிருக்கும் பசி ஒன்றும் தீர்ந்துவிடவில்லை. தாராளவாத ஜனநாயக கட்சியினுடனான (Free Democratic Party -FDP) உடனான கூட்டணி ஒப்பந்தத்தில் Jurgen Rutters (CDU) கீழுள்ள உடைய வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநில அரசாங்கம் LEG எனப்படும் மாநில வளர்ச்சி அமைப்பிற்குச் சொந்தமான கிட்டத்தட்ட 100,000 இல்லங்களை விற்பதற்கு முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே 5,000 LEG இன் இல்லங்களை உடைமையாக்கியிருக்கும் Fortress உடன்பாட்டை நிறைவு செய்யக்காத்திருக்கிறது.

Cerberus மூலதன நிர்வாகம்

இந்த ஆண்டு மே-ஜூனில், Cerberus (கிரேக்கப் புராதனக் கதைகளின்படி மரணமடைந்தவர்களின் நிலவறை கதவுகளைக் காத்து நிற்கும் "காவல்நாய்''), DaimlerChryster நிறுவனத்தின் Chrysler பிரிவை 5.5 பில்லியன் யூரோக்களுக்கு வாங்கியது. இதன் மிகப் பெரிய நிலம் வாங்குதல்களில் Wilhelmshaven நகர அரசவீடுகள் நிறுவனமான Jade இனை (அதன் 7,5000 வீடுகள் அடங்கும்) Deutsche Bank இடம் இருந்து 2004 ல் வாங்கப்பட்டன. அதே ஆண்டு Cerberus இலாபம் நாடாத வீடுகள் நிறுவனமான Wohnungsbaugesellschaft Berlin ஐயும் எடுத்துக் கொண்டது. இங்கு இடது கட்சி பேர்லின் நகர அரசாங்கத்தில் SPD க்குக் கூட்டணிப் பங்காளி என்ற முறையில் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

2005 நவம்பரில் Cerberus தொழிற்சங்கத்தின் உடைமையாக இருந்த ஒரு முன்னாள் இல்லங்கள் நிறுவனத்தை, அதன் 23,000 வீடுகளுடன் விலைக்கு வாங்கியது.

இந்த பேரத்தைப் பற்றி ஒரு TV விபரப்படம் கூறியதாவது: "பெரும்பாலான வாடகைக்கு இருப்பவர்கள் சமீபத்தில் உயர்த்தப் பட்ட மாதத்திற்கு 20 சதவிகிதம் கூடுதல் என்பதற்கு உட்படுத்தப்படவில்லை. இங்கு இருக்கும் குறைந்த ஊதியக் குடும்பங்கள் தங்களைக் காத்துக் கொள்ளுவது கடினமாகும். இந்தச் சொத்துக்கள் முன்பு ஒரு அரச பொதுவீடுகள் திட்டத்தின் பகுதியாக இருந்தவை."

20 மாதங்களில், முந்தைய தொழிற்சங்க உடமையாக இருந்த வீட்டமைப்பை பழையபடி விற்றுவிட்டது; 60 சதவிகிதம் Deutsche Bank ற்கும் 40 சதவிகிதம் இத்தாலியின் Pirelli Real Estaste க்கும் விற்கப்பட்டன. இதற்காக Cerberus கிட்டத்தட்ட 1.7 பில்லியன் யூரோக்களைப் பெற்றது; இது செய்த முதலீட்டைப் போல் இருமடங்கு ஆகும்.

2005 இறுதியில், Cerberus மற்றொரு பெரிய ஒட்டுமொத்த நிலத்தொகுப்பையும் ஒரு தொழிற்சங்கக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. இதில் இருந்த 37 சொத்துக்களில், முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் (பேர்லின், டிரெஸ்டன், லைப்சிக், ஷிவிக்கவ், பெளட்சன், மாக்டபேர்க், ரொஸ்டொக், ஜேனா, சூல் ஆகியவை அடங்கும்) இருந்த பத்து வெவ்வேறு தொழிற்சங்கங்களின் தலைமையகங்களும், Verdi தொழிற்சங்கத்தின் ஹனோவர் நகரில் உள்ள தொழிற்சங்கத் தலைமையகமும் அடங்கும். இரு தரப்பினரும் வாங்கப்பட்ட விலை இரகசியமாக இருக்கும் என்று ஒப்புக் கொண்டனர்.

ஆஸ்திரியாவிலும் Cerberus தீவிரமாக உள்ளது. டிசம்பர் 2006ல் இது BAWAG bank இனை ஆஸ்திரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பான OGB இடம் இருந்து கிட்டத்தட்ட 3.2 பில்லியனுக்கு வாங்கியது. அதை எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து, Cerberusசின் எஜமானரும் முன்னாள் அமெரிக்க நிதியமைச்சருமான John Snow இந்த வங்கியின் கண்காணிப்புக் குழுவில் சேரவுள்ளார்.

Cerberus இன் சம்பளப்பட்டியலில் பல பழைய நண்பர்கள் உள்ளனர்; DaimlerChrusler and Volkswagen ல் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினரான Wolfgang Bernhard, முன்னாள் பாதுகாப்பு மந்திரி Voker Ruhe (CDU), மற்றும் அவருக்குப் பின் பதவிக்கு வந்த Rudolf Scharping (SPD) ஆகியோருடன் அமர்ந்து பணி புரிகிறார்; பிந்தையவர் சில காலமாகவே இந்நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அனைத்துப் பிரிவு தொழிற்சங்கவாதிகளும் அரசியல்வாதிகளும் "வெட்டுக்கிளிகள்" அரசசொத்தை இன்னும் அனுபவிப்பதற்கு வெள்ளித்தட்டால் அவர்களுக்கு உதவத் தயாராக உள்ளனர். முதல் கட்டமாக, ஏஞ்சலா மெர்க்கெலின் (CDU) கீழ் இயங்கும் ஜேர்மன் அரசாங்கம் தனியார் பங்கு நிறுவனங்களின் பணியை இனிப்பாக்கும் வகையில் அவர்கள் முதலீடு செய்யும் ஆபத்தான மூலதனத்தின் மீது வரி செலுத்தவேண்டும் என்று கூறும் வகையில் செயல்பட இருக்கிறது.

இது அவற்றை unit trust நிதியங்களுக்குடன் சமநிலையில் வைக்கும்; அவையும் வரிகள் ஏதும் கொடுப்பதில்லை. நிதிய மேலாளர்கள் தங்கள் வருமானத்தில் 40 சதவிகித வரியைச் செலுத்தினால் போதும். இது CDU, SPD இரண்டும் துவக்கக் கூட்டணி ஒப்பந்தத்தில் உட்படுத்தியிருந்த திட்டங்களுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 500 மில்லியன் யூரோக்கள் வரி வருமானத்தில் பற்றாக்குறைவை ஏற்படுத்தும்.

இத்துடன் தனியார் பங்குத்துறை தன்னுடைய கோரிக்கைகளில் சிலவற்றையாவது அடைந்துள்ளது என்று Financial Times Deutschland தெரிவிக்கிறது. ஆனால் தனியார் பங்கு நிறுவனங்கள் இத்தகைய வரிச் சலுகைகள் ஆபத்துகொண்ட மூலதனத்திற்கு (risk capital) மட்டும் என்று இல்லாமல் நிதிய முதலீட்டாளர்களின் வணிகத்தின் மற்ற கூறுபாடுகளுக்கும் விரிவாக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.