World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Caste-ism vs. ‘Merit':

India's toilers should reject framework of reservation debate

"தகுதிக்கு" எதிராக சாதியம்

இந்தியாவின் உழைப்பாளிகள் இடஒதுக்கீட்டு விவாதக் கட்டமைப்பை நிராகரிக்க வேண்டும்

By Kranti Kumara and Keith Jones
25 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

தொடர்ச்சியான உயர் வேலைக் கல்விக்கூடங்கள் உட்பட பல மத்திய அரசாங்கம் நிதியளிக்கும் பல்கலைக்கழகங்களில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (UPA) திட்டங்கள் பரந்த அளவில் மாணவர்களிடையே எதிர்ப்பை தூண்டிவிட்டு பெருவணிக செய்தி ஊடகம், பெரு வணிகம் இவற்றிடமிருந்து கூச்சலையும் கிளப்பியுள்ளது. மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெல்லி, மும்பை மற்றும் பல நகரங்களில் மருத்துவர்கள் பணியில் இருந்து வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்; இந்திய மருத்துவ சங்கமும் எதிர்ப்புக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.

ஏப்ரல் மாத தொடக்கத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரான அர்ஜுன் சிங் காங்கிரஸ் தலைமையிலான UPA அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கூடங்கள், இந்திய தொழில்நுட்ப கூடங்கள், இந்திய மேலாண்மை பயிற்சிக் கூடங்கள் மற்ற மத்திய அரசு நிதியளிக்கும் பல்கலைக்கழகங்களில் மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) பிரத்தியேகமாக 27 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக அறிவித்தார்.

மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினர் (OBC) என்பது மரபு வழியில் இந்து "இரு-பிறப்பாளர்" அல்லது உயர் சாதியினரிடம் இருந்து சமூக அளவில் தாழ்ந்தவர்கள் என்று மரபளவில் கொள்ளப்பட்டவர்கள் ஆவர்; 1970களில் இவர்கள் சமூக, பொருளாதார அளவில் பின்தங்கியவர்கள் என்று கண்டறியப்பட்டிருந்தனர். அவர்கள் இந்தியாவின் 1.1 பில்லியன் மக்களில் 52 சதவீதமாவர்.

"மற்ற" எனக் குறிப்பிடப்படுவது அவர்களை பட்டியலில் உள்ள ஜாதியினர் (Scheduled Castes - முன்னாள் தீண்டத்தகாதவர்கள் அல்லது தலித்துக்கள், மற்றும் பட்டியலில் உள்ள மலைவாழ்குடியினர் (Scheduled Tribes) இடம் இருந்து வேறுபடுத்துகிறது. அப்பட்டியலில் உள்ளவர்கள் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 25 சதவிகிதத்தினர் ஆவர். இந்திய நாடு முறையாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி மக்களுக்கு சட்டபூர்வ சமத்துவத்திற்கு ஆணையிட்டும் கூட, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு பின்னரும் அவர்களில் பெரும்பாலானவர்கள் கொடிய வறுமையில் வாழ்கின்றனர்; இந்தியாவின் நிலமற்ற, கல்வியறிவற்ற மக்களில் அளவொவ்வாத வகையில் பெரும் பங்கைக் கொண்டுள்ளனர்.

இப்பொழுது திட்டமிடப்பட்டுள்ள OBC க்களுக்கான 278 சதவிகித ஒதுக்கீடு நீண்டகாலமாக தகுதி படைத்த SC, ST விண்ணப்பதாரர்களுக்கு தொடக்க கட்டத்தில் உள்ள 22.5 சதவிகித ஒதுக்கீட்டை விடத் தனியானதாகும். இது நடைமுறைப்படுத்தப்பட்டால், நாட்டிலேயே சிறந்தவை எனக் கருதப்படும் மத்திய அரசாங்கப் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் 49.5 சதவிகிதம் மாணவர்கள் தொடக்க நிலையில் "ஒதுக்கீட்டு முறைக்கு" உட்படுத்தப்படுவர்; இந்தச் சொல் இந்தியாவில் அரசியலமைப்பு நெறியின் படி சட்டபூர்வமான உடன்பாட்டுச் செயல் திட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டு விரிவாக்கத்திற்கு வந்துள்ள எதிர்ப்பை சமாதானப்படுத்தும் வகையில், UPA அரசாங்கம் "திறந்த முறைத் தேர்வு" (பொது அல்லது இட ஒதுக்கீடு அற்றவர்கள், எண்ணிக்கையில் குறையா வண்ணம், தொடக்க நிலையின் மாணவர்கள் சேர்க்கப்படும் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று வியாழனன்று அறிவித்துள்ளது. இதையொட்டி தொடக்க நிலையில் மொத்த எண்ணிக்கை 50 சதவிகிதம் உயர்த்தப்பட வேண்டியிருக்கும்.

தீவிர நிதி அழுத்தங்கள் உள்ளன என்று பலமுறை கூறியும்கூட அரசாங்கம் இந்த விரிவாக்கத்திற்கு தேவையான பண ஒதுக்கீடு செய்ய முடியும் என்று கூறியுள்ளது; இது கிட்டத்தட்ட தொடக்க நிலையில் 7,800 கோடி ரூபாய் ($1.7 பில்லியன்), மற்றும் ஆண்டு ஒன்றுக்கு தொடர்ச்சியாக 2,200 கோடி ரூபாய் ($500 மில்லியன்) செலவு ஆகும். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகிகள் பெருமளவில் இவ்விரிவாக்கத்திற்கு எதிராக உள்ளனர். அவர்களை பொறுத்தவரையில் கூடுதலான நிதியம் வந்தாலும் அவர்களால் புதிய மாணவர்கள் திடீரென ஏராளமாக வரும்போது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தேவையான உள்கட்டுமானத்தை (விடுதிகள், ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றை) அமைத்திட முடியாது என்று கூறுகின்றனர்.

செவ்வாய்க்கிழமை அரசாங்கம் இட ஒதுக்கீடு விரிவாக்கத்திற்கு உத்தரவு கொடுக்கும் சட்டம் அடுத்த பாராளுமன்ற கூட்ட தொடருக்குள் கொண்டுவரப்படும் என்றும் 27 சதவிகித OBC நுழைவு ஒதுக்கீடு ஜூன் 2007ல் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

செய்தி ஊடக தகவல்களின்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டுகள்) தலைமையிலான இடது முன்னணி எதிர்ப்புக்களினால் பின்வாங்க வேண்டாம் என்றும் விரைவில் OBC இட ஒதுக்கீடுகள் மத்திய நிதியம் பெறும் பல்கலைக் கழகங்களுக்கு ஏற்பாடு செய்யுமாறு UPA அரசாங்கத்திற்கு நம்பிக்கை ஊக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது. UPA மற்றும் இடது ஒருங்கிணைப்பு குழு இரண்டும் நீண்ட நேரம் கூட்டம் போட்டுப் பேச்சு வார்த்தைகள் நடத்திய பின்னர் இந்த செவ்வாய் அறிவிப்புக்கள் வெளிவந்தன. காங்கிரஸ் தலைமையிலான UPA க்கு புறத்தே இருந்தாலும், இடது முன்னணி கடந்த இரண்டு ஆண்டுகளாக UPA அரசாங்கத்திற்கு உற்ற தூணாக இருந்து வருகிறது.

புதிய தாராள சீர்திருத்தங்களை பின்பற்றுவதற்கான ஒரு ஜனரஞ்சக மூடிமறைப்பு

அரசாங்கமும் இடது முன்னணியும் OBC விண்ணப்பதாரர்களுக்கு மத்திய அரசாங்கம் நிதியமளிக்கும் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவது என்பது சமூக நீதி மற்றும் சாதிச் சலுகைகளுக்கு எதிரான பெரும் தாக்குதல் என்று கூறுகின்றன. இது ஒரு அவநம்பிக்கைத்தனமான மோசடி ஆகும்.

உண்மையில் ஒதுக்கீடு விரிவாக்கம் என்பது புதிய தாராள சமூகப் பொருளாதார சீர்திருத்தம் தொடரப்படும் நிலைக்கு மக்களை திருப்தி செய்யும் ஒரு மறைப்பாகத்தான் உள்ளது; அச்சீர்திருத்தங்கள் பெரும்பாலான OBC எனப்படுவோர் உட்பட நூறாயிரக்கணக்கான மில்லியன் இந்தியர்களிடையே பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்திய வணிகமும், மத்திய தர வகுப்பின் பெரும் சலுகை பெற்ற அடுக்குகளும் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு உற்பத்தி முறை, ஆய்வு, உலகச் சந்தையில் வணிக வழிவகை ஆகியவற்றில் இந்தியா எழுச்சி பெற்றதால் நலன்களை அடைந்தாலும், இந்தியாவின் உழைப்பாளிகளுடைய வாழ்க்கை நிலைப்பாடுகள் தனியார் மயமாதல், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல், பொதுப் பணி நலன்கள் குறைக்கப்படுதல், விவசாய பொருட்களுக்கு ஆதரவுத் தொகை கொடுத்தல் குறைக்கப்படல் ஆகியவற்றால் அழிவிற்குட்பட்டுள்ளன. 1993ல் இருந்து 20003 வரையிலான காலத்தில் வறுமையினாலும் கடனாலும் பாதிக்கப்பட்டு 111,000 விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர் என்று அரசாங்கம் கடந்த வாரம்தான் ஒப்புக் கொண்டது.

மேலும் இட ஒதுக்கீடு விரிவாக்கம் சாதி வேறுபாடுகள் நிலைத்திருக்க உதவுவதுடன், ஒதுக்கீட்டிற்கு ஆதரவு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பெருகிய முறையில் வெளிப்படுத்துவது போல், வேலையின்மை பெருக்கம், பெருகிய பொருளாதார பாதுகாப்பற்ற தன்மை, சமூக சமத்துவமின்மை இவை அனைத்தையும் சாதிப்பூசல் என்ற முட்டுச்சந்துக்குள் திசை திருப்புவதை நிரூபணம் செய்கின்றன.

மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினர் பாரபட்சத்தை எதிர்கொள்கின்றனர், சமூகத்தில் வசதிவாய்ப்பில்லாதோரிடையே குறைவான விகித வகையில்தான் பிரதிநிதித்துவம் பெறுகின்றனர் என்பது மறுக்கப்பட முடியாத உண்மைதான். ஆனால் திட்டமிடப்பட்டுள்ள புதிய ஒதுக்கீட்டு முறை மிகக் குறைந்த சிறுபான்மையினருக்குத்தான் வாய்ப்புக்களை தரும். இப்பொழுதைய விவாதத்தின் மையத்தில் இருப்பது ஆண்டு ஒன்றுக்கு 25,000 பேர்கள் பல்கலைக் கழக நுழைவில் இடம்பெறுவது ஒன்றுதான்.

"தகுதித் திறமை" மோசடி

அரசாங்கத்தின் திட்டமான ஒதுக்கீட்டு விரிவாக்கத்திற்கு எதிராக கிளர்ச்சியை முன்னின்று நடத்துபவர்கள் தாங்கள் சாதிமுறையை எதிர்க்கிறோம், தகுதிக்குத்தான் ஆதரவை கொடுக்கிறோம் என்னும் கூற்றுக்களும் எவ்விதத்திலும் போலித்தனத்திலும் பிற்போக்கு தன்மையிலும் குறைந்ததல்ல.

மிகக் குறைவான பாரதீய ஜனதா கட்சி (BJP) சட்ட மன்ற உறுப்பினர்கள் தாமே மாணவ எதிர்ப்பாளர்களுடன் தொடர்பு கொண்டாலும், இத்து மேலாதிக்க இயக்கத்தின் அதிகாரபூர்வ எதிர்ப்பு இன்று வரை இட ஒதுக்கீட்டில் அரசாங்கத்திற்கு அதிகக் குரலெழுப்பாத ஆதரவாகத்தான் உள்ளது. எதிர்த்தரப்பு அரசியல் வாதிகளைவிட, பெரு நிறுவன செய்தி ஊடகமும் பெருவணிகமும்தான் இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்திற்கான ஆதரவைக் கொடுத்துள்ளன.

இந்தியாவின் வணிக உயரடுக்குகள் உள்ளுணர்விலேயே எதிர்க்கும் மாணவர்களுடன் அடையாளம் காட்டிக்கொள்கின்றன; இந்திய சமூகத்தின் மிக அதிக சலுகை பெற்றுள்ள பிரிவுகளில் இருந்துதான் இவர்கள் வந்துள்ளனர்; அரசாங்க நடவடிக்கைகள் கல்விக்கூடங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று இவர்கள் கருதுகின்றனர்; அக்கல்விக் கூடங்கள்தாம் இவர்களுக்குத் தேவையான தேர்ச்சி பெற்றுள்ள ஊழியர்களின் பெரும்பான்மையோரைக் கொடுக்கின்றன. ஆனால் தனியார் துறை தானே முன்வந்து உடன்பாட்டுச் செயல் திட்டத்தை சாதி அடிப்படையில் விருப்பத்துடன் விரைவில் செயல்படுத்தாவிட்டால் அரசாங்கம் சட்டத்தின் மூலம் செய்யக்கூடும் என்ற நிலையைத் தவிர்க்கும் வகையில், தனியார் துறைக்கும் அரசாங்கம் விரிவாக்கத்தைச் செயல்படுத்தும் அச்சுறுத்தலை இல்லாமற் செய்யவேண்டும் என்ற வகையில், இந்த மாணவர் எதிர்ப்பாளர்களை ஊக்குவிப்பதில் இவர்களுடைய உந்ததுதலின் முக்கிய காரணம் உள்ளது.

கடந்த மாதம் இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின்(Confederation of Indian Industry CII) தலைவர் என்னும் முறையில் செய்தியாளர் மாநாட்டில் தான் நிகழ்த்திய கன்னி உரையில், ஆர். சேஷசாயி அறிவித்தார்: "தொழில்துறையிலுள்ள போட்டித் தன்மைக்கு சட்டபூர்வக் கட்டாய இட ஒதுக்கீடு என்பது உகந்ததாக இருக்காது. அது ஏற்கத் தக்கது அல்ல."

இட ஒதுக்கீடுகளைச் செயல்படுத்துவதினால் ஏற்படும் கூடுதலான செலவினங்களையும் சுமப்பதற்கு வணிகத்தினர் விரும்பவில்லை; சொத்து உரிமையின் தனி நலன்களில் எவ்வித அரசாங்கத் தலையீட்டையும் எதிர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதுபோல்தான் இதற்கான எதிர்ப்பும் என்று அது கருதுகிறது.

தகுதிக் கோட்பாட்டிற்குத் தான் பெரும் ஆதரவு நல்குவதாக பெருவணிகம் கூறினாலும்கூட, உண்மையில் இது மிகப்பெரிய வகையில் இந்திய முதலாளித்துவத்தின் சமூகச் சமத்துவமற்ற, பிற்போக்குச் செயல்களின் விளைவைத்தான் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது; இந்த முதலாளித்துவ முறை தடையற்ற சந்தை முறையின் அநீதிகளை ஏகாதிபத்திய, சாதி ஒடுக்கு முறை இவற்றின் மரபுவழிஉரிமைகளுடன் இணைத்துக் கொண்டு செயல்படுகிறது.

இன்றைய சமூக ஒழுங்கில் உள்ள கொடூரமான சமத்துவமற்ற தன்மைகள் -- இந்த ஒழுங்கில் பெரும்பாலான இந்தியர்களுக்கு சமமான வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, உரிய உறைவிடம், தூய குடிநீர், நாளொன்றுக்கு மூன்று முறை உணவு ஆகியவைகூட மறுக்கப்படுகின்றன; இந்தியாவின் கல்விமுறையில் இந்த நிலை மிகத்தெளிவுடன் நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியா விடுதலை அடைந்து ஆறு தசாப்தங்கள் ஆகியும்கூட, ஒரு பொதுக் கல்வி முறை இருப்பதாகக்கூறுவதற்கில்லை; அந்த அளவிற்கு அரசாங்கப் பள்ளிகளில் அளிக்கப்படும் தரம் மோசமாக உள்ளது. பெரும் தியாகத்துடன்தான் தொழிலாளர்களும், விவசாயிகளும்கூட தங்களை குழந்தைகளை முடியும்போது தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

வறுமையின் விளைவினாலும், தரமான பொதுக் கல்விக் கூடங்கள் இல்லாததாலும், மில்லியன் கணக்கான சிறுவர்கள் துவக்கக் கல்வி நிலையைக் கூட முடிப்பதில்லை. அரசாங்கமே கொடுத்துள்ள புள்ளிவிவரங்களின்படி 2001ல் அனைத்து இந்தியர்களிலும் 35 சதவிகிதத்தினரும் அனைத்து இந்தியப் பெண்களில் 50 சதவிகிதத்தினரும் எழுத்தறிவு இல்லாமல் இருப்பவர்கள் ஆவர்.

இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில் 1 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள்தாம் ---10 மில்லியன் மக்கள்தாம் ---- உயர்நிலைக் கல்விக்குப் பின் உள்ள கல்லூரிகளிலும், பயிற்சிக் கூடங்களிலும் பயில்கின்றனர். ஆனால் இந்த நிறுவனங்கள் அளிக்கும் கல்வியின் தரம் மகத்தான அளவு வேறுபட்டது ஆகும். அவற்றில் பல அதிக நிதியம் இன்றி, தேவையான உள்கட்டுமானத்தையும் கொண்டிருக்கவில்லை. உயரடுக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து வரும் பட்டதாரிகளைத் தவிர, பல பட்டதாரிகளும் கெளரவமான வேலை பெறும் முயற்சியில் தோல்வியைத்தான் காண்கின்றனர். எனவே பெரும் ஏமாற்றத் திகைப்பில் இருந்துதான், மத்திய தரவகுப்பின் உயரடுக்கு இளைஞர்களிடம் இருந்து சிறந்த கல்விக் கூடங்களில் பயிலவேண்டும் என்ற கருத்தினால் தற்பொழுதைய எதிர்ப்புக்கள் உக்கிரம் அடைந்துள்ளன.

உயரிட நிறுவனங்களில் இடம் பெறும் மாணவர்களின் தகுதி பற்றி அதிகம் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நுழைவைப் பெறுவதற்காக நுழைவுத் தேர்வுகளை எழுதும் நூறாயிரக்கணக்கான மாணவர்களில் 1 முதல் 3 சதவிகிதத்தினர்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் அவர்கள் உண்மையில் ஒரு திறமை வாய்ந்த குழுவைச் சேர்ந்தவர்கள்தாம். ஆனால் இடஒதுக்கீடு எதிர்ப்பிற்கு வலுவாக ஆதரவு கொடுக்கும் டைம்ஸ் ஆப் இந்தியாகூட மிகப் பரந்த அளவில் பயிற்சி பெறாமல் அதிகம் பேர் வெற்றி பெறுவதில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளது; அத்தகைய சிறப்புப் பயிற்சிக்கான கட்டணம் பெரும் வசதி படைத்த குடும்பங்களில் இருந்து வராத மாணவர்களால் கொடுக்கப்பட முடியாது ஆகும்.

பெருவணிகம் இப்பொழுது சாதிமுறைக்குத் தான் விரோதி எனக் காட்டிக் கொள்ளுகையில், வாடிக்கையான தலித்துக்களுக்கு எதிராக கிராமப்புற இந்தியாவின் பல பகுதிகளிலும் சாதி வன்முறை இருந்தபோதிலும், பெரும்பாலான தலித்துக்களும் பழங்குடி மக்களும் பெரும்பாலான மற்ற இந்தியர்களும் உடலும் உயிருமாய் ஒட்டி இருக்கும் நிலையில்தான் வாழமுடிகிற போதிலும், இந்தியாவை உலகின் பெரும் மக்கட் தொகை உள்ள ஜனநாயகம் என்ற பிரச்சாரத்தை வலியுறுத்த அது தயாராக உள்ளது. மேலும் இந்திய ஆளும் வர்க்கம் இந்து மேலாதிக்கக் கட்சியான BJP உள்பட, சாதிவாத மற்றும் வகுப்புவாதக் கட்சிகளை தொடர்ந்து ஆதரித்து ஊக்குவித்து வருகின்றது, அது தன்னுடைய ஆட்சி வடிவமைப்பில் பல சாதி வகையினங்களை இணைத்துக்கொண்டுள்ளது.

இட ஒதுக்கீடுகள்: முதலாளித்துவ ஒழுங்கின் தூண்

பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால், பல சிறு முதலாளித்துவ உயரடுக்குகளை ஆதரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் எழுச்சி பெற்றுவந்த தேசிய இயக்கத்தைத் தடுக்க வேண்டும் என்ற முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் இடஒதுக்கீடுகள் முன்னோடியான வகையில் கொண்டுவரப்பட்டன.

முதலாளித்துவ இந்திய தேசிய காங்கிரஸ் கட்டுப்பாட்டிற்குட்பட்ட வெகுஜன இயக்கங்களை பிரிட்டிஷாருக்கு எதிராக நடத்திய போதிலும், இறுதியில் அது இந்தியாவின் காலனித்துவ எஜமானர்களுடன் உடன்பாடு கொண்டு ஏகாதிபத்தியப் போராட்டத்தை கருச்சிதைத்தது. இக்கருச் சிதைவின் ஒரு பகுதியாக அது பாராளுமன்ற இடங்கள் அரசாங்க வேலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தலித்துக்களுக்கும் பழங்குடிமக்களுக்கும் இட ஒதுக்கீட்டை ஏற்றது; அதே நேரத்தில் நிதானமான நிலச் சீர்திருத்தத்தையும் கொண்டுவந்து நிலப்பிரபுக்கள் தங்கள் அரசியல் சலுகைகளை இழக்குமாறும் செய்தது; ஆனால் இந்தியாவின் நில உறவுகளில் உள்ள வரலாற்று அநீதியான சாதிக் கொடுமையின் வேர்களை முற்றிலும் தொடாமல் விட்டுவிட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்து ஆறு தசாப்தங்கள் ஆகியும், இட ஒதுக்கீட்டினால் பெரும்பாலான தலித்துக்கள் அல்லது பழங்குடி மக்கள் வறுமையில் இருந்து உயர்த்தப்படவில்லை; ஆயினும் அவற்றில் ஒரு சிறு முதலாளித்துவ அடுக்கு ஊட்டிவளர்க்கப்பட்டு சாதி அடையாளங்களை, அரசியலை பேணி வருகிறது; அதே நேரத்தில் முதலாளித்துவ சமூக ஒழுங்கையும் காக்கிறது.

இத்தகைய வகையில் சாதிக்குழுசேர்தல் வரையறுக்கப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தம், ஒரு புறம், காலம் கடந்த பின்னர் தோன்றியபோதிலும், காங்கிரசின் தேசியப் பொருளாதார வளர்சி செயல்திட்டம் சுதந்திரத்திற்குப் பின் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியதால், இத்கைய நிலை OBC யினரிடையேயும் இடம்பெற்றது, மறுபுறம் ஒப்புமையில் குறைவாக ஆனால் அரசியல் செல்வாக்கில் அதிகமாக வெளிவந்த முன்னாள் செல்வக்கொழிப்பு உடைய விவசாயிகள்-உழவர்களின் செல்வாக்குத் தட்டும் வெளிப்பட்டது.

ஜனதா கட்சியின் அரசாங்கம்தான் -- காங்கிரசில் இருந்து பிளவுற்ற கூறுபாடுகள், சமூகஜனநாயகவாதிகள் மற்றும் இந்து மேலாதிக்க வலதுசாரி இவற்றின் ஒன்றிணைந்த கூட்டாகும் -- பெருகிய சமூக அதிருப்தியை தன்னுடைய சர்வாதிகார நெருக்கடி ஆட்சியை அறிவித்ததின் மூலம் அடக்க நினைத்த இந்திரா காந்திக்குப் பிறகு, பதவிக்கு வந்தபோது "சமூக மற்றும் கல்விரீதியில் பின்தங்கிய வகுப்புக்களுடைய" நிலையை உயர்த்துவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விசாரிக்க ஒரு குழுவை நியமித்தது; இக்குழுதான் சாதி மற்றும் வர்ண முறைப் பிரிவுகளை முதலில் வரையறுத்தது.

1931 மக்கட்தொகை ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு (மதசார்பற்றது என்ற நிலையில் இந்திய அரசு சாதி இணைப்பு பற்றித் தகவலைச் சேகரிக்காததால்), மண்டல் குழு 3,743 சாதிகளை சமூக, கல்வி அளவில் பிற்பட்ட வகுப்புக்கள் என்று அடையாளம் கண்டது; இக்குழுமுறை பொதுவாகக் கூறும்போது OBC என்ற பெயரில் வந்தது. இதன் பின்னர் அரசாங்கம் ஒரு நிரந்தர அதிகாரத்துவத்தை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசியக் குழு (National Commission for Backward Classes) என்று பெயரிட்டு, இந்த சாதிப்பட்டியலை காலமுறையில் நவீனப்படுத்த சட்டபூர்வ அதிகாரத்தைக் கொடுத்தது.

மண்டல் குழு தன்னுடைய இறுதி அறிக்கையைக் கொடுக்கும் முன்னரே ஜனதா அரசாங்கம் அதிகாரத்தில் இருந்து கவிழ்ந்தது. ஆனால் இந்தியாவின் தேசிய ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பிற்குட்பட்ட பொருளாதாரம் நெருக்கடிக்குள் சிக்கிய நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய வி.பி. சிங்கின் தலைமயிலான தேசிய முன்னணி மண்டலின் முன்மொழிவுகளை, 27 சதவிகித அரசாங்க வேலைகள் OBC யினருக்கு என்பதை, தன்னுடைய அரசாங்கம் ஒரு மக்கள் அரசாங்கம், ஏன் காங்கிரசுக்கு மாற்றீடாக ஒரு சோசலிச அரசாங்கம்கூட என்று காட்டுவதற்கு எடுத்துக் கொண்டது.

இந்த இட ஒதுக்கீடுப் பிரச்சினை ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு களிப்புத் தரும் நிகழ்வாக அமைந்தது; அவை வி.பி. சிங்கின் அரசாங்கத்துடன் இணைந்தன; கீழ்மட்டத்தில் உள்ள சாதிகளைப் பிரதிபலிப்பதாகக் கூறும் பல கட்சிகளும் OBC க்கு இட ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வலியுறுத்தின. இதற்கிடையில் பல்கலைக் கழக மாணவர்கள் ஊடகத்தின் பல பிரிவுகளுடைய ஆதரவினால் கடுமையான இடஒதுக்கீடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினர்.

இந்தப் பின்னணியில் இந்து மேலாதிக்க BJP மத்தியதர மற்றும் மரபார்ந்த வகையில் உயர்சாதி என வரையறுக்கப்படும் மக்களின் அச்சங்கள், ஆதாரமற்றநினைப்புக்கள் இவற்றைச் சுரண்டும் வகையில், இந்து/தேச ஒற்றுமை என்ற பெயரில் இந்துக் கடவுள் ராமருக்கு அயோத்தியில் ஒரு புகழ் பெற்ற மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்டும் திட்டத்தை முன்வைத்தது. இந்தப் போராட்டம் டிசம்பர் 1992ல் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதில் உச்சக் கட்டத்தை அடைந்தது. 1947ல் துணைக் கண்டம் பிரிக்கப்பட்டபின்னர் கடுமையான வகுப்பாவாத வன்முறைக் கலவரங்கள் இதையொட்டி நிகழ்வுற்றன.

1990 களின் தொடக்கத்தில் அதிகாரபூர்வ அரசியல் என்பது மண்டல் அறிக்கையை ஒட்டி எழுந்த போராட்டங்களால் விளைந்த சாதி, வகுப்புவாதக் கிளர்ச்சி, பாபர் மசூதிப் பிரச்சினை ஆகியவற்றினால் ஆதிக்கம் செய்யப்பட்டிருந்தது. இக்காலக் கட்டத்தில், இந்திய ஆளும் வர்க்கம் ஸ்ராலிஸ்டுகளின் ஒத்துழைப்புடன், தன்னுடைய தேசிய வளர்ச்சி மூலோபாயத்தின் பொரிவினால் விளையக்கூடிய புரட்சிகரத் திறன் பெற்றிருந்த விளைவுகளில் இருந்து வெற்றிகரமாகத் தப்பியது மற்றும் இந்தியாவை உலக மூலதனத்திற்கு குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு மலிந்துள்ள இடமாக மாற்றும் வகையில், அதனை உலக முதலாளித்துவப் பொருளாதாரத்துடன் முழுமையாக ஒன்றிணைத்தல் மூலம் - பெரும் மூலோபாய மறுநோக்குநிலைப்படல் மூலம் செய்துமுடித்தது.

இதேபோல், UPA அரசாங்கமும் இந்திய மக்களுக்கு பெரும் இழப்புக்களைக் கொடுக்கக் கூடிய சமூகப் பொருளாதாரத் திட்டத்தைப் பின்பற்றுவதில் உதவவும் அதனையே ஒரு ஜனரஞ்சக மூடுதிரையாக வழங்கும் நோக்கத்துடன், கடுமையான சமூக நெருக்கடி உள்ள காலத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையைக் கொண்டுவந்துள்ளது.

இந்திய உழைப்பாளி மக்களின் சமூக அதிருப்தியை திசை திருப்பும் வகையில், கல்வி இடங்களில் பகிர்வு, வேலைகளில் பங்கு என்று குவிப்புக் காட்டுவதில் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஸ்ராலினிஸ்டுகள் மீண்டும் உதவும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது; அதாவது முதலாளித்துவ முறையினால் விளையும் பெருந்துன்பத்தை சாதி அடிப்படையில் பங்கு போட்டுக்கொள்ளும் முறையில் சமாளித்தல் என்பதாகும். இத்தகைய கொள்கை பெருவணிகம் மற்றும் முதலாளித்துவ சமூக ஒழுங்கை சவாலுக்கு உட்படுத்தாமலும், சாதிப்பிரிவினைகளுக்கு ஊக்கமும் கொடுக்கும்; அதை ஒட்டி, மு