World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்France: Police attack defenders of immigrant school children பிரான்ஸ்: புலம்பெயர்ந்தோர் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆதரவு தருபவர்களை போலீஸ் தாக்குகிறது By Kumaran Rahul and Antoine Lerougetel பாரிசில் உள்ள பெல்வீல் பகுதியில் ரம்பால் மழலையர் பள்ளியில் பயிலும் தன்னுடைய பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்லவந்த ஆவணமற்ற சீன புலம்பெயர்ந்தோர் ஒருவரைப் போலீசார் கைது செய்ய முயன்றபோது, அதைத் தடுத்து நிறுத்த முற்பட்ட குழுவின் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்தப் போலீஸ் தாக்குதலானது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அப் பகுதியில் உள்ள தொழிலாள வர்க்கத்தினர் மற்றும் பிரான்ஸ் முழுவதுமே வெறுப்பு அலை ஒன்றைத் தூண்டி விட்டுள்ளது. இதற்கு முந்தைய நாள் பிற்பகலில் போலீசார் தன்னுடைய உடன்பிறந்தாரின் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல வந்த ஓர் இளவயது ஆவணமற்ற சீனப் பெண்மணியை நிறுத்தி வைத்தனர். அரைமணி நேர விவாதத்திற்கு பின்னர், பள்ளியின் தலைமை ஆசிரியரான Valérie Boukobza அப்பெண்மணியை விடுவிக்கும் முயற்சியில் வெற்றிபெற்றார்; ஆனால் அதற்கிடையில் போலீசார் அப்பெண்மணியை பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதையொட்டி அப்பகுதியில் போலீசார் கெடுபிடி பற்றி வசிப்பவர்களும் எதிர்ப்புத் தெரிவிப்பர்களும் உஷாராயினர். மறுநாள் போலீஸ் அதிகாரிகள் ரம்பால் பள்ளிக்கு அருகே அடையாள அட்டைச் சோதனைகளை மேற்கொண்டனர்; அப்பொழுது அவர்கள் ஆவணமற்ற ஒருவரை, ஒரு குழந்தையின் தாத்தாவை கைது செய்தனர்; அவருடைய பெயர் பகிரங்கமாக ஆக்கப்படவில்லை. தன்னுடைய பேரப்பிள்ளைகள் பள்ளியில் இருந்து வெளியே வருவதற்காக ஒரு உணவுவிடுதிக்குள் காத்திருந்த அவரை போலீசார் சூழ்ந்து கொண்டனர். எல்லைத் தடையற்ற கல்வி இணையக் குழுவின் (ஸிஙsமீணீu ணிபீuநீணீtவீஷீஸீ ஷிணீஸீs திக்ஷீஷீஸீtவீகக்ஷீமீsஸிணிஷிதி) உறுப்பினர்களும் உள்ளூர்வாசிகளும் தாத்தாவுக்கும் போலீசாருக்கும் இடையே தங்களை இருத்திக்கொள்ள முற்பட்டு முதியவரை கைதுசெய்ய வந்திருந்த வண்டி முன்பும் குழுமினர். இதற்கு விடையிறுக்கும் வகையில் போலீசார் எதிர்ப்பாளர்கள்மீது நாய்களை ஏவிவிடும் அச்சுறுத்தலை செய்தனர். அதன்பின் கண்ணீர்ப்புகை தாக்குதலை மழலையர் பள்ளி நுழைவாயில் முன்பு நடத்தினர். இணையத்தில் இந்நிகழ்ச்சி பற்றி வீடியோ காட்சிகள் சுற்றில் உள்ளன. மூன்று நாட்களுக்கு பின்னர் Boukobza போலீசாரால் அழைக்கப்பட்டார்; நிகழ்வுகளுக்கு அவர் சாட்சி என்பதால் அழைக்கப்பட்டார் என்று நம்பப்பட்டது. ஆனால் "போலீசார் மீது அவமதிப்பு தரும் வகையில் நடந்து கொண்டது மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது" ஆகிய சந்தேகத்தின்பேரில் அவர் ஏழு மணி நேரம் காவலில் வைக்கப்பட்டார்; ஏனெனில் இவர் சீனர் கைதின்போது எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். போலீஸ் நிலையத்திற்கு வெளியே நூறு பேர் கூடி, அவ்வம்மையார் விடுவிக்கப்படும் வரையில் அங்கேயே காத்திருந்தனர். Boukobza குற்றச் சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்தார். ஓர் அறிக்கையில் அவர் கூறியதாவது: "Rue Rampal ல் நாங்கள் கடந்த செவ்வாயன்று செய்தவகையில்தான் பலரும் செய்திருப்பர் என அவர் ஒரு அறிக்கையில் வலியுறுத்தினார். குழந்தைகள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களை பாதுகாத்த ஒருவருடைய கடமையை செய்ததும் ஒடுக்குமுறையின் வடிவத்திற்கு எதிரான அமைதியான எதிர்ப்பில் ஈடுபடுவதும் மட்டுமே ஆகும்."அதற்கு அடுத்த திங்கள், மார்ச் 26 அன்று பாரிஸில் சோர்போனில், கல்வி அமைச்சரகத்தின் வட்டார அலுவலகத்தின் முன்பு 2,000 பேர் ஓர் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றனர். இந்த ஆர்ப்பாட்டம் ஆசிரியர்கள் சங்கங்கள், பெற்றோர்கள் அமைப்புக்கள் மற்றும் RESF ஆல் தலைமை ஆசிரியை காவலில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், அவர்மீது உள்ள குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும் என்று கோருவதற்கும் அழைக்கப்பட்டிருந்தது. ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சட்ட விஷயங்களில் ஆதரவு கொடுக்க வேண்டிய வட்டாரக் கல்வி அலுவலகம், Boukbobza விஷயத்தில் தன்னுடைய கைகளைக் கழுவி விட்டது. பிரதிநிதிகள் குழுவிடம், "பள்ளி வளாகத்திற்கு வெளியே, பள்ளி நேரத்திற்கு பின் அனைத்து நிகழ்வுகளும் நடந்ததால்..... தலைமை ஆசிரியை ஏதேனும் குற்றம் இழைந்திருந்தால் வட்டாரக் கல்வி அலுவலகம் அவருக்கு ஆதரவு கொடுக்கவோ, காப்பாற்றும் பொறுப்பையோ கொண்டிருக்கவில்லை." என்று கூறிவிட்டது. ஆசிரியர்கள் சங்கங்கள் பாரிஸ் பகுதியில் தொடக்கப் பள்ளிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்ச் 30 அன்று வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என விடுத்த அழைப்பை ஒட்டி 80 பள்ளிகளுக்கு மேல் மூடப்பட்டு, நுற்றுக்கணக்கான மற்றவற்றையும் அது பாதித்து, பல ஆர்ப்பாட்டக்காரர்களையும் தெருவிற்கு அழைத்து வந்தது. Boukobza விற்கு எதிராக கல்வி நிர்வாகம் எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தினர். இதற்குப் பின் தலைமை ஆசிரியைக்கு எதிரான அனைத்துக் குற்றச் சாட்டுக்களும் விலக்கப்பட்டன. பள்ளி மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு வெளியேற்றப்படுவது நடந்து வந்தாலும்கூட, ஆசிரியர்கள் சங்கங்கங்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை மட்டுமே வேலைநிறுத்தம் செய்ய அழைப்புவிடுத்தது, உயர்நிலைப் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. "17 இளம் பள்ளி மாணவர்கள் Seine-Saint-Denis [வடக்குப் பாரிசில் உள்ள தொழிலாளர் பகுதி குடியிருப்பு] இதுவரை பிரான்சை விட்டு வெளியேறுமாறு உத்தரவுகளை பெற்றுள்ளனர். போலீஸ் தலைவர் சட்டம் கடுமையாக செயல்படுத்தப்படுவதற்கு ஒத்துழைத்துக் கொண்டிருக்கிறார். பள்ளி ஆண்டின்போது ஆவணமற்ற மாணவர்களை தொந்தரவு செய்யமாட்டோம் எனக்கூறிய அவருடைய உறுதியை அவரே மீறியுள்ளார்" என்று RESF தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்த நாள், ரம்பால் பள்ளி, பல குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. "ஆவணங்கள் அற்றவர்கள் அல்ல, சார்க்கோசியே வெளியேற்றப்பட்ட வேண்டும்" என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்; "சார்க்கோசியும் லூபென்னும் வெளியேறட்டும் நாங்கள் இங்கு தங்குவோம்", "கைதுகளோ வெளியகற்றல்களோ கூடாது! அனைத்துக் குழந்தைகளுக்கும் சம கல்வி உரிமைகள் தேவை", "குழந்தைகள் மீது கை வைக்காதே! வெளியேற்றல்களை நிறுத்து!" என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஏப்ரல் 22 அன்று பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள், பெல்வீல் பகுதியில் எவர் "வெளிநாட்டுக் காரர்" போல் தோன்றினாலும் அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்துவதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். இது வேண்டுமென்றே, சில தினங்களுக்கு முன்வரை உள்துறை மந்திரியாக இருந்து, இப்பொழுது ஆளும் கோலிச UMP யின் ஜனாதிபதி வேட்பாளரான நிக்கோலா சார்க்கோசியின் முகாமினால் நடத்தப்படும் ஆத்திரமூட்டுதலா, இல்லையா எனக் கூறுவது கடினம். எப்படிப்பார்த்தாலும், சமீபத்திய Gare du Nord கலவரம் உட்பட எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான உணர்வை தூண்டும் வாய்ப்புக்களை பயன்படுத்தி, சமூக நெருக்கடி மற்றும் வலதுசாரி அரசாங்கத்தின் நடப்பு மற்றும் அவருடைய தடையற்ற சந்தை முறை, நலம்சாரா அரசு, அடக்குமுறைக் கொள்கையில் இருந்து திசைதிருப்பும் வழிவகைகளைத்தான் சார்க்கோசி செய்துவருகிறார். இதற்கு முன்பு அவர் பள்ளிகளுக்கு முன்பும் உள்ளேயும் ஆத்திரமூட்டும் வகையில் கைது செய்தல்கள் தவிர்க்கப்படவேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். மக்கள் நிலைப்பாட்டை எதிர்கொள்ளும் வகையில் இவர் மீண்டும் போலீசாரை கடுமையாக நடந்து கொள்ளும்படி கோரியுள்ளார். திங்கள் அன்று தன்னுடைய Ensemble (ஒன்றாக இருப்போம்) என்ற தன்னுடைய புத்தகத்தை சார்க்கோசி வெளியிட்டார் இதில், "தடையற்ற புலம்பெயர்வு என்ற சவாலால் தேசிய அடையாளம் எதிர்கொள்ளப்பட்டுள்ளதால் பிரான்ஸ் பொறுமை இழந்துவருகிறது" என்று சித்திரித்துள்ளார்; மேலும் சமூகத் திகைப்பிற்கும், உள்நாட்டுக் கலவரங்கள், 2005 இலையுதிர்கால புறநகர் கலகங்களுக்கும் பாரபட்சத்தை மற்றும் சமூக அவநம்பிக்கையை குறைகூறாமல் புலம்பெயர்ந்தவர்களைத்தான் குறைகூறியுள்ளார். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பிரான்சில் சட்டபூர்வமாக குடியேறுவதை குடியேறுபவர்களுக்கு இன்னும் கடுமையாக ஆக்குவதாகவும், மொழி, பண்பாட்டு அறிவு பற்றி கட்டாயத் தேர்வுகள் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆவணமற்ற குடும்பங்களை பாதுகாக்கவும் பேணுவதற்குமாக ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை, பெரிய அபராதத் தொகைகள் கூட இருக்கக்கூடிய ஆபத்து சம்பந்தப்பட்டுள்ள பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களது பரந்த அளவிலான ஆதரவு, நிறுவப்பட்டுவரும் போலீஸ் அரசு ஆட்சிக்கு எதிராகப் போராட மக்களிடையே உள்ள ஆழமான ஆவலை எதிரொலிக்கின்றது. செய்தி ஊடகத் தகவல்களின்படி, பெல்வீல் இல் இருக்கும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் விசில் ஊதிகளை அணிந்து செல்லும் பழக்கத்தை தொடங்கியுள்ளனர். போலீசார் கூட்டமாக வருவதைப் பார்த்தால் அவர்கள் இந்த விசில் ஊதிகளை ஊதுகின்றனர்; போலீசார் வருகின்றனர் என்பதை இது புலம்பெயர்ந்தோருக்கு எச்சரிக்கையாக கொடுக்கிறது. இத்தகைய உத்தியோகபூர்வ கொள்கைக்கு விரோதப் போக்கு, நாஜி ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு, யூதர்களை துன்புறுத்தியதற்கு எதிர்ப்பு என்ற வகையிலான எதிர்ப்பு மரபுகளை சில நேரங்களில் முழு உணர்வில் பிணைத்துக் காட்டுகிறது; ஆனால் உத்தியோகபூர்வ பிரெஞ்சு "இடதில்" இத்தகைய உணர்வு ஏதும் வெளிப்படவில்லை. ஆவணமற்ற குழந்தைகள் வெளியேற்றப்படப் போவதாக அச்சுறுத்தப்பட்டபோது 2006ம் ஆண்டில் அவர்களுக்கு சாதகமாக சோசலிஸ்ட் கட்சி (PS) ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றது. பாரிசின் மேயர் Bertrand Delanoë போன்ற தலைவர்கள் குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்ளுவது போன்ற பெயரளவு நிகழ்வுகளை கையாண்டு புகைப்பட வாய்ப்புக்கள் பலவற்றிற்கு இடம் கொடுத்தனர். PSன் இடது கூட்டுக் கட்சிகளும் "தீவிர இடதும்", அந்த இயக்கங்களில் பங்கு பெற்றவை இப்பொழுது கட்சியின் உண்மையான கொள்கைகள் பற்றி கவனத்துடன் மெளனமாக உள்ளன; அது தேர்தல் அறிக்கையில் தெளிவாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது: "சட்டவிரோத புலம்பெயர்தலை பொறுத்தவரையில் நாங்கள் உறுதியான கொள்கைகளை கடைப்பிடிப்போம்... சட்டவிரோத புலம்பெயர்தலை நாம் தவிர்க்க முயலவேண்டும்." சார்க்கோசியின் பிடிவாதத்தன்மைக்கு மாறான வகையில் மனிதாபிமான முறையில் காட்டிக்கொள்ள விரும்பும் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான செகோலென் ரோயால், ரம்பால் பள்ளிக்கு எதிராக போலீசார் வன்முறை, கைதுகளை செய்தபோது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த உச்சக் கட்டத்தில், பள்ளிகளில் பயிலும் ஆவணமற்ற குழந்தைகள் "தங்கள் படிப்பைத் தொடரவேண்டும்" என்றும் "அவர்களுடைய பெற்றோர்கள் நாட்டில் இருப்பதற்கான வழிவகை வேண்டும் என்றும்" "முறைப்படுத்தல்" (பிரான்சில் சட்டபூர்வத் தகுதி) பள்ளியில் வருகையை தொடர்ந்து பின்பற்றும்" என்றும் முடித்தார். இப்படி PS இன் வேலைத்திட்ட மரபார்ந்த தன்மையிலிருந்து நகர்ந்தது, உடனடியாக வலதினால் தாக்குதலுக்கு உள்ளாயிற்று. ஒரு சில மணி நேரங்களுக்குள், PS இன் தேசிய செயலாளரும், ரோயாலின் வாழ்க்கைத் துணைவருமான François Hollande அழுத்தங்களுக்கு அடிபணிந்து "முறைப்படுத்தப்படுவது என்பது சில அளவுகோல்களுக்கு உட்பட்டு இருக்கும்" என்றும் "அது தானாகவே எளிதில் அனைவருக்கும் வழங்கப்பட்டுவிடாது" என்றும் மீளவும் உறுதியளித்தார். ரோயாலின் பிரச்சார மேலாளரான Jean-Louis Blanco, "பெற்றோர்கள் முறைப்படுத்தப்படுதல் என்பதை தொடர்ந்து அவர்களுடைய குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது தனித்தனி விசாரணையை அடுத்து நடக்கும்" என்றும் வலியுறுத்தினார்; இவற்றால் ரோயாலே பரிதாபத்திற்குரிய வகையில் சரிவைச் செய்ய வேண்டியதாயிற்று. சார்க்கோசி வலதிற்கு செல்லும் ஒவ்வொரு அடிவைப்பும் சோசலிஸ்ட் கட்சிநினால் மாற்றமின்றி பின்பற்றப்படுகிறது. தேசிய அடையாளம் பற்றிய சவாலை எடுத்துக் கொண்ட ரோயால், தேசிய கீதம் கூட்ட முடிவுகளில் ஒலிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு இல்லமும் தேசியக் கொடியை கொள்ள வேண்டும் என்றும் அது ஜூலை 14, பாஸ்டி நாளன்று பறக்கவிடப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். தன்னுடைய நிலைமையை பற்றி பாசாங்குத்தனம் எதையும் சார்க்கோசி முகாம் கொண்டிருக்கவில்லை. ரம்பால் பள்ளி நிகழ்வுகள் எதிர்ப்புக்கள் ஆகி Francois Baroin , "பள்ளியில் இருந்துவிட்டால் வசிப்பவர்கள் உரிமைகள் வந்துவிடாது; பள்ளி ஆண்டு இறுதியான ஜூலைக்குள் வெளியேற்றங்கள் இருக்கக்கூடும்" என்று கூறினார்.கடந்த ஆண்டு, ஆவணமற்றவர்கள் அவர்களுடைய குடும்பங்கள் வெளியேற்றப்படுவதை எதிர்த்த பாரிய இயக்கங்கள் வந்தபோது, சார்க்கோசி ஆவணமற்றவர்களை வெளியேற்றுவது குறிப்பிட்ட காலத்திற்கு தடுத்து நிறுத்தப்படும் என்று ஒப்புக்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். கோடை விடுமுறையின்போது சில அளவுகோல்களுக்கு உட்படுத்தும் ஆறு அல்லது 7 ஆயிரம் குடும்பங்களுக்கு சட்டபூர்வ தகுதி அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்; அது அந்த அளவுகோல்கள்படி இருந்த 30,000 விண்ணப்பதாரர்களுக்கு, தாங்கள் அளவுகோல்படி இருப்பதால் உரிமைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களை பற்றிய முழு விவரங்களை அதிகாரிகளுக்குக் கொடுக்கும் ஊக்கத்தை அளித்தது. இதன்பின்னர் பெரும்பாலன விண்ணப்பங்கள் மிக ஒருதலைப்பட்சமாக, நியாயமற்ற முறையில் நிராகரிக்கப்பட்டன. 2007ல் 26,000 பேர் வெளியேற்றப்பட வேண்டும் என்னும் சார்க்கோசியின் இலக்குதான் முக்கிய முன்னுரிமை ஆயிற்று. தேசியம் மற்றும் தீவிர தேசியப் பற்று ஆகியவற்றின் எழுச்சி பிரான்சின் ஜனாதிபதித் தேர்தல்களில் வலது, இடது இரண்டிலும் வெளிப்பட்டுள்ளது ஏப்ரல் 15 அன்று ரவீந்திரநாதன் செந்தில் ரவி (செந்தில்), ஒரு தமிழ் ட்ரொட்ஸ்கியவாதி, மற்றும் அவருடைய சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டம் ஆகியவற்றை கெளரவப்படுத்துவதற்காக நடத்தப்பட இருக்கும் நினைவுக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்நிகழ்வின் அடிப்படைக் கூறுபாடு தொழிலாளர்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் வாழ்ந்து, பணியாற்றி, கல்வி பயிலலாம் என்பதாகும்; அதேபோல் அவர்கள் விரும்பும் நாடுகளில் முழு ஜனநாயக உரிமைகள் மற்றும் ஆதரவையும் பெறலாம் என்பதும் ஆகும். கூட்டத்தில் கலந்து கொள்ளுபவர்கள் அவை தொடர்பான விபரங்களுக்கு இங்கே "அழுத்தவும்". |