World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Letters demand inquiry into murder of SEP supporter in Sri Lanka

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்யுமாறு கடிதங்கள் கோருகின்றன

12 September 2006

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸின் கொலை தொடர்பாக முழுமையான விசாரணை செய்யுமாறு கோரி இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் பிரதிகள் பல உலக சோசலிச வலைத் தளத்திற்கு ஏற்கனவே கிடைத்துள்ளன.

திருகோணமலையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முல்லிப்பொத்தானை நகரத்தில் ஆகஸ்ட் 7ம் திகதி மரியதாஸ் கொல்லப்பட்டார். இரவு 9.30 மணியளவில் யாரோ அவரை தமிழில் பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டு கதவுக்கு அருகில் சென்றபோது, ஒரு துப்பாக்கிதாரி அவரை நெற்றியிலும் கழுத்திலும் சுட்டுவிட்டு காத்திருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டான். மரியதாஸ் ஸ்தலத்திலேயே மரணமானார்.

இலங்கை இராணுவம் அல்லது அவர்களுடன் இணைந்து செயற்படும் துணைப்படையினரே பெரும்பாலும் இந்தக் கொலைக்கு பொறுப்பாளிகளாவர். மாவிலாறு மூதூர் போன்ற அயலில் உள்ள மாவட்டங்களில் இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலை அடுத்தே மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரவில் பாதுகாப்புப் படைகளை சவால் செய்யாது யாரும் நகரில் பிரவேசிக்க முடியாத அளவிற்கு பாதுகாப்புப் படைகள் முல்லிப்பொத்தானையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் படுகொலையைத் தொடர்ந்து, இராணுவம் அவரது இறுதிச் சடங்கு நடந்த அவரது சொந்த ஊரான செல்வநாயகபுரம் உட்பட எல்லா இடங்களிலும் மரியதாஸ் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர் என்ற வதந்தியை வேண்டுமென்றே பரப்பிவிட்டிருந்து. அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பினையும் அச்சுறுத்தி மெளனமாக்குவதன் பேரில், விசேடமாக தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் பரந்த பிரச்சாரத்தின் ஒரு பாகமே மரியதாஸின் படுகொலையாகும்.

கடந்த 10 மாதங்களாக, கொழும்பிலும் வடக்கு கிழக்கிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இராணுவம் அல்லது துணைப்படைகள் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் எந்த ஒரு சம்பவம் தொடர்பாகவும் எந்தவொரு தக்க பொலிஸ் விசாரணைகளும் நடந்ததில்லை. மரியதாஸ் கொலை செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர், மூதூரில் பிரான்ஸைத் தளமாகக் கொண்ட அக்ஷன் பாயிம் (Action Contre la Faim - ACF) என்ற தொண்டு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டமை அண்மையில் நடந்த ஒரு சம்பவமாகும்.

சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் கடந்த வாரம் சோ.ச.க. யின் அறிக்கையை இணைத்து ஊடகங்களுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார். அந்த அறிக்கை "இலங்கை சோ.ச.க. சிவப்பிரகாசம் மரியதாஸின் கொலை தொடர்பாக முழுமையான விசாரணையை கோருகின்றது" என தலைப்பிடப்பட்டிருந்தது. கடந்த சனிக்கிழமை, ஆங்கில நாளிதழான த ஐலண்ட், தக்க விசாரணை நடத்துமாறு சோ.ச.க. விடுத்துள்ள கோரிக்கை பற்றி இரண்டாம் பக்கத்தில் கவனத்தை ஈர்க்குமளவில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. பரவலாக வாசிக்கப்படும் தமிழ் பத்திரிகையான தினக்குரல் சோ.ச.க. அறிக்கையை நேற்று முழுமையாக பிரசுரித்திருந்தது.

மரியதாஸின் கொலை தொடர்பாக முழுமையாக விசாரணை செய்யக் கோரி இலங்கை அதிகாரிகளுக்கு ஆட்சேபனை கடிதங்களை அனுப்புமாறு எமது வாசகர்களையும் ஆதரவாளர்களையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

Inspector General of Police Chandra Fernando, Police Headquarters, Colombo 1, Sri Lanka. Fax: 0094 11 2446174 Email: igp@police.lk

Attorney General K.C. Kamalasabeyson,
Attorney General's Department,
Colombo 12, Sri Lanka.
Fax: 0094 11 2436 421

Copies should be sent to the Socialist Equality Party (Sri Lanka) and the World Socialist Web Site.

Socialist Equality Party, P.O. Box 1270, Colombo, Sri Lanka. Email: wswscmb@sltnet.lk

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவுக்கு கடிதங்களை அனுப்ப இந்த ஒன்லைன் படிவத்தை தயவு செய்து பயன்படுத்தவும்.

உ.சோ.வ.தளத்திற்கு கிடைத்த இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் பிரதிகளை இங்கு பிரசுரிக்கின்றோம்.

***

நான் இலினொய்ஸ் பல்கலைக்கழகத்தின் சமூக சமத்துவத்திற்கான மாணவர்களின் சார்பாக சிவப்பிரகாசம் மரியதாஸின் கொலை தொடர்பாக தாமதம் இன்றி விசாரணையை ஆரம்பிக்குமாறு கோரி இதை எழுதுகிறேன்.

மரியதாஸ் கிழக்கு மாவட்டமான திருகோணமலையில் ஆகஸ்ட் 7 படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கொலை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதற்கான சகல அறிகுறிகளும் உள்ளதோடு, எல்லாவற்றுக்கும் மேலாக இது குறைந்தபட்ஷமேனும் பாதுகாப்புப் படைகளின் மெளன ஆதரவைக் கொண்டதாகத் தோன்றுகிறது.

சர்வதேச பார்வையாளர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்த விவகாரத்தை அவதானித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்துகிறேன்.

இலினொய்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களாகிய நாம், மேலும் தாமதமின்றி இந்த விசாரணையை ஆரம்பிப்பதன் மூலம் தங்கள் கடமைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றோம்.

டொம் மக்கமன்,

தலைவர், சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள், இலினொய்ஸ் பல்கலைக்கழகம். அர்பனா-கெம்பயின்,

இலினொய்ஸ், அமெரிக்கா.

***

திருகோணமலை முல்லிப்பொத்தானையில் ஆகஸ்ட் 7 அன்று சிவப்பிரகாசம் மரியதாஸ் கொலை செய்யப்பட்டதை மிகுந்து அதிர்ச்சியுடனும் கவலையுடனும் அறிந்துகொண்டேன். பாகுபாடின்றி தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு எதிரான சகல அட்டூழியங்களுக்கும் எதிராக வெளிப்படையாக பிரச்சாரம் செய்த ஒரு நபர் என்ற வகையில் அவரது நடவடிக்கைகளைப் பற்றி நான் அறிந்துள்ளேன்.

மரியதாஸ் தமது உறுதியான சோசலிச நிலைப்பாட்டிலும் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பதிலும் உலகறிந்த சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளராகும். நான் இந்தக் குற்றச் செயல் தொடர்பாக பொருத்தமான உடனடி விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றேன்.

எம்.ஜி.ஏ. குரே,

சர்வதேச உறவுகள் தொடர்பான பேராசிரியர், கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை.

***

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும், உலக சோசலிச வலைத் தளமும், அவர்களது ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ் ஆகஸ்ட் 7ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

மத்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் என்ற வகையில், நான் இந்தப் படுகொலையை கடுமையாகக் கண்டனம் செய்வதோடு என்னுடைய கடும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறேன்.

சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், இந்தப் படுகொலை இலங்கை இராணுவ உறுப்பினர்கள் பொலிஸ் அல்லது அவர்களுடன் இணைந்த துணைப்படைகளாலோ மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் தோன்றுவதாகக் குறிப்பிட்டுள்ளன. உண்மைகளை ஆய்வு செய்யும் போது அவர்களது சந்தேகம் நியாயமானது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

மத்திய வங்கி ஊழியர் சங்கம், தற்போது இடம்பெறும் கடத்தல்கள், கொலைகள், பத்திரிகையாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பாகவும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதோடு கடும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஆகஸ்ட் 7 நடந்த மேற்குறிப்பிட்ட படுகொலை தொடர்பாக விசாரணையாளர்களால் எந்த விதமான சான்றுகளையும் பெற முடியவில்லை என தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பதில் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குற்றவாளிகளை கைது செய்வதை தவிர்ப்பதையும் மற்றும் இந்தக் குற்றத்தை மூடி மறைப்பதையுமே காட்டுகிறது.

மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் என்ற வகையில், நான் இத்தகைய நடவடிக்கைகளை வன்மையாக எதிர்ப்பதோடு இந்தப் படுகொலை தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோருகின்றேன்.

எம்.ஜி. கிரிபண்ணடா,

தலைவர், மத்திய வங்கி ஊழியர் சங்கம், இலங்கை.

***

சோ.ச.க. யின் ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ் ஆகஸ்ட 7 முல்லிப்பொத்தானையில் சுட்டுக் கொல்லப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். மரியதாஸ் சோ.ச.க. யின் ஆதரவாளர் என்ற வகையில், தொழிலாள வர்க்க நிலைப்பாட்டில் இருந்து யுத்தத்தை எதிர்ப்பவராவார். அவர் யுத்தத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டில் வெளிப்படையாக இருந்தமையே இந்தப் படுகொலைக்கு பிரதான காரணமாகும்.

ஆரம்பத்தில் இருந்தே யுத்தத்திற்கு எதிரான சோ.ச.க.யின் நிலைப்பாடானது கொழும்பில் உள்ள முதலாளித்துவ அரசாங்கம், அதே போல் பிரிவினைவாத விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டிற்கும் மாறானது. "வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்று" என்றக் கோரிக்கையின் கீழ், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடும் ஒரு சர்வதேச சோசலிச இயக்கமே சோ.ச.க. ஆகும். இந்த அரசியல் தூரதிருஷ்டியையே மரியதாசும் கொண்டிருந்தார்.

இந்தப் படுகொலையின் குறிக்கோள், யுத்தத்திற்கும் மற்றும் கொழும்பு ஆளும் தட்டால் முழு தீவையும் இராணுவமயமாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதற்கும் எதிரான எல்லா நிலைப்பாடுகளையும் மெளனமாக்குவதும் அச்சுறுத்துவதுமாகும்.

முழுமையான மற்றும் உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.

தர்மசிரி பண்டாரநாயக்க,

இலங்கை

(தர்மசிறி பண்டாரநாயக்க இலங்கையில் ஒரு முன்னணி திரைப்பட மற்றும் மேடை இயக்குனராவார்.)

***

கிழக்கு மாவட்டமான திருகோணமலையில் 2006 ஆகஸ்ட் 7 அன்று இரவு சிவப்பிரகாசம் மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக முழுமையாக விசாரணை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கவே நான் இதை எழுதுகின்றேன்.

இந்தப் படுகொலை ஒரு யுத்தப் பிரதேசத்திலேயே நடந்துள்ளது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இப்பிரதேசம் இலங்கை பாதுகாப்புப் படைகளின் ரோந்து நடவடிக்கைளுக்கு உட்படும் பிராந்தியமாகும். கொலையாளி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதோடு அவன் அந்த பிரதேசம் ஊடாக அமைக்கப்பட்டுள்ள குறைந்தபட்சம் ஏதாவது ஒரு காவல் அரனையேனும் கடந்தே சென்றிருக்க வேண்டும். எனவே கொலையாளியை புலி உறுப்பினர் அல்லது அதன் ஆதரவாளர் என்றோ வலியுறுத்துவது நம்பகமானதல்ல.

இதுவரையிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள முறையை நான் வன்மையாகக் ஆட்சேபிப்பதோடு பொறுப்பாளிகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பபட வேண்டும் என கோருகிறேன். இந்த குரூர குற்றமோ அல்லது உங்களது விசாரணையோ மறக்கப்படமாட்டாது. உலகம் இதை அவதானித்துக் கொண்டிருக்கிறது.

ஹேர்மன் ரொகர்ஸ் ஜூனியர்

லாஸ் வெகாஸ், அமெரிக்கா.

***

கட்சி ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் படுகொலையை விசாரிக்க கோரும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை நான் பலமாக ஆதரிக்கின்றேன். மரியதாஸ் கிழக்கில் திருகோணமலைக்கு அருகில் உள்ள கிராமப்புற நகரான முல்லிப்பொத்தானையில் ஆகஸ்ட் 7 அவரது வீட்டிலேயே வைத்து துப்பாக்கிதாரியால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மகாலிங்கம் வேலு,

யாழ்ப்பாணம், இலங்கை.

***

இலங்கையில் காட்டுத் தர்பார் நிறுத்தப்பட வேண்டும். சிவப்பிரகாசம் மரியதாஸை கொலை செய்தவர்கள் நொண்டிச் சாட்டுகளின்றி நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டும். "இலங்கையில் சட்டத்தை ஆளுபவர்கள்" என சொல்லப்படுபவர்கள், கொலையாளியை பிடிக்கும் தமது முயற்சியில் அக்கறையாகவும் உண்மையாகவும் நடந்துகொண்டால், உண்மையை காண்டுபிடிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன. மிக அருகில் உள்ள மிக அன்புக்குரியவர் ஒருவர் கொடூரமாக நெருக்கமான நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பெற்றோர், மனைவி மற்றும் பிள்ளைகளினதும் உணர்வுகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எப்பொழுதும் தப்பிக்கொள்ள முடியும் என நீங்கள் கனவு கண்டாலும், உங்களால் நீண்ட காலத்திற்கு நீதியில் இருந்து தப்ப முடியாது. எங்களை மிஞ்சிய சக்தி ஒன்று உள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.

சுந்தரி ராமலிங்கம்.

***

சிவப்பிரகாசம் மரியதாசின் படுகொலை தொடர்பாக இதுவரையிலும் ஆக்கப்பூர்வமான பொலிஸ் விசாரணை நடைபெறவில்லை என்பதையிட்டு எனது ஆத்திரத்தை வெளிப்படுத்தவும் மற்றும் இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என கோருகவதற்காகவும் இக்கடிதத்தை எழுதுகின்றேன். இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்திற்கு எதிராக தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களின் ஐக்கியத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளரே சிவப்பிரகாசம் மறியதாஸ் ஆவர். தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களின் மலிவு உழைப்பில் தேசிய மற்றும் பல்தேசிய கம்பனிகள் முன்னேற்றமடையும் அதே வேளை, தொழிலாளிக்கு எதிராக இன்னொரு தொழிலாளியை இருத்தி, தமது பிரித்து ஆளும் வேலைத் திட்டத்தை குறுக்கே வெட்டித்தள்ளுவதாலேயே சோ.ச.க. யின் முன்னோக்கை இலங்கை அரசாங்கமும் இராணுவமும் விரும்புவதில்லை.

அவரது கொள்கை நிலைப்பாட்டின் காரணமாகவே அவர் குறிவைக்கப்பட்டுள்ளார் என்பதில் சந்தேகம் கிடையாது. அவர் ஒரு புலி உறுப்பினர் என்ற போலி குற்றச்சாட்டுக்களை இராணுவம் பரப்பிக்கொண்டிருப்பதும் ஆச்சரியத்திற்குரியதல்ல. முதலாவதாக தமிழர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தை எதிர்ப்பவரை ஒரு புலிகள் இயக்க உறுப்பினர் என மறைமுகமாகக் குறிப்பிடுவதானது, அரசாங்கத்தை எதிர்க்கும் எவரும் இந்த வகையிலேயே நடத்தப்படுவார் என்பதாகும். இரண்டாவதாக புலிகளின் நம்பிக்கைத் துரோக மற்றும் உயிரிழந்த முன்னோக்குடன் சோ.ச.க. யின் கொள்கை ரீதியான போராட்டத்தை ஒப்பிடுவதானது சோ.ச.க. யின் போராட்டத்தைப் பற்றி உழைக்கும் மக்களை குழப்பத்திற்குள்ளாக்க முயற்சிப்பதாகும்.

உண்மையான ஜனநாயகத்தின் ஆதரவாளர் என்ற வகையில், கொள்கைப் பிடிப்பான இந்த மனிதனின் கொலையுடன் சம்பந்தப்பட்ட கொலைகாரக் காடையர்களை கண்டுபிடித்து விசாரணை செய்வதில் எந்த பின்வாங்கலும் இருக்கக் கூடாது என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஸ்டீவ் பொலொக்,

மெல்போர்ன், ஆஸ்திரேலியா