World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

WSWS correspondent to address international conference on the Spanish Civil War

ஸ்பானிய உள்நாட்டுப் போர் பற்றிய சர்வதேச மாநாட்டில் உலக சோசலிச வலைத்தள நிருபர் உரையாற்றுகிறார்

24 November 2006

Back to screen version

உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபரான ஆன் டால்போட் நவம்பர் 27-29, 2006ல் மாட்ரிட்டில் நடக்க இருக்கும் ஸ்பெயினின் உள்நாட்டுப் போர் பற்றிய சர்வதேச மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

1975ல் ஸ்பெயினின் சர்வாதிகாரி ஜெனரல் பிராங்கோ காலமானதை அடுத்து அமைதி உடன்பாடு ஏற்பட்டபொழுது கேள்விக்குள்ளாக்கப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், உள்நாட்டுப் போர் நடந்து 70 ஆண்டுகளுக்கு பின்னர், இம்மாநாடு நடைபெறுகிறது. இடதுபுறம் நகரும் ஒரு புதிய தலைமுறை அரசியல் வாழ்வில் முன்னணிக்கு வந்துள்ள நிலையில், பிராங்கோவினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தங்கள் உறவினர்களுக்கு என்ன ஆயிற்று என்பதை கண்டு பிடிக்க முயன்று வருகின்றமையால் உள்நாட்டுப் போர் ஸ்பெயின் நாட்டில் ஓர் எரியும் பிரச்சினையாக ஆகியிருக்கிறது.

உலக சோசலிச வலைத் தளத்திற்கு இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு வந்துள்ள அழைப்பு, தற்போதைய அரசியல் நிகழ்வுகள் மற்றும் அதேபோல வரலாற்று வர்ணனைகளையும் மற்றும் ஒரு மார்க்சிச முன்னோக்கிலிருந்து ஆய்வுகளையும் அக்கறையுடன் கூறும் வளம் என்ற அதன் புகழிற்கு சான்று ஆகும்.

Spanish Distance Learning University (UNED), ஸ்பெயின் தொலைதூரக் கல்விப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சான்டோஸ் ஜூலியாவினால் இம்மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. UNED யில் சமூக வரலாறு மற்றும் அரசியல் சிந்தனையின் பேராசிரியராக உள்ள சான்டோஸ் ஜூலியா, A History of Modern Spain and Historia de las dos Espanas (History of the Two Spains) என்ற நூல்களை எழுதியுள்ளார். மாநாட்டில் முக்கிய உரையாற்றுபவர்களில் Spanish Tragedy: Civil War in Perspective ஐ எழுதிய ஷிவீக்ஷீ ஸிணீஹ்னீஷீஸீபீ சிணீக்ஷீக்ஷீ, ணிறீ ஷீக்ஷீஷீ மீsஜீணீமஷீறீ மீஸீ றீணீ ரீuமீக்ஷீக்ஷீணீ நீவீஸ்வீறீ என்னும் நூலை எழுதிய ஏஞ்சல் வினஸ், Blood of Spain: An Oran History of Spanish Civil War ஐ எழுதிய Ronald Fraser, மற்றும் Spanish Republic and the Civil War என்னும் நூலை எழுதிய Gabriel Jackson ஆகியோரும் அடங்குவர்.

ஆன் டால்போட்டின் ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு "Republican Spain and the Soviet Union: Politics and Foreign Intervention in the Spanish Civil War, 1936-39" என்பதாகும். இது சோவியத் ஒன்றியத்திற்கும் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையே இருந்த உறவின் அரசியல் தன்மை பற்றிய பிரச்சினையை பற்றிப் பேசுவதுடன், குடியரசு ஸ்பெயின் சோவியத்தின் மீது நம்பியிருக்க வேண்டிய காரணங்களை ஆராயவும் சார்ந்திருந்ததின் விளைவுகளையும் கூறுகிறது. நன்மையோ, தீமையோ சோவியத்தை ஸ்பெயின் நம்ப வேண்டியிருந்ததற்கு காரணம் குடியரசு சர்வதே அளவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது, சோவியத் ஒன்றியம் ஒன்றுதான் இதற்கு ஆயுதங்கள் தரத் தயாராக இருந்தது என்பது இதுகாறும் கூறப்பட்டுவந்த காரணம் ஆகும். சோவியத் ஒன்றியத்தை ஒரு நட்பு நாடு என்று கருதினாலும், கொள்ளை அடித்த சந்தர்ப்பவாத நாடு என்று நினைத்தாலும், இந்த உறவு எப்படியும் தவிர்க்க முடியாததாகப் போயிற்று. இந்த ஆய்வுக் கட்டுரை அம்மரபு வகைச் சிந்தனையை சவாலுக்கு விடக்கூடிய வகையில் புதிதாக கிடைத்துள்ள ஆவணங்களை பயன்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் குடியரசு தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், அது ஒரு சக்திவாய்ந்த புரவலர் நாட்டை நம்பியிருக்க வேண்டியதில்லை என்று டால்போட் வாதிடுகிறார். ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாடு தன்னுடைய உள்நாட்டு சமூக இருப்புக்களை பிரான்ஸ் 1790 களில் பயன்படுத்தியதைப் போல் அல்லது சோவியத்தே உள்நாட்டுப் போர்க்காலத்தில் பயன்படுத்தியதைப் போல் செய்திருக்கலாம் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த இரு நாடுகளும் ஒரு புரட்சியை அனுபவித்தன; ஆயினும் கூட வெளியுதவியை நாடவில்லை; இருப்பினும் இரண்டுமே அந்நிய வல்லரசுகளின் ஒரு கூட்டணியை தோற்கடிப்பதில் வெற்றி கண்டன; அக்கூட்டணியோ ஆட்சியின் உள் எதிர்ப்பாளர்களுக்கு இராணுவ மற்றும் நிதிய ஆதரவைக் கொடுத்திருந்தது.

இரு நாடுகளும் தங்கள் புரட்சிகளில் சமூக சக்திகளை இழுத்துக் கொள்ள முடிந்தது. பிரான்ஸ் மக்கட்திரட்டின் சக்தியைக் கண்டறிந்தது: சோவியத் ஒன்றியம், செம்படையை அபிவிருத்தி செய்தது. இவை புது வகையிலான இராணுவங்களாகும்; அவை தங்களுடைய உந்துதல்களுக்கு இராணுவவீரர்கள் ஒரு புதிய சமூக ஒழுங்கு மற்றும் சொத்துரிமை உறவுகள் ஆகியவற்றின் பால் கொண்ட ஆழ்ந்த ஈடுபாட்டை நம்பியிருந்தன இரண்டு போர்களுமே அவ்விதத்தில் சமூகப் புரட்சியின் தொடர்ச்சியாக இருந்தன.

ஸ்பானிய குடியரசு அரசாங்கம் மற்றொரு அரசின் மீது முழுமையாக தன்னை ஒப்படைத்திருந்தது என்பது சர்வதேச உறவுகளின் நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் எழவில்லை, மாறாக ஸ்பெயின் நாட்டிற்குள்ளேயே இருந்த சமூக இயக்கவியலில் இருந்தும் ஸ்பானிய குடியரசுத் தலைவர்களின் பொது நலன்களிலிருந்தும் ஸ்பெயினில் எழுச்சி பெற்றுவந்த சமூகப் புரட்சியை நசுக்குவதில் சோவியத் அதிகாரத்துவத்தின் நலன்ன்களிலிருந்தும் தோன்றியது என்று டால்போட் வாதிடுகிறார்.

சோவியத் ஆவணக்காப்பங்களில் இருந்து இப்பொழுது கிடைக்கும் தகவல்கள் மற்றும் பிரிட்டிஷ், அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகள் அண்மையில் வெளியிட்ட ஆவணங்கள் இவற்றின் அடிப்படையில், சோவியத் ஒன்றியம் ட்ரொட்ஸ்கியுடன் அடையாளம் காணப்பட்டிருந்த எதிர்ப்புக் கூறுபாடுகளை நசுக்குவதற்கு முற்பட்டிருந்தது என்பதை டால்போட் நிருபணம் செய்கிறார் இரக்கமற்ற பிரச்சாரவகை பொய்களை கையாண்டு, இடதுசாரி எதிரிகளை பாசிஸ்ட்டுக்கள் என்றும் கெஸ்ட்டோப்பாவின் முகவர்கள் என்றும் முத்திரையிட்டு, போலியான சான்றுகள் தயாரிப்பு, கடத்தல்முறை, சித்திரவதை, கொலை ஆகியவற்றையும் சோவியத்ஒன்றியம் பயன்படுத்தியது. இடைநிலைவாத POUM (Workers Party of Marxist Unification), இன் தலைவரான ஆண்ட்ரே நின், ட்ரொட்ஸ்கியின் செயலாளரான எர்வின் வொல்ப் இருவரும் சோவியத் இரகசிய போலீசான GPU வினால் படுகொலை செய்யப்பட்டனர்; அதேபோல் Kurt Landau என்னும் ஆஸ்திரிய சோசலிஸ்ட்டும் கொலையுண்டார். மாஸ்கோவின் குறிக்கோள் ஒரு வளர்ச்சியுறும் புரட்சியை ஒடுக்குதல், அதன் முன்னணி பிரதிநிதிகளை உடலளவில் அழித்துவிடுதல் மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகளின் பரந்த அடுக்குகளை அசுறுத்தல், அவர்களுடைய புரட்சி விழைவுகள் அரசியல்ரீதியாக நனவான வடிவத்தை அடைவதிலிருந்து தடுத்தலாக இருந்தது.

ஸ்பானிய உள்நாட்டுப் போர் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படை அரசியல் கூறுபாடுகளை நிர்ணயித்த மகத்தான நிகழ்வுகளில் ஒன்றாகும்; மேலும் அந்நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட அரசியல் பிரச்சினைகள் இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன, நாம் வாழும் இன்றைய உலகிலும் முக்கியமான செல்வாக்கு உடையவைகளாக திகழ்ந்து வருகின்றன என்பதற்கு ஒரு உதாரணமாகும். ஸ்பானிய புரட்சி வெற்றி பெற்றிருந்தால், முற்றிலும் வேறுபட்டிருந்த இருபதாம் நூற்றாண்டை கண்டு வேறுவித உலகில் வாழ்ந்திருப்போம். ஆகையால் ஸ்பானிய உள்நாட்டுப் போரை விவாத அரங்கிற்குக் கொண்டுவருவது என்பது வர்க்க நனவின் அபிவிருத்திக்கு மிகவும் தேவையான வரலாற்று நனவை அபிவிருத்தி செய்வதில் மிக முக்கிய பங்கை கொண்டதாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved