World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காA damning admission: New York Times concealed NSA spying until after 2004 election ஒரு நாசகரமான ஒப்புக் கொள்ளுதல்: 2004 தேர்தலுக்கு பின்னர் NSA ஒற்றுவேலை பார்த்ததை நியூயோர்க் டைம்ஸ் மறைத்துவிட்டது By David Walsh and Barry Grey புஷ் நிர்வாகத்தின் சட்டவிரோத உள்நாட்டு ஒற்றுவேலை பார்த்தல் தொடர்பான விடயத்தை 2004 தேர்தல் வரை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்ததாகவும், அதன் பின்னர் அதைப் பற்றிப் பொய்யுரை கூறியதாகவும் நியூயோர்க் டைம்ஸின் பொதுநல ஆசிரியரான பைரன் காலாமே ஆகஸ்ட் 13 அன்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். டிசம்பர் 16, 2005 அன்று ஆயிரக்கணக்கான தொலைபேசிக் மற்றும் மின்னஞ்சல்கள் ஆகியவற்றை அமெரிக்கா முழுவதும் நீதிமன்ற ஒப்புதல் இல்லாமலே தேசிய பாதுகாப்பு அமைப்பிற்கு கண்காணிக்க ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார் என்று டைம்ஸ் தகவல் கொடுத்திருந்தது. அந்த நேரத்தில் புஷ் நிர்வாகத்தின் வலியுறுத்தலின்பேரில் இத்தகவலை "ஓராண்டுவரை" அம்பலப்படுத்தாமல் இருந்ததால்தான் தாம் அதை வெளியிடுவதை நிறுத்தியிருந்தது என்றும் இது கூறியுள்ளது. இந்த காலவரையறை செய்தித்தாள் இது வெளியிடப்படுவதை எடுத்த முடிவிற்கு காரணம் 2004 ஜனாதிபதி தேர்தல்களினால் என்பதை காட்டுகிறது. இப்படிப்பட்ட தாமதமே மன்னிக்க முடியதாதாகும்: இது ஆத்திரமூட்டும் விமர்சனத்தை தூண்டியுள்ளது. நிர்வாக ஆசிரியர் பில் கெல்லருடன் கலாமே நடத்திய பேட்டியில் இருந்து, பின்னர் வெளிவந்த கட்டுரையின் வரைவுகள் பற்றிய டைம்ஸின் உள்விவாதங்கள் நவம்பர் 2, 2004 தேர்தல்களுக்கு முன்பு "பல வாரங்கள் நீடித்திருந்தன" என்று அறிகிறோம். இத்தேர்தல் புஷ்ஷிற்கு ஒரு வெற்றியைக் கொடுத்திருந்தது. "இந்த வழிவகையில் புஷ் நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுக்களும் உள்ளடங்கியிருந்தன" என்று பொதுநல ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். கட்டுரை பற்றிய ஒரு புதிய வரைவு தேர்தலுக்கு "ஒரு வாரத்திற்கும்" குறைவான நேரத்தில் விவாதிக்கக்கூடிய பொருளாக இருந்தது. இங்கு தொடர்புடையது முக்கிய வேட்பாளர்கள் ஒருவர் செய்திருக்கக் கூடிய சிறுவகையிலான பாலியல் ஊழலோ, அறநெறிப்பிறழ்வோ அல்ல. ஒரு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த, அடிப்படை ஜனநாயக உரிமைகள், குடியுரிமைகள் என்று அரசியல் அமைப்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளவற்றின் ஆழ்ந்த தன்மையை பாதிக்கும் பிரச்சினையாகும். இருக்கும் ஜனாதிபதி வாடிக்கையாக, நீதிமன்ற ஆணைகள் முறையாக இல்லாமல், அமெரிக்க குடிமக்களின் தொடர்பு முறை மற்றும் தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக ஒட்டுக் கேட்பதற்கு சட்டத்தை மீறும் வகையில் செயல்பட்டார் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளுவதற்கு அனைத்து உரிமையும் உண்டு. இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் ஓரளவிற்கு குறைந்த அளவு நடைபெற்ற ரிச்சார்ட் நிக்சன் காலத்தில், அவர் மீது கொண்டுவந்த பெரிய குற்றச்சாட்டில் இரண்டாம் விதியின்படி "அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது" என்ற தலைப்பில் ஜூலை 1974ல் பிரதிநிதிகள் மன்றத்தின் நீதிக் குழுவின் ஒப்புதலின்பேரில் சேர்க்கப்பட்டிருந்தது; அதற்கு மறுமாதம் இது நிக்சனுடைய இராஜிநாமாவிற்கும் வழிவகுத்தது என்பதை டைம்ஸ் நன்கு அறியும். செப்டம்பர் 11, 2001க்கு பின்னர் புஷ்ஷினால் இசைவு கொடுக்கப்பட்ட NSA ஒற்று வேலை, 1978ம் ஆண்டு வெளிநாட்டு உளவுத்துறை பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதாக அமைத்துள்ளது; இச்சட்டம் வாட்டர்கேட் ஊழலுக்கு பிறகு, தன்னுடைய அரசியல் விரோதிகளுக்கு எதிராக தொலைபேசி ஒட்டுக் கேட்பு, தடை ஆகியவற்றை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் செய்யுமாறு நிக்சன் கொடுத்த உத்தரவிற்கு எதிராக 9/11க்கு பின்னர் சட்டமன்ற ஒப்புதல் இல்லாமல் புஷ் நிர்வாகத்தால் குறிப்பிடத்தக்கவகையில் இயற்றப்பெற்றது. (டிசம்பர் 2005ல் டைம்ஸ் புஷ் நிர்வாகத்தின் சில செயல்களை அம்பலப்படுத்தியபோது, சட்டமன்றத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் திட்டம் செயல்படுத்தப்பட்டதை பற்றிக் கூறப்பட்டனர் என தெரியவந்த நிலையில் ஜனநாயக, மற்றும் குடியரசுக் கட்சிகள் இது பற்றி மெளனமாக இருந்தனர்.) கடந்த வாரம் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி NSA திட்டத்தை நிறுத்துமாறு உத்தரவிட்ட தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளபடி, இது அரசியல் அமைப்பின் நான்காம் திருத்தத்தையும் மீறுவது ஆகும்; அதன்படி காரணத்திற்கு பொருந்தாத சோதனைகள், கைப்பற்றல்கள், தடுத்துவைத்தல் உட்பட்டவை ஆகும்; அதே போல் தடையற்ற பேச்சுரிமையை காக்கும் முதல் திருத்தத்தையும் இது மீறுவதாகும். NSA உடைய ஒற்று நடவடிக்கை, அமெரிக்க மக்களுடைய ஜனநாயக உரிமைகள் மீது பாரியளவில், முன்னோடியில்லாத தாக்குதலின் முக்கிய கூறுபாடு ஆகும்; ஏறத்தாழ ஜனாதிபதியின் சர்வாதிகாரத்தை நிறுவதலுக்கு ஒப்பான புஷ் நிர்வாகத்தின் உந்துதலின் தொடர்பை இது கொண்டுள்ளதாகும்.200 4 இலையுதிர்காலத்தில், மீண்டும் தேர்தலுக்கு நின்ற ஒரு சட்ட நெறியற்ற ஜனாதிபதியின் அழுத்தத்தின் பேரில், டைம்ஸ் வாக்காளர்களிடம் இருந்து இந்த கண்காணிப்பு திட்டம் நடைமுறையில் இருப்பதை மறைக்க விழைந்தது. இந்த முடிவின் வரலாறு மற்றும் அதை மறைக்கமுற்பட்டதின் தன்மை பலவற்றை வெளிப்படுத்துகின்றன."ஒட்டுக்கேட்டலும் தேர்தலும்; நேரம் பற்றிய வினாவிற்கு ஒரு விடை" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 13 அன்று எழுதிய தன் கட்டுரையில் கலாமே புஷ் நிர்வாகத்தை பற்றி ஏராளமான குறைகூறும் வாசகர்கள் கூட குறிப்பிடத்தக்க வகையில் [டைம்ஸில் முதலில் வந்த] கட்டுரையில் டிசம்பர் 16, 2004 வரையிலான ஓராண்டிற்குத்தான் என்பதற்கு கூறப்பட்ட தாமதத்திற்கான காரணத்தை பற்றி சந்தேகத்துடன் இன்னமும் இருக்கிறார்கள்" என்று எழுதியுள்ளார். உள்நாட்டு ஒற்று விவகாரம் தகவல் கொடுக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டதற்கு எப்பொழுது முடிவு எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக எழுந்த பல எதிர்ப்புக்கள் மற்றும் விசாரணைகளை அடுத்தே வந்திருக்க வேண்டும் என்பது கலாமேயின் கட்டுரையின் மூலம் தெளிவாகிறது. இப்படி இவர் ஒப்புக் கொள்ளுவதே ஏற்பட்ட சேதத்தை மட்டுப்படுத்தும் ஒரு முயற்சிதான். தன்னுடைய ஆகஸ்ட் 13 கட்டுரையில் இரண்டாம் பத்தியில் கலாமே கேட்பதாவது: "2004 நவம்பர் 2 ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் வெளியிட்ட தகவலில் தாமதம் பற்றி டைம்ஸ் தன்னுடைய வாசகர்களிடம் தவறான தகவல் கொடுத்தா?" பொதுநல ஆசிரியர் நேரடியாக இதைப்பற்றி விடை கொடுக்க அக்கறை காட்டாவிட்டாலும், அதுவும் அவருடைய கண்டுபிடிப்புகளை ஒட்டி விடை "ஆம்" என்பதுதான். "என்னுடைய ஜனவரிக் கட்டுரையில் எழுப்பப்பட்ட வினாக்கள் பற்றி பதில் கொடுக்க முடியாத திரு.கெல்லர் சமீபத்தில், அதை ஒரு "பழைய விஷயம்" என்றாலும், தாமதம் பற்றி ஒரு பேட்டி கொடுக்க ஒப்புக் கொண்டார். ஆனால் தாமதம் பற்றியும் தேர்தல்கள் பற்றியும் அவர் சில புதிய விஷயங்களை கூறினார். "இப்புதிய விஷயங்களில்" கீழ்க்கண்டவை அடங்கியுள்ளன. " 'தேர்தலுக்கு சற்றே முன்பு இதை வெளியிடுவதா என்பதே உச்ச கட்ட விவாதமாகும்' என்று திரு.கெல்லர் கூறினார். தேர்தலுக்கு முந்தைய விவாதங்களில் நிர்வாக ஆசிரியரான ஜில் அப்ராம்சன், வாஷிங்டன் அலுவலகத்தின் தலைவரான பிலிப் டெளப்மன், தகவல் பற்றிப் பொறுப்புடைய ரெபக்கா கோர்பெட், மற்றும் கட்டுரையின் சக ஆசிரியர்களில் ஒருவரான திரு.ஜேம்ஸ் ரிசன் ஆகியோரும் அடங்கியிருந்தனர். வெளியீட்டாளரான ஆர்தர் சல்ஸ்பெர்கர் ஜூனியருக்கு இது பற்றி தகவல் கொடுக்கப்பட்டது; ஆனால் கதையை வெளியிடுவது பற்றிய இறுதி முடிவு அவரால்தான் என்று திரு கெல்லர் கூறியுள்ளார். "கட்டுரையை நிறுத்திவைக்கும் தேர்தலுக்கு முந்தைய தன்னுடைய முடிவைப் பற்றி திரு.கெல்லர் விளக்கி கூற மறுத்துவிட்டார்; ஆதாரங்களின் இரகசியம் காக்கப்பட வேண்டிய கட்டாயங்களுக்காக செய்யப்பட்டதாக கூறினார். வெளியீடு தாமதமானதற்கான முக்கிய காரணம் இதில் தொடர்புடைய ஒவ்வொருவரும் திட்டத்தின் சட்டத் தன்மையை பற்றி திருப்தி அடையவேண்டும் என்று நிர்வாகம் கருதியதால்தான் என்று அவர் பலமுறையும் குறிப்பிட்டார். இதன் பின்னர் திட்டத்தின் சட்டநெறி "பற்றிய பிரச்சினை அரசாங்கத்திடம் நாங்கள் முன்னர் உணர்ந்திருந்தைவிட மிகப் பெரிய அளவில்" பிரச்சினைகளாக இருந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்." இந்தக் குறிப்பை நம்பினால், கெல்லரும் அவருடைய கூட்டாளிகளும் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாண உள்நாட்டு கண்காணிப்பு நடவடிக்கை பற்றிய சட்டபூர்வ தன்மை பற்றி புஷ் நிர்வாகத்தின் வாதங்களை ஏற்கத் தயாராக இருந்தனர் என்பது தெரியவரும். டைம்ஸின் உயர்மட்டம் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான பாதாள அரசியல் எழுச்சியுற்ற அரசாங்கத்தின் பேச்சைத்தான் பெரிதும் கருத்திற் கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. களவெடுத்த தேர்தல் மூலம் புஷ் நிர்வாகம் சட்டவிரோதமாக பதவிக்குவந்தது மட்டுமல்லாது, ஆத்திரமூட்டப்படாத ஈராக் மீதான இரத்தம் தோய்ந்த யுத்தத்தினுள் அமெரிக்க மக்களை இழுத்துச்செல்வதற்கு பொய்யின் மீது பொய் கூறியது. "சான்றாக விளங்கும் செய்தித்தாள்" என அறிவித்துக் கொள்ளுவது ஒரு புறம் இருக்க, கெல்லர் மிகவும் நிரபராதியாக இருக்க வேண்டும் அல்லது அரசியல் உண்மைகளை பற்றி அறியாமையில் இருக்க வேண்டும், அப்படியானால் எவ்வித செய்தித்தாளுக்கும் ஆசிரியராக இருக்கும் தகுதி அற்றவர் என்பதைத்தான் இது காட்டுகிறது. 2005TM டைம்ஸின் மனமாறுதலை பொறுத்த வரையில், கெல்லர் சமீபத்தில் தனக்கு "முந்தைய நிலை டிசம்பர் 2005க்கு பின்னர் எப்படி மாறியது என்பதை விளக்கியும் என்னை பொறுத்தவரையில் தேர்தலுக்கு முந்தைய நிலைமை பற்றி புதிய விளக்கத்தை கொடுத்தது. நாளேட்டின் தேர்தலுக்கு முந்தைய ஆதாரங்கள் போதுமான அளவு "உயர்ந்த இடம், நம்பகத்தன்மை" கொண்டிருக்கவில்லை ஆதலால், திட்டத்தின் சட்ட நெறி, மேற்பார்வை ஆகியவை பற்றிய பிரச்சினைகளில் நம்பிக்கை கொடுக்கவில்லை; எனவே "அதை வெளியிடுவதற்கான பொறுப்பை ஏற்க இயலவில்லை' என தனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளதாக கலாமே எழுதியுள்ளார். ஆனால் டிசம்பரில் அவர் எழுதியதாவது: "இப்பொழுது நமக்குச் சில புதிய நபர்கள் கிடைத்துள்ளனர்; இவர்களை அதிருப்தி அடைந்த அதிகாரத்துவத்தினர் என்றோ பயங்கரவாதத்தின் மீதான புறாக்கள் என்றோ, நாங்கள் வெளியிடக்கூடாது எனக் கூறுபவர்கள் கூறமுடியாது. இது ஒரு பெரிய விஷயம்." இப்படிப்பட்ட வெளிப்பார்வைக்காக கூறப்படும் நியாயப்படுத்தலே நாசகரமானது ஆகும். ஒரு இரகசிய திட்டம் இருந்தது, அது 1978ம் ஆண்டு வெளிநாட்டு உளவுத்துறை பாதுகாப்புச் சட்டத்தின் (FISA) எழுத்து, உயிர்ப்பு ஆகியவற்றை மீறியது. அது ஒரு பாரிய அரசியல் முக்கியத்துவத்தை கொண்டிருந்தது என டைம்ஸிற்கு தெரியும். இல்லாவிடில் புஷ் நிர்வாகம் தகவலை வெளியடக்கூடாது என்று கடும் உறுதியுடன் இருப்பானேன்? அந்தக் காலக்கட்டத்தில் செய்தித் தாள் அறிந்தவரை, குறிப்பாக ஒரு தேர்தலுக்கு முன்பு உள்நாட்டு ஒற்றுவேலை திட்டத்தை பொதுமக்களிடம் இருந்து தெரிவிக்காமல் இருப்பதற்கு வேறு எந்த நம்பத்தகுந்த காரணமும் இல்லை. "பயங்கரவாதத்தின் மீதான புறாக்கள்" என்ற இழிந்த முறையில் கெல்லர் குறிப்பிட்டிருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்; இது கெல்லரும் டைம்ஸில் இருக்கும் எஞ்சிய தலைமையும் நிர்வாகம் வெளியிலும் உள்நாட்டிலும் அடக்குமுறைக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளில் அடிப்படை உடன்பாட்டை கொண்டிருப்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்று கூறப்படுவதை கேள்விக்கு அல்லது சவாலுக்கு உட்படுத்துபவர்கள் டைம்ஸ் ஏட்டினால் அரசியலில் பைத்தியக்காரத்தனமான ஓர் இடத்திற்கு ஒதுக்கப்படுகிறார்கள் என்பதும் தெளிவாகிறது. செய்தித் தாள் பரிசீலனைக்கு உட்படுத்தக் கூடிய உண்மைகள் மற்றும் பிழையற்ற ஆதாரங்கள் பற்றி பெரும் அக்கறையும், மனத் தொய்வும் இல்லாமல் போற்றுகிறது என்று தன்னை விவரித்துக் கொள்ளுவதற்கு, தற்போதைய பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றி இதன் அணுகுமுறையை பார்த்தாலே போதும். கடந்த ஞாயிறன்று டைம்ஸின் தலையங்கத்தை (Hokum on Homeland Security) காண்போம்; இது கீழ்க்கண்ட சொற்றொடருடன் ஆரம்பிக்கிறது: "பிரிட்டிஷ் உளவுத்துறை விமானங்களை தகர்க்கும் நோக்கத்துடன் தீவிரமாக இருந்த பயங்கரவாதிகளை பெரும் திறமையுடன் வளைத்துப் பிடித்ததில் இருந்து...." உண்மையாகவா? லண்டனில் சிறையில் உள்ளவர்கள் "விமானங்களைத் தகர்க்கும் கருத்தில் தீவிரமாக இருந்த பயங்கரவாதிகள்" என்று இவர்களுக்கு எப்படித் தெரியும்?" புஷ்ஷும், இங்கிலாந்தின் உள்நாட்டு மந்திரி ஜோன் ரைட் உம் அவ்வாறு கூறியுள்ளனர் என்பதலா? இதுகாறும் பிரிட்டிஷ் அல்லது அமெரிக்க அதிகாரிகளால் கடுகளவேனும் சான்றுகள் இக்கூற்றை நிலைநிறுத்த கொடுக்கப்படவில்லை. நேற்று வரை குற்றச்சாட்டுக்கள் கூட தாக்கல் செய்யப்படவில்லை; அமெரிக்க செய்தி ஊடகத்திலேயே சில பிரிவுகள் இந்த திட்டத்தை பற்றி அதிக மதிப்பளிக்க கூடாது என்று முடிவெடுத்துள்ளனர்; ஏனெனில் இதற்கு ஆதாரம் இல்லை, இதற்கு பெருகியளவில் மக்களுடைய நம்பிக்கையற்ற தன்மையும் உள்ளது. பெரும் இசைவுடன் கெல்லரை மேற்கோளிட்டு தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு NSA தகவல் பற்றி வெளியிடுவதை நிறுத்தி வைத்த முடிவு "நியாயம் கொண்டிருந்த ஒரு பிரச்சினைதான்" என்று கலாமே கூறியுள்ளார். "ஒரு எதிர்மறையான கட்டுரையினால் பாதிக்கப்படும் வேட்பாளர்கள் (சில நாட்களில் இருந்து ஒரு வார காலம் வரை) வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு போவதற்கு முன்பு தங்கள் விடையிறுப்புக்களை தயார் செய்வதற்கு அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்" என்பதில் தனக்கு உடன்பாடுதான் என்று அவர் கூறியதாக கலாமே கூறுகிறார். தேர்தலுக்கு பல வாரங்கள் முன்பே அடிப்படைத் தகவல் தன்னிடம் இருந்ததை கெல்லர் ஒப்புக் கொண்டார் என்ற உண்மையில் இருந்து விளையும் நயமான கருத்து ஒருபுறம் இருக்க, கலாமேயோ அல்லது கெல்லரோ வாக்களார்களிடமும் "நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்" என்பது பற்றி சிறிதும் அக்கறை காட்டாதது பெரும் வியப்பாகும்; டைம்ஸின் செயலினால் அரசியலமைப்பை குடியரசுக் கட்சி வேட்பாளர் கிழித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியாமலேயே வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குப் போனார்கள். "ஓராண்டிற்குத்தான்" தகவல் நிறுத்திவைக்கப்பட்டது என்ற டிசம்பர்மாதம் வந்த கெல்லரின் நேர்மையற்ற கூற்றைப் பொறுத்தவரையில், "அது அழகுற கூறப்படாத கருத்து" என்ற நிர்வாக ஆசிரியரின் சொற்களை எந்தக் குறிப்பும் இல்லாமல் கலாமே மேற்கோளிட்டுள்ளார். இந்த விவகாரம், பொதுவாகவே ஜனநாயக அரசியல் வாழ்விற்கும் மற்றும் எத்தகைய எதிர்ப்பு பற்றிய சைகைக்கும் விரோதப் போக்கைக் காட்டும் வெள்ளை மாளிகை, மற்றும் ஆளும் உயரடுக்கின் மிகவும் இரக்கமற்ற பிரிவினருக்கும் நிபந்தனையற்ற முறையில் அடிபணிந்த டைம்ஸின் கோழைத்தனத்திற்கு மிகப் பெரிய மற்றொரு ஒரு உதாரணமாகும். இன்னும் பரந்த அளவில், டைம்ஸ் நடந்து கொண்ட முறை அமெரிக்க மக்கள் செய்தி ஊடகம் ஓர் அரசாங்கக் கருவியாக முழுமையாக இணைந்து கொண்டுள்ளதை பற்றி நிறையவே தெரிவிக்கிறது. அரசாங்கத்தின் பிரச்சார கருவியின் பிற்சேற்கையாக எந்த அளவிற்கு செய்தி ஊடகம் செயல்படுகிறது, அரசாங்கத்தின் குறிப்பிற்கு ஏற்ப உண்மைகளை மறைத்தல் அல்லது சிதைத்தல் ஆகியவற்றில் ஈடுபடுகிறது என்பதையும் காட்டுகிறது. |