World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP public lecture in Colombo:

New ruling coalition and the civil war in Sri Lanka

கொழும்பில் சோ.ச.க. பகிரங்க விரிவுரை

புதிய ஆளும் கூட்டணியும் இலங்கையில் உள்நாட்டு யுத்தமும்

9 November 2006

Back to screen version

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) கொழும்பில் ஒரு பகிரங்க விரிவுரையை நடத்தவுள்ளது. இந்த விரிவுரையானது நாட்டின் இரு பிரதான ஸ்தாபனக் கட்சிகளான ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் (ஸ்ரீ.ல.சு.க) எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும் (ஐ.தே.க) இடையில் முன்னெப்போதும் இல்லாத கூட்டணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதில் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள அரசியல் தொடர்பு பற்றியதாகும்.

நாட்டின் உக்கிரமடைந்துவரும் உள்நாட்டு யுத்தத்தால் ஆளும் வர்க்கத்திற்கு உருவாகியுள்ள பிரமாண்டமான அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலேயே ஸ்ரீ.ல.சு.க--ஐ.தே.க உடன்பாடு கண்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ கடந்த நவம்பரில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, "சமாதான மனிதன்" என்ற தனது நிலைப்படுத்தல்களின் மத்தியில், 2002ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை விளைபயனுள்ள வகையில் மீறி ஒரு தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றார்.

கடந்த 50 ஆண்டுகளாக கசப்பான எதிரிகளாக இருந்த ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க, யுத்தத்தை முன்னெடுக்கவும் பெரும் நிறுவனங்களின் வேலைத் திட்டமான சந்தை மறுசீரமைப்பை அமுல்படுத்தவும் கைகோர்த்துள்ளன. இந்தச் சுமைகளை சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்கள் தவிர்க்க முடியாமல் சுமக்கத் தள்ளப்படுவர். உக்கிரமடைந்துவரும் யுத்தம் நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்களை பலிகொண்டு 200,000 ற்கும் மேற்பட்டவர்களை இடம்பெயரச் செய்துள்ளது மட்டுமன்றி, ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதும் அதிகரித்துவரும் தாக்குதலுக்கும் வழிவகுக்கின்றது.

இந்த விரவுரை, ஐ.தே.க--ஸ்ரீ.ல.சு.க கூட்டணி அமைக்கப்பட்டதை அதன் வரலாற்று சூழ்நிலையில் இருத்துவதோடு தொழிலாள வர்க்கம் அதன் நலன்களை காத்துக்கொள்வதற்கான ஒரு சர்வதேச சோசலிச முன்நோக்கையும் தெளிவுபடுத்தும். சோ.ச.க. பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான விஜே டயஸ் இந்த விரிவுரையை ஆற்றுவார்.

திகதியும் நேரமும்:

நவம்பர் 14 மாலை 4 மணி

இடம்:

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved