World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Former Defense Secretary Donald Rumsfeld claims no cover-up in Pat Tillman death

முன்னாள் பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்ட், பாட் டில்மன் மரணத்தில் மூடிமறைத்தல் ஒன்றும் இல்லை எனக் கூறுகிறார்

By Andre Damon
2 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

கால்பந்து ஆட்டக்காரராக இருந்து இராணுவவீரராக மாறிய பாட் டில்மன் சொந்த இராணுவத்தினராலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதை பற்றிய சட்டமன்றக் குழு விசாரணையில் முன்னாள் பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்ட் சாட்சியம் அளித்தார். டில்மன்னின் மரணம் பற்றி இராணுவத்திற்குள் எந்தவிதமான மூடிமறைத்தலும் இல்லை என்று ரம்ஸ்பெல்ட் கூறினார்; இது கடந்த மூன்று ஆண்டுகளாக வந்து வெளிப்பட்டுள்ள சான்றுகளுக்கு எதிரான நிலைப்பாடு ஆகும்.

தேசிய கால்பந்துக் கழகத்தில் (National Football League) விளையாட்டுப் பணியை விட்டு நீங்கி செப்டம்பர் 11, 2001ல் டில்மன் இராணுவ சேவையில் சேர்ந்தார். ஆப்கானிஸ்தானில் ஏப்ரல் 22, 2004 அன்று அவர் கொல்லப்பட்ட போது அந்த நிகழ்வு அமெரிக்க அரசாங்கத்தால் ஒரு பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. டில்மன் சொந்த துருப்புக்கள் விடுத்த தோட்டாவினாலயே இறந்து போனார் என்று ஒப்புக் கொண்டிருந்தவர்களின் அறிக்கைகளை பென்டகன் உடனடியாக அமுக்கிவிட்டது; ஊடகத்திடம், ஆப்கான் நிலைகளை தாக்க முற்படுகையில் அவர் இறந்துவிட்டார் என்று கூறியது. இதைத் தொடர்ந்து பல வாரங்களும் அத்தகைய வெற்றி செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்தன.

டில்மன் ஒரு பெரும் வீரர் என்றும் "நாட்டிற்காகத் தன்னுடைய உயிரைக் கொடுத்தவர்" என்றும் பாராட்டப்பட்டார். ஆனால் அவருடைய மரணம் பற்றிக் கொடுக்கப்பட்ட தகவல் புனையப்பட்டது என்றும் அவர் ஆப்கான் எழுச்சியாளர்களால் கொல்லப்படவில்லை என்பதும் பின்னர் வெளிவந்தன. இந்த உண்மைகள் அவருடைய குடும்பம் மற்றும் அமெரிக்க மக்களிடம் இருந்து மறைத்து வைக்கப்பட்டன.

செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்க இராணுவம், "இப்பெரும் சோக நிகழ்வைப் பற்றி நடத்தப்பட்ட ஏழு விசாரணைகளில், இராணுவம் ஒரு பெரும் வீரர் பற்றிய கதையைப் புனைவதற்கு, பொதுமக்களை ஏமாற்றுவதற்கு, கார்ப்போரல் டில்மன் மரணம் பற்றி அவருடைய குடும்பத்திற்கு தவறான செய்தி தருவதற்கு சதி செய்ததாக எவரும் எந்தச் சான்றையும் கண்டுபிடிக்கவில்லை." என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இக்கூற்றுக்கள் முந்தைய அவை மேற்பார்வை மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்ற அரசாங்க சீர்திருத்தக் குழுவின் விசாரணையின் கண்டறிதல்களால் முரண்பாட்டிற்கு உள்ளாகின்றன; அவற்றில் குழுத்தலைவர் Henry Waxman, "சான்றுகள் அழிக்கப்பட்டு விட்டன", "சாட்சிகளின் பிரமாணங்கள் மாற்றப்பட்டுள்ளன" என்ற முடிவிற்கு வந்திருந்தார்.

இதே குழுவின் முன் புதனன்று சாட்சியம் அளித்த ரம்ஸ்பெல்ட், டில்மன் இறப்பு பற்றிய சூழ்நிலை பற்றி தனக்கு எப்பொழுது தகவல் அளிக்கப்பட்டது என "நினைவிற்கு வரவில்லை" என்றும் அது மே 20, 2004 ஐ ஒட்டி, டில்மன் கொல்லப்பட்டு ஒரு மாதம், அவருடைய குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆறு நாட்களுக்கு பின்னர், இருக்கலாம் என்றும் கூறினார். பென்டகன் வெளியிட்ட தகவலுடன் தனக்கு ஏதும் தொடர்பு இல்லை என்று ரம்ஸ்பெல்ட் கூறினார்.

ரம்ஸ்பெல்டை தவிர இரண்டு உயர்மட்ட தளபதிகள் --ஜோன் அபிஜைட் மற்றும் ரிச்சர்ட் மைர்ஸ் - குழுவின் முன் சாட்சியம் அளித்தனர். இந்த விஷயத்தில் வேண்டுமென்றே தவறு ஏதும் செய்யப்பட்டது என்பதை இருவரும் மறுத்தனர். இதுவரை லெப்டினன்ட் ஜெனரல் பிலிப் கென்சிங்கர் முழு நிகழ்ச்சிக்கும் பொறுப்பை ஏற்பதற்கு ஒதுக்கப்பபட்டுவிட்டார். செவ்வாயன்று அவர் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டார்; டில்மன் ஒருவேளை அமெரிக்க துருப்புகள் சுட்டதாலேயே இறந்திருக்கக்கூடும் என்று டில்மன் குடும்பத்திற்கு அவர் தெரிவிக்காதிருந்தார் என்று இராணுவ அறிக்கை அறிவித்ததை அடுத்து ஒருவேளை பதவி குறைப்புகூட அவருக்கு செய்யப்படலாம்.

"லெப்டினென்ட் ஜெனரல் கென்சிங்கர் தான் என்ன தெரிந்து கொண்டார், எப்பொழுது தெரிந்து கொண்டார் என்பது பற்றியதில் விசாரணைக்குழுவினரை ஏமாற்றினார்" என்று கென்சிங்கர் பதவிகுறைப்பிற்கு பரிந்துரை செய்துள்ள இராணுவச் செயலாளர் பீட் ஜேரேன் கூறினார். "அவர் தவறான உத்தியோகபூர்வ அறிக்கைகளையும் வெளியிட்டார்." புதன் கிழமை குழுக் கூட்டத்திற்கு வருமாறு உத்தரவு இடப்பட்டபோதிலும், அதற்கு கென்சிங்கர் பதில் கொடுக்கவில்லை, அவரைக் கண்டுபிடிக்கமுடியவும் இல்லை என்று வாக்மன் கூறினார். முந்தைய விசாரணைகளின்போது கென்சிங்கர் அவர்களிடம் முந்தைய நிகழ்வுகளைப் பற்றி விவரங்களை குறைந்த பட்சம் 70 தடவையாவது நினைவுகூரமுடியவில்லை என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

பாட்டின் தாயாரான மேரி டில்மன் இவ்வாரம் வெளிவந்த இராணுவ அறிக்கை பற்றிக் கூறியதாவது: "இது மிகவும் அவமானகரமாகவும், மரியாதையற்றதாகவும் உள்ளது. இராணுவ விசாரணையின் தன்மை பற்றி இது முற்றும் ஒரு உதாரணமாகும்." என்று அவர் நியூ யோர்க் டெய்லி நியூஸிடம் தெரிவித்தார். "இப்போரை பெருமைப்படுத்தும் விதத்தில் அது செய்யப்பட்டது. அது போலித்தன்மை உடையது பாட் பற்றி உண்மைதான் உகந்த முறையில் வெளிவரவேண்டும்." ரம்ஸ்பெல்ட் மற்றும் பிற உயர்மட்ட இராணுவ, அரசியல் அதிகாரிகள் இந்த மூடிமறைத்தலில் பங்கு கொண்டவர்கள் என்று டில்மன் குடும்பம் பலமுறையும் வலியுறுத்தியுள்ளது.

உண்மையில், டில்மன்னின் இறப்பு பற்றிய சூழ்நிலையைப் பற்றி எப்பொழுதும் சிறு விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் ரம்ஸ்பெல்ட் தெரியாமல் இருக்கிறார் என்பது மிகவும் ஏற்கத்தக்கது அல்ல. செய்தி ஊடக பரபரப்பு மற்றும் மிகக்குறுகிய காலத்தில் ஒரு போலிக் கதையை பென்டகன் தயாரித்தது இரண்டும் இணைந்தது டில்மனுக்கு பதக்கங்களும், இறந்தபின் பதவி உயர்வு கொடுப்பதற்கும் அடிப்படையாக இருந்தவை; இதற்கு மிக உயர்மட்ட மேற்பார்வை இல்லாமல் செயல்பட்டிருக்க முடியாது.

டில்மனுக்கு ஒரு குறிப்பை ரம்ஸ்பெல்டே Army Rangers ல் சேர்ந்ததற்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பினார் என்று குழு கூறியுள்ளது. டில்மன் மீது "கவனம் செலுத்துமாறு" மற்றொரு கீழ்நிலை அதிகாரிக்கும் ரம்ஸ்பெல்ட் ஒரு குறிப்பை அனுப்பினார். இச்சூழ்நிலையில், டில்மனுடைய மரணம் பற்றிய சூழ்நிலையைப் பற்றித் தனக்குத் தெரியாது என்று ரம்ஸ்பெல்ட் கூறுவது மிகவும் சந்தேகத்திற்கு உரியது ஆகும்.

ஏப்ரல் 2004 இறுதியில் டில்மன் மரணம் பற்றி ஜனாதிபதி புஷ் பேசுகையில், டில்மன் எப்படி இறந்தார் என்பது பற்றி பேசுவதை அவர் தவிர்த்தார்; நிகழ்வு நடந்து ஒரு வாரத்திற்குப் பின், ஆனால் டில்மன் குடும்பம் சொந்த துப்பாக்கிச் சூட்டிலேயே அவருடைய இறப்பு தொடர்பு கொண்டிருந்தது என்பது பற்றி தெரிவிக்கப்பட்டதற்கு முன், வெள்ளை மாளிகை ஏறகனவே உண்மையை அறிந்திருந்தது என்பதற்கு இது தெளிவான அடையாளமாகும்.

இம்மாதத் தொடக்கத்தில் மேற்பார்வை குழு கோரியிருந்த ஆவணங்களை அளிப்பதற்கு வெள்ளை மாளிகை, நிர்வாக சிறப்புரிமை விதிகளைக்கூறி, மறுத்துவிட்டது. நிர்வாகப் பிரிவைப் பொறுத்த எந்த தகவல் மற்றும் ஆவணங்கள் நிர்வாக சிறப்புச் சலுகைகள் அடிப்படையில் இரகசியமாக வைத்திருக்காலாம் என்ற நிலைப்பாட்டை புஷ் நிர்வாகம் கொண்டுள்ளது; இது அசாதாரண முறை மட்டும் இன்றி, அரசியலமைப்புக்கும் மீறிய வகையில் ஜனாதிபதியின் அதிகாரத்தை வெளிக்காட்டும் நிலைப்பாடு ஆகும். சட்டமன்ற உறுப்பினர்களான வாக்ஸ்மன் மற்றும் தோமஸ் டேவிஸ் (குழுவின் உயர்மட்ட குடியரசுக் கட்சியினர்) வெள்ளை மாளிகைக்கும் பென்டகனுக்கும் எதிர்ப்புக் கடிதங்களை அனுப்பினர்; ஆனால் விளைவு ஏதும் ஏற்படவில்லை.

தன்னுடைய ஆரம்ப அறிக்கையில் வாக்ஸ்மன் நேற்று கூறினார்: "கோர்ப்ரல் டில்மன் மரணம் பற்றி வெள்ளை மாளிகை என்ன அறிந்துள்ளது என்பது பற்றி நாங்கள் கண்டுபிடிக்க முயன்றோம். ஆரம்ப அறிக்கையை தொடர்ந்து குறைந்தது 97 வெள்ளை மாளிகளை அதிகாரிகள் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை கோர்ப்ரல் டில்மன் மரணம் பற்றி அனுப்பினர், பெற்றனர் என்று நாங்கள் அறிவோம்; வெள்ளை மாளிகையும் ஜனாதிபதியும் எப்படி இதை எதிர்கொள்ள வேண்டும் என்று அவற்றில் இருந்தது."

வாக்ஸ்மன் தொடர்ந்தார்: "சில வாரங்களுக்குப் பின்னர், கோர்ப்ரல் டில்மன் உண்மையில் எமது படைகளினால்தான் கொல்லப்பட்டார் என்று பாதுகாப்புத்துறை அறிவிப்பதற்கு முன்பும், பின்பும், இந்த 97 வெள்ளை மாளிகை அதிகாரிகள் எவரிடம் இருந்தும் கோர்ப்ரல் டில்மன் உண்மையில் எப்படி இறந்தார் என்ற மின்னஞ்சல்கள் வெளிவரவில்லை." வாக்ஸ்மன், "வெள்ளை மாளிகை உண்மையை எப்படி, எவ்வாறு அறிந்தது என்பது பற்றி எவரும் எங்களுக்குக் கூறவில்லை." என்று முடிக்கிறார்.

டில்மன் வேண்டுமேன்றே கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்று வந்த புதிய சான்றுகளை அடுத்து விசாரணை தொடங்கியது. அசோசியேட்டட் பிரஸ் பெற்றுள்ள ஆவணங்களின்படி, டில்மன் சடலத்தை ஆய்ந்த டாக்டர் அவருடைய மரணம் பற்றி குற்றவிசாரணை தொடக்கப்பட வேண்டும் என்று கூறியதாகவும், இக்கோரிக்கை இராணுவத்தின் Human Resources Command மற்றும் குற்றவியல் விசாரணைப் பிரிவு இரண்டினாலும் நிராகரிக்கப்பட்டது என்றும் தெரிகிறது.

மிக அருகில் இருந்து நேரில் சாட்சியம் அளித்தவர் சுட்டவர் இன்னும் தொலைவில் இருந்ததாக கூறுகின்ற போதிலும், M16 கருவியினால் 10 கஜங்கள் தொலைவில் இருந்து டில்மன் நெற்றியில் சுடப்பட்டார் என்று டாக்டர் முடிவுக்கு வந்தார். சில புகைக் குண்டுகளை வீசிய பின், கைகளை அசைத்து துருப்புக்களை சுடுவதை நிறுத்தும்படி கூவியதற்கு பின், டில்மன் சுடப்பட்டார். ஆப்கான் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து துப்பாக்கிச் சூட்டிற்கான சான்றுகள் டில்மன் இறந்த இடத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை, எந்த கருவிளும் வீரர்களும் தாக்கப்படவில்லை என்றும் ஆவணங்கள் கூறுகின்றன.

ஈராக் போருக்கு டில்மன் எதிர்ப்பாளராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. முற்போக்கு வரலாற்றாளர், பன்மொழி வல்லுனர் நோம் சோம்ஸ்கி படைப்புக்களை இவர் மிகுந்த ஆர்வத்துடன் படித்தவர் என்றும் அவரை பணியில் இருந்து திரும்பியபின் சந்திக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிகிறது. டில்மன்னுடைய மரணத்திற்குப் பின்னர் அவருடைய உடைகள் அகற்றப்பட்டு, எரிக்கப்பட்டன; ஒரு சிறிய நாட்குறிப்பு ஏடு உட்பட அவருடைய சொந்த உடைமைகள் புதிரான முறையில் காணாமற் போய்விட்டன.

டில்மன் கொல்லப்பட்ட போது அவருக்கு அருகில் இருந்த Bryan O'Neal அவருடைய உயரதிகாரியினால், டில்மன் இறப்புச் சூழ்நிலை பற்றி, எவருக்கும், குறிப்பாக டில்மன்னுடைய சகோதரர் கெவினுக்கு தெரிவிக்கக்கூடாது என்று கூறப்பட்டார்.

சட்டமன்ற கண்காணிப்பு மற்றும் அரசாங்க சீர்திருத்தக் குழுவிடம் ஏப்ரல் மாதம் ஓ' நீல் தன்னுடைய மேலதிகாரி, "கெவினுக்கு கூறிவிடாதீர்கள்; தன்னுடைய சகோதரர் இறந்துவிட்டார் என்று தெரிந்துள்ள அளவில், அவர் மோசமான நிலையில் இருக்கக்கூடும்" என்று கூறியதாகத் தெரிவித்தார். அந்த நேரத்தில் கெவின் டில்மனும் ஒரு Army Ranger பிரிவில் இருந்ததுடன், பாட் டில்மன் கொல்லப்பட்ட போது அவருக்குப் பின்னால் இருந்த வாகன வரிசைகளில் இருந்தார். பாட் இறந்த பின் கொடுக்கப்படுவதற்கான பாராட்டுக்கள் விவரிப்பதற்காக ஓ நீல் பாட் இறந்த கணம் பற்றி விவரிக்கக் கோரப்பட்டார். இவர் கொடுத்த அறிக்கைகள் மாற்றப்பட்டு ஆப்கான் துப்பாக்கிச் சூடு பற்றிய தவறான கூற்றுக்கள் இறுதி வரைவில் எப்படியோ சேர்ந்துவிட்டன என்று கெவின் தெரிவித்தார்.

அபு கிறைப்பில் இருந்து புகைப்படங்கள் வெளிவந்த பின் மற்றும் இன்னும் பல தொடர்ச்சியான பின்னடைவுகளை ஆப்கானிஸ்தானில் சந்தித்ததின் பின் மீண்டும் தங்கள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த அமெரிக்க அரசாங்கமும் இராணுவமும் முயலுகையில் டில்மன்னுடைய இறப்பு ஏற்பட்டது. "பாட்டின் இறப்பு, சொந்த துருப்புகளாலேயே ஏற்பட்டது என்பதை வெளிப்படுத்தியிருந்தால் அது ஏற்கனவே பேரிடர்கள் நிறைந்திருந்த மாதத்தில், மற்றுமொரு அரசியல் பேரழிவாக இருந்திருக்கும்" என்று கெவின் டில்மன் ஏப்ரல் மாதம் சட்டமன்ற மேற்பார்வை குழுவிடம் தெரிவித்தார். புஷ் நிர்வாகம் இந்த விவகாரத்தை பொறுத்த வரையில், "வேண்டுமென்றே, திட்டமிட்ட பொய்களை" கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.