World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காDemocratic Party takes control of both houses of Congress தேசிய சட்டமன்றத்தின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது By Patrick Martin நவம்பர் 7ம் தேதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்களை அடுத்து, அமெரிக்க தேசிய சட்ட மன்றத்தின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி பெற்றது; பிரதிநிதிகள் மன்றத்தில் 435 இடங்களில் குறைந்தது 230 ஐ வென்று, செனட் மன்றத்தில் 51-49 வித்தியாசத்தையும் கொண்டுள்ள நிலையில் இது நடந்துள்ளது. வியாழனன்று வர்ஜீனியாவின் ஜோர்ஜ் அலென் மற்றும் மோன்டனாவின் கோன்ராட் பேர்ன்ஸ் என்ற இரு குடியரசுக் கட்சி செனட் வேட்பாளர்கள் தோல்வியை ஒப்புக் கொண்ட வகையில் கடைசி இரு முடிவுகள் அமைந்தன. பதவியில் இருக்கும் செனட் மன்ற குடியரசுக் கட்சியினர் ஆறு பேர் தோற்கடிக்கப்பட்டனர். அலென் மற்றும் பேர்ன்ஸை தவிர, குடியரசுக் கட்சியின் தலைவர் வரிசையில் மூன்றாவதாக இருக்கும் பென்சில்வானியாவின் ரிக் சான்டோரம், ரோட் தீவின் லிங்கன் ஷாபீ, ஓகையோவில் மைக்கேல் டி வைன் மற்றும் மிசெளரியின் ஜேம்ஸ் டாலன்ட் ஆகியோர் மற்றவர்கள் ஆவர். இப்படி பதவியில் இருக்கும் ஆறு செனட் உறுப்பினர்களை தோற்கடித்ததுடன், ஜனநாயகக் கட்சியினர் தாங்கள் செனட் உறுப்பினர் பதவியை கொண்டிருக்கும் நியூ ஜேர்சி, மேரிலாந்து, மிச்சிகன் மற்றும் மின்னிசோட்டா ஆகிய இடங்களிலும் வெற்றி பெற்றனர். ஒரு நெருக்கமான வெற்றி பெற்ற ஒரே குடியரசுக் கட்சியின் வெற்றி டென்னசே மானில செனட் பதவியாகும்; அங்கு மன்றத்தின் பெரும்பான்மை கட்சி தலைவரான பில் பிரிஸ்ட்டிற்கு பதிலாக போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் பொப் கோர்க்கர் வெற்றி பெற்றார். பிரதிநிதிகள் மன்றத்தில், ஜனநாயகக் கட்சியினர் குறைந்தது 28 இடங்களை அதிகமாகப் பெற்றனர்; பெரும்பான்மை கட்சி அந்தஸ்து பெறுவதற்கு தேவையானதைவிட இது 15 இடங்கள் அதிகமாகும்; இன்னும் எட்டு இடங்களில் முடிவுகள் தெளிவாகவில்லை; அவற்றில் வாக்குகள் மறு எண்ணிக்கை செய்யப்பட வேண்டும் அல்லது சில ஐயத்திற்குட்பட்ட வாக்குகள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட வேண்டும் என்று உள்ளது. இந்த எட்டு இடங்களுமே குடியரசுக் கட்சியிடம் உள்ளவை; எனவே இவற்றில் எதில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றாலும் ஏற்கனவே இது கொண்டிருக்கும் 230 இடங்களைவிட கூடுதலான இடங்களை கொள்ளும். உறுப்பினர்களாக இருந்த 21 குடியரசுக் கட்சியின் மறு தேர்தலில் தோல்வியுற்றனர்; இவர்களில் பாதிப்பேர் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள்; இருவர் நியூ ஹாம்ப்ஷைர், ஒருவர் கன்னக்டிகட், மூன்று பேர் நியூ யோர்க் மற்றும் நான்கு பேர் பென்சில்வானியாவை சேர்ந்தவர்கள். மேலும் மூன்று குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இந்தியானாவிலும், மின்னிசோடா, ஐயோவா, கன்சாஸ், கென்டக்கி, வட கரோலினா, புளோரிடா, அரிசோனா மற்றும் கலிபோர்னியாவில் இருந்து தலா ஒருவரும் தோற்கடிக்கப்பட்டனர். குடியரசுக் கட்சியினர் மறு தேர்தலில் நிற்காத அல்லது இராஜிநாமா செய்த ஏழு இடங்களிலும் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றனர். இப்படி வெளிப்படைத் தொகுதி வெற்றிகளில் முன்பு மன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ரொம் டிலே கொண்டிருந்த டெக்சாஸ் தொகுதியும் அடங்கும்; பிரச்சாரத்தில் கறுப்புப்பணத்தை வெள்ளையாக்கும் பண ஊழலில் சிக்கியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது; மன்றத்தின் நிர்வாகக் குழுவின் தலைவரான ரோபேர்ட் நே, ஓகியோவில் இருந்து இராஜிநாமா செய்த இடமும் இதில் சேரும்; இவர் ஜோன் அப்ரமாப் என்னும் செல்வாக்கு மிக்க குடியரசுக் கட்சிக்காரரிடம் இருந்து இலஞ்சம் வாங்கிய வழக்கை ஒப்புக் கொண்டிருந்தார். மார்க் போலி என்பவர் சட்டமன்ற இளம் ஏவலர்களுக்கு வெளிப்படையான பாலுணர்வு மின்னஞ்சல்களை அனுப்பியதை தொடர்ந்து எழுந்த ஊழலில் புளோரிடா தொகுதியில் இருந்து இராஜிநாமா செய்திருந்தார்; அதையும் ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றினர். மன்றத்தின் அனைத்து வரிவிதிப்புக்கள் திட்டங்களையும் கையாளும் சக்தி வாய்ந்த வழிவகை குழுவின் உயர்மட்ட குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் தோற்கடிக்கப்பட்டனர்: அவர்கள் புளோரிடாவின் கிளே ஷாவும், கனக்டிக்கட்டின் நான்ஸி ஜோன்சனும் ஆவர். பிரதிநிதிகள் மன்றத்தின் குடியரசுக் கட்சி மாநாட்டு தலைவர் Deborah Pryce அம்மையார் அவரது ஓகையோ மாவட்டத்தில் குறுகிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருக்கிறார், ஆனால் அனைத்து வாக்குகளும் எண்ணப்படும்பொழுது அவர் இழக்கக் கூடும். இன்னும் பேரழிவுகரமான தோல்வியையும் குடியரசுக் கட்சியினர் நெருக்கமாக தவிர்க்கமுடிந்தது. குடியரசுக்காரர்கள் கொண்டிருக்கும் எட்டு தொகுதிகளில் இன்னும் நிலவும் சரிவு ஆபத்தைத்தவிர, ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான வித்தியாசத்தில் மற்றும் ஒரு பத்து குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றனர். இதில் நியூ யோர்க்கின் தோமஸ் ரேநால்ட்ஸ் என்னும் மன்றத்தின் குடியரசுக் கட்சிப் பிரச்சாரக்குழுவின் தலைவரும் அடங்குவார். பல தனிப்பட்ட போட்டிகள் மிக நெருக்கமான வகையில் முடிவைக் கண்ட போதிலும், பரந்து விரிந்த வகையில் குடியரசுக் கட்சி தோல்வியுற்றது ஒரு மாபெரும் உண்மையினால் நிரூபணம் ஆகிறது. தற்பொழுதுள்ள தொகுதிகளில் இருந்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியிடம் இருந்து ஒரு இடத்தைக் கூட குடியரசுக் கட்சியின் போட்டியாளரால் வெற்றி கொள்ளமுடியவில்லை; செனட் மன்றம், பிரதிநிதிகள் மன்றம் இரண்டிலும் இதே நிலைமைதான். 36 மாநில ஆளுனர்களுக்கான தேர்தல்களிலும் இதை நிலைமைதான் இருந்தது. பிரதிநிதிகள் மன்றத்திலும் செனட்டிலும் குறுகிய பெரும்பான்மையை பெறாமல் விட்டது என்பதை தவிர இந்தப் பெரும் தோல்வியின் தன்மை ஆழ்ந்திருந்தது. குடியரசுக் கட்சியினரிடம் இருந்த ஆறு மாநில கவர்னர்களின் பதவியை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது; மறு தேர்தலுக்கு நின்றிருந்த மேரிலாந்து கவர்னர் ரோபர்ட் எர்லிச் ஜனநாயகக் கட்சியால் தோற்கடிக்கப்பட்டார்; மாசாச்சுசெட்ஸ், நியூ யோர்க், ஓகையோ, அயோவா மற்றும் கோலொரடோவின் ஆளுனர் பதவிகளையும் ஜனநாயக் கட்சியினர் கைப்பற்றினர். எஞ்சியிருக்கும் கவர்னர் பதவிகளில், குடியரசுக் கட்சியினர் நான்கு பெரிய மாநிலங்களில் மூன்றில் கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் புளோரிடாவில் தங்கள் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொண்டபோதிலும், 50 மாநிலங்களில் 28-22 என்ற குடியரசுக் கட்சி நிலையிலிருந்து 28-22 என்று ஜனநாயகக் கட்சியினருக்கு மாறியுள்ளது. மாநில சட்டமன்ற அளவிலும் ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிடத்தக்க வகையில் ஆதாயங்களை அடைந்தனர்; 1982க்குப் பின்னர் அப்பகுதியில் முதல் வெற்றிகள் என்று தெற்கு உட்பட, இவர்களுக்கு வெற்றி கிடைத்தது. மிச்சிகன் பிரதிநிதிகள் மன்றம், இண்டியானா பிரதிநிதிகள் மன்றம், விஸ்கான்சின் ணெனட் மற்றும் அயாவாவில் பிரதிநிதிகள் மற்றும் செனட் பிரிவுகள் உட்பட ஒன்பது சட்டமன்றப் பிரிவுகளில் ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினரிடமிருந்து கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டனர். மரபார்ந்த முறையில் குடியரசுக் கட்சியின் மாநிலமான நியூ ஹாம்ப்ஷைரில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த கவர்னர் ஜோன் லிஞ்ச் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் ஜனநாயகக் கட்சியினர் சட்டமன்றத்தின் இரு பிரிவுகளையும் கைப்பற்றினர்; இதையொட்டி 1874க்கு பின்னர் அவர்கள் மாநில அரசாங்கத்தின் மீது முழுக் கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளனர். இதேபோல் 1960க்குப் பிறகு முதல் தடைவயாக ஜனநாயகக் கட்சியினர் கோலோரடோவைக் கைப்பற்றினர்; அயோவாவிலும் 1964க்கு பின்னர் இத்தகைய கட்டுப்பாட்டை கொண்டனர். தற்போதுள்ள இரு குடியரசுக் கட்சிச் சட்ட மன்ற உறுப்பினர்களும் ஜனநாயகக் கட்சி போட்டியாளர்களால் நியூ ஹாம்ப்ஷைரில் தோற்கடிக்கப்பட்டனர்; இது நியூ இங்கிலாந்தில் குறிப்பிடத்தக்க வகையில் புஷ்-எதிர்ப்பு, போர்-எதிர்ப்பு உணர்வுகள் இருப்பதின் பிரதிபலிப்பாகும். ஜனநாயகக் கட்சியினர் இப்பொழுது அப்பிராந்தியத்திலிருந்து அவையின் பேராளர்களில் 21-1 என்ற அளவில் பெற்றுள்ளனர். வெர்மான்டில் நீண்டகாலமாக சுயேச்சை சட்ட மன்ற உறுப்பினராக இருக்கும் Bernasrd Sanders ஓய்வு பெறும் செனட்டர் ஜேம்ஸ் ஜெபோர்ட்சின் காலியிடத்திற்கான தேர்தலில் வெற்றி பெற்றார். சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த சாண்டர்ஸ் மன்றத்தில் ஜனநாயகக் கட்சி குழுவுடன் இணைந்து செயல்படுவார். அமெரிக்க செனட் மன்றத்தில் தன்னைத்தான் சோசலிஸ்ட் என்று அழைத்துக் கொண்டு போட்டியிட்டு வெற்றியும் அடைந்த ஒரே உறுப்பினர் இவர்தான். தேர்தல் முடிந்த பின்னர் நடந்த கருத்துக் கணிப்புக்கள் வாக்காளர்கள் மனத்தில் மையப் பிரச்சினையாக இருந்தது ஈராக் போர் என்பதை உறுதிப்படுத்தின; நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கணிசமான பெரும்பான்மையில் போர் எதிர்க்கப்பட்டது. புஷ் நிர்வாகத்தின் போர் நடத்தும் தன்மை பற்றி அதிக ஆர்வமில்லாத வகையில் குறைகூறி, போரின் நெறியை மறுப்பதற்கு பதிலாக ஈராக்கில் எதிர்ப்பை தோற்கடிக்க ஒரு புதிய மூலோபாயத்திற்காக அழைப்புவிடுத்த ஜனநாயக வேட்பாளர்கள் கருத்தை விட பொது மக்கள் கருத்து போருக்கு பெரும் எதிர்ப்பைத்தான் கொண்டிருந்தது. போருக்கு ஆதரவான வாஷிங்டன் போஸ்ட் வாக்கு பற்றிய தன்னுடைய பகுப்பாய்வில் ஒப்புக் கொண்டுள்ளதாவது: "கருத்துக் கணிப்பின்படி இத்தேர்தல் பெருமளவிற்கு ஈராக் போர் பற்றியும் புஷ் பற்றியும் ஒரு தேசிய வாக்கெடுப்பு போல் ஆயிற்று. செவ்வாயன்று வாக்குச் சாவடிகளில் இருந்து வெளியே வந்த வாக்காளர்களில் 60 சதவிகிதத்தினர் ஈராக் போரை தாங்கள் எதிர்ப்பதாகக் கூறினர், 40 சதவிகிதத்தினர் தங்களுடைய வாக்குகள் புஷ்ஷிற்கு எதிரானவை என்று கூறினர்...10 வாக்காளர்களில் எட்டு பேர் ஈராக் போருக்கு ஆதரவு தருவதாக கூறியவர்கள் குடியரசுக் கட்சியினருக்கு வாக்களித்ததாவும், 10 ல் 8 பேர் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்ததாகவும் கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன." வாக்குகள் முடிந்த பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் 40 சதவிகிதத்தினர் ஈராக் போரை "கடுமையாக எதிர்ப்பதாகவும்", 56 சதவிகிதத்தினர் சில அல்லது அனைத்து துருப்புக்களும் திரும்பப் பெற வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுப்பதாகவும் கூறினர். ஜனநாயகக் கட்சியினர் ஒரு சிலரே அமெரிக்கத் துருப்புக்கள் திரும்பப் பெறவேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தனர் என்ற உண்மை இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்திலும் இதே போன்ற போர் எதிர்ப்பு உணர்விற்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்ததிலும் நெருக்கமான தொடர்பு இருந்தது. நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகிறவாறு, "இன்னும் தாராண்மை தொகுதிகளில் ஜனநாயகவாதிகள் துருப்புக்கள் திரும்பப் பெற வேண்டும் என்று கூறினர்; மிகப் பழமைவாத தொகுதிகளில் அவர்கள் வெற்றிக்கு ஒரு திட்டம் வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் அவர்கள் ஈராக்கில் நிர்வாகம் எடுத்துள்ள தவறான நடவடிக்கைகள் பற்றித் தாக்கி பழம் பெரும் கட்சியின் (GOP) கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சட்டமன்றம் உகந்த மேற்பார்வை அளிக்கத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர்" என்று சொல்லியிருப்பது ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரத்தின் போலித்தனத்தை வியப்புடன் விவரிக்கும் வகையில் உள்ளது. உதாரணத்திற்கு நியூ ஜேர்சியில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேலான வாக்காளர்கள் போர்தான் தங்களுடைய செனட் தேர்தல் பற்றிய முடிவில் மிக முக்கிய பங்கைக் கொண்டிருந்தது என்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ரோபர்ட் மெனென்டெசுக்கு வாக்களித்தவர்களில் மூன்றில் இருவர் இதே கருத்தைத்தான் கூறினர்; அவர் அக்டோபர் 2002 ல் போருக்கு ஒப்புதல் கொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர் ஆவார். ஓகையோவில் 56 சதவிகிதத்தினர் போருக்கு ஒப்புதல் இல்லை என்று கூறினர்; அவர்களில் 82 சதவிகிதத்தினர் ஜனநாயகக் கட்சியின் செனட் வேட்பாளரான Sherrod Brown க்கு வாக்களித்தனர்; அவரும் 2002ல் போர்த்தீர்மானத்திற்கு எதிராகத்தான் வாக்களித்திருந்தார். ஓகையோ வாக்காளர்களில் 34 சதவிகிதத்தினர் புஷ்ஷிற்கு எதிர்ப்பை காட்டுவதற்காக வாக்களித்ததாக கூறினர்; 19 சதவிகிதத்தினர்தான் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வாக்களிப்பதாகக் கூறினர். ரோட் ஐலண்ட் வாக்காளர்கள் புஷ்-எதிர்ப்பு மற்றும் போர்-எதிர்ப்பு உணர்வை கடுமையாக வெளிப்படுத்தினர்; 75 சதவிகிதத்தினர் புஷ்ஷின் ஆட்சி பற்றி ஒப்புதல் கொடுக்கவில்லை; 56 சதவிகிதத்தினர் கடுமையாக எதிர்த்தனர்; 73 சதவிகிதத்தினர் போருக்கு எதிராக இருப்பதாக கூறினர்; 65 சதவிகிதத்தினர் ஜனநாயகக்கட்சி வேட்பாளரான Sheldon Whitehouse க்கு வாக்களித்தனர்; இப்பொழுதுள்ள உறுப்பினர் லிங்கன் ஷாபே போர்த் தீர்மானத்தை எதிர்த்த ஒரே குடியரசுக் கட்சியாளர் என்று இருந்தபோதிலும் வாக்களிப்பு இப்படி நடைபெற்றது. மிகப் பெரிய தேர்தல் அதிர்ச்சி வர்ஜீனியாவில் வந்தது; அங்கு இப்பொழுது பதவியில் இருக்கும் செனட்டர் ஜோர்ஜ் அலென், போருக்குப் பெருங்குரல் கொடுப்பவர், மக்கள் நிறைந்த வட வர்ஜினியா புறநகர்ப்பகுதிகளில் பெரும் தோல்வியைச் சந்தித்தார்; அங்குதான் பென்டகன் மற்றும் அதன் துணை ஒப்பந்தக்காரர்கள் மிகப் பெரிய அளவில் வேலை கொடுப்பவர்களாக உள்ளனர். முன்னாள் குடியரசுக் கட்சியாளராகவும் றேகன் நிர்வாகத்தில் கடற்படைச் செயலாளராகவும் இருந்து ஜனநாயகக் கட்சியின் ஜேம்ஸ் வெப் போரை "போர்த்திறம் சார்ந்த முறையில் பெரும் தவறு" என்று விவரித்து எதிர்த்தார்; இது அமெரிக்க இராணுவ வளங்கள் ஈரான், சிரியா, வட கொரியா போன்ற இலக்குகளை நோக்கி அனுப்பப்பட வேண்டியதை திசைதிருப்புவதாகவும் கூறினார். செனட்டிற்கான போட்டிகளில் ஜனநாயகக் கட்சி பெரும் வெற்றி பெற்றதற்கு ஒரே விதிவிலக்காக இருந்தது டென்னெசியில்தான்; கருத்துக் கணிப்புக்கள் போருக்கு மிகச் சிறிய ஆதரவை காட்டுவதாக கூறப்பட்ட வெகு சில மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும். வாக்குகள் முடிந்த பின் நடந்த கருத்துக் கணிப்புக்கள் வாக்களித்தவர்களில் 49 சதவிகிதத்தினர் ஈராக் போருக்கு ஆதரவு தருவதாகவும், 48 சதவிகிதத்தினர் எதிர்ப்பதாகவும் தெரிவித்தனர்; கிட்டத்தட்ட இதே தன்மைதான் குடியரசுக் கட்சியின் பொப் கோர்க்கரெ ஜனநாயகக் கட்சியின் ஹரோல்ட் போர்டை வென்றபோதும் வெளிப்பட்டது. போருக்கு வலுவான ஆதரவாளர் என்று பிரச்சாரம் செய்திருந்த போதும் டென்னெசில் போர் எதிர்ப்புத் தன்மை கொண்ட வாக்குகளை அதிக அளவிற்கு போர்ட் பெற்றார்; 2002 போர்த் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பிரதிநிதிகள் மன்றத்தில் போருக்கு ஆதரவாக வாக்களித்ததாக அவர் பிரச்சாரம் செய்தும் கூட முடிவு இப்படியாயிற்று. கூடுதலான போர் ஆதரவு காட்டிய செனட் வேட்பாளர் வெற்றி பெற்றது கனக்டிக்கட்டில் ஆகும்; இங்கு ஜனாதிபதி தேர்தல் துவக்க வாக்கெடுப்புக்களில் போர் எதிர்ப்பு உணர்வைத் தூண்டி நெட் லாமோன்ட்டிடம் தோற்றிருந்தாலும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் இப்பொழுதுள்ள உறுப்பினரான ஜோசப் லிபர்மன் தற்போதைய தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். அவர் ஒரு சுயேச்சை வேட்பாளராக பங்கு பெற்றார்; நடைமுறையில் ஒரு குடியரசு வேட்பாளர் போல் ஆனார்; ஏனெனில் புஷ்ஷின் வெள்ளை மாளிகை மற்றும் மாநில குடியரசுக் கட்சியின் அலுவலர்கள் இவருக்கு ஆதரவை கொடுத்திருந்தனர். இலையுதிர்கால பிரச்சாரத்தில் பெரும் பகுதியை லாமோன்ட் போர் பிரச்சினையை கைவிட்டுவிட்ட நிலையில், அவர் லிபர்மனால் 50க்கு 40 என்ற சதவிகிதத்தில் தோற்கடிக்கப்பட்டார். தன்னுடைய மூத்த உரிமை, குழு உறுப்பான்மை கொடுக்கப்படும் என்ற உறுதி கிடைத்தால் ஜனவரியில் ஜனநாயகவாதிகள் குழுவிற்கு ஆதரவு கொடுப்பதாக லிபர்மன் உறுதியளித்துள்ளார். ஆனால் தேவையானால் குடியரசுக் கட்சிக்கு அவர் மாறிக் கொள்ளலாம்; அப்பொழுது ஜனநாயகக் கட்சி செனட் மன்றத்தில் கொண்டிருக்கும் கட்டுப்பாடு இல்லை என்று போய்விடும்; மன்றத்தில் இரு கட்சிகளும் 50-50 என்ற எண்ணிக்கையை கொண்டிருப்பர்; அப்பொழுது துணை ஜனாதிபதியான டிக் செனி முடிவெடுக்கும் வாக்கை போடுவார். வாக்குகள் வந்தபின் நடந்த கருத்துக் கணிப்பின் மற்ற விவரங்கள் குடியரசுக் கட்சி நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள அரசியல் நடவடிக்கையையும் புலப்படுத்துகின்றன; அதன் ஆதரவுத் தளம் இதுகாறும் ஆதரவு கொடுத்திருந்த மக்கட்தொகுப்பிடம் இருந்து பெரிதும் குறைந்துள்ளது; அத்தொகுப்பின் அரசியல் செல்வாக்கு பெருகி வருகிறது. ஹிஸ்பானிய வாக்காளர்களில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவு 2004ல் 40 சதவிகிதத்தில் இருந்து இவ்வாண்டு 30 என்று குறைந்துள்ளது. 18 -29 வயது வரை உள்ள இளம் வாக்காளர்கள் ஜனநாயகக் கட்சிக்கு 60-38 என்ற சதவிகிதத்தில் வாக்களித்தனர்; இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 55-45 என்று இது இருந்தது. கல்லூரி வயது இளைஞர்களிடையே மிக முக்கியமான பிரச்சினை ஈராக் போராகத்தான் உள்ளது. வாக்கெடுப்பில் மற்றொரு பெரும் காரணி சமூகப் பொருளாதார நிலைமைகளில் சரிவு ஏற்பட்டுள்ள தன்மையைப் பற்றிய அதிருப்தி ஆகும். உத்தியோகபூர்வ வாஷிங்டன் மற்றும் தொழிலாள வர்க்க மக்களுக்கும் இடையே இருக்கும் பெரும் பிளவை அடையாளம் காட்டும் வகையில் புஷ் புதனன்று தேர்தல் முடிவிற்கு பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் வாக்காளர்கள் மனத்தில் பல "நல்ல" பொருளாதாரச் செயற்பாடுகளை விட போர் நிறைந்து நின்று விட்டது எனக் கூறியிருப்பதில் இருந்து தெளிவாகிறது. "இத்தேர்தலை பற்றி வியப்பான விஷயம், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது பொருளாதாரம் இத்தனை வலுவாக உள்ளது; பல நேரமும் பொருளாதாரம்தான் முடிவு செய்யும் கூறுபாடாக இருக்கும்". "இருந்தபோதிலும் வாக்காளர்களை பொறுத்தவரையில் மாறுபட்ட உணர்வுகள் இருந்திருக்கின்றன. பொருளாதாரம் சிறந்துள்ளது என்ற நல்ல செய்தியை போர், போரின் கடுமை பற்றிய கருத்துக்கள் அழுத்திவிட்டன" என்று புஷ் கூறினார். உண்மையில், நவம்பர் 7ம் தேதி தேர்தல்களில் பங்கு பெற்ற வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தை பொறுத்த வரையில் அது புஷ் நிர்வாகத்தின் மற்றொரு எதிர்மறை என்று கருதி அவ்வகையில்தான் வாக்களித்தனர். வாக்குகள் முடிந்த பின் எடுக்கப்பட்ட கருத்துக்களின் படி 39 சதவிகிதத்தினர் தங்கள் வாக்கிற்கு பொருளாதாரம் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்று கூறினர்; வாக்குப் போட்டவர்களில் 10ல் 6 பேர் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தனர். ஓகையோவில் குறிப்பாக இது வெளிப்படையாக காணலாம்; அங்கு அமெரிக்க உற்பத்தித் துறையின் சரிவு மக்களை பெருமளவு தாக்கியுள்ளது. ஓகையோ வாக்காளர்களில் மிகப் பெரிய அளவினர், 62 -37 என்ற கணக்கில் பொருளாதாரம் எதிர்மறையாக உள்ளது என்று கூறியுள்ளனர். பொருளாதாரம் எதிர்மறையானது என்ற கருத்துடையவர்களில் 75 சதவிகிதத்தினர் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பிரெளனுக்கு வாக்களித்தனர். பொருளாதாரம் செழித்துள்ளது என்ற கருத்துடையவர்களில் -- பொதுவாக உயர் வருமானம் உடையவர்கள் -- 71 சதவிகிதத்தினர் குடியரசுக் கட்சியின் டி வைனுக்கு வாக்குப் போட்டனர். இதையொத்த வாக்கு வித்தியாசங்கள்தாம் பென்சில்வேனியாவிலும் இருந்தன; இந்த மாநிலமும் பெருமளவு உற்பத்தித்துறையை நம்பியுள்ளதாகும். மிசெளரியில் 46 சதவிகித வாக்காளர்கள், ஈராக் போரை விட பொருளாதாரம் மிக முக்கியமான பிரச்சினை என்று கூறினர்; இவர்களிடையே ஜனநாயக் கட்சியின் Claire McCaskilll குடியரசுக் கட்சியின் James Talent ஐ விட கணிசமான 61-39 சதவிகித இடைவெளியைக் கொண்டிருந்தார். |