WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
:
பிரித்தானியா
David North to refute falsifications of Trotsky's life
at lectures in Scotland and Wales
ட்ரொட்ஸ்கியின் வாழ்வு பற்றிய பொய்யுரைகளை ஸ்கொட்லான்ட் மற்றும் வேல்சில் நடத்த
இருக்கும் உரைகளில் டேவிட் நோர்த் மறுக்க உள்ளார்
6 April 2007
Use this version to
print | Send this link by email |
Email the
author
இம்மாதத்தின் பிற்பகுதியில் ஸ்கொட்லாந்திலும் வேல்சிலும் உலக சோசலிச வலைத்
தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த்தினால் ஆற்றப்பட இருக்கும் இரு உரைகளின் கருப்பொருளாக
தற்கால வரலாற்றாசிரியர்கள் லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல் வாழ்வைப் பற்றி பரந்த அளவில் மற்றும் முறையாக
கூறும் பொய்மைப்படுத்தல்கள் இருக்கும்.
"லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாக்கும் வகையில்: சோவியத்திற்கு பிந்தைய
பொய்யுரைப் பள்ளிக்கு ஒரு பதில்" என்ற தலைப்பில் இரு உரைகளும் அமைந்திருக்கும்.
கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முதல் உரை ஏப்ரல் 25 அன்று நிகழ்த்தப்படும்.
இரண்டாம் உரை Cardiff
பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும். முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ட்ரொட்ஸ்கிக்கு எதிரான "வரலாற்று ஏமாற்றுத்தனம் நிறைந்த பிரச்சாரம்"
முன்னாள் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றிய ஸ்ராலினிச ஆட்சியின் கலைப்புடன் முடிந்துவிடவில்லை என்று விரிவுரைகளை
பற்றி அறிவிக்கும் கையேட்டில், பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சி கூறுகிறது. "உண்மையில், அண்மையில் இது கூடுதலான,
ஆழ்ந்த முறையில் வளர்ந்துள்ளது" என்று SEP
எழுதியுள்ளது. இரண்டு பிரிட்டிஷ் வரலாற்றாளர்கள் Ian
Thatcher, Geoffrey Swain இருவரும் எழுதியுள்ள
ட்ரொட்ஸ்கியை பற்றிய வாழ்க்கை நூல்கள் "தீவிர, பொதுநிலை ஆய்வு என்பதில் இருந்து பெரிதும் பிறழ்ந்தவை"
என்று SEP
குறிப்பாக கவனத்தைக் கொள்ளுமாறு அழைக்கிறது.
SEP கையேட்டில் "ட்ரொட்ஸ்கியின்
வாழ்வு, சிந்தனைகள் பற்றிய பொய்மைப்படுத்தப்பட்ட கருத்துக்களின் அடித்தளத்தில் இருக்கும் அரசியல் உந்துதல்கள்
பற்றி நோர்த் விளக்குவார் என்றும் இன்னும் பொதுவான முறையில் வரலாறு எழுதப்படுவதில் இருக்க வேண்டிய செயற்பாடுகள்,
தற்காலிக குறிப்புக்கள் பற்றியும் ஆராய்வார்" என்றும் அது கூறியுள்ளது.
டிட்ரோயிட்டில் பேட்டி கண்டபோது, படுகொலை செய்யப்பட்டு 70 ஆண்டுகளுக்கு
பின்னரும் கூட வரலாற்றுத் தவறுகள் நிறைந்த இடைவிடா பிரச்சாரத்தின் இலக்காக லியோன் ட்ரொட்ஸ்கி இன்னமும்
இருக்கிறார் என்று நோர்த் தெரிவித்தார்.
ஸ்வெயின் மற்றும் தாச்சர் எழுதிய வாழ்க்கை நூல்களின் "மிக இழிந்த தரத்தைப்
பற்றி" தான் பெரிதும் "அதிர்ச்சி அடைந்துள்ளதாக" நோர்த் கூறினார். புறநிலை புலமையின் மிக அடிப்படைத்
தேவைகளுக்கு கூட இரு நூல்களும் எந்தக் கவனமும் செலுத்தவில்லை. இங்குள்ள பிரச்சினை லியோன் ட்ரொட்ஸ்கியின்
வாழ்க்கைப் போக்கு பற்றிய இவர்களுடைய கருத்துக்களுக்கு நான் உடன்படவில்லை என்பது மட்டும் அல்ல.
மாறாக, மிகவும் ஆட்சேபத்திற்குரியதாக நான் காண்பது அவர்கள் வரலாற்றுச் சான்றுகள் பற்றியதில் ஆத்திரமூட்டும்
வகையிலும் சிடுமூஞ்சித்தன்மையுடனும் கையாண்டுள்ளதுதான்."
"நன்கு அறியப்பட்டுள்ள வரலாற்று உண்மைகளினால் தெளிவாக மறுக்கப்பட்டுள்ள அறிக்கைகளை
அவர்கள் கூறுகின்றனர். தவறாள விளக்கம், சிதைவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுடைய விளக்கங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. ட்ரொட்ஸ்கியின் வரலாற்றுப் பணியை குறைத்து தவறாக்கும் நோக்கத்தை மிகவும் வெளிப்படையாக
கொண்டுள்ள வகையில் ட்ரொட்ஸ்கியின் சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் தவறாக விளக்கும் வகையில் அவை உள்ளன
என்பது மட்டுமல்லாது ஸ்ராலினிச ஆட்சி அவரை துன்புறுத்தி தொடர்ந்ததையும் நியாயப்படுத்துகின்றன என்பதை மேற்கோளிடும்
வகையில் இருவருடைய வாழ்க்கை நூல்களிலிருத்தும் குறிப்பான பத்திகளை நான் மேற்கோளிட விரும்புகிறேன்."
வரலாற்றை பொய்மைப்படுத்துதல் என்பது மிக ஆபத்தான விஷயம் என்று நோர்த்
வலியுறுத்தியுள்ளார். "இருபதாம் நூற்றாண்டின் பேரழிவுகளை தயாரிப்பதில் வரலாற்றை பொய்மைப்படுத்திக்
காட்டியது பெரும் பங்கை கொண்டிருந்தது." மேலும், எதிர்காலத்தை பற்றி மக்கள் எடுக்கும் அரசியல் முடிவுகள்
கடந்த காலத்தைப் பற்றி எந்த அளவிற்கு புரிந்துள்ளனர் என்பதைப் பொறுத்தே அமையும். இவ்விதத்தில், வரலாற்றாளர்கள்
தங்கள் பணியை சலிப்பில்லாத அறிவார்ந்த நெறிக்குட்பட்டு மேற்கொள்ளவேண்டும் என்பது இன்றியமையாதது ஆகும்."
ஏப்ரல் 25 அன்று கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் நடக்கும் உரை
Boyd Orr Building, Room 513, Lecture
Theatre D யில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும்.
ஏப்ரல் 27ம் தேதி
Cardiff பல்கலைக்கழகத்தில் நடக்கும் உரை
Main Building, Lecture Theatre 125
ல் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும். |