World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US media, Democrats deflect opposition to government spying on Americans

அமெரிக்க மக்களை வேவுபார்ப்பதை எதிர்த்து எழும் கண்டனங்களை திசைதிருப்பும் அமெரிக்க ஊடகமும் ஜனநாயகக் கட்சியினரும்

By Barry Grey
13 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

தேசிய பாதுகாப்பு அமைப்பு NSA சுமார் 200 மில்லியன் அமெரிக்கர்களது தொலைபேசி தொடர்புகள் பற்றிய புள்ளிவிவரங்களை இரகசியமாக திரட்டி வருகிறது என்ற தகவல் அம்பலத்திற்கு வந்த மறுநாள், ஊடகங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி, குடியரசுக்கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் அரசியல்வாதிகள் ஏற்கனவே தெளிவுப்படுத்தியது என்னவென்றால் ஒரு போலீஸ் அரசை நோக்கி மேலும் எடுக்கப்படுகின்ற இந்த நடவடிக்கைக்கு அரசியல் ஸ்தானபனத்திலிருந்து எந்தவிதமான கடுமையான எதிர்ப்பும் ஏற்படாது என்பதுதான்.

வெள்ளியன்று 1995 முதல் 2005 வரை அமைப்பின் NSA வேவுபார்க்கும் திட்டத்திற்கு தலைமை வகித்த ஜெனரல் மைக்கேல் ஹேடன், சிஐஏ விற்கு தலைமை வகிப்பதற்கான அவரது முன்மொழிவை உறுதிப்படுத்துவதற்கான அடுத்தவார விசாரணையை முன்னெடுப்பதில் செனட் அலுவலகங்களை சுற்றி வந்துகொண்டிருக்கிறார். செனட் சிறுபான்மை தலைவர், நேவடாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சிக்காரரான ஹேரி ரெய்ட் அவரை ''ஒரு நல்ல மனிதர்'' என்று பாராட்டினார், மற்றும் அந்த "விசாரணைக்கு ஜெனரல் ஹேடன் போவது குறித்து எனக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை" என்று அறிவித்தார்.

ரீட், நாடாளுமன்றத்தின் இதர முன்னணி ஜனநாயகக்கட்சி உறுப்பினர்களோடு சேர்ந்து, NSA-வின் உள்நாட்டு வேவுபார்க்கும் திட்டத்தை நன்றாகவே அறிந்திருக்கிறார் இது குறித்து புஷ் நிர்வாகத்தினால் முன்னணி குடியரசுக் கட்சிக்காரர்களோடு சேர்த்து விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

ஊடகங்களை பொறுத்தவரை வலைபின்னலுக்கான வேவு நடவடிக்கை குறித்து மே 11-ல் அம்பலப்படுத்தி USA Today வெளியிட்ட பின்னர், சற்றும் தாமதமில்லாமல் அமெரிக்க மக்கள் நோக்குநிலை தவறுவதற்கும் குழப்புவதற்குமான தங்களது முயற்சிகளை தொடக்குவதற்கு அழுத்தம் கொடுத்தும் ஜனநாயக உரிமைகள் மீது இந்த முன்னோடியில்லாத தாக்குதலை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும் நிலைமைகளை அவர்கள் உருவாக்கினர்.

வாஷிங்டன் போஸ்ட் இந்த நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்து, வெள்ளிக்கிழமை காலையில், முந்திய இரவு போஸ்ட்டும், ABC நியூசும் கூட்டாக நடத்திய கருத்துக் கணிப்பை தனது வலைத் தளத்தில் பிரசுரித்தது. 9/11 பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றவுடன் ஜனாதிபதி புஷ் அங்கீகாரம் அளித்த NSA உள்நாட்டு வேவுபார்க்கும் நடவடிக்கைக்கு, 63 சதவீதம் அமெரிக்கர்கள் ஆதரவு தெரிவித்தார்கள் என்று பொருள்படக் காட்டுமாறு அந்த ஆய்வு அமைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்கீழ், அமெரிக்காவின் மூன்று பெரும் தொலைபேசி நிறுவனங்களான AT & T, வெரிசோன் மற்றும் பெல்செளத் ஆகியவை தங்களது வாடிக்கையாளர்களில் ஒவ்வொருவரும் மேற்கொண்ட தொலைபேசி தொடர்புகளை, தொடர்பு கொண்ட தொலைபேசி எண்கள் மற்றும் பேசிய நேரம், தேதி உட்பட NSA-விற்கு பதிவேடுகளைத் தந்தன. இவை நீதிமன்ற பிடியாணை பெறாமல் நாடாளுமன்றத்தின் கண்காணிப்பு எதுவுமின்றி நடைபெற்ற செயல்களாகும், இவை மத்திய சட்டங்களையும், அமெரிக்க நிர்ணயச்சட்டத்தின் நான்காவது திருத்தம் ஆகிய இரண்டையும் அப்பட்டமாக மீறுவதாகும்.

சென்ற டிசம்பரில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளை மற்றும் மின்னஞ்சல்களை கண்காணிக்கவும் இடைமறிக்கவும் செயல்பட்ட ஒரு இரகசிய NSA திட்டம் அம்பலத்திற்கு வந்ததை தொடர்ந்து, புஷ்சும் ஹைடனும் இதற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கைகள் பொய்யானவை என்பதை தற்பொழுது செயல்படும் திட்டம் அம்பலப்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில், புஷ்சும் ஹேடனும், பயங்கரவாதி என்ற சந்தேகம் கொண்டவர்கள் தலையிடுவதை தொடர்புகொள்வதற்கு வேவுபார்ப்பது கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள நாடுகளுக்கு அல்லது அவற்றிலிருந்து வரும் தொடர்புகளை மட்டுமே NSA இலக்கு வைத்திருக்கிறது என்று குறிப்பிட்டனர்.

"கருத்துக்கணிப்பு: மிகப்பெரும்பாலான அமெரிக்கர்கள் NSA முயற்சிகளை ஆதரிக்கின்றனர்," என்ற தலைப்பின்கீழ் போஸ்ட் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் ''பேட்டி காணப்பட்ட 65 சதவீதம் பேர் "தனிமனித உரிமையை மீறுவதாக இருந்தாலும், பயங்கரவாத அச்சுறுத்தலின் சாத்தியத்தை புலனாய்வு செய்வது மிகவும் முக்கியமானதாகும்" என்றனர், அதைவிட பெரும்பாலானவர்கள் 66 சதவீதம் பேர் தங்களது சொந்த தொலைபேசித் தொடர்புகள் பற்றிய புள்ளிவிவரங்களை NSA திரட்டினாலும் அதைப்பற்றி கவலைப்படவில்லை'' என்றனர் என்று அந்த செய்தி பத்திரிகை தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை மாலை ABC நியூஸ் நிகழ்ச்சி அந்தக் கருத்துக்கணிப்பை சிறப்பு செய்தியாக ஒளிபரப்பியது மற்றும் அது பெரும்பாலான அமெரிக்கர்கள் உள்நாட்டில் வேவுபார்ப்பதை ஆதரிக்கிறார்கள் என்பதற்கு, ஒரு திட்டவட்டமான சான்று வழங்குகிறது. ஜனநாயகக்கட்சி ஜனாதிபதி பில் கிளிண்டனின் முன்னாள் தலைமை அரசியல் உதவியாளர்களில் ஒருவரான, ABC நியூஸ் விமர்சகர், ஜோர்ஜ் ஸ்டீபனோபவுலஸ், NSA மற்றும் ஹேடன் ஆகிய இரண்டும் தொடர்பாக ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தங்களது விமர்சனங்களின் கடுமையை குறைத்துக் கொள்வதற்கு, இந்த கருத்துக்கணிப்பு ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார்.

போர்ட்டர் J. கோசிற்கு அடுத்து CIA-வின் தலைவராக, ஹேடனின் பெயரை திங்களன்று புஷ் குறிப்பிட்டார். இதர TV பண்டிதர்களில் பெரும்பாலானவர்களது கருத்துக்களை எதிரொலிக்கின்ற வகையில் ஸ்டீபனோபவுலஸ், ஹேடனை அந்த பதவியில் செனட் ஊர்ஜிதப்படுத்தும் என்று கணித்தார்.

NBC இரவு செய்தி நிகழ்ச்சியிலும் வெள்ளிக்கிழமையன்று வாஷிங்டன் போஸ்ட்-ABC நியூஸ் ஆய்வு ஒளிபரப்பப்பட்டது.

வாஷிங்டன் போஸ்ட்-ABC நியூஸ் கருத்துக்கணிப்பும், அது பயன்படுத்தப்பட்ட விதமும் சூழ்ச்சித்திறனாய் கையாளும் வகைப்பட்டது மற்றும் நலத்தின்கண் நம்பிக்கையற்றது. NSA திட்டம் அம்பலத்திற்கு வந்த அதே நாளில் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டிருப்பதால் அதற்கு கடுமையான ஒரு முக்கியத்துவம் தருவது அபத்தமானதாகும். பொதுமக்கள் அந்த இரகசிய தகவல்பற்றி ஆராய்வதற்கு போதிய நேரம் இல்லை அல்லது முன்கண்டிராத அளவிற்கு தனிமனிதர்கள் தனித்திருக்கும் உரிமைகள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்பற்றி அதன் விளைபயன்கள் பற்றி மதிப்பீடு செய்திருக்க முடியாது ஏனென்றால் வெகுஜன ஊடகங்கள் அதன் கடுமையான தன்மை குறித்து குறைத்து மதிப்பிட முயற்சித்தன மற்றும் வேவுபார்க்கும் வேலையின் முழுவீச்சை பொதுமக்களிடமிருந்து மறைத்தே வந்தன.

மேலும், இந்த கருத்துக்கணிப்பு தாங்கள் விரும்புகின்ற ஒரு முடிவு தருகின்ற வகையில் நன்கு சோதிக்கப்பட்ட வழிமுறையில் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. கேள்விகள் எழுப்பப்பட்டவிதம், அந்த கேள்விகள் எழுப்பப்பட்ட வரிசை, கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டவர்களது எண்ணிக்கை அவர்கள் வாழும் இடங்கள், ஒட்டுமொத்தமாக, எழுப்பப்பட்ட கேள்விகள் ஆகிய அனைத்துமே, இறுதி முடிவை தருவதில் ஒரு முக்கிய பங்களிப்பு செய்கின்றன.

வாஷிங்டன் போஸ்ட்-ABC நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த அத்தனை பிரச்சினைகளும் இடம்பெற்றிருக்கின்றன. கருத்துக்கணிப்பு பற்றி போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் மே 11 அன்று 502 ''குத்துமதிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியவர்களிடமிருந்து'' தொலைபேசியில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தியதாக குறிப்பிட்டிருக்கிறது. அந்த செய்தி பத்திரிகை அதன் சொந்த எச்சரிக்கை பிரச்சனைக்கு கடப்பாடு உடையதை உணர்ந்து எழுதியது; எந்த இதர ஒரே இரவு கருத்துக்கணிப்பு அல்லது இந்த பிழைகளின் இதர வளங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே மாலைக்கான கருத்துக்கணிப்பில் ஏற்படுகின்ற நடைமுறை சங்கடங்களை'' எழுதியுள்ளது.

அப்படியிருக்கும்போது மாலை செய்தி அதிகாரப்பூர்வமான கருத்துக்கணிப்பு என்று அவசரக் கோணத்தில் அச்சிடப்பட்டிருப்பதும் ஒளிப்பரப்பட்டிருப்பதும் ஏன்?

போஸ்ட் செய்தியில் அந்தக்கருத்துக்கணிப்பு பற்றி வெளியிடப்பட்ட அனைத்து கேள்விகளும் அரசாங்கத்தின் அனுமானத்தை விமர்சனக் கண்ணோட்டம் இல்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கின்றன, பயங்கரவாத தாக்குதல்களின் சாத்தியக்கூறுக்கு எதிராக அமெரிக்க மக்களை காப்பாற்றுவதற்காக, உள்நாட்டில் இந்த வேவுபார்க்கும் நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்ற அனுமானத்தில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன - இந்த ஒரு கூற்றில் எந்த ஒரு உண்மையும் இல்லை மற்றும் சாதாரண அமெரிக்கர்கள், தனிப்பட்ட தகவல் ஏராளமாக சேகரிக்கப்பட்டிருப்பது இந்தக் கூற்றை மறுப்பதாக உள்ளது.

இதில் ஒரு கேள்வி கனத்த உள்ளடக்கத்தோடு கேட்கப்பட்டிருக்கிறது: "இப்போது எது, முக்கியத்துவம் நிறைந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்----மத்திய அரசாங்கம், அது தனிமனிதர்களின் தனிமையை குறுக்கீடுவதாக இருந்தாலும், பயங்கரவாத அச்சுறுத்தல் சாத்தியக்கூறு தொடர்பாக புலன்விசாரணை நடத்த வேண்டுமா? அல்லது பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக, புலன்விசாரணைகளை கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் மத்திய அரசாங்கம் தனிமனிதர்களின் தனிமையை குறுக்கிடக் கூடாதா."

அந்த கருத்துக்கணிப்பை நியாயமாக உண்மை என்று ஒப்புக்கொள்வதாக இருந்தால் கூட அவை அமெரிக்க மக்களுக்கு திட்டவட்டமாக தவறான தகவலை வழங்கி ஊடகத்தால் தீய பங்கு வகித்ததை கோடிட்டுக்காட்டுவதாக உள்ளது, அரசாங்கத்தின் போலீஸ் அரசு நடவடிக்கைகள் தொடர்பான பரவலான உட்குறிப்புகளை மறைத்தன மற்றும் மக்களது ஜனநாயக உணர்வுகளை மரத்துப்போகச் செய்யவும் சீர்குலைக்கவும் பணியாற்றி வந்தன.

அது எப்படியிருந்தாலும், வாஷிங்டன் போஸ்ட் - ABC நியூஸ் கருத்துக்கணிப்பு, புஷ் நிர்வாகத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் குறித்து அண்மையில் நடைபெற்ற கருத்துக்கணிப்பிலிருந்து பரவலாக மாறுபட்டதாக உள்ளது. போஸ்ட் இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்ட அதே நாளில் USA Today 2005 டிசம்பரில் நடத்திய திடீர் கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இரண்டுக்கு ஒன்று என்ற கணிப்பிற்கு மேற்பட்ட அமெரிக்கர்கள், 65 சதவீதத்திலிருந்து 31 சதவீதம் வரை பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகள் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையக்கூடாது என்று கூறியுள்ளனர்.

வாஷிங்டன் போஸ்ட் - ABC நியூஸ் கருத்துக்கணிப்பின் பின்னணியாக உள்ள அரசியல் நோக்கங்களின் அடிப்படை போஸ்ட் மற்றும் நியூயோர்க் டைம்ஸ் ஆகிய இரண்டின் தலையங்க, கருத்துகளில் எதிரொலிக்கிறது. இரண்டு பத்திரிகைகளுமே NSA திட்டம் தனித்திருக்கும் உரிமையை மீறுவதாக உள்ளது என்று கூறியுள்ளன, டைம்ஸ் "தொலைபேசி அடிப்படை புள்ளிவிவரங்களோடு தொடர்பு கொள்ளும் தொலைபேசி எண்களை சரிபார்ப்பதன் மூலம், ஒவ்வொரு அமெரிக்கரும் எந்த அமைப்புக்களோடு தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் திரட்டிவிட முடியும்" என்று குறிப்பிட்டிருக்கிறது, மற்றும் போஸ்ட் அந்த நடவடிக்கை "தனிமனிதர் தனித்திருக்கும் உரிமை மீது நடத்தப்படுகின்ற ஒரு பாரியளவு குறுக்கீடு" என்று குறிப்பிட்டது.

ஆனால் அந்த இரண்டு செய்தி பத்திரிகைகளுமே, கவனமாக அந்த வேவுபார்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றோ புஷ் அல்லது, இதர நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராகவோ, அல்லது ஜேனரல் ஹேடன், புதிய CIA தலைவராக செனட்டினால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றோ எழுதுவதை தவிர்த்துள்ளன. டைம்ஸ் தனக்கே உரிய இரட்டைவேட பாணியில்: "மத்திய புலனாய்வு துறைக்கு ஜனாதிபதி புஷ்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ள மைக்கேல் ஹேடனை அந்தப் பதவியில் உறுதிப்படுத்துவதற்கு, நடத்தப்படும் செனட் சபை விசாரணை என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை துல்லியமாக, முழுமையாக, கடுமையாக மீளாய்வு செய்கின்ற ஒரு இயல்பான அரங்காகும்" என்று குறிப்பிட்டிருக்கிறது.

இறுதியில், அந்த இரண்டு செய்தி பத்திரிகைகளுமே, வெள்ளை மாளிகையும் நாடாளுமன்றமும் ஒத்துழைத்து, தற்போதுள்ள புலனாய்வு சட்டங்களை திருத்தி அரசாங்கம், தனது குடிமக்களை வேவுபார்ப்பதற்கான சட்டபூர்வமான அதிகாரங்களை மிகப்பரவலாக விரிவுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளன.

Top of page