World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US midterm elections: An overwhelming repudiation of the war in Iraq

அமெரிக்க இடைத் தேர்தல்கள்: ஈராக்கில் போர் பற்றிய மிகப் பெரிய அளவிலான நிராகரிப்பு

By the editorial board
8 November 2006

Back to screen version

மேற்கு மாநிலங்களில் இருந்து முடிவுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், குடியரசுக் கட்சியினர் வசம் தற்போது இருக்கும் 30 தொகுதிகளை கைப்பற்றிய அளவில், ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை கொள்வதில் வெற்றி ஈட்டியுள்ளது.

ஜனநாயகக் கட்சியினர் செனட்மீதும் கட்டுப்பாடு கொள்ளும் வகையில் வலுப்பெற்றுள்ளனர். முன்பு குடியரசுக் கட்சியினர் பென்சில்வானியா, ரோட் ஐலண்ட் மற்றும் ஒகையோவில் கொண்டிருந்த இடங்களில் மூன்றையேனும் இவர்கள் கைப்பற்றியதோடு, நாம் அச்சுக்கு தயாராகி கொண்டிருக்கையில் வர்ஜீனியா, மிசெளரி மற்றும் மோன்டனா ஆகியவற்றில் நெருக்கமான போட்டிகளில் உள்ளனர்.

குடியரசுக் கட்சியினர் தங்களுடைய பெரும்பான்மையை ஓரிரு வாக்குகள் வித்தியாசத்தில் செனட்டில் கொண்டாலும், தேர்தல் முடிவுகள் ஈராக்கில் போர் பற்றிய முடிவான பரந்த மக்களின் நிராகரிப்பை பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பதில் கேள்விக்கு இடமில்லை. தேர்தல் முடிந்த பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புக்களையே, தேர்தல் பற்றி வாக்களர்கள் கொண்டிருந்த நினைப்பைத்தான் உறுதிபடுத்தியுள்ளன. வாக்குப் போட்டவர்களில் கணிசமானவர்கள் அமெரிக்கப் படைகள் உடனடியாக ஈராக்கில் இருந்து திரும்ப பெற வேண்டும் அல்லது சில மாதங்களுக்குள் திரும்பப்பெற வேண்டும் என்பதைத்தான் ஆதரிக்கின்றனர்.

புஷ் நிர்வாகத்திற்கும் குடியரசுக் கட்சியினருக்கும் தேர்தல் முடிவு ஒரு பின்னடைவு என்றாலும், இப்பொழுது எதிர்கொண்டுள்ள அரசியல் நிலைமை பற்றி ஜனநாயகக் கட்சியினருக்கும் அதிக திருப்தி இல்லை.

சிறிதும் ஊக்குவிக்காத மிகுதியான போர் எதிர்ப்பு உணர்வின் வெளிப்பாட்டினால் நலன்கள் பெற்று, ஜனநாயகக் கட்சி தன்னுடைய சொந்த போர் ஆதரவுக் கொள்கைக்கு முற்றிலும் எதிரான தன்மையையும் எதிர்கொள்கிறது. வாக்காளர்கள் இடையேயான மகத்தான போர் எதிர்ப்பு உணர்விற்கும் மற்றும் "ஈராக்கில் வெற்றி", "பயங்கரவாதத்தின் மீதான போர்" தொடரப்படும் என்று ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் கொண்டுள்ள வாக்குறுதிக்கும் இடையே பெரும் பிளவு உள்ளது.

மாலை நேரம் நீடிக்க நீடிக்க, புஷ்-எதிர்ப்பு மற்றும் போர் எதிர்ப்பு வாக்குகளின் அரசியல் உட்குறிப்புக்கள் தெளிவாக வந்த நிலையில், ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரமுகர்களும், செய்தி ஊடகத்தின் எதிர்மறைக் கதைகட்டுபவர்களும் தேர்தல் முடிவுகளை மிகுந்த பழமைவாத, மற்றும் தீங்கற்ற முறையில் விளக்க முற்பட்டனர்.

2008 ஜனாதிபதித் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளர் என்று கருதப்படுபவரான, நியூ யோர்க்கின் செனட்டரான ஹில்லாரி கிளின்டன், தன்னுடைய வெற்றி உரையில் அமெரிக்க அரசியல் "முக்கியமான மத்திய நிலைக்கு" பழையபடி திரும்பவேண்டும் என்றும் "பயங்கரவாதத்தின் மீதான போரை" தொடர்வதில் குடியரசுக் கட்சியுடன் இணைந்து ஒத்துழைப்பது நீடிக்கும் என்றும் உறுதியளித்தார்.

தேசிய சட்ட மன்றத்தின் இரு பிரிவுகளின் மீதும் குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டிருந்தால், செய்தி ஊடகம் தேர்தல் முடிவுகள் புஷ் நிர்வாகத்தின் போர்க் கொள்கைகளுக்கு மக்களுடைய சக்திவாய்ந்த ஆதரவு உள்ளது என்று சித்தரித்து காட்டியிருக்கும் என்பது சொல்லத்தேவை இல்லை.

உண்மையில், புஷ்ஷிற்கு மட்டும் இல்லாமல், செய்தி ஊடகம், ஜனநாயகக் கட்சி இரண்டிற்கும் கூட பரந்த மற்றும் ஆழ்ந்த மக்கள் எதிர்ப்பைத்தான் வாக்குகள் பிரதிபலிக்கின்றன; இரண்டுமே நிர்வாகத்தின் போர் உந்துதலுக்கு ஆதரவு கொடுத்து, ஈராக்கில் உள்ள பேரழிவு ஆயுதங்கள், மற்றும் அதன் அல்கொய்தாவுடனான தொடர்புகள் பற்றிய அதன் பொய்களை பிரச்சாரப்படுத்தியதுடன், பெரும் தகர்ப்பிற்கு உட்பட்டுள்ள நாட்டில் அமெரிக்கா நிகழ்த்திவரும் பெரும் படுகொலைகளுக்கு ஆதரவைக் கொடுத்து வந்துள்ளன.

இத்தேர்தல்களின் முடிவு அமெரிக்க மக்கள் மிகப் பெரிய அளவில் முழு அரசியல் நடைமுறைக்கும் இடதில் உள்ளனர் என்பதைப் புலப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அரசியல் நெருக்கடி பற்றி இது அடையாளம் காட்டுகிறது.

புஷ் நிர்வாகம் மற்றும் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தவர்கள், ஒரு ஜனநாயகக் கட்சியின் தேர்தல் வெற்றி அமெரிக்க உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதை விரைவில் உணர்வர். ஜனநாயகக் கட்சியினருடன் தாமதித்து என்பதை விட விரைவிலேயே மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களும், இளைஞர்களும் நேரடி மோதலுக்கு உள்ளாவர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved