World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்Public meeting to be held in Paris The lessons of the struggle against the First Job Contract பிரான்சில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் முதல் வேலை ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டத்தின் படிப்பினைகள் 28 October 2006 இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற முதல் வேலை ஒப்பந்தத்திற்கு (CPE) எதிரான போராட்டமானது இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் தேவைகளுக்கும் வேலையை உத்திரவாதம் செய்வதற்கான உரிமையான மிக அடிப்படையான சமூகப் பிரச்சினைகள் மீதாக பிரெஞ்சு ஆளும் தட்டின் நலன்களுக்கும் இடையிலான மோதலை நன்கு தெளிவாகக் கொண்டு வந்தது. இளம் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான இந்த தாக்குதலின் உலகளாவிய தன்மையானது, அது தனியொரு அரசியல்வாதியின் (பிரெஞ்சு பிரதமர் டு வில்ப்பன்) உற்பத்திப்பொருளோ, அல்லது கோலிச அரசாங்கத்தினது உற்பத்திப்பொருளோ அல்ல. அது, ஆளும் தட்டுக்கள் மற்றும் இடது அதேபோல வலது என அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் பேணுகின்ற ஒரு பொருளாதார அமைப்பான - முதலாளித்துவ அமைப்பின் பூகோள நெருக்கடிக்கு அவற்றின் பதில் ஆகும். முழு ஐரோப்பிய மற்றும் பிரெஞ்சு முதலாளி வர்க்கமும் தொழிலாள வர்க்கத்தை பலியிட்டு தங்களின் பொருளாதாரத்தை பூகோளரீதியாய் போட்டிமிக்கதாகச் செய்ய விழைகின்றனர். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் போர்களில் பங்குகொள்வதுடன், லெபனானில் பிரெஞ்சு மற்றும் ஏனைய ஐரோப்பிய சக்திகளின் தலையீடு எண்ணெய், எரிவாயு மற்றும் இக்கோளின் மூலோபாய வளங்கள் மீதாக பெரும் வல்லரசுகளுக்கிடையே வளர்ந்து வரும் இராணுவ மற்றும் பொருளாதாரப் போட்டியின் உள்ளடக்கத்தில் ஐரோப்பாவை இராணுவமயமாக்கலின் ஒரு பகுதியாகும். இதனால்தான் பிரான்சில் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் புதிய புரட்சிகர தலைமையை - சோசலிசக் கொள்கைகளின் மற்றும் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை எடுப்பதற்கான போராட்டத்தின் அடிப்படையிலும் ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச ரீதியாகவும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடும் புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதற்கான தேவையை எழுப்புகின்றனர். தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் நலன்களை வெற்றிகரமாக பாதுகாப்பதற்கான முன்நிபந்தனை பழைய அமைப்புக்களான தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக அவசியமான போராட்டத்தை நடத்தாது, நடத்த முடியாது என்ற புரிதல் ஆகும். 1995 வேலைநிறுத்த அலையில் செய்ததுபோல மற்றும் 2003ல் கோலிச ஆட்சியின் ஓய்வூதியம் மற்றும் கல்விச்சீர்திருத்தங்களுக்கு எதிரான வேலை நிறுத்தத்தில் செய்தது போல முதல் வேலை ஒப்பந்தத்திற்கு எதிராக வெகுஜன இயக்கத்தை காட்டிக்கொடுக்க அவர்கள் வேலை செய்தனர். 2003லும் சரி அல்லது 2006லும் சரி இந்த அமைப்புக்களில் எதுவும் அரசாங்கத்தை கீழிறக்குவதற்கான கோரிக்கையைக்கூட எழுப்பவில்லை. அவை "அதி இடது" என்றழைக்கப்படும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR), லூத் ஊவ்றியேர் (LO) மற்றும் தொழிலாளர் கட்சி (PT) ஆகியவற்றால் உதவிசெய்யப்பட்டன. அவர்களுக்கிடையில் என்னென்ன வேறுபாடுகள் இருந்தாலும், இந்த அமைப்புக்களின் பொதுவான தரப் பண்பு தொழிலாளர் அதிகாரத்துவங்களின் முன்னால் அவர்களின் நெடுஞ்சாண்கிடையாய் விழுதலாகும். தொழிற்சங்கங்கள் அல்லது உத்தியோகபூர்வ இடது கட்சிகளின் துரோக பாத்திரத்தை பற்றி ஒரு கரிசனை மிக்க விமர்சனம் எதுவும் எழுப்பப்படவில்லை. சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடிய செகொலென் ரோயால், கட்சியின் வேலைத்திட்டத்தின் வழியில், தொழிலாள வர்க்க குடியிருப்பு பகுதிகளில் உள்ள நெருக்கடிக்கு ஒடுக்குமுறையிலான தீர்வுகளையும், கல்வியில் சமத்துவத்தில் குறைப்புகளையும் மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதில் உயர் நிலை எய்த, 2007 ஜனாதிபதி தேர்தலில் அவ் அம்மையாரது கோலிச எதிராளியாக வரக்கூடிய உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்க்கோசியுடன் போட்டியிடுகிறார். பிரான்சில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியமைப்பதற்கான முன்னோக்குகளை விவாதிப்பதற்கு எமது கூட்டத்திற்கு வருகை தருமாறு நாம் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அழைக்கின்றோம். கூட்டத்திற்கு வருகைதர விரும்புபவர்கள் முதல் வேலை ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிவந்த கட்டுரைகளை படித்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். Public Meeting |