WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
:
பிரித்தானியா
Britain: What is revealed by Labour's leadership contest?
பிரிட்டன்: தொழிற் கட்சி தலைமைக்கான போட்டியில் வெளிவருவது என்ன?
By Julie Hyland
29 March 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
தொழிற்கட்சியின் புதிய தலைவராகவும் பிரிட்டனின் புதிய பிரதம மந்திரியாகவும்
நிதிமந்திரி கோர்டன் பிரெளனுக்கு தான் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக இந்த வாரம் மக்கள் மன்றத்தின்
தலைவரான ஜாக் ஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
நேரடியாகப் பார்த்தால் அவருடைய பணி எளிதாகும் என்றுதான் தோன்றுகிறது.
தான் எப்பொழுது விலகுவேன் என்பதை பற்றி பிரதம மந்திரி டோனி பிளேயர் இன்னும் தேதி கொடுக்க மறுக்கிறார்;
ஆனால் ஸ்கொட்லான்ட், வேல்ஸில் நடக்க உள்ள மே 3ம் தேதி தேர்தல்களுக்கு பின்னர் அவர் பதவியில் இருந்து
இறங்குவார் என்று பரந்த அளவில் எதிர்பார்க்கப்படுகிறது; இதையொட்டி ஏழு வாரங்கள் பிரச்சாரம் நடக்கக்கூடிய
சாத்தியப்பாடு உள்ளது.
பிரெளனுக்குச் சவால் விட்டு வெற்றிபெறக்கூடிய திறனுடன் இதுவரை எவரும் முன்வரவில்லை.
போட்டி எதையும் எதிர்நோக்காவிட்டாலும் பிரெளன் கட்சித் தேர்தல் கூட்டங்களில் கலந்து கொள்ளுவார் என்று
இம்மாதம் தேசிய நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. ஆனால், இப்பொழுதும்கூட, இந்த முடிசூட்டலுக்கு முற்றிலும் உடன்படாதவர்கள்
என்ற பலரும் கட்சியில் உள்ளனர்.
உண்மையில், கட்சிக்குள் இருக்கும் உட்பூசலின் தன்மையின் மட்டத்தை அடுத்து, ஒரு பாதிப்பை
ஏற்படுத்தக்கூடிய சேதத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்ட்ரோ அறிவிப்பை
கொடுத்திருக்கக்கூடும். 1994ல் கட்சித் தலைவர் என்று பிளேயருடைய விருப்பத்தையே வெளியிட்ட இவர்,
தன்னையே கட்சியில் உள்ள பிளேயர், பிரெளன் பிரிவுகளுக்கு இடையே இருக்கும் ஒன்றுபடுத்தும் சக்தியென வெளிப்படுத்துகிறார்.
ஆனால் புதிய தொழிற்கட்சியின் உயர்மட்டத்தில் எவரேனும் கடைசி நேரத்தில்
பிரெளனுக்கு சவால் விடும் நோக்கத்தை கொண்டிருந்தால், அதைத் தவிர்க்க வேண்டும் என்ற விருப்பமும் இந்த
அறிவிப்பில் காணப்படுகிறது. வெளியுறவு மந்திரியாக 2003 ஈராக் மீது நடைபெற்ற சட்டவிரோத படையெடுப்பின்
போது இருந்த ஸ்ட்ரோ, பிரெளனுக்காக "துடிப்பு நிறைந்த பிரச்சாரத்தை" மேற்கொள்ள இருப்பதாகவும்,
தன்னுடைய அறிவிப்பு " பாராளுமன்ற பிரிவின் பரந்த பிரிவுகளில் இருந்து மிக, மிக சாதகமான பிரதிபலிப்புகளை
கொண்டுள்ளதாகவும்" கூறினார்.
இத்தகைய கூற்றுக்கள் ஐரோப்பிய ஆணையர் பீட்டர் மண்டெல்சனின் சீற்றக்
கருத்துக்களால் மறுக்கப்படுகிறது. பிளேயரின் முக்கிய ஆதரவாளரான அவர் பொதுமக்களை பொறுத்தவரையில்
பிரெளன் தலைமை பற்றி "உறுதியற்ற தன்மை" உள்ளதாகவும், சான்ஸ்லர் ஓர் எதிர்ப்பாளரை சந்திக்க வேண்டும்
என்பது "வெளிப்படை" என்றும் கூறியுள்ளார்.
முன்னாள் பிளேயர் கொள்கை அமைக்கும் பிரிவின் தலைவரும், சுற்றுச் சூழல்
மந்திரியுமான டேவின் மிலிபாண்ட், ஒருவேளை அத்தகைய சவால் விடுபவராக வெளிப்படக்கூடும்.
முன்னாள் கல்வி மந்திரி சார்ல்ஸ் கிளார்க், மிலிபாண்ட் "ஒரு நல்ல வேட்பாளர்,
நல்ல பிரதம மந்திரியாக வரக்கூடும்" என்று கூறியுள்ளார் சுகாதார மந்திரி அலன் மில்பர்னுடன்கூட, கிளார்க்
The 2020 Vision
என்னும் வலைத் தளத்தின் பின்னணியில் இருந்தார்; இது "வருங்கால கொள்கைகளை கட்சி மற்றும் பொதுமக்களுடன்
விவாதிப்பதற்காக" தோற்றுவிக்கப்பட்டது. 2020
Vision பிரெளனுக்கு எதிராக இயக்கப்பட்டது என்பதை
மறுத்தபோதிலும், மண்டெல்சன் இத்தளத்திற்கு பங்களித்தவர்களில் ஒருவராவர்; முன்னாள் மந்திரி பிராங்க் பீல்டும்
ஒரு மிலிபாண்டின் சவாலுக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
மற்ற பங்களிப்பாளர்களில், பிளேயர் சார்புடைய
Third Way
செயற்பட்டியலின் ஆசிரியரான டோனி கிட்டன்ஸ் மற்றும் முன்னாள் செய்தித்தாள் முதலாளி லார்ட் ஹோலிக்
ஆகியோரும் உள்ளனர். லண்டன் நகரத்தில் பரந்த தொடர்புகளை உடைய ஹோலிக் தலைமைக்கு சவால் விடுவதற்கு
தேவையான நிதியத்தை திரட்ட உகந்தவர் என்று கருதப்படுகிறார்.
ஞாயிறன்று,
Observer ஏடு மிலிபாண்ட் போட்டியிட்டால் "வெற்றி
பெறுவார்" என்று பிளேயர் கூறியதாக தெரிவிக்கிறது.
இந்த பிளேயர் பிரெளன் பிரிவுகளின் பூசல்களில் கடுகளவு கொள்கைகூட தொடர்பு
கொண்டிருக்கவில்லை. தொழிற்கட்சி தன்னுடைய சீர்திருத்தக் கொள்கைகளை பெருவணிக செயற்பட்டியலுக்கு
ஆதரவாக கைவிட்டதில் இணைந்து செயலாற்றிய முறையில், பிரெளன் 1994ம் ஆண்டு கொண்டிருந்த தலைமைத்துவ
விருப்பத்திற்கான முனைவை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுமாறு ஊக்குவிக்கப்பட்டார்; சிறிது காலம் கடந்த பின்
பிளேயரே பதவியில் இருந்து இறங்கி இவரை ஊக்குவிப்பார் எனக் கூறப்பட்டது.
அந்தக் காலகட்டம் வருவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது; இதையொட்டி
சான்ஸ்லருக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் இடையே கசப்பான வேறுபாடுகள் விளைந்தன. ஆயினும் கூட
பதவியில் தொழிற்கட்சி இருந்த பத்து ஆண்டு காலத்திலும் பிரெளன் அரசாங்கத்தின் அனைத்து ஆழ்ந்த இகழ்வான
நடவடிக்கைகளுக்கும் ஆதரவைக் கொடுத்துள்ளார்; ஈராக்கிற்கு எதிரான போரும் இதில் முக்கியமாகும். கடந்த
வாரம்தான் பிரெளன் நம்பர் 10 க்கு தன்னுடைய உரிமையை கோரும் வகையில் ஒரு பட்ஜெட்டை
கொடுத்துள்ளார்; இதில் மிகக் குறைந்த ஊதியம் உடைய தொழிலாளர்களுக்கான வருமானவரி விகிதம்
உயர்த்தப்பட்டுள்ளதுடன், பெருநிறுவனங்கள் மீதான வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன.
எந்த அளவிற்கு தொழிற்கட்சி வலது பக்கம் நகர்ந்துள்ளது என்பதின் அடையாளம்
பிரெளனுக்கு தீவிர ஆபத்து என்பது ஒரு பிளேயர் ஆதரவு பெற்ற எதிர்ப்பாளர் மூலம் வரலாம் என்பதில் இருந்து
புலனாகும்.
இப்பொழுது கட்சியின் இடதுசாரி என அழைக்கப்படுவதில், இரண்டு பாராளுமன்ற
உறுப்பினர்கள்தான் பிரெளனை எதிர்க்கப்போவதாக அறிவித்துள்ளனர்; ஜோன் மக்டோனலும் மைக்கேல்
மீச்சரும்தான் அவர்கள். ஆனால் கட்சிக்குள் குறிப்பிடத்தக்க வகையில் கருத்தியல் மோதல்கள் என்று சுட்டிக்
காட்டுவதைவிட, அவர்களுடைய பிரச்சாரங்கள் ஒரு அரசியல் பிணத்திற்கு உயிர் இருப்பது போல் காட்டும்
முயற்சிதான்.
மக்டோனல் தொழிற்கட்சி சோசலிஸ்ட் பிரச்சாரக் குழுவின் தலைவராவார். ஈராக்
போரை எதிர்த்திருந்த போதிலும்கூட, இவர் 1997ல் இருந்து அரசாங்கத்தில் இருந்து வருகிறார்; கட்சிக்கு
புத்துயிர்ப்பு கொடுக்க முடியும் என்றும் கூறுகிறார். கடந்த ஆண்டு தலைமைப் பதவிக்கு தன்னுடைய விருப்பத்தை
இவர் அறிவித்தபோது, மக்களிடையே எவ்வித ஆதரவும் தேவையானால் கட்சி ஒரு இடதுசாரி வேட்பாளரை
நிறுத்துதல் மிகவும் முக்கியமென கருதுவதாக தெளிவுபடுத்தியிருந்தார்.
"தன்னுடைய வரலாறு முழுவதும் இதை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கு நம்பியிருந்த
பரந்த கூட்டணியை அரசாங்கம் முறித்துவிட்டது" என்று மக்டோனல் கூறினார்; மேலும் "எமது ஆதரவாளர்களில்
ஒவ்வொரு பிரிவையும் ஒன்றன் பின் ஒன்றாக விரோதப்படுத்தியும் உள்ளது."
அவர் மேலும் கூறினார்: "கொள்கைகளை நீங்கள் மாற்றிக்
கொள்ளவில்லை என்றால், இது மிருதுவான முறையில் ஏற்படும் மாற்றமாக [கன்சர்வேடிவ் தலைவர் டேவிட்]
காமிரோனுக்கு போய்விடும்."
ஆனால் மக்டோனல் தொழிலாள வர்க்கத்தின் தன்னுடைய முன்னாள்
ஆதரவாளர்களிடையே தொழிற் கட்சிக்கான ஆதரவை மறுபடியும் பெறுவது என்ற நிலைப்பாடு கட்சியின் இடதுசாரி
ஒரு எஞ்சிய சிறுபகுதியாக்குவதன் மூலம் உதவாது.
சோசலிஸ்ட் பிரச்சாரக் குழுவில் 24 எம்.பி.க்கள்தான் உள்ளனர்; இவர்கள்
பெரும்பாலும் 50 வயதை கடந்தவர்கள்; பலரும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஓய்வு
பெற உள்ளனர்; இதில் குழுவின் பொருளாளர் அலன் சிம்சனும் அடங்குவார்.
தலைமைக்கான வாக்குப் பதிவை மக்டோனல் பெறுவது கூட கடினம்தான்; ஏனெனில்
இதற்கு குறைந்தது 44 தொழிற்கட்சி பாராளுமன்ற அங்கத்தவர்ககளின் ஒப்புதல் தேவைப்படும். கட்சியுடன்
உத்தியோகபூர்வமாக இணைந்துள்ள தொழிற்சங்கங்களில் ரயில் தொழிற்சங்கம் ஒன்றுதான் பகிரங்கமாக இவருடைய
வேட்புத் தன்மைக்கு ஆதரவு கொடுத்துள்ளது; தொழிற்சங்க உரிமைகளை மீட்பது தன்னுடைய முக்கிய கோஷம் என்று
மக்டோனல் குறிப்பிட்ட பின்னரும் நிலைமை இப்படித்தான் உள்ளது.
தேர்தலில் தானும் போட்டியிட வேண்டும் என்று மீச்சர் எடுத்துள்ள முடிவு இருவரில்
எவருக்கும் போட்டியிடவதற்கான ஆதரவைப் பெறுவது போதுமானதாகவில்லை என்பதைத்தான் குறிப்பிடுகிறது.
உண்மையில் எத்தகைய ஆதரவை அவர் திரட்டினாலும், அது மக்டோனலை அவமானப்படுத்த வேண்டும், அவருடைய
பால்-தண்ணீர் போன்ற சோசலிசம் ஏற்கக்கூடிய அளவிற்கு இடதுசாரித்தன்மை கொண்டுள்ளது என்று
கருதபவர்களுடைய விருப்பமாகத்தான் இருக்கும். தன்னுடைய ஓய்வை அவர் அறிவிக்கு முன், சோசலிஸ்ட் பிரச்சார
குழுவிர் பலரும் சிம்சன்தான் இடதின் வேட்பாளராக வருவார் என்று எதிர்பார்த்திருந்தனர்.
தன்னுடைய பங்கிற்கு, மீச்சர் மக்டோனல் அவருடைய விருப்பத்தை "சக நண்பர்களை
கேட்காமல்" அறிவித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்; மேலும் அவருடைய வேட்புத்தன்மை "மத்திய-இடதிற்கு
வேட்புமனுப்பதிவு தொடக்க கட்டத்தை கடக்கக்கூடியவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கும் வகையில் இருக்கும்"
என்றும் வாதிட்டுள்ளார்.
ஈராக்கின் மீதான போருக்கு ஆதரவைத் தான் கொடுத்து வாக்களித்ததை
"என்னுடைய அரசியல் வாழ்வின் மிகப் பெரிய தவறு" என்று அவர் விளக்கியுள்ளார். அரசாங்கத்தின் பேரழிவு
ஆயுதங்கள் பற்றிய சான்றுகளை "தேர்ந்தெடுத்த முறையில் திரித்ததால்" தான் தவறாக வழிகாட்டப்பட்டதாகவும்
அவர் கூறியுள்ளார். பிளேயர் மீதான அவருடைய எதிர்ப்பு ஒரு தேசியவாதி என்ற நிலையில் இருந்து வருகிறது;
தொழிற் கட்சிக்கு "பிரிட்டிஷ் நலன்களை தளமாகக் கொண்ட, அமெரிக்காவிற்கு தாழ்ந்து நிற்காத, குறிப்பாக
மத்திய கிழக்கில் உறுதியாக இருக்கும் புதிய வெளியுறவுக் கொள்கை" தேவை என்று அவர் வாதிட்டுள்ளார்.
மீச்சருடைய வேட்பு மனுக்கு எதிர்ப்பு மூத்த தொழிற்கட்சி தலைவரான டோனி பென்
இன்னும் பலரிடம் இருந்து வந்துள்ளது; அவர்கள் இவர் மிகவும் சமரசமாக்கப்பட்டுவிட்டார் என்றும் மக்டோனல்
பிரச்சாரம் "தொழிற்கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை மீட்க முடியும்" என்பதை
பாதிக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் குறைந்து கொண்டே இருக்கும் இடது தொழிலாள வர்க்கத்திடம் தன்னுடைய
அரசியல் நிலையை தக்க வைத்துக்கொள்ளும் பரிதாபகரமான முயற்சிகள் பிரிட்டனின் தீவிரவாதக் குழுக்களின்
ஆதரவை கொண்டுள்ளது; அவை அனைத்தும் மக்டோனலின் தலைமை இலக்கிற்கு பாராட்டை தெரிவித்துள்ளனர்.
சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியில் (Socialist
Workers Party) ஜோர்ஜ் காலாவேயின்
Respect-Unity,
இங்கிலாந்து வேல்ஸ் கூட்டணியினரும் டாமி ஷெரிடனுடைய "Solidarity-The
Scottish Socialist Movement" ஆகியவைற்றின்
தலைவர்கள் பலரும் உள்ளனர். "மக்டோனலின் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு தொழிற்சங்கவாதியிடம் இருந்தும்
ஆதரவு தக்கதே. பிளேயரிசம் மற்றும் பிளேயரை அகற்றுவது பற்றிய விவாதத்தை எழுப்புவதிற்கு இது முக்கிய
வாய்ப்பை கொடுக்கும்" என்றும் அதி வலியுறுத்துகிறது. மேலும், "மக்டோனலுக்கான வாய்ப்புக்கள் சிறந்தவை
எனக் காட்டப்பட்டால் அது முழு இடதிற்கும், தொழிற்கட்சிக்குள்ளும், வெளியேயும் ஒரு முன்னேற்றப் பாதையாகும்"
என்றும் கூறுகிறது.
சிறிதும் தளர்ந்துவிடாமல்,
Scottish Socialst Party மக்டோனலின் தலைமைப்
பதவிக்கான விழைவுகளுக்கு ஒப்புதல் கொடுப்பதுடன் அவை "தொழிற்சங்க உரிமைகளை மீட்டு, தனியார்மயத்திற்கு
முற்றுப்புள்ளி வைத்து, அரச வீடமைப்பிற்கான நேரடி முதலீட்டை செய்தல் மற்றும் ஈராக், ஆப்கானிஸ்தானில்
இருந்து படைகளை திரும்பப் பெறவும் வழிசெய்யும்" என்று கூறியுள்ளது.
இத்தகைய போலிக்கூற்றுக்கள் அமைப்பு ரீதியாக பிளேயர் அரசாங்கத்திலும், புதிய
தொழிற்கட்சியிலிருந்தும் தங்களை ஒதுக்கிக் கொள்ளும் முயற்சியைக் காட்டினாலும்,
SWP, SSP
போன்றவை அனைத்தும் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அரசியல் பிற்சேர்க்கை போல்தான்
செயல்பட விரும்புகின்றன என்பதை நிரூபிக்கின்றன. இவை உண்மையான சோசலிச மாற்றீட்டை பிரதிபலிக்கவில்லை;
தொழிற்கட்சியின் இடது புறத் தோற்றத்திற்கு கைதட்டி ஆர்ப்பரிப்பவையாகத்தான் உள்ளன; பிளேயர், பிரெளன்
கட்சியுடன் தொடர்பு என்பது தேர்தலில் தற்கொலைக்கு ஒப்பாகும் எனக் கருதும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,
உள்ளூர் மன்றங்களின் உறுப்பினர்கள், தொழிற்சங்க கருவிகளின் புதிய இல்லமாக இது விளங்கக்கூடும்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம், சமூக சமத்துவத்திற்கான போராட்டம்
ஆகியவை தொழிற் கட்சியின் எப்பிரிவையும் ஆதரிப்பதின் மூலமும் அடையப்பட முடியாது; அதற்கு எதிரான அரசியல்
போராட்டத்தின் மூலம்தான் அடையப்பட முடியும்.
ஸ்கொட்டிஷ் பாராளுமன்றம் மற்றும் வேல்ஷ் சட்டமன்ற தேர்தல்கள் மே 3 அன்று
நடைபெற உள்ளன; இதற்கு சோசலிச சமத்துவக் கட்சி வட்டாரப் பட்டியலை அளித்துள்ளது. ஸ்கொட்லாந்தின் மேற்குப்
புறத்தில் SEP
கொடுத்துள்ள ஐந்து பேர் அடங்கிய வட்டார பட்டியலில்
SEP இன் தேசிய செயலாளரான கிறிஸ் மார்ஸ்டென் முதலிடத்தில்
உள்ளார். தெற்கு மத்திய வேல்ஸில், நான்கு பேர் அடங்கிய வட்டாரப் பட்டியலில்
SEP உடைய மத்தியக்
குழு உறுப்பினும் உலக சோசலிச வலைத்தளத்தின் நிருபருமான கிறிஸ் டால்பேர்ட் முதலிடம் வகிக்கிறார். (See
campaign web site)
SEP இன் பிரச்சாரம் ஓர் உண்மையான
சோசலிச மாற்றீடு, பழைய தொழிலாளர்கள் அமைப்பிற்கு எதிராக கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக்
கொண்டுள்ளது; பழைய அமைப்புக்கள் அரசியல் ரீதியாக நெறியாக அமைக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான், ஈராக்
படையெடுப்புக்களை நியாயப்படுத்தின; உழைக்கும் மக்களிடம் இருந்து செல்வந்தர்களுக்கு மகத்தான முறையில்
செல்வம் மறுபங்கீடு செய்யப்படுவதற்கு வழிகாட்டின.
அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், ஒரு முற்போக்கான
பாதையைக் காண விரும்புபவர்கள், எங்கள் தேர்தல் அறிக்கையை படிக்குமாறும்; எங்கள் கட்சிப் பட்டியலுக்கு
வாக்களிக்குமாறும், எங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு பெறுமாறும் அழைப்பு விடுக்கின்றோம். |