World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Socialist Labour League of India to hold public meeting on Nandigram peasant massacre நந்திக்கிராம் விவசாயிகள் படுகொலையைக் கண்டித்து இந்தியாவின் சோசலிசத் தொழிலாளர் கழகம் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்துகிறது 16 April 2007 தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையில் ஏப்ரல் 22 அன்று, நந்திக்கிராம் விவசாயிகள் படுகொலையில் இருந்து இந்திய தொழிலாளர்கள் படிப்பினை எடுத்துக் கொள்ளுவது பற்றி விவாதிக்கவும், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை ஏற்கவும் இந்தியாவின் சோசலிசத் தொழிலாளர் கழகம் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளது. இந்தோனேசியாவை தளமாகக் கொண்ட சலீம் குழுமத்தினால் நடத்தப்பட இருக்கும் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக 10,000 ஏக்கர்கள் நிலத்தை கையகப்படுத்தும் அரசாங்க திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள்மீது மேற்கு வங்க அரசாங்கம் மார்ச் 14 அன்று நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 14 விவசாயிகள் கொல்லப்பட்டனர், குறைந்தது 70 பேராவது காயமுற்றனர். குருதி சிந்தும் மோதல் விளையும் என்று நன்கு அறிந்தும், அரசாங்க அதிகாரத்தை மீள உறுதிப்படுத்துவதற்காக CPI (M) தலைமையிலான மேற்கு வங்க அரசாங்கம் நன்கு ஆயுதமேந்திய 4,000 போலீசாரை நந்திக்கிராமிற்கு அனுப்பிவைத்தது. திரிணாமூல் (அடித்தள) காங்கிரஸ் மற்றும் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதாக் கட்சி (BJP) உட்பட பல வலதுசாரி முதலாளித்துவ கட்சிகள் தங்கள் வலதுசாரி செயற்பட்டியலுக்காக மேற்கு வங்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முதலீட்டாளர் ஆதரவுக் கொள்கைகளுக்கு இருக்கும் மக்கள் எதிர்ப்புணர்வை தங்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளுகின்றன. CPM மற்றும் அதன் இடது முன்னணி கூட்டணி கட்சிகள்தாம் இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்தியதற்கு முழுப் பொறுப்பை ஏற்கவேண்டும்; இதில் செல்வாக்கிழந்துள்ள வலதுசாரி கட்சிகள் இந்திய, சர்வதேச மூலதனத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் பெயரளவிலான "இடது" அரசாங்கத்திற்கு எதிராக, தங்களை உழைப்பாளர்களின் பாதுகாவலர்கள் எனக் காட்டிக் கொள்ள முடிகிறது. தேசிய அளவில், CPM தலைமையிலான இடது முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) பதவியில் நீடித்திருப்பதற்கு உதவிவருகிறது. UPA அரசாங்கமோ ஒரு புதிய தாராளவாத சமூகப் பொருளாதார திட்டத்தை செயல்படுத்தி வருகிறது; அது தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் ஆகியோரிடையே அழிவுகரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது; மேலும் UPA அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாய பங்காளித்தனத்திற்கும் முயன்று வருகிறது.இந்திய மற்றும் சர்வதேச மூலதனத்திற்கு ஒரு கையாளாக CPM இன் பங்கு எவ்வாறு பல தசாப்தங்களாக நீடித்துள்ள சீரழிவின் இறுதி விளைவு என்பது பற்றி சோசலிச தொழிலாளர் கழக கூட்டம் ஆராயும். இக்காலக்கட்டதில் ஸ்ராலினிஸ்ட்டுகள் முதலாளித்துவ வர்க்க அரசியல் ஸ்தாபனங்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு பொது மதிப்பீட்டுடன் தொழிலாள வர்க்கத்தை தொழிற்சங்க போர்க்குணம் மற்றும் பாராளுமன்ற சூழ்ச்சிக் கையாளல்களுடன் கட்டுப்படுத்தினர். ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் அரசியல் துணை உறுப்புக்களான CPM, மற்றும் இடது முன்னணி இவற்றின் கொள்கைகளுக்கு எதிராக, உழைக்கும் மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், நிலமற்ற மற்றும் வறுமையில் வாடும் கிராமப்புற ஏழைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தை கட்டாயம் முன்னெடுக்க வேண்டும். தெற்கு ஆசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் என்ற வடிவில்-- தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கங்களை அமைப்பதற்கு ஒடுக்கப்பட்ட விவசாயிகளுடனான கூட்டில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் பகுதியாக மட்டுமே இந்த வேலைத்திட்டமானது, நிறைவேற்றப்பட முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பத்திரிகையுமான உலக சோசலிச வலைத் தளமும் இந்த முன்னோக்கைத்தான் முன்னெடுக்கின்றன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை ஆதரித்து இயங்கும் சோசலிச தொழிலாளர் கழகம், சமூக நனவுடைய தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அறிவுஜீவுகளை இம்முன்னோக்கு பற்றி விவாதிப்பதற்கும் இந்தியாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய பகுதியை கட்டியமைப்பதற்கும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறது. நேரம்: ஏப்ரல் 22, ஞாயிறு, காலை 10.00 மணி நிகழும் இடம்: Small Seminar Haill, பெரியார் திடல், (தினத்தந்தி அலுவலகத்திற்கு அருகே), வேப்பேரி, சென்னை 600 007 |