World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: government policies lead to terrible toll in rural suicides

இந்தியா: அரசாங்க கொள்கைகள் கிராமப்புற தற்கொலைகள் கொடூரமான அளவிற்கு உயர்வதற்கு இட்டுச் செல்கின்றன

By M. Kailash
28 April 2006

Use this version to print | Send this link by email | Email the author

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 1990-களில் இருந்து இந்தியாவில் 25,000 விவசாயிகளை தற்கொலைக்கு இட்டுச்செல்லும் அளவிற்கு கடன் சுமையும் பயிர் விளைச்சல் பாதிப்பும் கடன்களை திரும்ப செலுத்த முடியாத அளவிற்கு வட்டிகள் உயர்வும் அதிகரித்துள்ளன. இந்த நிலை ஏற்பட்டதற்கு இந்தியாவின் மில்லியன் கணக்கான விவசாயிகள் திட்டவட்டமாக அலட்சியப்படுத்தப்பட்டதும் அத்துடன் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அமுல்படுத்திய சுதந்திர சந்தை கொள்கைகளும்தான் பொறுப்பாகும்.

பெப்ரவரி 19-ல், தென் மாநிலமான ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த எதிர்க்கட்சியான தெலுங்கு தேச கட்சியின் (TDP) நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் அல்லாடி ராஜ்குமார் இந்தியாவின் நாடாளுமன்ற மேல்சபையில் அளித்த அறிக்கையில், காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசாங்கத்தின் கீழ் கடந்த 22 மாதங்களில் 3000-க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்று குறிப்பிட்டார். முந்தைய TDP நிர்வாகம் தோல்வியடைந்ததற்கு விவசாயிகளின் மோசமடைந்து வரும் நிலைமை ஒரு சிறப்பான காரணியாக இருந்தது.

பூகோள நாடுகடந்த நிறுவனங்கள் முதலீடு செய்த இந்தியாவின் முன்னணி பகுதிகளில் ஒன்றாக ஆந்திரப்பிரதேசம் ஆகிவிட்டது. காங்கிரஸ் மற்றும் TDP அரசாங்கங்கள் இரண்டின் கீழும் ஆந்திரப்பிரதேச அரசு அமெரிக்க நிறுவனமான மெக்கன்சி, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி ஆகியவை உருவாக்கிய வரவு செலவு திட்ட வழிகாட்டலின் கீழ் பெரும்பாலும் செயல்பட்டு வந்தன. நாடு கடந்த நிறுவன செயல்பாட்டிற்கு மாநிலம் துரிதமாக திறந்துவிடப்பட்ட நேரத்தில், கிராமப்புற ஏழை மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். இந்த நாட்டில் ஆந்திர பிரதேசத்தில்தான் மிக அதிகமான தற்கொலைகள் நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 1997 முதல் 2006 ஜனவரி வரை பருத்தி விளைச்சல் பொய்த்து போனதால் 9000-க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 2000-தில் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த 22 விவசாயிகள் தங்களது கடன்களை அடைப்பதற்காக சிறுநீரகங்களை விற்றனர்.

பஞ்சாப்பிலும் ஒரு உயர்ந்த விகிதத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 1998-க்கும் 2005-க்கும் இடைப்பட்ட காலத்தில் 2,116 தற்கொலைகள் நடைபெற்றதாக மாநில அரசாங்கம் கூறுகிறது. இந்த புள்ளிவிவரம் ஒரு அப்பட்டமான குறைந்த மதிப்பீடு என்று அரசுசாரா அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன. அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கத்தை சார்ந்த இந்திரஜித் ஜேஜி ஏப்ரல் 2-ல் இந்தியன் டிரிபியூனுக்கு தந்த பேட்டியில் கூறினார்: "சாங்ரூரில் உள்ள மூணக் துணை வட்டத்தை சேர்ந்த அண்டானா மற்றும் லெக்ரா வட்டங்களில் மட்டுமே 1998-க்கும் 2005-க்கும் இடைப்பட்ட காலத்தில் 1,360 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வந்தன. பஞ்சாப் முழுவதிலும் உள்ள 138 வட்டங்களிலும் இதே அளவிற்கு தற்கொலைகள் நடைபெற்றதாக தெரிகிறது. இந்த எண்ணிக்கை அந்த குறிப்பிட்ட காலத்தில் 40,000-தை தாண்டியிருக்கும்."

இந்த இரண்டு மாநிலங்களில் மட்டுமே தற்கொலை மட்டுப்படுத்தப்படவில்லை. மேற்குப்பகுதி மாநிலமான மகாராஷ்டிரத்தில் 2005 ஜுன் முதல் 2006 ஜனவரி வரை ஆறு மாத காலத்தில் விதர்பா மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சான்றுகள் உள்ளன. தேசிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி (UPA) அரசாங்கத்தின் விவசாய அமைச்சர் சரத் பவார், கர்நாடகம், கேரளம், குஜராத் மற்றும் ஒரிசாவிலும் தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்ற மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாசன வசதிகளுக்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து சராசரி வரவுசெலவு திட்ட ஒதுக்கீடு 2005 நவம்பர் 15-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ்சிற்கு பேட்டியளித்த பவார் அறிவித்தார்: "இந்த நாட்டில் விவசாய சமுதாயம் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது மற்றும் குறிப்பாக கடந்த எட்டு முதல் 10 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. விவசாயத்துறையில் மொத்த முதலீடு கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது... விவசாயத்திற்கு வரவு செலவு திட்ட ஒதுக்கீடு 2 சதவீதத்திற்கு மேல் இல்லை என்பதால் நீங்கள் வியப்படைவீர்கள் விவசாயத்தில் 65 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் வேலை செய்கின்றனர். பாசன வசதிகளுக்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து சராசரி வரவுசெலவு திட்ட ஒதுக்கீடு 0.35 சதவீதத்திற்கும் குறைவுதான்." இப்படி பாசன வசதி புறக்கணிக்கப்பட்டதன் காரணமாக விவசாய நிலபரப்புக்களில் 60 சதவீதம் ''ஒழுங்கற்ற பருவநிலைகளை முற்றிலும் சார்ந்திருக்க வேண்டியாதாயிற்று'' என்று அவர் கூறினார்.

2004 தேசிய தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர்களான கட்சி தலைவி சோனியா காந்தியும் பிரதமராகிவிட்ட மன்மோகன் சிங்கும் விவசாயிகள் தற்கொலை குறித்து முதலைக் கண்ணீர் வடித்தனர். ''வறுமை பசி மற்றும் வேலையின்மையிலிருந்து நாட்டை விடுவிப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உறுதிமொழியளித்தது. ன்றாலும் நடைமுறையில், UPA அரசாங்கத்தின் அணுகுமுறை விவசாயிகள் தொடர்பாக முந்திய அரசாங்கத்திலிருந்து வேறுபட்டதல்ல என்பதை நிரூபித்துள்ளது. பெப்ரவரி 28-ல் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு திட்டத்தில் விவசாயத்திற்கான ஒதுக்கீடு வெறும் 1 சதவீதம் தான்.

UPA-வின் கிராமப்புற பகுதிகளுக்கான பிரதான கொள்கை, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத்திட்டம் (NREGS) என்கின்ற மேற்பூச்சு திட்டம்தான். ஒரு ஆண்டிற்கு 100 நாட்களுக்கு கிராமப்புற குடும்பங்களை சார்ந்த ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 60 ரூபாய் ஊதியத்தில் (1.33 டாலர்) வேலை தருவதாக அரசாங்கம் உறுதியளித்தது. 2004 தேர்தலில் UPA-வின் குறைந்தபட்ச பொதுத்திட்டம் (CMP) என்றழைக்கப்பட்டதில் இந்த திட்டம் ஓர் அங்கமாக இடம்பெற்றிருந்தாலும், அத்திட்டம் தொடக்கப்படுவது 2006 பெப்ரவரி வரை தாமதப்படுத்தப்பட்டுவிட்டது. மேலும் அந்த திட்டத்திற்கு தொடக்க மதிப்பீடு ஓர் ஆண்டிற்கு 400 பில்லியன் ரூபாய்களாகும் (9 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆனால் பெப்ரவரி 28-ல் வெளியிடப்பட்ட தேசிய வரவு செலவு திட்டத்தில் 117 பில்லியன் ரூபாய்கள் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பெருகி வரும் கடன்

இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் விவசாயிகளின் அவலநிலை குறித்து 1928-ல் வெளியிடப்பட்ட ராயல் குழு அறிக்கை விவசாயிகள் கடனில் வாழ்ந்து கடனில் மடிவதாக குறிப்பிட்டிருந்தது. அதே அடிப்படை விதிமுறை இன்றைக்கும் மிகப்பெரும்பாலான இந்திய விவசாயிகளுக்கு பொருந்துவதாக இருக்கிறது.

1990-களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்திய பொருளாதாரத்தை திறந்துவிட்டது மற்றும் சந்தை சீர்த்திருத்தங்களுக்கு தொடர்ந்து வந்த இந்திய அரசாங்கங்கள் திரும்பியதிலிருந்து இந்திய விவசாயிகளின் கடன் சுமை குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது. 1991-க்கும் முன்னர் இந்திய விவசாயிகளின் கடன் சுமை 25 சதவீதமாக இருந்தது. இப்போது, இந்து பத்திரிகையின் கிராமப்புற விவகாரங்களுக்கான ஆசிரியர் P. சாய்நாத் தந்துள்ள புள்ளி விவரங்களின்படி, ஆந்திர மாநிலத்தில் 70 சதவீத விவசாயிகள் கடனில் உள்ளனர். பஞ்சாபில் 65 சதவீதமும் கர்நாடகத்தில் 61 சதவீதமும் மகாராஷ்டிரத்தில் 60 சதவீதமாகவும் புள்ளி விவரங்கள் உள்ளன.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நேரடியாக இந்த உயர்வை விரைவுபடுத்தியுள்ளன. 2003-ல் இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, உலக வங்கியின் கட்டளைகளால், அரசாங்க வங்கிகளும், கூட்டுறவு நிறுவனங்களும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு வழங்கும் கிராமப்புற கடன் படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. 1990 ஜுனில் 15.9 சதவீதத்திலிருந்து 2003 மார்ச்சில் 9.8 சதவீதமாக இக்கடன் வீழ்ச்சியடைந்துவிட்டது. அரசாங்க கொள்கையில் இந்த மாற்றம் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளை ---விதைகள், உரம் மற்றும் விவசாய இடுபொருள்களை வாங்குவதற்காக----ஆண்டிற்கு 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வட்டி விகிதத்தில் கடன்களைப் பெறறுவதற்கு தனிப்பட்ட வட்டிகாரர்களை சார்ந்திருக்குமாறு நிர்பந்தித்தது.

ஆந்திர பிரதேச ரியுது சங்கம் (APRS) பொதுச் செயலாளர், மல்லா ரெட்டி விளக்கம் தரும்போது, "கடந்த ஏழு ஆண்டுகளாக, வங்கிகள் கடன்கள் எதையும் தரவில்லை." "எனவே கடனுக்காக இது போன்ற நபர்களை பல விவசாயிகள் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே நபர் எதை வாங்க வேண்டும் என்பதை குறித்தும் வாங்குவதற்கான விலை நிர்ணயம் குறித்தும் அவர்களுக்கு ஆலோசனை கூறுவார்" என்று குறிபிட்டார். தங்களது கடன்களை திரும்பச் செலுத்துவதற்கு, போதுமான அளவிற்கு வருமானம் பெற தவறிவிட்டதால் பெரும்பாலான விவசாயிகள் மேலும் மேலும் கடன்களை வாங்கி ஆழமாக சிக்கிக்கொண்டனர்.

இந்தியா முழுவதிலும் 43.4 மில்லியனுக்கு மேற்பட்ட இந்திய விவசாயிகள் கடனில் ஆழ்ந்துள்ளனர். சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 1987-க்கும் 1998-க்கும் இடையில் கிராமப்புறங்களில் நிலமற்ற குடும்பங்களின் எண்ணிக்கை, 35 சதவீதத்திலிருந்து 1999-க்கும் 2000-திற்கும் இடையில் 45 சதவீதமாக உயர்ந்துவிட்டது. 2003-க்கும் 2005-க்கும் இடையில் இப்புள்ளி விவரங்கள் 55 சதவீத அளவிற்கு தாவி விட்டது.

அதேநேரத்தில் விவசாயிகள் வருமானங்கள் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதை எதிர்கொண்டுள்ளனர். விவசாய அமைச்சகத்தின் ஒரு அறிக்கையின்படி, மேற்கு வங்காள நெல் விவசாயிகளின் வருமானம் 1996-97 முதல் 28 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே காலகட்டத்தில், உத்தரபிரதேச கரும்பு வளர்ப்பவர்களின் வருமானம் 32 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது மற்றும் மகாராஷ்டிரத்தில் கரும்பு வளர்ப்பவர்கள் 40 சதவீத வருமானத்தை இழந்துள்ளனர்.

படிப்படியாக, கிராமப்புற உள்கட்டமைப்பு முதலீடுகள் வீழ்ச்சியடைந்து கொண்டு வந்தது, மற்றும் அரசு மானியங்கள் வெட்டப்பட்டது, அவற்றுடன் வறட்சி, வெள்ளம், மற்றும் பூச்சிகளது தாக்குதலின் விளைவாக கிராமப்புற சமூக துன்பங்களும் அதிகரித்தன.

புதுடெல்லியை தளமாகக்கொண்ட விவசாய பொருளாதார நிபுணர் ராகுல் சர்மாவின் தகவலின் படி, 1990-கள் முதல் கிராமப்புற உற்பத்திச் செலவு 300 சதவீதம் அதிகரித்துள்ளது, அரசாங்கக் கொள்கைகள்தான் இதற்கு பெரும்பாலும் காரணமாகும். ஆந்திராவில் 1998-க்கும் 2003-க்கும் இடையில் மின்சாரக் கட்டணம் ஐந்து தடவை உயர்த்தப்பட்டிருக்கிறது. அரசாங்கம் கிராமப்புற விவசாயிகளுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதால் விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகளின் விலை உச்சாணிக் கொம்பிற்கு சென்றுவிட்டது.

விதைக்கான குறைந்தபட்ச முளைவிடும் விகிதம் நெறிமுறைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக, வித்துக்களின் தரம் வீழ்ச்சியடைந்துவிட்டது. கடந்த காலத்தில் குறைந்தபட்சம் 85 சதவீதம்தான் விதைக்கான குறைந்தபட்ச முளைவிடும் விகிதம் என்று இந்திய அரசாங்கம் நெறிமுறைப்படுத்தி வந்தது. பெருநிறுவனங்களின் அழுத்தங்களை தொடர்ந்து இந்த குறைந்தபட்ச விகிதம் 60 ஆக குறைக்கப்பட்டது.

விவசாய சந்தைகளுக்கான நெறிமுறைகள் தளர்த்தப்பட்டுவிட்டதால் இந்திய விவசாயிகள் மிகப் பெருமளவில் பூகோளப் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 1999-ல் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான, இந்திய மத்திய அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு 1,429 விவசாயப் பொருட்களுக்கான இறக்குமதி அனுமதி வழங்கப்பட்டது, அவற்றுக்கு உள்நாட்டு சந்தைகளில் நுழைவதற்கு முன்னர் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மன்மோகன் சிங்கின் UPA அரசாங்கம் பொருளாதாரத்தின் சுதந்திர சந்தை மறுசீரமைக்கப்படுவதை தொடர்ந்துகொண்டிருக்கிறது. மார்ச் ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் இந்திய விஜயம் மேற்கொண்டிருந்த போது, சிங் கையெழுத்திட்ட ஒரு உடன்படிக்கை மான்சான்டோ போன்ற நிறுவனங்களுக்கு விவசாயத்துறையை மேலும் திறந்துவிடுவதற்கு வகை செய்கிறது.

இந்த நடவடிக்கைகள், இந்திய விவசாயிகள் ஏற்கனவே சகித்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதை மேலும் அதிகரிக்கவே செய்யும்.