:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan SEP holds media conference
over disappearance of party member
கட்சி உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக சோ.ச.க. ஊடகவியலாளர்
மாநாட்டை நடத்தியது
By our correspondent
31 March 2007
Back to screen
version
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்
மாநாடொன்றை நடத்தியது. கட்சியின் உறுப்பினரான நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன்
மதிவதனனும் மார்ச் 22 வடக்கில் யாழ்ப்பாணத்தை அன்டிய தீவுகளில் கானாமல் போயுள்ளமை தொடர்பாக இலங்கை
அரசாங்கமும் இராணுவமும் அவசர விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி சோ.ச.க. யும்
உலக சோசலிச வலைத் தளமும் முன்னெடுத்துள்ள பிரச்சாரத்தின் பாகமாகவே இந்த ஊடகவியலாளர் மாநாடு
இடம்பெற்றது.
சம்பவதினம் விமலேஸ்வரனும் மதிவதனனும் சுமார் மாலை 6.30 மணியளவில், ஊர்காவற்துறை
தீவையும் புங்குடு தீவையும் இணைக்கும் நீண்ட கடல்வழிப் பாலத்தை நோக்கி புங்குடுதீவில் இருந்து மோட்டார் சைக்கிளில்
சென்றுகொண்டிருந்ததை கடைசியாக பலர் கண்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஊர்காவற்துறையை வசிப்பிடமாகக் கொண்டவர்களாகும்.
இந்தக் கடல்வழிப் பாலத்தின் புங்குடுதீவுப் பகுதியில் உள்ள கடற்படை முகாமின் தளபதி, இவர்கள் இருவரும் புங்குடு தீவு
கடற்படை வீதித்தடையை கடந்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆயினும், ஊர்கவாற்துறை பகுதியில் உள்ள கடற்படை
வீதித்தடைக்கு பொறுப்பான வேலணை கடற்படை முகாமின் தளபதி, இவர்களைப் பற்றி எதுவும் தெரியாது எனத் தெரிவிக்கின்றார்.
விமலேஸ்வரனும் மதிவதனனும் இரண்டாவது சோதனைச் சாவடியை கடந்துள்ளனர் அல்லது கடக்கவில்லை.
அவர்கள் கட்திருந்தால், கடற்படையினரிடம் அதற்கான பதிவு இருக்கும். அவர்கள் கடந்திருக்காவிடில், இந்த இரண்டு வீதித்தடைகளில்
ஏதாவது ஒன்றில் வைத்து அவர்களை கடற்படை கைதுசெய்திருக்கலாம், அல்லது அவர்கள் இரண்டாவது வீதித்தடையை
நெருங்கும் முன்னரே காணாமல் போயுள்ளனர். இந்தக் கடல்வழிப் பாலம் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலையில்,
இந்தக் காணாமல் போன சம்பவத்திற்கு ஒன்றில் கடற்படை நேரடிப் பொறுப்பாளியாகும் அல்லது இதனை பார்த்தவர்களுக்கு
கிடைக்கக்கூடியாதாக இருந்திருக்க வேண்டும்.
இந்த காணாமல் போன சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு என
சோ.ச.க. சொல்லிவைப்பதோடு பொறுப்பான அதிகாரிகள் இதை விசாரிக்க வேண்டும் எனவும் கோருகின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டிய வடக்கில் உள்ள தீவுகள் அனைத்தும் கடற்படையின் கடுமையான பாதுகாப்பின் கீழ்
இருப்பதோடு, கடற்படையானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) எனும் துணைப் படையுடன் நெருக்கமாக
செயற்படுகின்றது.
அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டிற்கு
வருமாறு சோ.ச.க. அழைப்பு விடுத்திருந்தது. மாநாட்டிற்கு முன்பதாகவே, பல வானொலி சேவைகளும் மற்றும்
செய்தித்தாழ்களும்
விமலேஸ்வரனும் மதிவதனனும் காணாமல் போயுள்ளமை தொடர்பான செய்திகளை
வெளியிட்டிருந்தன. புகழ்பெற்ற வானொலி சேவையான சூரியன் எப்.எம். மார்ச் 28 மாலைச் செய்தியிலும்
அடுத்தநாள் காலைச் செய்தியிலும் இது தொடர்பாக குறிப்பிட்டிருந்தது. பரந்தளவில் தமிழர்கள் காணாமல் போவது
தொடர்பாக மார்ச் 29 செய்தியொன்றை வெளியிட்ட முன்னணி தமிழ் பத்திரிகையான வீரகேசரி, இந்த
சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டிருந்ததோடு, இது தொடர்பாக சோ.ச.க. ஒரு ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை
நடத்தவுள்ளதாகவும் அறிவித்திருந்தது. யாழ்ப்பாணத்தில் காணமால் போன சம்பவங்கள் தொடர்பாக செய்திவெளியிட்ட
தமிழ்நெட் இணையமும் இது தொடர்பாக குறிப்பிட்டிருந்தது.
புகழ்பெற்ற தொலைக்காட்சி சேவையான சக்தி டி.வி., ஆங்கில நாளிதழான
ஐலண்ட் மற்றும் தமிழ் நாளிதழ்களான தினக்குரல், சுடர் ஒளி ஆகியவற்றின் ஊடகவியலாளர்களும்
நிப்பொன் ஹோட்டலில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர். மாநாட்டிற்கு தலைமை வகித்த
சோ.ச.க. மத்திய குழு உறுப்பினர் விலானி பீரிஸ், சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் மற்றும் மத்திய
குழு உறுப்பினர் எம். அரவிந்தனையும் அறிமுகம் செய்துவைத்தார்.
சிரச எப்.எம், இசுர எப்.எம் ஆகிய வானொலி சேவைகள், நேற்று தமது
மாலைச் செய்திகளில் சோ.ச.க. பிரச்சாரத்தை பற்றி செய்தி வெளியிட்டன. சிரச டி.வீ. இரவு 10
மணிக்கு அதனது பிரதான செய்தியில் ஊடகவியலாளர் மாநாட்டில் ஒரு பகுதியை ஒளிபரப்பியது. நாட்டின் வடக்கு மற்றும்
கிழக்கில் இலங்கை அரசாங்கத்தின் யுத்தம் உக்கிரமடைந்து கொண்டிருக்கின்ற நிலைமையின் கீழ் அதிகரித்துவரும் காணாமல்
போகும் சம்பவங்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பாகவும் சோ.ச.க முன்னெடுத்துள்ள பிரச்சாரம் தொடர்பாகவும்
சாதாரண மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் அக்கறையையே இந்த செய்தி வெளியீடுகள் பிரதிபலிக்கின்றன.
ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய விஜே டயஸ், விமலேஸ்வரனும் மதிவதனனும்
காணாமல் போயுள்ளமை சோசலிச இயக்கங்கள் மீதான தாக்குதல் எனவும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடும்
அனைவருக்கும் எதிரான எச்சரிக்கை எனவும் தெரிவித்தார்.
"1998ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை கிளையான சோ.ச.க.
யில் இணைந்ததில் இருந்தே, உலக சோசலிச கொள்கைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விமலேஸ்வரன், இந்த
நாட்டு மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை காக்கவும் மற்றும் குறிப்பாக மோசமாக ஒடுக்கப்பட்டுவரும்
தமிழ் மக்களின் உரிமைகளை காக்கவும் உத்வேகத்துடன் போராடினார்."
அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா அதேபோல் இத்தகைய காணாமல் போகும்
சம்பவங்கள் பொதுவாக இடம்பெறும் நாடான துருக்கி உட்பட உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்துலக
வாசகர்களின் ஆதரவை இந்தப் பிரச்சாரம் பெற்றுள்ளது என டயஸ் தெரிவித்தார். வடக்கில் யாழ்ப்பாணத்தை அண்டிய
முழு தீவுகளும் கடற்படையின் இறுக்கமான கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை சுட்டிக்காட்டிய டயஸ், இந்த காணாமல் போன
சம்பவத்திற்கு ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கமே பொறுப்பு என்றார். இந்த சம்பவம் தொடர்பாக மார்ச் 24
சோ.ச.க. செய்த உத்தியோகபூர்வ முறைப்பாட்டை அலட்சியம் செய்து நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதாக
டயஸ் பாதுகாப்பு அமைச்சின் மீது குற்றஞ்சாட்டினார்.
"எங்களது முறைப்பாடு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சிடமிருந்து நேற்றுதான் எங்களுக்கு
ஒரு கடிதம் கிடைத்தது. இந்த இரண்டு வரிக் கடிதம், இந்தப் பிரச்சினை தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு
அறிவித்துள்ளதாக மட்டுமே குறிப்பிடுகிறது. எதாவதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான குறிப்புகள் எதுவும்
கிடையாது. கடந்த பல மாதங்களாக நடந்துள்ள நூற்றுக்கணக்கான காணாமல் போன சம்பவங்களுக்கும் பாதுகாப்பு
அமைச்சின் பதில் இதுவாகும். இது மனித உயிர்கள் தொடர்பான அதன் அலட்சியத்தையும் அக்கறையின்மையும்
பிரதிபலிக்கின்றது."
ஆகஸ்ட் 7 கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தின் முல்லிப்பொத்தானையில், சோ.ச.க.
ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை செய்யக்கோரி
சோ.ச.க. முன்னெடுத்துள்ள பிரச்சாரத்தை பற்றியும் டயஸ் குறிப்பிட்டார். எட்டு மாதங்கள் கடந்த பின்னரும், மரியதாஸ்
கொலையாளிகளை கைதுசெய்ய எந்தவொரு தக்க விசாரணையையும் பொலிஸ் முன்னெடுக்கவில்லை.
இராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தை உக்கிரப்படுத்தி, வாழ்க்கை நிலைமைகள் மீதும் மேலும்
மேலும் நெருக்கடிகளை திணிப்பதோடு உழைக்கும் மக்களதும் மாணவ இளைஞர்களதும் ஜனநாயக உரிமைகள் மீதும்
தாக்குதல் தொடுக்கின்றது என டயஸ் குறிப்பிட்டார். வளர்ச்சிகண்டுவரும் வெகுஜன எதிர்ப்பை சுட்டிக் காட்டி அவர்
தெரிவித்ததாவது: "வெகுஜனங்களுக்கிடையில் ஆதரவை இழந்துகொண்டிருக்கும் இராஜபக்ஷ அரசாங்கம் தமது ஜனநாய
உரிமைகளுக்காக போராடும் எவரையும் 'புலி' என முத்திரை குத்துகின்றது.
யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. யின் ஆட்பலத்தை பற்றிக் கேட்டபோது, பாதுகாப்பு
காரணங்களுக்காக எண்ணிக்கையை குறிப்பிட மறுத்த டயஸ், சோ.ச.க. உறுப்பினர்கள் காணாமல் போவது உட்பட
ஏனைய தாக்குதல்களுக்கும் உள்ளாவதாக விளக்கினார். ஒரே கட்சியாக இலங்கையின் வடக்கிலும் மற்றும் தெற்கிலும்
இயங்கும் ஒரே அரசியல் இயக்கம் சோ.ச.க. மட்டுமே என அவர் சுட்டிக்காட்டினார். 1998ல் புலிகளின்
கட்டுப்பாட்டிலான வன்னிப் பிரதேசத்தில் நான்கு சோ.ச.க. உறுப்பினர்களை புலிகள் கைது செய்த போது அவர்களை
விடுதலை செய்வதற்காக உலக சோசலிச வலைத் தளத்தின் மூலம் ஒரு சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுத்து அவர்களை
விடுதலை செய்வதில் சோ.ச.க. வெற்றிகண்டதை அவர் ஒப்பிட்டுக்காட்டினார்.
இந்த காணாமல் போன சம்பவத்திற்கு பொறுப்பாளி யார் என சோ.ச.க. நம்புகிறது
என ஐலண்ட் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். இந்த காணாமல் போன சம்வமானது
கடற்படைக் கட்டுப்பாட்டு பிராந்தியத்திலேயே நடந்துள்ளதோடு, குறிப்பாக, இரண்டு கடற்படை வீதித்தடைகளுக்கு
இடையில் உள்ள ஒரு கடல்வழிப் பாலத்திலேயே நடந்துள்ளது என டயஸ் விளக்கினார். ஈ.பி.டி.பி. கடற்படையுடன்
நெருக்கமாக செயற்படுவதை சுட்டிக்காட்டிய டயஸ், இந்தச் சம்பவத்தில் ஈ.பி.டி.பி. ஈடுபட்டிருந்தால் அது
கடற்படைக்கு தெரியவே நடந்திருக்கும் எனத் தெரிவித்தார். "ஈ.பி.டி.பி. யின் தொடர்பை எங்களால் ஒதுக்கித்தள்ள
முடியாது. ஆனால், இந்த காணாமல் போன சம்பவத்திற்கு இராஜபக்ஷவின் அரசாங்கம் பொறுப்பு என்பதை
சொல்லிவைக்கின்றோம்," என அவர் கூறினார்.
இந்த இருவரையும் கண்டுபிடிப்பதன் பேரில், அவரசமான முழு விசாரணையொன்றை
உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தையும் பாதுகாப்பு அமைச்சையும் கோருமாறு சோ.ச.க.
மீண்டுமொரு முறை அதன் ஆதரவாளர்களையும் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களையும்
கேட்டுக்கொள்கின்றது.
கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரிகள்;
Gotabhaya Rajapakse,
Secretary of Ministry of Defence,
15/5 Baladaksha Mawatha,
Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529
e-mail: secretary@defence.lk
N. G. Punchihewa
Director of Complaints and Inquiries,
Sri Lanka Human Rights Commission,
No. 36, Kinsey Road,
Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924
பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் மற்றும் உலக சோசலிச வலைத்
தளத்திற்கும் அனுப்பி வைக்கவும்.
Socialist Equality Party,
P.O. Box 1270,
Colombo, Sri Lanka.
Email: wswscmb@sltnet.lk
எமது வலைத்தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப தயவு செய்து இந்த
online form படிவத்தை பயன்படுத்தவும்.
இவை அனுப்பப்பட்ட கடிதங்கள் சிலவற்றை இங்கு பிரசுரிக்கின்றோம்.
* * *
28 மார்ச் 2007
வியாழக்கிழமை (மார்ச் 22) மாலையில் இருந்து காணாமல் போயுள்ள சோ.ச.க.
உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனன் தொடர்பாக எமது ஆழ்ந்த
அக்கறையை வெளிப்படுத்துவதற்காவே இந்தக் கடிதத்தை எழுதுகிறோம். இதுவரை கிடைத்துள்ள தகவல்கள், இந்த
இருவரினதும் வசிப்பிடமான வடக்கில் யாழ்ப்பாண குடாநாட்டை அன்டிய தீவுகளை கட்டுப்பாட்டில் கொண்டுள்ள
கடற்படையின் தொடர்பை சுட்டிக்காட்டுகின்றன.
இலங்கை அரசாங்கம் இதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது
முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என நாம் நம்புகிறோம் மற்றும் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது
தொடர்பாக உடனடியான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு நாங்கள் உங்களை கோருகிறோம்.
வெள்ளிக்கிழமை இவர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பான விடயத்தை கேள்விப்பட்ட
உடன், இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி உடனடியாக புங்குடுதீவில் உள்ள கோடைம்பர கடற்படை முகாமுக்கும்
மற்றும் ஊர்காவற்துறை தீவில் உள்ள வேலணை கடற்படை முகாமுக்கும் உத்தியோகபூர்வ முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதை
கேள்விப்பட்டதை அடுத்து நாங்கள் இது தொடர்பாக பரந்தளவு அக்கறை செலுத்த முடிவுசெய்துள்ளோம். புங்குடுதீவில்
இருக்கும் கட்டளை தளபதி ஹேமந்த பீரிஸ் மற்றும் வேலணையில் இருக்கும் கட்டளைத் தளபதி சில்வாவும் விமலேஸ்வரனையும்
மதிவதனனையும் கைதுசெய்யவில்லை என மறுப்பதோடு இவர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பாக தமக்கு எதுவுமே
தெரியாது என பிரகடனம் செய்கின்றனர்.
"காணாமல் போகும்" சம்பவங்கள் பரந்தளவிலும் பொதுவானதாகவும் இருக்கும் ஒரு
நாட்டின் பிரஜைகள் நாங்கள். துருக்கியிலும் பெரும்பாலான சம்வங்கள் இதே பாணியை கொண்டுள்ளன: காணாமல்
போகும் நபர்கள் அவர்களது வீடுகளில் வைத்தே கைது செய்யப்படு பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்படுகின்ற
போதிலும், பின்னர் அதிகாரிகள், பெரும்பாலும் பொலிஸ் அலுவலர்கள் அல்லது வழக்குத் தொடுப்பவர்கள், அவர்களை
கைது செய்யவில்லை என மறுத்துவிடுகின்றார்கள். மற்றும் பல சம்பவங்களில், பாதுகாப்பு படையினர் செய்யும்
சித்திரவதைகள் அல்லது முறைகேடாக நடத்துதல் போன்றவை அம்பலப்படுத்தப்பட்டுள்ளன அல்லது பீதியினால்
வெளிப்படுத்தப்படுவதில்லை.
நாம் உங்களது பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
தங்கள் உண்மையுள்ள,
எஸ். ஐ. (துருக்கியில் உள்ள ஏழு உலக சோசலிச வலைத் தள வாசகர்களின்
சார்பில்)
* * *
ஐயா:
22 மார்ச் 2007 காணாமல் போன சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன்
மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போயுள்ளமை தொடர்பாக அவசர விசாரணை ஒன்றை நடத்துமாறு
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் கவனம்
செலுத்துவது அவசியமானதாகும். கடல்வழிப் பாலத்தின் புங்குடுதீவு பகுதி வீதித் தடையை மாலை 6.30 மணிக்கு இந்த
மீனவர்கள் இருவரும் மதிவதனனின் என்.பி.எம்.ஆர். 2098 என்ற இலக்கத்தை உடைய பஜாஜ் மோட்டார் சைக்கிளில்
கடந்துள்ளமை பதிவாகியிருப்பது தெரியவந்துள்ள போதிலும், இராணுவத்தின் உறுதியான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு பிரதேசத்தில்
இவர்கள் இருவரும் சாத்தியமான வகையில் கடத்தப்பட்டிருக்க கூடிய ஒரு சம்பவத்தில் சம்பந்தப்படவில்லை அல்லது அதைப்பற்றி
எதுவும் தெரியாது என பாதுகாப்பு படைகள் தொடர்ந்தும் மறுத்துவருகின்றன.
கோடைம்பர கட்டளை அதிகாரி பீரிஸ், விமலேஸ்வரனின் மனைவியை முகாமுக்கு வருமாறு
அழைத்தவேளை, விமேலஸ்வரனின் உறவினர்களும் மற்றும் சோ.ச.க. உறுப்பினர்களும் அங்கு சென்றபோது இவர்கள்
பாதுகாப்பு படையினரால் கடத்தப்படவிருந்ததற்கான உள்நோக்கம் தற்செயலாக அம்பலத்திற்கு வந்துள்ளது. முகாமுக்கு
முன்னால் காவலில் இருந்து ஒரு கடற்படை சிப்பாய், பாதிக்கப்பட்ட இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள்
என போலியாக குற்றஞ்சாட்டியபோது, இந்த சம்பவம் தொடர்பாக அவர் தெரிந்து வைத்திருக்கின்றார் என்பது
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சோ.ச.க. அராசங்கத்தினதும் மற்றும் புலிகளதும் கொள்கைகளை எதிர்ப்பதால், புதுப்பிக்கப்பட்ட
உள்நாட்டு யுத்தம் விரிவுபடுத்தப்படும் நிலையில் ஒவ்வொருவரும் எதிர்தரப்புக்கு ஆதரவளிப்பதாக கூறி அரசாங்கமும்
புலிகளும் கடந்த காலத்தில் சோ.ச.க. மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் பிழையாக குற்றஞ்சாட்டி தாக்குதல்களுக்கு
இலக்காக்கப்பட்டுள்ளனர். சோ.ச.க. புலிகளின் பிரிவினைவாத கோரிக்கைகளுக்கும் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கை
துருப்புக்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதற்கும் சோ.ச.க. தனது எதிர்ப்பை பகிரங்கமாக பிரகடனம் செய்கின்றது.
சோ.ச.க. உண்மையான சோசலிஸ்டுக்கள் என்ற வகையில், முழு தொழிலாள வர்க்கத்தினது நலன்கள் மற்றும் தேவைகள்
பற்றி மட்டுமே அக்கறை செலுத்துவதோடு, சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் இலங்கையிலும் உலகம் பூராகவும்
தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக பிரச்சாரம் செய்கின்றது.
ஒரு வரலாற்று ஆசிரியர் என்ற வகையிலும், அமெரிக்க ஆசிரியர் சம்மேளனத்தின் நியூ
யோர்க் லோக்கலின் பிரதிநிதி என்ற வகையிலும், இலங்கையிலும் சரி அல்லது அமெரிக்காவில் இங்கு காணப்படும் அதன்
போலி உருமாதிரியிலும் சரி, பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை தூண்டுவதன் ஊடாக அநியாயங்களில் இருந்து
அரசாங்கங்கள் விலகியிருக்கின்றன என நம்புவதன் மூலம், பாதிக்கப்பட்டுள்ள இந்த இருவருக்கும் எதிரான தவறுகளை
திருத்துவதோடு இந்த சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணை ஒன்றை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு உள்ள
பொறுப்பில் இருந்து தப்பிச்செல்ல அதனால் முடியாது என்பது எனக்குத் தெரியும். அமெரிக்காவில், தங்களது அல்லாத
நலன்களை நியாயப்படுத்த பயங்கரவாதத்தின் மீதான அரசாங்கத்தின் யுத்தம் பயன்படுத்தப்படுகிறது என்பதை
புரிந்துகொண்டுள்ள வெகுஜனங்கள் எழுச்சிபெறத் தொடங்கியுள்ளார்கள். விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனின் சம்பவங்கள்
போன்றவற்றில், நியாயத்தின் நலன்கள் மற்றும் பொது வெகுஜனங்களின் நலன்கள் பற்றிய புள்ளிகள் காணக்கூடியதாக
உள்ளது. விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணை நடத்துவது மற்றும் அதற்காக உதவுவதே
நியாயமான நடவடிக்கையாகும்.
உண்மையுள்ள,
எச்.எல்.
நியூ யோர்க். |