World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா

Military coup ousts Thai prime minister

இராணுவ திடீர் ஆட்சிக்கவிழ்ப்பு தாய்லாந்துப் பிரதமரை அகற்றுகிறது

By John Roberts
21 September 2006

Use this version to print | Send this link by email | Email the author

செவ்வாய்க்கிழமை பின் நள்ளிரவில், தாய்லாந்தின் இராணுவம் கவச வாகனங்களால் சூழப்பட்ட துருப்புக்களை அனுப்பி தலைநகர் பாங்காக்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, பாராளுமன்றம், பிரதம மந்திரி அலுவலகம் இவற்றை சூழ்ந்து, அனைத்து தொலைக்காட்சி நிலையங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. ஆழ்ந்த பிளவுகளாலும் ஏப்ரல் 2ம் தேதி தேசிய தேர்தல்கள் நீதிமன்றங்களால் செல்லத்தக்கவை எனக் கூறப்பட்டதை அடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் விளைவாலும் எரியூட்டப்பட்டிருந்த பலமாதங்கள் நிலவிய அரசியற் சதியை அடுத்து மந்திரி தாக்சின் ஷினவட்ராவிற்கு எதிரான இராணுவ திடீர் ஆட்சிக்கவிழ்ப்பு தொடர்ந்தது.

தாய்லாந்து அரசர் பூமிபோல் அடுல்யடேஜின் மறைமுக ஆதரவுடன் புதனன்று நடக்கவிருந்த வெகுஜன தாக்சின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் நடத்தப்படுதலையும் இராணுவம் தடுத்து நிறுத்தியது. ஏப்ரல், மே மாதங்களில், நூறாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பாங்காக் தெருக்களுக்கு வந்து ஊழல் குற்றச் சாட்டுக்களை அடுத்து தாக்சின் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர். புதுத் தேர்தல்களுக்கு பின்னர் விலகுவதாக தாக்சின் உறுதியளித்திருந்தார். ஆனால் ஒரு நீடித்த அரசியல் நெருக்கடி நிலவியதால் அவர் பதவியில் தொடர்ந்து இருப்பார் எனத் தோன்றியது.

திடீர் ஆட்சிக்கவிழ்ப்பின்போது ஐ.நா. பொது மன்றத்தில் உரையாற்றுவதற்காக தாக்சின் நியூ யோர்க்கில் இருந்தார். திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு மாற்றம் பற்றித் தெரிந்து கொண்டவுடன், பிரதம மந்திரி இராணுவத் தலைமை அதிகாரியான தளபதி சோன்தி பூன்யரட்கலினை அகற்றி ஒரு நெருக்கடி நிலைமையை பிரகடனப்படுத்த முயன்றார். பாங்காக்கின் சானல் 9 தொலைக்காட்சி வழியே தகவலை தொலைபேசி மூலம் அனுப்பினார்; அது அவருடைய ஆணையை இரவு 10.20க்கு ஒளிபரப்பிற்று. பாங்காக் போஸ்ட்டின் தகவல்படி, இந்த அறிவிப்பு தொலைக்காட்சி நிலையத்தை படைகள் அடைந்த அளவில் நிறுத்தப்பட்டுவிட்டன. இரவு 11 மணி அளவில் பீரங்கி வண்டிகள் நகரத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் நிலைநிறுத்தப்பட்டு வைக்கப்பட்டன.

Nation ஏட்டின்படி, தளபதி சோந்தி இன்னும் பிற இராணுவப் பிரிவுகளின் தலைவர்கள் மன்னருடன் பார்வையாளர்களை வழங்கியது ஆட்சி மாற்றத்திற்கு அரசரின் ஒப்புதல் இதன் மூலம் வந்துள்ளது என்பதன் அடையாளமாகும். நேற்று அதிகாலையில், இராணுவத் தலைவர்கள் தங்களை அரசியல் சீர்திருத்தக் குழு என அழைத்துக் கொண்டு, இராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்து, நாட்டின் 1997 அரசியலமைப்பை அகற்றி, தாக்சின் அரசாங்கம், அரசியலமைப்பு நீதிமன்றம் மற்றும் செனட் மன்றம் ஆகியவற்றை கலைத்தனர்.

தாக்சின் அரசாங்கம் "இதுகாறும் இல்லாத அளவிற்குச் சமூகப் பிளவுகளை" ஏற்படுத்தியுள்ளது, அரசரை அவமானப்படுத்தியுள்ளது, அரசாங்க அமைப்புக்களில் "அரசியல் நோக்கத்துடன் தலையிட்டது" என்று அறிவித்த வகையில் அரசியல் சீர்திருத்தக் குழு ஆட்சி மாற்றத்தை நியாயப்படுத்தியுள்ளது. அகற்றப்பட்டுள்ள பிரதம மந்திரிக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கையை அடிப்படையாக வைப்பதற்கு "ஊழல் பற்றிய பரந்த தகவல்கள்" இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

இடைக்காலப் பிரதமராக பதவியேற்றுள்ள தளபதி சோந்தி நேற்று தொலைக்காட்சியில் தோன்றினார். இரண்டு வாரங்களுக்குள் ஒரு சிவிலிய பிரதம மந்திரி பதவியில் இருத்தப்படுவார் என்றும் அடுத்த மாதம் நடக்க இருந்த தேர்தல்கள் ஓராண்டு ஒத்திவைக்கப்படும் என்றும், அதற்கிடையே ஒரு புதிய அரசியலமைப்பு வடிவமைக்கப்படும் என்றும் கூறினார். தாக்சினுக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கைகள் வரும் என்றும் அவர் எச்சரித்தார்.

அரசியல் சீர்திருத்தக் குழுவின் தலைவர் சோந்தி என்பதற்கு ஒப்புதல் கொடுத்த அளவில் அரசர் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்; மேலும் அரசாங்க அதிகாரிகளும் மக்களும் "சோந்தியின் கட்டளைகளுக்கு" கீழ்ப்பட்டு நடக்க வேண்டும் என்றும் அரசர் கூறியுள்ளார். இராணுவத்துடன் முடியரசு நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது; இராணுவம்தான் 20ம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் தாய்லாந்தில் நேரடியாக ஆண்டுவந்தது. ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு அரசரின் ஆதரவு என்பது தாய் ஆளும் உயரடுக்கினரின் மிகப் பழமைவாத கூறுபாடுகளும் இந்த மாற்றத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளன என்ற பொருளைத் தரும்.

தாக்சினுக்கு எதிராக பரந்த அளவில் இருக்கும், குறிப்பாக தலைநகரில் உள்ள, குரோத உணர்வை இராணுவம் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இராணுவ வீரர்களும் பீரங்கி வண்டிகளும் மஞ்சள் ரிப்பன்களால் அலங்கரிக்கப்பட்டன; இது அரசருக்கு அவர்கள் கொடுக்கும் ஆதரவின் அடையாளம் ஆகும்; மேலும் இது இவ்வாண்டின் முன்னதாக தாக்சின் எதிர்ப்பாளர்களால் ஏற்கபட்டிருந்த வண்ணமும் ஆகும். ஆட்சி மாற்றத்திற்கு வெளிப்படையான எதிர்ப்பு ஒன்றும் இதுவரை தாக்சினுக்கு விசுவாசமாக இருக்கும் பாதுகாப்புப் பிரிவினரிடம் இருந்தோ Thai Rak Thai (TRT) என்னும் அவருடைய கட்சிக்கு வலிமை இருக்கும் கிராமப்புறங்களில் இருந்தோ தோன்றவில்லை.

நீடித்த நெருக்கடி

ஓராண்டிற்கும் மேலாக தாய்லாந்தின் ஆளும் வட்டங்களுள் இருக்கும் கடுமையான அரசியல் உட்பூசல்களின் உச்சக் கட்டம்தான் இந்த இராணுவ ஆட்சி மாற்றம் ஆகும். தொலைத்தொடர்பு பிரிவைச் சார்ந்த பில்லியனரான தாக்சினும் அவருடைய TRT கட்சியும் 2001, 2005 தேர்தல்களில், 1997-98 ஆசியப் பொருளாதார நெருக்கடியை அடுத்து வந்திருந்த ஜனநாயகக் கட்சி தலைமையிலான ஆட்சியின் IMF "சீர்திருத்த" செயற்பட்டியலுக்கு எதிரான மக்களுடைய எதிர்ப்பை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தனர்.

குறிப்பாக கிராமப் பகுதிகளில் தாக்சின் தன்னுடைய மக்களை திருப்திப்படுத்தும் கிராம நலன்கள், சுகாதாரப் பாதுகாப்பு, தாய் வணிகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை உறுதி அளித்ததின் மூலம் மிகக் கணிசமான ஆதரவைப் பெற்றார். ஆனால் தாக்சின் பெருகிய முறையில் சர்வதேச அழுத்தத்திற்கு உட்பட்டு IMF உடைய மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தும் வகையிலும், வெளி மூலதனம் போட்டியிடும் வகையில் பொருளாதாரத்தை அமைக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார். அரசு உடைமைகளை தனியார் மயமாக்கினார்; இதில் தேசிய மின்சக்தி உற்பத்தி செய்யும் நிறுவனமும் (EGAT) அடங்கியிருந்தது. இதன் பின் அமெரிக்காவுடன் தடையற்ற வணிக உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கினார்.

இந்த நடவடிக்கைகள் கணிசமான எதிர்ப்பை ஏற்படுத்தின; அதில் தாக்சினுடைய முன்னாள் நண்பர்களான பதிப்பக செல்வந்தர் சோந்தி லிம்தோங்குலும் இருந்தார்; அவர் கடந்த ஆண்டு பல தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தார். அந்த ஆர்ப்பாட்டங்களில் 100,000 என்று பெப்ருவரி மாதம் மக்கள் குவிந்தனர்; இதற்குக் காரணம் தொலைத் தொடர்பு பெருநிறுவனமான Shin Corp. ல் தாக்சினுடைய குடும்பப்பங்கு அமெரிக்க 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டதால் விளைந்த மக்கள் சீற்றம் ஆகும். தாக்சின் வரி கொடுப்பதை தவிர்த்த விதத்தினால் மட்டும் கோபம் வரவில்லை; மற்றொரு பெரிய தாய் நிறுவனம் சிங்கப்பூர் அரசாங்கத்தின் முதலீட்டுப் பிரிவான டெமாசெக்கிற்கு விற்கப்பட்டதை அடுத்தும் அது எழுந்திருந்தது.

எதிர்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்திருந்த ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணி (PAD) என்ற அமைப்பு இன்னும் கூடுதலான மத்திய கிழக்கு அடுக்குகள், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த நலன்களை பற்றிக் குவிப்பைக் காட்டியது. தங்கள் வேலைகள், பணிநிலை நலன்கள் ஆகியவற்றை இழக்கும் அபாயத்தில் இருந்த EGAT தொழிலாளர்களும் அணிவகுப்புக்களில் கலந்து கொண்டனர். மற்றவர்கள் தாக்சினுடைய செய்தி ஊடக ஏகபோக உரிமைக்கும், ஜனநாய உரிமைகள் தவறாகப் பயன்படுத்துவதற்கும் எதிர்ப்புக் காட்டி குரல் எழுப்பினர்; இதில் 2003ல் அவர் நடத்திய "போதைப் பொருளுக்கு" எதிரான போர் அடங்கும். அதில் போலீசார் போதைக் கடத்தல்காரர்கள் எனக் கூறப்பட்டவர்களை ஆயிரக்கணக்கில் சட்டவிரோதமாக கொன்று குவித்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் மூத்த தாய் தூதரக அலவலகர்களும் அணிவகுப்புக்களில் அரசாங்கத்தின் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள முஸ்லிம்களின் ஜனநாயக உரிமைகள் மிருகத்தனமாக அடக்கப்படுவது பற்றிப் பேசினர்; இது பிரிவினை எழுச்சியை உக்கிரப்படுத்தி மலேசியாவுடன் உறவுகளை பாதிக்கும் என்றும் கூறினர். இந்தக் குறைகூறல்கள் இராணுவத்தின் படிநிலையில் உள்ள ஆழ்ந்த சீற்றத்தையும் பிரதிபலித்தன; ஏனெனில் தெற்கில் நெருக்கடி பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் அதுதான் பெருகிய முறையில் உள்நாட்டுப் போரில் தொடர்பு கொள்ள வேண்டியதாயிற்று.

அரசியல் நெருக்கடியின் தீவிரத்தைக் குறைக்கும் முயற்சியாக தாக்சின் உடனடித் தேசிய தேர்தல் ஒன்றை ஏப்ரல் 2ல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். வடபுறக் கிராமப் பகுதியில் TRT க்கும் அதன் திருப்திப்படுத்தும் கொள்கைகளுக்குமான ஆதரவு தம்மை மறுபடியும் தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்தும் என்று சரியாகவே நம்பினார். ஆனால் எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்து அரசியல் நெருக்கடி ஒன்றை ஏற்படுத்திவிட்டன.

தாக்சினுக்கும் எதிராக இருக்கும் விரோதப் போக்கின் ஆழ்ந்த தன்மையினால், சட்டபூர்வ குறைந்த பட்ச 20 சதவிகித வாக்குகளை பெற்றிராத காரணத்தால் பாங்காக்கில் பல இடங்களும் காலியாகவே இருந்தன. அரசியலமைப்பின்படி அனைத்து இடங்களும் நிரப்பப்படாவிட்டால் பாராளுமன்றம் கூட்டப் பெறவும் முடியாது, புதிய அரசாங்கமும் அமைக்கப்பட முடியாது.

தாக்சினைப் பதவியில் இருந்து அகற்றுமாறு எதிர்க்கட்சிகள் அரசரிடம் முறையிட்டன. அவ்வாறு அவர் செய்ய மறுத்துவிட்ட போதிலும், தாக்சின் பின்வாங்கிவிட வேண்டும் என்று திரைக்குப் பின்னே அழுத்தம் கொடுக்கத் தலைப்பட்டார். ஏப்ரல் 4ம் தேதி தாக்சின் ஒரு புதிய மந்திரிசபை அமைக்கப்பட்டவுடன் பதவியை விட்டு விலகுவதாக உறுதியளித்தார்; இதையொட்டி PAD பாங்காக்கில் நடைபெற இருந்த அணிவகுப்புக்களை இரத்து செய்தது. ஆனால் ஏப்ரல் 23 இடைத் தேர்தல்களின் மூலமும் காலியிடங்கள் நிரப்பப்படவில்லை; எனவே அரசியலமைப்பு நெருக்கடி தீரா நிலையில் தொடர்ந்தது.

அரசர் பூமிபோல் இறுதியில் ஏப்ரல் 25 அன்று நேரடியாகத் தலையிட்டார். "ஒரு பெரும் குழப்பம்" என்று நிலையை விவரித்த அவர், தாக்சினை அகற்ற வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மீண்டு நிராகரித்து நீதிமன்றங்கள் அரசியலமைப்பு நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மே 8ம் தேதி, அரசியலமைப்பு நீதிமன்றம், எதிர்க்கட்சிகள் கோரியபடி, தேர்தல்கள் செல்லாதவை என்று அறிவித்தது.

ஆயினும்கூட, இடைவிடாமல் அரசியல் நெருக்கடி தொடர்ந்தது; தாக்சினும் அவருடைய எதிர்ப்பாளர்களும் அரசாங்கத்தின் பல கருவிகளையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். TRT புதிய தேர்தல் ஒன்றில் வெற்றி பெற்றுவிடுமோ என்று கவலை கொண்ட எதிர்க் கட்சிகள் தேர்தல் குழு மாற்றி அமைக்கப்பட்டு TRT மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் கொண்டுவரவேண்டும் என்றும் அது சட்டவிரோதக் கட்சி என அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தன. தன்னுடைய பங்கிற்கு தாக்சின் அவருடைய எதிர்ப்பாளர்களை முறியடிக்கும் வகையில் நடந்து கொண்டு புதிய தேர்தல்களுக்கு பிறகும் தான்தான் TRT தலைவராகத் தொடர்வேன் என்றும் அறிவித்தார்.

ஆட்சிமாற்றத்தை தூண்டிவிட்ட பல உடனடிச் செயல்களில் ஒன்று தளபதி சோந்தி உட்பட பல மூத்த அதிகாரிகளுக்கு எதிராக தாக்சின் மேற்கொண்ட நடவடிக்கைகள் எனத் தோன்றுகிறது; பிரதம மந்திரியை பற்றி விமர்சிக்கும் தன்மையில் தளபதி சோந்தி இருந்தார். ஜூலை மாதம் தாக்சினுக்கு விசுவாசமாக இருந்த 100 நடுத்தர நிலை அதிகாரிகள் பாங்காக்கில் முக்கியமான பதவிகளில் இருந்து அகற்றப்பட்டனர் என்று லண்டன் டைம்ஸ் கூறுகிறது. ஏசியா டைம்ஸ் வலைத்தளத்தின்படி, தாக்சின் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தலைநகரப் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் இரு முக்கிய பதவிகளில் தன்னுடைய ஆதரவாளர்கள் இருவரை நியமிக்க இருந்தார்.

ஏசியா டைம்ஸ் செய்தியாளர் Shawn Crispin எழுதினார்: "தீர்மானிக்கப்பட்டிருந்த இராணுவ மாற்றங்கள் பற்றி கடுமையான விவாதங்களின் பின்னணியில் ஆட்சிக் கவிழ்ப்பு மாற்றம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்; இதில் தாக்சின் பூசலுக்கு இடம் கொடுக்கும் வகையில் தாக்சின் தனக்கு ஆதரவாக இருக்கும் இராணுவ அதிகாரிகளை உயர்பதவியில் இருத்துவதற்கு முயன்றார்; அதுவும் இவருக்கு நெருக்கமான காடெட் பத்தாம் வகுப்புப் பிரிவில் இருந்து இராணுவ முதல் பிரிவிற்குச் சிலரைக் கொண்டுவர முயன்றார். அப்படிப்பட்ட மாற்றம் கொண்ட பட்டியல் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் (அரசரின் ஆலோசனை) அரசியல் அறிஞர்களின் குழு உறுப்பினர்களுடன் மோதல்களை தோற்றுவித்தது எனக் கருதப்படுகிறது; நபர்கள் மாற்றத்தில் அவர் பின்வாங்க மறுத்தது இவ்வாட்சி மாற்றத்தின் பின்னால் உள்ள பெரிய காரணி எனத் தோன்றுகிறது."

இன்னும் அடிப்படையாக, சோந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் தீர்க்கப்படாத அரசியல் நெருக்கடி மீண்டும் கொந்தளித்து எழுச்சியுற்ற சாதாரண தொழிலாளர் மக்கட்திரளை சென்றடையும் என்று கவலை கொண்டனர். அரசியல் அமைப்பு, தேர்தல்கள் என்ற முறையில் ஆழ்ந்த பிளவுகளை தீர்க்க முடியாத நிலையில், ஆளும் உயரடுக்கினர் எல்லாவற்றிகும் மேலாக இராணுவ ஆட்சியை சுமத்தியுள்ளனர்; இதுதான் இருக்கும் அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் இவற்றின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் சென்றுவிடக் கூடிய ஓர் அரசியல் இயக்கத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியும் என்பது அவர்களுடைய கருத்து ஆகும்.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். முன்னாள் பிரதம மந்திரியும் கட்சித் தலைவருமான Chuan Leekpai செய்தியாளரிடம் கூறினார்: "அரசியல் வாதிகள் என்ற முறையில் எவ்வித இராணுவ ஆட்சி மாற்றத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை; ஆனால் தாக்சின் அரசாங்கத்தின் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி பல சூழ்நிலைகளை ஏற்படுத்தி இராணுவம் ஆட்சிக் கவிழிப்பு மாற்றத்தை கொண்டுவர வகை செய்துள்ளது. நாட்டில் நெருக்கடியை தாக்சின் ஏற்படுத்திவிட்டார்". கடந்த காலத்தில் ஜனநாயகக் கட்சி இராணுவ ஆட்சியை எதிர்த்துள்ளது; 1992ம் ஆண்டு பழைய சர்வாதிகார ஆட்சியை விழ்த்திய மக்கள் எதிர்ப்புக்களில் இது முன்னணியில் இருந்தது.

சர்வதேச பதில் நடவடிக்கைகளும் சற்றே அடக்கமாகக் காணப்படுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் இன்னும் பல முக்கிய நாடுகள் தாய்லாந்தில் ஜனநாயகம் இழக்கப்பட்டுள்ளது பற்றி புலம்பி அறிக்கைகளை வெளியிட்டு விரைவில் அது மீட்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் தாய்லாந்திற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் அல்லது தாக்சின் மீண்டும் பிரதமராக இருத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வரவில்லை. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு குழுவின் செய்தித்தொடர்பாளர் Fredereick Jones கொடுத்த கருத்துமாதிரி வகைக் கருத்து ஆகும்: "தாய் மக்கள் தங்கள் அரசியல் வேறுபாடுகளை அமைதியாகத் தீர்த்துக் கொள்ளுவர் என எதிர்பார்க்கிறோம்; மேலும் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகிய கொள்கைகளுக்கு உட்பட்டு அம்முடிவு வரும் என்றும் நினைக்கிறோம்" என்று அவர் அறிவித்தார்.

பட் மற்றும் தாய் பங்குகளில் ஆழ்ந்த சரிவு மற்றும் பரந்த அளில் சந்தையில் உறுதியற்ற தன்மை இருப்பது ஆகியவை இன்னும் கூடுதலான வகையில் ஆசியாவில் அரசியல் பெருங்குழப்பத்தை இராணுவ ஆட்சி மாற்றம் ஏற்படுத்தக் கூடுமோ என்ற பரந்த கவலையை பிரதிபலிக்கின்றன. ஹாங்காங்கில் உள்ள Deutsche Bank ன் Michael Spencer முதலீட்டாளர்களுக்கு உறுதி கொடுக்கும் வகையில் அறிவித்தார்: "ஆசியாவில் தொற்று நோய் போல் இது ஏன் பரவ வேண்டும்? ஆசியா முழுவதும் கூடுதலான நிதியங்கள், நடப்பு இருப்புக் கணக்கில் அதிக பணம் ஆகியவற்றையும், 1997ல் இருந்து வியத்தகு முறையில் குறைந்துள்ள கடன் நிலையையும்தான் பெற்றிருக்கிறோம்."

தாய் இராணுவ ஆட்சிமாற்றத்தில் ஆசிய நிதிய நெருக்கடிக்கு பின்னர் குறுகிய வரம்பில் பொருளாதார மீட்பை ஏற்படுத்தியிருந்த பொருளாதார மறுசீர்திருத்த நடவடிக்கைகளை பற்றிய ஆழ்ந்த அதிருப்திகள், சீற்றங்கள், அவை ஏற்படுத்தியுள்ள பாதிப்பு ஆகியவை அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. ஆழ்ந்த பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக, இராணுவ ஆட்சி, ஆரம்பத்தில் பலராலும் ஏற்கப்பட்டாலும், தவிர்க்க முடியாமல் மக்கள் எதிர்ப்பை தோற்றுவித்து இன்னும் கூடுதலான அரசியல் பிரச்சினைகளைத்தான் உருவாக்கும். புது இராணுவ ஆட்சியாளர்களின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று அனைத்து எதிர்ப்புக்கள், பொதுக் கூட்டங்கள், ஐந்து பேர்களுக்கு மேல் கூடுதல் ஆகியவற்றை தடை செய்து இருப்பதாகும்.

நிதி நிலைமை வர்ணனையாளர்கள் இது "தொற்றுவியாதி போல்" பரவாது என்று நம்பிக் கொண்டிருக்காலும்; ஆனால் தாய்லாந்தில் நடக்கும் வழிவகைகள் பலவும் தென் கிழக்கு ஆசியா முழவதும் பல இணையான போக்குகளை கொண்டுள்ளன; ஏற்கனவே அவை பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அரசியலில் உறுதியற்ற தன்மையின் அடையாளங்களை வெளிப்படுத்தியுள்ளன. "ஆசியாவில் ஜனநாயகத்தின் வருங்காலம்" என்ற தலைப்பு பற்றி நியூ யோர்க்கில் மதிப்பிற்கு உரிய Council of Foreign Relations அமைப்பில் பதவியில் இருந்து அகற்றப்படுவதற்கு ஒரு நாள் முன்பு தாக்சன் உரையாற்றியது விந்தையானது ஆகும். அவருடைய விதியே மற்ற அரசாங்கங்களுக்கு என்ன நேரிடலாம் என்ற குறிப்பை தரக்கூடும்; ஏனெனில் அப்பகுதி முழுவதும் ஆளும் உயரடுக்குகள் தேர்தல் வழிவகை மூலம் தங்களுடைய செயற்பட்டியலை சுமத்த இயலாத நிலையில் உள்ளன.