World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Hundreds attend funeral of Senthil Ravee

செந்தில் ரவியின் மரணச் சடங்கில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்

By our reporter
29 March 2007

Use this version to print | Send this link by email | Email the author

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உறுப்பினரான செந்தில் ரவியின் மரணச் சடங்குகள் மார்ச் 16 வெள்ளிக்கிழமை இங்கிலாந்தில் மில்டன் கீன்ஸ்ஸில் உள்ள கிறவுண் ஹில் மயானத்தில் இடம்பெற்றது. ரவியின் உறவினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர். அவர்கள் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இலங்கை மற்றும் கனடாவிருந்தும் வந்திருந்தனர்.

மோசமடைந்துவரும் சமூக மற்றும் தொழில் நிலைமையின் கீழும், பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபடும் பலர் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக தமது வேலை முடித்து நீண்ட தூரம் பயணம் செய்து வருகை தந்திருந்தனர். இது செந்தில்ரவியின் 14 ஆண்டுகால சோசலிசத்திற்கான அரசியல் போராட்டத்தின் புகழைக் காட்டியது.

செந்தில் ஒரு மிகச் சாதாரண வாழ்க்கையை முன்னெடுத்த போதிலும், அவரது தூரநோக்கு அவரை அனைத்துவிதமான தேசியவாதத்திலிருந்தும் பிரித்து அனைத்துலக தொழிலாளர் வர்க்க முன்நோக்கை நோக்கி வழிநடத்தியுள்ளது. தனது 25 வயதில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் (நா.அ.அ.கு.) இணைந்த சந்தர்ப்பத்தில் இருந்து உயிரிழக்கும் வரையும் ஐரோப்பாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் அதன் செல்வாக்கை கட்டியெழுப்ப அவர் சளைக்காமல் செயலாற்றினார்.

அங்கு கூடியிருந்தவர்களில் பலர் அவரது சளைக்காத போராட்டத்தையும் அவரது குறிக்கோள்களையும் நினைவூட்டினர். நா.அ.அ.கு. வின் பிரித்தானிய பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன் கூட்டத்தினர் மத்தியில் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

"நான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவினதும் மற்றும் பிரித்தானிய சோசலிச சமத்துவக் கட்சியினதும் அனுதாபங்களைத் தெரிவிக்க வந்துள்ளேன்.

"தோழர் செந்திலின் இறப்பு என்ற கசப்பான வில்லையை இனிப்பாக்குவதற்கு எதுவுமே கிடையாது என என்னால் சொல்ல முடியும். அவர் மிகவும் இளமையானவர் மற்றும் அவர் மிகவும் விரைவில் எங்களை விட்டுச் சென்றுள்ளார்.

"அவரது இழப்பால் நாம் அனைவரும் உணரும் ஆழமான கவலையை தெளிவாக வெளிப்படுத்துவதோடு அவரது குடும்பத்தாருடனும் மற்றும் அன்பரசி மற்றும் குறிப்பாக அவரது மூன்று பிள்ளைகளுடனும் நாம் மிகவும் சினேகிதத்துடன் கைகோர்த்துக் கொள்கின்றோம் என்பதை மட்டுமே தெளிவுபடுத்த என்னால் முடியும்.

"செந்தில் தனது வாழ்வில் நிறையவே சாதித்திருக்கின்றார் மற்றும் மேலும் சாதித்திருப்பார்.

"அடிப்படையில் அவர் தனது பண்பு மற்றும் ஏற்கனவே ஆழமான அனுபவங்களால் வடிவமைக்கப்பட்ட மற்றும் மார்க்ஸியத்தை அவர் மேலும் மேலும் புரிந்துகொண்டதால் கூர்மைப்படுத்தப்பட்ட அவரது அரசியல் நோக்கிலும் ஒரு சிறந்த மனிதராக இருந்தார் --தொழிலாளர் இயக்கத்தில் மிகச் சிறந்த வரலாற்று மரபாக மார்க்ஸியத்தை அனைத்துலக் குழுவில் கண்டார்.

"அவர் பிரான்சுக்கு வந்தது முதலான அனுபவங்களில் அவர் உழைக்கும் மக்களின் அனைத்துலக ஐக்கியத்திற்கான நனவான அரசியல் போராளியானதோடு ஒரு சோசலிச உலகைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணித்துக்கொண்டவராக இருந்தார்.

"ட்ரொட்ஸ்கி 1940 பெப்பிரவரியில், ஐரோப்பாவில் உலக யுத்தம் சீறியெழுந்ததோடு அவரைக் கொல்வதற்கு ஸ்டாலினின் கொலை இயந்திரம் முயற்சித்துக்கொண்டிருந்த போதிலும் கூட, மெக்ஸிகோவிற்கு நாடுகடத்தப்பட்டபோது வெளியிட்ட அறிக்கையின் சிறப்பியல்பை செந்தில் நன்கு புரிந்துகொண்டிருந்தார்.

"ட்ரொட்ஸ்கி எழுதியதாவது, 'மனிதநேயம்மிக்க கம்யூனிஸ்ட் எதிர்காலத்திலான எனது நம்பிக்கை ஆர்வங்குறைந்ததல்ல. உண்மையில் அது எனது இளமைக் காலத்தில் இருந்ததை விட இன்று மிகவும் உறுதியானதாகியுள்ளது... வாழ்க்கை அழகானது. கொடுமை, ஒடுக்குமுறை மற்றும் வன்முறையில் இருந்து அதை தூய்மையாக்கி அதை முழுமையாக அனுபவிக்க எதிர்கால சந்ததியினருக்கு விடுங்கள்.'

"செந்தில் அரசியல் தொந்தரவைக் கண்டதோடு, தனது சொந்த நாட்டில் இருந்தே வெளியேறத் தள்ளப்பட்டிருந்தார். அவர் சொந்த சிரமங்களை அறிந்திருந்ததோடு முன்னரை விட அதிகம் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

"ஆனால் அவர் வாழ்கையின் முழு இன்பத்துடன் இருந்தார். அது வெறுமனே அவர் ஒரு சிறந்த எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்ததால் அல்ல, ஆனால் அவர் தன்மீது அன்பு செலுத்தும் மற்றும் தன்னை மதிப்பவர்களால் சூழப்பட்டிருந்ததோடு ஒவ்வொரு நாளும் ஒரு காரணத்திற்காக வாழ்ந்துகொண்டிருந்ததாலேயே ஆகும். எங்களில் எவராலும் செய்யக்கூடிய சிறந்த விடயம் அது என நான் கூற வேண்டும்.

"மத கற்பனைகளில் ஆறுதலைத் தேடுபவர்கள் போல் அல்லாமல், சோசலிசம் எங்களை காவியுடை அணிந்து நாங்கள் முன்னர் செய்த பாவங்களுக்கு மன்னிப்புத் தருமாறு கேட்கச் சொல்லவில்லை. மார்க்சிய அடிப்படைத் தத்துவத்தின் சிகரத்தில் இருக்கும் மனிதகுலத்தின் உயர்ந்த கலாச்சார குறிக்கோள்களுடன் எங்களை பழக்கப்படுத்திக்கொள்ள, உலகையும் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் அனைத்தையும் அரவணைத்துக்கொள்ளவே சோசலிசம் அழைப்பு விடுக்கின்றது.

"அதாவது நாங்கள் பாடமுடியும், குடிக்க முடியும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் உணர்வு எங்களைத் தூண்டிவிட்டால் ஆடமுடியும். செந்தில் அதிலிருந்தும் தனிமைபட்டிருந்தார்.

"அவர் எங்கள் அனைவருக்கும் ஒரு உதாரணமாக இருந்தார், இருக்கின்றார். நாங்கள் அவரை கெளரவிக்கின்றோம். சந்தர்ப்பம் கோரும்போது மட்டுமல்ல, செந்தில் மிகவும் ஆர்வத்துடன் நம்பிய வரலாற்று நடவடிக்கையை இட்டுநிரப்ப எங்களை அர்ப்பணித்துக்கொள்ளும் ஒவ்வொரு நாளும் நாம் அவரை கெளரவிக்கின்றோம்.

"செந்தில் ஒரு அற்புதமான மனிதர், நாங்கள் அவரை இழந்துவிட்டோம்."

அதியன் தனது குடும்பம், நண்பர்கள் மற்றும் பிரான்சில் உள்ள தோழர்களின் சார்பாக செந்தில்ரவியின் கடந்தகால அனுபவங்களைப் பற்றி உரையாற்றினார்:

"தோழர் செந்தில் மனித நாகரீகத்தின், ஒரு உயர்ந்த கலாச்சாரத்தின் மிகவும் நனவான பிரதிநிதி. அவர் மிகவும் எளிமையானவர், சிறந்த பண்பாளர், தான் எடுத்துக்கொண்ட விடயத்தை மிகவும் சிந்தித்து ஆழமாகவும், பொறுமையாகவும் மற்றவர்களுக்கு தெளிவுபடுத்தும் ஒரு மனிதர்.

"மனித நேயத்தை காட்டுமிராண்டித்தனத்திற்கு தள்ளிச் செல்ல விரும்பும் ஒரு சிலரின் இலாப நோக்கத்தை எதிர்த்த அவர், தனது இறுதி மூச்சுவரை புரட்சிகர சோசலிச முன்நோக்கிற்காக போராடினார். அவர் இறுதிவரை நான்காம் அகிலத்தின் முன்நோக்கில் நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் கொண்டிருந்ததோடு அந்த குறிக்கோளை அடைவதற்காக அவர் மகிழ்ச்சியுடன் செயலாற்றினார்.

"இலங்கையில் உள்ள ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு சோசலிசப் புரட்சியின் வெற்றியின் மூலம் மட்டுமே உண்மையான விடுதலையைக் காண்பர் என்பதில் அவர் ஆழமான மனவுறுதி கொண்டிருந்தார். இதன்படி அவர் இந்தியத் துணைக்கண்டத்தில் நான்காம் அகிலத்தின் பகுதியைக் கட்டியெழுப்புவதன் தேவையை புரிந்துகொண்டிருந்ததோடு அந்த இலக்குக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

"அவர், இதற்காக இந்திய வரலாற்றையும் பொதுவில் மனித வரலாற்றையும் ஆழமாக கற்க திடசங்கற்பம் பூண்டிருந்தார். இதன் ஊடாக மட்டுமே மனிதகுலத்திற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது சாத்தியமாகும் என நாங்கள் ஒன்றுகூடும் போதெல்லாம் அவர் அடிக்கடி கூறுவார்.

"20ம் மற்றும் 21ம் நூற்றாண்டின் மார்க்சிஸ்டுகளின் ஆக்கத்திறன்கொண்ட படைப்புக்களை கற்பதில் செந்தில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் மறைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்த கடிதமொன்றில் இத்தகைய சிறந்த புத்தகங்களைப் பட்டியலிட்டிருந்தார். அவர் அதில் லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் டேவிட் நோர்த்தின் படைப்புக்களை விசேடமாகக் குறிப்பிட்டிருந்தார்.

''பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கத்திற்கு நான்காம் அகிலத்தின் முன்னோக்கை கொண்டு செல்வதில் செந்தில் வகித்த பாத்திரத்தை, பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கம் தனது வரலாற்றில் அவரது பெயரை குறித்து வைக்கும்.

"ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாரிசிலும் லண்டனிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடந்த போதெல்லாம் அவர் யுத்தம் தொடர்பான சோசலிச எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தார்.

"இதே போல், உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் பகுதியை கட்டியெழுப்புவதில் அவரது பங்களிப்பு வரம்பற்றதாகும். மனிதத்தை விரும்பிய தனிச்சிறப்பான வரலாறு கொண்ட இந்த மனிதரின் அகால மரணத்தைக் கேள்விப்பட்ட பலர் அதிர்ச்சியடைந்தனர்.

"அவர் மரணித்த செய்தியை கேள்விப்பட்ட, அவரை தனிப்பட்ட முறையில் அறிந்திராத பல நாடுகளைச் சேர்ந்த பலரும் அனுதாபச் செய்திகளை அனுப்பியிருந்தனர். இவை இன, மத மற்றும் மொழிக்கும் அப்பால் எழுச்சிபெற்ற ஒரு மனிதனாக செந்திலை விசேடமாக அடையாளப்படுத்தியுள்ளன.

"எம்மை விட்டுப் பிரிவதற்கு முதல் நாள் அவர் என்னை பாரிசில் சந்தித்த போது, பிற்போக்குவாதிகளின் ஒடுக்குமுறை ஆயுதங்களை விட வரலாற்று விதிகள் மிகவும் பலம் வாய்ந்தவை எனக் கூறினார். அந்த சொற்கள் இன்னமும் என் மனதில் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன.

"செந்தில் ஒரு எளிமையான வாழ்க்கையை முன்னெடுத்த போதிலும், பிரெஞ்சுத் தொழிலாளர் வர்க்கம் மட்டும் அல்ல பிரித்தானிய, இந்திய மற்றும் உலகத் தொழிலாளர் வர்க்கம் அவரது நேசம்மிக்க நினைவுகளை என்றும் வைத்திருக்கும். இன்றைய நனவான இளம் தலைமுறையானது அவரது போராட்டத்தை அதனது முன்மாதிரியாகக் கொள்ளும் என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன். ''

இந்தியாவின் சோசலிச தொழிலாளர் கழகத்தின் செயலாளரான அருண்குமார் பேசுகையில்,

"தோழர் செந்திலின் துன்பகரமான அகால மரணம் எமது அனைத்துலக ட்ரொட்ஸ்கிய இயக்கத்திற்கு பேரிழப்பாகும். இங்குள்ள நாம் அனைவரும், அவரது தோழர்களும், அவரது குடும்பத்தாரும், உறவினர்களும் மற்றும் நண்பர்களும் அவரது இழப்பையிட்டு கடுமையாக வருந்துகின்றனர்.

"எவ்வாறெனினும் அவரது நினைவுகள் இறப்பதில்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும். அவர் ஒரு அனைத்துலகவாதி. அவர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்துலக சோசலிச முன்நோக்கில் முழுமையாக நம்பிக்கைகொண்டிருந்ததுடன் தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துலக ஐக்கியத்திற்கான போராட்டத்திற்காக அவர் தன்னை மிக ஆர்வத்துடன் அர்ப்பணித்துக்கொண்டுள்ளார்.

"தேசிய இயக்கத்தில் அவர் பெற்ற ஆரம்ப அரசியல் அனுபவங்களின் பின்னர், இலங்கைத் தீவின் வரம்புக்குள் தேசிய ஒடுக்குமுறை பிரச்சினைக்கு முன்னேற்றமான தீர்வு இருக்க முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டார். உலக சோசலிசப் புரட்சியின் பாகமாகவே இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தார்.

"அவர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்நோக்கை பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் கொண்டு செல்ல செயற்பட்டார். இந்த உயர்ந்த பணிக்காக அவர் தன்னுடைய தோழர்களையும் நண்பர்களையும் ஊக்குவித்தார்.

"அவர் பல தடவைகள் இந்தியாவிற்கு வந்திருக்கின்றார். அவரின் மறைவுக்கு சில நாட்களுக்கு முன்னர் அவரை நான் லண்டனில் சந்தித்த போது, இந்தியாவில் அனைத்துலகக் குழுவின் கிளையை கட்டியெழுப்புவதுடன் தொடர்புபட்ட அரசியல், கோட்பாட்டு மற்றும் கலாச்சார பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதில் அதிகம் ஆர்வத்தை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சியடைந்தார்.

"நாங்கள் தோழர் செந்திலையும் மற்றும் அவரது புரட்சிகர போராட்டத்தையும் கெளரவிக்கின்றோம். அவர் உழைக்கும் மக்களின் முழு விடுதலைக்காகவும் மனித குலத்திற்கு ஒரு சிறந்த எதிர்காலத்திற்காகவும் போராடினார். அவரை கெளரவிப்பதற்கான சிறந்த வழி அவரது போராட்டத்தை மேலும் முன்கொண்டு செல்வதேயாகும்."

யாழ்ப்பாணத்திலும் பாரிசிலும் வெளிவரும் ஈழநாடு தமிழ் பத்திரிகையின் முன்நாள் ஆசிரியரும், தற்போது பிரான்சில் ஒரு பத்திரிகையாளராக பணியாற்றும் திரு. காசிலிங்கம் செந்திலுடனான தனது உறவு பற்றி பேசியபோது:

"மார்க்சிய கம்யூனிஸ்ட் கருத்துக்கள் ஆட்சி செலுத்தும் ஒரு உலகிற்காக செந்தில்ரவி ஆழமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டதாக தோழர்கள் குறிப்பிட்டார்கள். உலக அரசியல் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பது பற்றியும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இது செந்தில்ரவி யுத்தத்திற்கு எதிரான ஒழுக்கமான சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்ப அர்ப்பணித்துக்கொண்டிருந்தார் என்பதை மிகவும் தெளிவுபடுத்துகிறது. இங்கு ஆற்றப்பட்ட உரைகள் செந்திலின் உயர்ந்த தனிச்சிறப்பியல்புகள் பற்றி பெருந்தொகையான மக்களுக்கு புரியவைத்துள்ளன.

"செந்திலின் குடும்பத்தின் ஒரு நெருங்கிய உறவினர் என்ற வகையில், செந்தில்ரவியின் சிறப்பியல்புகளை இங்கு முன்வைத்ததையிட்டு, அவர்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன்.''

ஜேர்மனியில் உள்ள அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களின் சார்பில் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட அன்டனி தாஸ் தெரிவிக்கையில், "நாங்கள் அனைவரும் இன்று செந்திலின் மரணச் சடங்கில் ஒன்று கூடியுள்ளோம். இவை செந்திலின் உடலுக்கு செய்யும் சடங்கு மட்டுமேயாகும். உயர்ந்த முன்நோக்கிற்கான அவரது போராட்டமும், அனைத்துலகவாதம் மீது அவர் கொண்டிருந்த விருப்பமும் ஆயிரக்கணக்கான புதிய இளம் பரம்பரைக்கு ஒளிரும் உதாரணமாகும். அது மட்டுமல்ல, அடுத்த பரம்பரையின் சிந்தனைகளுக்கு பரந்தளவில் அவரது போராட்டம் உணர்வூட்டி ஒளிமயமாக உயிர்பெற்றிருக்கும்.

"உயர்ந்த முன்நோக்குடன் அவர் மிலேச்சத்தனத்திற்கு எதிராக முன்னெடுத்த போராட்டமானது மனித நாகரீகத்தையும் உயர்ந்த ஜனநாயக மற்றும் மனித விழுமியங்களையும் பாதுகாக்கும்."

அங்கு வந்திருந்த பலர் செந்திலின் மனைவி அன்பரசி மற்றும் அவரது மூன்று பிள்ளைகளுக்கு உதவுவதற்காக நிதிப் பங்களிப்பு செய்ய முன்வந்திருந்தினர்.