World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spanish Judge calls for architects of Iraq invasion to be tried for war crimes

ஈராக்மீதான படையெடுப்பிற்குக் காரணமாக இருந்தவர்கள் போர்க் குற்றங்களுக்காக விசாரணை செய்யப்பட ஸ்பெயின் நீதிபதி அழைப்பு

By Vicky Short
27 March 2007

Back to screen version

சிலி நாட்டின் சர்வாதிகாரி தளபதி ஒகுஸ்டோ பினோசே இன் மீது குற்ற விசாரணை நடத்த முற்பட்ட ஸ்பெயின் நீதிபதி ஙிணீறீtணீsணீக்ஷீ நிணீக்ஷீக்ஷ்ரஸீ, ஈராக் மீதான போர்க்குற்றங்களுக்காக விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகளை அழைத்துள்ளார்.

படையெடுப்பின் நான்கு ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி El Pais ல் எழுதியுள்ள நிணீக்ஷீக்ஷ்ரஸீ கூறியிருப்பதாவது: "ஈராக் மீது முறையாகப் போர் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிவதை இன்று, மார்ச் 20, குறிக்கிறது. அமெரிக்கா, பெரிய பிரித்தானியாவின் ஆத்திரமூட்டலுடனும், மற்ற நாடுகளுடன் ஸ்பெயினின் ஆதரவுடனும், சமீபத்திய மனித வரலாற்றில் மிக இழிந்த, நியாயமற்ற செயல்களில் ஒன்று தொடங்கியது.

"சர்வதேச சட்டங்கள் ஒவ்வொன்றையும் முறித்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போலிக்காரணத்தில் 2003ல் இருந்து சட்டத்தின் ஆட்சி மற்றும் சர்வதேச சமூகத்தின் சாரம்சத்திற்கு எதிராக பேரழிவு தரக்கூடிய தாக்குதல் நடந்துள்ளது. இதன் வழியில் ஐக்கிய நாடுகள் மன்றம் போன்ற அமைப்புக்கள் சிதற அடிக்கப்பட்டுள்ளன; அவற்றில் இருந்து அவை இன்னும் மீளவில்லை."

"போரை விழாவெனக் கொண்டாடுவதற்கு பதிலாக, அப்போரின் விளைவாக ஏற்பட்டுள்ள தற்போதைய படுகொலைகளுக்கு எதிராக நாம் பீதி கொள்ள வேண்டும், உரத்துக் குரல் கொடுக்க வேண்டும், ஆர்ப்பரிக்க வேண்டும்." என்று நிணீக்ஷீக்ஷ்ரஸீ தொடர்ந்து எழுதியுள்ளார்.

இதன்பின் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் இறுதியில் எப்படியும் ஈராக்கில் அவர்களுடைய செயல்களுக்காக போர் குற்றச் சாட்டுக்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். "இப்போருக்கான பொறுப்பைக் கொண்டிருப்பவர்கள் அல்லது கொண்டவர்கள் மீது குற்றம் சார்ந்த விதத்தில் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை ஆழ்ந்து காணவேண்டும்; அவர்கள் அதற்கு விடையிறுக்க வேண்டும் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும்."

"பலருக்கும் இது ஒரு வெறும் அரசியல் பொறுப்பு எனத் தோன்றலாம்; ஆனால் அமெரிக்காவில் நீதிமன்ற நடவடிக்கைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன; துணை ஜனாதிபதி ஷெனியின் கூட்டாளிகளில் ஒருவருக்கு [I.Lewis Libby] எதிராக நடந்த வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது வேறுபட்ட திசையில் விவகாரம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது."

"650,000 மக்கள் மடிந்தது இவ்விசாரணைக்கு போதுமான வாதம் ஆகும்; விசாரணையை இனியும் தாமதமின்றி தொடங்கலாம்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஸ்பெயின் பிரதம மந்திரி ஜோஸ் மரிய அஜ்நர் மீது இதைத்தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை நிணீக்ஷீக்ஷ்ரஸீ வைத்துள்ளார்; அவர்தான் ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரில் டோனி பிளேயருக்கு அடுத்தாற்போல் புஷ்ஷிற்கு ஆதரவளித்திருந்தார்.

"ஈராக்கிற்கு எதிரான போரில் அமெரிக்க ஜனாதிபதியுடன் சேர்ந்து கொண்டவர்கள் ஏறக்குறைய அவரைப் போலவே பொறுப்பேற்க வேண்டும்; ஏனெனில் சந்தேகங்களும் ஒருதலைப்பட்ச தகவல்களும் இருந்தபோதிலும், அவர்கள் ஆக்கிரமிப்பாளருடன் சேர்ந்து கொண்டு இறப்பு, அழிப்பு என்னும் இகழ்வான விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கினர்; இன்றளவும் அவை தொடர்கின்றன."

ஈராக் மீதான படையெடுப்பை அஸ்நர் இன்னமும் ஆதரிக்கிறார். சதாம் ஹுசைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பதை இப்பொழுது அறிந்துள்ளதாக கடந்த மாதம் பெரும் தயக்கத்துடன் அவர் ஒப்புக் கொண்டார்; ஆனால் "அதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் இல்லாததுதான் பிரச்சினை" என்று சேர்த்துக் கொண்டார்.

இதற்குத் தன்னுடைய கட்டுரையில் நிணீக்ஷீக்ஷ்ரஸீ கூறும் விடையிறுப்பாவது: "போதுமான அளவு தெரிந்திருக்கவில்லை என்றால் அவர் ஏன் நிதானத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று கேட்கப்பட வேண்டும்; ஜனாதிபதி புஷ்ஷிற்கு முற்றிலும் அடிபணிந்து விசுவாசத்துடன் செயல்பட்டதற்கு மாறாக ஐ.நா. ஆய்வாளர்களுக்கு இன்னும் வாய்ப்பை ஏன் அளிக்கவில்லை என்று கேட்கப்பட வேண்டும்."

ஈராக்கிய எழுச்சி மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் விரிவடைந்துவிடுமோ என்ற அச்சத்தில் நிணீக்ஷீக்ஷ்ரஸீ, "வட அமெரிக்க திமிர்த்தனமான நடவடிக்கை, அதற்கு ஆதரவு கொடுத்தவர்களின் நடவடிக்கை, குறைந்த பட்சம் உலகிலேயே மிகப் பெரிய பயங்கரவாத பயிற்சி முகாம்கள் தோற்றுவித்து, வளர்க்கப்பட்டு, ஒருங்கிணைப்பதை உறுதிப்படுத்திவிட்டது அல்லது குறைந்த பட்சம் வழிசெய்துவிட்டது.... ஒரு விதத்தில், நன்கு அறிந்திராத குறையினால், நாம் இந்த பெரும் அரக்கத்தன்மை வளர்வதற்கு, இன்னும் கூடுதலான முறையில் ஒவ்வொரு கணமும் வலிமைபெறுவதற்கு உதவுகிறோம்; இதையொட்டி அதை வெற்றி கொள்ளுவது கூட இயலாமற் போகலாம்."

பாஸ்க் பயங்கரவாதத்தில் இருந்து 2004 மார்ச் 11 மாட்ரிட் இரயில் மீதான குண்டு வீச்சுக்கள் வரை அனைத்தையும் நிணீக்ஷீக்ஷ்ரஸீ ஆய்வு செய்துள்ளார்; இதைச் செய்ததாகக் கூறப்படுபவர்கள் தற்பொழுது விசாரணைக்குட்பட்டுள்ளனர். Grupos Antiterroristas de Liberacion (GAL) என்னும் வலதுசாரி பயங்கரவாதக் குழு பற்றிய விசாரணையும் இவர் தலைமையில் நடந்துள்ளது; அதன் தோற்றம் அப்பொழுது ஆட்சியில் இருந்த Socialist Party (PSOE) யினால்தான் என்று கூறப்படுகிறது. ETA இன் அரசியல் அங்கமாக இருக்கும் Hserri Batasuana வையும் அவர் தடைக்குட்படுத்தியுள்ளார்; 1975ல் பிராங்கோ இறந்த பின்னர் இதுதான் சட்டத்திற்கு புறம்பானது என அறிவிக்கப்படும் அரசியல் கட்சியாகும்.

1996ம் ஆண்டு Progressive Union of Prosecutors என்னும் அமைப்பு 1970 களிலும் 1980 களிலும் ஆர்ஜென்டினா, சிலி ஆகியவற்றில் ஆட்சி செய்துவந்த இராணுவத்தின்மீது அந்நாட்டை ஆண்டுவந்த சர்வாதிகாரிகள் காலத்தில் அங்கு காணாமற் போய்விட்ட ஸ்பானிய குடிமக்கள் பற்றிய குற்றச் சாட்டுக்களை பதிவு செய்தது. ஓராண்டிற்கு பின்னர் நிணீக்ஷீக்ஷ்ரஸீ ஒரு கைது உத்தரவை பிறப்பித்தார்; இதில் ஆர்ஜென்டினாவின் கடற்படை காப்டன் Adolfo Sclingo வும் அடங்கியிருந்தார்; அவர் 1995ல் தொலைக்காட்சியில் "மரண விமானப் பயணங்கள்" நடத்தப்பட்டதாகவும், அவற்றில் நூற்றுக்கணக்கான கைதிகள் விமானத்தில் இருந்து அட்லான்டிக் பெருங்கடலில் வீசிக் கொல்லப்பட்டார்கள் எனவும் ஒப்புக் கொண்டிருந்தார். இதன் பின் தானாகவே ஸ்பெயினுக்கு அவர் பயணித்து வந்தபோது Scilingo காவலில் வைக்கப்பட்டார்.

சிலியின் முன்னாள் ஜனாதிபதி 1998ம் ஆண்டு லண்டனில் ஒரு மருத்துவ பரிசோதனைக்காக வந்திருந்தபோது, நிணீக்ஷீக்ஷ்ரஸீ பிறப்பித்திருந்த பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். பல மாதங்கள் நீதிபதி சர்வாதிகாரியை ஸ்பெயினுக்குக் கொண்டுவந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி Salvador Allende ஐ ஆட்சியில் இருந்து அகற்றிய 1973 இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு தலைமை தாங்கியதற்கும், பின்னர் நிகழ்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், தொழிலாளர்கள் படுகொலைக்காகவும் விசாரணைக்குட்படுத்த விரும்பினார். ரிச்சர்ட் நிக்சனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹென்ரி கிஸிங்கரை சிலி நிகழ்வுகள் பற்றி விசாரிக்கும் தன் விருப்பத்தையும் நீதிபதி அடையாளம் காட்டினார்; அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் CIA ஆகியவை இரகசிய ஆவணங்களை வெளியிட்டபின் என்ன நடக்கிறது என்பது பற்றி கிஸிங்கருக்குத் தெரியும் என்று அறிய வந்தபோது நீதிபதி இம்முடிவை எடுத்திருந்தார்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச நீதித்துறை மனிதர் பகிரங்கமாக அமெரிக்க, இங்கிலாந்து, ஸ்பெயின் தலைவர்கள் மீது போர்க் குற்ற விசாரணைகள் வேண்டும் என்று பேசுவது, ஈராக்கிய நடவடிக்கைகள் முழுவதும் ஒரு பேரழிவிற்கு சென்று கொண்டிருப்பதையும் உலகம் முழுவதும் அதற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பின் விளைவுதான் இது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

ஆயினும்கூட அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் இவருடைய அறிக்கைக்கு செய்தி ஊடகம் மிகக் குறைந்த முக்கியத்துவத்தைத்தான் கொடுத்தது. எந்தப் பத்திரிகையும் இது பற்றி தலையங்க கருத்தை கூறத்தயாராக இல்லை; பலவும் ராய்ட்டர்ஸ் (Reuters) தகவலை அப்படியே அல்லது சற்று மாற்றிய வகையில் கொடுத்தன.

ஆயினும், முன்னாள் பிரதமர் அஸ்நரின் Popular Party (PP) கட்சியின் சில பகுதிகள் கூட, ஈராக்கின்மீது படையெடுக்க வேண்டும் என்ற புஷ்ஷின் முடிவிற்கு ஆதரவளித்த அஜோர்சில் நடைபெற்ற கூட்டத்திற்கு அவர் வருகை தந்தது ஒரு தவறு என்று பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு, ஸ்பெயினில் ஈராக் போருக்கும் படையெடுப்பிற்குமான குரோதத்தின் மட்டம் இருந்தது.

இவ்விமர்சனங்களைப் பற்றி தகவல் கொடுக்கும் வலதுசாரி செய்தித்தாளான El Mundo, மார்ச் 20 அன்று கூறியது: "PP ஈராக் பற்றி சுய விமர்சனத்தை தவிர்ப்பதை தொடரக் கூடாது."

அந்நேரத்தில் ஈராக்கிற்கு படைகள் அனுப்புவதற்கு முக்கிய எதிர்ப்பை தற்போதைய விமர்சகர்கள் காட்டியிருந்தாலும், இன்று "அவர்களில் ஒருசிலர்தான் உரத்த குரலில் அவ்வாறு கூறுகின்றனர் ...PP யில் பெரும்பாலானவர்கள் தனிப்பட்ட முறையில் அஸ்நர் தவறிழைத்துவிட்டார் என்றுதான் ஒப்புக் கொள்ளுகின்றனர். ஒரு அட்லாண்டிக் நாடுதான் ஸ்பெயின் என்று காட்டிக் கொள்ளும் ஆர்வத்தில், புஷ்ஷை குருட்டுத்தனமாக நம்பிய வகையில், அஸ்நர் ஸ்பெயின் நாட்டுச் சமூகத்தின் ஒரு பிரிவை முற்றிலும் அமெரிக்க எதிர்ப்பு பிரிவாக உரமூட்டியதில்தான் வெற்றியடைந்துள்ளார்; மேலும் இப்பொழுது புதிய (PSOE) அரசாங்கம் விளக்கிக் காட்டுவது போல், வெளிநாட்டில் காட்டிக் கொள்ளவதை விட அது அதிக கவனத்தை கோருகின்ற உள்நாட்டில் ஏற்படக்கூடிய விளைவுகளையும் புறக்கணித்துவிட்டார்.

நிணீக்ஷீக்ஷ்ரஸீ கட்டுரை El Pais ல் வெளிவந்து கடைகளை அடைந்த சில மணி நேரங்களுக்குள், PSOE இன் செயலாளரான José Blanco, Telecinco விற்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் ஈராக் மீது படையெடுக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட முடிவின் விளைவுகளுக்கு எவரேனும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அறிவித்தார். புஷ், பிளேயர், அஸ்நர் ஆகியோர் சட்டபூர்வமாக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வந்தால், தான் அதை பின்னர் ஆதரிப்பதாக கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved