WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
கிழக்கு ஐரோப்பா
Political lessons of the events in Hungary
ஹங்கேரியின் நிகழ்வுகளில் அரசியல் படிப்பினைகள்
By Peter Schwarz
29 September 2006
Use this
version to print | Send this link by
email |
Email the
author
ஹங்கேரியை அதிர்ச்சியடை செய்திருக்கும் சென்ற வார நிகழ்வுகள் ஐரோப்பா முழுவதிலுமுள்ள
தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். உழைக்கும் மக்களின்
நலன்களை எவ்விதத்திலாவது பாதுகாக்கும் நோக்கில் உத்தியோகபூர்வ "இடது" களில் எந்த ஒரு அரசியல்
சக்தியும் இல்லாமையை ஸ்ராலினிசத்திற்கு பிந்தைய "Socialist
Party"-யின் வலதுசாரி, வணிகநல நோக்கங்கொண்ட கொள்கைகள்
அடிக்கோடிட்டு காட்டியுள்ளன. இதன் விளைவால் ஏற்பட்டுள்ள ஒரு அரசியல் வெற்றிடமானது அதிதீவிர வலதுசாரிகள்
ஹங்கேரியின் தலைநகரத் தெருக்களில் பல நாட்கள் ஆதிக்கம் செய்ய அனுமதித்தது.
"சோசலிச இடது" என அழைக்கப்படும் கட்சி ஐரோப்பிய நிதி வட்டாரங்களால்
வரவேற்கப்பட்டுள்ள வெட்டுக்கள் கொண்ட வேலைத்திட்டத்தை அமல்படுத்திக்கொண்டு, அதன்மூலம் இந்த கட்சியின்
சொந்த வாக்காளர்கள் உள்பட மக்களின் பரந்த தட்டிருக்கான வாழ்க்கைத் தரத்தில் வீழ்ச்சியையும் சமூகத்
துன்பத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. வெளிப்படையாக பாசிச சக்திகளின் தலைமையைக் கொண்ட வலதுசாரிகள்,
தெருக்களில் அணிதிரண்டு சாதாரண குடிமகனுக்கு ஆதரவாக வாதிடுவதாக காட்டிக்கொண்டிருக்கின்றனர்.
சமீபத்திய ஆர்ப்பாட்டங்களில் மற்றையவர்கள் அனைவரையும் கூப்பாடு போட்டு விரட்டியடித்த
மற்றும் வன்முறையை தூண்டுவதற்கு எப்போதும் தயாராக இருக்கும் இனவாத கும்பல்களிடம் சாதாரண மனிதனின்
தேவைகளைப் பற்றிய கவலை எதுவும் நிச்சயமாக இல்லை. அவர்கள் ஹங்கேரிய வரலாற்றில் மிகவும் பிற்போக்கு
சக்திகளை அடிப்படையாகக் கொண்டிருந்தனர் - குறிப்பாக, ஹங்கேரியன் சோவியத்தை இரத்தக்களரியால் நசுக்கி
1919-ல் பதவிக்கு வந்த, 1930-களில் முசோலினி
மற்றும் ஹிட்லர்
ஆகியோருடனும், ஹங்கேரியன் யூதர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை
கட்டவிழ்த்துவிட்ட anti-Semitic Arrow Cross
Party-யுடனும் கூட்டணி வைக்க தொடங்கிய
Horthy சர்வாதிகாரத்தை
அடிப்படையாக கொண்டிருந்தனர்.
ஹங்கேரியின் தீவிர வலதுசாரிகள் சில ஆயிரம்பேரைக் கொண்டவர்களாகவும், பலர்
கோபம் கொண்டவர்களாகவும் ஆனால் அரசியல் ரீதியாக குழப்பமுற்றவர்களாகவும் இருப்பவர்கள் உட்பட
ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ரோருள் சிறுபான்மையினரை கொண்டும் இருக்கின்றனர். இருந்தபோதிலும், தொழிலாள
வர்க்கத்தினரின் நலன்களுக்கான பிரதிநிதித்துவம் கொண்ட அமைப்புகள் எதுவும் இல்லாத நிலையில் ஏற்பட்ட
வெற்றிடம் இத்தகைய பாசிசக் கூறுகள் ஒரு முக்கிய பங்கினை ஆற்றுவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இழிபுகழ் பெற்ற வலதுசாரி தீவிரவாதிகள் எவ்விதத் தடையுமின்றி கூட்டங்களில் பேச முயன்று அங்கு
கூடியிருந்தவர்களின் கரகோஷத்தையும் பெற முடிந்துள்ளது.
இந்நாட்டின் சமுதாய நெருக்கடிகளால் பரந்துவிரிந்து கொண்டிருக்கும் ஏமாற்றங்களை
தேசியவாத பிரமைகள் மற்றும் இனவாத இசிப்புநோயினூடாக வழிப்படுத்துவதற்கு இந்த அதி வலதுசாரி முயன்று
கொண்டிருக்கின்றது. Party for Hungarian
Right and Life (MIEP), "the Rightists" (Jobbik)
மற்றும் "64
People's Committee" போன்ற அமைப்புகள் ஐரோப்பிய
ஒன்றியம் மற்றும் கம்யூனிசவிரோத வெறுப்புடன் பன்னாட்டு மூலதனம் இவற்றுக்கெதிரான இணைந்த கிளர்ச்சி,
1918-ல் இருந்தவாறான ஹங்கேரியின் எல்லையை விரிவாக்கக் கோரும் கோரிக்கை மற்றும் வெட்கங்கெட்ட
செமிட்டிச எதிர்ப்பால் அதிகமாகியது.
Nazi gas chambers- ல்
அரை மில்லியன் யூதர்களை கொன்ற ஒரு நாட்டில் இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இரண்டாம் உலகப்
போருக்கு முன்பாக, இந்த நாட்டில் ஒரு மில்லியன் யூதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இன்று, மொத்த
மக்கட்தொகை பத்து மில்லியன்களில் 100,000 யூதர்களே இருக்கிறார்கள்.
Federation of Young Democrats (Fidesz)
என்னும் மிகப்பெரிய வலதுசாரி எதிர் கட்சி, பாலுக்கு காவலாயும்
பூனைக்குத் தோழனாகவும் இருக்கிறது. ஒருபுறம் அதி வலதுசாரிகளுடன் அரசியல் மற்றும் தனிப்பட்ட தொடர்புகளை
வைத்துக்கொண்டு இத்தகைய சக்திகளிலிருந்து தங்களை துண்டித்துக் கொள்ளாமல் இருந்து வருகின்றன. மறுபுறம்,
பாசிஸ்டுகளிடமிருந்து பகிரங்கமாக விலகி இருக்க பொதுவாக முயற்சித்து வருகின்றனர்.
2002ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்த
Fidesz-ன்
தலைவர் Viktor Orban,
அதிதீவிர வலதுசாரிகளின் மொழியை பயன்படுத்தி இந்த சோசலிஸ்டுகள்
"பெரிய நிதி முதலாளிகளின் எடுப்பார் கைப்பாவை" எனக் கண்டனம் செய்தார். யூதர்களுக்கு எதிரான
MIEP-யுடன் கூட
அவர் கூட்டணி அமைக்க விரும்பினாலும், இந்த MIEP
மீண்டும் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படத் தவறியதால்
இந்த முயற்சி ஏமாற்றத்தில் முடிவுற்றது.
1988-2002-க்கு இடையில், இதே
Orban பிரதம
மந்திரி பதவியை வகித்து இந்த நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைவது பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
"Free market" Free Democratic Party
of Germany ஆகிய அமைப்புகள் உள்ளிட்ட
Liberal International-லின்
துணைத் தலைவராகவும் அவர் எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பழமைவாத
European Christian Democrats-களுக்கு குடை
போன்ற அமைப்பாக இருக்கும் ஐரோப்பிய மக்கள் கட்சியில் 2002ம் ஆண்டிலிருந்து, அவர் முக்கிய பதவிகளை
வகித்துள்ளார்.
இந்த சமீபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் பகுதி அளவில் இந்த
Fidesz
காரியாளர்களின் செல்தொலைபேசி மூலம் கட்டுப்படுத்தப்பட்டன. அக்டோபர் மாதம் 1ம் தேதி நடைபெற
இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் இந்தக் கட்சியின் வெற்றிக்கான வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ளும் வகையில்
இந்த எதிர்ப்பு போராட்டங்களை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ள நம்பிக்கை கொண்டிருந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல்கள் மூலமாக அடைந்த வெற்றிக்குப் பின் இந்த சோசலிஸ்ட் கட்சிக்கு
இந்த உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரு முதன் முதலான மிகப் பெரிய சோதனை என கருதப்பட்டுகின்றன.
அதே நேரத்தில், பல வாக்காளர்கள் அதி வலதுசாரிகளின் வன்முறையால்
தடுத்துநிறுத்தப்பட்டனர் என்பது தெளிவானவுடன் கடந்த சனிக்கிழமையன்று புடாபெஸ்டில் திட்டமிடப்பட்டிருந்த
மிகப்பெரிய அளவிலான எதிர்ப்புப் போராட்டத்தை கைவிடுமாறு அழைப்பு விடுத்தும் கூட
Fidesz எதிர்ப்பு
தொடர்பாக ஒரு எச்சரிக்கையான பொதுத் தோற்றத்தை ஏற்றிருந்தார்..
சனிக்கிழமை போராட்டத்தை இந்த
Fidesz இரத்து
செய்தவுடன் எதிர்ப்புப் போராட்ட அலை கணிசமான அளவில் அடங்கியது. செவ்வாய்க்கிழமையன்று, சுமார்
1,000 போராட்டக்காரர்கள் புடாபெஸ்டில் உள்ள பாராளுமன்றத்தின் முன்பாக பேரணி நடத்தினர், புதன்கிழமை
இதன் எண்ணிக்கை நூறாக குறைந்தது.
சென்ற வாரத்திய எதிர்ப்பு போராட்டங்கள் பெரியதாக இருந்த அதேவேளை, அது
எவ்விதத்திலும் முடிவானதாக இல்லை. சில செய்தி ஊடகங்களின் வெளிப்பாடுகள் சனிக்கிழமை 40,000 பேர்கள்
கலந்து கொண்டனர் என்று தெரிவித்தாலும், பல பார்வையாளர்கள் இந்த எண்ணிக்கை அதிக அளவில்
மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது எனவும் இந்த எண்ணிக்கை 20,000 அல்லது அதற்கு அருகில்தான் இருக்கும்
எனக் கருதுகின்றனர்.
ஹங்கேரிய மக்கள் பெரும் எண்ணிக்கையில் வீட்டிலேயே தங்கியிருந்தார்கள்,
அதிவலதுசாரிகளின் ஆட்டபாட்டங்களால் எச்சரிக்கை அடைந்திருந்தனர் அதேவேளை சோசலிஸ்ட் கட்சியின்
வலதுசாரிப் பாதை மீது கோபம் நிரம்பி வழியும் நிலையில் இருந்தனர் என்பதில் ஐயம் எதுவுமில்லை. இந்த
பெரும்பான்மையினர் உத்தியோக ரீதியிலான அரசியலில் எவ்வித செல்வாக்கும் இல்லாதிருந்தனர்
தொழிலாளர் இயக்கத்தின் பலவீனம் மற்றும் செயலிழந்தநிலையை காட்டிலும், அதி
வலதுசாரி இத்தகைய முதன்மை நிலைக்கு உயர்ந்தது அதன் இயல்பான பலத்திற்கு குறைவாகவே தொடர்புடையதாக
இருந்தது என்று கடந்த நூற்றாண்டின் அனுபவம் காட்டுகிறது. தற்போதைய ஹங்கேரியன் அதி வலதுசாரிகளை
காட்டிலும் ஒரு மிகப்பெரிய மற்றும் நன்கு நிர்வகிக்கப்பட்ட படையாக ஜேர்மனியில் நாசிக்கள் வெற்றி பெற
முடிந்தமை ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகம் போன்ற அரசியல் முகவாண்மைகள் மூலம் தொழிலாள வர்க்கம்
பிளவுற்று மற்றும் செயலிழந்து போயிருந்த நிலையால்தான் சாத்தியமானது.
முதலாளித்துவ மீட்சியின் விளைவுகள்
இன்று அதி வலதுசாரிகளின் மறுவெளிப்பாடு மற்றும் சமூக சீற்றங்கள் மற்றும்
நம்பிக்கை இழந்த நிலை ஆகியவைகளை சூழ்ச்சியுடன் கையாளும் அதன் திறமை
"சோசலிஸ்ட்"
என அழைக்கப்படுபவர்களின் கொள்கைகள் மீது அழிவுகரமான
குற்றச்சாட்டுகளை கொண்டிருக்கிறது. இந்தக் கட்சியின் நிபந்தனையற்ற முதலாளித்துவ-ஆதரவு கொள்கைகள்
தொழிலாள வர்க்கத்தினரை நிராயுதபாணியாக்கி முன்முயற்சியை வலதுசாரி சக்திகளுக்கு பணிந்து
விட்டுக்கொடுத்துள்ளது.
இந்த செயல்முறை ஹங்கேரிக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படவில்லை. ஒரு மாதத்திற்கு
முன்பாக முன்னாள் ஜேர்மன் ஜனநாயக குடியரசில் (கிழக்கு ஜேர்மனி) நடந்த மாநிலத் தேர்தல்களில், இந்த
நவ- பாசிச ஜேர்மன் தேசியக் கட்சி (NPD)
கிழக்கு ஜேர்மன் இரண்டாவது மாநிலத்தின் பிரதிநிதித்துவத்தை
வெல்ல முடிந்திருக்கிறது. இப்போது இது தன்னுடைய பிரதிநிதிகளை
Saxony மற்றும்
Mecklenburg-Western Pomerania
மாநில பாராளுமன்றங்களில் கொண்டுள்ளது. போலந்தில் தீவிர வலதுசாரியும்
Semitic League of Polish Families
(LPR)-க்கு எதிரானதாகவும் இருக்கும் கட்சி,
Kaczynski
சகோதரர்கள் தலைமையில் வழி நடத்தப்படும் தீவிர மாற்றத்தை விரும்பாத
Law and Justice Party (PiS).
மிக சமீப காலம் வரையிலும், ஒரு அதிதீவிர-வலதுசாரி விவசாயிகளின் கட்சியாக இருந்த,
Samoobrona-வும்,
அரசாங்கத்தின் ஒரு பகுதியாக அங்கம் வகித்தது.
பேர்லின் சுவர் விழுந்தும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டும்,
ஒன்றரை-பத்தாண்டுகள் ஆகியும் இந்த நாடுகளில் முதலாளித்துவம் மீட்கப்பட்டுள்ளதன் விளைவுகள் கொடுமையாக
தெளிவாகியுள்ளன. ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது அல்லது மேம்பட்ட சமுதாய நிலையை உருவாக்குவது
ஆகியவற்றிலிருந்து வெகு தூரம் விலகி, இந்த சந்தைப் பொருளாதார அறிமுகம் பொதுமக்களில் பெரும்பாலானோர்
மீது பலவந்தமாக பாய்ந்து அவர்களை சமுதாய ஏழ்மைக்கு தள்ளியிருப்பதுடன், அரசியல் ரீதியாக மிகவும்
பின்தங்கியிருப்போரும் கொள்ளையடித்து வாழ்பவர்களும் தங்கள் செல்வாக்கினை பரவலாக்கும் பாங்கிலான சூழலை
உருவாக்கியிருக்கிறது.
முன்னாள் முன்னணி ஸ்ராலினிச அரசியல்வாதிகள் முற்றிலும் பொருத்தமற்ற வகையில்
"சோசலிஸ்ட்கள்" என்னும் பெயரை இருத்திக்கொண்டு "தாராளச் சந்தையின்" உறுதிசெய்யப்பட்ட
ஆதரவாளர்களாக தாங்களாகவே தங்கள் இயல்பினை மாற்றிக் கொண்டுள்ளனர்.
இந்த விஷயத்தில் ஹங்கேரியன் அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும்,
Ferenc Gyurcsany,
ஒரு தனித்தன்மை வாய்ந்தவர். முன்னாள் ஸ்ராலினிச இளைஞர் அமைப்பில் முன்னணி அதிகாரியாக இருந்த,
Gyurcsany
1990-ல் செயல்படுத்திய "மிருகத்தனமான தனியார்மயமாக்கலின்" மூலமாக மில்லியன் கணக்கில் சம்பாதித்து தற்போது
ஒரு அரசாங்கத்தின் ஆட்சித் தலைமை பொறுப்பில் இருந்து கொண்டும் பன்னாட்டு முதலீட்டாளர்களால் கரகோஷிக்கப்பட்ட
சிக்கன திட்டங்களை அமல்படுத்த முனைந்துள்ளார்.
ஸ்ராலினிச அமைப்பின் இளைஞர் இயக்கத்தை சேர்ந்த அதிகாரியான
Gyurcsany
மட்டும்தான் திறமையாலும் அனுபவத்தாலும் அதிகாரத்தை பெற்று செல்வங்களை அடைந்த தகுதியை
பெற்றிருக்கவில்லை. உக்ரைனில் Julia
Timoschenko-வும் போலந்தில்
Alexander Kwasniewski-யும்
மற்றும் ரஷ்யாவின் பெரும்பாலான தற்போதைய ஆளும் வர்க்கத்தினரும் இதே பாதையைத்தான் பின்பற்றியுள்ளனர்.
Gyurcsany- யையும் அவரது
கட்சியையும் எதிர்த்து வருபவர்கள் அவருடன் முன்பு கருத்து வேறுபாடு கொண்டவர்களும் "ஜனநாயகவாதிகளும்"
நரம்புத் தளர்ச்சியால் உணர்ச்சிவசப்பட்டு வலதுசாரிகளாக அதிகமாக வெளிப்பட்டுள்ளனர் வெளிப்பட்டுள்ள
வலதுசாரிகளும்தான். இந்தப் பிரிவில் முன்பு Polish
Solidarity இயக்கத்தின் அதிகாரிகளாகவும்
Lech Walesa
மற்றும் Viktor Orban
ஆகியோர்களுக்கு ஆலோசகர்களாகவும் இருந்த
Kaczynski
சகோதரர்களும் மற்றும் anti-Semitic MIEP-யின்
தலைவரான Istvan Csurka-வும்
அடங்குவர்.
Orban- னுடைய ஜனநாயக
இளைஞர்களின் இணையமாகிய (Federation of
Young Democrats) இந்த
Fidesz,
1988-ல் தோற்றுவிக்கப்பட்டு, ஹங்கேரிய ஸ்ராலினிசம் நொருங்கி விழ ஆரம்பித்த காலங்களில் முக்கிய
பங்காற்றியிருக்கிறது. ஹங்கேரியன் ஜனநாயக அமைப்பில் இருந்து ஸ்ராலினிச ஆட்சியை பலமாக எதிர்த்து, முதலில்
உருவான பல அமைப்புகளில் ஒன்றாக 72 வயதான
Csurka தலைமையில், இந்த
MIEP
வெளிப்பட்டது.
தற்போதைய அரசாங்கத்தை பதவியிலிருந்து இறக்கி வேறொரு அரசினை நிறுவ இந்த
கடுமையான வலதுசாரிகளின் தற்போதைய முயற்சிகளின்பால் உழைக்கும் வர்க்கத்தினர் அலட்சியமாக
இருக்கக்கூடாது. இத்தகைய அமைப்புகளின் குறுகிய பேரினவாத மற்றும் இனவாத கொள்கைகள் அவர்கள் ஆட்சிக்கு
வந்தால் பேரழிவு உண்டாக்குகிற விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
"Great Hungary"
என்னும் திட்டத்தை மீண்டும் உயிர் பெறச் செய்யும் எந்தவித முயற்சியும்
1990-களில் யூகோஸ்லாவியா இரத்தக்களரிகளால் இனம் சார்ந்த சிறு சிறு கூறுகளான நாடுகளாக பிரிந்தது
போல் முடிந்துவிடும். இது ஹங்கேரியையும் அதன் அக்கம்பக்கம் உள்ள நாடுகளையும் வன்முறை முரண்பாடுகளில் தள்ளி
ஏற்கனவே முன் நிழலிட்டுக் கொண்டிருக்கும் இத்தகைய அமைப்புகளுடைய யூதர்கள், ரோமர்கள், சிண்டியகள் மற்றும்
இதர சிறுபான்மையினருக்கு எதிரான கிளர்ச்சியை விரைவுபடுத்திவிடும்.
ஆயினும், தீவிர வலதுசாரிகளின் அரசாங்கத்தினை பதவி இறக்கம் செய்யும்
முயற்சிகளை எதிர்ப்பது என்பது, உழைக்கும் மக்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிராக உள்ள கொள்கைகளை
கொண்டுள்ள இந்த சோசலிஸ்ட்களுக்கு அரசியல் ஆதரவு அளிக்க வேண்டும் என்னும் பொருளில் அல்ல.
உண்மையில் அண்மைய எதிர்ப்புப் போராட்டத்திற்கு தூண்டுதலுக்கான காரணமாக
ஆகியது Gyurcsany
ஆல் செய்யப்பட்ட கருத்துக்களின் இழிவான பகுதியாகும், தான் பொய்கூறியதாக ஒத்துக்கொண்டது அல்ல.
இத்தகைய கூற்றுக்கள் யாரையும் ஆச்சரியப்படுத்தப் போவதில்லை. அவருடைய கட்சிக்கு பெருவாரியாக
வாக்களித்தவர்கள் கடுமையாய் எதிர்க்கும் ஒரு கொள்கைக்காக தனது கட்சியை பணையம் வைத்திருப்பதுதான்
உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
"என்ன நடக்கும்," "நமக்குள்ளே நாள் குறித்துக் கொண்டு நாம் நமது மதிப்பினை
இழப்பதற்கு பதிலாக பெரிய அளவிலான சமுதாய மாற்றங்களை நாம் மேம்படுத்தியதால்
[அதாவது,
முதலாளித்துவ சந்தைக் கோட்பாடுகள்]
நாம் அதைத் தொலைத்துவிட்டோம். அப்படியாயின், சமுதாயம் முழுவதின் ஆதரவையும் சில காலம் நாம்
இழந்தால் கூட பிரச்சினை ஏதுமில்லை" என்று கூறியிருக்கிறார்.
தன்னுடைய வணிக-ஆதரவு திட்டங்களைச் செயல்படுத்தும் பொருட்டு தனது கட்சி
ஆதரவை இழக்கவும் அதிகாரத்தை வலதுசாரிகளிடம் ஒப்படைக்கவும்
Gyurcsany
முற்றிலும் தயாராக இருந்திருக்கிறார் என்று வேறு வார்த்தைகளில் கூறலாம்.
தன்னுடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நெருக்கமான பிரிவினரிடம்
இரகசியமான கூட்டமொன்றில் மே 26ம் தேதி பேசிய இரண்டு வாரங்களுக்குள் எரிபொருட்கள் விலையில் 30
சதவீதம் உயர்த்தியும் உணவுப் பதார்த்தங்களுக்கும் பொது போக்குவரத்துச் சேவைகள், உடல்நல காப்பீட்டு
சந்தாக்கள், கல்வி மற்றும் விதிமுறைக் கட்டணங்கள் (மருந்து தொடர்பானவை) ஆகியவற்றின் பேரில் 5 சதவீத
மதிப்புக் கூட்டப்பட்ட வரியை உயர்த்தியும் முழுவதும் தீவிரமான கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்
தீர்மானத்தை Gyurcsany-யின்
அரசாங்கம் நிறைவேற்றியது. இத்தகைய நடவடிக்கைகள் சமுதாயத்தில் இருக்கும் குறைந்த வருமானம்
பெறுபவர்களிடம் கிலியூட்டுகிற விளைவுகளை ஏற்படுத்தும்.
நாட்டின் வரவுச் செலவுத்திட்ட பற்றாக்குறையை 10 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக
மூன்று ஆண்டுகளுக்குள் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டத்தை ஐரோப்பிய ஒன்றிய குழு வெளிப்படையாக
பாராட்டியுள்ளது. ஐரோப்பிய தகவல் தொடர்பு ஊடகங்களும் வாக்காளர்களை எதிர்கொள்ளும்
Gyurcsany-யின்
"துணிவை" புகழ்ந்திருக்கிறது.
வலதுசாரிகளை நிறுத்தவும், வணிக-நலன்களுக்கான உழைக்கும் வர்க்கத்தினருக்கு-எதிரான
Gyurcsany
அரசாங்கத்தின்
Gyurcsany-யின் கொள்கைகளை எதிர்க்கவும், தொழிலாள
வர்க்கத்திற்கு அதன் சொந்த ஒரு சுதந்திரமான அரசியல் கட்சி தேவைப்படுகிறது. ஸ்ராலினிச அனுபவங்களில்
இருந்து அது கட்டாயம் படிப்பினைகளை பெற வேண்டும் ஸ்ராலினிசத்தின் குற்றம் முதலாளித்துவ தனிச்சொத்துடைமைகளை
ஒழித்ததை உறுதி செய்ததற்காக இல்லாது முற்றுலும் தேசியவாத வேலைத்திட்ட கட்டமைப்பிற்குள்ளே சலுகைமிக்க
அதிகாரத்துவத்தின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை நசுக்கியிருப்பதற்காகும்.
தொழிலாள வர்க்கத்தின் பரந்த வெகுஜனங்களால் இந்த படிப்பினைகள் இன்னும்
புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால்தான், இந்த தீவிர வலதுசாரிகள் 1956ம் ஆண்டு அக்டோபர்
ஹங்கேரிய எழுச்சியின் போர்வையை தங்களின் சொந்த அணிதிரளலின் சிறப்பு உடுப்பாக ஆக்கிக்க்கொள்ள முடிகிறது.
உண்மையில் 1956 கிளர்ச்சி எழுச்சி ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கெதிரான தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஒரு
இடதுசாரி கிளர்ச்சி எழுச்சியாகும். இன்றைக்கு, ஸ்ராலினிசத்தின் மரபியம் சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களை
பாதுகாக்கும் அதேவேளை "சோசலிஸ்ட்டுகள்" என்று காட்டிக் கொள்ளும் அந்நபர்களில் வெளிப்படுத்தப்படுகிறது.
உழைக்கும் மக்கட்தொகையினரின் நலன்கள் தேசிய எல்லைகளை கடந்து
தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் மற்றும் தேசியவாதம் மற்றும் இனவாதத்தின் அனைத்து வடிவங்களையும்
நிராகரிக்கும், சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே பாதுகாக்கப்பட முடியும். |