World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்காResolution adopted by the ISSE/SEP Emergency Conference Against War on the disappearance of SEP member in Sri Lankaஇலங்கையில் சோ.ச.க. உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக யுத்தத்திற்கு எதிராக ஐ.எஸ்.எஸ்.இ/சோ.ச.க. நடத்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்6 April 2007மார்ச் 22 அன்று, சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினரான நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் வட இலங்கையில் உள்ள இரண்டு கடற்படை வீதித் தடைகளுக்கு இடையில் பயணித்துக்கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளனர். அவர்கள் காணாமல் போய் இரண்டு வராங்கள் கடந்துள்ள போதிலும், அவர்கள் இருக்கும் இடத்தைப் பற்றி இலங்கை அரசாங்கமும் இராணுவமும் மெளனத்தை கடைப்பிடிக்கின்றன. அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதற்கும் மற்றும் கொல்லப்பட்டிருக்கக்கூடிய சாத்தியத்திற்கும் இலங்கை அரசாங்கமே பொறுப்பு என நம்புவதற்கு தக்க காரணங்கள் உள்ளன. கடந் ஆகஸ்ட்டில், சோ.ச.க. ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பின்வரும் தீர்மானமானது சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) இயக்கமும் சோசலிச சமத்துவக் கட்சியும் இந்த ஆண்டு மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 மிச்சிகன், அன் ஆபரில் நடத்திய யுத்தத்திற்கு எதிரான அவசர மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதாகும். மார்ச் 22 அன்று சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினரான நடராஜா விமலேஸ்வரனும் மற்றும் அவரது நண்பரான சிவநாதன் மதிவதனனும் வடக்கில் யாழ்ப்பாணத்தை அண்டிய தீவுகளில் காணாமல் போயுள்ளமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் பொறுப்புச் சொல்லவேண்டும் என இந்த மாநாடு கோருகின்றது. இந்த இருவரதும் வசிப்பிடமான ஊர்காவற்துறை தீவையும் புங்குடு தீவையும் இணைக்கும் நீண்ட கடல்வழிப் பாலத்தில் உள்ள இரு கடற்படை வீதித்தடைகளுக்கிடையில் நடந்துள்ள இந்த காணாமல் போன சம்பவத்திற்கு இராணுவம் நேரடி பொறுப்பாளியாகும் அல்லது சம்பந்தப்பட்டுள்ளது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன. விமலேஸ்வரன், மதிவதனன் ஆகியோரின் தலைவிதிக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு என நாங்கள் சொல்லிவைப்பதோடு அவர்களது உடனடியான மற்றும் பாதுகாப்பான விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோருகின்றோம். கடந்த ஆகஸ்ட் 7, கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தின் முல்லிப்பொத்தானையில் சோ.ச.க. ஆதரவாளர் சிவபிரகாசம் மரியதாஸ் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாகவும் அரசாங்கம் முறையான விசாரணையை முன்னெடுத்து, இந்தக் கொலைக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் எனவும் இந்த மாநாடு கோருகின்றது. எட்டு மாதங்கள் கடந்த பின்னரும், இந்தக் குற்றத்திற்காக எவர் மீதும் குற்றஞ்சாட்டி கைது செய்ய பொலிஸ் தவறியுள்ளமை, இந்தக் கொலைக்கு பொறுப்பான தரப்பு இராணுவம் அல்லது அத்தோடு இணைந்து செயற்படும் துணைப்படைகளில் ஒன்றே என்பதை பலம்வாய்ந்த முறையில் சுட்டிக்காட்டுகிறது. இந்தப் படுகொலையின் பின்னர் மரியதாஸ் ஒரு புலி உறுப்பினர் என்ற பொய்யான வதந்தியை இராணுவம் பரப்பிவிட்டிருந்தது. இந்தக் காணாமல் போன சம்பவமும் மற்றும் இந்தக் படுகொலையும் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிராகவும் மற்றும் இந்த தனிநபர்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியல் குற்றம் என இந்த மாநாடு கண்டனம் செய்கின்றது. இந்த தனிநபர்களும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் யுத்தத்தை எதிர்ப்பதாலும் மற்றும் அனைத்து வடிவத்திலுமான இனவாத அரசியலுக்கும் எதிராக ஒரு அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த போராடுவதன் காரணமாகவே இந்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. * * * இந்த இருவரதும் இருப்பிடம் தொடர்பாக அனைத்து விபரங்களையும் வெளியிட வேண்டும் எனக் கோரி இலங்கை அதிகாரிகளுக்கு அவசரக் கடிதங்களை அனுப்பிவைக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் வேண்டுகோள் விடுக்கின்றது. கடிதங்களை அனுப்பிவைக்கும் முகவரி: Gotabhaya Rajapakse, N. G. Punchihewa சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்திற்கும் பிரதிகளை அனுப்பிவைக்கவும். Socialist Equality Party, உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப இந்த ஒன்லைன் படிவத்தைப் பயன்படுத்தவும். |