World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Following Senate elections

SPD and Left Party-PDS seek to continue Berlin coalition

ஜேர்மனி: செனெட் தேர்தல்களின் பின் -- ஒரு பார்வை

சமூக ஜனநாயக கட்சி மற்றும் இடது கட்சி-சோசலிச ஜனநாயக கட்சி பேர்லின் கூட்டணியை தொடர விரும்புகின்றன

By Lucas Adler
14 October 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மன் தலைநகரை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வரும் கூட்டணியை தொடர்வதற்கான நிபந்தனைகளை மீண்டும் நிறுவுதலை நோக்கமாகக் கொண்டு பேர்லினில் சமூக ஜனநாயக கட்சி (SPD), இடது கட்சி மற்றும் சோசலிச ஜனநாயக கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கியது.

இறுதிக் கணக்கீட்டில் வாக்குகள் குறைந்து போனபின்னரும், செப்டம்பர் 17ம் தேதி பேர்லின் செனட்டிற்கு நடைபெற்ற தேர்தலில் சமூக ஜனநாயக கட்சி பலமான கட்சியானது. மாறாக, இப்பொழுதுள்ள இதன் கூட்டணிப் பங்காளியான இடது கட்சி-PDS முந்தைய தேர்தலோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது கிட்டத்தட்ட பாதி வாக்குகளை இழந்துவிட்டது.

பசுமைக் கட்சி ஓரளவிற்கு தன்னுடைய வாக்குகளை அதிகரித்துக் கொண்டு இடது கட்சி-PDS க்கு 0.3 சதவிகிதம்தான் பின்தங்கியுள்ளது. இதன்பொருள் சமூக ஜனநாயக கட்சி ஒரு புதிய கூட்டணியை பசுமைக் கட்சியுடன் கொள்ளலாம் அல்லது இடது கட்சி-PDS உடனான தன்னுடைய ஒத்துழைப்பை தொடரலாம் என்பது ஆகும்.

இரண்டு விதங்களில் எது கையாளப்பட்டாலும், கூட்டணிக்கு பேர்லின் செனட்டில் மிகச் சிறிய 3 வாக்கு பெரும்பான்மைதான் இருக்கும்.

வரவிருக்கும் கூட்டணிக்கும் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் பேர்லினின் மேயர் ககிளவுஸ் வோவரைட் (SPD) துவக்கத்தில் இருந்தே "எப்படியும் ஓர் உறுதியான அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்" என்ற தீவிரத்தைத்தான் காட்டினார். ஜேர்மனிய தொலைக்காட்சியில் கூட்டணியின் இளைய பங்காளி ஏதேனும் குறிப்பிட்ட விடயங்களில் சிலவேளை சரியாக இருக்கலாம்; "ஆனால் இதைத்தவிர அது பெரிய கட்சியை அமைதியாக ஆளும் பொறுப்பில் விட்டுவிட வேண்டும்" என்று வோவரைட் அறிவித்தார். பசுமைக் கட்சியும், இடது கட்சி-PDS உம் இந்தக் குறிப்பை ஏற்கும் வகையில் தங்கள் உடன்பாட்டை வலியுறுத்தியுள்ளன.

இடது கட்சி-PDSக்குள் இருக்கும் பிளவுகள் பற்றி பசுமைக் கட்சியினர் குறிப்பிட்டு வெறும் நம்பகத் தன்மையுடனை பங்காளி என்பதற்காக அவை தொடர்ந்து சமூக ஜனநாயக கட்சியுடன் கூட்டணி கொள்ளலாமா, என்ற வினாவை எழுப்பியது. ஆரம்ப விளக்கமளிக்கும் விவாதங்களில் பேர்லின் பசுமைக்கட்சியின் தலைவரான வோல்கர் ரட்ஸ்மான் பின்வருமாறு குறிப்பிட்டார்: "நம்மிடையே உறுதியற்ற மாநிலவாதிகள் இல்லை... கூட்டணி அமைக்க வேண்டும் என்ற முடிவிற்கு வரும்போது, முழுக்கட்சியும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கும்."

தன்னுடைய பங்கிற்கு தான் எவ்வாறு விசுவாசமான, கட்டுப்பாடான ஒத்துழைப்பை சமூக ஜனநாயக கட்சிக்கு ஐந்து ஆண்டு காலம் கொடுத்துள்ளதையும், இரு கூட்டணிப் பங்காளிகளுக்கும் இடையே பெரிய கருத்துவேறுபாடுகள் அப்பொழுது எழாமல் இருந்ததையும் இடது கட்சி-PDS சுட்டிக் காட்ட முடியும். இடது கட்சி-PDS கூட்டணியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு தயக்கமேதும் காட்டாமல் ஆதரவு கொடுத்துள்ளது; அக்கூட்டணியோ ஒரு சிறிய செல்வம் கொழிக்கும் உயரடுக்கின் நலன்களைப் பாதுகாப்பதற்கு சாதாரண மக்களின் இழப்பில் நகரத்தின் வரவுசெலவத்திட்டத்தை ஒருங்கிணைக்கவும் பாடுபட்டிருந்தது.

முந்தைய கூட்டணி தொடர்வதை தான் ஆதரிக்க முக்கிய காரணம் இடது கட்சி-PDS பேர்லினை எதிர்கொண்டுள்ள நிதி நிலைமை பற்றி "மற்ற பிரிவினரை விட தெளிவாக இருந்ததுதான்" என்று வோவரைட் வலியுறுத்திக் கூறினார். இவருடைய கருத்துக்கள் பசுமைக் கட்சியுடன் துவக்கப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டபோது வரவு செலவுத் திட்டத்தில் வெட்டுக்களின் மூலம் சேமிக்கப்படும் பணம் கல்வி, எரிசக்தி, பொதுப் போக்குவரத்து ஆகிய துறைகளில் செலவிடப்படலாம் என்ற கருத்தைத் தெரிவித்தற்கு எதிராக இருந்தது.

இரண்டு வார விளக்க விவாதங்களின் போது உண்மையான பிரச்சினை இடதுகட்சி-PDS மீண்டும் அரசாங்கப் பொறுப்பை எடுக்கத் தயாராக உள்ளதா என்பதுதான். தேர்தலில் கட்சி பெற்ற பேரழிவுகரமான முடிவு நகர ஆட்சியின் சமூகத் திட்டங்களைத் தாக்கியிருந்த வகையிலான கொள்கைகளுடன் ஐயத்திற்கு இடமின்றிப் பிணைந்திருந்ததின் விளைவுதான். கடந்த ஐந்து ஆண்டுகள் அனைத்துப் பேர்லின் குடிமக்களையும் அமைப்பின் இடதுசாரிப் பேச்சு, வலதுசாரி நடைமுறை இரண்டிற்கும் இடையே இருந்த வேறுபாட்டைக் காணவைத்தது.

இந்த விதத்தில், பேர்லின் தேர்தல் முடிவு இடது கட்சி-PDS வரலாற்றளவு சங்கடத்தை எதிர்கொண்டுள்ளதை வெளிப்படுத்தியது. தற்போதைய அமைப்புமுறை எப்படியும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில்தான் தன்னுடைய முதலும் முக்கியமான பங்கும் உள்ளது என்பதை கட்சி காண்கிறது. இதன் முக்கிய பயம் மக்கள் ஏதாவது வகையில் அரசியல்ரீதியாக தீவிரமயப்படுத்தப்பட்டால், அது ஜேர்மனியின் முன்னாள் தொழிலாளர் அமைப்புக்களின் கட்டுப்பாட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, இலாபமுறையையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதுதான். இந்த இலக்கைக் கருத்திற்கொண்டு அதிகாரபூர்வ கொள்கைகளுக்கு இடது பேச்சின் மூலம் பெரிய அளவு எதிர்ப்பைக் காட்டாமல் இருந்ததுடன், முதலாளித்தவ முறையை சீர்திருத்தும் வாய்ப்புக்கள் உள்ளன என்ற போலித் தோற்றங்களையும் பரப்பி வருகிறது.

ஆனால், இடது கட்சி-PDS "இடது மாற்றீடு" என்று அழைக்கப்பட்ட விதத்தில் அரசாங்கத்தை அமைத்த ஜேர்மன் மாநிலங்கள் அனைத்திலும், இது இலாபமுறையை "யதார்த்தரீதியான அரசியல்" என்ற அடிப்படையில் உடனடியாகப் பாதுகாத்து வந்துள்ளது; அவை உண்மையிலேயே மற்ற வலதுசாரி முதலாளித்துவ கொள்கைகளில் இருந்து சிறிதும் வேறுபாடு அற்றவையாகும். இத்தகைய கொள்கைகள் ஒரு "இடது" தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ளும் கட்சியின் முயற்சியைத் தவிர்க்க முடியாமல் இல்லாதொழித்துவிட்டன. சுருங்கங்கூறின், இடது கட்சி அரசாங்கத்தில் கூடுதலான செல்வாக்கைப் பெற்றால், வாக்காளர்களிடையே அதன் செல்வாக்கு குறைந்துவிடுகிறது.

சமீபத்திய தேர்தல் தோல்வியை அடுத்து கட்சி பேர்லின் செனட்டில் பங்கு பெறாமல் எதிர்க்கட்சியில் சில ஆண்டுகள் இருந்து தன்னுடைய நம்பகத்தன்மையை பெருக்கிக் கொள்ளலாமா என்ற விவாதத்தை நடத்தியது. இடதுகட்சி-PDS உடைய பேர்லின் தலைமையிடம், அதன் முக்கிய தேர்தல் வேட்பாளர் Harald Wolf, கட்சித் தலைவர் Klaus Lederer, கட்சியின் முக்கியத் தலைவர் Stefan Liebitch உட்பட அனைவரும் துவக்கத்தில் இருந்தே சமூக ஜனநாயக கட்சி உடனான கூட்டணி தொடர்வேண்டும் என்றுதான் வாதிட்டது. தங்கள் தோற்றத்தைத் தக்க வைக்கும் முயற்சியில் அவர்கள் ஒரு சில தெளிவற்ற நிபந்தனைகளை கூட்டணி புதுப்பிக்கப்படுவதற்கான முன்வைத்தனர்; ஆனால் அதே நேரத்தில் சமூக ஜனநாயக கட்சியிடம் தாங்கள் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறிவிட்டனர்.

சமூக ஜனநாயக கட்சியுடன் உடன்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளத் தயாராக இருப்பதை நிரூபிக்கும் வகையில் இடது கட்சி ஒரு சிறப்புக் கட்சி மாநாட்டைக் கூட்டி அரசாங்கத்தில் தொடர்ந்து பங்கு பெறும் பிரச்சினை பற்றி விவாதம் நடத்தியது. இதனை விளைவாக இடது கட்சி சமூக ஜனநாயக கட்சிக்கு முன்னாலேயே தன்னுடைய நிலைமையை உகந்த கூட்டணிப் பங்காளி என்பதை தெரிவித்துவிட்டது. மீண்டும் கட்டுப்பாடு, ஒற்றுமை ஆகியவற்றை உறுதியாகக் காட்ட வேண்டும் என்ற வகையில், சிறப்பு மாநாட்டின் பிரதிநிதிகள் 94--19 என்ற வாக்குக் கணக்கில், 6 பேர் வாக்களிக்காத நிலையில், சமூக ஜனநாயக கட்சியுடன் கூட்டணிக்கான விவாதங்கள் துவக்கப்படலாம் என்று தீர்மானித்தனர். இதற்குப் பிறகு மாறுநாள், இடது கட்சியைத் தன்னுடைய வருங்காலப் பங்காளியாக ஆதரிப்பது என்ற அறிவிப்பை சமூக ஜனநாயக கட்சி வெளிவிட்டது.

சமூக ஜனநாயக கட்சியின் தேசியத் தன்மையும் பேர்லின் கட்சி எடுத்த முடிவிற்கு ஆதரவைக் கொடுத்துள்ளது. சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் Kurt Beck சமூக ஜனநாயக கட்சி-இடது கட்சியின் கூட்டணி தொடர்ச்சி என்பது "ஒரு அறிவுடைய முடிவாகும்" என்று அழைத்தார்: தன்னுடைய பங்கிற்கு கிளவுஸ் வோவரைட் அத்தகைய கூட்டு தேசிய மட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி கொண்டுள்ள கூட்டணியின் மீது பாதிப்பு அற்றது என்பதை வலியுறுத்தினார். தேசிய மட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி தற்பொழுது ஆட்சி நடத்தி வரும் ஜேர்மனியின் பழைமைவாத கட்சிகள் ஏற்படுத்தியுள்ள "பெரும் கூட்டணியில்" பங்கு கொண்டுள்ளது. "அரசாங்கத்தில் இடது கட்சி தன்னை மாற்றிக்கொண்டுள்ளதுடன், அடிப்படை எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது" என்று வோவரைட் கூறினார். இப்படி முற்றிலும் நம்பிக்கை கொடுக்கும் பங்கு என்ற மாற்றம்தான் துல்லியமாக வோவரைட் மீண்டும் இடதுகட்சி-PDS யைப் புதுப்பிக்கும் தழுவலுக்கு முடிவாகத் தள்ளியுள்ளது.

பசுமைக் கட்சியினரும் பேர்லின் சமூக ஜனநாயக கட்சி எடுத்த முடிவினால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர் என்பது நன்கு வெளிப்படையாகியுள்ளது. கடந்த தேர்தலுக்குப் பிறகு தேசிய அரசாங்கத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலையில், பசுமைவாதிகள் மாநில அளவில் எந்த அரசாங்கத்தும் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கின்றனர்; பேர்லினில் தாங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல தேர்தல் முடிவு பொறுப்புக்களை அந்த அளவில் எடுத்துக் கொள்ள வாய்ப்பு தரும் என்றும் நம்பியிருந்தனர்.

பசுமைக் கட்சியின் பாராளுமன்றப் பிரிவின் தலைவரான Renate Kunast, Berliner Zeitung பத்திரிகையிடம் சமூக ஜனநாயக கட்சி- இடது கட்சி கூட்டணி தோற்றால் ஏற்படக்கூடிய குழப்பத்தை "அகற்றுவதற்கு" எங்கள் கட்சி விரும்பாது என்று கூறிவிட்டார். "அப்படிப்பட்ட சூழ்நிலையில் பேர்லினில் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்" என்று இவ்வம்மையார் குறிப்பிட்டார். இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையில், பேர்லினில் உள்ள பசுமைவாதிகளில் தலைவரான Franziska Eichstadt Bohling சமூக ஜனநாயக கட்சியினால் நிராகரிக்கப்பட்ட பின், அவருடை கட்சி பழைமைவாத கிறிஸ்துவ ஜனநாயக யூனியனுடனும்(CDU) தடையற்ற சந்தைக்கு ஆதரவு தரும் தாராளவாத ஜனநாயக கட்சியுடனும்(FDP) பொதுக் கொள்கைகள் இயலுமா என்பதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தும் என்றும் குறிப்பிட்டார்.

மத்தியவாதத் தொகுப்பான தேர்தல் மாற்றீடு- வேலைகள், சமூக நீதிக்கான கட்சியின் (WASG) பிரதிபலிப்பும் குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த அமைப்பின் தேசியத் தலைமை அதிகாரபூர்வ அறிக்கை எதையும் இன்னமும் வெளியிடவில்லை; ஆனால் நிர்வாகக் குழுக்கூட்டத்திற்குப் பிறகு இடது கட்சி-PDS உடைய வட்டாரக் குழுவிற்கு ஒரு கடிதம் அனுப்பி கூட்டணித் தொடரப்படுவதற்கான குறைந்த பட்ச தேவைகளைப் பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே WASG அரசாங்கத்தில் பங்கு பெறுவதால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றிய தன்னுடைய விவாதத்தை முடித்துக் கொண்டு, அத்தகைய நடவடிக்கை தன்னுடைய தொண்டர்களிடையே ஏற்றுக்கொள்ளுவதற்கான ஆதரவைப் பெருக்கும் வகையிலும் இடது கட்சி-PDS உடன் கூட்டுச் சேர்ந்தவகையில் வெற்றிபெற்றதை நினைவும் கூறியுள்ளது.

WASG உடைய பேர்லின் கிளை, தேசியத் தலைமை தெளிவாகக் கூறியதற்கு எதிராக தன்னுடைய வேட்பாளர்களையே பேர்லின் தேர்தலில் நிறுத்தி, இடது கட்சி-PDS-கூட்டணி தொடரவேண்டும் என்ற முடிவை வலுவாகக் கண்டித்துள்ளது. பேர்லின் இருக்கும் WASG உறுப்பினர்கள் இடது கட்சி கூட்டணியில் இருந்து விலகிவிடும் என்று பொதுவாக நினைத்திருந்தனர்; அதையொட்டி எதிர்த்தரப்பில் தன்னுடைய நம்பகத்தன்மையை ஓரளவு மீட்டுக் கொள்ளலாம் என்றும் ஒற்றுமையான இடது கட்சி, WASG அடங்கிய தொகுப்பிற்கு ஒரு புதிய வாழ்வு கிடைக்கும் என்றும் நம்பியிருந்தனர். இந்த அமைப்பு மிகச் சரியான முறையில் அத்தகைய திட்டம் குறைப் பிரசவமாகிவிடும் என்றும் இடது கட்சி-PDS உடைய வலதுசாரிக் கொள்கைகள் அனைவருக்கும் தெரியும் ஆதலால் நடைமுறை விளைவுகள் அத்தகைய சூழலைத்தான் ஏற்படுத்தும் என்றும் நம்பியது.

சமூக ஜனநாயக கட்சி-இடது கட்சியின் புதுப்பிக்கப்பட்ட கூட்டணி ஜேர்மனியின் தலைநகரில் தவிர்க்கமுடியாமல் பரந்த அளவில் வெறுக்கப்படும் கொள்கைகளைத்தான் தொடரும்; அவைதான் ஒரு சமூகப் பேரழிவை கடந்த ஐந்து ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளன. இடது கட்சி விரைவில் தன்னுடைய குறைந்த பட்சக் கோரிக்களைக்கூட சமூக ஜனநாயக கட்சி இடம் வலியுறுத்துவதைக் கைவிட்டுவிடும் என்பதும் கூட்டணியின் குறுகிய பெரும்பான்மையைத் தக்க வைப்பதற்காகப் பெரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளும் என்பதும் ஏற்கனவே தெளிவாகியுள்ளது.

அக்டோபர் 19ம் தேதி கூட்டரசு அரசியலமைப்பு நீதிமன்றம் ஜேர்மனியின் தலைநகரத்தின் கடன் நிலைபற்றி ஒரு முடிவை வெளியிடும்போது நிலைமை சீர்குலையக்கூடும். பேர்லினுக்கு ஆதரவாக தீர்ப்பு இருந்தாலும், நகரம் கடுமையான வரவுசெலவுத் திட்டத்தை செயல்படுத்தமுடியாது; அப்படிச் செய்வது கூட்டணியினால் "குறிப்பிட்ட கடமைகள்" என்று ஐயத்திற்கு இடமின்றி விளக்கப்படும்; இதன்மூலம் சாதாரண பேர்லின் குடிமக்களுடைய வாழ்க்கை, வேலை நிலைமைகளின் மீதான தாக்குதல்கள் நியாயப்படுத்தப்படும்.