WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India's policy on Special Economic Zones under fire
இந்தியாவின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு
By Jake Skeers
27 October 2006
Use this
version to print | Send this link by
email |
Email the
author
எட்டு மாதங்களுக்கு முன்னர் இந்திய அரசாங்கத்தின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
(SEZ)
சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது வரும் தசாப்தங்களுக்கான இந்தியாவின்
பொருளாதாரத்தையும் உள்கட்டமைப்பு வசதிகளையும், நவீனமயமாக்குவதற்கு ஒரு அச்சாணியாக பணியாற்றும் என்று
கூறப்பட்டது. ஆனால் இன்றைய தினம் SEZ
சட்டம் ஒரு தோல்வி என்று ஏற்கனவே அரசியல் விமர்சகர்களும் வர்த்தக
நிறுவனங்களும் முத்திரை குத்தியுள்ளன.
சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்கட்டமைப்பு
வசதிகளிலும் ஏற்றுமதிகளிலும் நிலவுகின்ற இடைவெளியை நிரப்புகின்ற வகையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள்
பெரிய அளவில் பாய்வதை உருவாக்கும் மற்றும் பெரும் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் என்று வர்த்தக மந்திரி
கமல்நாத்தால் ஊக்கமளிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம், நிறுவனங்களுக்கு உரிமங்கள் பெறுகின்ற
விதியிலிருந்து விலக்கு அளித்தல், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தீர்வைகளில் விலக்கு அளித்தல், இலாபங்களை
சுதந்திரமாக திருப்பி அனுப்ப அனுமதி அளித்தல் இவற்றின் மூலம் இம்மண்டலங்களுக்கு நிறுவனங்களை ஈர்க்க முயன்றது.
வர்த்தக அமைச்சகத்தின் வலைத் தளம் SEZ
அமைப்புப்பற்றி "அவை வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும் தீர்வைகள் மற்றும்
காப்பு வரிகள் இவற்றுக்கான வெளிநாட்டு எல்லைபோல் தீர்வைகள் இல்லா பகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன"
என்று விளக்கம் தந்துள்ளது.
இவை தவிர, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்குள் செயல்படும் நிறுவனங்களுக்கு
முதல் 5 ஆண்டுகள் வரி விதிப்பிலிருந்து விலக்கு தரப்படுகிறது. மற்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசாங்கம் 50
சதவீதம் வரிக்குறைப்பை அனுமதிக்கிறது, SEZ-ஐ
அபிவிருத்தி செய்பவர்கள் பத்து ஆண்டுகள் வரை வரிவிலக்கு பெறுகிறார்கள்.
வர்த்தக அமைச்சகம் தொடர்ந்து சிறப்பு பொருளாதார மண்டலங்களை முன்னெடுத்து
வைத்தாலும், சர்வதேச நிதி நிறுவனம்,
இந்தியாவின் நிதியமைச்சகம், மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகிய அமைப்புக்கள்
அண்மைய வாரங்களில் SEZ
கொள்கையை கண்டித்துள்ளன. நீண்டகால அடிப்படையில் இந்தியாவின் செயற்பாட்டை
மேம்படுத்த முடியாத அளவிற்கு மிகச்சிறியவையாக SEZ-கள்
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன அல்லது நூற்றுக்கணக்கில் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன என்று மேலே கூறப்பட்ட
எல்லா அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த SEZ-கள்
ரியல் எஸ்டேட் ஊகவணிகர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அபிவிருத்தியாளர்களுக்கு வரி விதிப்பில் ஓட்டைகளை
உருவாக்குவதைத்தவிர வேறு எதையும் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ஒப்புதல்களை வழங்குவதற்கான வர்த்தக அமைச்சக வாரியம் 181
SEZ-களுக்கு
அங்கீகாரமளித்துள்ளது, மேலும் 128 SEZ-களை
"கொள்கை அளவில்" அங்கீகரித்திருக்கிறது. ஒரு அபிவிருத்தியாளர்
SEZ-ஐ 10
ஹெக்டேர்களில் அமைத்துவிட முடியும். இந்தியாவில் சராசரியாக 420 ஹெக்டேர்களில் மட்டுமே
SEZ-களை
அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் 40,000 அல்லது அதற்கு
மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன.
IMF ஆய்வு இயக்குனர் ரகுராம்
ரஞ்சன் இந்தியாவின் SEZ
கொள்கை இந்தியாவின் உற்பத்திப் பிரிவை
SEZ-களுக்கு
மாற்றி வரி "விலக்கு" சலுகையை பெற்றுத் தருவதேதவிர, புதிய பொருளாதார நடவடிக்கைக்கு வழிசெய்வதாக
அமையவில்லை என்று செப்டம்பர் 14-ல் கருத்துத் தெரிவித்தார். உயர்ந்த உள்கட்டமைப்பு வசதிகள்,
வர்த்தகத்திற்கு ஆதரவான நெறிமுறைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்களில் விதிவிலக்குகள் வழங்கப்படுவது போன்ற
நடவடிக்கையில் கவனம் செலுத்தினால் தான், SEZ-கள்
கட்டுபடியாகும் அமைப்புகளாக செயல்படுமே தவிர "தவறான அடிப்படையில் வழங்கப்படும் மானியங்கள்
உத்தரவாதங்கள் மற்றும் வரி சலுகைகளை தருவது இந்தியாவின் நெருக்கடி நிறைந்த பட்ஜெட்டிற்கு
கட்டுபடியாகாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
SEZ- களுக்கு மட்டுமல்ல இந்தியா
முழுவதற்கும் பெருநிறுவனங்களுக்கு சாதகமான தொழிலாளர் சட்டங்கள், நெறிமுறைகள், நிலப்பாகுபாடு மற்றும்
வரி விதிப்பு அமைய வேண்டும் என்று வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பல SEZ
அமைப்புக்கள் ரியல் எஸ்டேட் தொழில்களாக உள்ளனவே தவிர, உற்பத்தி
மண்டலங்களாக செயல்படவில்லை. தற்போது, நடைமுறையிலுள்ள விதிகளின்படி, ஒரு
SEZ-ல் 35
சதவீதம் உற்பத்தி நடவடிக்கை நடந்தால் போதும். ஒரு ரியல் எஸ்டேட் வர்த்தகர் அந்த
SEZ-ன் மீதி
இடத்தை மாடிக் குடியிருப்புக்கள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் வர்த்தக அலுவலகங்களை கட்டுவதற்கு பயன்படுத்த
முடியும்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்
SEZ சட்டத்தில்,
இதர பயன்பாடுகளுக்காக நிலத்தை கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த
விதி ரியல் எஸ்டேட் வர்த்தகர்களுக்கு ஒரு பாரியளவு லாபம் தருகின்ற லாட்டரிச் சீட்டில் பரிசு கிடைத்தது
போன்ற திடீர் அதிர்ஷ்டமாகும். இந்த நடவடிக்கை ஏற்கனவே விவசாயிகளிடம் எதிர்ப்பை கிளறிவிட்டிருக்கிறது.
தற்போது நடைமுறையிலுள்ள அல்லது திட்டமிடப்பட்டிருந்த முதலீடுகள்
SEZ-களுக்கு
எளிதாக திருப்பிவிடப்படுவதாக நிதியமைச்சகம் புகார் கூறியது. நிதியமைச்சக மதிப்பீடுகளின்படி
SEZ-களால்
ஏற்படும் நேரடி வரிகள் சுங்கத்தீர்வைகள் மற்றும் கலால் தீர்வைகள் இழப்பு 2009-2010 வாக்கில் 900
பில்லியன் ரூபாய்களாக (19.5 பில்லியன் டாலர்களாக இருக்கும்)
செப்டம்பர் 21-ல் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியும் எதிர்ப்புத்
தெரிவித்தார். "பிரதானமாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலம் விவசாயம் அல்லாத பணிகளுக்காக
பயன்படுத்தக்கூடாது" என்று அவர் கூறினார். மற்றும் நிலத்தை கையகப்படுத்தும் போது திருப்தியளிக்கின்ற வகையில்
இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். விவசாயிகளிடையே பெருகிவரும் அதிருப்தியை
அடக்குகின்ற வகையில் இதர காங்கிரஸ் தலைவர்கள் விடுத்திருந்த வெற்று விமர்சனங்களை தொடர்ந்து சோனியா
காந்தியின் விமர்சனங்கள் வெளிவந்தன.
SEZ கொள்கை தொடர்பாக
ஊடகங்களில் நிலவுகின்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையில் அரசாங்கம் ஒற்றுமையை காட்ட முயன்றது.
அக்டோபர் 7-ல் நடைபெற்ற கூட்டத்தில் நிதியமைச்சர் ப. சிதம்பரம், தானும் வர்த்தக அமைச்சரும்
SEZ கொள்கையில்
ஒன்றுபட்டிருப்பதாக தெரிவித்தார். அந்தக் கொள்கை மாறாது என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
அரசாங்கம் உறுதியாக நின்று நடவடிக்கை எடுத்து வந்தாலும்
SEZ-ல்
காணப்படும் குறைபாடுகளும் அவை தொடர்பான கண்டனங்களும் இந்திய பெருவர்த்தக செல்வந்தத்தட்டினருக்கு ஒரு
பேரிடியாக அமைந்துவிட்டது. புது டெல்லி உருவாக்கியுள்ள
SEZ கொள்கை,
முதலீட்டாளர்களுக்கு தடையாக இருப்பதாக பரவலாக கருதப்படும், இந்தியாவின் பாரியளவு உள்கட்டமைப்பு
பிரச்சினைகளை சமாளிக்க தனியார்துறையை ஈடுபடுத்த வடிவமைக்கப்பட்டதாகும்.
அண்மையில்
Financial Times வெளியிட்ட ஒரு கட்டுரை அந்த
நிலவரத்தை விளக்கியுள்ளது. "இந்தியாவில் உற்பத்தி செலவுகள் குறைவு என்ற சூழ்நிலைகளால், வளர்ந்திருக்கும்
இந்திய உள்நாட்டு சந்தையினால் ஈர்க்கப்பட்டு உற்பத்தியாளர்கள் முதலீடு செய்ய முன்வந்தாலும், தங்கள்
உற்பத்திப் பொருள்களை அவை கார்களாக இருந்தாலும் மொபைல் தொலைபேசிகளாக இருந்தாலும் அல்லது
ஜவுளிகளாக இருந்தாலும் அவற்றை இந்தியா முழுவதிலும் கொண்டு செல்வதற்கு சரியான சாலை வசதிகள், விமான
நிலைய வசதிகள், துறைமுக வசதிகள் இல்லை என்பதைப் பற்றி கவலைப்பட்டனர். மின்சார வெட்டுக்கள்
வர்த்தகத்தை முடக்கிவிடும்."
இந்தியாவில் பொருளாதார திட்டமிடுபவர்கள் நீண்டகாலமாக சீனாவை பின்பற்ற
வேண்டுமென்ற பொறாமை உணர்வில் செயல்பட்டு வந்தனர். அங்கு
SEZ-களுக்கு
ஏராளமான நிலம் ஒதுக்கப்பட்டது. அரசாங்கமே அவிவிருத்தியாளர்களுக்கு நிதியளித்து உள்கட்டமைப்பு வசதிகள்
செய்து தரப்பட்டன. "இங்கு இந்தியாவில் ஏராளமான நிலமில்லை எனவே இந்தியா தனக்கு பொருத்தமான
முன்மாதிரி திட்டத்தை உருவாக்கியுள்ளது" என்று அறிவித்து வர்த்தக அமைச்சர் கமல்நாத் தனது கொள்கைக்கு
ஆக்கபூர்வமான திருப்பத்தைத் தர முயன்றார். இந்தியாவைப் போன்று இல்லாமல், சீனா நிலத்தை
அரசுடைமையாக்கியுள்ளது, மற்றும் போலீஸ் அரசு சட்டங்கள் மூலம் மிக எளிதாக
SEZ-களுக்கு
ஏராளமான நிலத்தை ஒதுக்கிவிட்டார்கள் என்று குறிப்பிட்டார்.
இந்திய விவசாயிகள் தங்கள் நிலம் கட்டாயமாக கையகப்படுத்தப்படுவதை கண்டித்து
வருகின்றனர். மராட்டிய மாநிலம் ரெய்கார் மாவட்டத்தில் மாநில அரசாங்கம் 20 கிராமங்களில் 1,200
விவசாயிகளுக்கு முன் அறிவிப்பு கொடுத்து மும்பை சிறப்பு பொருளாதார மண்டலம்
(MSEZ) அமைக்க
திட்டமிட்டது. அதை பிரமாண்டமான ரிலையன்ஸ் குழுவினர் உருவாக்க திட்டமிடப்பட்டது. கிராமத்து மக்கள்
ரிலையன்ஸ் அதிகாரிகள் தங்கள் நிலத்தில் நுழையவிடாமல் தடுத்துவிட்டனர்.
அந்த குறிப்பிட்ட கிராமங்களின் நிலம் மிகவும் மதிப்புள்ளதாகும். மாநில அரசு
1980-ல் திட்டமிட்ட ஹெட்வேன் அணைத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்குமானால் அந்த நிலம் மிகுந்த விவசாயிகளுக்கு
மதிப்புமிக்கதாக இருந்திருக்கும் அந்த நிலத்தின் விலை இன்றைய சந்தை விலையைவிட 15 மடங்கு அதிகமாக
இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் தற்போது மாநில அரசாங்கம் கட்டாயமாக மிகக் குறைந்த விலைக்கு
விவசாயிகளிடமிருந்து நிலத்தை வாங்கி வருகிறது.
பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட கண்டனப் பேரணியில் இந்திய
மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உரையாற்றினர்.
CPI (M) மற்றும்
இதர இடதுசாரி அணியைச் சேர்ந்த கட்சிகள் SEZ
சட்டத்தை எதிர்ப்பதாக கூறுகின்றன, ஆனால் உண்மையில்,
அக்கொள்கையில் சொற்ப மாற்றங்களை முன்மொழிவு செய்திருக்கின்றன.
SEZ-ல் 35
சதவீதத்தை காட்டிலும் 50 சதவீதம் நிலம் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் மற்றும்
கட்டாயமாக விவசாய நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்றும்
CPI(M)
கோரியுள்ளது.
CPI (M) எதிர்ப்பு தெரிவித்து
வருவது வெறும் பேச்சாகும் ஏனென்றால் 2005 மே மாதம்
SEZ சட்டம்
வந்தபோது அதற்கு அக்கட்சி ஆதரவு தந்தது. மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் அக்கட்சி
SEZ சட்டத்திற்கு
ஒப்புதல் தந்தது. இதர சமூக பிரச்சினைகளில் செயல்பட்டது போலவே
CPI (M) கட்சி
SEZ சட்டத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பரந்த
எதிர்ப்புகளுக்கான ஒரு அரசியல் பாதுகாப்பு வால்வாக
CPI (M) செயல்படுவதுடன், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ்
தலைமையிலான அரசாங்கத்திற்கு முக்கிய ஆதரவின்போது தனது ஆதரவை அளித்து வருகிறது.
மேற்கு வங்காளத்தில் CPI
(M) தலைமையிலான அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கும்
CPI (M)
முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச் சார்ஜி
SEZ-களுக்காக
கட்டாய நில ஆர்ஜிதத்தில் முன்னணியில் உள்ளார் கடந்த ஆண்டு டாட்டா, ரிலையன்ஸ், மற்றும் இந்தோனேஷியாவின்
சலிம் குழு நிறுவனங்களுக்காக மேற்கு வங்காள அரசு நிலத்தை கையகப்படுத்தியது. டாட்டா கார் உற்பத்தி
தொழிற்சாலை வளாகத்திற்காக சிங்குர் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட பெரும்பாலான நிலம் விவசாய
நிலமாகும். இது நூற்றுக்கணக்கான விவசாயிகள் உறுதியாக எதிர்ப்புக்களைத் தூண்டி விட்டது. |