World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: LTTE mounts second air attack as government forces intensify offensive

இலங்கை: அரசாங்கப் படைகள் தாக்குதல்களை உக்கிரப்படுத்துகின்ற நிலையில் புலிகள் இரண்டாவது விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர்

By Sarath Kumara
27 April 2007

Use this version to print | Send this link by email | Email the author

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரே மாதத்திற்குள் இரண்டாவது விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர். திங்கள் பின்னிரவு வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பலாலியில் உள்ள இலங்கை இராணுவத்தின் பிரதான தளத்தின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலாலியானது வடக்கில் உள்ள பிரதான விமானத் தளமாக இருப்பதோடு தீவின் தெற்கிற்கு தரைமார்க்க பாதை இல்லாத இராணுவத்திற்கு பிரதான விநியோக வழியாகவும் உள்ளது.

முதலில் புலிகளின் விமானத் தாக்குதலை பாதுகாப்பு அமைச்சு மறுத்தது. ஆனால் இந்தத் தாக்குதலில் ஆறு படையினர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா பின்னர் ஏற்றுக்கொண்டார். பலாலி தளத்தில் இருந்த விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இயக்கப்பட்டவுடன் புலிகளின் விமானம் பாதையை மாற்றி அருகில் உள்ள இராணுவ படைப்பிரிவின் மீது குண்டுகளை வீசிவிட்டுச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இந்தத் தாக்குதலால் விமானப்படைத் தளத்தில் பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். கடந்த மாதம் கொழும்பில் இருந்து 40 கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள நாட்டின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தின் மீது குண்டுவீசியதன் மூலம் புலிகள் இலங்கை இராணுவத்தை திகைப்புக்குள்ளாக்கினர். இந்த இரு தாக்குதல்களிலும் இலங்கை விமானப்படைக்கு நிகரற்ற மற்றும் ஒப்பீட்டளவில் சிறிய சேதங்களை மட்டுமே ஏற்படுத்தும் இயலுமை கொண்ட சிறிய, இலகுரக விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புலிகளைப் பொறுத்தளவில் இந்த விமானத் தாக்குதல் மனத்தைரியத்தை தூக்கி நிறுத்துவதற்கான அவநம்பிக்கையான முயற்சியாகும். புலிகளின் படைகள் குறிப்பாக தீவின் கிழக்கில் இலங்கை இராணுவத்தின் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றது. புலிகள் கிழக்கில் தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் குறிப்பிடத்தக்க பிரதேசங்களை இராணுவத்திடம் இழந்துள்ளனர். கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள பிரதேசங்களைக் கைப்பற்றும் "இறுதி முயற்சியில்" ஈடுபட்டுள்ளதாக இராணுவம் பிரகடனம் செய்கின்றது.

ஏப்பிரல் 11 அளவில், கொழும்பில் இருந்து கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையின் மஹோதய-செங்கலடி பகுதியில் 14 ஆண்டுகளாக புலிகள் கொண்டிருந்த கட்டுப்பாட்டை அரசாங்கத் துருப்புக்கள் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன. கடந்த ஜூலையில் 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி தாக்குதல் நடவடிக்கைகளுக்கு முன்செல்ல அரசாங்கம் அனுமதித்ததில் இருந்து, இராணுவம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாவிலாறு, சம்பூர் மற்றும் வாகரைப் பிரதேசங்களை கைப்பற்றியுள்ளது.

இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, கிழக்கில் தொப்பிகலையைச் சூழ சுமார் 150 கிலோமீட்டர் சுற்றளவிலான ஒரு காட்டிற்குள் புலிகளை இராணுவம் வரையறுத்திருப்பதாக பெருமைபடுத்திக் கூறினார். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலான பிரதேசங்களை ஏப்பிரல் நடுப்பகுதியளவில் பாதுகாப்புப் படைகள் கைப்பற்றும் என மார்ச் முற்பகுதியில் அறிவித்தார்.

பின்வாங்கத் தளப்பட்டுள்ள நிலையில், புலிகள் அண்மையில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் அரசாங்க துருப்புக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றனர். கடந்த வாரக் கடைசியில் வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரை ஒன்று: "பாதுகாப்புப் படைகளின் தாக்குதல்களை சந்திக்க தமது பெரும்பாலான போராளிகளை புலிகள் வடக்குக்கு அழைத்துள்ள அதே வேளை, பயனுள்ள வகையில் அரசாங்க துருப்புக்களை கண்காணிப்புக்குள் வைப்பதன் பேரில் கிழக்கில் கனிசமானவர்களை விட்டுவைத்திருப்பது தெளிவாகியுள்ளது," என கூறியுள்ளது.

எவ்வாறெனினும், இராணுவம் புலிகளின் வடக்கில் உள்ள கோட்டைமீது கவனத்தை ஏற்கனவே திருப்பியுள்ளது. யாழ்ப்பாணத்திற்குத் தெற்கில் நாகர்கோவிலில் விமானப்படை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் "இந்தத் தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும்" இராணுவம் அறிவித்தது. கடந்த வாரம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புலிகளின் கட்டுப்பாட்டிலான பிரதேசங்கள் மீது யுத்த விமானங்கள் தாக்குதல் தொடுத்தன. மன்னார் மற்றும் ஓமந்தைப் பகுதிகளில் தரைத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் குறைந்தபட்சம் எட்டு படையினர் உயிரிழந்துள்ளனர்.

2002 யுத்த நிறுத்தத்தை அரசாங்கம் அலட்சியம் செய்வது ஏப்பிரல் 12 அன்று அசோசியேடட் பிரஸ்சுக்கு பாதுகாப்புச் செயாலளர் கோதபாய இராஜபக்ஷ பேட்டியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. "இங்கு யுத்த நிறுத்த உடன்படிக்கை கிடையாது. அதில் அர்த்தம் இல்லை" என அவர் தெரிவித்தார். அரசாங்கம் அதை ஒதுக்கித் தள்ளாததற்கான ஒரே காரணம், "பெரும்பாலும் சர்வதேச சமூகத்தை சந்தோஷமாக வைத்திருப்பதற்காகவே'' என அவர் குறிப்பிட்டார்.

அதே செவ்வியில், தாக்குதல்கள் தொடரும் என்பதையும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் வன்னிப் பிராந்தியத்தில் புலிகளின் கோட்டைக்குள் நுழையும் திட்டம் இராணுவத்திடம் உள்ளதா எனக் கேட்ட போது, "நிச்சயமாக" என அவர் உடனடியாகத் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரியும், ஜனாதிபதியின் சகோதரருமான இவர், சில காலங்களாக சாட்சியாக இருந்து வந்தவற்றை சாதாரணமாகத் தெரிவித்தார். 2002 யுத்த நிறுத்தத்தை திருத்தி எழுதுவதை வலியுறுத்தும் ஒரு உக்கிரமான களத்தில் சிங்களப் பேரினவாதக் கட்சிகளின் ஆதரவுடனேயே மஹிந்த இராஜபக்ஷ 2005 நவம்பரில் நடந்த தேர்தலில் குறுகிய வெற்றியைப் பெற்றார். அவரது வெற்றி, புலிகளுக்கு எதிராக கொலை மற்றும் ஆத்திரமூட்டல் யுத்தத்தை முன்னெடுக்க இராணுவத்திற்கும் அதோடு சேர்ந்து இயங்கும் துணைப்படைகளுக்கும் பச்சை வெளிச்சம் காட்டியது.

கடந்த ஜூலையில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவிலாறு பிரதேசத்தைக் கைப்பற்ற இராணுவத் தாக்குதலுக்கு ஜனாதிபதி அனுமதியளித்தார். சர்வதேச சமாதான முன்னெடுப்பு என்று சொல்லப்படுவதை மேற்பார்வை செய்யும் அமெரிக்காவும் மற்றும் ஏனைய நாடுகளும் அரசாங்கம் யுத்தத்தை புதுப்பிக்க மெளனமாக ஆதரவளித்தன. இருதரப்பும் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என அவ்வப்போது கூறிய போதிலும் கொழும்பு அரசாங்கம் அப்பட்டமாக யுத்த நிறுத்தத்தை மீறியதை எந்தவொரு பெரும் வல்லரசும் விமர்சிக்கவில்லை.

கோதபாய இராஜபக்ஷவின் அண்மைய அறிக்கை தொடர்பாக எந்தவொரு சர்வதேச கண்டனமும் இல்லாமை ஆச்சரியத்திற்குரிய விடயம் அல்ல. உண்மையில், ஐரோப்பிய ஒன்றியம் கடந்த திங்கட் கிழமை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளைத் தொடர்ந்தும் வைத்திருக்க இரண்டாவது தடவையாகவும் வாக்களிப்பதன் மூலம் அதன் ஆதரவைக் காட்டியுள்ளது.

திங்கள் முன்னெடுத்த இன்னுமொரு நகர்வில், அக்கறையுடனான சமாதானப் பேச்சுக்களில் அது கொஞ்சமும் ஆர்வம் காட்டவில்லை என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தியது. அது புலிகளின் கட்டுப்பாட்டிலான கிளிநொச்சிக்கு பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கரையும் மற்றும் அவரது பிரதிநிதிகளையும் அந்தப் பயணத்தை இரத்துச் செய்யுமாறு கோரியது. "பாதுகாப்பு பிரச்சினை" காரணமாகக் காட்டப்பட்ட போதிலும், நோர்வேயினர்கள் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிமுறைகளை அனுகுவதைத் தடுப்பதே உண்மையான நோக்கமாகும். "சமாதான முன்னெடுப்பின்" உத்தியோகபூர்வ அனுசரணையாளரான நோர்வேயை "புலிகளுக்கு சார்பானவர்கள்" என சிங்களத் தீவிரவாதிகள் மீண்டும் மீண்டும் கண்டனம் செய்துவந்தனர்.

புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன், அண்மைய மோதல்களுக்கு பிரதிபலிப்பாக, சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்க கொழும்புக்கு அழுத்தம் கொடுக்குமாறு பெரும் வல்லரசுகளுக்கு மேலுமொரு பயனற்றதும் பரிதாபமானதுமான வேண்டுகோளை விடுத்தார். "இது தொடர்பாகவும் மற்றும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேச சமூகத்திற்கு இன்னமும் வாய்ப்பு உண்டு... அரசாங்கம் செய்துகொண்டிருப்பதற்கு எங்களது பதில் நடவடிக்கைகளை வெளிக்காட்டாமல் இருப்பதற்குக் காரணம் இன்னமும் நாங்கள் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை வைத்திருப்பதே," என அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் தனது இனவாத யுத்தத்தை உக்கிரமாக்குகின்ற நிலையில், அரசாங்கம் சாதாரண உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான அதன் தாக்குதல்களை உக்கிரமாக்கிக்கொண்டிருக்கின்றது.

யுத்தத்திற்கும் மற்றும் அதன் பொருளாதாரச் சுமைகளுக்கும் பரந்த எதிர்ப்பு நிலவுகிறது. மொத்த தேசிய வருமானத்தில் 8 வீதத்தை எட்டியுள்ள பாதுகாப்புச் செலவின் அதிகரிப்பால் அரசாங்கத்தின் கடன் 16 வீதத்தைத் தாண்டியுள்ளது. 20 வீதமாக உள்ள பணவீக்கமானது குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற சாதாரண மக்கள் மீது கனிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராஜபக்ஷவின் அரசாங்கமானது, அடிப்படை உரிமைகள் மீது ஒரு தொகை கடுமையான தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலம் வளர்ச்சிகண்டுவரும் வெகுஜன எதிர்ப்புக்கு பிரதிபலிக்கின்றது. கடந்த ஆண்டு, அது கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தியது. இந்தச் சட்டம் "பயங்கரவாத சந்தேக நபர்களை" குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்துவைக்க அனுமதிக்கின்றது. ஏப்பிரல் 6 அன்று, நாட்டின் 25 மாவட்டங்களிலும் ஆயுதப் படைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்காக தனது அவசரகால அதிகாரங்களை ஜனாதிபதி இராஜபக்ஷ பயன்படுத்திக்கொண்டார்.